World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : கிரீஸ்

Greek bailout deal highlights monumental scale of Syriza betrayal

கிரேக்க பிணையெடுப்பு உடன்படிக்கை சிரிசா காட்டிக்கொடுப்பின் மாபெரும் அளவை எடுத்துக்காட்டுகிறது

By Chris Marsden
14 July 2015

Back to screen version

கிரீஸை நடைமுறைரீதியில் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு காலனியாக மாற்றுகின்ற மற்றும் அந்நாட்டை ஜேர்மனியின் கட்டளைகளின் கீழ் நிறுத்துகின்ற ஓர் உடன்படிக்கையில் பிரதம மந்திரி அலெக்சிஸ் சிப்ராஸ் கையெழுத்திட்டுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து வாங்கிய கடன்களைத் தொடர்ந்து, அது திரும்பி செலுத்தும் வகையில், கிரேக்க பொருளாதாரத்தில் என்ன மிஞ்சியிருக்கிறதோ, அனைத்திற்கும் மேலாக அதன் மிகவும் மதிப்புடைய சொத்துக்கள் சூறையாடப்பட உள்ளன.

கிரீஸ், ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் நிறுத்தப்பட உள்ளது. கிரீஸ் நாடாளுமன்றத்தின் செயல்பாடு, நிஜமான அதிகாரத்தை புருசெல்ஸ் மற்றும் பேர்லினுக்கு மாற்றும் ஒப்புதல் முத்திரை குத்தும் வேலையாக இருக்கப் போகிறது. ஜேர்மன் ஏகாதிபத்தியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கோரிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்காக, புதன்கிழமை வரையில் தொடர்ச்சியான சட்டங்களை அது நிறைவேற்ற வேண்டி இருக்கும்.

சிக்கன நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வரும் ஒரு வாக்குறுதியின் அடிப்படையில்தான் சிரிசா வெறும் ஆறு மாதங்களுக்கு முன்னர் தேர்ந்தெடுக்கப்பட்டது, அது பிரதியீடு செய்த புதிய ஜனநாயகம் மற்றும் PASOK இன் அரசாங்கத்தால் ஒப்புக்கொள்ளப்பட்ட சிக்கன நடவடிக்கைகளையே கடந்து செல்லும் அளவிலான நடவடிக்கைகளுக்கு, பெரும்பான்மை நாடாளுமன்ற நிர்வாகிகளின் ஒப்புதலை அது பெற்றாக வேண்டும்.

அவர் வெகுஜன வாக்கெடுப்புக்கு அழைப்புவிடுத்து, அதில் மேற்கொண்டு வெட்டுக்கள் "வேண்டாம்" என்பதற்காக மூன்றில்-இரண்டு பங்கு ஆதரவைப் பெற்ற ஒருசில நாட்களிலேயே, சிப்ராஸ், கிரேக்க மக்களை ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் தயவில் நிறுத்துவதற்காக "வேண்டும்" என்று பிரச்சாரத்தை முன்னெடுத்த அதே கட்சிகளுடன் ஒரு கூட்டணியை உருவாக்க திட்டங்களை வகுத்து வருகிறார். இரண்டாம் உலக போர் ஒத்துழைப்புவாத தலைவர்கள் பெத்தான் மற்றும் குஸ்லிங்கிற்கு சமாந்தரமாக 21ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்தவர்கள் என்பதாக அவர் வரலாற்றில் பெயர்பெறுவர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் மற்றும் அதற்காக பேசும் வங்கிகளின் கட்டளைகளின் கீழ் ஏற்கனவே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மில்லியன் கணக்கான உழைக்கும் மக்கள் மீது நிரந்தரமாக மற்றும் இன்னும் மூர்க்கமாக சிக்கன நடவடிக்கைகளைத் திணிப்பதற்குப் கைமாறாக, சிப்ராஸ், இன்றைய நிதியியல் சர்வாதிகாரத்தின் யதார்த்தத்தையும் மற்றும் நாளைய கடும் நெருக்கடியின் உத்தரவாதங்களையும் தவிர வேறொன்றையும் அதிகமாக பெறவில்லை.

யூரோ மண்டல தலைவர்களின் ஆவணம் அசாதாரண வாசகங்களைக் கொண்டுள்ளது. அதை ஒழுங்கமைக்க 17 மணிநேரங்கள் ஆனது, அதன் அர்த்தம் சிப்ராஸ் கடைசி நேர போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தார் என்பதனால் அல்ல. மாறாக ஏனென்றால் சரணடைவதற்கான நிபந்தனைகளின் ஒவ்வொரு முற்றுப்புள்ளியும், காற்புள்ளியும் கூட எழுதப்பட்டாக வேண்டுமென ஜேர்மனி வலியுறுத்தியதனால் ஆகும்.

கிரேக்க நிர்வாகத்தை அரசியலற்றதாக ஆக்குவதற்கான" ஒரு முன்மொழிவு என்பது சிக்கன நடவடிக்கைகள் மற்றும் தனியார்மயமாக்கல் மீதான எல்லா முடிவுகளும் ஐரோப்பிய ஒன்றியத்தால் நியமிக்கப்பட்ட மேற்பார்வையாளர்களது விசாரணைகளின் கீழ் வரும் என்று அர்த்தமாகிறது. இந்த அமுலாக்க அதிகாரிகளால் எதிர்கால எல்லா சட்டங்களையும் தடையாணைக் கொண்டு தடுக்க முடியும் என்பதோடு, அதேவேளையில் புதிய சிக்கன உடன்படிக்கையின் நிபந்தனைகளுக்கு முரணாக கருதப்படும் பதவியேற்றதிலிருந்து சிரிசா நிறைவேற்றிய சட்டமசோதாவையும் இரத்து செய்யும்.

வரிவிதிப்பு, ஓய்வூதியங்கள், தொழிலாளர் சந்தை மற்றும் தனியார்மயமாக்கல் மீது அங்கே சிரிசாவின் எந்தவொரு "அபாய பகுதியும்", எந்தவொரு விடயத்திலும், இருக்காது.

மேம்படுத்தப்பட்ட அரசு நிர்வாகத்துடன் கணிசமான அளவிற்கு குறைக்கப்பட்ட தனியார்மயமாக்கல் திட்டம்" என்பது, "மதிப்புடைய கிரேக்க சொத்துக்கள் ஒரு சுதந்திர நிதியத்திற்கு மாற்றப்படும், அது அந்த சொத்துக்களை நிதியமயப்படுத்தும் (அதாவது விற்கப்படும்)...” அந்த நிதியம் ஏதென்ஸில் இருந்து செயல்பட்டாலும், “சம்பந்தப்பட்ட ஐரோப்பிய அமைப்புகளின் மேற்பார்வையின் கீழ் இருக்கும் என்பதே அர்த்தமாகிறது.

"நிர்ணயிக்கப்பட்ட பிரதான உபரி இலக்குகளில் இருந்து விலகி செல்லும்பட்சத்தில், பகுதியாக-தன்னியல்பாகவே செலவின வெட்டுக்களைக்" கொண்டு செல்வதற்கு அந்த ஆவணம் அழைப்புவிடுக்கிறது. அதாவது கிரீஸ் அதன் கடன் மீது வட்டி செலுத்திய பின்னரும் கூட, ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொன்றுக்கும் அரசு செலவிடுவதை விடவும் அதிகமான வருவாய்களை அது கூடுதலாக ஈட்ட வேண்டியிருக்கும்.

எதிர்பார்க்கப்படும் பொருளாதார நடவடிக்கைகளின் விபரங்கள் அசாதாரணமாக உள்ளதுடன், “ஞாயிற்றுகிழமை பணிபுரிதல், விற்பனைக் காலங்கள், மருந்துக்கடை உரிமை, பால் மற்றும் பேக்கரிகள் நேரடி மருந்து பொருள் விற்பனைகள்" மீதான நிபந்தனைகளும் அவற்றில் உள்ளடங்குகின்றன. இதில் "பரந்த-முக்கியத்துவம் மிக்க கைத்திறன்சார் தொழில்களை" திறந்துவிடுதல் (சான்றாக கப்பல்போக்குவரத்து), “மின்விநியோக வலையமைப்பு சேவையை (ADMIE) தனியார்மயமாக்குவதலும் அடங்கும்-ற்கு".

கூட்டு பேரம்பேசல் மற்றும் வேலைநிறுத்தங்கள் மீதான தடைகள் மற்றும் வேலைநீக்கங்களுக்கு எதிரான பாதுகாப்புகளை நீக்குதல் உட்பட தொழிலாள வர்க்கத்தை நேரடியாக தாக்கும் நடவடிக்கைகள், “தொழிலாளர் சந்தையை தாராளமயமாக்குதல்" என்ற தலைப்பின் கீழ் வகைப்படுத்தப்படுகின்றன. “சம்பந்தப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய வழிகாட்டல்கள் மற்றும் சிறந்த நடைமுறைகள், ஒட்டுமொத்த பணிநீக்கங்கள் ஆகியவற்றோடு இணைந்த விதத்தில் கூட்டு பேரம்பேசல், தொழில்துறை நடவடிக்கை மீது கடுமையான மீளாய்வுகளும் மற்றும் நவீனமயப்படுத்தல்களும்" அவற்றில் உள்ளடங்கி உள்ளது.

"வருவாயை உயர்த்துவதற்காக மதிப்புக்கூட்டு வரிமுறையைச் சீர்செய்வதற்கும் மற்றும் வரி அடித்தளத்தை பரந்தளவில் மாற்றுவதற்கும்" மற்றும் ஓய்வூதியத்திற்காக ஓய்வூபெறும் வயதை 2022க்குள் 67 ஆக உயர்த்துவதும் மற்றும் 2019 இறுதிக்குள் மிகவறிய ஓய்வூதியதாரர்களுக்கு படிப்படியாக சலுகைகளைக் குறைப்பதற்கும் நாடாளுமன்றம் ஒப்புக்கொள்ள வேண்டும்.

ஜேர்மன் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு முதலீட்டு வங்கியைக் கொண்டு, லுக்செம்பேர்க்கிலிருந்து நிர்வகிக்கும் புதிய தனியார்மயமாக்கல் நிதியத்திற்கான முன்மொழிவே, ஜேர்மனியின் நிஜமான பரிந்துரையாகும். கிரீஸிற்கான ஏனைய "விட்டுக்கொடுப்புகள்" என்று கருதத்தக்கவை என்னவென்றால் 50 பில்லியன் யூரோ மதிப்பிலான நிதியின் ஒரு குறிப்பிடத்தக்க தொகையில் 50 சதவீதம் கிரீஸ் வங்கிகளை மீள்மூலதனமயமாக்குவதற்கும், 25 சதவீதம் கிரீஸின் கடன்வழங்குனர்களுக்கு திரும்ப செலுத்துவதற்கும், மற்றும் 25 சதவீதம் கிரீஸில் முதலீடுகளுக்கும் பகுத்தளிக்கப்படும்.

இது அவரது "போராட்டம் இறுதியில் வென்றதற்கு" நிரூபணமாக சிப்ராஸால் பெருமையடிக்கப்பட்டு வருகிறது. “பொது சொத்துக்களை வெளிநாட்டிற்கு கொண்டு செல்வதை நாங்கள் தடுத்துவிட்டோம், நிதியியல் திணறலை மற்றும் நிதியியல் அமைப்புமுறையின் பொறிவை நாங்கள் தடுத்துவிட்டோம், [மேலும்] கடன் சீர்திருத்தங்களில் மற்றும் மத்தியகால நிதியியல் நடைமுறைகளில் எங்களால் ஆதாயங்களைப் பெற முடிந்திருக்கிறது,” என்று வாதிடுமளவிற்கு அவர் சென்றார்.   

இது மொத்தமும் பொய்கள்.

சொத்துக்கள் இனிமேலும் நாட்டிலிருந்து வெளியே எடுத்துச் செல்லப்படும், குற்றகர நடவடிக்கைக்குரிய இடம் மட்டுமே மாற்றப்பட்டுள்ளது. அனைத்திற்கும் மேலாக, கிரீஸ் அதன் சொந்த கடன்களுக்கு தனியார்மயமாக்கலின் மூலமாக நிதி வழங்கும் என்பதே இன்றுவரையில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள ஒரேயொரு விடயமாகும். வெளியிலிருந்து நிதியுதவிகள் எதுவும் வரவில்லை, ஒரு மூன்றாவது பிணையெடுப்புக்கான பேச்சுவார்த்தைகளுக்கு மட்டுமே உறுதியளிக்கப்பட்டுள்ளது.

யூரோ மண்டல அரசாங்க தலைவர்களின் அறிக்கை வலியுறுத்துகையில், “கடன் மீது பெயரளவிற்கான குறைப்பைச் செய்ய முடியாது,” "கிரேக்க அதிகாரிகள் அவர்களின் கடன்வழங்குனர்களுக்கான நிதியியல் கடமைப்பாடுகளை முழுமையாக நிறைவேற்றுவதற்கு அவர்கள் தங்குதடையின்றி பொறுப்பேற்றிருக்கிறார்கள் என்பதை நேரத்திற்கேற்ப எடுத்துக்காட்ட வேண்டும்" என்கிறது.

"நீண்டகால தயவு மற்றும் திரும்பி செலுத்துவதற்கான காலம்" போன்ற "அதுவும் அவசியமானால், அத்தகைய சாத்தியமான கூடுதல் நடவடிக்கைகளைப் பரிசீலிப்பது" என்பது தான் உண்மையில் யூரோ மண்டல தலைவர்களால் வாக்குறுதி அளிக்கப்படுகிறது.

அந்த அமைப்புகளால் மதிப்பிடப்பட்டதைப் போல, 82 பில்லியன் யூரோ மற்றும் 86 பில்லியன் யூரோவிற்கும் இடையே நிதிவழங்கும் அவசியங்கள் குறித்த சாத்தியமான திட்டம் குறித்து" அந்த அறிக்கை கவனமெடுக்கிறது. ஆனால் அதற்காக எதுவும் செய்யாமல், "ஒரு மாற்று நிதிய வழியில் அல்லது அதிக தனியார்மயமாக்கல் வழிமுறைகளைக் கொண்டு, நிதிய தொகுப்பைக் குறைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டுமென" பின்னர் அது "அமைப்புகளைக் கேட்டுக் கொள்கிறது.”

வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சொத்துக்களை விற்கும் தற்போதைய சுற்று வெறும் ஆரம்பம் மட்டுமே என்றாகிறது. கார்டியனில் லாரி எலியோட் குறிப்பிடுவதைப் போல, “உண்மையில், அடுத்த மூன்று ஆண்டுகளில் தனியார்மயமாக்கல் மூலமாக கிரீஸ் 50 பில்லியன் யூரோவைப் பெறுவதற்கான தொலைதூர சாத்தியக்கூறு கூட அங்கே இல்லை. இந்த 50 பில்லியன் யூரோ இலக்கு முதலில் 2011 இல் தான் அறிவிக்கப்பட்டது, அப்போதிருந்து கிரேக்க பங்குச்சந்தையின் மதிப்பு 40 சதவீத அளவிற்கு வீழ்ந்துள்ளது. அதனால் அதன் சொத்துக்களின் மதிப்பு மிகவும் குறைந்து போயுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில், தனியார்மயமாக்கல் வழிமுறைகள் வெறும் 3 பில்லியன் யூரோவையே கொண்டு வந்துள்ளன.”

ஜூலை 20 அளவில் 7 பில்லியன் யூரோவும் மற்றும் ஆகஸ்டில் 5 பில்லியன் யூரோவிற்கு அதிகமாக கிரீஸின் "அவசரகால நிதியியில் தேவைகள்" இருக்குமென்பதை அந்த ஆவணம் "கவனத்தில் எடுக்கிறது". இந்த ஆரம்ப தொகைக்கு கைமாறாக தான், சிப்ராஸ் அவரது அரசாங்கத்தை அதன் ஓட்டத்திற்குள் முடுக்கிவிட வேண்டும், அல்லது, அனேகமாக அதிகளவில் சாத்தியமாக கூடிய வகையில், ஒரு தேசிய ஐக்கிய அரசாங்கம் உருவாக்குவதில் போய் முடியும் ஒரு மோதலைத் தொடங்கிவிட வேண்டும் என்ற பொறுப்பு சிப்ராஸிற்கு கொடுக்கப்பட்டுள்ளது.

மதிப்புக்கூட்டு வரி உயர்வுகள், ஓய்வூதிய மாற்றங்கள், அந்நாட்டின் தேசிய புள்ளிவிபரங்கள் ஆணையத்தைச் சுதந்திரமாக்குவது மற்றும் "நிதிய உறுதிப்படுத்தல்" (fiscal consolidation) நடவடிக்கைகளுக்கு நாடாளுமன்றம் உடன்படுமாறு செய்வதைப் பொறுத்த வரையில், அதை செய்வதற்கு அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் இறுதிக்கெடு, புதனன்று இரவாகும். அதுவரையில், கிரேக்க வங்கிகளை மூடி வைத்திருக்க மற்றும் அது கூறியதைப் போலவே அது நடந்து கொள்ளும் வரையில் அந்நாட்டை முடக்கி வைத்திருக்க செய்து, கிரேக்க வங்கிகளின் தற்போதைய கடனான 89 பில்லியன் யூரோக்களை அவற்றின் வாழ்வாதாரத்தை பேணுவதற்கு மட்டும் ஐரோப்பிய மத்திய வங்கி உடன்பட்டுள்ளது.

இந்த நிபந்தனைகளின் மீது ஓர் உடன்படிக்கை எட்டப்பட்டால், கிரீஸின் ஒட்டுமொத்த கடன் 400 பில்லியன் யூரோவாக உயரும், இது அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தற்போதைய 175 சதவீத மட்டத்துடன் ஒப்பிடுகையில் 200 சதவீதமாகும். இதற்கு முந்தைய கடனே கூட நிச்சயமற்று இருப்பதாகவும், ஒருபோதும் திரும்ப செலுத்தப்படாமலேயே போகக்கூடும் என்பதையும் சர்வதேச நாணய நிதியம் இந்த மாத தொடக்கத்தில் ஒப்புக்கொண்டது.

சிப்ராஸ் ஏற்கனவே அவரது நாடாளுமன்ற பெரும்பான்மையை ஒருமுறை இழந்துள்ளார். வலதுசாரி தேசியவாத சுதந்திர கிரேக்கர்கள் கட்சியுடனான கூட்டணியில், 300 நாடாளுமன்ற இடங்களில் அவருக்கு 162 இடங்களே உள்ளன. இந்நிலையில் வெறுமனே பேசி முடிக்கப்பட்டிருக்கும் பேச்சுவார்த்தைகளின் மீது ஒப்புதலைப் பெறுவதற்காக வெள்ளியன்று நடத்தப்பட்ட வாக்கெடுப்பை சிரிசாவின் எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்தனர், இரண்டு பேர் "வேண்டாம்" என்று வாக்களித்தனர், ஏழு பேர் அதில் கலந்து கொள்ளவே இல்லை.

சுதந்திர கிரேக்கர்கள் கட்சி அந்த உடன்படிக்கையை ஆதரிக்கப் போவதில்லை என்றும் ஆனால் அரசாங்கத்தில் தொடர்ந்து இருக்குமென்றும் தெரிவித்துள்ளது. ஆனால் இது மாறக்கூடியதாகும்.

இதற்கும் கூடுதலாக, அவர்களது சீரழிந்துபோன நற்பெயரை மீட்டெடுக்கும் ஒரு முயற்சியாக, சிரிசாவின் இடது தளத்தில் உள்ள அனைத்தும் அல்லது சில பிரிவுகள் அந்த முன்மொழிவுகளுக்கு எதிராக வாக்கிடுவதே விவேகமான நடவடிக்கையாக உணரக்கூடும், அனேகமாக சிப்ராஸால் அவர்கள் வெளியேற்றப்படலாம். இத்தகைய சூழல்களின்கீழ், சிப்ராஸ் ஒன்று To Potami மற்றும் PASOK உடன் ஒரு புதிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கோ, அல்லது புதிய தேர்தல்களுக்கு முன்னதாக புதிய ஜனநாயகம் கட்சி உள்ளடங்கிய ஒரு முழு அளவிலான தேசிய ஐக்கிய நிர்வாகத்தை உருவாக்குவதற்கோ பரிந்துரை செய்யலாம்.

நாடாளுமன்ற கணக்குகள் ஒருபுறமிருக்கட்டும், சம்பந்தப்பட்டுள்ள உழைக்கும் மக்கள் மீதான கூர்மையான தாக்குதலின் அளவு தவிர்க்கவியலாமல் சிரிசாவின் காட்டிக்கொடுப்புக்கு எதிராக பாரிய எதிர்ப்பைத் தூண்டிவிடும். அபிவிருத்தி அடைய உள்ள எதிர்விளைவை அனுமானித்து, உள்துறை பணியாளர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு Adedy, புதனன்று வாக்கெடுப்பு நடைபெற உள்ள அதே நாளில் நாடாளுமன்ற பொருளாதார சீர்திருத்தங்களுக்கு எதிராக 24 மணிநேர வேலைநிறுத்தத்திற்கு அழைப்புவிடுத்துள்ளது.