World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Socialist Equality Party holds first election meeting in Sri Lanka’s north

சோசலிச சமத்துவக் கட்சி இலங்கையின் வடக்கில் முதலாவது தேர்தல் கூட்டத்தை நடத்தியது

By our correspondent
1 August 2015

Back to screen version

சோசலிச சமத்துவக் கட்சி (சோ...), கடந்த சனிக்கிழமை ஊர்காவற்துறையில் அதன் முதல் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தை நடத்தியது. ஊர்காவற்துறை இலங்கையின் போரால் சீரழிந்த வடக்கில் யாழ்ப்பாணுத்துக அருகே உள்ள ஒரு தீவாகும். கட்சி ஆகஸ்ட் 17 பொதுத் தேர்தலில் கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் 43 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

சோ... மற்றும் சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (IYSSE) அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களுமாக சுமார் 50 பேர் ஊர்காவற்துறை சந்தை மற்றும் உள்ளூர் கடைகளுக்கு அருகில் ஒரு திறந்தவெளி அரங்கில் சக்திவாய்ந்த கூட்டத்தை நடத்தினர். நூற்றுக்கணக்கான கடைக்காரர்கள் மற்றும் வழிப்போக்கர்களும் சோ... வேட்பாளர்களின் உரைகளை நின்று கேட்டனர். கூட்டத்திற்கு முன்னதாக சோ... தேர்தல் அறிவிப்பின் பிரதிகள் ஆயிரக்கணக்கில் ஊர்காவற்துறை முழுவதிலும் விநியோகிக்கப்பட்டன.

சோ... மிகவும் பதட்டமான அரசியல் சூழ்நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் பிரச்சாரம் செய்கின்றது. தமிழீழ விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியில் தோற்கடிக்கப்பட்டு ஐந்து ஆண்டுகளின் பின்னரும் பெரும்பான்மையான தமிழ் வெகுஜனங்களின் வேலையின்மை, வறுமை, வீடின்மை மற்றும் கல்வி, சுகாதார வசதிகள் பற்றாக்குறை போன்ற எந்த அடிப்படை சமூக பிரச்சினைகளும் தீர்க்கப்படவில்லை. பல்லாயிரக்கணக்கான இலங்கை இராணுவம் மற்றும் பாதுகாப்பு படையினரும் இன்னமும் அந்தப் பிராந்தியத்தை ஆக்கிரமித்துக்கொண்டுள்ளனர்.

சோ... வேட்பாளரும் நீண்டகால உறுப்பினருமான இராசேந்திரன் சுதர்சன் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். டஜன் கணக்கான அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் தேர்தலில் போட்டியிட்டாலும் சோ... மட்டுமே முதலாளித்துவ இலாப முறைக்கு எதிராக ஒரு சோசலிச வேலைத்திட்டத்தை முன்வைக்கின்றது. சோ... மட்டுமே "ஏகாதிபத்திய போர் ஆபத்தைப் பற்றி எச்சரிக்கை செய்கின்றது" என்று கூறினார்.

அடுத்து, சோ... வேட்பாளர் ராசேந்திரம் பாலகௌரி, "உலகம் முழுவதும் அரசாங்கங்கள் தொழிலாள வர்க்கத்தின் மற்றும் வறியவர்களின் வாழ்க்கைத் தரங்கள் மீதான தாக்குதல்களை கட்டவிழ்த்துவிட்டுள்ளன," என்று எச்சரித்தார். இலங்கை அரசாங்கம், "அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நிகழ்ச்சி நிரலை நெருக்கமாக பின் தொடர்கின்றது" என்று அவர் மேலும் கூறினார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் சோ... தலைமை வேட்பாளர் பரமு திருஞானசம்பந்தர், தேர்தல் ஒரு முக்கியமான வரலாற்று திருப்பத்தில் நடக்கின்றது என்று கூறினார். முழு தொழிலாள வர்க்கம் தனது சொந்த சுயாதீனமான புரட்சிகர அரசியல் இயக்கத்தை கட்டி எழுப்ப முன்வர வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.

திருஞானசம்பந்தர் தமிழ் முதலாளித்துவக் கட்சிகளின், குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் (TNA) பங்கு பற்றி குறிப்பிட்டார். "தமிழ் மக்களுக்காக பேசுவதாக பாசாங்கு செய்யும் அதே வேளை, தமிழ் கூட்டமைப்பு தமிழ் முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களையே பிரதிநிதித்துவம் செய்வதுடன் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் அணிசேர்ந்துள்ளது," என்று அவர் கூறினார். "தமிழ் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஆளும் கூட்டணியை நல்லாட்சி என்று ஊக்குவித்து வருவதோடு சிறிசேன மற்றும் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ள உயர்மட்ட ஆலோசனை குழுவான தேசிய செயற்குழுவிலும் அங்கம் வகிக்கின்றது.

"முன்னிலை சோசலிச கட்சி, ஐக்கிய சோசலிசக் கட்சி மற்றும் நவ சமசமாஜக் கட்சி போன்ற போலி இடது குழுக்கள், முதலாளித்துவ கட்சிகளின் கரங்களை பலப்படுத்த செயல்பட்டு வருவதோடு தொழிலாள வர்க்கம் சுயாதீனமாக அணிதிரள்வதைத் தடுக்க பொறியைத் தயார் செய்கின்றன."

கொழும்புக்கான சோ... வேட்பாளரும் கட்சியின் அரசியல் குழு உறுப்பினருமான W.A. சுனில், கிரேக்கத்தில் அரசியல் அபிவிருத்திகள் மற்றும் கிரேக்க தொழிலாளர்கள் மீதான நிதிய முதலாளித்துவத்தின் சமூகத் தாக்குதல்களின் பாதிப்பையும் எடுத்துக் காட்டினார். "இது இலங்கைக்கு நேரடியாக தொடர்புடையது" என்று அவர் கூறினார்.

"சர்வதேச நாணய நிதியம், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கியின் சிக்கன நடவடிக்கைகளை எதிர்க்கப் போவதாகக் கூறியே கிரேக்கத்தில் சிரிசா அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஆனால் ஏழு மாதங்களில், சிரிசா இந்த வாக்குறுதிகளை கைவிட்டு இப்போது பெரும் வேலை வெட்டுக்கள், ஓய்வூதிய நிதி வெட்டுக்கள் மற்றும் பிற நலன்புரி செலவினங்களை வெட்டிக்களுக்கும் பொறுப்பாக உள்ளது," என சுனில் விளக்கினார்.

இலங்கை முதலாளித்துவ பிரிவுகளும் கிரேக்கத்தில் சிக்கன நடவடிக்கைகளைப் பற்றி ஆலோசனை செய்துவருகின்றன என்று தெரிவித்த சுனில், எந்த கட்சி ஆட்சிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அது சிக்கன நடவடிக்கைகளையும் பொலிஸ்-அரச நடவடிக்கைகளையும் திணிக்கும் என்று எச்சரித்தார்.

கட்சியின் அனைத்துலக சோசலிச வேலைத்திட்டத்திற்கான போராட்டத்தினாலும் மற்றும் இலங்கையில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் முன்னெடுத்த இனவாத போருக்கும் மற்றும் அவற்றின் அரசியல் முகவர்களுக்கும் எதிரான அதன் தசாப்தகால தொடர்ச்சியான எதிர்ப்பினாலும், சோசலிச சமத்துவக் கட்சி ஊர்காவற்துறை தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் மீனவர்கள் மத்தியில் நன்கு பிரசித்திபெற்றதாகும்.

ஊர்காவற்துறை மற்றும் வேலனை இடையே உள்ள நீண்ட கடல் பாலத்தின் ஊடாக பயணிக்கும் போது சோ... உறுப்பினர் நடராஜா விமலேஸ்வரன் மற்றும் அவரது நண்பர் சிவநாதன் மதிவதனனும், மார்ச் 2007ல் காணாமல் போனார்கள். சோ... சேகரித்த ஆதாரங்கள், இவர்கள் காணாமல் போனதில் இலங்கை கடற்படைக்கும் மற்றும் துணை இராணுவக் குழுவான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கும் (.பி.டி.பி.) தொடர்பு இருப்பதை நிரூபித்தன.

விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதில் இருந்து ஐந்து ஆண்டுகளாகியும் ஆயிரக் கணக்கான இலங்கை பாதுகாப்புப் படைகள் இன்னமும் வடக்கை ஆக்கிரமித்துக்கொண்டிருப்பதோடு பல தீவுகளை கடற்படை மற்றும் .பீ.டி.பீ. ஆக்கிரமித்துள்ளன.

இலங்கை ஜனாதிபதியாக மைத்ரிபால சிறிசேன பதவியேற்ற பின்னர், நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு எந்த மாற்றமும் நடக்கவில்லை. இராணுவம் உருவாக்கிய உயர் பாதுகாப்பு வலயங்கள் உள்ளே உள்ள வீடுகள் உண்மையான உரிமையாளர்களுக்கு கொடுக்கப்படவில்லை. ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு உரிய உறைவிடம் மற்றும் அடிப்படை வசதிகள் கிடையாது. பாரிய வேலையின்மை, வறுமை ஆதிக்கம் செலுத்துகிறது.

மே மாதம் புங்குடுதீவில் ஒரு பள்ளி மாணவி குழு பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்படது சம்பந்தமாக இலட்சக் கணக்கான உள்ளூர் மக்களின் போராட்டம் வெடித்தமை, வடக்கில் உள்ள நிலவரம் குறித்த சமூக கோபத்தை பிரதிபலித்தது. அரசாங்கம் ஆர்ப்பாட்டங்களை அடக்குவதற்கு பொலிஸ் மற்றும் இராணுவத்தை திரட்டி பதிலளித்ததுடன் நீதிமன்ற வளாகத்தை சேதப்படுத்தியதாக குற்றம்சாட்டி, நூற்றுக்கண்கானர்கள் கைது செய்யப்பட்டனர். சமீபத்தில் இணைய கஃபேக்களை மாணவர்கள் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அரசாங்கம் சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்காக ஊர்காவற்துறை வீதிகளை திருத்தி அழகுபடுத்திய போதிலும், அடிப்படை வாழ்க்கை வசதிகளை மேம்படுத்தவில்லை.

சோ... மற்றும் .வை.எஸ்.எஸ்.. உறுப்பினர்கள் ஊர்காவற்துறையில் இருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள மெலிஞ்சிமுனை கிராமத்திற்கு சென்றனர். .பீ.டி.பீ. துணைப்படை குழுவே இந்த தீவை முதலில் கட்டுப்பாட்டில் கொண்டிருந்தது. சுமார் 300 மீனவக் குடும்ப சமூகத்திற்கு எந்த குழாய் நீர் விநியோகமும் கிடையாது. தாங்கிகளில் இருந்து மட்டுப்படுத்தப்பட்டளவு குடிநீர் வழங்கப்படுகின்றது.

இரண்டு பிள்ளைகளின் தாயான இளம் பெண், கிராமம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் தொடர்ந்து இருந்து வந்தது என வலைத் தளத்திற்கு தெரிவித்தார். ".பி.டி.பி தவிர வேறு எந்தவொரு கட்சியும் எனக்குத் தெரியாது. .பி.டி.பி. ஏனைய கட்சிகளை கிராமத்துக்குள் நுழைய விடுவதில்லை," என்றார். "அவர்களுக்கு வாக்களிக்க கட்டாயப்படுத்தப்பட்டோம். அரசியல் கட்சிகள் மக்களுக்கு உதவி செய்வதாக கூறிக்கொள்கின்றன... ஆனால் எங்கள் பிரச்சினைகள் எதவும் தீர்க்கப்படவில்லை" என அவர் தெரிவித்தார்.

 ஒரு மீனவர் கூறியதாவது: “தேர்தல் வரும் போதெல்லாம் கட்சி வேட்பாளர்கள் எங்களை வந்து சந்திப்பார்கள். தேர்தல் முடிந்த பின்னர் அவர்கள் காணாமல் போய்விடுவர். அவர்களை சந்திக்க நாம் போராட வேண்டியிருக்கும். அவர்கள் மக்களுக்கு சேவை செய்வதில்லை. மாறாக அரசாங்கத்தை வலுப்படுத்தி தங்களது நலன்களை பெறுவதில் அக்கறை காட்டுகிறார்கள்."

ஊர்காவற்துறை அருகே உள்ள தீவான காரைநகரில் ஒரு தாய் தெரிவித்ததாவது: "என் குழந்தைகளும் நானும் வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளோம். அதனால் நான் இரண்டு ஆண்டுகள் வெளிநாட்டில் வேலை செய்தேன். இப்போது என் பிள்ளைகள் பெரியவர்கள். ஆதலால் அரசாங்க அதிகாரிகள் என்னை மீண்டும் வெளிநாடு செல்ல விடாமல் தடுத்துவிட்டனர். இப்போது நாங்கள் மீண்டும் வறுமைக்குள் தள்ளப்பட்டுள்ளோம். அரசாங்கம் மாறினாலும், நம் வாழ்வில் எதுவும் மாறவில்லை."

ஒரு தபால் ஊழியரான ஆர். இராசேந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை கண்டனம் செய்தார். "மீண்டும் மீண்டும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அதே வேலைத் திட்டத்தை முன்வைக்கின்றது. கூட்டமைப்பினர் புலிகள் தோற்கடிக்கப்பட முன்னர் அவர்களுடன் செயற்பட்டனர். ஆனால் பாராளுமன்றத்தில் புலிகளை பயங்கரவாதிகள் என என முத்திரை குத்துகின்றனர். கூட்டமைப்பு மக்களை ஏமாற்றுகிறது. வட மாகாண சபை வெற்றி பெற்றால் தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும் என்றனர். ஆனால் எங்களுக்கு எந்த பயனும் இல்லைஎன அவர் கூறினார்.

தேவன், 57, ஒரு விவசாயி ஆவார்: “கூட்டமைப்பு உட்பட எல்லா அரசியல்வாதிகளும், நிறைய வாக்குறுதிகளை கொடுக்கின்றனர். ஆனால் தேர்தலுக்குப் பின் அவற்றை குப்பை தொட்டியில் போட்டு விடுகின்றனர். தமிழ் மக்கள் பற்றியும் அவர்களின் பிரச்சினைகள் பற்றியும் தமிழ் கூட்டமைப்புக்கு அக்கறை இல்லை," என அவர் கூறினார்.

அரசாங்கம்  நல்லாட்சி மற்றும் ஜனநாயகத்தை பற்றி பேசுகிறது. ஆனால் எங்கள் பிரச்சினைகள் எதுவும் தீர்க்கப்படவில்லை. அதன் 100 நாள் வேலைத்திட்டம் மற்றும் நிறைவேற்று ஜனாதிபதி அதிகாரத்தை நீக்கும் அதன் வாக்குறுதிகள் அனைத்தும் பொய்யென்று நிரூபிக்கப்பட்டுள்ளது. அது சில பொருட்களின் விலைகளை குறைத்தது, ஆனால் அவர்கள் கடந்த காலத்தில் செய்தது போன்று தேர்தலின் பின்னர் மீண்டும் அதிகரிக்க முடியும். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, 130 தமிழ் மக்கள் கைது செய்ததுடன் இங்கே இராணுவ பிரசன்னத்தையும் அதிகரித்துள்ளார்.

நீங்கள் கூறியது போல், நாம் ஒரு மூன்றாவது உலகப் போரின் ஆபத்தில் இருக்கிறோம். அமெரிக்கா சீனாவின் பட்டு பாதை திட்டத்தை தடுத்துள்ளது. ஆனால் சீனா எளிதாக விட்டுக் கொடுக்கப் போவதில்லை. இராஜபக்ஷ, சீன சார்புடையவராக இருந்தார். ஆனால் சிறிசேன அரசு சீன நலன்களுக்கு எதிராக அமெரிக்காவுக்கு ஏற்ப செயற்படுகின்றது. அமெரிக்க, ரஷ்யாவைச் சுற்றியும் அதன் இராணுவத்தை நிறுத்தியுள்ளது. ரஷ்யாவிற்கு எதிரான போர்  நடந்தால், ஒரு அணு ஆயுத போர் வெடிக்கும்," என அவர் மேலும் கூறினார்.