World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The end of democracy in Britain

பிரிட்டனில் ஜனநாயகத்தின் முடிவு

Julie Hyland
10 September 2015

Back to screen version

பிரிட்டிஷ் துணைஇராணுவப்படை நடைமுறைகளின் உத்தியோகபூர்வ முந்தைய நடவடிக்கைகளை, Hansardஐ, ஒருவரால் எந்தவொரு வர்க்க-நனவுபூர்வமான தொழிலாளருக்கும் இளைஞருக்கும் சர்வசாதாரணமாக வாசிக்குமாறு பரிந்துரைக்க முடியாது. ஆனால் "சிரியா: அகதிகளும் பயங்கரவாத-எதிர்ப்பும்" என்று தலைப்பிட்ட திங்களன்று விவாதத்தின் எழுத்துப்பிரதி ஒரு விதிவிலக்காகும்.

அன்றைய நாள் பிரிட்டனின் பிரதம மந்திரி டேவிட் கேமரூன், சில மாதங்களுக்கு முன்னர் சிரியாவில் மூன்று பிரிட்டிஷ் குடிமக்களது விசாரணையற்ற படுகொலையை அவர் அங்கீகரித்திருந்ததாக நாடாளுமன்றத்திற்குத் தெரிவித்தார்.

21 வயதான ரியாத் கான், 26 வயதான ருஹூல் அமீன், மூன்றாவதாக பெயர்வெளியிடப்படாத மற்றொரு நபர் என இவர்கள் ஆகஸ்ட் 21 அன்று ரக்காஹில் ராயல் விமானப்படையின் டிரோன் தாக்குதலில் கொல்லப்பட்டார்கள். மூன்று நாட்களுக்குப் பின்னர், மற்றொரு பிரிட்டிஷ் பிரஜையான 21 வயது ஜூனியத் ஹூசைன் அமெரிக்க டிரோன் தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும் கேமரூன் தெரிவித்தார்.

பிரதம மந்திரியின் அந்த அறிக்கை முன்நிகழ்ந்திராதது. நவீன வரலாற்றில் முதல்முறையாக, போருக்கு வெளியே, அரசாங்க தலைவர் அவர் பிரிட்டிஷ் குடிமக்களைப் படுகொலை செய்ய அங்கீகரித்திருந்ததை ஒப்புக் கொண்டது மட்டுமின்றி, மாறாக பெருமையும் பீற்றிக்கொண்டார்.

சட்டரீதியிலும் மற்றும் அரசியல்ரீதியிலும் மிகக்கடுமையான பின்விளைவுகளைக் கொண்ட அதை அவர் பகிரங்கப்படுத்திய போதினும், அங்கே கூடியிருந்தவர்களிடமிருந்து, சிறிய எதிர்ப்பும் இல்லை, எவ்வித விடையிறுப்பும் கூட இல்லை.

தற்காலிக பொறுப்பிலுள்ள தொழிற் கட்சி தலைவர் ஹாரியட் ஹார்மன் காலையில் முதலில் அவருக்கு விளக்கமளித்தமைக்காக பிரதம மந்திரிக்கு நன்றி தெரிவித்தார், இது நவீன காலத்தில் நடத்தப்பட்ட முதல் நடவடிக்கை என்பதை" அவர் "உறுதிப்படுத்த" முடியுமா? மற்றும் அந்த தாக்குதலுக்கு ஒப்புதல் வழங்கியதில் அட்டார்னி ஜெனரலின் சட்டபூர்வ அறிவுரை பிரசுரிக்கப்படுமா என்பதை மட்டும் கேட்டுக் கொண்டார்.

உண்மையில் அந்த அரச-ஒப்புதல் படுகொலையை புகலிடமாக ஏற்றமை, "ஒரு புதிய புறப்பாடு" மற்றும் "நாம் திரும்ப செய்யவிருக்கின்ற... ஒன்று என்பதை அந்த பெரு மதிப்பார்ந்த மேதகு பெண்மணிக்கு" கேமரூன் உறுதிப்படுத்தினார்.

அந்த அச்சுறுத்தும் விதமான பதிலுமே கூட எதிர்கட்சி மேஜைகளிலிருந்து எந்தவொரு விடையிறுப்பையும் கொண்டு வரவில்லை. அந்த அறிக்கை "முன்கூட்டியே பகிர்ந்து" கொள்ளப்படவில்லை என்பதற்காக மட்டும் ஸ்காட்டிஷ் தேசிய கட்சியின் அன்கஸ் ரோபர்ட்சன் குறைபட்டுக் கொண்டார், அதேவேளையில் பசுமை கட்சியின் கரோலைன் லூகாஸ் எந்தவித முக்கிய விடயமும் நடந்துவிடவில்லை என்பதை போல நடந்து கொண்டார்.

இதேபோல, இடது" தொழிற் கட்சி தலைமையின் போட்டியாளர் ஜெரிமி கோர்பைன், பிரதம மந்திரியின் அசாதாரண ஒப்புதலைக் குறித்து வேண்டுமென்றே எதுவும் குறிப்பிடாமல் தவிர்த்துக் கொண்டார். அவர் எதிர்ப்பதாக பாசாங்கு செய்யும் எதையும் விட, அவர் "அரசில் ஆழ்ந்த" பாகமாக இருக்கிறார் என்பதை அவரது சகல வாய்சவடால் உளறல்களைவிட அவரது மவுனம் ஓராயிரம் மடங்கு மிகவும் அரசியல்ரீதியாக கோர்பைனை அம்பலப்படுத்தி, தெளிவுபடுத்துகிறது.

அவரது அந்த காட்சிப்படுத்தல், மாக்னா கார்டாவின் 800ஆம் நினைவாண்டிற்காக பிரிட்டிஷ் நூலகத்தின் ஒரு பிரதான நினைவுதின கண்காட்சியில் மிக சமீபத்தில் தான் காட்சிக்குரிய விடயமாக நடந்திருந்தது என்ற உண்மையால் மொத்தத்தில் இன்னும் அதிகமாக அது நகைப்பிற்கிடமாகி இருந்தது.

அரசின் ஒடுக்குமுறை அதிகாரங்கள் மீது கட்டுப்பாடுகளை விதித்துள்ள மாபெரும் சாசனத்தின்" 1215 ஷரத்துக்களும், அதன் வகைமுறைகளைக் கொண்டு குடிமக்களின் அடிப்படை சட்ட உரிமைகளை வலியுறுத்துகின்றன, அதாவது "தேச சட்டத்தாலேயோ அல்லது அதற்கு சமமானதைக் கொண்டோ ஒருவருக்கு சட்டபூர்வ நீதியால் அல்லாமல், எந்தவொரு சுதந்திர மனிதரும் சுற்றி வளைக்கவோ அல்லது சிறையிலடைக்கப்படவோ மாட்டார், அல்லது அவரது உரிமைகள் அல்லது உடைமைகள் பறிக்கப்படாது, அல்லது சட்டவிரோதமாக ஆக்கப்படவோ அல்லது நாடுகடத்தப்படவோ மாட்டார், அல்லது எந்த வழியிலும் அவர் அந்தஸ்து இழக்கச் செய்யப்பட மாட்டார், அல்லது அவருக்கு எதிராக நாம் பலவந்தமாக செயல்பட மாட்டோம், அல்லது அவ்வாறு செய்ய வேறு யாரையும் அனுப்பவும் மாட்டோம்.

சாசனத்தின் இந்த அனைவருக்குமான உள்ளடக்கம், பிரிட்டிஷ் உள்நாட்டு போரில் (1641-1649), அறிவொளி காலத்தில், 18ஆம் நூற்றாண்டின் பிரெஞ்சு மற்றும் அமெரிக்க புரட்சிகளில் அரசியல்ரீதியலான, புத்திஜீவித மற்றும் அரசியலமைப்புரீதியிலான வெளிப்பாட்டைக் கண்டது. ஆழ்ந்த சமூக மற்றும் அரசியல் எழுச்சிகளை அடிப்படையாக கொண்டு, நீதிவிசாரணையில்லா ஆணைக்கு எதிராக உள்ளார்ந்த "மனித உரிமைகளின்" கருத்துரு, பொலிஸ்-இராணுவ சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயக நிர்வாகத்தைப் பிரித்துவைப்பதில் தீர்மானகரமான குணாம்சமாக உள்ளமைக்கப்பட்டது.

பிரிட்டிஷ் முதலாளித்துவ வர்க்கம் நிச்சயமாக அடிக்கடி இந்த கோட்பாட்டை மீறியுள்ளது. அதுவொரு நீண்ட இரத்தந்தோய்ந்த வரலாறைக் கொண்டுள்ளது, அது அயர்லாந்தை விட அந்தளவிற்கு அதிகமாக வேறெங்கும் இருக்காது. ஆனால் அங்கேயுமே கூட, அதன் படுகொலை கொள்கை இரகசியமாக நடத்தப்பட்டு, எப்போதுமே உத்தியோகபூர்வமாக மறுக்கப்பட்டது.

ஆனால் இனிமேல் அவ்வாறிருக்க தேவைப்படாது. திங்களன்று கேமரூன் பிரிட்டிஷ் நூலகத்தை ஆக்கிரமித்து தகர்த்து சாசனத்திற்குத் தீயிடுவது போன்ற நடவடிக்கைக்கு இணையானவொரு அரசியல் நடவடிக்கையை நடத்தினார். அதேவேளையில் அவரது பார்வையாளர்கள் மவுனமாக அதற்கு உடந்தையாய் இருந்து பார்த்து கொண்டிருந்தார்கள்.

அந்த டிரோன் தாக்குதலுக்கு முன்னரே "உன்னிப்பாக" திட்டமிடப்பட்டதையும் மற்றும் "உரிய தருணத்திற்காக" காத்திருந்ததையும் பற்றிய பிரதம மந்திரியின் குறிப்பு, அவரது நடவடிக்கை உடனடி பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு எதிராக பிரிட்டிஷ் மக்களைப் பாதுகாக்கும் விருப்பத்தால் உந்தப்பட்டதென்ற எந்தவொரு கூற்றையுமே கூட மறுத்தளிக்கிறது.

கான் மற்றும் அமீனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் உண்மை என்றாலுமே கூட, இரத்தம் உறைய செய்யும் வகையில் நீதிவிசாரணையின்றி குடிமக்களைப் படுகொலை செய்வதென்பது குற்றவிசாரணைக்கு உட்படுத்த வேண்டிய ஒரு "பெரும் குற்றகரமான மற்றும் பிழையான" நடவடிக்கை என்ற உண்மையை மாற்றிவிடாது.

இங்கிலாந்தில் 1965 இல் மரண தண்டனை ஒழிக்கப்பட்டது. இப்போது யாரேனும் பிரிட்டிஷ் கொள்கைக்கு எதிராக ஒரு துப்பாக்கியைத் தூக்கி நின்றாலோ அல்லது பிரச்சாரம் செய்தாலோ குற்றச்சாட்டுக்கள் வைக்காமலேயே, அதைவிட நீதிமன்ற தீர்ப்புகளும் அவற்றை குறைவாகவே ஆதரிக்கின்றன என்கிற நிலையில் ஒரு விரல்விட்டு எண்ணக்கூடிய மந்திரிமார்கள் மற்றும் அவர்களது பின்புலத்தார்களின் விருப்பப்படி ஒரு "கொலை பட்டியலில்" நிறுத்தப்படுவார்கள், முறையான நீதிவிசாரணையில் என்ன இருக்கிறது? அடுத்து யார், எங்கே? அரச படுகொலை என்பது முழுமையாக ஐக்கிய இராஜ்ஜியத்தின் எல்லைகளுக்கு வெளியே தான் என்று கருதுவதற்கும் அங்கே எந்த முழுமையான காரணமும் கிடையாது.

எந்தவிதத்திலும் இது ஒரு தேசிய நிகழ்வுபோக்கல்ல. இஸ்ரேலில் தொடங்கிய இலக்கில் வைத்து கொல்லும் கொள்கை, இப்போது ஒரு சர்வதேச போக்கின் பாகமாகி உள்ளது. இதில் அரசாங்கங்கள் அவற்றின் "இலக்குகள்" மீதான எண்ணிக்கை மற்றும் துல்லியத்தைக் குறித்து பெருமைபீற்றும் உரிமைகளுக்காக போட்டியிடுகின்றன. அமெரிக்காவிலிருந்து தொடங்கி, பிரான்ஸ் மற்றும் இப்போது பிரிட்டன் வரையில், கூடுதல் அதிகார கடமைப்பாடானது அரச படுகொலைகளுக்கு ஒப்புதல் வழங்குவதற்கு தயாராக இருத்தல் என்பதாக மறுவரையறை செய்யப்பட்டுள்ளது.

பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்ற போர்வையில் முன்கூட்டிய போர் கொள்கை, முன்கூட்டிய சித்திரவதை என்பதாகவும், இப்போது முன்கூட்டிய படுகொலை என்பதாகவும் பரிணமித்துள்ளது.

முதலாளித்துவ வர்க்கத்தின் வெளிநாட்டு நடவடிக்கைகளையும், அவர்கள் உள்நாட்டில் என்ன செய்வார்கள் என்பதையும் பிரிப்பதற்கு அங்கே எந்த சுவரும் கிடையாது. பரந்துபட்ட அரசு உளவுவேலை உட்பட பிரிட்டனில் மக்கள் சுதந்திரம் மீதான தாக்குதல், சுட்டுக் கொல்" கொள்கையோடு இணைக்கப்பட்டுள்ளது, இக்கொள்கை தான் ஜூலை 2005 இல் இலண்டன் சுரங்க பாதையில் ஒரு அப்பாவி பிரேசிலிய தொழிலாளர் ஜோன் சார்லஸ் டு மெனிஜெஸ் இன் உயிரைப் பறித்தது.

இந்த அரசு நடவடிக்கைகளோடு அங்கே 20ஆம் நூற்றாண்டு வரலாற்று சமாந்தரங்கள் உள்ளன ஜூன் 30 மற்றும் ஜூலை 2, 1934 க்கு இடையே ஹிட்லரின் "நீண்ட போர்வாளின் இரவுகள்" நடத்தப்பட்டது. அந்த சம்பவங்களின் அதிர்ச்சியூட்டும் குணாம்சம், நாஜி ஆட்சியினது அரசியல் எதிர்ப்பாளர்களைப் பகிரங்கமாக படுகொலை செய்வதற்கு அது தயாராக இருந்தது என்பது மட்டுமல்ல, மாறாக ஜேர்மன் அரசியல் ஸ்தாபகத்தாலும் அதுபோன்ற உத்தியோகபூர்வ குற்றங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன என்பதாகும். அந்த இரத்தந்தோய்ந்த சம்பவம், சட்ட விலக்கீட்டுரிமை கொண்ட அரசு" எனும் போலி-சட்ட கருத்துருவைப் பறைசாற்ற மூன்றாம் ரைஹ்ஹின் "அரச நீதிமான்" கார்ல் ஷிமித்துக்கு பின்னணியை வகுத்தளித்தது, அந்த விலக்கீட்டுரிமை எந்தவொரு சட்டபூர்வ கட்டுப்பாட்டிலிருந்தும் கூடுதல் அதிகாரத்தைச் சுதந்திரப்படுத்தியதோடு, வன்முறை, சித்திரவதை மற்றும் படுகொலைகளை வழமையானதாக்கியது.

இன்று, உலக முதலாளித்துவம் மீண்டுமொருமுறை பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதுடன், சமூக சமத்துவமின்மை மிகமோசமான விகிதங்களை எட்டியுள்ளது. 1930களைப் போலவே, அரசியல் அச்சுறுத்தலுக்கு முதலாளித்துவ வர்க்கத்தின் விடையிறுப்பு கோபமாக முன்னிறுத்தப்படுவதுடன், எதிர்க்கும் தொழிலாள வர்க்கம் சர்வாதிகாரத்திற்குள் திருப்பப்படுகிறது.