World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: “National unity government” to implement harsh austerity measures

இலங்கை: "தேசிய ஐக்கிய அரசாங்கம்" கடுமையான சிக்கன நடவடிக்கைகளை அமுல்படுத்தவுள்ளது

By W. A. Sunil
21 August 2015

Back to screen version

புதன்கிழமை ஊடகங்களுடன் பேசிய ஐக்கிய தேசியக் கட்சி (.தே..) தலைவர் ரணில் விக்கிரமசிங்க, "மக்களின் பிரச்சினைகளை தீர்க்க ஐக்கியப்பட்டு செயற்படுமாறு" அனைத்து பாராளுமன்ற கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தார். உண்மையில் இது, "தேசிய ஐக்கிய" அரசாங்கத்துக்கான ஒரு அழைப்பாகும். அது, மோசமடைந்துவரும் பொருளாதார நெருக்கடியின் மத்தியில், சர்வதேச நாணய நிதியம் (IMF) கட்டளையிட்டுள்ள சிக்கன திட்டங்களை அமுல்படுத்தும்.

திங்கள் நடந்த பொதுத் தேர்தலில், .தே. தலைமையிலான நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி (.தே.மு.) அதிக எண்ணிக்கையிலான ஆசனங்களை வென்றிருந்தாலும், முழுமையான பாராளுமன்ற பெரும்பான்மைக்கு ஏழு உறுப்பினர்கள் குறைவாகவே பெற்றுள்ளது. விக்கிரமசிங்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ..சு..) தலைவரும் அதை நல்லாட்சிக்கான .தே.மு. உடன் ஒரு கூட்டணி அரசாங்கம் அமைக்க நகர்த்திவருபவருமான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடன் பேச்சுவார்த்தைகளை நடத்திய பின்பே இந்த கருத்தை தெரிவித்தார். சிறிசேனவிடம் உத்தரவாதம் பெற்ற பின்னர், விக்கிரமசிங்க நாட்டின் புதிய பிரதமராக இன்று பதவி பிரமாணம் செய்துகொண்டார்.

அரசியல் கட்சிகள் இணைந்து தொழிற்பட "இரண்டு தேர்வுகள்" உள்ளன என்று விக்கிரமசிங்க கூறினார். "அவர்கள் அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொண்டு அரசாங்கத்தில் இருந்து செயற்பட முடியும், அல்லது அவர்கள் மேற்பார்வை குழுக்கள் மூலமாக பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு பாராளுமன்றத்தில் எங்களை ஆதரிக்க முடியும்." அரசாங்கத்தின் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதை கண்காணிக்கும் மேற்பார்வை குழுக்கள் என்று அழைக்கப்படுவதை அமைப்பதற்கான .தே..யின் அழைப்பு,  ஏனைய கட்சிகளின் ஆதரவில் தங்கியிருக்கும் ஒரு வழிமுறையாகும்.

"நாட்டைப் பாதிக்கும் அடிப்படைப் பிரச்சினைகள் பற்றி ஒருமைப்பாட்டுக்கு வர, குறைந்தது இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு சுமுகமாக வேலை செய்ய வேண்டும்" என விக்கிரமசிங்க எல்லா அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்தார். நல்லாட்சிக்கான .தே.மு.வின் திட்டமொன்று "பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு அனைவரது உடன்பாட்டுடன் அதன் அடிப்படையில் ஒரு தேசிய கொள்கை கட்டமைப்பு தயாரிக்கப்படும்."

ஸ்ரீ..சு..யின் பிரச்சாரத்திற்கு தலைமை வகித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவுக்கு எதிராக, சிறிசேன நல்லாட்சிக்கான .தே.மு. உடன் நின்ற நிலையில், ஒரு கசப்பான போட்டியில் நடந்த தேர்தலின் பின்னரே விக்கிரமசிங்க இந்த அழைப்பை விடுத்துள்ளார். கடந்த வாரம் பூராவும் இராஜபக்ஷ ஆதரவாளர்களை ஓரங்கட்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட சிறிசேன, கடந்த வெள்ளிக்கிழமை ஸ்ரீ..சு.. மற்றும் அதன் கூட்டணியான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியினதும் (..சு.மு.), பொதுச் செயலர்களை அகற்றினார். திங்களன்று, அவர் ஸ்ரீ..சு.. மத்திய குழுவில் இருந்து 13 உறுப்பினர்களை நீக்கினார்.

விக்கிரமசிங்கவை சந்தித்த சிறிசேன, நேற்று ஐக்கிய அரசாங்க திட்டம் பற்றி ஆலோசிக்க ஸ்ரீ..சு.. மத்திய குழுவை கூட்டினார். பல வாரங்களாக, மத்தியகுழு கூட்டத்தை தடை செய்த ஜனாதிபதி தனது தடைக்கு ஆதரவாக நீதிமன்ற உத்தரவையும் பெற்றார்.

சிறிசேனவால் நியமிக்கப்பட்ட பதில் ஸ்ரீ..சு.. செயலாளர் துமிந்த திசாநாயக்க, இரண்டு ஆண்டுகளுக்கு நல்லாட்சிக்கான .தே.மு. உடன் ஒரு "தேசிய அரசாங்கம்" அமைக்க மத்திய குழு ஒப்புக்கொண்டுள்ளது என ஊடகங்களுக்குத் தெரிவித்தார். புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று தயாரிக்கப்படுவதாகவும், அது கைச்சாத்திடப்பட்டால், பல ஸ்ரீ..சு.. உறுப்பினர்கள் புதிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை பெறுவர் என்றும் அவர் கூறினார்.

தேர்தலுக்குப் பின்னர் மூன்று நாட்களுக்குள்ளான இந்த விரைவான நகர்வுகள், இராஜபக்ஷவை ஓரம் கட்டி, எல்லாவற்றிற்கும் மேலாக, ஒரு அமெரிக்க சார்பு வெளிநாட்டுக் கொள்கையை முன்னெடுக்கவும் மற்றும் கொடூரமான சிக்கன நடவடிக்கைகளை கட்டவிழ்த்துவிடவும் அரசைப் பலப்படுத்திக்கொள்ளும் இலக்கிலானவை ஆகும்.

 விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆகியோரின் உதவியுடன், அமெரிக்க சதியிலான ஒரு ஆட்சி மாற்ற நடவடிக்கையின் வழியாகவே சிறிசேன ஜனவரியில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் இராஜபக்ஷவை அகற்றினர். பிரதமராகும் எதிர்பார்ப்புடன் திங்கள் நடந்த பாராளுமன்ற தேர்தலில் இராஜபக்ஷ போட்டியிட்டாலும், ..சு.மு. 95 ஆசனங்களை மட்டுமே வென்றது.

இராஜபக்ஷவின் நீக்கம் பிராந்தியம் முழுவதும் சீனாவின் செல்வாக்கைக் கீழறுத்து சீனா மீது போருக்கு தயார் செய்வதை இலக்காகக் கொண்ட வாஷிங்டனின் பரந்த "ஆசியாவில் முன்னிலை" திட்டத்தின் ஒரு பகுதியாகவே இடம்பெற்றது. இராஜபக்ஷ பெய்ஜிங்குடன் நெருங்கிய உறவு கொண்டிருந்ததாலும் சீன உதவி மற்றும் முதலீட்டைச் சார்ந்து இருந்ததாலும் அமெரிக்கா அவரை எதிர்த்தது
.

ஜனவரி தேர்தலில் வென்ற சிறிசேன, ஒரு சிறுபான்மை .தே.. அரசாங்கத்துக்கு தலைமை வகிக்க பிரதமராக விக்கிரமசிங்கவை நியமித்தார். இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெர்ரி உட்பட உயர்மட்ட அமெரிக்க அதிகாரிகளின் தொடர்ச்சியான கொழும்பு வருகையுடன் இலங்கையின் வெளியுறவு கொள்கை விரைவில் வாஷிங்டனை நோக்கி நகர்த்தப்பட்டது.

திங்களன்று தேர்தலைத் தொடர்ந்து, அமெரிக்க இராஜாங்த் திணைக்கள செய்தித் தொடர்பாளர் ஜோன் கிர்பி அறிவித்ததாவது: "ஜனாதிபதி சிறிசேன, பிரதமர் மற்றும் புதிய அரசாங்கத்துடன் செயற்பட அமெரிக்கா எதிர்பார்க்கிறது."

வெளியுறவுக் கொள்கையில் பிளவுற்றிருந்தாலும்ம, .தே.. மற்றும் ஸ்ரீ..சு.. ஆழ்ந்த பொருளாதார நெருக்கடியின் சுமைகளை உழைக்கும் மக்கள் மீது  சுமத்தும் தங்கள் உறுதிப்பாட்டில் அவை ஒன்றுபட்டு நிற்கும் என்று தேர்தலின் போது சோசலிச சமத்துவக் கட்சி (சோ...) மட்டுமே எச்சரித்து. தேசிய ஐக்கிய அரசாங்கம் அமைக்கப்படுவதன் துல்லியமான நோக்கம் அதுவே ஆகும்.

விக்கிரமசிங்கவின் நெருங்கிய கூட்டாளியும் முன்னாள் வங்கியாளருமான மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன மகேந்திரன், பைனான்சியல் டைம்ஸ் ஊடகத்திற்கு கருத்துத் தெரிவிக்கும் போது இந்த நிகழ்ச்சி நிரலை தெளிவுபடுத்தியுள்ளார். தேசிய கடன் அதிகரிப்பு மற்றும் குறைந்த வரி வருவாயினால் ஏற்படுத்தப்பட்டுள்ள பொருளாதார பிரச்சினைகள் பற்றிக் குறிப்பிட்ட பின்னர், அவர், புதிய அரசாங்கம் நாணய முழுமையாக மிதக்கவிடுவதற்கு வழியமைப்பதோடு "முற்றிலும் மாறுபட்ட ஒழுங்கு விதிகள்" ஊடாக அதை முன்னெடுக்கும் என்று கூறினார்.

"எமது இருப்புக்கள் நன்கு திடமாகும் வரை இந்த அதிரடி சீர்திருத்தங்களை கொண்டு செல்ல விரும்புகிறோம்" என மகேந்திரன் கூறினார். ரூபாயை முழுமையாக மிதக்கவிடுவதானது விரைவான மதிப்பிறக்கத்துக்கு வழிவகுக்கக் கூடும், அத்துடன் அது தொழிலாளர்களின் மற்றும் கிராமப்புற ஏழைகளின் வாழ்க்கை நிலைமைகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எல்லாவற்றுக்கும் மேலாக, இது வெளிநாட்டு முதலீடுகளுக்கு மேலும் நாட்டை திறந்துவிடுவதையும் தொழிலாள வர்க்கத்தை சுரண்டுவதை உக்கிரமாக்குவதையும் குறிக்கோளாகக் கொண்ட நீண்ட விளைவுகளைக் கொண்ட சந்தை-சார்பு நடவடிக்கைகளின் முதல் படி மட்டுமேயாகும்.

தேர்தலின் போது சுட்டிக்காட்டப்பட்டது போல், நல்லாட்சிக்கான .தே.மு.வின் செயற் திட்டங்களில், சர்வதேச மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு தாராள வரிச் சலுகைகளைகளுடன் தீவு முழுவதும் 25 சுதந்திர வர்த்தக வலயங்களை நிறுவுதல், மற்றும் விவசாயிகளை உலக சந்தையுடன் கட்டிப்போடும் "கொத்தணி கிராமங்களை" அமைப்பதும் அடங்கும்.

கடந்த வாரம், நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, .தே.. ஷ்டத்தில் இயங்கும் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை மறுசீரமைக்கும், அப்போது அவை "திறைசேரியில் தங்கியிருக்காமல் சுயமாக நிதிப் பெறுவதாக அமையும்" என்று கூறினார். நல்லாட்சிக்கான .தே.மு.வின் தேர்தல் விஞ்ஞாபனம், அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை முகாமைத்துவம் செய்ய, ஒரு உரிமைக் கம்பனியை ஸ்தாபிக்க அழைப்பு விடுத்துள்ளது.

 இந்த அரச நிறுவனங்களில் இலங்கை மின்சார சபை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், நீர்வழங்கல் சபை மற்றும் இலங்கை புகையிர சேவையும் அடங்கும். கருணாநாயக்கவின் கருத்து, அவற்றை "தன்னை சரிப்படுத்திக்கொள்ளும்" நிறுவனங்களாக ஆக்கும் கோரிக்கையை புதிய அரசாங்கம் நிறைவேற்றும் என சர்வதேச நாணய நிதியத்துக்கு தெளிவாக உறுதியளிப்பதாகும்இது முழுமையான தனியார்மயமாக்கத்துக்கான அடியெடுப்பாகும்.

 புதிய அரசாங்கம் "அதிரடி சீர்திருத்தங்களை" திணிக்க வேண்டும் என்ற சர்வதேச நாணய நிதியத்தின் அழுத்தங்களுக்கு மட்டும் முகங்கொடுக்கவில்லை. இலங்கை பொருளாதாரத்தின் பலவீனத்தை சுட்டிக்காட்டி, புதன்கிழமை ஃபிட்ச் ரேட்டிங்ஸ், (தரப்படுத்தல் அமைப்பு) புதிய அரசாங்கத்திடம் இருந்து "அதிக கொள்கைத் தெளிவுபடுத்தலை" கோரியது.

ஃபிட்ச் ரேட்டிங்ஸ், இலங்கையானது "போர்த்துக்கல், ஹங்கேரி மற்றும் குரோஷியாவை அடுத்து, 'பிபி' வரம்பில் (‘BB’ range) உள்ள நாடுகளில் அரசாங்கக் கடன் அதிகம் கொண்ட நாடாக -மொத்த உள்நாட்டு  உற்பத்தியில் 72 சதவீதம் கடனைக் கொண்ட நாடாக- நான்காவது இடத்தில்" உள்ளது என்று சுட்டிக் காட்டியது. ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில், மே மாதம் கடன் வளர்ச்சி துரிதமடைந்துள்ளதோடு பாவனைப் பொருள் இறக்குமதி 45 வீதத்தால் கூடியுள்ள அதேவேளை, "விவசாயம் மற்றும் ஆடைத் தொழிற்துறை தேக்க நிலையின் காரணமாக ஏற்றுமதிகள் மாறாமல் இருந்தது." அரச கடன் பத்திரங்களை விநியோகிப்பதன் மூலமே அரசாங்கம் இதற்கு பிரதிபலித்தது. இதுநாட்டின் கடன் நெருக்கடி மோசமாகுவதற்கேஉதவியது.

இது, அரசாங்கம் பெரும்தெளிவுபடுத்தலை” –அதாவது சிக்கன நடவடிக்கைகளுக்கான அர்ப்பணிப்பை- வழங்காவிடில், நாட்டின் அரச கடன் பெறும் தகமை கீழிறக்கப்படும் என்ற மிகவும் நுட்பமான எச்சரிக்கை மட்டும் அல்ல. கிரேக்கத்தில் சுமத்தப்பட்ட கடுமையான நடவடிக்கைகளின் வழியில், சர்வதேச நிதி மூலதனமானது புதிய அரசாங்கம் உழைக்கும் மக்களின் சமூக நிலையை ஆழமாக வெட்டிச் சரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.

பெருவணிகத்தின் ஆணைகளை சுமத்துவதன் பேரில் ஒரு தேசிய ஐக்கிய அரசாங்கத்தை நோக்கிய துரிதமான நகர்வானது சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ...) தேர்தல் பிர்ச்சாரத்தின் முக்கியத்துவத்தை கோடிட்டுக்காட்டுகிறது. அதன் பிரச்சாரம், ஒவ்வொரு முதலாளித்துவ கட்சியில் இருந்தும் -.தே.., ஸ்ரீ..சு.. மற்றும் அவற்றின் பங்காளில் இருந்தும்- தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்கான போராட்டத்தில் குவிமையப்படுத்தியிருந்தது. உழைக்கும் மக்களின் சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களை நிறுத்துவதற்கான ஒரே வழி, தெற்காசியா மற்றும் உலகம் முழுவதும் சோசலிசத்துக்கான போராட்டத்தின் ஒரு ஒருங்கிணைந்த பாகமாக தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்துக்காக மற்றும் சோசலிச கொள்கைகளுக்காக ஐக்கியப்பட்டுப் போராடுவதே ஆகும்.