World Socialist Web Site www.wsws.org


WSWS: செய்திகள் & ஆய்வுகள்

As G8 summit meets

Debt stranglehold tightens

G-8 உச்சிமாநாடு கூடும்போது கடன் குரல்வளை பிடியை நெருக்குகின்றது

By Nick Beams
22 July 2000

Back to screen version

1999 ல் ஜேர்மனியின் cologne நகரத்தில் ஏழு முக்கிய முதலாளித்துவ நாடுகளும் ரஷ்யாவும் G-8 உச்சிமாநாட்டில் சந்தித்தபின்னர் உலகத்திலுள்ள வறியநாடுகளின் குரல்வளையை சுற்றியுள்ள கடன்பிடி தளர்ந்துவிடுமென தெரிவிக்கும் அறிக்கைகளால் வானம் நிரம்பியிருந்தது.

வறியநாடுகளுக்கான 100பில்லியன் கடன் வெட்டப்பட முன்வந்துள்ளமை "உலகின் வறியநாடுகள் வளர்ச்சியடைவதற்கும், சுதந்திரத்திற்குமான உதவியில் ஒரு வரலாற்றுப்படியென" அமெரிக்க ஜனாதிபதி அறிவித்தார். பிரித்தானிய பிரதமர் அவரது பாணியான போலித்தனத்துடன் "இது பாரிய முன்னோக்கிய அடி எனவும், ஆரம்பகக்டனான பில்லியன் கணக்கான டொலர்களை நாங்கள் இல்லாமல் செய்யவுள்ளோம். இம்மாநாடு நாங்கள் பலவருடகாலம் எதிர்நோக்கிய கடன் தொடர்பாக பாரிய முன்னேற்றத்தை குறிக்கும்" என தெரிவித்தார்.

ஆயிரக்கணக்காக 1999இல் ஜேர்மனின் cologne நகரத்திலும்,1998 இல் இங்கிலாந்தின் Birmingham நகரத்திலும் கூடிய கடன்-எதிர்ப்பு ஆர்ப்பாட்டக் குழுக்களும் கூட இவ்வுடன்பாடு முன்னோக்கிய படியென்ற கருத்தை முன்வைத்தனர்.

ஒரு வருடத்தின் பின்னர் தென் ஜப்பானிய தீவான Okinawa TM G8 இன் தலைவர்கள் 2000 உச்சி மாநாட்டிற்காக கூடியபோது cologne உச்சிமாநாட்டில் கூறப்பட்ட கருத்துக்கள் நோய்களாலும், ஏழ்மையாலும் அகால மரணத்திற்கு காரணமான கண்டனத்திற்குரிய மில்லியன்களான அழிவுகரமான கடன்களின் இன்னுமொரு கசப்பான நினைவுபடுத்தலாகும்.

கடன்விலக்கலில் உறுதிகூறிய 40 நாடுகளிலில் 10 நாடுகள் மட்டுமே உண்மையாக கடன் குறைப்பு திட்டத்தில் ஈடுபட்டதுடன், ஒரு நாடு மட்டுமே கடன்களை இரத்துச்செய்தது.

2000 Jubilee நிறுவனரான Anne Pettifor இன் கருத்தின் படி "ஒரு குழுக்களின் கூட்டு கடன் குறைப்பிற்கு அழைப்புவிடுகையில், உலக வங்கியாலும் சர்வதேச நாணய நிதியத்தாலும் கூடிய கடனுள்ள ஏழ்மை நாடுகளுக்கான திட்டத்தின் கீழ் முன்வைக்கும் உதவிகளுள் ஏற்றுக்கொள்ள முடியாத நிபந்தனைகள் இணைக்கப்பட்டுள்ளன".

"முழு நோக்கமும் இவ்வகை அடிமைத்தனத்தையும், நவீன-காலனித்துவத்தையும் இல்லாதொழிப்பதாக இருக்கையில் சர்வதேச நாணய நிதியம் இதற்கு மாறாக இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இந்நாடுகளின் பொருளாதாரத்தின் மீது தனது கட்டுப்பாட்டை திணிக்கமுயல்கின்றது என" அவர் மேலும் தெரிவித்தார்.

Oxfam International பேச்சாளரான Phil Twyford இக்கடனுதவி "உறைநிலையை அடைந்துள்ளதாகவும்" cologne உச்சி மாநாட்டில் வழங்கப்பட்ட "வரலாற்று வாக்குறுதிகள்" அனைத்தும் "காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளதாகவும்" தெரிவித்துள்ளார்.

2000 Jubilee இன் புள்ளிவிபரங்கள் 10 நாடுகள் கடன்விலக்கல் திட்டங்களை நடைமுறைப்படுத்திய போதும், இதனூடான கடன்விலக்கல் உதவியை பெற்றுள்ள நாடுகள் தமது சுகாதார சேவைகளுக்கான செலவைவிட மூன்றுமடங்கு பணத்தை வங்கிகளுக்கும், சர்வதேசநிதி நிறுவனங்களுக்கும் திரும்ப செலுத்துகின்றன என்பதை எடுத்துகாட்டுகின்றது. cologne இல் உறுதியளிக்கப்பட்ட 100 பில்லியன் டொலாில் இவ்வருட இறுதிவரை 15 பில்லியன் மட்டுமே மீளப்பெறப்படவுள்ளது. 2005 ம் ஆண்டளவில் அல்லது அதற்கு பின்னர் இது 90 பில்லியனை அடையுமெனவும் மிகுதி 10 பில்லியன் ஒருபோதும் நீக்கப்படப்போவதில்லை.

தற்போது இக்கடன் மேலும் குரல்வளையை நெருக்கத்தொடங்கியுள்ளது. வறுமையான நாடுகளிலிருந்து சர்வதேச வங்கிகளுக்கும், நிதி நிறுவனங்களுக்கும் தினமும் 60 மில்லியன் டொலா் மாற்றப்படுவதாக கணிப்பிடப்பட்டுள்ளது. இதற்கான சமூகச் செலவீனம் கணிப்பிடப்பட்டுள்ளது. உதாரணமாக சுகாதார சேவைகளுக்கும், கல்வி சேவைகளுக்கும், சுத்தமான குடிநீருக்கும் செலவிடுவதற்கு பதிலாக வெளிநாட்டு கடன் வழங்குபவர்களுக்கு செலுத்தப்படுவதால் நாளாந்தம் 19,000 குழந்தைகள் இறக்கின்றன.

கூடிய கடனுள்ள ஏழ்மை நாடுகளுக்கான திட்டத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றமுடியாது போனதால் பல ஏழ்மையான நாடுகள் எந்தவொரு உதவியும் வழங்கப்படாமல் உள்ளன. உதாரணமாக தனிமனித வருமானம் 300 டொலருக்கு குறைவாகவுள்ளபோதும், வருடாந்த ஏற்றுமதிக்கும் கடனுக்குமான விகிதம் 250 க்கும் அதிகமாக இருக்கின்றபோதும் நைஜீரியாவுக்கு எந்தவொரு உதவியும் வழங்கப்படாதுள்ளது. இதேபோல் லத்தீன் அமெரிக்காவின் ஏழ்மையான நாடான ஹைட்டியில் இதேபோல் கடனுக்கும் ஏற்றுமதிக்குமான விகிதம் 171 ஆக இருப்பதால் கடனுதவி மறுக்கப்பட்டுள்ளது.

வரவுசெலவு திட்டத்தின் மீதான வெட்டுக்கள் மூலமாகவும், "மறுசீரமைப்பு திட்டங்களாலும்" இந்நிபந்தனைகளை அடையமுயலும் நாடுகளுக்கு கூட எவ்வித முன்னேற்றம் அல்லது சிறியளவு முன்னேற்றமும் இல்லை. இதற்கு மாறாக தன்சானியாவில் காணப்படுவதைப் போல் நிலைமை இன்னும் மோசமடைகின்றது.

அங்கு கடந்த மே மாதம் தனது மொத்தவரவு செலவில் 27% இற்கு மேலாக [இது 1 பில்லியன் டொலருக்கு மேலாக என மதிப்பிடப்பட்டுள்ளது] வெளிநாட்டு கடன்களுக்காக செலுத்தப்பட்டுள்ளது. இது கூடிய கடனுள்ள ஏழ்மை நாடுகளுக்கான திட்டத்தினுள் நுழைவதற்கு முன்னர் இருந்ததை விட அதிகமானதுடன், இவ்வருடத்தில் 290பில்லியன் டொலா் செலுத்தவேண்டியுள்ளது.

அநேகமான ஆபிரிக்க நாடுகள் வெளிநாட்டுக் கடனுக்காக தமது வருடாந்த வரவு-செலவில் 2/5 பகுதியை செலுத்தவேண்டியுள்ளதுடன் நிலமை இன்னும் மோசமடைகின்றது.

1990 ம் ஆண்டுகளில் அவர்கள் கடன் செலுத்துமதிகளாக 105 பில்லியன் டொலரினை முக்கிய முதலாளித்துவ கடன் வழங்கு நாடுகளுக்கு மாற்றம் செய்துள்ளன. இதனையும் விட நிலுவையிலுள்ள கடனின் அளவு 1998 இல் 230 பில்லியன் டொலராக ஆக அதிகரித்துள்ளது.1988 இல் இருந்து கடனின் 65% ஆன அதிகரிப்பானது புதிதாக பெற்ற கடன்களால் அல்லாது முன்னர் பெற்ற முதலுக்கான வட்டியினதும், நிலுவைகளினதும் உள்ளடக்கமாகும். 1980 இற்கும் 1997 இற்கும் இடையே ஒவ்வொரு வருடமும் 7.4% ஆல் கூடிய கடனுள்ள ஏழ்மை நாடுகளுக்கான திட்டத்தின் கீழ் கடன் அதிகரித்துள்ளபோது அந்நாடுகளின் மொத்த தேசிய உற்பத்தி வருடாந்தம் 1.1% ஆல் மட்டுமே அதிகரித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித அபிவிருத்தி திட்டத்தின்படி ஆபிரிக்க நாடுகளால் கடனுக்காக செலவளிக்கப்பட்ட பணத்தின் மூலம் ஒவ்வொரு வருடமும் 7 மில்லியன் குழந்தைகளின் உயிர்களை காப்பாற்றியிருக்கலாம். இதன் கருத்து என்னவைனில் இதன் மூலமாக இவ்வருடத்தில் இன்றுவரை மட்டும் 3 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் இறந்துள்ளன.

இவ்வருட உச்சி மாநாடும் ஏழ்மையை முடிவிற்கு கொண்டுவரும் தேவைக்கான வழமையான வார்த்தை ஜாலங்களுடன் இணைந்துள்ளது. உலக வங்கித் தலைவரான James Wolfenson "வழமையான நடைமுறை" பாணியில் அணுகவேண்டாம் எனக் கோரி G8 தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அவர் மேலும் " இவ் உலகத்தில் பணம் படைத்தோர் மேலும் பணக்காரர் ஆவதும் ஏழை நாடுகள் கைவிடப்படுவதும் பாதுகாப்பாகவும் ஸ்திரத்தன்மையுடையதாகவும் இருக்காது. மேலும் கடன் சுமையை இலகுவாக்கும் "விரைவான இணக்கமான" முறைகளுக்கு அவர் அழைப்புவிடுத்தார்.

Okinawa இற்கு வரமுன்னர் விடுத்த அறிக்கையில் கிளின்டன் "இவ் உச்சிமகாநாடு கடந்த வருடத்தின் முன்னெடுப்பின் அடித்தளத்தில் கட்டப்படும் எனவும், தொற்று நோய்களுக்கு எதிரான போராட்டமும் கல்வியறிவிற்கான வசதிகளை பெருக்குதலும் தகவல் தொழில்நுட்பத்தின் ஊடாக சந்தர்ப்பங்களை அதிகரிக்கவும் ஒரு கட்டமைப்பு உருவாக்கப்படுமெனவும் " கூறியுள்ளார்.

நைஜீரிய ஜனாதிபதியான Olusegun Obasanjo பத்திரிகையாளர் மாநாட்டில் "நாங்கள் என்ன செய்யவேண்டும் என்பது ஒரு கேள்வியல்ல. நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது எமக்கு தெரியும். கேள்வி என்னவெனில் எமக்கு அரசியல் நோக்கம் இருக்கின்றதா என்பதுதான்" எனக் கூறியுள்ளார்.

கடந்த கிழமை பிரான்ஸ் ஜனாதிபதி சிராக் வறுமையான நாடுகளுக்கு கிடைக்கும் மருத்துவ வசதியின் அளவை அதிகரிக்க G8 அங்கத்தவர்களுக்கு அழைப்பு விடப்போவதாக தெரிவித்தார்.

ஆனால் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. வியாழக்கிழமை G7 தலைவர்களுக்கும் G77 குழு நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் இடையேயான ரோக்கியோ மாநாட்டில் கிளின்டனுக்கு பதிலாக கலந்துகொண்ட அமெரிக்க திறைசேரி செயலாளரான Lawrence Sommers ஏழ்மையான நாடுகளுடன் இணைந்து இயங்கும் பலதரப்பட்ட விடயங்கள் குறித்து மாநாடு இறுதிமுடிவு எடுக்கமென கூறினார். ஆனால் மேலதிக கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

கனேடிய பிரதமரான Jean Chretin யப்பானிய பிரதமரான Yoshiro Mori ஐ சந்தித்தபின்னர் உலக வங்கியாலும் சர்வதேச நாணய நிதியத்தாலும் திணிக்கப்படும் அழிவிற்குரிய நிபந்தனைகளை பாதுகாத்தார். அவர் "அவர்கள் ஆயுதம் வாங்குவதற்கும், நட்சத்திர யுத்தத்திற்கும் நாங்கள் கடன்விடுப்பை செய்யப்போவதில்லை" என தெரிவித்தார்.

இறுதி அறிக்கைகளில் ஏழ்மையை முடிவுகட்டும் சில வார்த்தைகளும், கடன்களை இல்லாதொழிக்கும் வாக்குறுதிகளும் இருக்கும் என்பதில் எவ்வித ஐயுறவுமில்லை. அவை இதற்கு முந்திய வாக்குறுதிகள் போல் வெறுமையானவை என்பதை நிரூபிக்கும். இதேவேளை உலக முதலாளித்துவத்தின் நிதிநிறுவனங்கள் உலகின் ஏழ்மையான நாட்டு மக்களின் இரத்தத்தை உறுஞ்சும் "வழமையான நடைமுறையை" தொடர்கின்றன.

Top of Page

வாசகர்களே: உலக சோசலிச வலைத்தளம்(WSWS ) உங்கள் விமர்சனங்களை எதிர்பார்க்கிறது. தயவுசெய்து மின்னஞ்சல் அனுப்பவும்.


Copyright 1998-2000
World Socialist Web Site
All rights reserved