World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France, Japan boost military ties directed against China

பிரான்ஸூம் ஜப்பானும் சீனாவிற்கு எதிராக நோக்கங்கொண்ட இராணுவ உறவுகளை ஊக்குவிக்கின்றன

By Kumaran Ira
16 March 2015

Back to screen version

வெள்ளியன்று டோக்கியோவிற்கு விஜயம் செய்த பிரான்ஸின் வெளியுறவு மற்றும் பாதுகாப்புத்துறை மந்திரிமார்கள், இராஜாங்க மற்றும் தேசிய பாதுகாப்பு பிரச்சினைகள் மீது "இருவருக்கு இருவர்" பேச்சுவார்த்தைகள் நடத்திய பின்னர், அவர்களின் ஜப்பானிய சமதரப்பினருடன் உடன்படிக்கைகளில் கையெழுத்திட்டனர். பிரான்ஸ் இதுபோன்றவொரு இராஜாங்க-இராணுவ பரிவர்த்தனை செய்து கொண்ட ஒரே ஆசிய நாடு ஜப்பானாகும்.

அந்த உடன்படிக்கை பரந்த இராணுவ கூட்டு-ஒத்துழைப்பு மற்றும் பயங்கரவாத-எதிர்ப்பு முயற்சிகளை அதிகரிக்க பாரீஸ் மற்றும் டோக்கியோவை அனுமதிக்கிறது. “அது எமது கூட்டுறவிற்கு கட்டமைப்பை அமைக்கும்,” என்று கூறி, பிரெஞ்சு வெளியுறவுத்துறை மந்திரி லோரன்ட் ஃபாபியுஸ் அந்த உடன்படிக்கையைப் பாராட்டினார். ஃபாபியுஸ் கருத்துப்படி, பிரான்ஸூம் ஜப்பானும் "டிரோன் அமைப்புமுறைகள், ஹெலிகாப்டர்கள் மற்றும் விண்வெளி துறை" உட்பட ஆயுத தொழில்நுட்ப அபிவிருத்தியின் மீது ஒன்றுக்கொன்று ஒத்துழைப்பு வழங்கும்.

பிரெஞ்சு பாதுகாப்பு மந்திரி ஜோன்-ஈவ் லு திரியோன் கூறுகையில், “பிரான்ஸூக்கும் ஜப்பானுக்கும் நிறைய பொதுவான அம்சங்கள் உள்ளன,” என்றார். கண்ணிவெடி அகற்றும் தொழில்நுட்பத்தில் ஒத்துழைக்கவும் பரிந்துரைத்த அவர் தொடர்ந்து கூறுகையில், “நாங்கள் இரண்டு நாடுகளுமே கடல்சார் நாடுகள், மேலும் இந்த துறையில் எங்களிடம் உயர் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளன. நாங்கள் ஒருங்கிணைந்து இரண்டு தரப்பிலும் வெல்வதற்கான தீர்வை எங்களால் காண முடியும்,” என்றார்.

ஜப்பானிய வெளியுறவுத்துறை மந்திரி புமியோ கிஷிடா கூறுகையில், “எங்களால் பரஸ்பர பாதுகாப்பை மற்றும் பாதுகாப்பு கூட்டு-ஒத்துழைப்பை ஒரு படி முன்னோக்கி கொண்டு வர முடிந்திருக்கிறது. நாங்கள் குறிப்பிட்ட கூட்டு-ஒத்துழைப்பு திட்டங்களில் உடன்பட்டிருப்பது ஒரு பிரதான சாதனையாகும்,” என்றார்.

அவற்றின் ஆயுத படைகளுக்கு இடையிலான தளவாடங்களின் பரிமாற்றத்தில் கூட்டு-ஒத்துழைப்பை அனுமதிக்கும் வகையில் பிரான்ஸூம் ஜப்பானும், கொள்முதல் மற்றும் ஒன்றுக்கொன்று சேவையளித்தல் உடன்படிக்கையை (ACSA) முடிவுக்குக் கொண்டு வருவதை நோக்கி வேலை செய்யவும் சூளுரைத்தன. ஜப்பான் ஏற்கனவே அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் பிரிட்டனுடன் ACSAகளில் கையெழுத்திட்டுள்ளது.

ஜப்பானும் பிரான்ஸூம் ஆபிரிக்காவில் ஒத்துழைக்க உடன்பட்டதற்குப் பின்னர் இந்த இராணுவ உடன்படிக்கை வருகிறது. அங்கே (ஆபிரிக்காவில்) பிரெஞ்சு ஏகாதிபத்தியம் ஏற்கனவே அதன் பல முன்னாள் காலனி நாடுகளில், தற்போது மாலி மற்றும் மத்திய ஆபிரிக்க குடியரசில் (CAR), இராணுவ தலையீடுகளை நடத்தி வருகிறது. பாரீஸில் கடந்த ஆண்டு நடந்த அவற்றின் முதல் "இருவருக்கு இருவர்" பேச்சுவார்த்தைகளின் போது, டோக்கியோ ஆபிரிக்காவில் சீனாவின் அதிகரித்து வரும் செல்வாக்கை அழிக்கும் நோக்கில், பிரெஞ்சு இராணுவ தலையீடுகளை ஆதரிக்க வாக்குறுதி அளித்தது. (பார்க்கவும்: France, Japan form alliance targeting Chinese influence in Africa)

ஜப்பானுடன் ஓர் இராணுவ கூட்டணியை ஏற்படுத்துவதன் மூலமாக, பிரான்ஸ் ஒபாமா நிர்வாகத்தின் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பால்" உந்தப்பட்ட, தீவிரமடைந்து வரும் ஆசிய பதட்டங்களுக்கு மேற்கொண்டு எண்ணெய் வார்க்கிறது. சீனாவைத் தனிமைப்படுத்தி, சீனாவுடனான போருக்கு தயாரிப்பு செய்யும் நோக்கில், ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் ஏனைய பிராந்திய சக்திகளுடன் ஓர் இராணுவ-மூலோபாய கூட்டணியைப் பலப்படுத்த வாஷிங்டன் முயன்று வருகின்ற நிலையில், ஜப்பானும் சீனாவும் கிழக்கு சீன கடலில் சென்காயு/தியாவு தீவுகளின் மீது ஒரு கடுமையான இராணுவ மோதல்நிலையில் சிக்குண்டுள்ளன.

அதன் இராணுவ ஆயுதங்களை ஏற்றுமதி செய்யவும், இராணுவ உறவுகளை ஏற்படுத்தி கொள்ளவும் மற்றும் போர்களை நடத்தவும் டோக்கியோவை அனுமதிக்கும் வகையில், ஜப்பான் அதன் போருக்குப் பிந்தைய அமைதிவாத கொள்கையை மற்றும் இராணுவ படை பிரயோகத்தின் மீதான அரசியலமைப்பு கட்டுப்பாடுகளை முடிவுக்குக் கொண்டு வரவும் நகர்ந்து வருகிறது. 1945க்குப் பின்னர் அன்னிய நாடுகளுடன் இராணுவம் சண்டையிடுவதைத் தடுத்திருந்த ஒரு தடையை நீக்க, கடந்த ஜூலையில் ஜப்பானிய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது. அது ஜப்பானிய இராணுவவாதத்தின் புதுப்பிப்புக்கு சாட்சியம் கூறும் மிகவும் வியத்தகு கொள்கை மாற்றாக இருந்தது.

ஜப்பானிய இராணுவவாதத்தின் புதுப்பிப்பானது, 1930கள் மற்றும் 1940களின் போது ஆசியாவில் ஜப்பானிய ஏகாதிபத்தியத்தால் நடத்தப்பட்ட குற்றங்கள் மற்றும் அட்டூழியங்களை மூடிமறைக்க டோக்கியோவால் அதிகரிக்கப்பட்ட முயற்சிகளில் உள்ளடங்கி உள்ளது. இது சீனா மற்றும் கொரியா உட்பட ஜப்பானால் ஆக்கிரமிக்கப்பட்ட நாடுகளில் இருந்து தீவிரமான போராட்டங்களையும், விமர்சனங்களையும் கொண்டு வந்திருந்தது.

ஜப்பானுடனும் மற்றும் ஒபாமாவின் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பு" உடனும் பிரான்ஸ் அணிசேர்வதானது, ஐரோப்பிய சக்திகளுக்கு இடையே—அதுவும் குறிப்பாக சீனாவுடன் பெரும் வர்த்தக உறவுகளைக் கொண்டுள்ள ஜேர்மனிக்கும் பிரான்ஸிற்கும் இடையே—மேலெழுந்துவரும் கணிசமான முரண்பாடுகளைக் குறித்துக் காட்டுகிறது. சீனா மற்றும் ஜேர்மனிக்கு இடையே ஆண்டு வர்த்தக பரிவர்த்தனை பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் இத்தாலி ஒருங்கிணைந்த சீன வர்த்தகத்தை விட அதிகமாகும்.

ஜப்பானிய ஏகாதிபத்தியத்தின் குற்றங்களை மூடிமறைக்கும் ஜப்பானிய பிரதம மந்திரி ஷின்ஜோ அபேயின் முடிவைக் குறித்து பிரெஞ்சு அதிகாரிகள் பகிரங்கமாக எந்த கருத்தும் கூறவில்லை என்ற நிலையில், ஜேர்மன் அதிகாரிகளோ வேறுபட்ட பாதையை எடுத்து வருகிறார்கள். மீள்ஆயுதமேந்தல் மற்றும் இராணுவவாதத்திற்கு சட்டப்பூர்வ தன்மையைக் கொடுக்கும் அதன் சொந்த திட்டத்தை பேர்லின் நடத்தி வருகின்ற நிலையில், ஓர் இராணுவ வெளியுறவு கொள்கையை மீண்டும் உறுதி செய்வதற்கு ஒரு மூடிமறைப்பாக டோக்கியோ அதன் போர்கால குற்றங்களுக்கு பிராயச்சித்தம் தேடுவதே சிறப்பாக இருக்குமென பேர்லின் அதை எச்சரித்து வருகிறது.

டோக்கியோவிற்கு கடந்த வாரம் விஜயம் செய்த ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல், ஜப்பான் அதன் கடந்துபோன போர் காலத்திற்கேற்ப அதன் மனப்போக்கை மாற்றிக் கொள்ளுமாறு அதை வலியுறுத்தினார். டோக்கியோவில் கடந்த திங்களன்று Asahi Shimbun நாளிதழின் தலைமையகத்தில் உரையாற்றுகையில், மேர்க்கெல் கூறினார், 1945க்குப் பின்னர் சர்வதேச சமூகத்திற்குள் ஜேர்மனி ஏற்றுக் கொள்ளப்பட சாத்தியமானது, ஏனென்றால் அந்நாடு அதன் கடந்தகால பிரச்சினைகளை கையாண்டிருந்தது என்றார்.

ஜப்பானிய பிரதம மந்திரி ஷின்ஜோ அபே உடனான ஒரு கூட்டத்தைத் தொடர்ந்து, மேர்க்கெல் ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் பேசுகையில் போர்கால வரலாறுக்கு தீர்வுகாண்பதே "நல்லிணக்கத்திற்கான முன்நிபந்தனையாகும்" என்றார்.

அது Kishidaவிடம் இருந்து ஒரு கூர்மையான எதிருரையைக் கொண்டு வந்தது, அவர் மேர்க்கெலின் கருத்தைப் "பொருத்தமற்றதாக" கூறி நிராகரித்தார்.