World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : தென் அமெரிக்கா

Former governor of Virginia found guilty on corruption charges

ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய வெர்ஜினியாவின் முன்னாள் ஆளுனர்

By Nick Barrickman 
10 September 2014

Back to screen version

வெர்ஜினியாவின் முன்னாள் குடியரசுக் கட்சி ஆளுனரான ரொபேர்ட் எஃப்.மெக்டோனல் அவரது மனைவி மாரீன் ஆகியோர் மீது செப்டம்பர் 4 அன்று ஊழல், சதித்திட்டம் மற்றும் மோசடி உள்ளிட்ட 20 குற்றச்சாட்டுகளுக்காக தண்டனை பெற்றுள்ளனர். பல மில்லியன்களுக்கு அதிபதியான அவரது வியாபார நண்பர் ஒருவரிடமிருந்து லஞ்சம் பெறுவதற்கு ஆளுனர் அலுவலகத்தையே பயன்படுத்தியதை ஒரு மத்திய நீதிமன்றம் கண்டறிந்தது.

தனது பணிக்காலத்தில் ஊழல் குற்றத்திற்காக, குற்றம்சாட்டப்பட்ட முதல் வெர்ஜினிய ஆளுனர் மெக்டொனல்தான். முன்னாள் ஆளுனரும் அவரது மனைவியும் அடுத்த ஜனவரி மாதம் அநேகமாக நீண்ட சிறைத்தண்டனையை எதிர்கொள்ள இருக்கின்றனர்.

ஏப்ரல் 2011 முதல் மார்ச் 2013 வரை, மெக்டோனெல்லும் அவரது மனைவியும் வில்லியம்ஸின் மருந்து நிறுவனமான Star Scientific இனால் தயாரிக்கப்படும் பொருட்களை முன்னிலைப்படுத்துவதற்காக, வியாபாரியான ஜானீ ஆர். வில்லியம்ஸ் ஜூனியரிடமிருந்து, 1,77,000 டாலர்களுக்கும் அதிகமான தொகையை இலஞ்சமாக பெற்றுள்ளனர்.

மெக்டொன்னெல்ஸுக்கு உதவதற்கான நேரடி கடன்கள் போக, வில்லியம்ஸ் மெக்டொன்னெல் குடும்பத்திற்காக, விடுமுறையை செலவுகள், கோல்ஃப் சுற்றுலாக்கள், துணிமணிகள் மற்றும் நகைகள் மற்றும் ஆளுனரின் மகளான கெய்ட்லின் மற்றும் ஜீனைனின் திருமண, நிச்சயதார்த்த செலவுகள் உள்ளிட்ட பல்வேறு பரிசுப் பொருட்களையும் வாங்கியுள்ளார்.

இந்த உண்மைகள் குறித்த சில கருத்துக்களும் உண்டு. மருந்து நிறுவன வியாபாரத்தை முன்னிலைப்படுத்துவதில் மெக்டொனெல் வார்த்தையளவிலேயேதான் இருந்தார் என்றபோதிலும், பணபட்டுவாடாக்கள் ஆவணப்படுத்தப்பட்டு எதிர்தரப்பினரால் ஒப்புக் கொள்ளப்பட்டன. பணம் மற்றும் பரிசுகளின் பெயரில் சட்டத்துக்கு புறம்பான பரிமாற்றங்கள் எதுவும் இல்லை என்றும் அதனால் மெக்டொனெல் சாதரணமாக வெர்ஜினியாவை-அடிப்படையாகக் கொண்ட நிறுவனத்தை ஓர் ஆளுனர் மற்றும் முதல் குடிமகள் என்றவகையில் சாதாரண முறையில்தான் முன்னணிப்படுத்தியதாக எதிர்தரப்பில் வாதம் செய்யப்பட்டது.

விசாரணையின்போது, மெக்டொன்னெலின் திருமணம் பாதிக்கப்பட்டிருப்பதை சித்தரிப்பதன் மூலம், இரு தரப்பினரும் இதுபோன்ற ஒரு திட்டத்தில் சம்மந்தப்பட்டிருக்க முடியாது என்று சொல்லி சதித்திட்ட குற்றச்சாட்டுகளை தள்ளுபடி செய்யுமாறும் முன்னாள் ஆளுனரின் வக்கீல் கேட்டுக்கொண்டார். மாரீன் மெக்டொன்னெலுக்கு கொடுக்கப்பட்ட அன்பளிப்புகள் வில்லியம்ஸால் அன்பு பரிசாக சித்தரிக்கப்பட்டவையே என்றும் அவை மீது முதல் பெண்மணிக்குலேசான ஈர்ப்பு இருந்த்தாகவும் சொல்லப்படுகிறது. இதற்கும்மேலாக, வில்லியம்ஸுக்கு அரசியல்ரீதியான சிபார்சுகளை செய்வது என்பது ஓர் ஆளுனர் என்றமுறையில் அது ஒருஅலுவல்ரீதியான நடவடிக்கை என்றும் சொல்லப்பட்டிருந்தது.

இந்த அளவிலான பரந்த விவாதம், முடிவில் நீதிபதிகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்தவில்லை. முன்னாள் ஆளுனர் குற்றம்சாட்டப்பட்ட 13 வழக்குகளில் 11 இல் குற்றமுடையவர் என்றும் அவரது மனைவி 13 வழக்கில் 9 இலும் தொடர்புடையவர் என்பதை அவர்கள் ஏகமனதாக ஏற்றுக்கொண்டனர்.

இந்த நிகழ்விற்கு முன்பாக 2009 முதல் 2013 வரையிலான முன்னாள் வெர்ஜினிய ஆளுனரான மெக்டொன்னெல், குடியரசுக் கட்சிக்குள் ஒரு நட்சத்திரமாக பரவலாகக் கருதப்பட்டார். குடியரசுக் கட்சி ஆளுனர்கள் அமைப்பின் செயலாளராக இவர் 2011 முதல் 2013 வரை பணியாற்றினர். இவருக்கு முன்பாக அந்த இடத்தில் டெக்ஸாஸ் ஆளுனர் ரிக் பெர்ரி இருந்தார். 2012 இல் இவர் குடியரசுக் கட்சியின் துணை-தலைவர் பதவிக்கு போட்டியிடுவதில் ஒரு முக்கிய நபராக கருதப்பட்டார். 2010ல் ஜனாதிபதி ஒபாமாவின் நாட்டிற்கான உரைக்கு கட்சியின் உத்தியோகபூர்வ நிராகரிப்பு உரையை வழங்கினார்.

வெர்ஜினிய ஆளுனராக, மதசார்பான வலதுசாரிகளின் ஆதரவினைப் பெறுவதற்காக சமூகத் தாக்குதல்களுடன் இணைந்த ஒரு சிக்கன கொள்கைகளை மெக்டொன்னெல் பின்பற்றினார். சிக்கன நடவடிக்கைக்கான ஒரு பரந்த திட்டத்தினை செயல்படுத்தி வரும் வேளையில் 2010ல், நாட்டின் பொதுக்கல்வி நிதியில் 646 மில்லியன் டாலர்களை ஆளுனர் குறைத்தார்.

மெக்டொன்னெல் மீதான குற்றச்சாட்டுகள் ஒரு துயரம் போல பெரு நிறுவனங்களின் கட்டுப்பாட்டிலுள்ள ஊடகங்கள் மற்றும் குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சி என்றும் இரு பெரும் வணிக அரசியல்வதிகளாலும் வெட்கம்கெட்டதாக சித்தரிக்கப்பட்டன. குடியரசு கட்சிவாதியான ரெர்ரி மக்அவ்லீவ், “இன்றை தீர்ப்புடன் முடிவடைந்ந இந்த வழக்கு பற்றிய நிகழ்வுகளாலும் மற்றும் நேர்மைக்கான எமது கூட்டுமாநிலங்களின் மதிப்பின்மீதும் ஒரு ஊழலற்ற அரசாங்கம் மீதான தாக்கம் குறித்து மிகவும் கவலையடைந்திருப்பதாகவும் கூறினார்.”

இந்த உத்தியோகபூர்வமான கடமை உணர்ச்சியை வெட்டிசெல்வதுபோல், ”வெர்ஜினியாவின் வணிக தோழமையுள்ள அரசாங்கத்தின் நீண்ட பாரம்பரியத்தை எடுத்துக் கொண்டால், இவற்றுள் அநேகமாக எதாவது சில விஷயங்கள் நடந்திருந்தாலும், உண்மையில் அதை யாரும் கவனிக்கவில்லை என்பது வியப்பாக இருக்கிறது என்று Richmond Times-Dispatch பத்திரிகையில் ஜெவ் ஷாபீரோ எழுதினார். மேலும், ”கூட்டுமாநிலங்களில் நீண்ட நெடும் காலமாக இதுதான் ஒரு வழிமுறையாக இருந்து வருகிறது என்றும் எழுதியிருக்கிறார்.

உண்மையில், ஆளுனர் மற்றும் அவரது மனைவியின் அப்பட்டமான பண பறித்தலுக்கும் மற்றும் அமெரிக்க முதலாளித்துவ அரசியலில் ஒவ்வொரு செயலிலும் இருப்பதற்கும் ஒரு சிறு வேறுபாடு மட்டுமே இருக்கிறது.