World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

After Paris attacks, New Anti-capitalist Party backs police state rule and war

பாரிஸ் தாக்குதல்களுக்கு பின்னர், புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சி போலிஸ் அரசு ஆட்சியையும் போரையும் ஆதரிக்கிறது

By Alex Lantier
11 December 2015

Back to screen version

பாரிஸில் நவம்பர் 13 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு பின்னர், புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சியானது பிரான்சின் சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்தினால் திணிக்கப்பட்ட அவசரநிலைக்கு தக்கபடி மாற்றிக் கொண்டு மத்திய கிழக்கில் இன்னும் தீவிரமான போருக்கு நெருக்குதலளித்துக் கொண்டிருக்கிறது. பிரான்சிலும் மற்றும் சர்வதேச அளவிலும் ஆளும் வர்க்கத்தால் திட்டமிடப்படுகின்ற இராணுவவாதத்தின் ஒரேயடியான அதிகரிப்பு மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள் ஆகியவற்றுக்கான தனது ஆதரவை அது சமிக்கை செய்து கொண்டிருக்கிறது.

பிரான்சுவா சபடோ மற்றும் பியர் ரூசே இனால் எழுதப்பட்ட பாரிஸில் நவம்பர் 13 அன்றான தாக்குதல்கள்: இஸ்லாமிக் அரசின் பயங்கரமும், பிரான்சில் அவசரகால நிலையும், நமது பொறுப்புகளும் என்ற தலைப்பில் நவம்பர் 27 அன்று அது விடுத்திருக்கும் அறிக்கையின் உள்ளடக்கம் இதுதான். சபடோ, NPA மற்றும் அதன் முன்னோடியான புரட்சிகர கம்யூனிஸ்ட் கழகத்தின் (LCR) நீண்டகால தலைவரும் அதன் மூலோபாயவாதியும் ஆவார். LCR கலைக்கப்பட்டு NPA உருவாக்கப்படுவது என்ற, இந்த அமைப்பு, சோசலிச அரசியலுடன் உடனான எந்தத் தொடர்பையும் இறுதியாக பொதுவில் முறித்த நிகழ்வில், இவர் ஒரு மையமான பாத்திரத்தை ஆற்றினார்.

சபடோ மற்றும் ரூசேயின் இலக்கு, போர் மற்றும் சர்வாதிகாரத்தின் அச்சுறுத்தல் அல்ல. மாறாக, பாரிஸில் தாக்குதல் நடத்திய ISIS அமைப்புக்கு பிறப்பளித்ததே, சிரியாவிலான ஏகாதிபத்தியப் போர் தான்  என்ற நிலையிலும், அவர்கள் அந்தப் போரின் எதிர்ப்பாளர்களையே கண்டனம் செய்கின்றனர்.

காதிபத்தியத்தின் பாத்திரம் என்னவாக இருந்தபோதும், IS தனது நடவடிக்கைகளுக்கு பொறுப்பானதாகும் என்று வலியுறுத்தும் NPA தொடர்ந்து கூறுகிறது: நிகழ்வுகளின் பாதிப்பின் கீழ், இடது அமைப்புகளும், கூட்டமைப்புகளும், தொழிற்சங்கங்களும் தேசிய ஐக்கியத்திற்கான அழைப்புக்கு இணங்கியிருக்கின்றன: மற்றவர்களோ, இதற்கு எதிரான ஒரு எதிர்வினையில், IS மீதான கண்டனம் காதில் கேட்காத அளவுக்கு மேற்கு ஏகாதிபத்தியத்தின் மிக உண்மையான அரசியல் மற்றும் வரலாற்றுப் பொறுப்புகள் மீதே ரொம்பவும் வலியுறுத்தியிருக்கின்றன.

காதிபத்தியத்தின் மீதான விமர்சனங்களில் ISIS மீதான விமர்சனங்களைக் கேட்க முடியவில்லை என்பதான கூற்று அபத்தமானதாகும். வரைமுறையில்லாத சட்ட-ஒழுங்குக் கூச்சலும் ISIS மற்றும் சிரிய ஆட்சிக்கு எதிரான போர்க் காய்ச்சலும் தான் பிரெஞ்சு அரசியல் ஸ்தாபகத்தில் இதில் இடது கூட்டணியிலும் தொழிற்சங்க அதிகாரத்துவத்திலும் இருக்கின்ற NPA இன் கூட்டாளிகளும் இருக்கின்றனர் மேலாதிக்கம் செலுத்துகின்றன. இடதின் பக்கத்தில் இருந்து இதற்கு எழுகின்ற எந்த எதிர்ப்பையும் தடுப்பதே NPA இன் முக்கிய கவலையாக இருக்கிறது.

சபடோவும் ரூசேயும் ஏகாதிபத்தியத்தை எதிர்க்கின்ற பெயர்குறிப்பிடப்படாத இடது-சாரிக் குழுக்களைக் கண்டனம் செய்யுமளவு செல்கின்றனர். அவர்கள் எழுதுகிறார்கள், தாக்குதல்களுக்கு எந்த சாக்குப்போக்கும் சொல்ல முடியாது என்றபோதிலும், நடந்த சூழலை கணக்கிலெடுப்பது அனைத்துக்கும் மேல் அவசியமாய் இருப்பதாகக் கருதுகின்ற ஏராளமான கட்டுரைகளை நம்மால் இன்னும் கூட படிக்க முடிகிறது. நடந்த சூழலை பகுப்பாய்வு செய்தல் என்பது அத்தியாவசியமான வகையில் ஏகாதிபத்தியத்தின் தவறான செயல்களை பட்டியல் போடுவதாகக் குறைந்து விடும் நிலையில், அடிப்படைவாத இயக்கங்கள் பெரிய சக்திகளின் நடவடிக்கைகளுக்கு வெறுமனே எதிர்வினையாற்றிக் கொண்டிருக்கின்றன என்பதான முடிவுக்கு ஒருவர் வரக்கூடும். நாம் அவர்களுக்கு ஏதோவொரு வகையில் தீவிரத்தைக் குறைத்துக் காட்டுகின்ற சூழல்களைக் கொடுத்துக் கொண்டேயிருப்போம். விநோதமாய் இருப்பது என்னவென்றால், இடதின் பல எழுத்தாளர்களும் அடிப்படைவாதத் தாக்குதல்களை ஆவேசத்துடன் கண்டனம் செய்கிறார்கள், ஆனால் பெயர் குறிப்பிட்டு, அந்தத் தாக்குதல்களைப் புரிந்த இயக்கங்களைக் கண்டனம் செய்ய மறுக்கிறார்கள்.

து, மக்களை போருக்குள்ளும் சர்வாதிகாரத்திற்குள்ளும் இழுக்க பிரெஞ்சு ஏகாதிபத்தியம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எழுகின்ற எதிர்ப்பை அச்சுறுத்தும் நோக்கத்துடனான ஒரு ஆத்திரமூட்டல் ஆகும். சபடோவும் ரூசேயும் ஏகாதிபத்திய-விரோதக் கண்ணோட்டங்கள் மீதான தங்களது கண்டனத்தை நியாயப்படுத்துவதற்குத் தேவையான ஒரேயொரு கட்டுரையையோ, ஆசிரியரையோ அல்லது மேற்கோளையோ கூட அடையாளம் காட்டவில்லை. ஏகாதிபத்தியத்திற்கு எதிரான எதிர்ப்பு என்பது ISIS ஐ மன்னிப்பது அல்லது ஆதரிப்பதற்கு ஒப்பானதாகும் என்ற கருத்தை, உண்மையான எந்த அடிப்படையும் இல்லாமல்,  அவர்கள் புகட்டுகின்றனர்.

ப்போதைய சூழலில், இது ஒரு அபாயகரமான அச்சுறுத்தலாகும். சபடோவும் ரூசேயும் ஓசையெழுப்பாமல் கடந்து செல்கின்ற போதிலும், 100,000 படைவீரர்களும் போலிசும் பிரான்சின் வீதிகளில் ரோந்து சுற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்பதோடு அவர்கள் அனைத்து வகையான மக்களையும் -சுற்றுச்சூழல் ஆர்ப்பாட்டக்காரர்களையும் கூட- நூற்றுக்கணக்கில் பயங்கரவாத-தடுப்பு குற்றச்சாட்டுகளில் கைது செய்வதற்கு, அவசரகாலநிலைச் சட்டங்களை பயன்படுத்தி வருகிறார்கள்.

காதிபத்தியத்தில் இருந்து பிரித்து ISIS ஐ அணுக வேண்டும் என்பதான அவர்களது கூற்று மக்களை நோக்குநிலை பிறழச் செய்வதற்கும், பாரிஸ் தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்களை மறைப்பதற்கும், அத்துடன் ஊடகங்களின் போர்-ஆதரவுப் பரப்புரைகளுக்கு வழிவகை செய்து தருவதற்கும் நோக்கம் கொண்டுள்ளது. ISIS உள்ளிட்ட இஸ்லாமியவாத போராளிக் குழுக்களை தங்களது பினாமிகளாகக் கொண்டு போரின் மூலமாக மத்திய கிழக்கை மறுகாலனியாதிக்கம் செய்வதற்கு ஏகாதிபத்திய சக்திகள் மேற்கொண்ட பொறுப்பற்ற முயற்சியில் இருந்து தான் ISIS ஐயும் கூட தோன்றியிருந்தது. ISIS அதன் சொந்த நடவடிக்கைகளுக்குப் பொறுப்பு என்ற அதேநேரத்தில், ISIS தோன்றுவதற்குப் பொறுப்பானவை ஏகாதிபத்திய சக்திகளே. நவம்பர் 13 தாக்குதல்களைப் போன்ற புதிய அட்டூழியங்களை தடுப்பதற்கான போராட்டமானது ஏகாதிபத்தியப் போருக்கான எதிர்ப்பு என்ற வடிவத்தை மட்டுமே எடுக்க முடியும்.

காதிபத்தியம் நடத்திய போர்கள் NPA இன் ஆர்வத்துடனான ஆதரவைப் பெற்று வந்திருக்கின்றன. ஆண்டுக்கணக்கில், இது ஏகாதிபத்தியத்தின் பினாமிகளை புரட்சியாளர்களாக போற்றி வந்திருக்கிறது - முதலில் லிபியாவில் கேர்னல் மும்மார் கடாபியின் ஆட்சிக்கு எதிரான 2011 நேட்டோ போரிலும், பின்னர் சிரியாவில் ஜனாதிபதி பஷார் அல்-ஆசாத்தின் ஆட்சிக்கு எதிரான போரிலும் இது நடந்தது. இருந்தும், இந்த போராளிக் குழுக்களுக்கு உள்ளே இருந்த சிலர் கொண்ட ஒரு குழு தான் - இவர்கள் பிரெஞ்சு உளவுத் துறையின் நெருக்கமான கண்காணிப்பின் கீழ் தான் செயல்பட்டு வந்திருந்தனர் - இறுதியில் பாரிஸ் தாக்குதல்களை நடத்தியிருந்தது. தான் வகித்த பாத்திரத்தை மறைக்கும் கண்மூடித்தனமான முயற்சியில், NPA இப்போது நிலவுகின்ற இராணுவவாத, சட்டம்-ஒழுங்கு வெறிக்கூச்சலுக்கு தூபம்போட்டுக் கொண்டிருக்கிறது.

பிரெஞ்சு ஆளும் வர்க்கம், ஜனநாயக உரிமைகளை இல்லாது செய்ய முனைகின்ற நிலையில், மில்லியன்கணக்கான மக்களால் உணரப்படுகின்றதான இடதின் பக்கமிருந்தான எதிர்ப்பு, இருக்கின்ற அரசியல் அமைப்புகளின் வழியே எந்த வெளிப்பாட்டையும் காட்ட இயலாதிருக்கிறது. பல தசாப்தங்களாக இடது அரசியலாக கருதப்பட்டு வந்திருந்ததில் ஏகபோகம் செலுத்தி வந்திருந்த NPA போன்ற வசதிபடைத்த நடுத்தர வர்க்கத்தின் பிற்போக்குத்தனமான அமைப்புகள் தொழிலாள வர்க்கத்துக்கு எதிரான அரக்கத்தனமான கொள்கைகளுக்கு ஆதரவளிக்கின்றன.

வசரநிலையின் விமர்சகர்களாகக் காட்டிக்கொள்வதற்கு சபடோவும் ரூசேயும் செய்கின்ற முயற்சிகள், நம்பிக்கையற்ற நிலையில்தான் ஏவப்படுகின்றன. PSம் இடது முன்னணி மற்றும் NPA உள்ளிட்ட அதன் அரசியல் சுற்றுவட்டக் கட்சிகளும்,  ஜனநாயக உரிமைகளையும் பிரான்சின் ஐந்தாவது குடியரசின் கட்டமைப்பையும் இன்னும் பாதுகாத்துக் கொண்டிருப்பதாக மக்களுக்கு மறுநம்பிக்கையூட்டுவதே அவர்களது விரக்தியான கருத்துக்களின் பிரதான நோக்கமாக இருக்கிறது.

வசரகாலநிலையை விரிவுபடுத்துவதற்கான எதிர்ப்பு நாடாளுமன்ற இடதில் மிகவும் பலவீனமாக இருக்கிறது என்று அறிவிக்கும் அவர்கள் பிரான்சில் முற்போக்கு சக்திகளின் நிலை மிகவும் நாசகரமாய் இருப்பதாக மேலும் சேர்த்துக் கொள்கின்றனர்.

சூழ்நிலை நாசகரமாக இருப்பதாகக் கூறும் அவர்களது கருத்து, நடந்து கொண்டிருப்பதில் NPA இன் பொறுப்பைத் தட்டிக்கழிப்பதற்கான ஒரு நேர்மையற்ற முயற்சியாகும். NPA, எந்தக் கட்சிகளை நோக்கி தனது நோக்குநிலையை அமைத்து வந்திருக்கிறதோ, எவற்றுடன் சேர்ந்து பல தசாப்தங்களாய் வேலைசெய்து வந்திருக்கிறதோ, அத்துடன் எவற்றை அது இன்னமும் முற்போக்கு என்று அழைத்துக் கொண்டிருக்கிறதோ, இடது முன்னணி மற்றும் PS போன்ற அந்தக் கட்சிகள் தான் பிரான்சில் ஒரு போலிஸ் அரசை நிலைநாட்டிக் கொண்டிருக்கின்றன.

ண்மையில், NPA இன் பாராளுமன்றக் கூட்டாளிகள் மத்தியில், அவசரகாலநிலைக்கு பலவீனமாகவோ அல்லது வேறுவிதமாகவோ எந்த எதிர்ப்பும் இருக்கவில்லை. தேசிய பாராளுமன்றத்தில் அவசரகாலநிலை 551-6 என்ற விகிதத்தில் நிறைவேறியது. PS இன் 3 பிரதிநிதிகளும் பசுமைக்கட்சியின் 3 பிரதிநிதிகளும் மட்டுமே ஒரு அடையாள எதிர்ப்பாக எதிர்த்து வாக்களித்தனர். ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி, இடது கட்சி மற்றும் NPA இல் இருந்து பிரிந்து உருவாகியிருந்த [UL (Unitary Left) மற்றும் முதலாளித்துவ-எதிர்ப்பு இடது ஆகிய] கன்னைகள் உள்ளிட்டவை கொண்ட கூட்டணியான இடது முன்னணியின் (Front de gauche -FG) அத்தனை பிரதிநிதிகளுமே ஆதரவாகவே வாக்களித்தனர்.

குறிப்பிடத்தக்கது என்னவென்றால், ஜனாதிபதியை நிரந்தர அவசரகாலநிலையை அறிவிக்க அனுமதிக்கின்ற அரசியல்யாப்பு திருத்தத்திற்கு தான் முனைந்து கொண்டிருப்பதாக PS ஏற்கனவே கூறியிருந்த பின்னரும் கூட, இந்தப் பிரதிநிதிகள் இவ்வாறாய் வாக்களித்திருந்தனர் என்பது தான். ஒருவருடைய நடத்தையும், பேச்சும் அல்லது தொடர்புகளும், அவர் பாதுகாப்புக்கும் பொது ஒழுங்கிற்குமான ஒரு அச்சுறுத்தலாய் இருப்பதாய் போலிஸ் சந்தேகிக்க இட்டுச் செல்லுமானால், அத்தனிநபர்களைக் கைது செய்வதற்கும், அவர்களது வீடுகளில் தேடுதல் வேட்டைகளையும் பறிமுதல்களையும் செய்வதற்கும், அவர்களை வீட்டுக்காவலில் வைப்பதற்கும், அத்துடன் அவர்கள் உறுப்பினர்களாய் இருக்கக் கூடிய அமைப்புகளைக் கலைப்பதற்கும் கூட இது போலிசை அனுமதிக்கிறது. 

து பிரான்சை ஒரு போலிஸ் அரசாக மாற்றுவதைக் குறித்து நிற்பதாகும். அரசின் சமூக அல்லது வெளியுறவுக் கொள்கைகள் குறித்த விமர்சனரீதியான அல்லது விமர்சன சாத்தியமுடையதான கண்ணோட்டங்கள் கொண்டிருப்பதாகக் கருதி, தொழிலாளர்கள் மற்றும் அவர்களது அமைப்புகள் உள்ளிட்ட எவரொருவரையும் தாக்குவதற்கு தேவையான பிரம்மாண்டமான அதிகாரங்கள், நவீன பாரிய மின்னணு உளவுசாதனங்கள் சகிதமான போலிஸுக்கு வந்துசேரும். கருத்துச் சுதந்திரம் என்பதே ஏறக்குறைய முடிவுக்குக் கொண்டுவரப்படும்.

போர், சர்வாதிகாரம் மற்றும் தொழிலாள வர்க்கத்தினை பிளவுபடுத்துவதற்கான முஸ்லீம்-விரோத வெறுப்புணர்ச்சியை ஊக்கப்படுத்தல் ஆகியவற்றுக்கு இடது ஸ்தாபகங்கள் உறுதி கொண்டுள்ளன என்பதையே NPA இன் பதிலிறுப்பு எடுத்துக்காட்டுகிறது. சபடோவும் ரூசேயும் சாவகாசமாய் எழுதுகிறார்கள்: உணர்ச்சிகள் நாட்டை ஆக்கிரமித்து விட்டிருக்கின்றன, இது முழுக்க இயல்பு தான். இஸ்லாமியவெறுப்பு நடவடிக்கைகள் பெருகியிருக்கின்றன, என்றாலும் அவையெல்லாம் பெரும்பாலும் மக்களின் ஒரு மூலையில் இருப்பவர்களால் தான் இழைக்கப்பட்டிருக்கின்றன.

வம்பர் 13 தாக்குதல்களுக்கான முழுப் பழியையும் ISIS மீதுதான் வைக்க வேண்டும் என்று அவர்கள் கோருகிறார்கள். அந்த அமைப்பானது பிரிட்டன் அளவுக்கான ஒரு பிராந்தியத்தில் ஒரு ஆரம்பநிலை-அரசை (proto-state) கட்டியெழுப்பியிருக்கிறது என்று NPA எழுதுகிறது.  அந்த அறிக்கை தொடர்ந்து சொல்கிறது: அது ஒரு நிர்வாகத்தை நடத்துகிறது; பெரும் செல்வத்தை (சுமார் 1.8 பில்லியன் டாலர் என மதிப்பிடப்படுகிறது) திரட்டியிருக்கிறது; எண்ணெய் மற்றும் பருத்தியின் கடத்தலை ஒழுங்கமைக்கிறது. பல முனைகளிலும் அது இராணுவ நடவடிக்கைகளை நடத்துகிறது; மிக உயர்ந்த தகவல் தொழில்நுட்ப நிபுணர்களை அது பணியமர்த்தியிருக்கிறது... இது ஒரு கைப்பாவை அல்ல! அது தன் நடவடிக்கைகளுக்கு பொறுப்பானதாகும் - அது பல இடங்களிலும் நிகழ்த்தியிருக்கக் கூடிய தாக்குதல்களுக்கு முழுப் பொறுப்பானதாகும்.

ISIS ஐ ஒரு சுதந்திரமான பொருளாதார மற்றும் இராணுவ பிரம்மாண்டமாகவும், பிரிட்டன் அல்லது பிரான்ஸ் அளவுக்கான ஒரு எதிரியாகவும் மாற்ற முனைகின்ற இந்த முயற்சி அபத்தமானதாகும். 2003 இல் நடந்த ஈராக் மீதான சட்டவிரோத அமெரிக்க ஆக்கிரமிப்பில் இருந்தும் 2011 முதலாய் மத்திய கிழக்கில் நடத்தப்பட்டிருக்கும் ஏகாதிபத்திய பினாமிப் போர்களில் இருந்தும் -இவற்றில் பாரசீக வளைகுடாவின் எண்ணெய் ஷேக்குகளது இராச்சியங்களால் நிதியாதாரம் அளிக்கப்பட்ட இஸ்லாமியப் போராளிக் குழுக்கள் நேட்டோவுக்கான தரைப்படைகளாக சேவைசெய்தன- தான் ISIS எழுந்திருந்தது. நேட்டோவின் ஒரு உறுப்புநாடான துருக்கியுடனான எண்ணெய் வர்த்தகத்தின் மூலம் ISIS 1.8 பில்லியன் டாலர் குவிக்க முடிந்திருக்கிறது என்றால், அதன் அர்த்தம் பிரான்சின் சுமார் 12 ட்ரில்லியன் அளவுக்கான தேசிய செல்வத்தின் 0.02 சதவீதத்தும் குறைவான தொகையை அது திரட்ட முடிந்திருக்கிறது என்பதாகும்.

மேலும், நவம்பர் 13 தாக்குதல்களில் அரசின் பங்கு புறந்தள்ளிவிட முடியாததாகும். ISIS தான் முழுப் பொறுப்பு என்ற தமது கூற்றுக்கு ஆதாரங்கள் என்ன என்பதை சபடோவும் ரூசேயும் கூறவில்லை. அல்கெய்தா மற்றும் ISIS ஆகிய அமைப்புகள், உளவு அமைப்புகளால் ஊடுருவப் பெற்று சூழ்ச்சிகையாளல்களுக்கு இலக்காகின்றன என்பதையே நீண்ட அனுபவம் எடுத்துக்காட்டியிருக்கிறது. சார்லி ஹெப்டோ-ஹைபர் காசெர் தாக்குதல்களுக்கு ஒரு சில மாதங்களுக்குப் பின்னர், துப்பாக்கிதாரிகள் போலிஸ் உளவாளிகளிடம் இருந்துதான் ஆயுதங்களைப் பெற்றிருந்தனர் என்ற தகவல் வெளியானது - உள்துறை அமைச்சரான பேர்னார் கஷனெவ் அரச இரகசிய சிறப்புரிமையைப் பயன்படுத்தி அந்த உண்மையை மூடிமறைக்க முனைந்தார்.

ஆயினும், மிக அடிப்படையாக, ஒரு பயங்கரவாதத் தாக்குதலின் முக்கியத்துவத்தை வெறுமனே அந்த சம்பவத்தின் நிலைப்பாட்டில் இருந்து மட்டுமே மார்க்சிஸ்டுகள் ஒருபோதும் விளக்குவதில்லை. ISIS பிரெஞ்சு இளைஞர்களின் ஒரு அடுக்கினரிடையே தனக்குக் காதுகொடுக்கச் செய்வதில் வெற்றிபெற முடிந்தமையும், அதேபோல பிரெஞ்சு ஏகாதிபத்தியம் 2003 இல் ஈராக்கிய-போருக்கு எதிராக எடுத்திருந்த தனது நிலையை மாற்றிக்கொண்டு அதற்குப் பதிலாய் ஆட்சிகளை மாற்றுகின்ற நேட்டோவின் போர்களுக்கு ஆதரவு தெரிவிக்க எடுத்த முடிவும், வர்க்க உறவுகளிலான ஆழமான மாற்றங்களுடன் பிரிக்கவியலாமல் பிணைந்திருக்கிறது.

2003 முதலாக, அதிலும் குறிப்பாக 1930களின் பெருமந்தநிலைக்குப் பிந்தைய மிக ஆழமான உலகளாவிய முதலாளித்துவ நெருக்கடி, 2008 இல் வெடித்ததன் மூலமாக, பிரெஞ்சு முதலாளித்துவத்தின் சமூக-பொருளாதார அடித்தளங்கள் ஆட்டம்கண்டிருக்கின்றன. பத்து மில்லியன் கணக்கிலான வேலைகள் அகற்றப்பட்டிருக்கின்றன, சமூக உரிமைகள் கிழித்தெறியப்பட்டுள்ளன, ஐரோப்பாவெங்கிலும் பரந்த இலாபங்கள் ஈட்டப்பட்டுள்ளன, ஆனாலும் பிரெஞ்சு முதலாளித்துவம் தொடர்ந்தும் உருக்குலைந்து செல்கிறது. உலகச் சந்தைகளில் போட்டி போடவியலாமல், அதன் சொந்த பொருளாதார நிபுணர்கள் பூச்சிய வளர்ச்சியையும் தீவிரமடைகின்ற சமூக மோதலையும் கணித்துக் கூறி வருகிறார்கள்.

தற்குப் பதிலிறுப்பாக, ஆளும் உயரடுக்கானது வெளிநாட்டில் கொள்ளைப் போர்களை நோக்கியும், தாயகத்தில் தொழிலாள வர்க்க புறநகர் பகுதிகளில், குறிப்பாக புலம்பெயர்ந்த முஸ்லீம் மக்கள் வாழுகின்ற பகுதிகளில், போலிஸ் ஒடுக்குமுறையை தீவிரப்படுத்துவதை நோக்கியும் திரும்பியிருக்கிறது. 2003 இல் அரசாங்கப் பள்ளிகளில் முகத்திரை அணிவதை தடைவிதித்ததில் இருந்து 2009 இல் பர்தாவுக்கு தடை வரையிலும் முஸ்லீம்களைக் குறிவைத்து நடத்தப்படும் பாரபட்ச நடவடிக்கைகளுடன் கைகோர்த்து இது நடக்கிறது.

சபடோவும் ரூசேயும் ISIS இன் பொறுப்பு குறித்து பேச விரும்புகின்றனர், ஆனால் NPA இன் பொறுப்பு என்ன? இந்த நிலைமைகளின் கீழ் பிரான்சில் போர்-எதிர்ப்பு இயக்கம் எதுவும் இல்லாமல் இருப்பதையும், அல்லது இளைஞர்களிடையே ஆதரவை வெல்லக்கூடிய இடது-சாரி இயக்கம் எதுவும் இல்லாதிருப்பதையும் எப்படி ஒருவர் விளக்க இயலும்?

NPA யும் இடது முன்னணியும் மற்றும் அவர்களது கூட்டாளிகளும் இடதுகளாய் காட்டிக்கொண்டு அதேநேரத்தில் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் பிற்போக்குத்தனமான கொள்கைகள் அத்தனையையும் போர்கள், முஸ்லீம்-விரோத நடவடிக்கைகள், மற்றும் அவர்கள் 2012 தேர்தலில் ஆதரித்திருந்த ஒரு PS அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கை வேலைத்திட்டம்- ஆதரித்து வந்திருந்ததன் மூலம் ஒரு மோசடியானதும் பிற்போக்குத்தனமானதுமான ஒரு பாத்திரத்தை ஆற்றி வந்திருக்கின்றன. தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாகக் கொண்ட போரெதிர்ப்பு அத்தனையும் ஒடுக்கப்படுகின்றதான, ஒரு செயற்கையான அரசியல் சூழலை உருவாக்கத் தேவையான அத்தனையையும் அவை செய்தன. பிரான்சில் முஸ்லீம் இளைஞர்களின் மிகவும் நோக்குநிலை பிறழ்ந்த அடுக்குகளிடையே ISIS இன் குரல் செவிமடுக்கப்படுவதற்கு இது கதவு திறந்து விட்டது.

குறிப்பாக, NPA, நேட்டோவின் இஸ்லாமிய பினாமிப் படைகளை புரட்சியாளர்களாகப் பாராட்டி, லிபியாவிலும் சிரியாவிலும் போர்களுக்கான மிக மூர்க்கமான ஊக்குவிப்பாளராக ஒரு மையமான பாத்திரத்தை ஆற்றியது.

குண்டுகள் விழத் தொடங்கிய சமயத்தில், NPA இன் ஜில்பேர்ட் அஷ்கார், லிபியப் போரை அங்கீகரித்த ஐ.நா தீர்மானத்தைப் பாராட்டினார். ஏகாதிபத்திய நோக்கங்களுக்காய் அந்தத் தீர்மானம் பயன்படுத்தப்படுவதை தடுக்கும் வகையில் போதுமான பாதுகாப்பு நிரம்பிய வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை என்று ஒப்புக்கொண்ட அதேநேரத்தில் அவர் கூறினார்: ஆனால், கடாபியின் படைகள் பெங்காசியின் மீது நடத்தக்கூடிய தாக்குதலினால் தவிர்க்கமுடியாது விளைந்திருக்கக் கூடிய படுகொலையைத் தடுத்துநிறுத்துகின்ற அவசரத்தையும், அத்துடன் பாதுகாக்கும் நோக்கத்தைச் சாதிப்பதற்கு எந்த மாற்று வழிகளும் இருக்கவில்லை என்பதையும் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, எவரொருவரும் இதனை எதிர்ப்பது முறையாக இருக்க முடியாது ஏகாதிபத்திய-எதிர்ப்புக் கோட்பாடுகள் என்ற பேரில் அப்பாவி மக்களின் படுகொலையை தடுக்கின்றதொரு நடவடிக்கையை நீங்கள் எதிர்க்க முடியாது.

நேட்டோ வான் தாக்குதல்களும் இஸ்லாமிய மற்றும் பழங்குடி போர்க்குழுக்களின் தாக்குதல்களும் லிபிய ஆட்சியைக் கீழிறக்கிய பின், கடாபி பிடிக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, சீர்ட் நகரின் குண்டுவீச்சுச் சிதைவுகளில் படுகொலை செய்யப்பட்ட போது, அந்த சம்பவத்தை NPA பாராட்டியது. அது அறிவித்தது: சர்வாதிகாரி கடாபியின் வீழ்ச்சி மக்களுக்கு நல்லசெய்தியாகும். அரபு பிராந்தியத்தில் தொடர்கின்ற புரட்சிகர நிகழ்வுப்போக்குடன் NPA முழுமையாக ன்றுபட்டு நிற்கிறது.

டாபிக்கு எதிராய், நேட்டோ ஆதரித்திருந்த பல்வேறு இஸ்லாமியப் போராளிக் குழுக்களுக்கு இடையிலான ஒரு உள்நாட்டுப் போருக்குள் லிபியா உருக்குலைந்து கொண்டிருந்த சமயத்தில், அசாத்தைக் கவிழ்ப்பது குறித்து விவாதிக்க அஷ்கார் 2011 அக்டோபரில் சிஐஏ இன் சிரியப் பெரும்புள்ளிகளை சந்தித்தார். சிரியாவில் இப்போதிருக்கும் நிலைமையில், அந்நிய இராணுவத் தலையீடு என்ற பொருள் தொடர்பாக பேசுவதற்கு சுவீடனில் அவர்களது மாநாட்டிற்கு தான் அழைக்கப்பட்டிருப்பதாக இலண்டனின் அல் அக்பர் பக்கங்களில் அவர் பெருமையடித்திருந்தார்.

அசாத் ஆட்சிக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு தயாரிப்பு செய்வதற்காக, லிபியாவில் ஆட்சி-மாற்றத்திற்காக ஒன்றுசேர்க்கப்பட்டிருந்த இஸ்லாமிய போராளிகள் ஒரு சர்வதேச பயிற்சி முகாம் வலைப்பின்னலுக்குள் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தனர். சிஐஏ மற்றும் ஐரோப்பிய உளவு அமைப்புகளின் மேற்பார்வையின் கீழ், அவர்கள் நகர்ப்புற கெரில்லா யுத்தங்களை நடத்தவும் கார் குண்டுகளை வெடிக்கவும் பயிற்சியளிக்கப்பட்டனர். முஸ்லீம் பின்னணி கொண்ட ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மத்திய கிழக்குக்கு சென்று இந்தப் பயிற்சியைப் பெறுவதற்கு ஐரோப்பாவெங்கிலுமான போலிசும் உளவு சேவைகளும்  அனுமதித்தன, ஊக்குவிக்கவும் செய்தன.

சிரிய நகரங்களை டஜன்கணக்கிலான பயங்கரவாத வெடிகுண்டுத் தாக்குதல்கள் உலுக்கிக் கொண்டிருந்த சமயத்தில், அவை அசாத்திற்கு எதிரான ஒரு புரட்சிகரப் போராட்டத்தின் பகுதி என்று NPA அவற்றைப் பாராட்டியதோடு, சிரிய எதிர்ப்பாளர்களுக்கு பிரான்ஸ் ஆயுதமளிக்க வேண்டும் என்றும் கோரியது. NPAஇன் ஒலிவியே பெசன்ஸநோ 2013 இல் கூறினார்: (பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் லோரண்ட்) ஃபாபியுஸ் ஒரு உடைந்த ரெக்கார்டு போல் இருக்கிறார். பல மாதங்களாய் ஒன்றையே அவர் திருப்பித் திருப்பி சொல்லி வருகிறார். அவர் பெரிய மனதோடு சிரியப் புரட்சியாளர்களுக்கு ஆயுதங்களைக் கொடுக்க வேண்டும்.

தன் அர்த்தம் பயங்கரவாதிகளுக்கு உதவுவது என்றாகும் என்பதான உளவுத்துறை முகமைகளின் கவலைகளை பெசன்ஸநோ நிராகரித்தார். நாம் ஆயுதங்கள் கொடுக்கவே கூடாது ஏனென்றால் அவை ஜிகாதிகளின் கைகளுக்குப் போய் விடும் என்று கூறுபவர்களைப் பொறுத்தவரை, அப்படிப் பார்த்தால், ஏற்கனவே அப்படித் தானே இருக்கிறது [அவர்கள் ஆயுதம் கொண்டே உள்ளனர்].

கிழக்கு சிரியாவில் அசாத் ஆட்சியின் பொறிவினால் ISIS ஆதாயமடைந்தது, அண்டை நாடான ஈராக்கில் உள்ள அமெரிக்காவின் ஷியா கைப்பாவை ஆட்சிக்கு குரோதமான சுன்னி படைகளிடம் இருந்து அதற்கு உதவி கிட்டுகிறது. ஒரு நேட்டோ உறுப்புநாடான துருக்கியுடன் அதன் தொடர்புகளின் மூலமாக இந்தப் பகுதிகளில் இருந்து உலகச் சந்தைகளுக்கு அதனால் எண்ணெயை ஏற்றுமதி செய்ய முடிகிறது. 

நேட்டோ சக்திகள் பாக்தாத்தில் இருக்கும் ஆட்சிக்கு முட்டுக்கொடுப்பதற்காக, ஈராக்கில் ISIS மீது குண்டுவீசியபோது,  NPA அதற்கு ஆதரவளித்து ISIS ஐ கண்டனம் செய்யத் தொடங்கியது. ஆனால் ஏகாதிபத்தியக் கொள்கையின் ஒரு கருவியாகவும் போர் தீவிரப்படுத்தப்படுவதற்கான ஒரு காரணமாகவும் ISIS சேவைசெய்தது. சென்ற ஆண்டில் பிரான்ஸ் இன்னமும், சிரியாவில் ISIS மீது குண்டுவீச மறுத்திருந்தவேளையில், அசாத்தின் மிக வலிமையான எதிரியை அகற்றுவதன் காரணத்தால் இது அசாத்திற்கு உதவிசெய்வதாக அமைந்துவிடும் என்று கூறியது.

பிரான்சில் இருந்தும் பெல்ஜியத்தில் இருந்தும் ISISக்குள் எடுக்கப்பட்டிருந்தவர்கள், நெருக்கமான போலிஸ் கண்காணிப்பு வளையத்திற்குள் அவர்கள் இருந்த நிலையிலும் கூட பாரிஸில் நடத்தியிருந்த பயங்கரவாதத் தாக்குதல்கள், NPA தீவிரமாக ஆதரித்திருந்த ஏகாதிபத்தியக் கொள்கைகளின் துயரகரமான இரத்தம்பாய்ந்த விளைபொருட்களாகவே இருந்தன. இது NPA இன் கடந்துபோகக்கூடிய குழப்பத்தின் காரணத்தாலோ அல்லது ஒரு தந்திரோபாயத் தவறினாலோ விளைந்ததல்ல, மாறாக ஒரு குட்டி-முதலாளித்துவ, ஏகாதிபத்திய ஆதரவுக் கட்சியாக அதன் வர்க்க குணநலனின் ஒரு விளைபொருளாகவே இருந்தது. அந்தக் காரணத்தால் தான், இப்போதைய அவர்களது கட்டுரையிலும் கூட, சபடோவும் ரூசேயும் இன்னும் கூடுதலான பினாமிப் படைகளுக்கு ஆயுதமளிக்கவும் சிரியாவில் இராணுவ அதிகரிப்பை இன்னும் அதிகமாக்கவும் கோருகின்றனர்.

ஆட்சிக்கான எதிர்ப்பின் முற்போக்கான மற்றும் மதச்சார்பற்ற கூறுகளாக இருக்கின்ற குர்துக்கள் மற்றும் ஏய்திக்கள் (Yezidis) ஆகிய நமது ஆதரவுக்கு பெரும் தகுதி படைத்ததாய் இருக்கின்ற களத்தில் இருக்கின்ற படைகளை அவர்களது இந்தக் கட்டுரை சுட்டிக்காட்டுகிறது. நாம் அவர்களுக்கு நமது அரசியல் மற்றும் பொருள்ரீதியான ஆதரவை அளிக்க வேண்டும் என்பதோடு அவர்கள் போதுமான ஆயுதங்கள் பெற வேண்டும் என்பதையும் கோர வேண்டும்... தீர்மானிப்பது மக்கள் தானே தவிர, ஏகாதிபத்தியக் கூட்டணிகள் அல்ல. ஆயினும், இந்தப் போரின் ஒரு குறிப்பிட்ட பரிமாணம் என்ற வகையில், குர்துக்களும் சிரிய ஜனநாயகவாதிகளும் மேற்கத்திய அரசாங்கங்கள் உள்ளிட்டவற்றிடம் இருந்து மருத்துவ மற்றும் இராணுவ உதவியைக் கேட்டிருக்கின்றனர், தொடர்ந்தும் கேட்டு வருகின்றனர். அவர்களுக்கு அது கொடுக்கப்பட வேண்டும்.

பெரும் சக்திகளால் சிரியாவில் நடத்தப்படுகின்ற காதிபத்திய போருக்கு தாங்கள் அளிக்கின்ற ஆதரவுக்கு ஒரு புதிய வெகுஜன முலாம் பூசுவதற்காக நவம்பர் 13 தாக்குதல்களை சுரண்டிக் கொள்கின்ற நோக்கம் கொண்ட, அரசியல் குதர்க்கவாதத்தின் ஒரு வெட்கமற்ற செயலாக இது இருக்கிறது. ஆயினும், எதிர்ப்புப் போராளிக் குழுக்களில் எது நேட்டோ ஆயுதங்களை பெறப் போகிறது என்பதைத் தீர்மானிக்கப் போவது நேட்டோ அரசுகளின் இராணுவப் படைகளும் உளவு முகமைகளுமே அன்றி மத்திய கிழக்கின் மக்கள் அல்ல.

NPA ஒரு மதச்சார்பற்ற எதிர்ப்பாளர்கள் எனப் போற்றுகின்ற ஏகாதிபத்திய ஆதரவு குர்திஷ் போர்க்குழுக்களையும் மற்றும் இராணுவத்தில் இருந்து வெளியேறி வந்தவர்கள், குற்றவாளிக்குழுக்கள் மற்றும் இஸ்லாமியப் போராளிக் குழுக்கள் கொண்ட கலவையையும் பொறுத்தமட்டில், அவை ISIS ஐ போன்றே, மத்திய கிழக்கு வெகுஜனங்களை பிரதிநிதித்துவப்படுத்துவன அல்ல.

ரு குட்டி-முதலாளித்துவ போலி-இடது கட்சி சகதியின் எச்சசொச்சங்களுக்காகப் பேசுகின்ற சபடோவும் ரூசேயும், தங்களது ஏகாதிபத்திய-ஆதரவு திட்டநிரலையும் தாங்கள் வலது நோக்கி முண்டியடிப்பதான உண்மையையும் மறைப்பதற்காக நேர்மையற்ற வசனங்களைப் பயன்படுத்துவதில் இறங்குகின்றனர். ஏகாதிபத்தியப் போரை ஆதரிப்பதில் இருந்து போருக்கான எதிர்ப்பை ஒடுக்கும் பொருட்டான போலிஸ்-அரசு ஆட்சியை ஆதரிக்கும் நிலை வரைக்கும் NPA சென்றுள்ளது.