World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Valls government narrowly wins confidence vote in French National Assembly

வால்ஸ் அரசாங்கம் பிரெஞ்சு தேசிய நாடாளுமன்றத்தில் சிறிய வித்தியாசத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பை வென்றது

By Alex Lantier
17 September 2014

Back to screen version

பெரிதும் செல்வாக்கிழந்த வால்ஸ் அரசாங்கம் முதலில் ஆகஸ்ட் 25இல் கலைக்கப்பட்ட பின்னர், பிரதம மந்திரி மானுல் வால்ஸ் தலைமையிலானன ஒரு புதிய அரசாங்கத்திற்கு பிரான்ஸின் தேசிய நாடாளுமன்றம் நேற்று அதன் ஆதரவை வழங்கியது.

பெரும்பான்மை மக்களின் எதிர்ப்புக்கு முன்னால், ஜேர்மன் அரசாங்கத்துடன் உடன்பட்டு வால்ஸ் சிக்கன முறைமைகளை நடைமுறைப்படுத்துவதாக குற்றஞ்சாட்டியிருந்த மந்திரிகளைக் களையெடுத்த பின்னர் உருவாக்கப்பட்ட, இந்த புதிய அரசாங்கம் நம்பிக்கை வாக்கெடுப்பில் நூலிழையில் தப்பிப் பிழைத்தது. அது 577 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் ஒரு பெரும்பான்மையைக் குறிக்கும் 289 வாக்குகளை விட 20 வாக்குகள் குறைவாக பெற்று, 244க்கு 269 வாக்குகளுடன் வென்றது, 53 பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை.

அந்த வாக்கெடுப்பு, பிரான்சில் முதலாளித்துவ ஜனநாயகத்தின் பரந்த உடைவையும், பிரெஞ்சு "இடதிற்கு" என்ன நடக்கிறது என்பதையும் எடுத்துக்காட்டுகிறது. ஆளும் சோசலிஸ்ட் கட்சியின் (PS) செல்வாக்கு கட்டுப்பாடின்றி சரிந்து வருவதுடன் சேர்ந்துஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்டின் செல்வாக்கு வரலாற்றிலேயே மிகக் குறைந்தளவாக 13 சதவீதத்தில் உள்ளது, மற்றும் அரசாங்கம் பொறிந்த போது இருந்த 34 சதவீதத்திலிருந்து வால்ஸ் இன்று 22 சதவீதத்திற்கு வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில்அக்கட்சி மக்களின் ஒட்டுமொத்த அவமதிப்புடன் அதன் கொள்கைகளை தொடர்கின்றது.

புதிய முதலாளித்துவ-எதிர்ப்பு கட்சி மற்றும் இடது முன்னணி போன்ற போலி-இடது கட்சிகளின் ஆதரவுடன் 2012இல் தேர்ந்தெடுக்கப்பட்ட PS அரசாங்கம், பெரு வணிகங்களால் கட்டளையிடப்பட்ட முன்னொருபோதும் இல்லாத சமூக தாக்குதல்களை நடத்த நகர்ந்து வருகிறது. ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்டின் பொறுப்புடமை ஒப்பந்தம் என்றழைக்கப்படுவதன் சமூக வெட்டுக்களில் 50 பில்லியன் யூரோ மட்டும் உள்ளடங்கி இல்லை, மாறாக தொழிலாளர்களினது சமூக உரிமைகளின் மீதான பாரிய புதிய தாக்குதல்களும் உள்ளடங்கி உள்ளது.

(தற்போது ஒரு மணிநேரத்திற்கு 9.53 யூரோவாக இருக்கும்) குறைந்தபட்ச கூலியை வெட்டுதல், வார வேலை நேரத்தை நீடித்தல், மீதிருக்கும் அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்குதல், மற்றும் பிரான்சின் ஆண்டுக்கு 11 பொது விடுமுறைகளில் இரண்டை குறைக்க பரிந்துரைக்கும் ஓர் அறிக்கையை, ஞாயிறன்று, மெடெஃப் தொழில்வழங்குனர்கள் கூட்டமைப்பு வணிக நாளிதழான Les Echosக்கு கசியவிட்டது.

நேற்று மாலை வாக்கெடுப்புக்கு முன்னதாக தேசிய நாடாளுமன்றத்தில் அவர் வழங்கிய உரையில் வால்ஸ், நவ-பாசிசவாத தேசிய முன்னணியின் அதிகரித்துவரும் செல்வாக்கிற்கு அடிபணிந்தது, இராணுவவாத மற்றும் புலம்பெயர்ந்தோர்-விரோத முறையீடுகளைச் செய்தார் மற்றும் பிரெஞ்சு நிறுவனங்களின் சர்வதேச போட்டித்தன்மையை அதிகரிக்க சூளுரைத்தார்.

உக்ரேன், ஆபிரிக்கா மற்றும் அனைத்திற்கும் மேலாக ஈராக் மற்றும் சிரியாவில் பிரான்சின் ஏகாதிபத்திய தலையீடுகளை ஆழப்படுத்தவும் சூளுரைத்தார். “உலகம் அனைத்திற்கும் முதலாவதாக முன்னொருபோதும் இல்லாதளவிற்கு பரந்த விதத்திலும் மற்றும் பரிணாமத்திலும் பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொண்டிருக்கிறது," என்று தெரிவித்த வால்ஸ் தொடர்ந்து கூறுகையில், “பிரான்ஸ்—அதன் அரச தலைமை, அதன் இராஜாங்க நடவடிக்கைகள், அதன் இராணுவங்களைக் கொண்டுநிச்சயமாக 21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மிகப் பாரிய இந்த பாதுகாப்பு அச்சுறுத்தலை முகங்கொடுக்க முற்றிலும் தயாராக இருக்கிறது. அது வரலாற்றால் அதற்கு அளிக்கப்பட்டிருக்கும் கடமைப்பாடுகளை மற்றும் ஐநா பாதுகாப்பு அவையின் ஒரு நிரந்தர உறுப்பினராக இருப்பதாலும் அவற்றை முழுமையாக ஏற்கிறது ... அது பிரான்ஸுக்கு உள்ளேயும் மற்றும் அதற்கு வெளியேயும் இருக்கும் ஓர் உலகளாவிய எதிர்தாக்குதல்களின் மீது வேலை செய்து வருகிறது," என்றார்.

ஒட்டுமொத்த ரோமா இனமும் பிரான்ஸை விட்டு வெளியேற வேண்டுமென அவர் நம்புவதாக ஏற்கனவே தெரிவித்திருக்கும் வால்ஸ், பிரான்ஸின் குடியுரிமை கொள்கை முற்றிலும் தோல்வி அடைந்திருப்பதாக அறிவித்தார்: “முப்பது ஆண்டுகளாக, நாம் பின்பற்றி வந்த, மக்களை அவர்களின் மூலங்களின் அடிப்படையில் கையாள தேர்ந்தெடுத்த ஓர் ஒருங்கிணைப்பு கொள்கை, ஒரு முட்டுச்சந்துக்கு வந்திருப்பதை நிரூபிக்கிறது. இந்த இக்குடியரசில் இருக்கும் அகதிகளுக்கு எவ்வாறு பாதுகாப்பு அளிப்பதென நமக்கு இனியும் தெரியவில்லை, அவர்களின் பாதுகாப்பைத் தேடிக் கொள்ள அவர்களே முழுமையாக முயற்சிக்கட்டும். இதில் தான் நம்முடைய பிரதான போராட்டம் இருக்க வேண்டுமென நான் நம்புகிறேன்!"

சட்டஒழுங்கு மற்றும் விதிமுறைகளைக்" கோரி வால்ஸ் தொடர்ந்து கூறினார்: “நம்முடைய பொலிஸ்காரர்கள், இராணுவ பொலிஸ், மற்றும் நீதியரசர்கள் அவை மதிக்கப்படுவதை உறுதிப்படுத்த மற்றும் அதை நடைமுறைப்படுத்த ஒன்றாக கூடி பணியாற்ற வேண்டும்," என்றார்.

எரிச்சலூட்டும் விதமாக தொடர்ந்து கூறுகையில், சமூக வெட்டுக்களைத் தொடர சூளுரைத்த அவர், “பிரான்ஸில் சீர்திருத்தம் செய்வதென்பது நம்முடைய சமூக மாதிரியை உடைப்பதாக அர்த்தமாகாது," என்றார்.

உண்மையில், 1968 பொது வேலைநிறுத்தத்திற்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த பிரான்ஸின் பிரதான "இடது" கட்சியான சோசலிஸ்ட் கட்சி (PS), அதை பல தசாப்தங்களாக அந்நாட்டின் போலி-இடது கட்சிகளும் சார்ந்திருந்த நிலையில், ஆழ்ந்த சிக்கன நடவடிக்கைகள் மற்றும் யுத்தத்தின் போக்குகளோடு தன்னைத்தானே ஒன்றாக்கி கொள்ள முயற்சிக்கின்ற அதேவேளையில், அது அரசியல்ரீதியாக பொறிந்து போய் கொண்டிருக்கிறது.

ஜேர்மன்-விரோத கருத்துக்களுடன் வால்ஸை விமர்சித்ததற்காக சமீபத்தில்-நீக்கப்பட்ட மந்திரிகள் ஆர்னோ மொண்டபூர்க் மற்றும் பெனுவா அமோன் போன்ற சோசலிஸ்ட் கட்சியின் "அதிருப்தியாளர்கள்" நிபந்தனையின்பேரில் சரணடைந்து அரசாங்கத்தை ஆதரித்தார்கள். வலதுசாரி மக்கள் இயக்கத்திற்கான யூனியன் (UMP) அரசாங்கத்திற்கு எதிராக வாக்களித்தது, அதேவேளையில் இடது முன்னணி மற்றும் பசுமை கட்சி நிர்வாகிகள் வாக்களிப்பதைத் தவிர்த்துக் கொண்டனர்.

சோசலிஸ்ட் கட்சி "அதிருப்தியாளர்களை" வால்ஸ் வெளிப்படையாக அச்சுறுத்துகையில், அவருக்கு அவர்கள் வாக்களிக்கவில்லை என்றால், கட்சியில் அவர்களின் பதவிகளை இழப்பார்கள் என்பதுடன் FN அதிகாரத்திற்கு வருமென்றும் கூறி அச்சுறுத்தினார். Le Monde செய்தியின்படி, அவர் அவரது கூட்டாளிகளுக்கு, “மூன்று அல்லது ஆறு மாதங்களில் நிலைமை தலைகீழாக மாறவில்லையானால், நாம் அழியநேரிடும்," என்று கூறியதாக செய்திகள் தெரிவித்தன.

அந்நிகழ்வில், நாடாளுமன்றத்தில் இருந்த மொத்தமாக சுமார் 100 PS “அதிருப்தியாளர்கள்" அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இருப்பதாக வாக்களித்தார்கள், இருந்தபோதினும் 31 பேர் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. “நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் கொள்கையில் எனக்கு உடன்பாடு இல்லை," என்று PS “அதிருப்தியாளர்" பாஸ்கால் சேர்கி கருத்து தெரிவித்தார், “ஆனால் அரசாங்கம் வீழ்வதை நான் விரும்பவில்லை. நான் ஓர் எதிர்கட்சி உறுப்பினர் அல்ல," என்றார்.

2012இன் சட்டமன்ற தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும் PS பெரும்பான்மையைக் கொண்டு உருவாக்கப்பட்ட அரசியல்ரீதியாக மாஜினோ (முதலாம் உலக யுத்த வேளையில் யுத்த மந்திரி) போக்கில் தங்கியிருந்து, PS அரசாங்கம் தன்னைத்தானே தற்காலிகமாக ஸ்திரப்படுத்திக் கொண்ட போதினும், அது எந்தவொரு தீர்வும் இல்லாத ஓர் ஆழ்ந்த அரசியல் நெருக்கடியில் பிணைந்திருக்கிறது என்பது தெளிவாக இருக்கிறது.

தீவிரமடைந்துவரும் உலகளாவிய யுத்தங்கள் மற்றும் சுருங்கிவரும் ஐரோப்பிய பொருளாதாரத்தால் நிலைகுலைந்து, ஜேர்மனி மற்றும் பிரான்சிஸிற்கு இடையே இருப்பதைப் போல தீவிரமடையும் சர்வதேச பதட்டங்களையோ அல்லது தொழிலாள வர்க்கத்தில் அதிகரித்துவரும் சமூக கோபத்தையோ அந்த அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியாது. பலவீனமான மற்றும் பெரிதும் செல்வாக்கிழந்திருக்கும் அது, தொழிலாள வர்க்கத்துடன் ஒரு வெடிப்பார்ந்த மோதலுக்கு களம் அமைத்து வருகிறது—என்றுமில்லா வகையில் அதிகரித்த போரையொத்த வெளிநாட்டுக் கொள்கையினூடாக தன்னையே தூண்டிவிடும் ஒன்று உள்பட, ஒரு பெரும் பூகோள நெருக்கடியால் முதலில் அது கடந்து செல்லப்படாவிட்டால், பலவீனமான மற்றும் ஆழ்ந்த இழிவுகரமான நிலையில் அது தொழிலாள வர்க்கத்துடன் ஒரு வெடிக்கும் மோதலுக்கான அரங்கை அமைக்கும்.

நவ-பாசிச FNஇன் தலைவர் மரீன் லு பென் நேற்று இரவு ஒரு அறிக்கை வெளியிட்டார். ஜேர்மனியை மீண்டும் தாக்கியும் மற்றும் அதை பிரான்சின் மதிப்பிழந்த அரசியல் ஸ்தாபகத்திற்கு மாற்றீடாக உணர்ச்சிகரமாக முன்னிறுத்தியும் வால்ஸின் உரைக்கு விடையிறுப்பாக அதை வெளியிட்டிருந்தார்.

"ஐரோப்பாவின் மற்றும் ஜேர்மனியின் இரும்புப்பிடி பிரான்ஸை படுகொலை செய்து வருகிறதென்றும்", வால்ஸால் "வெற்றுத்தனமாக, அபத்தமான விதத்திலும் கூட" அந்த உரை வழங்கப்பட்டிருந்ததாகவும் குறிப்பிட்டு, அப்பெண்மணி தெரிவித்தார்: “இந்த அரசாங்கம் விரைவிலேயே வீழும், வரவிருக்கின்ற பேரழிவுகரமான விளைவுகளைக் கையாள அது போதுமானளவிற்கு வலுவாக இல்லை, இதை பிரதம மந்திரியே ஒப்புக் கொண்டிருக்கிறார். முந்தைய சட்டமன்ற தேர்தல்கள் மூலமாக மக்களிடம் திரும்பியதைப் போலவே மீண்டும் நடக்கும், இன்னும் ஒருசில மாதங்களில் இது தான் வரவிருக்கிறது," என்றார்.

பிரெஞ்சு ஆளும் மேற்தட்டுக்களில் உள்ள முன்னணி பிரபலங்கள் லு பென்னின் அச்சுறுத்தல்களை அதிகளவில் தீவிரமாக எடுத்து வருகிறார்கள். வால்ஸ் அரசாங்கம் வீழ்ந்து, FN ஏதாவது விதத்தில் அரசாங்கத்தில் ஒரு பிரதான பாத்திரம் எடுத்தால், அது முற்றிலுமாக பிரெஞ்சு முதலாளித்துவத்தை மதிப்பிழக்கச் செய்துவிடுமென அவர்கள் அஞ்சுகிறார்கள்.

முன்னாள் பிரதம மந்திரியும் வலதுசாரி UMPஇல் முன்னணி நிர்வாகியுமான பிரான்சுவா ஃபிய்யோன், “முழு பொறிவுக்கு முன்னதாக ஹோலாண்டிற்கு ஒரு கடைசி வாய்ப்பிருக்கிறது" என்ற தலைப்பில், நேற்று பொதுவாக PSக்கு ஆதரவான நாளிதழ் Le Mondeஇல் ஓர் அசாதாரணமான தலையங்கத்தைப் பிரசுரித்தார். எவ்வாறிருந்தபோதினுதம், பிரெஞ்சு மக்களால் வெறுக்கப்படும் சமூக வெட்டுக்களுக்கு அழுத்தம் அளிக்க ஒரு PS-UMP கூட்டணி வேண்டுமென்பதே அதில் ஃபிய்யோனின் ஒரே தீர்வாக இருந்தது.

அவர் எழுதினார், “முழு வீழ்ச்சியிலிருக்கும் ஓர் அரசாங்கத்தின் முகத்தைப் பாதுகாப்பதற்காக, அவரது உரையில் பிரதம மந்திரி மானுவெல் வால்ஸ் அவரது கொள்கையின் மீது நம்பிக்கையைக் கொண்டு வர முயற்சிப்பார். சந்தேகத்திற்கு இடமின்றி அந்த அரசாங்கம் நம்பிக்கை வாக்கெடுப்பில் அதன் சட்டமன்ற பெரும்பான்மையை பெறும், ஆனால் நாட்டில் பொதுவான வெறுப்புணர்வு நிலவுகின்ற நிலையில் அதுவொரு சிறிய விடயமாகவே இருக்கும். பிரான்ஸ் முற்றிலுமாக நெருக்கடியில் உள்ளது, அதன் சமூக அல்லது ஜனநாயக அமைப்புமுறையின் ஓர் உடைவு குறித்த அபாயத்தையும் தவிர்க்க முடியாது. தீவிர வலது 'அதிகாரத்தை எடுக்கும் விளிம்பில் இருப்பதாக' மானுவெல் வால்ஸ் தெரிவித்துள்ளார். அது யாருடைய தவறு, அவரது முடிவெடுக்கவியலாதன்மையால் மற்றும் அவரது பிழைகளால், குடியரசை ஒரு மந்தநிலைமைக்குள் முழ்கடித்துள்ள அரச தலைவரின் தவறில்லை என்றால் பின் யாருடைய தவறு?"

"எதிர்தரப்பு குடியுரசு கட்சியினருடன் சேர்ந்து", அதாவது UMP உடன் சேர்ந்து உருவாக்கப்படும் ஆழ்ந்த சமூக வெட்டுக்களுக்கு அழைப்புவிடுத்த ஃபிய்யோன் தொடர்ந்து குறிப்பிடுகையில், “நம்முடைய தேசம் தோல்வி அடைந்துவிடவில்லை. நம்முடைய அமைப்புமுறை தான் தோல்வி அடைந்துள்ளது. ஆனால் அமைப்புமுறையை மாற்ற முடியும். தேசத்தின் வளங்களுக்கு நன்றி கூற வேண்டும், நமது நாடு இரண்டே ஆண்டுகளில் விடயங்களைத் தலைகீழாக மாற்ற முடியும், ஐந்து ஆண்டுகளில் நிமிர்ந்து நிற்க முடியும், பத்து ஆண்டுகளில் முன்னணி ஐரோப்பிய சக்தியாக மாற முடியும். இதுதான் என்னுடைய நோக்கம், பிரான்ஸை மாற்ற வேண்டுமென நாம் நினைத்தால் அது அடையக்கூடியதே," என்றார்.

ஆளும் மேற்தட்டிலிருந்து முன்னால் வரும் மாற்றீடுகள் மக்கள்விரோத அதிர்ச்சி வைத்தியமாக அல்லது ஒரு நவ-பாசிச வார்த்தைஜாலங்களாக இருக்கின்றன என்ற உண்மையே, பிரெஞ்சு முதலாளித்துவத்தின் முழு திவால்நிலைமைக்கு சான்றாக உள்ளன.