World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

German government prepares new military doctrine

ஜேர்மன் அரசாங்கம் புதிய இராணுவ கொள்கை நெறியை தயார் செய்கின்றது.

By Johannes Stern
19 February 2015

Back to screen version

ஜேர்மன் பாதுகாப்பு மந்திரி ஊர்சுலா வொன் டெர் லெயன் செவ்வாயன்று ஜேர்மனிக்கான ஒரு புதிய இராணுவ மற்றும் பாதுகாப்பு மூலோபாயம் ஏற்பது குறித்து முன்னறிவிப்பு செய்தார். “2016 வெள்ளையறிக்கை" தயாரித்து வருபவர்களின் முதல் சந்திப்பு நிகழ்வில் வழங்கப்பட்ட அவரது உரை, இரண்டாம் உலக போர் முடிந்து 70 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜேர்மன் ஆளும் மேற்தட்டு ஓர் ஆக்ரோஷமான வெளியுறவு கொள்கைக்குத் திரும்புவதை அடிகோடிட்டது.

2006 இல் கடைசி வெள்ளையறிக்கை வெளியிடப்பட்டு ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்குப் பின்னர், "ஒரு புதிய வெள்ளையறிக்கை காலதாமதமாகிவிட்டது" என்று அவரது உரையின் தொடக்கத்தில் வொன் டெர் லெயன் தெரிவித்தார். அவர் குறிப்பாக, "நாடு கடந்த பயங்கரவாதத்தின் எச்சரிக்கையூட்டும் அபிவிருத்தியையும்" மற்றும் "உக்ரேனில் ரஷ்யாவின் நடவடிக்கையையும்" சுட்டிக்காட்டி (இதை அவர் “மிகப் பரந்த விளைவுகளைக்" கொண்டுள்ளது என்றார்), மாறிவிட்ட "பாதுகாப்பு சூழலை" எடுத்துரைத்தார்.

மின்ஸ்க் போர்நிறுத்தம் நடைமுறைப் படுத்தப்படுமென்று அவர் நம்புவதாக கூறி, அதில் ஒருவருக்கு "பிரமைகள் இருக்க கூடாது" என்று எச்சரித்தார். அவர் தொடர்ந்து கூறினார்: “கிரெம்ளினின் புதிய கொள்கை உக்ரேனிய நெருக்கடிக்கு முன்னரே தொடங்கியது. அது நீண்ட காலத்திற்கு நம்மை ஓய்வில்லாமல் வைத்திருக்க போகிறது,” என்றார்.

நலன்களைப் பின்தொடர்வதற்கான ஒரு வழியாக, புவிசார் மூலோபாய அதிகார அரசியலை ஸ்தாபிக்க முயற்சிக்கும்", "சர்வதேசரீதியில் ஸ்தாபிக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் நெறிமுறைகளை, மேலாதிக்க பிரதேசங்களைக் கொண்டும் மேலாளுமையைக் கொண்டும் பிரதியீடு செய்வதற்கான" ரஷ்யாவின் முயற்சிகளுக்கும், "பொருத்தமான எதிர்நடவடிக்கையை" காண்பதே மேற்கின் இப்போதைய பணியாகும்.

ஓராண்டுக்கு முன்னர் பேர்லினின் ஆதரவுடன் பாசிச சக்திகளால் நடத்தப்பட்ட ஆட்சிக்கவிழ்ப்பின் விளைபொருளே உக்ரேனிய நெருக்கடி என்ற உண்மையை பாதுகாப்பு மந்திரி கைவிட்டிருந்தார். இருப்பினும் புதிய வெள்ளை அறிக்கையின் நிஜமான பின்புலம் உக்ரேனில் "ரஷ்ய ஆக்கிரமிப்பு" அல்ல, மாறாக 2014இன் தொடக்கத்தில் முனீச் பாதுகாப்பு கூட்டத்தில் ஜனாதிபதி கௌவ்க், வெளியுறவுத்துறை மந்திரி ஸ்ரைன்மையர் மற்றும் அவராலும் அறிவிக்கப்பட்ட வெளியுறவு கொள்கை சார்ந்த ஜேர்மன் கட்டுப்பாடுகளை முடிவுக்குக் கொண்டு வந்ததாகும் என்பதை அவர் மறைமுகமாக ஒப்புக் கொண்டார்.

புதிய வெள்ளை அறிக்கையின் அவசியத்தை "மாறிவிட்ட சூழலுக்காக" குறைப்பது, "மிகவும் பிற்போக்காக" இருக்குமென வொன் டெர் லெயன் தெரிவித்தார். அதற்கு மாறாக, அந்த ஆவணம் "சுய ஆய்வு மற்றும் சுய நம்பிக்கையின் நோக்கத்திற்கு சேவை" செய்ய வேண்டும். அது "நமது நடவடிக்கையையும் நமது நோக்கங்களையும் தெளிவாக விவரிக்க வேண்டும். அதுவொரு தொடர்ச்சியான விளக்கத்தை வழங்க வேண்டும்,” என்பதையும் அவர் சேர்த்து கொண்டார்.

இந்த "புதிய விளக்கத்தின்" வரம்புகள் ஏற்கனவே கடந்த ஆண்டில் தெளிவாகி உள்ளது. எண்ணற்ற உரைகளில், கருத்துரைகளில், நேர்காணல்களில் மற்றும் சிந்தனை குழாம்களின் மூலோபாய ஆய்வறிக்கைகளில், ஜேர்மன் அரசியல்வாதிகளும், இதழாளர்களும் மற்றும் கல்வியாளர்களும், ஐரோப்பாவிலும் மற்றும் உலகெங்கிலும் ஜேர்மனி "மேலதிக தலைமையை" மற்றும் "பொறுப்புறுதியை" ஏற்க வேண்டுமென மீண்டும் மீண்டும் முறையிட்டுள்ளனர். ஜேர்மன் நலன்களைப் பாதுகாக்க அவசியமான இராணுவ வழிவகைகளுக்கான வகைமுறைகளுடன் சேர்ந்து, அவற்றை தெளிவாக ஒழுங்குப்படுத்தும் ஒரு வெளியுறவு மூலோபாய கொள்கை ஜேர்மனிக்கு அவசியப்படுவதை அவர்கள் இதுவரையில் வாதிட்டுள்ளனர்.

வொன் டெர் லெயனின் உரை இந்த அடிப்படையில் ஒரு தொடர்ச்சியாக இருந்தது. “ஜேர்மன் பாதுகாப்பு கொள்கையை பொறுத்த வரையில் நமது நோக்கங்கள் அடிப்படையிலிருந்து முற்றிலுமாக மாறியுள்ளன,” என்று அவர் வலியுறுத்தினார். “மத்தியிலிருந்து தலைமையெடுத்து செல்வதும்", “ஈடுபடுவதற்கு ஆயத்தமாக இருப்பதுமே" முக்கியமாகும். இதனை கொண்டு அவர், உலகளாவிய நோக்குநிலை கொண்ட இராணுவவாத வெளியுறவு கொள்கையை அபிவிருத்தி செய்வதை அர்த்தப்படுத்துகிறார் என்பதற்கு அவர் எந்த சந்தேகத்திற்கு இடம் வைக்கவில்லை.

இராணுவ தலையீட்டின் மீதான எந்தவொரு அரசியல், பூகோள அல்லது ஏனைய தடைகளையும் அவர் வெளிப்படையாகவே நீக்குகிறார். “நுழையக்கூடாத பூகோள இடங்கள் அல்லது குறிப்பிட்ட எல்லைகள் என இவற்றை அமைக்கும் செயல்பாடுகளுக்கான கடுமையான விபரங்கள்" அங்கே இருக்காது என்று குறிப்பிட்டு, இதன் விளைவாக ஜேர்மன் இராணுவம் உலகில் எவ்விடத்திலும் தலையீடு செய்ய சுதந்திரத்தைப் பெறும் என்பதை அவர் அறிவித்தார்.

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஜேர்மன் ஏகாதிபத்தியம் அவசியமென்று கருதும் ஒவ்வொன்றும் அனுமதிக்கப்படுகிறது. அங்கே “அன்னிய நாட்டுகளில் தலையிடுவதற்கான எந்த சரிபார்ப்பு பட்டியலும் இல்லை", “தலையிடுவதற்கான நிர்பந்தங்கள் குறித்தும் எதுவும் இல்லை,” அத்துடன் "சம்பிரதாயமான நடவடிக்கைகளும் இல்லை.”

நிறைய கடமைப்பாடு" என்பது "சமாதானத்தை ஸ்தாபிக்க அல்லது பேண ஒருங்கிணைந்து சண்டையிடுதல்" என்பதை அர்த்தப்படுத்தும் என்று அவர் அறிவித்தார். “பலவீனமான பிராந்தியங்களில் ஒருங்கிணைந்து பயிற்சியளித்தல், படிப்பித்தல், ஆயத்தப்படுத்தல்" என்பதை அது குறிக்கிறது.

வடக்கு ஈராக்கில், ஆப்கானிஸ்தானில், கொசோவோவில், லெபனானின் கடற்கரையோரங்களில், மாலியில் மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் ஜேர்மன் தலையீடுகளை வொன் டெர் லெயன் புகழ்ந்துரைத்தார். இந்த பகுதிகளில் நேட்டோ படைகளை கட்டமைக்க ஜேர்மனி "ஆழமாக பொறுப்பு ஏற்றிருந்ததாக" அவர் தெரிவித்தார். “பங்காளிகளுடன்" சேர்ந்து, அது "புதிய துரித தாக்குமுகப்பு படையை தொடங்கி" வருவதுடன், ஸூசெசினில் உள்ள நேட்டோ தலைமையகத்தையும் விரிவாக்கி வருகிறது.

அந்த பாதுகாப்பு மந்திரி அவரது உரையின் இறுதியில் தற்செயலாக விடயத்தைக் கொட்டிவிட்டார்: ஜேர்மன் பாரியளவில் மீள்ஆயுதமேந்த வேண்டி உள்ளது! “நீண்டகால பங்காளிகளைப் போலவே, மேலும் அவசியமான போது அவர்களுக்கு வழங்கவும் ஆயுத படைகளைப் பேணுவது" அவசியமாகும். அதனால், அந்த வெள்ளையறிக்கை "நவீன ஆயுதங்களைப் பெறும் முயற்சிகளை", “இன்றைய தேதி வரையிலான பிரத்யேக கொள்கையை" மற்றும் ஒரு "பொதுவான வரவு-செலவு திட்ட கணக்கை" விவாதிக்கும்.

வொன் டெர் லெயன் அவர் உரையாற்றிய அதே நாளில் அவரது முதல் ஆயுத உடன்படிக்கையை அறிவித்தார். பாதுகாப்பு அமைச்சகம் 80 பன்முக பயன்பாட்டு NH90 ரக ஹெலிகாப்டர்கள் மற்றும் 40 “டைகர்" தாக்குதல் ஹெலிகாப்டர்கள் உட்பட, இராணுவத்திற்கு 138 ஹெலிகாப்டர்களை வாங்க திட்டமிடுகிறது. அந்த உடன்படிக்கையின் மதிப்பு 8.7 மில்லியன் யூரோவாக இருக்கும்.

மக்களிடையே இராணுவவாதம் மற்றும் போருக்கு எதிரான பரந்த எதிர்ப்பு நிலவுவதால், அந்த அரசாங்கம் எச்சரிக்கையோடு முன்னதாக இராணுவ செலவுகளை அதிகரிப்பதன் மீது கேள்வியை எழுப்பி இருந்தது. அந்த வெள்ளை அறிக்கையின் நோக்கமே இதை மாற்றுவதாகும்.

ஆயுத படை அமைப்பின் தலைவர் André Wüstner பேர்லின் கூட்டத்தை ஒட்டி கூறுகையில், “புதிய மூலோபாய வழிகாட்டி நெறிமுறைகளுக்கு இது சரியான நேரமாகும்,” என்றார். “தற்போதைய நெருக்கடி மற்றும் மோதல்களில் பின்வாங்குவதற்கு எதிராக இராணுவத்தை முழுமையாக ஆயுதமேந்த செய்ய" பாதுகாப்பு மந்திரி “தடையின்றி சுதந்திரமாக" இருக்க வேண்டும். இரண்டு வாரங்களுக்கு முன்னர், முனீச் பாதுகாப்பு மாநாட்டில், Wüstner, ஜேர்மனியை ஆயுதமேந்த செய்வதற்கும் மற்றும் போர் தயாரிப்புகளுக்கும் அழைப்புவிடுத்தார்.

இதே அபிப்பிராயம், அரசாங்கத்துடன் நெருக்கமாக வேலை செய்து வரும் சர்வதேச பாதுகாப்பு விவகாரங்களுக்கான ஜேர்மன் அமைப்பின் (Stiftung Wissenschaft und Politik – SWP) ஒரு உறுப்பினர் கிறிஸ்டியான் மொல்லிங்கால், Süddeutsche Zeitung இன் ஒரு விருந்தினர் பக்கத்தில் எழுதப்பட்ட கட்டுரையில் எதிரொலித்தது. “வெளிநாட்டு கொள்கையிலும், நெருக்கடியிலும் ஜேர்மன் சிப்பாய்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் டாங்கிகள் என்ன பாத்திரம் வகிக்க வேண்டுமென்பதை" அந்த வெள்ளை அறிக்கையில் வொன் டெர் லெயன் விவரிக்க வேண்டுமென அவர் எழுதினார். “பாதுகாப்பு கொள்கையின் அம்சங்கள்" “வெளி அபாயங்களை அல்ல, இராணுவத்தின் உண்மையான தகைமைகளைச்" சார்ந்தது என்று அவர் வாதிட்டார்.

புதிய சக்தி, புதிய கடமைப்பாடு: மாறும் உலகிற்கான ஜேர்மன் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கையின் உட்கூறுகள்" என்ற தலைப்பில், 2013இன் இறுதியில் SWP ஒரு மூலோபாய ஆவணத்தை வெளியிட்டது. அந்த ஆவணம் ஜேர்மன் இராணுவவாதத்திற்குத் திரும்புவதற்கான வார்ப்பு வடிவத்தை வழங்கியது. அச்சமயத்தில் ஒரு புதிய, ஆக்ரோஷமான ஜேர்மன் கொள்கை குறித்த கூட்டங்கள் இரகசியமாக நடந்து கொண்டிருந்த நிலையில், தற்போதைய வெள்ளையறிக்கை மீதான விவாதம் முழுமையாக மக்களின் பார்வைக்கு முன்னால் நடக்க உள்ளது.

வெவ்வேறு அரசு அமைப்புகள், நாடாளுமன்றம், அமைப்புகள் மற்றும் கல்வித்துறையின் வல்லுனர்களிடம் இருந்து ஒத்துழைப்பை" அவர் எதிர்நோக்குவதாக கூறி வொன் டெர் லெயன் முடித்துக் கொண்டார்.

பாதுகாப்பு மற்றும் இராணுவ கொள்கை,” “பங்காளித்தனமும் கூட்டணிகளும்,” “ஆயுத படைகள்" மற்றும் "செயல்பாட்டுக்கான தேசிய வேலைவடிவம்" ஆகிய தலைப்புகளில் இதுவரையில் நான்கு பணிக்குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. அதில் பங்கெடுப்பவர்களில் முன்னணி பாதுகாப்பு கொள்கை வகுப்பாளர்கள், இதழாளர்கள், கல்வித்துறையாளர்கள், இராணுவ நபர்கள், ஜேர்மன் மற்றும் அமெரிக்க சிந்தனை குழாம்களின் பிரதிநிதிகள் ஆகியோர் உள்ளனர்.

அவர்களில் பின்வருபவர்களும் உள்ளடங்குவர்: Internationale Politik ஆய்விதழின் தலைமை ஆசிரியர் Sylke Tempel; வெளியுறவுத்துறை அலுவலகத்தின் திட்டக்குழு தலைவர் தோமஸ் பேக்கர்; பேர்லினின் ஆயுத படைகளின் பிராந்திய நடவடிக்கைகளுக்கான கட்டளையகத்தின் தளபதி ஜெனரல் மேஜர் ஹன்ஸ்-வெர்னர் வெய்ர்மேன்; பசுமை கட்சியின் முன்னாள் பாதுகாப்பு கொள்கை செய்தி தொடர்பாளர் வின்பிரட் நாச்ட்வெ; நாடாளுமன்றத்தில் கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம்/கிறிஸ்துவ சமூக ஒன்றியத்தின் (CDU/CSU) பாதுகாப்பு கொள்கை செய்தி தொடர்பாளர் ஹென்னிங் ஒட்டெ; Die Zeit இன் முன்னாள் பாதுகாப்பு கொள்கை ஆசிரியரும், அமெரிக்க புரூகிங்ஸ் சிந்தனைக்குழாமின் ஆய்வாளருமான Constanze Stelzenmüller; பாதுகாப்பு கொள்கை மற்றும் இராணுவ படைகளைத் திட்டமிடுவதற்கான நேட்டோவின் இணை பொது செயலர் லெப்டினென்ட் ஜெனரல் Heinrich Brauß; மற்றும் ஹம்போல்ட் பல்கலைக்கழக பேராசிரியர் ஹெர்பிரட் முன்ங்லெர் ஆகியோர் ஆவர்.