World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Top French policeman investigating Charlie Hebdo shooting found dead

சார்லி ஹெப்டோ துப்பாக்கிசூட்டை விசாரித்துவந்த உயர்மட்ட பிரெஞ்சு பொலிஸ்காரர் இறந்து கிடந்தார்

By Stéphane Hugues
17 January 2015

Back to screen version

கடந்த வாரம் நடந்த சார்லி ஹெப்டோ மீதான பயங்கரவாத தாக்குதலுக்கு வெறும் ஒருசில மணி நேரத்திற்குப் பின்னர், லிமோஜ் (Limoges) நகர பிரெஞ்சு நீதித்துறை பொலிஸின் இரண்டாம் நிலை அதிகாரியான கமிஷனர் எல்ரிக் ஃப்ரேடு (Helric Fredou) சுடப்பட்டு இறந்து கிடந்தார்.

ஃப்ரேடு சார்லி ஹெப்டோ வழக்கை விசாரித்து வந்த குழுவின் பாகமாக இருந்தார். சார்லி ஹெப்டோவை தாக்கிய துப்பாக்கிதாரிகள், சாய்த் மற்றும் செரிப் கௌச்சி, லிமோஜ் ஐ சுற்றியுள்ள லிமோசான் பகுதியில் தான் அவர்களது உயர்கல்வியை பெற்றிருந்தனர்.

சார்லி ஹெப்டோ துப்பாக்கிச்சூடு நடந்த அன்று மாலையில், ஃப்ரேடு சார்லி ஹெப்டோ சம்பவத்தில் பலியானவர்களில் ஒருவரின் உறவினர்களை நேர்காணல் செய்ய அவரது அதிகாரத்தின் கீழ் இருந்த பொலிஸ் அதிகாரிகளின் ஒரு குழுவை அனுப்பியதுடன், குறுக்கு விசாரணைக்காக அவரது குழுவினர் திரும்பி வரும் வரையில் காத்திருந்தார்.

பொலிஸ் குறுக்கு விசாரணைக்குப் பின்னர் உடனடியாக, அவர் அவரது அறிக்கையை எழுதுவதற்காக பொலிஸ் தலைமையகத்தில் இரவு வெகு நேரம் தங்கியிருந்து அதை எழுத தொடங்கி இருந்தார். வியாழனன்று அதிகாலை 1 மணிக்கு அவர் உடன் வேலை செய்பவர் அவர் குண்டடிபட்டு இறந்திருப்பதைக் கண்டார்; அவர் எழுதி கொண்டிருந்த அறிக்கையும் காணவில்லை.

தேசிய பொலிஸ் ஒன்றிய "கூட்டணி" இன் பாஸ்கால் கேய்லா கூறுகையில், "நாங்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளோம். அவர் மிகவும் மனிததன்மையோடு, அனைவரோடும் நெருக்கமாக பழகக்கூடியவர்," என்றார்.

ஃப்ரேடு 44 வயது நிரம்பிய, திருமணமாகாதவர். அவரது சொந்த ஊர் லிமோஜ் என்பதுடன், அவர் லிமோஜ்க்கு வருவதற்கு முன்னர் வேர்சைல்ஸில் நீதித்துறை பொலிஸின் பிராந்திய அலுவலகத்தில் ஒரு பொலிஸ் அதிகாரியாக 1997இல் அவரது தொழில் வாழ்வைத் தொடங்கினார். Haute-Vienne இன் பாதுகாப்புத்துறை தலைவராக நியமிக்கப்படுவதற்கு முன்னர், Saint-Cyr Mont-Dore பள்ளியில் இரண்டு ஆண்டுகள் இருந்த பின்னர், 2007இல் கமிஷனர் ஆனார். பிராந்திய பொலிஸ் சேவைக்கான துணை இயக்குனராக ஆகஸ்ட் 2012இல் லிமோஜ்க்கு திரும்புவதற்கு முன்னதாக, செப்டம்பர் 2010இல், அவர் ஷேர்பூர்க் நகரில் கமிஷனராக சேவையைத் தொடங்கினார்.

அதுவொரு தற்கொலை என்றும், அவர் அவரது சொந்த கைத்துப்பாக்கியால் சுட்டுக் கொண்டதாகவும் பொலிஸ் செய்தி தொடர்பாளர்கள் கூறுகின்றனர். ஃப்ரேடு மரணம் குறித்த ஆரம்ப தகவல்களில் லிமோஜ் பொலிஸ், "அவரது நடவடிக்கைக்கான காரணங்கள் இன்னும் தெரிய வரவில்லை," என்றது.

ஆனால் அடுத்தடுத்து வந்த செய்திகள், ஃப்ரேடு "மன அழுத்தத்திற்கு உள்ளாகி இருந்ததாகவும், எரித்துக் கொள்வதற்கு நெருக்கத்தில் இருந்ததாகவும்" பொலிஸ் செய்தி தொடர்பாளர்கள் தெரிவித்ததாக குறிப்பிட்டன. லிமோஜ் பல்கலைக்கழக மருத்துவமனையில் நடத்தப்பட்ட ஒரு பிரேத பரிசோதனை அது தற்கொலை என்பதை உறுதிப்படுத்தியது. இதை சார்லி ஹெப்டோ வழக்குடன் இணைக்கக்கூடாது என்று பிரெஞ்சு பொலிஸ் தெரிவித்தது.

ஓராண்டுக்கு முன்னர், லிமோஜ் நீதித்துறை பொலிஸின் மூன்றாம் நிலை அதிகாரியும் இதேபோன்ற சூழலில் இறந்து கிடந்ததை ஃப்ரேடுவே வெளிப்படையாக கண்டார். அந்த இறப்பும் ஒரு தற்கொலை என்று முடிவு செய்யப்பட்டது.

வித்தியாசமின்றி, பிரெஞ்சு ஊடகங்கள் ஃப்ரேடுவின் இறப்பு செய்தியைப் இருட்டடிப்பு செய்தன. அவரது இறப்பு குறித்து பிரெஞ்சு பத்திரிகைகளில் வெறும் மூன்று அல்லது நான்கு கட்டுரைகளே வெளியாகி உள்ளன, Le Parisien இல் வெளியான ஒரு சிறிய துணுக்கைத் தவிர ஏனையவை அனைத்தும் சிறிய பிராந்திய பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியாயின. ஆனால் முரண்பட்ட விதத்தில், ஆங்கிலம், ஜேர்மன் மற்றும் துருக்கிய மொழி ஊடகங்களில் அந்த விடயம் டஜன் கணக்கான கட்டுரைகளில் காணப்படுகின்றன, அவற்றில் பல ஃப்ரீடொ இறப்பை சந்தேகத்திற்குரியதாக வர்ணிக்கின்றன.