World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan president dissolves parliament amid political uncertainty

அரசியல் நிச்சயமற்ற தன்மைக்கு இடையே இலங்கை ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைக்கிறார்

By K. Ratnayake
29 June 2015

Back to screen version

அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரமின்மை தீவிரமடைந்ததன் இடையே இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வெள்ளியன்று நாட்டின் பாராளுமன்றத்தை கலைத்தார். பொதுத் தேர்தல் ஆகஸ்ட் 17 அன்று நடத்தப்படும், வேட்புமனுத் தாக்கல் ஜூலை 6 அன்று தொடங்கி ஜூலை 13 அன்று முடியும்.

னவரி 8 அன்று நடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது, சிறிசேன, பதவியில் அமர்ந்து 100 நாட்களுக்குள் பாராளுமன்றத்தை கலைப்பதாக வாக்குறுதியளித்திருந்தார். ஏப்ரல் 23 அன்று 100வது நாளாகும். பெயரளவில் அவரே தலைவராக இருக்கக் கூடிய அவரது சொந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள்ளாக தனது அதிகாரத்தை வலுப்படுத்திக் கொள்ள முயற்சிக்கும் பொருட்டு இந்த நடவடிக்கையை அவர் ஒத்தி வைத்திருந்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலும் சரி அக்கட்சி தலைமையில் இயங்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலும் (UPFA) சரி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ மற்றும் அவரது கூட்டாளிகள் மற்றும் ஆதரவாளர்களைக் கொண்டதொரு ஒரு போட்டிக் கன்னை முன்வைக்கும் சவாலுக்கு சிறிசேன முகம்கொடுத்து வருகிறார்.

தேர்தல் சீர்திருத்தங்களுக்கான சிறிசேனவின் முன்மொழிவுகளுக்கு அல்லது அரசியல்சட்டத்தின் இருபதாவது திருத்தத்திற்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவைத் திரட்ட அரசாங்கத்தால் முடியாததே பாராளுமன்ற கலைப்புக்கான உடனடிக் காரணமாக கூறப்படுகிறது. இந்த திருத்தங்கள் வாக்குறுதியளித்த முன்கூட்டிய தேர்தலை மேலும் தாமதப்படுத்தும் என்று கூறி சிறிசேனவின் சிறுபான்மை அரசாங்கத்தின் தலைமையில் இருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி அவற்றை எதிர்த்தது. தாமதிப்பது அதிகரித்துச் செல்லும் மக்கள் அதிருப்தியை மேலும் தீவிரப்படுத்தி தனது தேர்தல் வாய்ப்புகளுக்கு அச்சுறுத்தலாக அமைவதாக ஐக்கிய தேசியக் கட்சி அஞ்சியது.

ப்போது கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கொண்டிருந்த நிலையில், மோசமாகப் பிளவுபட்டுக் கிடந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தேர்தலை தள்ளிப் போட விரும்பியது. அப்போதுதான் சிறிசேனவினால் பிரதமராக அமர்த்தப்பட்ட ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி மீதான மக்களின் பிரமை விலகுவதன் மூலமான ஆதாயத்தை அதிகம் அறுவடை செய்ய முடியும் என்று அது கருதியது.

ரசாங்கத்தில் பங்கு வகிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ், ஆளும் கூட்டணியை ஆதரித்த மக்கள் விடுதலை முன்னணி (JVP) போன்ற பிற கட்சிகள், இந்த முன்மொழிவுகள் சிறிய கட்சிகளை பாதிக்கும் என்பதான முகாந்திரத்தை கூறி தேர்தல் சீர்திருத்தங்களை எதிர்த்தன.

ஆயினும், இந்தக் கட்சிகளுக்கு இடையிலான ஆக்ரோஷமான சண்டைகளுக்கும் ஜனநாயக உரிமைகள் குறித்தான எந்தவொரு கவலைக்கும் இடையில் எந்தவொரு சம்பந்தமும் கிடையாது. மாறாக, அவை முதலாளித்துவ வர்க்கத்தின் வெவ்வேறு பிரிவுகளது சிறப்புச்சலுகைகளையும் ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகத்தை சூழ்ந்துள்ள குழப்பத்தையுமே பிரதிபலிக்கின்றன.

னவரி 8 ஜனாதிபதித் தேர்தல் முடிந்து பதவியில் அமர்ந்த நாள் முதலாகவே, சிறிசேனவும் அவர் நியமனம் செய்த சிறுபான்மை அரசாங்கமும் நெருக்கடி மாறி நெருக்கடியாக சந்தித்து வந்திருக்கின்றன. ஒபாமா நிர்வாகத்தால் தூண்டப்பட்ட ஒரு ஆட்சிமாற்ற நடவடிக்கையின் மூலமாக அவர் ஜனாதிபதியாக அமர்த்தப்பட்டார். கிளின்டன் அறக்கட்டளை மூலமாக அமெரிக்காவுடன் நெருக்கமான தொடர்புகள் கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, மற்றும் அமெரிக்க ஆதரவு ஐக்கிய தேசியக் கட்சி இன் தலைவரான விக்கிரமசிங்க ஆகியோர் இந்த நடவடிக்கையில் உதவினர்.

ீனாவை நோக்கிய இராஜபக்ஷவின் வெளியுறவுக் கொள்கை சாய்வுக்கு முடிவுகட்டி இலங்கையை சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் மூர்க்கமான போர் தயாரிப்புகளது வரிசையில் உறுதியாக நிறுத்துவதற்காக அமெரிக்கா தலையீடு செய்தது. அதன் உள்நாட்டுக் கூட்டாளிகள், இராஜபக்ஷவின் அதிகரித்துச் சென்ற எதேச்சாதிகார ஆட்சிக்கு எதிராய் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஏழைகள் இடையே இருந்த ஆழமான கோபத்தை சுரண்டிக் கொண்டனர். சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கை உத்தரவுகளை அமல்படுத்தியதன் போது எழுந்த எதிர்ப்பை ஒடுக்க இராஜபக்ஷ போலிஸ்-அரச வழிமுறைகளைப் பிரயோகம் செய்தார்.

இராஜபக்ஷவின் சுகாதார அமைச்சராக இருந்த சிறிசேன, ஜனாதிபதி பதவிக்கு அவரை சவால் செய்ய முன்கூட்டி தீட்டியிருந்த திட்டத்தின் படி, இராஜினாமா செய்தார். தொழிற்சங்கங்களும், நவ சம சமாஜக் கட்சி மற்றும் ஐக்கிய சோசலிச கட்சி போன்ற போலி-இடது குழுக்களும், மற்றும் பல பிற நடுத்தர-வர்க்க அமைப்புகளும் இந்த ஆட்சி-மாற்ற நடவடிக்கையை மூடிமறைக்க உதவிசெய்தன. இராஜபக்ஷவின் சர்வாதிகாரத்தை எதிர்த்துப் போராடுவது மற்றும் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டுவது என்ற மோசடியான பதாகையின் கீழ் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளது எதிர்ப்பை அவை சிறிசேனவின் முகாமுக்குள் திருப்பி விட்டன. JVP மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகியவை சிறிசேனவின் பிரச்சாரத்தை ஆதரித்தன.

ுந்தைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான UPFA கூட்டணியின் உடைவை சிறிசேன சுரண்டிக் கொண்டு சிறுபான்மை அரசாங்கத்தை வலுப்படுத்த முடியும் என்பதாய் இந்த வட்டாரங்களில் ஆரம்பத்தில் மிக உற்சாகமான நம்பிக்கைகள் இருந்தன.

ஆகஸ்ட் 17 அன்று தேர்தல் நடத்தப்படுவதென்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விடயமாகும். மே மாத ஆரம்பத்தில் அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஜோன் கெர்ரி விஜயத்தின் போது, சிறிசேன, தேர்தலை தான்  ஆகஸ்டில் நடத்தவிருப்பதாக சூசகம் செய்திருந்தார். ஐநா மனித உரிமை கமிஷன் செப்டம்பரில் மீண்டும் கூடுவதற்கு முன்பாக சிறிசேன தேர்தலை நடத்தி விட வேண்டும் என அமெரிக்கா விரும்பியது. 2009 இல் பிரிவினைவாத விடுதலைப் புலிகளுக்கு எதிரான தாக்குதலின் இறுதி மாதங்களின் போது இலங்கை அரசாங்கமும் இராணுவமும் இழைத்த போர்க் குற்றங்கள் - இதில் 40,000 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாக ஐநா நிபுணர்கள் மதிப்பிட்டிருந்தனர் - குறித்த ஒரு அறிக்கை குறித்து அந்தக் கூட்டம் விவாதிக்க இருக்கிறது.

ென்ற மார்ச் மாதத்தில், சிறிசேன அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில், அறிக்கை மீதான விவாதத்தை ஆறுமாத காலம் தள்ளிப் போடுவதற்கு அமெரிக்கா பச்சைக்கொடி காட்டியது. தேர்தலுக்கு முன்பாக அறிக்கை வெளியாகுமானால், இலங்கையிலான மேற்கத்திய தலையீடாக .நா அறிக்கையை கண்டனம் செய்கின்ற ஒரு தேசியவாத மற்றும் பேரினவாத அடிப்படையில் இராஜபக்ஷ ஆதாயமடைய அது உதவும், அது அமெரிக்க-ஆதரவான ஆட்சியை வலுப்படுத்த கிடைத்த வாய்ப்பை சங்கடத்திற்குள்ளாக்கும் என்று ஒபாமா நிர்வாகம் சிடுமூஞ்சித்தனமாக கணக்குப் போட்டது.

ெளியுறவுக் கொள்கை பத்தியாளரான டெய்லர் டிபேர்ட், ஜூன் 5 அன்று எழுதினார்: ”அறிக்கை வெளியாகும் முன்பு தேர்தல் நடக்கவில்லை என்றால் அது மிக துரதிர்ஷ்டவசமானதாகும்”, “அத்தகையதொரு நிலைமையானது நாட்டிற்குள் மிகக் கடுமையான கூறுகள் மீண்டெழுவதற்குக் கதவு திறந்து விடக் கூடும்அத்துடன்சிறிசேனவுக்கு அவரது சொந்தக் கட்சியின் மீதான பிடியையும் அது பலவீனப்படுத்தி விடும்.”மேலும் டிபேர்ட் எச்சரித்தார்: “அமெரிக்கா மற்றும் சர்வதேச சமுதாயத்தின் பிற அங்கத்தவர்களுடனான இலங்கையின் நெருக்கத்திற்கு அது ஒரு குறிப்பிடத்தக்க பின்னடைவாக ஆகும்.”

ஆயினும், அரசியல் சூழ்நிலையானது துரிதமாக மாறிக் கொண்டிருக்கிறது. வாழ்க்கை நிலைமைகளின் மீதும் மற்றும் ஜனநாயக உரிமைகளின் மீதுமான தாக்குதல்களை இல்லாது செய்ய அளித்த வாக்குறுதிகள் எல்லாம் வெற்று வாய்வீச்சுகளாக அம்பலப்பட்டு வருவதால் சிறிசேன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கத்தை நோக்கிய தொழிலாள வர்க்க அதிருப்தி பெருகிக் கொண்டிருக்கிறது. தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் ஏழைகளின் போராட்டங்களை ஒடுக்குவதற்கு இராஜபக்ஷ அரசாங்கம் பயன்படுத்திய அதே ஒடுக்குமுறை நடவடிக்கைகளையே சிறிசேன-விக்கிரமசிங்க நிர்வாகமும் பிரயோகம் செய்து வருகிறது. கல்வி வெட்டுகளுக்கு எதிரான போராட்டங்களை நசுக்குவதற்கு போலிஸ் திரும்பத் திரும்ப பல்கலைக்கழக மாணவர்களை தாக்கியது, அத்துடன் சென்ற மாதத்தில் சுகாதாரத்துறை தொழிலாளர்களது வேலைநிறுத்தத்தை உடைப்பதற்காக படையினர்கள் மருத்துவமனைகளில் நிறுத்தப்பட்டனர்.

ொருளாதாரம் அதன் விளிம்பில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. மிகச் செலவுபிடிக்கும் கடன்களுக்கு மறுநிதியாதார ஏற்பாடாக அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட கடனளிப்பு நாடுகளிடம் இருந்துபத்து பில்லியன் கணக்கிலான டாலர்களைகடனாகப் பெற அரசாங்கம் எதிர்நோக்கியிருந்ததாக சென்ற வெள்ளியன்று, மத்திய வங்கியின் ஆளுநரான அர்ஜூன் மஹேந்திரன் ப்ளூம்பேர்க்கிடம் தெரிவித்திருந்தார்.

டன்களின் மீதே அதிகம் தங்கியிருந்ததாக இராஜபக்ஷ ஆட்சியை சிறிசேனவின் அரசாங்கம் குற்றம் சாட்டியிருந்தது. ஆனால் கடந்த ஆறுமாத பதவிக் காலத்தில் இப்போதைய அரசாங்கமானது கருவூல ரசீதுகள் மற்றும் பத்திரங்கள் மூலமாக 378 பில்லியன் ரூபாய்களை (2.8 ில்லியன் அமெரிக்க டாலர்கள்)டனாகப் பெற்றிருக்கிறது. சென்ற ஆண்டு மொத்தமும் கடனாகப் பெறப்பட்டிருந்த தொகையான 260 பில்லியன் ரூபாய்களை விஞ்சியதாக இது அமைந்திருக்கிறது. இந்த மாத ஆரம்பத்தில், 10 ஆண்டு காலத்திற்கான அரசாங்க பத்திரங்களை விநியோகம் செய்து அரசாங்கம் இன்னுமொரு 1 பில்லியன் அமெரிக்க டாலர்களை திரட்டியிருக்கிறது.

சிறிசேன மற்றும் அரசாங்கத்தின் பிரச்சினைகளை மேலும் சிக்கலாக்கும் வண்ணமாக, UPFA இல் இருக்கும் இராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் பொதுத் தேர்தலில் அது தனது பிரதமருக்கான வேட்பாளராக இராஜபக்ஷவை நியமிக்க வேண்டும் என்ற ஒரு பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ளனர். மகாஜன எக்சத் பெரமுன மற்றும் தேசிய சுதந்திர முன்னணி உள்ளிட்ட பேரினவாதக் கட்சிகள், மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பிரிவு ஆகியவை இந்தப் பிரச்சரத்தில் முன்னிலை வகிக்கின்றன.

இராஜபக்ஷ, புத்த ஆலயங்களில் பிரதானமாக தனது அரசியல் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து வருகிறார். “தாய்நாட்டைபாதுகாப்பதான சுலோகத்தைக் கொண்டு மக்களின் மிகவும் பிற்போக்கான அடுக்குகளை அணிதிரட்ட அவர் முனைகிறார். இனவாதப் போரில் 2009 இல் பெற்ற வெற்றியைக் காட்டிக்கொடுத்து, தோல்வியடைந்த விடுதலைப் புலிகளைமீண்டெழஅனுமதித்துக் கொண்டிருப்பதாக அவரும் அவரைச் சுற்றியவர்களும் அரசாங்கத்தைக் குற்றம் சாட்டுகின்றனர். இராஜபக்ஷவின் கொள்கைகளால் ஆதாயமடைந்த சிங்களப் பெருவணிகர்களும் இந்த அமளிக்கு ஆதரவாக இருக்கின்றனர்.

ந்தப் பிரச்சாரத்தின் பகுதியாக, விக்ரமசிங்க, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க மற்றும் சட்டம் ஒழுங்குத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க ஆகியோருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. இழந்த அதிகாரம் மற்றும் சிறப்புரிமைகளை மீட்பதற்கான இந்த ஆக்ரோசமான நெருக்குதலின் விளைவாக, சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் UPFA மீது கொண்டிருந்த கட்டுப்பாட்டை ஏறக்குறைய இழந்துவிட்டார். நாடாளுமன்றத்தை கலைப்பதன் மூலமாக, சிறிசேன தனது அரசியல் கூட்டாளிகளை திறம்படக் கைதூக்கி விடுகிறார்.

சிறிசேன இன்னும் உத்தியோகபூர்வ தலைவராக இருக்கக் கூடிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள்ளாக தேர்தலில் இராஜபக்ஷயை பிரதமராக  முன்நிறுத்தும் பரிந்துரை எதனையும் தான் அனுமதிக்கப் போவதில்லை என்று ஏற்கனவே சிறிசேன பகிரங்கமாகவே அறிவித்திருக்கிறார். ஆயினும் இராஜபக்ஷவுக்கு ஒரு கவுரவப் பதவியைக் கொடுத்து அவருடன் ஒரு சமரசத்தை ஏற்படுத்திக் கொள்ள அவர் முனைந்து, அதற்கு இராஜபக்ஷ மறுத்து விட்டார். இராஜபக்ஷவுடன் சிறிசேன இரகசியமாய் விவாதித்ததாக சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது. விரிவான விவரங்கள் கிடைக்கவில்லை.

ந்த அபிவிருத்திகள் எப்படியிருந்தபோதும், ஜனவரியில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் எடுத்துக்காட்டப்பட்டதைப் போல, அமெரிக்கா சீனாவுக்கு எதிரான அதன் போர் நிகழ்ச்சிநிரலுக்கு சேவை செய்கின்ற ஒரு அரசாங்கத்தை கொழும்பில் அமர்த்துவதற்கே வலியுறுத்தும். இலங்கைக்கான அமெரிக்கத் தூதராக நியமிக்கப்படவிருக்கும் அத்துல் காஷேப் தனது அமெரிக்க செனட் வெளியுறவு கமிட்டி பரிந்துரை விசாரணையில், “நாம் இந்தோ-பசிபிக் எங்கும் நமது நலன்களை முன்னெடுக்க முனைகையில், இலங்கை ஒரு அதிமுக்கியமான கூட்டாளியாக இருக்கும்என்று கூறினார். எந்த எதிர்ப்பையும் வழிக்குக் கொண்டுவருவதற்கே, அமெரிக்கா, .நா வின் போர்க்குற்ற குற்றச்சாட்டுகளின் அச்சுறுத்தலை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டிருக்கிறது.

்தாபகக் கட்சிகளுக்குள்ளான பிளவுகள் கூர்மைப்பட்டிருக்கின்ற போதிலும் கூட, சமூகப் போராட்டங்களின் வெடிப்பு என்பது அவற்றின் பொதுவான அச்சமாக இருக்கிறது. இந்த மாதத்தில், சுமார் 47,000 சுகாதாரத் துறை தொழிலாளர்கள் வேலைநிறுத்த நடவடிக்கையை மேற்கொண்டனர். சென்ற வாரத்தில், ஏறக்குறைய அத்தனை அரசாங்கத் துறைகளிலுமான ஒப்பந்த தொழிலாளர்கள் மேம்பட்ட நிலைமைகளைக் கோரி ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ச்சியான பிரச்சாரங்களை மேற்கொண்டிருக்கின்றனர்.

சிறிசேனவும் விக்ரமசிங்கவும் தேர்தலுக்குப் பின்னர் ஒருதேசிய அரசாங்கத்தைஅமைக்க தொடர்ந்து அழைப்பு விடுத்து வந்திருக்கின்றனர், அதேநேரத்தில் இராஜபக்ஷ ஒரு பேரினவாதப் பிரச்சாரத்தின் மூலமாக அதிகாரத்திற்கு திரும்ப முயற்சி செய்கிறார். இக்கட்சிகள் இடையே எத்தனை வித்தியாசங்கள் இருந்தபோதும், தொழிலாள வர்க்கத்தின் வேலைகள் மற்றும் வாழ்க்கை நிலைமைகள் மீது தாட்சண்யமற்ற தாக்குதல்களுக்கே அவை தயாரிப்பு செய்து கொண்டிருக்கின்றன.

ன்றாலும், இராஜபக்ஷ தடுத்துநிறுத்தப்பட்டாக வேண்டும் என்பதாகக் கூறி போலி-இடது மற்றும் மத்தியதர-வர்க்கக் குழுக்கள் அரசியல் ஸ்தாபகக் கட்சிகளின் ஒரு புதிய அணிவரிசையை உருவாக்க முனைந்து கொண்டிருக்கின்றன. ஏகாதிபத்திய போர் மற்றும் சமூக எதிர்ப்புரட்சிக்கு எதிராக சர்வதேச சோசலிச முன்னோக்கை முன்னெடுக்கின்ற ஒரேயொரு கட்சியாக இத்தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சி தலையீடு செய்யவிருக்கிறது.