World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கலை விமர்சனம்

Best films of 2014

2014 இன் சிறந்த திரைப்படங்கள்

By David Walsh and Joanne Laurier
30 December 2014

Back to screen version

நமது பார்வையில், சில விஷயங்களில் மிகச்சுருக்கமாக இருந்த போதிலும், நியூயோர்க் மற்றும் லொஸ் ஏஞ்சல்ஸில் மற்றும் அநேகமாக வேறு சில இடங்களில் 2014இல் வட அமெரிக்காவின் திரையரங்குகளில் பல சுவாரஸ்யமான திரைப்படங்கள் வெளியாயின.

சில சமீபத்திய வருடங்களில் பத்து தலைப்புகளைத் தேர்ந்தெடுப்பதில் கூட மிகவும் சிரமமாக இருந்து வந்தபோதிலும், சுவாரஸ்யமான படைப்புகளின் எண்ணிக்கை சிறந்ததாக ஆகுவதற்கான சில மாற்றங்களைக் காட்டுகிறது. திரைப்பட உருவாக்கத்தில் வாழ்க்கை மற்றும் யதார்த்தம் குறித்து ஒரு அதிகரித்துவரும் அக்கறை காணப்படுகிறது.

எவ்வாறாயினும் பெரும்பாலும், அற்பமான அல்லது ஆடம்பரமான, பெருவர்த்தகரீதியான வகையான திரைப்படங்களின் தயவிலேயே திரைப்படத்திற்கு செல்வோர் இப்பொழுதும் விடப்படுகிறார்கள். அமெரிக்காவில்  அதிகளவுதிரையிடப்பட்டதில் கடந்த வருடத்தின் சிறந்த 100 திரைப்படங்களின் பட்டியலில், நகைச்சுவை-புத்தக கதாநாயகர்கள், சிறப்பு காட்சிகள், அனிமேஷன் மற்றும் முதிர்ச்சியில்லாத நகைச்சுவை ஆகியவையே ஆதிக்கம் செலுத்துகின்றன. மேலும், அதிக அளவிலான வெறுமையான மற்றும் சுய-நலனுள்ள,சுயாதீனமான திரைப்படங்களும் தொடர்ந்து எடுக்கப்பட்டும் பாராட்டப்பட்டும் வருகின்றன.

வெட்கப்படும்படியாக, பிரதான ஹாலிவுட் ஸ்டூடியோக்கள் அமெரிக்காவில் சமகாலத்திய வாழ்க்கை பற்றி ஆழமாக பேசக்கூடிய திரைப்படங்களை எடுக்கவே இல்லை எனலாம். ஜான் ஸ்டிவார்ட்டின் Rosewater மற்றும் சேத் ரோஜென் இவான் கோல்ட்பேர்கின் The Interview  ஆகிய திரைப்படங்களோடு திரைத்துறையின் ஒரு பகுதியினர் அமெரிக்கா அரசுடனும் மற்றும் ஏகாதிபத்திய புவிஅரசியலுடன் தங்களை ஒருங்கிணைத்துக் கொண்டனர்.

2014இல் வட அமெரிக்காவின் திரையரங்குகளில் வெளியான சிறந்த திரைப்படங்களின் எங்களது பட்டியல் வருமாறு:

Mr. Turner (மைக் லீ, 2014): ஆங்கில ஓவியர் ஜே.எம்.டபிள்யூ. டர்னரின் (1775-1851) குறிப்பிடும்படியான மற்றும் தீவிர சித்தரிப்பு.

Omar (ஹேனி அபு - அஸாத், 2013): ஆக்கிரமிப்பு மற்றும் ஒடுக்குமுறையின் தீவிர அழுத்தத்தின் கீழ் வாழ்க்கை குறித்த பாலஸ்தீனிய நாடகம்


World Not Ours

A World Not Ours (மஹ்தி ஃப்ளீஃபெல், 2012): தெற்கு லெபனானிலிருக்கும் பாலஸ்தீனிய அகதிகள் முகாமான எயின் அல்-ஹில்வீயில், வாழ்க்கை குறித்து கருதத்தக்களவில் உணர்வுப்பூர்வமாகவும் நகைச்சுவையுணர்வுடனும் எடுக்கப்பட்ட ஓர் ஆவணப்படம்.

Citizenfour (லவ்ரா போய்ட்ரஸ், 2014): ஹாங்காங்கில் ஜூன் 2013 மற்றும் அதன் பிறகு, NSA தகவல் கசியவிட்டவரான எட்வர்ட் ஸ்நோவ்டனுடன் பத்திரிக்கையாளரின் ஒருவரது முதல் பேட்டி.

The Grand Budapest Hotel (வெஸ் ஆண்டர்சன், 2014): இரண்டாம் உலகப்போருக்கு முன்னால், மத்திய ஐரோப்பாவில் பாசிசத்தின் நிழலின் கீழ் வாழ்க்கை மற்றும் நிகழ்வுகள் குறித்த ஓர் அற்புதமான படைப்பு.

Night Will Fall (அந்திரே சிங்கர், 2014): 1945இல் பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க அரசுகளால் பிடிக்கப்பட்ட, சித்திரவதை முகாம்களின் விடுதலை பற்றிய திரைப்படத்தின் உருவாக்கம் பற்றிய ஒரு கதை.

The Kill Team (டன் கிராவ்ஸ், 2013): 2010இல் ஆஃப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவத்தால் பொதுமக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட அட்டூழியங்கள் குறித்த ஒரு வலுவான ஆவணப்படம்.

Ilo Ilo (அந்தோனி சென், 2013): சிங்கப்பூரில் ஒரு குடும்பம் மற்றும் அவர்களுடன் வசிக்கும் பிலிப்பைன் செவிலி பற்றிய ஒரு நெகிழ்வான கதை. இத்திரைப்படம் எதிர்பார்ப்புகளுடன் முரண்படுகிறது.

Foxcatcher (பென்னட் மில்லர், 2014): உண்மையான நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்ட, மில்லினியரான ஜான் டு போண்ட் மற்றும் ஷுல்ட்ஸ் சகோதரர்களின் துயரகரமான உரையாடல்.

Boyhood (ரிச்சர்ட் லிங்க்லேடர், 2014): 2002 முதல் 2013 வரையிலான பனிரண்டு வருட கால கட்டத்தில் படம்பிடிக்கப்பட்ட, ஒரு டெக்ஸாஸ் சிறுவனின் ஆரம்ப வருடங்களைப் பற்றிய ஒரு நாடகம்.

Ida (பவெல் பவ்லிகோவ்ஸ்கி, 2013):1960களில் அமைக்கப்பட்ட ஒரு போலந்து திரைப்படம்; ஒரு இளநிலை இளம் கன்னியாஸ்திரி அவளது குடும்பம் மற்றும் நாட்டின் துயரம்நிறைந்த கடந்த காலம் குறித்து அறிந்து கொள்கிற கதை.

Devil Knot (ஆடம் ஈகோயன், 2013): 1990களில், சந்தேகிக்கப்படும் சாத்தான் வழிபாட்டு கொலை ஒன்றிற்காக குற்றம் சாட்டப்பட்ட West Memphis Three வழக்கு பற்றிய ஒரு கற்பனையான மறுஉருவாக்கம்.

Finding Vivian Maier (ஜான் மலூஃப் மற்றும் சார்லீ சிஸ்கெல், 2013): அவரது வாழ்நாளில் முற்றிலும் அறியப்படாத மர்மமான புகைப்படக்காரரான விவியன் மையர் (1926-2009) பற்றிய சுவாரஸ்யமான கதை.

Rich Hill (ஆண்ட்ரிவ் ட்ரோஸ் பலெர்மோ, ட்ரேசி ட்ரோஸ் ட்ரேகோஸ், 2014): வறுமையால் பாதிக்கப்பட்ட கிராமப்புறமான மிசோரி நகரின் மூன்று இளம்பருவத்தினர் பற்றிய ஒரு புனைக்கதை-அல்லாத திரைப்படம்.

Bad Hair (பெலோ மலோ, மரியானா ரோண்ட், 2013): கராகஸில் உழைக்கும் வர்க்கம் பற்றிய ஒரு சமூக நாடகம்; தனது இரு குழந்தைகளை வளர்க்கப் போராடும் ஒரு விதவை, அவர்களில் ஒருவன் ஓரினச்சேர்க்கையாளனாக இருப்பானோ என்று அவள் அஞ்சுகிறாள்.

Mood Indigo (லீகமி டெஸ் ஜோர்ஸ், மிசெல் கோண்ட்ரி, 2013): பிரெஞ்சு எழுத்தாளர் போரிஸ் வியானின் பிரபல நாவலின் ஒரு கற்பனையான மற்றும் அதிக கவர்ச்சியான படைப்பு.

Venus in Fur (லா வினஸ் லா ஃபோரரி, ரோமன் பொலான்ஸ்கி, 2013): இமானுவேல் சீக்னரின் அற்புதமான நடிப்பில் வெளிவந்திருக்கும், நடிகைக்கும் ஆண் எழுத்தாளருக்கும் இடையிலான உறவுகள் தொடர்பான ஓர் விடத்திற்குபொருத்தமற்ற பார்வை.

மேலும் குறிப்பிடும்படியான படைப்புகள்:

Dormant Beauty (பெல்லா அடோர்மெண்டடா, மார்கோ பெல்லொசியோ, 2012)
Whiplash (டேமியன் சேஸெலி, 2014)
Miss Julie (லிவ் உல்மான், 2014)
Belle (அம்மா அஸேண்டி, 2013)

2014இல் குறிப்பாக திரைப்பட விழாவில் நாங்கள் பார்த்த, இதுவரையில் வட அமெரிக்காவில் வெளியிடப்படாத சிறந்த திரைப்படங்கள் பற்றிய எங்களது பட்டியல்:

99 Homes (ரமின் பஹ்ரானி, 2014)

 Iraqi Odyssey (சமீர், 2014)

Good Kill (ஆண்ட்ரிவ் நிக்கோல், 2014)
Tigers (டேனிஸ் டனோவிக், 2014)
Phoenix (கிறிஸ்டியன் பெட்ஸோல்ட், 2014)
Labyrinth of Lies (Im Labyrinth des Schweigens,, கியுலியோ ரிசியரிலி, 2014)
Timbuktu (அட்பெராமனீ சிஸாகோ, 2014)
High Society (லீ பீ மாண்டி, ஜூலி லோபஸ் கர்வால், 2014)
The Reaper (கொசாக், ஸ்வோனிமிர் ஜுரிக், 2014)
School of Babel (La cour de Babel, ஜூலீ பெர்டுசெல்லி, 2014)
Tamako in Moratorium (Moratoriamu Tamako, நோபுரிஹோ யமஷிடா, 2013)

உலக சோசலிச வலைத் தளத்தின் ரிச்சார்ட் ஃபிலிப்ஸ் பின்வரும் திரைப்படங்களை பரிந்துரைக்கிறார்:

Mr. Turner (மைக் லீ, 2014)
Boyhood (ரிச்சர்ட் லிங்க்லேட்டர், 2014)
The Grand Budapest Hotel (வெஸ் ஆண்டர்சன், 2014)
Human Capital (Il capitale umano, பலூ விர்ஸி, 2013)
With You, Without You (Oba Nathuwa Oba Ekka, ப்ரசனா இதனேஜி, 2012)
Keep On KeepinOn (ஆலன் ஹிக்ஸ், 2014ஜாஸ் டிரம்பட் இசைக்கலைஞர் க்ளார்க் டெர்ரி பற்றிய ஒரு ஆவணப்படம்)
The Great Museum (Das groe Museum, ஜோஹனெஸ் ஹோல்ஸாசென், , 2014)
Omar (ஹனி அபு-அஸாத், 2013)
The Gatekeepers (ட்ரோர் மோரெ, 2012)

சமீபத்தில் வெளியாகாத ஆனால் டிவிடியில் வெளியான இரண்டு தொல்சீர் திரைப்படங்கள், இவ்வாண்டு மறுவிவாதம் செய்யப்பட்டவை.

The Cranes are Flying (Letyat zhuravli, மிகைல் கலடோஸோவ், 1957)
Grave of the Fireflies (Hotaru no haka, இசோவ் ராகஹடா, 1988)