World Socialist Web Site www.wsws.org


WSWS: செய்திகள் & ஆய்வுகள்

 

Canada:Parti Quebecios convention meets as support for separation wanes.

பிரிவினைவாதத்திற்கான ஆதரவு வீழ்ச்சிகாண்கையில் கியூபெக்கிய கட்சி மாநாட்டை நடாத்துகின்றது.

By Guy Leblanc

6 May 2000

Back to screen version

கியூபெக் மாநில அரசாங்கத்தினை உருவாக்கிய பிரிவினைவாத கட்சியான Parti Quebecois மே மாதம் 5ம் திகதியிலிருந்து 7ம் திகதிவரை தனது நாலாண்டுக்கு ஒருமுறை நடாத்தும் மகாநாட்டை கூட்டியுள்ளது. 18 மாதங்களுக்கு முன்னர் றினி திரும்பத் தேர்வுசெய்யப்பட்ட போதிலும் பிரதமர் Lucian Bouchard ம் அவரது அமைச்சர்களும் கடந்த மாதங்களின் அரசின் முடிவு குறித்த கருத்துக்களுக்கு எதிரான கடும்பிரயத்தனங்களை செய்யவேண்டியிருந்தது.

கடந்த வருடத்தின் கருத்துக்கணிப்பெடுப்பின் கூடுதலானவை பெரும்பாலான கியூபெக்கினர் றினி அரசுடன் அதிருப்தி அல்லது மிகஅதிருப்தி அடைந்திருப்பதாக எடுத்துக்காட்டுகின்றன. றினி யின் "சுதந்திர அரசு" திட்டத்திற்கு அதாவது முதலாளித்துவ கியூபெக் குடியரசை கனடாவடன் புதிய பொருளாதார அரசியல் "கூட்டு" மூலம் இணைத்திருப்பதற்கான ஆதரவு 40% ஆகவே உள்ளது.

றினி யின் கடைசிச் செயற்திட்ட மகாநாடு மாநிலரீதியான சர்வசனவாக்கெடுப்பின் மூலம் கனடாவிலிருந்து கியூபெக் பிரிவதற்கான பெரும்பான்மை ஆதரவை வெற்றிகொண்டு ஒருவருடத்தின்பின் 1996 நவம்பரில் நடைபெற்றது. 1995 தேர்தலில் 49.4% ஆதரவை பெற்ற உற்சாகத்தில் 21ம் நூற்றாண்டின் உதயத்தின் போது பிரிவிற்கான வெற்றிகரமான சர்வசனவாக்கெடுப்பில் "வெற்றிபெறுவதற்கான நிலைமைகள்" பரிசீலிக்கப்படும் என றினி இன் தலைவர்கள் உறுதியாகக் கூறினர்.

றினி யும் கனடாவினல் பெருமூலதனத்தின் வர்க்கப்போரும்.

எவ்வாறிருந்தபோதிலும் தீவிரமான வேறுபட்ட காரணங்களால் றினி உழைக்கும் மக்கள் மத்தியிலும் கியூபெக்கின் பொருளாதாரத்தட்டினரிடமும் தனது ஆதரவை இழந்துள்ளது.

1995 சர்வசனவாக்கெடுப்புப் பிரசாரத்தில் Bouchart ம் அப்போதைய றினி தலைவரும் கியூபெக்கின் பிரதமருமான Jacques Parizeau ம், தொழிற்சங்க அதிகாரத்துவத்தினுள் இருந்த றினி இன் ஆதரவாளர்களும் சுதந்திர கியூபெக்கானது வடஅமெரிக்காவை அடித்துச்செல்லும் வலதுசாரிப்போக்கிற்கு எதிரான பாதுகாப்பு அரணாக இருக்கும் எனக்கூறி தொழிலாள வர்க்கத்திடம் வாய்ச்சவடலான கோரிக்கை விட்டனர். ஆனால் 1996 ஜனவரியில் றினி யின் தலைமைக்கு Bouchard வந்தவுடன் கூறியது என்னவெனில் கியூபெக்கின் சுதந்திரத்திற்கு தயார்செய்வற்கு முக்கியமான வழிஎன்னவெனில் மாநிலத்தின் வரவுசெலவுத்திட்டத்தில் ஒவ்வொருவருடமும் துண்டுவிழும் தொகையான 6$ பில்லியன் ஐ பொதுச் சேவைகளுக்கான செலவிலிருந்து வெட்டுவதன் மூலம் இல்லாமல் செய்யவேண்டும் என்பதாகும்.

"தேசிய ஒற்றுமை" என்பதன் கீழ் கியூபெக்கின் தொழிற்சங்கத் தலைமைகள் பெருவர்த்தகப்பிரதிநிதிகளுடன் இணைந்து பொருளாதார மகாநாடு ஒன்றில் 2000ம் ஆண்டில் இத்துண்டுவிழும் தொகையை இல்லாமல் செய்யவேண்டும் என்பதே அரசின் முக்கிய நோக்கம் என்ற Bouchard இன் கோரிக்கையை சம்பிரதாயமாக நிறைவேற்றினர். அதாவது நடைமுறையில் சுதந்திரத்திற்குச் சாதகமான வாக்கைப்பெறும் "வெற்றி பெறுவதற்கான நிலைமைகள்" பரிசீலிக்கப்படும் என்பது றினி முதலாளித்துவத்தின் வர்க்க யுத்த நோக்கங்களை பாதுகாக்கும் நிலைப்பாட்டை எடுத்துள்ளது என்பதை முக்கிய முதலாளிகளுக்கு எடுத்துக்காட்டுவதாகும்.

எவ்வித ஐயுறவுமில்லாது, சமூக, பொதுச்சேவைகளில் பாரியவெட்டுக்களை நடைமுறைப்படுத்தியதில் றினி வகித்த பங்கே பரந்த ஆதரவினை இழந்ததிற்கான முக்கியகாரணமாகும். தாதிமார் கடந்த கோடைக்காலத்தில் 3 கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தபோது வேலைநிறுத்த எதிர்ப்பு சட்டமூலத்தை எதிர்க்க மறுத்தமையால் அரசாங்கம் அரசியல்ரீதியாக தனிமைப்பட்டிருந்ததாக உணர்ந்ததுடன் இவ் எதிர்ப்பு இயக்கத்தை கீழ்பணியச்செய்ய தனது கூட்டான தொழிற்சங்க அதிகாரத்துவத்தில் தங்கியிருக்கவேண்டியிருந்தது. றினி அரசானது அரசச்செலவை வலதுசாரி ரோறி (Tory) அரசாங்கத்திலும் பார்க்க வெளிப்படையாகக் குறைத்துள்ளது. அண்மையில் 7.5 இலட்சம் மக்களைக்கொண்ட மாநிலத்தில் 100,000 பேர் சத்திரசிகிச்சைக்காக காத்திருக்கவேண்டியுள்ளது என்பதை ஏற்றுக்கொண்டுள்ளது.

றினி யின் மாநில அரசு தொடர்பாகவும் மற்றைய சமஷ்டி, தாராளவாத அரசுகளுக்கும் இடையேயான பெருமுதலாளித்துவத்தின் அணுகுமுறையில் குறிப்பிட்ட சமாந்தரத்தன்மையை காணலாம். அவர்கள் இவ்வரசுகள் தமது முதல்பதவிக்காலத்திலேயே செலவீனங்களை வெட்டுவதை ஊக்குவிக்கின்றன. ஆனால் இவை "பற்றாக்குறைக்கு எதிரான போராட்டம்" கடந்தகாலப் போராட்டம் என நம்புகின்றன. இப்போது இவை இவ் அரசாங்கங்களை கம்பனிகளினதும் தனியாரினதும் வருமானவரிகளை மூர்க்கமாக அழிக்க கூறுவதுடன் சுற்றுச்சூழல், தொழில், மற்றும் ஏனைய சட்டங்களை வெட்டவும் சுகாதாரசேவை, கல்வி, ஏனைய பொதுச்சேவைகளை பாரிய தனியார் முதலீட்டிற்கு திறக்க அனுமதியளிக்கவும் கோருகின்றன.

Counsil du patronai என்ற அமைப்பின் தலைவரான Gilles Taillon இன் கருத்துப்படி "கியூபெக் கூட்டத்தின் முக்கியபணி என்னவெனில் றினி அரசின் சமூகபொருளாதார முன்னுரிமைகளில் அடிப்படையான மறுஒழுங்கமைப்பு அவசிய தேவையாக உள்ளது" என்பதாகும்.

Taillon Globe and Mail என்ற பத்திரிகைக்கு "சந்தை முக்கியபங்கு வகிக்க வலியுறுத்த அனுமதியளிக்கும் ஒரு (சர்வதேச) சூழ்நிலையில் நாங்கள் ஒரு சமூக ஜனநாயக நாடாக இருக்க முடியாது. கியூபெக்கில் கூடியளவு அரசு இருப்பதுடன் போதியளவு சந்தை இல்லை என நான் நினைக்கின்றேன்" என கூறியுள்ளார்.

Taillon சுகாதாரசேவையை வழங்குவதில் தனியார்துறையை போட்டியிட விடுமாறு றினி அரசை தூண்டிவிடுகின்றார். அவர் கல்வித்துறையில் மேலும் வெட்டுக்களை செய்ய வேண்டும் எனக்கோருகின்றார். மேலும் "நீங்கள் இந்த வேலைகளை செய்ய நிராகரித்தால் எமது முன்னோக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிக்கு ஆதரவு கொடுப்போம் என்பதை கூறவேண்டியிருக்கும் என அராங்கத்திற்கு நாம் கூறுவோம்" எனவும் கூறியுள்ளார்.

Taillon இன் கருத்துப்படி றினி யின் அமைச்சர்கள் "நீங்கள் முன்மொழிவது மிகப்பிரயோசனமானதாக இருக்கின்றது ஆனால் அவர்கள் பெரிய தொழிற்சங்கங்களை வெளிப்படையாக எதிர்நோக்க முற்றும் பயமடைந்து இருக்கின்றனர்" என்பதை தனிமையில் ஒத்துக்கொள்வார்கள்.

இது, றினி யிற்கும் பெருவர்த்தகர்களுக்கும் இடையே அதிகரித்துவரும் வேறுபாட்டிற்கான இன்னொரு காரணியை சுட்டிக்காட்டுகின்றது. றினி விற்கும் தொழிற்சங்க அதிகாரிகளுக்குமிடையேயுள்ள நெருங்கிய உறவு Bouchards இன் அரசு பொதுச்சேவைகளை அழித்தொழிக்கச்செய்யக்கூடியதாக இருப்பதற்கான முக்கிய காரணமாகும். தொழிலாளர் மீதான தொழிற்சங்கங்களின் கட்டுப்பாட்டின் இயலாமையை முதலாளிகள் உணர்ந்து கொண்டபோதும் ஒன்ராரியோவில் ரோரி அரசு தொழிற்சங்க உரிமைகள் மீது சுமத்திய கட்டுப்பாடுகளை பகைமையுடன் பார்க்கின்றனர். கடந்த கோடைக்காலத்தில் தாதிமார் நிராகரித்த தொழிற்சங்கத்தின் உடன்பாட்டினால் தோல்வியடைந்த வேலைநிறுத்தப் போராட்டத்தின் பின்னர் பல பத்திரிகையாளர்கள் தொழிற்சங்கங்களிற்கும் அரசுக்கும் பெருவர்த்தகத்திற்கும் இடையேயான "கியூபெக்மாதிரி" (Quebec Model) என அழைக்கப்படும் கூட்டுழைப்புவாதத்தன்மை தொடர்பாக கேள்விக்குறி எழுப்பியிருந்தனர்.

 

 

 

 

வாசகர்களே: உலக சோசலிச வலைத்தளம்(WSWS உங்கள் விமர்சனங்களை எதிர்பார்க்கிறது. தயவுசெய்து மின்னஞ்சல் அனுப்பவும்.



Copyright 1998-2000
World Socialist Web Site
All rights reserved