World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

UN releases war crimes report on Sri Lanka

.நா. இலங்கை மீது போர்க்குற்ற அறிக்கையை வெளியிடுகிறது

By K. Ratnayake
17 September 2015

Back to screen version

.நா மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் ஸைட் ராட் அல் ஹுசைன் நேற்று இறுதியாக அவரது அலுவலகத்தில் தயாரித்த இலங்கை போர்க்குற்ற விசாரணை அறிக்கையை வெளியிட்டார். கிட்டத்தட்ட 300 பக்கங்களைக் கொண்ட அந்த அறிக்கை, தீவின் 26 ஆண்டுகால யுத்தத்தின் போது இலங்கை இராணுவம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளாலும் "தீவிர போர் குற்றங்கள்" மற்றும் "மனித உரிமை மீறல்களும்" இழைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கின்றது.

1983ல் ஆரம்பமான மோதலில் சுமார் 200,000 பேர், முக்கியமாக தமிழ் சிறுபான்மையினர் கொல்லப்பட்டுள்ளனர். முந்தைய .நா. அறிக்கை ஒன்றின்படி, யுத்த வலயத்தில் சிக்கியிருந்த ஒரு மதிப்பீட்டின்படி 40,000 தமிழ் பொதுமக்கள், 2009ல் இராணுவ தாக்குலின் இறுதி மாதங்களில் கொல்லப்பட்டனர்.

இலங்கை மனித உரிமை மீறல் விசாரணைக்கான .நா. உயர் ஆணையர் அலுவலகம் (OISL) நேற்று வெளியிட்ட அறிக்கை, .நா. மனித உரிமைகள் சபையில் (UNHRC) மார்ச் 2014 நடந்த அமர்வில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்க அணுசரணையிலான தீர்மானத்திற்கு பிரதிபலிப்பாக தயாரிக்கப்பட்டது. தீர்மானத்துக்கும் கொழும்பின் மனித உரிமைகள் மீறல்கள் பற்றிய நேர்மையான அக்கறைக்கும் எந்த தொடர்பும் கிடையாது, மாறாக அது, வாஷிங்டனின் மூலோபாய நலன்களை முன்னெடுப்பதற்கான முயற்சியாகும்.

அமெரிக்காவும் அதன் மேற்கத்திய நட்பு நாடுகளும் 2006ல் இலங்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் புதுப்பிக்கப்பட்ட போரை முழுமையாக அங்கீகரித்தன. அவர்கள் சீனா இலங்கையின் பிரதான ஆயுத மற்றும் நிதி வழங்குனராக ஆகியிருப்பதை எதிர்கொண்ட நிலையில் மட்டுமே இராணுவ தாக்குதலின் இறுதி மாதங்களில் அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களை விமர்சிக்கத் தொடங்கினர்.

அமெரிக்க "மனித உரிமைகள்" தோரணையானது பெய்ஜிங்குடனா நெருக்கமான உறவுக்கு முடிவு கட்டி, வாஷிங்டனின் ஆக்கிரோசமான புவிசார்-மூலோபாயத்துக்கும் சீனாவை இராணுவ ரீதியில் சுற்றிவளைப்பதற்குமான "ஆசியாவில் முன்னிலை" கொள்கையின் வழிக்கு கொழும்பை கொண்டுவருவதற்காக இராஜபக்ஷவை நெருக்குவதற்கான முயற்சியாகும்.

அதே அரசியல் காரணங்களுக்காக, இறுதியில் வாஷிங்டன் ஜனாதிபதி இராஜபக்ஷவை ஆட்சியில் இருந்து அகற்றும் நடவடிக்கையை ஆரம்பித்தது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க மற்றும் அமெரிக்க-சார்பு ஐக்கிய தேசிய கட்சி (ஐ.தே.க.) தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் உடந்தையுடன் பின்கதவால் திட்டமிடப்பட்ட இந்த பிரச்சாரம், ஜனவரி தேர்தலில் முன்னாள் இராஜபக்ஷ அரசாங்கத்தின் அமைச்சரான மைத்ரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக அமர்த்தியதுடன் நிறைவேற்றப்பட்டது.

அப்போதிருந்து, விக்கிரமசிங்கவை பிரதமராகக் கொண்ட சிறிசேன நிர்வாகம், நாட்டை சீனாவிடம் இருந்து ஒதுக்கிக்கொள்ளும் அதேவேளை, இலங்கை வெளியுறவு கொள்கையை வேகமாக அமெரிக்க மற்றும் அதன் பிராந்திய பங்குதாரரான இந்தியாவின் பக்கமும் திருப்பியது. விக்கிரமசிங்கவின் ஐ.தே.க., பாராளுமன்ற தேர்தலில் அதிக எண்ணிக்கையிலான ஆசனங்களை வென்ற கடந்த மாத பொதுத் தேர்தலை அடுத்து, ஒரு சர்வதேச யுத்தக் குற்ற விசாரணைக்கான அதன் முந்தைய அழைப்பை அமெரிக்கா மாற்றிக்கொண்டது.

ஆகஸ்ட் 26, தெற்காசியாவுக்கான அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் நிஷா பிஸ்வால், இலங்கை யுத்தக் குற்றங்களைப் பற்றி ஒரு உள்நாட்டு விசாரணையை வாஷிங்டன் ஆதரிக்கும் என்று அறிவித்தது. ஒரு "உள்நாட்டு விசாரணை", சிறிசேன மற்றும் விக்கிரமசிங்க மற்றும் அவர்களின் கூட்டாளிகள் உட்பட்டவர்களுக்கு இந்தக் குற்றங்களில் தங்களுடைய சொந்த ஈடுபாட்டை மூடிமறைக்கும் வாய்ப்பை கொடுக்கும் அதே வேளை, தற்போது பாராளுமன்றத்தில் இருக்கும், கடந்த மாத தேர்தல்களில் பிரதமராவதற்கு முயற்சித்த இராஜபக்ஷ மீது அழுத்தத்தை திணிக்கும்.

..எஸ்.எல். அறிக்கை, கொடூரமான குற்றங்களும் ஒடுக்குமுறைகளும் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்டுள்ளதாக உறுதிபடுத்துகிறது.
அது "படுகொலை, இரத்தம் சிந்துதல் மற்றும் முழு குடும்பங்களும் கொல்லப்பட்ட குண்டுத் தாக்குதல்கள் மற்றும் உளவியல் அதிர்ச்சி போன்ற பயமுறுத்தும் விளக்கங்களை சாட்சிகள் முன்வைக்கின்றன", என்று கூறுகிறது. இலங்கை பாதுகாப்புப் படைகள் பொதுமக்கள், தமிழ் அரசியல்வாதிகள், தொண்டு நிறுவன ஊழியர்கள் மற்றும் பத்திரிகையாளர்களையும் "சட்டத்துக்குப் புறம்பாக கொலை" செய்திருப்பதாகவும் அது குறிப்பிடுகின்றது
.

2009ல் யுத்தத்தின் கடைசி நாட்களில், இராணுவம் 250,000 மக்கள் சிக்கிக்கொண்டிருந்த, வடகிழக்கில் உள்ள காட்டில் ஒரு 300 சதுர கிமீ (115 சதுர மைல்) அளவான பகுதியில் புலிகளை சுற்றி வளைத்தது. மக்கள் செறிவாக இருந்த பகுதியில் மருத்துவமனைகள் மற்றும் மனிதாபிமான உதவி நிலையங்கள் மீதும் சர்வதேச சட்டத்தை மீறி, பாதுகாப்புப் படைகளால் மீண்டும் மீண்டும் குண்டு வீசப்பட்டுள்ளன.

கொலை செய்யப்படமாட்டார்கள் என்று அரசாங்கம் உத்தரவாதம் கொடுத்த பின்னர் சரணடைந்த புலிகளின் தலைவர்கள் உட்பட அடையாளம் காணப்பட்ட உறுப்பினர்களுக்கு சட்டத்திற்கு புறம்பாக மரணதண்டனை விதிக்கப்பட்டதாகவும் இந்த அறிக்கை குறிக்கிறது.

“தடைய ஆதராங்கள், அத்துடன் புகைப்பட மற்றும் வீடியோ படங்களின் அடிப்படையில் சில உண்மை சாட்சிகள் ஸ்தாபிக்கப்பட இருந்தாலும், அவர்கள் கைது செய்யப்பட பின்னர் கொல்லப்பட்டனர் என்று கூற பல விடயங்களில் போதுமான தகவல் இருப்பதாக தோன்றுகிறது" என்று ஓ.ஐ.எஸ்.எல். அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

போர் முடிந்த பிறகு, இலட்சக்கணக்கான பொதுமக்கள் வவுனியாவில் இருந்த பிரமாண்டமான தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டனர். புலி சந்தேக நபர்களாக கைது செய்யப்பட்ட மக்களும் ஏனையவர்களும் சித்திரவதைகளுக்கும் பாலியல் பலாத்காரத்துக்கும் உட்படுத்தப்பட்டனர். இதற்காக எவரும் தண்டிக்கப்படவில்லை என்று அறிக்கை கூறுகிறது.

"தங்கள் அணியில் சேர்ந்து முன் வரிசைகளில் போராட பெரியவர்கள் மற்றும் சிறுவர்களை கட்டாயப்படுத்தி மேலும் துயரத்தில் ஆழ்த்தியதாக" புலிகள் மீதும் ஓ.ஐ.எஸ்.எல். விசாரணை  குற்றஞ்சாட்டுகிறது. புலிகள் ஜனநாயக விரோத செயலுக்கும் பயங்கரவாத முறைகளை கையாண்டமைக்கும் பொறுப்பாளிகளாக இருக்கும் அதே வேளை, போருக்கும் அதைச் சார்ந்த குற்றங்களுக்கும் முழு பொறுப்பாளி கொழும்பில் உள்ள சிங்கள ஆளும் கும்பலே ஆகும்.

அறிக்கையானது யுத்தக் குற்றம் நடந்துள்ளது உறுதிப்படுத்துகிற போதிலும், குற்றம் புரிந்தவர்களின் பெயர்களைக் குறிப்பிடவில்லை. இது "மனித உரிமைகள் மீறல் விசாரணை, ஒரு குற்றவியல் விசாரணை அல்ல," என்று அதன் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

போர் குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை செய்தவர்களாக கூறப்படுபவர்களை விசாரிப்பதற்கு "சர்வதேச நீதிபதிகள், சட்டத்தரணிகள், வழக்கறிஞர்கள் மற்றும் புலனாய்வாளர்களையும் ஒருங்கிணைத்த ஒரு கலப்பு சிறப்பு நீதிமன்றத்தினை" அமைக்க அந்த அறிக்கை அழைப்பு விடுக்கின்றது. "இராணுவ மற்றும் பாதுகாப்பு படையினர் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட வேறு அதிகாரிகளும்" அவர்களது பதவிகளில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று அது கூறுகின்றது.

அது இலங்கை போர் குற்றங்கள் பற்றி வெளிப்படுத்துகின்றவை ஒரு புறம் இருக்க, அறிக்கையும் அல் ஹுசைனின் கருத்துக்களும் கொழும்பு சம்பந்தமாக வாஷிங்டனின் கொள்கையிலான மாற்றத்தை எதிரொலிக்கின்றன. "இந்த அறிக்கை நம்பிக்கைக்கான அடித்தளத்தை கொண்டுள்ள இலங்கையிலான ஒரு புதிய அரசியல் சூழலில் வெளியிடப்படுகின்றது. இந்த உண்மையான அடிப்படை மாற்றத்துக்கான வரலாற்று வாய்ப்பு நழுவ அனுமதிக்கக் கூடாது," என்று அல் ஹுசைன் நேற்று ஜெனீவாவில் தெரிவித்தார்.

ஓ.ஐ.எஸ்.எல். அறிக்கையின் கண்ணோட்டம் கூறுவதாவது: "8 ஜனவரி 2015 ஜனாதிபதி தேர்தல் இலங்கையின் அரசியல் சூழலில் ஒரு திருப்பத்தை குறித்தது. எதிர்க் கட்சிகளின் பொது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேன, அனைத்து இன சமூகங்களின் ஒரு பரந்த கூட்டணியினதும் சித்தாந்தவாதிகள் மத்தியிலும் ஆதரவைப் பெற்று ஆட்சியில் இருந்த ஜனாதிபதி ராஜபக்ஷவை தோற்கடித்தார். முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராகக் ஒரு புதிய அமைச்சரவை அமைக்கப்பட்டுள்ளது."

இந்தக் கண்ணோட்டம்,  "ஜனாதிபதி பதவிக் கால எல்லையை மீண்டும் வரையறுத்தல், ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களை கட்டுப்படுத்தல், நீதித்துறை மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களை நியமனங்களை பரிந்துரை செய்யும் அரசியலமைப்பு சபையை ஸ்தாபித்தல்" என்று அது கூறிக்கொள்ளும் பல்வேறு அரசியல் சட்ட திருத்தங்களை பாராட்டுகிறது.  இந்த நடவடிக்கைகள் மக்களின் ஜனநாயக உரிமைகளை உறுதிசெய்வதற்கானவை அல்ல, மாறாக அவை மக்களை ஏமாற்றுவதற்காக சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட ஒரு அரசியல் சோடிப்பாகும்.

 ..எஸ்.எல். அறிக்கை செப்டம்பர் 30 அன்று .நா. மனித உரிமைகள் பேரவையில் விவாதிக்கப்பட உள்ள அதேவேளை, சர்வதேச அமைப்பு விவகார பணியகத்தின் அமெரிக்க துணை உதவி செயலாளர் எரின் எம் பார்க்லே,இந்த சபையின் ஒருமித்த ஆதரவைப் பெறும் தீர்மானம் ஒன்றை உருவாக்குவதில்வாஷிங்டன் இலங்கை அரசாங்கத்துடன் "ஈடுபடம்" என்று இந்த வாரம் கூறினார். வேறுவிதமாகக் கூறினால், அமெரிக்கா கொழும்பில் புதிய ஆட்சியை பாதுகாக்க அரசியல் ரீதியில் வேலை செய்யும்.

சிறிசேன-விக்கிரமசிங்க நிர்வாகம், ஒரு களிப்பான அறிக்கையுடன் ஓ.ஐ.எஸ்.எல். அறிக்கைக்கு பதிலளித்தது. அரசாங்கம்,"மனித உரிமைகள், சட்டவாட்சி, நல்லாட்சி, நீதி, நிறுவன மற்றும் சட்ட சீர்திருத்தங்கள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான இலங்கை மக்கள் அக்கறை கொண்டுள்ள விடயங்களை கையாள்வதில், 2015 ஜனவரி ஜனாதிபதித் தேர்தலில் இருந்து புதிய அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளை உயர்ஸ்தானிகர் அங்கீகாரித்ததால் உத்வேகமும் ஊக்குவிப்பும் பெற்றுள்ளது," என்று அது அறிவித்தது.

இந்த வாய்வீச்சுக்கள் முற்றிலும் போலியானவை. கொழும்பு ஆளும் கும்பல், வாஷிங்டனின் சீனாவை மீதான ஆக்கிரோஷ இராணுவ சுற்றிவளைப்பை தழுவிக்கொண்டுள்ளதோடு, இப்போது சர்வதேச நாணய நிதியம் கோரும் இலங்கை மக்களுக்கு எதிரான சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்த தயாராகி வருகின்றது.

சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்தின் "நல்லிணக்க" கருத்துக்கள், தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லீம்களுமாக தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகள், வேலைகள் மற்றும் வாழ்க்கை நிலைமைகள் மீது ஒரு கூட்டு சமூக தாக்குதலை முன்னெடுக்க முதலாளித்துவ தமிழ் தேசிய கூட்டமைப்புடன் ஒரு கொடுக்கல் வாங்கலுக்கு சொல்ல திட்டமிட்டு வருகின்றது.  தமிழ் தேசியக் கூட்டமைப்பு, புதிய கொழும்பு ஆட்சியுடன் அமெரிக்க அனுசரணையிலான ஒப்பந்தத்துக்கு ஏற்ப செயற்பட ஏற்கனவே தனது இணக்கத்தை வெளிப்படுத்தியுள்ளது.

இலங்கை உள்நாட்டுப் போர் தொடர்பான .நா. விசாரணை, மிக சமீபத்தில் ஈராக், ஆப்கானிஸ்தான், லிபியா மற்றும் சிரியாவில் உட்பட எண்ணற்ற போர் குற்றங்களுக்கு முழுப் பொறுப்பாளியான அமெரிக்க ஏகாதிபத்தியம், தனது மூலோபாய நலன்களை முன்னெடுக்க போலி "மனித உரிமைகள்" பிரச்சாரத்தை எவ்வாறு சுரண்டிக்கொள்கிறது என்பதற்கு மற்றொரு தெளிவான நிரூபணம் ஆகும்.