World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

War clouds loom over UN General Assembly

க்கிய நாடுகள் பொதுச் சபையில் போர் மேகங்கள் சூழ்கின்றன

Nick Beams
28 September 2015

Back to screen version

ஒரு தலைமுறையின் காலஇடைவெளியில் இரண்டு நாசகரமான உலக போர்களைக் கொண்டு வந்திருந்த வல்லரசுகளுக்கு இடையிலான மோதல்களை கட்டுப்படுத்தி நெறிப்படுத்த சேவையாற்றுவதன் மூலமாக, அது ரு சமாதான சகாப்தத்திற்கு உத்தரவாதமளிக்கும் என்ற பிரகடனங்களோடு ஐக்கிய நாடுகள் சபை 1945 இல் ஸ்தாபிக்கப்பட்டது.

.நா. பொதுச் சபை இவ்வாரம் எழுபது ஆண்டுகளை பூர்த்தி செய்கின்ற நிலையில், சம்பவங்களின் போக்கு, அவ்வமைப்பு நிறுவப்படுகையில் உள்ளடக்கப்பட்ட அறிவிப்புகளுக்கு ணங்க நகரவில்லை என்பதை வெளிப்படையாக தெளிவாக்குகிறது. அதற்கு மாறாக, அவை விளாடிமீர் லெனினின் பகுப்பாய்வை உறுதிப்படுத்துகின்றன, அவர் முதலாளித்துவத்தின் கீழ் இயல்பானதாகவே போரை முடிவுக்குக் கொண்டு வருவது சாத்தியமில்லையென முதலாம் உலகப் போரின் மத்தியில் வலியுறுத்தினார். சமாதான காலகட்டம் என்பது பிரதான சக்திகளுக்கு இடையிலான ஒரு புதிய யுத்தத்திற்கான தயாரிப்புக்கான ஒரு தற்காலி இடைக்காலகட்டம் என்று அவர் கூறினார்.

இவ்வாண்டின் வருடாந்த பொதுக்கூட்ட தொடரின்போது நடைமுறையில் தொடர்ச்சியான சர்வதேச புவிசார்-அரசியல் வெடிப்பு புள்ளிகள் நிறைந்திருந்தன, அவற்றில் ஏதேனும் ஒன்றேயொன்று கூட, நேகமாக அணு ஆயுத பிரயோகத்தை உள்ளடக்கிய ஒரு புதிய உலக போருக்கு துரிதமாக இட்டுச் செல்லும் வகையில், வல்லரசுகளுக்கு இடையிலான ஓர் இராணுவ மோதலைத் தொடங்கி வைக்கக்கூடும்.

அமெரிக்க ஏகாதிபத்தியம் அதன் "ஆசியாவை நோக்கி முன்னெடுப்பு" பதாகையின் கீழ் கிழக்கு ஆசியாவில் புவிசார் அரசியல் மற்றும் இராணுவ மேலாதிக்கத்தை ஸ்திரப்படுத்த முனைகின்ற நிலையில், அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையிலான மோதல் தொடர்ந்து தீவிரமடைந்து வருகிறது. அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள், “கடல்போக்குவரத்து சுதந்திரம்" என்ற மோசடி முழக்கத்தின் கீழ், சீனாவின் தென்சீனக் கடலில் அதன் நிலப்பரப்பை பற்றிகொள்ளும் நடவடிக்கைகளினால் அதற்கெதிராக அழுத்தத்தை அதிகரித்துள்ளன. “கடல்போக்குவரத்து சுதந்திரம்" எனும் இந்த நளினமான வார்த்தைக்குப் பின்னால், அமெரிக்கா சீன கடற்பகுதியை ஒட்டி இராணுவ நடவடிக்கைகளைப் பின்பற்றி வருவதுடன், சீன பெருநிலத்தின் மீது பாரிய தாக்குதல்களை நடத்த அதன் வான்/கடல் போர் திட்டத்தை மீளமைத்து வருகிறது.

கடந்த வாரந்தான், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும் சீன ஜனாதிபதி ஜி உம் வெள்ளை மாளிகையில் ஒரு பதட்டம்-நிறைந்த சந்திப்பை நடத்தினர், அதில் அமெரிக்க தலைமை தளபதி, சீனா தென்சீனக் கடலில் உள்ள தீவுகள் மீதான அதன் நீண்டகால உரிமைகோரல்களிலிருந்து பின்வாங்க வேண்டுமென்ற வாஷிங்டனின் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினார். அவரது சீன சமதரப்பு அதுபோன்ற எதற்கும் பொறுப்பேற்க முடியாதென மறுத்துவிட்டார். இருதரப்பு தலைவர்களுமே பொதுச்சபையில் உரையாற்ற உள்ளார்கள்.

அங்கே ஜப்பான் மற்றும் பிலிப்பைன்ஸ் தலைவர்களும் இருப்பார்கள். கிழக்கு ஆசியா மற்றும் அதைக் கடந்தும் அதன் வல்லரசு அபிலாஷைகளை மீள்ஸ்திரப்படுத்த மற்றும் மீள்இராணுவமயமாக்க ஜப்பான் வேகமாக நகர்ந்து வருகிறது. பிலிப்பைன்ஸோ தென்சீனக் கடலில் சீனாவிற்கு எதிராக வாஷிங்டனின் அடியொற்றி சேவையாற்றி வருகிறது.

யுரேஷிய பெருநிலத்தின் மறுபக்கம், அமெரிக்க தலைமையின் கீழ் நேட்டோ, ரஷ்யாவிற்கு எதிராக அதன் படைகளை கட்டியெழுப்பி வருகிறது. சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்கு பின்னர் அப்பிராந்தியத்தில் நடைபெறவுள்ள மிகப்பெரிய நேட்டோ ஒத்திகையான வரவிருக்கின்ற அமெரிக்க-நேட்டோ முப்படை சந்திப்பு 2015 (US-NATO Trident Juncture 2015) என்பது பால்டிக் பிராந்தியம் மற்றும் அதற்கு அப்பாலும் போர் நடவடிக்கைகளுக்காக மேற்கத்திய படைகளைத் தயார்படுத்தும்.

சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்கு பின்னர் அமெரிக்கா முதல்முறையாக, "அதன் ரஷ்யாவுடனான ஆயுத மோதலுக்கான திட்டங்களை மீளாய்வு செய்து, புதுப்பித்து வருவதாக" செய்திகள் தெரிவிக்கின்றன.

1990-91 வளைகுடா போருடன் தொடங்கியதிலிருந்து, அப்போது அது சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதை சாதகமாக்கி ஈராக்கை தாக்கி மத்திய கிழக்கில் அதன் இராணுவ மேலாதிக்கத்தைப் பெற முயன்ற நிலையில், அமெரிக்க ஏகாதிபத்தியம் தொடர்ந்து அப்பிராந்தியத்தில் தொடர்ச்சியான போர்களில் ஈடுபட்டுள்ளது. அமெரிக்க கொள்கையின் சகல திருப்பங்களினதும் மாற்றங்களினதும் மத்தியில், பல்வேறு இராணுவ நடவடிக்கைகள் மற்றும் அதனால் விளைந்த தோல்விகளுடனும் அமெரிக்காவின் கொள்கையின் உள்ளார்ந்த தர்க்கம், ரஷ்யாவை உள்ளடக்கிய மற்றும் சாத்தியமானரீதியில் ஏனைய வல்லரசுகளோடு ஒரு பிரதான இராணுவ மோதலுக்கான சாத்தியக்கூற்றை உருவாகியுள்ளது.

.நா. பொது சபை கூட்டம் நடந்து வருகையில், இந்த சாத்தியக்கூறு சிரியாவில், சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத் ஆட்சிக்கு எதிராக அத்துடன் ISISக்கு எதிராக திருப்பிவிடப்பட்ட, குண்டுவீச்சை தொடங்கி இருக்கின்றது என்ற பிரான்சின் அறிவிப்போடு சாத்தியமான அளவிற்கு கூடுதலாக அதிகரித்தது. அசாத்திற்கு அதன் இராணுவ ஆதரவை ரஷ்யா கூடுதலாக பலப்படுத்துவதற்கு இடையே பிரான்சின் இந்த தீவிரப்பாடு வருகிறது.

சிரியா ஆட்சிக்கு ரஷ்ய இராணுவ உதவிகள் விரிவாக்கப்படுவது குறித்த செய்திகளை பார்க்கையில், அப்பிராந்தியத்தில் ரஷ்யாவின் உள்நோக்கங்களை "பரிசோதிக்க" .நா. கூட்டத்தின் பக்கவாட்டில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினுடன் அது பேச்சுவார்த்தை நடத்துமென கடந்த வாரம் ஒபாமா நிர்வாகம் அறிவித்தது. அந்த பேச்சுவார்த்தைகள் புட்டின் பொது அவையில் உரையாற்றுகின்ற மற்றும் வாஷிங்டனால் தூண்டிவிடப்பட்ட பேரழிவுகரமான நான்காண்டுகால உள்நாட்டு போருக்கு ஓர் அரசியல் தீர்வுக்கான அவரது திட்டத்தை முன்வைக்கின்ற அதேநாளில் நடக்கின்றன.

சிரிய ஆட்சியை கவிழ்ப்பதே அமெரிக்காவின் இலக்கு என்ற நிலையில், அதேவேளையில் ரஷ்யாவோ அசாத் உடனோ அல்லது அசாத் இல்லாமலோ அங்கே அதன் உறவைப் பேணுவதை அப்பிராந்தியத்திலும் மற்றும் அதற்கப்பாலும் அதன் சொந்த பாதுகாப்பு நலன்களுக்கு முக்கியமானதென கருதுகின்ற நிலையில், அந்த விவாதத்திற்குப் பின்னால், அங்கே ஒரு நிஜமான மற்றும் அதிகரித்த இராணுவ மோதல் அபாயம் உள்ளது.

ரஷ்யா மற்றும் சீனா இரண்டுக்கும் எதிரான உந்துதலின் தூண்டுசக்தியாக அமெரிக்கா இருக்கின்றபோதிலும், அங்கே ரஷ்ய மற்றும் சீன ஆட்சிகளின் விடையிறுப்பில் எந்த முற்போக்கான தன்மையும் இல்லை. அவை இரண்டுமே நிதியியல் செல்வந்த தட்டுக்களின் கருவிகளாக உள்ளன என்பதோடு, அவற்றின் சொந்த நாடுகளிலோ அல்லது சர்வதேச அளவிலோ அமைப்புரீதியில் பெருந்திரளான மக்களுக்கு முறையீடு செய்ய இலாயகற்றுள்ளன. அவை உள்நாட்டில் தேசியவாதத்தை முடுக்கிவிட முனைந்துள்ள அதேவேளையில் அமெரிக்க ஆத்திரமூட்டல்களை எதிர்கொள்ள நல்லிணக்கத்திற்கும் இராணுவ போர்முழக்கத்திற்கும் இடையே ஊசலாடிக் கொண்டிருக்கின்றன. இதனூடாக ஏகாதிபத்திய போர்-வெறியர்களின் கரங்களில் அவர்கள் விளையாட்டுப்பொருளாகின்றனர்.

முதல் வளைகுடா போரில் தொடங்கி 2003 இல் ஈராக் படையெடுப்பு மற்றும் 2011 இல் லிபியாவில் கேர்னல் கடாபிக்கு எதிரான ஆட்சி மாற்ற நடவடிக்கை வரையில், மத்திய கிழக்கில் ஒரு கால் நூற்றாண்டுக்கும் அதிகமான அமெரிக்க இராணுவ தலையீடு, இரண்டாம் உலக போருக்குப் பின்னர் மிகப் பிரமாண்டமான அளவில் அகதிகள் நெருக்கடியை உருவாக்கி உள்ளது. அமெரிக்காவினால் அவர்களது சமூகங்கள் மீது கொண்டு வரப்பட்ட பேரழிவின் விளைவாக, அகதிகள் வெள்ளமென இப்போது ஐரோப்பாவிற்குள் சென்று கொண்டிருக்கிறார்கள், இது ஐரோப்பிய ஒன்றியத்தில் அதன் ஒன்றிணைப்பிற்கான மையஈர்ப்பு சக்திகளை எரிச்சலூட்டி உள்ளதுடன், அங்கத்துவ நாடுகளுடையே அச்சுறுத்தல்கள் மற்றும் கண்டனங்களுக்கு இட்டுச் சென்று, அக்கண்டம் எங்கிலும் எல்லைகளைப் புதுப்பிக்கவும், முறுக்கிய முள்கம்பி வேலிகள், துருப்புகள் மற்றும் டாங்கிகளை மீள்நிலைநிறுத்தம் செய்யவும் தூண்டிவிட்டுள்ளது.

ஆழமடைந்துவரும் புவிசார் அரசியல் பதட்டங்கள், உலக முதலாளித்துவ பொருளாதாரத்தின் தொடர்ந்து கொண்டிருக்கும் பொருளாதார உடைவால் எரியூட்டப்பட்டு வருகிறது. பூகோள நிதியியல் நெருக்கடி வெடித்து ஏழு ஆண்டுகளுக்குப் பின்னர், அங்கே எந்த மீட்சியும் தென்படுவதாக இல்லை. அதற்கு முரணாக, பொருளாதார ஆய்வறிக்கையோ உற்பத்தி நடவடிக்கைகளால் அல்லாமல் இலாபங்கள் ஊகவணிக வழிவகைகளால் திரட்டப்படுகின்ற கட்டுக்கடங்கா ஒட்டுண்ணித்தனத்தின் விளைவுகளால் உருவாக்கப்பட்ட ஒரு புதிய நிதியியல் நெருக்கடியின் அதிகரித்த அறிகுறிகளால் நிறைந்துள்ளது. “வழமையான" நிலைமைகளுக்கு திரும்புவதற்கான எந்த அறிகுறியும் இல்லாமல், பணச்சுருக்கம், மந்தநிலைமை மற்றும் ஒட்டுமொத்த கீழறக்கம் ஆகியவை உலக பொருளாதாரத்தைப் பிடித்து தொங்கி கொண்டிருக்கின்றன.

அமெரிக்க பெடரல் ரிசேர்வ் முன்னணி பாத்திரம் வகிக்கும் நிலையில் மத்திய வங்கிகள், அவற்றின் நடவடிக்கைகளுக்கு வழிகாட்ட எந்தவித பொருத்தமான கொள்கையும் இல்லாமல், ஒரு சீர்குலைந்த நிலையில் உள்ளன. பெடரலின் அடிப்படை வட்டிவிகிதத்தில் வெறும் 0.25 சதவீத உயர்வே கூட ஒரு புதிய நிதியியல் உருகுதலைத் தொடங்கி வைத்துவிடும் அபாயத்தைக் குறித்து பெடரல் அஞ்சுவதிலிருந்தே இது நிரூபணமாகிறது.

உலகளாவிய சந்தைகளுக்கான போட்டியில் சிறந்த இடத்தில் இருப்பதற்காக, உலகெங்கிலும் அரசாங்கங்கள், அவற்றின் சொந்த நாணயங்களை மதிப்பிறக்கம் செய்ய முயன்று வருகின்றன. இது 1939 இல் இராணுவ மோதல் வெடிப்பதற்கு இட்டுச் சென்ற 1930களின் நாணய மற்றும் வர்த்தக போர்களை நினைவூட்டுகிறது.

ஐக்கிய நாடுகள் சபை ஒருபோதும் உலக சமாதானத்தை ஸ்தாபிப்பதற்கான ஓர் அமைப்பாக இருந்ததில்லை. அது ஏகாதிபத்திய ஆதிக்க சக்தியான அமெரிக்காவின் தலைமையின் கீழ், போருக்குப் பிந்தைய ஒழுங்கமைப்பில் மேலாதிக்கம் பெறுவதற்கான அதன் உந்துதலின் பாகமாக நிறுவப்பட்டது. அந்த மேலாதிக்கம், அமெரிக்க பொருளாதாரத்தின் நிகரற்ற தொழில்துறை பலத்தின் அடித்தளத்தில் அமைந்திருந்தது. அது நீண்டகாலத்திற்கு முன்னரே அழிக்கப்பட்டுபோனதால், அமெரிக்க ஆளும் வர்க்கம் போதுமானளவிற்கு வளைந்துகொடுக்காத அரசாங்கங்களை கவிழ்க்கவும், ஐரோப்பா மற்றும் ஜப்பானில் உள்ள அதன் பெயரளவிலான கூட்டாளிகள் உள்ளடங்கலாக அதன் போட்டியாளர்களுக்கு எதிராக அதன் பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் பலத்தை அதிகரிக்கவும் அதன் இராணுவ மேலாதிக்கத்தின் மீது அதிகரித்தளவில் தங்கியிருக்க இட்டுச் சென்றுள்ளது.

ஜேர்மனி இனியும் அது வெறுமனே ஓர் ஐரோப்பிய சக்தியாக செயல்பட முடியாது, மாறாக அதன் உலகளாவிய நலன்களை முன்னெடுக்க வேண்டியுள்ளதாக வலியுறுத்துகிறது. ஜப்பானில் அபே அரசாங்கமும் ஓர் உலகளாவிய பாத்திரத்தை வலியுறுத்துகின்ற நிலையில் அதன் இராணுவ நடவடிக்கைகள் மீது திணிக்கப்பட்டிருந்த தடைகளை முற்றிலுமாக நீக்குவதை நோக்கி பிரதான டிகளை எடுத்துவைத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை சமாதானத்திற்கான ஒரு கருவியல்ல, மாறாக அதற்கு முன்னோடி அமைப்பான சர்வதேச சங்கத்தை (League of Nations) லெனின் குணாம்சப்படுத்தியதைப் போல, அதுவொரு "திருடர்களின் சமையலறை" ஆகும். அது, ஒன்றுடன் ஒன்று போட்டியிடும் சக்திகள் சதி சூழ்ச்சிகளின் வழிவகைகளைக் கொண்டு அவற்றின் முரண்பாடான நலன்களை நடைமுறைப்படுத்த முயல்வதற்குரிய ஓர் அமைப்பாகும். போரை உருவாக்கிய இலாபநோக்கு அமைப்புமுறையை தூக்கியெறிவதே அதை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒரே வழிவகை என்று லெனின் வலியுறுத்தினார், இத்தீர்மானம் மீண்டுமொருமுறை உலகளாவிய சம்பவங்கள் மூலமாக ஊர்ஜிதப்படுத்தப்பட்டு வருகிறது.