World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Why is the US whitewashing Sri Lankan war crimes?

கொழும்பில் சோ... / .வை.எஸ்.எஸ்.. கூட்டம்

அமெரிக்கா இலங்கை போர் குற்றங்களை மூடி மறைப்பது ஏன்?

5 October 2015

Back to screen version

சோசலிச சமத்துவக் கட்சி (சோ...) மற்றும் சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் (.வை.எஸ்.எஸ்..) அமைப்பும், சமீபத்தில் .நா. மனித உரிமைகள் பேரவையில் (UNHRC) நிறைவேற்றப்பட்ட, இலங்கை மீது அமெரிக்கா முன்வைத்த தீர்மானத்தின் தாக்கங்கள் பற்றி கலந்துரையாட, கொழும்பில் அக்டோபர் 14 அன்று ஒரு பொதுக்கூட்டத்தை நடத்துகின்றன. தீவின் 26 ஆண்டுகால இனவாத மோதலின் போது இலங்கை இராணுவம் செய்த அட்டூழியங்களை மூடி மறைப்பதற்கு கொழும்பு அரசாங்கத்துடன் ஒரு பிற்போக்கான சதித்திட்டத்தில் வாஷிங்டன் ஈடுபட்டுள்ளது.

அமெரிக்கா தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான முன்னாள் இலங்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் யுத்தத்தை ஆதரித்ததோடு 2009ல் யுத்தத்தின் இறுதி மாதங்களில், இராணுவத்தின் யுத்த குற்றங்களை அலட்சியம் செய்துவந்தது. பெய்ஜிங் உடனான ராஜபக்ஷ அரசாங்கத்தின் உறவுக்கு முடிவுகட்டுமாறு அவரை நெருக்கும் ஒரு வழிமுறையாக மட்டுமே வாஷிங்டன் பாசாங்குத்தனமாக "மனித உரிமைகள் பிரச்சினையைதூக்கிப் பிடிக்கத் தொடங்கியது.

இந்த ஆண்டு, கொழும்பில் "ஆட்சி மாற்றத்திற்குத்" திரும்பிய அமெரிக்கா, ஜனவரி மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன மூலம் இராஜபக்ஷவை அகற்றுவதற்கு ஆதரவளித்தது. சிறிசேனவின் அரசாங்கம் வெளிநாட்டு கொள்கையை துரிதமாக பெய்ஜிங்கில் இருந்து வாஷிங்டன் பக்கம் திருப்பிபயது. யு.என்.எச்.ஆர்.சி. தீர்மானம் அதன் ஒரு கைம்மாறாகும்.

அமெரிக்கா சர்வதேச மனித உரிமை மீறல் விசாரணைக்கான அதன் முன்னைய கோரிக்கையை கைவிட்டது. புதிய தீர்மானமானது இலங்கை அரசாங்கம் அதன் சொந்த உள்நாட்டு விசாரணைய நடத்த அனுமதிக்கின்றது. அதன் மூலம் போர் குற்றங்களில் சம்பந்தப்பட்ட அநேகமானவர்களை அல்லது எல்லோரையும் மிகவும் கெளரவமாக விடுவித்துவிட அதனால் முடியும். போரின் இறுதி கட்டத்தில் மட்டும் ஆயிரக் கணக்கான தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்று .நா. மதிப்பீடு தெரிவித்துள்ளது.

தனது சொந்த பூகோள-அரசியல் நலன்களை முன்னெடுக்க இராஜதந்திர சூழ்ச்சிகள் மற்றும் குற்றவியல் போர்களுக்கு சாக்குப் போக்காக "மனித உரிமைகள்" பிரச்சினைகளை அமெரிக்க ஏகாதிபத்தியம் இழிந்த முறையில் பயன்படுத்திக்கொள்வது பற்றிய மற்றொரு தெளிவான காட்சிப்படுத்தலே இது. இலங்கை அரசாங்கம் யு.என்.எச்.ஆர்.சி. தீர்மானத்தை "நாட்டுக்கு பெரும் வெற்றி" என பாராட்டியது. உண்மையில் அரசாங்கமானது இலங்கை மற்றும் சர்வதேச உழைக்கும் மக்களுக்கு பெரும் ஆபத்துக்களை உருவாக்கும் அமெரிக்க போர்த் திட்டங்களின் பின்னால் அணிசேர்ந்துள்ளது.

சோ.../.வை.எஸ்.எஸ்.. கூட்டத்தில் இந்த இன்றியமையாத அரசியல் பிரச்சினைகள் பற்றியும், வளர்ச்சி கண்டுவரும் ஏகாதிபத்திய யுத்தத்தின் அபாயத்தை எதிர்த்துப் போராடுவதற்கு அவசியமான சர்வதேச சோசலிச வேலைத்திட்டம் பற்றியும் கலந்துரையாடப்படும். நாம் கலந்துரையாடலில் கலந்து கொள்ள தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றோம்.

இடம்: கொழும்பு பொது நூலகக் கேட்போர் கூடம்.

நாள் மற்றும் நேரம்: அக்டோபர் 14, 2015 புதன்கிழமை, மாலை 4.00 மணி.