World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு : சிரியா

Calls grow for deployment of German ground troops in Syria

சிரியாவிற்கு ஜேர்மன் தரைப்படை துருப்புகளை அனுப்புவதற்கான அழைப்புகள் அதிகரிக்கின்றன

By Johannes Stern
8 December 2015

Back to screen version

வெள்ளியன்று ஜேர்மன் நாடாளுமன்றம் சிரியாவில் இராணுவ பங்களிப்பிற்கு ஆதரவாக முடிவெடுத்த பின்னர், அபிவிருத்திகள் வேகமாக நடந்து வருகின்றன. அந்த வாக்கெடுப்புக்குப் பின்னர் ஒருசில மணி நேரங்களிலேயே, ஜேர்மன் போர்கப்பல் Augsburg சிரியாவிற்குப் புறப்பட்டது. போட்ஸ்டாமின் திட்டக் கட்டளையகத்தின் செய்தி தொடர்பாளர் கருத்துப்படி, ஞாயிற்றுக்கிழமையில் இருந்து அது பிரெஞ்சு விமானந்தாங்கி போர்க்கப்பல் சார்லஸ் டு கோல் இன் பக்கவாட்டில் இருக்கும். கியேல் க்கு அருகில் உள்ள Luftwaffe (விமானப்படை) தளத்தில், ஜேர்மன் டோர்னாடொ போர் விமானத்தைத் துருக்கிக்கு அனுப்புவதற்கான தயாரிப்புகள் நடந்து வருகின்றன.

உத்தியோகபூர்வமாக-ஒப்புதல் வழங்கப்பட்ட போர் தயாரிப்புகள் முழு வேகத்தில் இருக்கின்ற போதிலும், வாராந்தர செய்தியிதழ் Der Spiegel இன் தற்போதைய பதிப்பின் செய்தி ஒன்று, இதனினும் அதிகமான நீண்டகால திட்டங்கள் விவாதிக்கப்பட்டு வருவதையும், மக்கள் முதுகுக்குப் பின்னால் தயாரிப்பு செய்யப்பட்டு வருவதையும் தெளிவுபடுத்துகிறது.

அந்த செய்தியிதழ் "தாறுமாறான நிலையில்" (On the helter-skelter) என்ற பட்டவர்த்தனமான தலைப்பின் கீழ், ஜேர்மனி "இடைப்பட்ட காலத்தில் ஒரு தரைப்படை போருக்குள் இழுக்கப்படக்கூடும்" என்று எழுதுகிறது. பேர்லினில், அங்கே, IS ஐ வெறுமனே வான்வழியாக தோற்கடிக்க முடியாது" என்பதில் உடன்பாடு உள்ளது. லூக்சம்போர்க் வெளியுறவு மந்திரி ஜோன் அசெல்போர்ன் கருத்துப்படி, IS க்கு எதிரான சண்டையில் வெறுமனே வான்வழியிலிருந்து மட்டுமே உங்களால் வெற்றிபெற முடியாதென எல்லா வல்லுனர்களும் தெரிவிக்கின்றனர்.

Der Spiegel ஹரால்ட் குஜாத்தை ஒரு "வல்லுனராக" மேற்கோளிடுகிறது. ஜேர்மன் இராணுவத்தின் (Bundeswehr) முன்னாள் இன்ஸ்பெக்டர் ஜெனரலாகவும் மற்றும் ஓய்வூபெற்ற தளபதியுமான அவர், பத்தாயிரக் கணக்கான தரைப்படை துருப்புகளைச் சிரியாவிற்கு அனுப்பும் ஒரு சூழலைச் சித்தரிக்கிறார். இப்போதைக்கு, நாம் மேற்கத்திய மூலோபாயம் வேலை செய்து வருவதாக தான் கருத வேண்டியுள்ளது. விடயம் இவ்விதமாக இல்லாது போனால், பின்னர் தரைப்படை துருப்புகளை மேற்கு அனுப்ப விரும்புகிறதா என்ற கேள்வியை முகங்கொடுக்கும், இது குஜாத் தெரிவித்தது. பின்னர் 1990களில் யூகோஸ்லேவியாவில் நேட்டோ நடவடிக்கையுடன் ஒரு சமாந்தரத்தை வரைந்தளித்த அந்த தளபதி, பின்னர் நாம் அமெரிக்கா மற்றும் நேட்டோ தலைமையின் கீழ் அந்நாட்டிற்குள் 50,000 இல் இருந்து 60,000 சிப்பாய்களை அனுப்ப வேண்டியிருக்கும், என்று அறிவித்தார்.

இதுவரையில், உத்தியோகபூர்வ அரசாங்க போக்கு சிரியாவில் ஜேர்மன் தரைப்படை துருப்புகளைப் பயன்படுத்துவதைக் குறித்த எந்த விவாதத்தையும், குறைந்தபட்சம் பகிரங்கமாக, தவிர்த்துக் கொள்வதாக இருந்து வந்தது. இப்போதோ, Der Spiegel, உயர்மட்ட அரசியல்வாதிகள் அதைத்தான் துல்லியமாக கோருகிறார்கள் என்று குறிப்பிடுகிறது.

முன்னாள் பாதுகாப்புத்துறை மந்திரி பிரான்ஸ்-ஜோசப் ஜுங்க் (கிறிஸ்துவ ஜனநாயக சங்கம், CDU) கூற்றின்படி, ஜேர்மன் டோர்னாடொ விமானிகள் IS இன் கரங்களில் சிக்கினால், அவர்களை விடுவிப்பதற்காக வேண்டுமானால் ஜேர்மன் சிறப்பு படைகளை "சிரிய மண்ணில்" பயன்படுத்தலாம். ஜுங்கின் கருத்துப்படி, அதுபோன்ற விடுவிக்கும் நடவடிக்கைகள்" ஏற்கனவே "ஆப்கானிஸ்தானில் ஜேர்மன் இராணுவத்தால் வெற்றிகரமாக நடத்தப்பட்டிருக்கிறது. ஜேர்மன் நாடாளுமன்றத்தில் கிறிஸ்துவ ஜனநாயக கன்னையின் வெளியுறவு கொள்கை செய்தி தொடர்பாளர் Jürgen Hardt உம், ஜேர்மன் தரைப்படைகள் குறித்த பிரச்சினையை சபையில் கொண்டு வந்தார். சிரியாவில் ஒரு சமாதான உடன்படிக்கையின் உள்ளடக்கத்தில் மற்றும் அதை ஆதரிக்கும் ஐ.நா. தீர்மானத்தின் உள்ளடக்கத்தில் சிரியா மண்ணில் ஜேர்மன் சிப்பாய்கள் நிலைநிறுத்தப்படுவதை" அவரால் "ஏற்றுக் கொள்ள முடிகிறது.

Der Spiegel இன் தலையங்கம், சிரியா எல்லைக்குள் ஜேர்மன் சிப்பாய்கள் குறித்த பிரச்சினை" விரைவிலேயே முன்னுக்கு வரும் என்றது. சவூதி அரேபியாவில் புதன்கிழமை கூட்டத்தில், சிரிய ஆட்சியின் எதிர்ப்பு குழுவின் பிரதிநிதிகளும் இடம்பெற உடன்பட வேண்டுமென அவர்கள் விரும்புகின்றனர். ஓர் இடைமருவு அரசாங்கம் மீது அது ஓர் உடன்பாட்டிற்கு வந்தால், ஜேர்மனி "ஒருவேளை பின்வாங்கலாம். "ஸ்ரைன்மையரும் மற்றும் பாதுகாப்பு மந்திரி ஊர்சுலா வொன் டெர் லெயனும், உலகில் ஜேர்மனி அதிக பொறுப்பை ஏற்குமென்ற உண்மை குறித்து அடிக்கடி பேசுகின்றனர் [பேசி இருந்தனர்].

அந்த செய்தியிதழ் ஜேர்மனி ஓர் ஆக்ரோஷ வெளியுறவு கொள்கைக்கு மற்றும் வல்லரசு அரசியலுக்கு அது திரும்பி வருவதைக் குறித்து மறைமுகமாக குறிப்பிடுகிறது. 2014 இன் தொடக்கத்தில், SPD வெளியுறவு மந்திரியும் மற்றும் வொன் டெர் லெயனும் ஜேர்மன் ஜனாதிபதி கௌவ்க் உடன் சேர்ந்து, முனிச் பாதுகாப்பு மாநாட்டில் "இராணுவ தடை முடிவுக்கு" வருவதாக அறிவித்தனர். ஜேர்மனி "உலக அரசியலைக் குறித்து வெளியிலிருந்து மட்டுமே கருத்து தெரிவிப்பதையும் விட மிக வலிமையானது" மற்றும் "வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கைகளில் முன்கூட்டியே, மிகவும் தீர்க்கமாக மற்றும் மிகவும் கணிசமான அளவிற்கு தலையீடு செய்ய தயாரிப்பு செய்து கொள்ள" வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

டோர்னாடொ விமானங்கள், போர்க்கப்பல்கள், குறைந்தபட்சம் 1,200 சிப்பாய்களுடன் இப்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிற இக்கொள்கை, சாத்தியமானளவிற்கு விரைவிலேயே சிரியாவில் ஜேர்மன் தரைப்படைகளைக் கொண்டு நடைமுறைப்படுத்தப்படலாம். சிரியாவில் ஜேர்மன் போர் முயற்சியானது நடைமுறையில் ஜேர்மன் உயரடுக்கின் சுத்தமான வெளியுறவு கொள்கை சதியின் பாகமாகும் என்பதை வொன் டெர் லெயன் சமீபத்தில் ஒப்புக் கொண்டார்.

அதுவொரு நீண்ட போராட்டம்" என்ற தலைப்பின் கீழ், வணிக நாளிதழ் Handelsblatt க்கு அளித்த சமீபத்திய பேட்டி ஒன்றில், அப்பெண்மணி கூறுகையில், 2014 இன் இளவேனிற்காலத்தில், இப்போதைய சூழலை யாராலும் முன்அனுமானிக்க முடியாததாய் இருந்தது. ஆயினும் ஜனாதிபதியும், வெளியுறவு மந்திரியும் மற்றும் நானும் ஏறத்தாழ ஒரேநேரத்தில் அந்த விவாதத்தைத் தொடங்கி வைத்தது நல்லதாய் போய்விட்டது: நாங்கள் அடுத்து ஒரு சில மாதங்களில் ஏற்படவிருந்த நிஜமான நெருக்கடிகளில் நாம் ஏற்க வேண்டிய நிலைப்பாடுகளையும் மற்றும் பிரச்சினைகளையும் விவாதித்திருந்தோம், என்றார்.

அந்த "நிலைப்பாடுகள்" என்ன என்பது இப்போது மிக மிகத் தெளிவாகியுள்ளது. ஜேர்மன் அரசியல்வாதிகளால், இராணுவத்தால் மற்றும் பிரதான பத்திரிகைகளைகளின் பதிப்பு அலுவலகங்களிலுள்ள அவர்களது நாகரீக சேவகர்களால், ஜேர்மன் சிப்பாய்கள் இறுதியாக போய் சண்டையிடும் வரையில், குண்டுவீசி, மீண்டும் கொல்லும் வரையில் பொறுத்திருக்க முடியவில்லை.

சான்றாக, வாரயிறுதி வாக்கில் ஒரு தலையங்கத்தில், பழமைவாத Frankfurter Allgemeine Sonntagszeitung, சிரியாவில் வெறும் "கேமராக்களை மட்டுமே கொண்டு சண்டையிடுவதற்காக" அரசாங்கத்தைக் குற்றஞ்சாட்டியது. தார்மீக அறநெறிகள் மற்றும் வரவு-செலவு கணக்கு ஒழுங்குகளைப் பொறுத்த வரையில் முன்னிலையில் உள்ள இந்த ஐரோப்பிய நாடு" இதுவரையில் "வடக்கு ஈராக்கின் குர்திஷ் கொரில்லாக்களுக்குச் சில தாக்குதல் துப்பாக்கிகளை வழங்கவும் மற்றும் துப்பாக்கிச்சுடும் பயிற்சிகளை ஒழுங்கமைக்கவும்" தன்னைத்தானே கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் நிலையில், இப்போது அது "அதிநவீன கேமராக்களுடன் டோர்னாடொ விமானங்களையும், ஒரு போர்கப்பலையும் சுமார் 1,200 ஆண்கள் மற்றும் பெண்களையும் அப்போர் பிராந்தியத்திற்கு அனுப்ப" முன்வந்துள்ளது.

அந்த எழுத்தாளர், பீட்டர் கார்ஸ்டனைப் பொறுத்த வரையில், முந்தைய அனைத்தையும் போலவே, ஒட்டுமொத்தமாக ஜேர்மன் இராணுவத்தின் ஒரேயொரு மிகப்பெரிய வெளிநாட்டு நிலைநிறுத்தல் மட்டும் போதுமானதாக இல்லை. வார்த்தைகள் மற்றும் உடன்பாடுகளைக் காரணங்காட்டி மீண்டுமொருமுறை மற்றவர்களின் பின்னால் ஒளிந்து கொள்வது குறுகிய சிந்தனையாகும். அது சாரயேவோ, பிரிஸ்ஜ்ரென் (Priszren), ஆப்கானிஸ்தான் மற்றும் வடக்கு மாலி" ஆகட்டும், இது எப்போதுமே "சாத்தியமான அளவிற்கு சண்டையிலிருந்து விலகியிருக்கும், சாத்தியமானால் சுடாமல் இருக்கும்" ஒரு விடயமாகவே இருக்கிறது. சண்டையிடுவது, எதிர்ப்பாளர்களை ஒடுக்குவது அல்லது கொல்வது ஆகியவை மற்றவர்களால் தான் செய்யப்படுகிறது.

சிரியாவிற்கு புகைப்பட-டோர்னாடொ" அனுப்பப்பட்டமை இப்போது "இதே பாரம்பரியத்தில் நிற்கிறது" என்று கார்ஸ்டன் தொடர்கிறார். ஆனால் "யதார்த்தம் பின்வருவதையும் அர்த்தப்படுத்துகிறது: ஜேர்மன் இராணுவம் ஒரு கால் நூற்றாண்டாக வறிய ஆதாரவளங்களோடு ஒரு சிறிய துருப்பாக, ஒருசில சிப்பாய்களோடு மற்றும் மிகச்சிறிய போர் நடவடிக்கைகளோடு" சுருக்கப்பட்டுள்ளது. சண்டை" என்று வரும் போது, ஜேர்மனி விரும்பவில்லை, ஜேர்மனியால் முடியாது" என்றே கூறப்படுகிறது.

யதார்த்தத்தில், கார்ஸ்டனின் தலையங்கம், அரசாங்க கொள்கை என்ன "பாரம்பரியத்தை" பின்தொடர்ந்து கொண்டிருக்கிறது என்பதைத் தெளிவுபடுத்துகிறது; இரண்டு உலக போர்களுக்குப் பின்னர், ஜேர்மன் இராணுவவாதத்தின் பாரம்பரியங்கள், உலகந்தழுவி ஜேர்மன் ஏகாதிபத்திய நலன்களை இராணுவ வழிவகைகளைக் கொண்டு பாதுகாப்பதற்காக, மீண்டுமொருமுறை பாரியளவில் மீள்ஆயுதமேந்திவரும் கொள்கையைப் பின்தொடர்ந்து கொண்டிருக்கிறது.

வாரயிறுதி வாக்கில், கூட்டாட்சி ஆயுதப்படை கூட்டமைப்பின் தலைவர் André Wüstner, ஜேர்மன் இராணுவத்தின் அளவை அதிகரிப்பதற்கான அவரது அழைப்பை மீண்டும் தெரிவித்தார். Passauer Neue Presse இன் சனிக்கிழமை பதிப்பில், அவர் அறிவிக்கையில், பெரும் சவால்கள் உள்ளன. இராணுவ படையினருக்கான உச்சவரம்பை அதிகரிக்க வேண்டும் மற்றும் துருப்புகளின் தளவாடங்களை மேம்படுத்த வேண்டும், என்றார். 2011 ஜேர்மன் இராணுவ சீர்திருத்தங்களில் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட துருப்புகளின் அளவைக் குறைப்பதில், அரசியல்வாதிகள் சிரியாவில் படைகளை நிலைநிறுத்துவதைக் குறித்தோ அல்லது உக்ரேனிய நெருக்கடி குறித்தோ சிந்தித்திருக்கவில்லை. இந்தளவிற்கு குறைந்த எண்ணிக்கையிலான சிப்பாய்களைக் கொண்டு நிறைய வேலைகளை நம்மால் செய்ய முடியாது, என்று கூறிய Wüstner, குறைந்தபட்சம் 5,000 இல் இருந்து 10,000 வரையிலான கூடுதல் துருப்புகளைக் கோரினார்.