World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : ªêŒFèœ ÝŒ¾èœ

The workers Leaque and the Labor Party Demand

வேர்க்கஸ் லீக்கும் தொழிற்கட்சி கோரிக்கையும்

Back to screen version

தொழிற்கட்சி பிரச்சனையின் முக்கியத்துவம்

The Significance of the Labor Party Question

வேர்க்கஸ் லீக்கின் வரலாற்றில் தொழிற்கட்சி விவகாரம் ஒரு மையப் பாத்திரத்தினை வகித்தது. ஒரு தொழிற்கட்சியை அமைக்கும்படி விடுத்த அழைப்பானது, ஒரு கிளர்ச்சி பிரச்சார உபாயம் என்பதற்கும் அப்பாற்பட்ட ஒன்றாக விளங்கியது. இது அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர அபிவிருத்தியின் ஒரு திட்டவட்டமான மூலோபாய கருத்துப்பாட்டை உள்ளடக்கியிருந்தது.

உண்மையிலேயே வேர்க்கஸ் லீக்கினால் தொழிற்கட்சி பிரச்சனை தொடர்பாக அபிவிருத்தி செய்யப்பட்ட வேறுபட்ட வழிகள், எமது கட்சியின் அரசியல் பரிணாமத்தினுள்ளும், ஐக்கிய அமெரிக்காவின் வர்க்கப் போராட்டத்தின் புறநிலை அபிவிருத்தியினுள்ளும் ஒரு ஆழமான பார்வையை செலுத்த உதவுகின்றது.

வேர்க்கஸ் லீக் 1966 இலையுதிர் காலத்தில் அமைக்கப்பட்டது. இது தொழிலாள வர்க்கத்தினதும், இளைஞர்களதும் தீவிரமயமாக்கத்தால் குணாம்சப்படுத்தப்பட்ட ஒரு காலப்பகுதியாகும். சிவில் உரிமை இயக்கம் தெற்கில் 1965 வரை பெரிதும் வன்முறையற்ற ஒரு அஹிம்சை எதிர்ப்பு இயக்கமாக விளங்கியது. வடக்கில் சகல பெரும் நகர மையங்கள் வன்முறைப் போராட்ட வெடிப்பினால் தாண்டிச் செல்லப்பட்டது. வியட்னாம் யுத்தத்திற்கு எதிரான மாணவர்களின் எதிர்ப்பு ஒரு பெரும் பண்பினைப் பெறத்தொடங்கியது. அதேசமயம் தொழிலாள வர்க்கத்தினுள்ளே அமைதியின்மைக்கான தெளிவான அறிகுறிகள் காணப்பட்டன. ஆசிரியர்களும் மற்றும் சமூகசேவை தொழிலாளர்களும் அணிதிரட்டப்பட்டதைத் தொடர்ந்து தொழிற்சங்க இயக்கம் துரிதமாக வளர்ச்சி காணத் தொடங்கியது. 1966ன் தொடக்கத்தில் நியூயோர்க் நகரில், சட்டத்தையும் மீறி நடாத்தப்பட்ட போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தினால் நகரம் பல வாரங்கள் ஸ்தம்பித்துப் போயிருந்தது.

சோசலிசத் தொழிலாளர் கட்சியின் (SWP) சீரழிவானது, கட்சியின் பாரம்பரியமான ஒரு தொழிற்கட்சியை அமைக்கும் அழைப்பைக் கைவிட்டதன் மூலம் தெளிவான முறையில் பிரதிபலித்தது. உண்மையில் இக்காலப்பகுதி பூராவும் தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டங்களில் இருந்து அது பெருமளவுக்கு தவிர்த்திருந்து.

வேர்க்கஸ் லீக், தொழிற்கட்சி கொள்கையை மீளாய்வு செய்கையில், அமெரிக்க முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தில் அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் மையமும் முன்னணியுமான பாத்திரத்தினை மீள வலியுறுத்தவும், அதேசமயம் ஒரு புரட்சிகர இயக்கத்தின் அபிவிருத்திக்கான தாக்குப்பிடிக்கக்கூடிய மூலோபாயத்தினை தெளிவுபடுத்தவும் நிஜமாக உழைத்தது.

வேர்க்கஸ் லீக்கின் ஸ்தாபக மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை குறிப்பிட்டதாவது;

''அமெரிக்கத் தொழிலாள வர்க்கத்தின் அபிவிருத்தியின் இக்கட்டத்தில் எமது மத்திய இடைமருவுக் கோரிக்கையானது, அமெரிக்கத் தொழிலாள வர்க்கத்தின் ஒரு கட்சியாக- ஒரு தொழிற் கட்சியை சிருஷ்டிப்பதாக இருக்கவேண்டும். தனிமைப்படுத்தப்பட்ட பொருளாதார போராட்டங்களில் இருந்து ஆளும் வர்க்கத்திற்கும் அதன் அரசியல் கருவிகளுக்கும் எதிராக, ஒரு அடிப்படையான அரசியல் போராட்டத்திற்குச் செல்வது இன்றியமையாதது என்பதை தொழிலாள வர்க்கத்திற்கு சுட்டிக்காட்டியாக வேண்டும். இதன் மூலம் தொழிற் கட்சி கோரிக்கையானது, அமெரிக்காவில் எமது சகல வேலைகளையும் ஒன்றிணைக்கும் கோரிக்கையாக மாறுகின்றது. எமது சகல பிரச்சாரங்களிலும் கிளர்ச்சிகளிலும் தொழிலாளர் வர்க்க இளைஞர்கள், தொழிற்சங்கங்கள், சிறுபான்மை மக்கள், யுத்தப் பிரச்சனையை சூழ இது ஊடுருவ வேண்டும்.

''இடம்பெறும் வர்க்கப் போராட்டங்களிலும், பெரிதும் நனவான போராளிகள் சம்பந்தப்பட்ட மட்டங்களிலும் தொழிற்கட்சி பற்றிய பொதுக் கருத்துப்பாட்டினை இணைக்கும் வகையில் நாம் தொழிற்கட்சி சுலோகத்தினை சூழ்ந்த எமது பிரச்சாரத்தினையும், கிளர்ச்சியையும் அபிவிருத்தி செய்வது முக்கியம். இந்தக் கருத்துப்பாட்டினை, வெறும் வடிவமாகவும், பொதுவான விதத்திலும் முன்வைப்பதை தவிர்க்க வேண்டும். இந்த விதத்தில் ஒரு தொழிற்கட்சி, அமெரிக்க தொழிற்சங்க இயக்கத்தினை அதன் முக்கிய தளமாகக் கொள்ளும் அதேவேளையில் இது இன்றும் உடனடியான எதிர்காலத்திலும் ஒரு தொழிற்கட்சிக்கான முக்கிய உந்துசக்தி கட்டாயம் தொழிற்சங்கங்களில் இருந்தே வந்தாக வேண்டும் என்பதைக் குறிக்கவில்லை. ஒரு தொழிற் கட்சிக்கான திசையிலான ஆரம்ப அபிவிருத்திகள் தெற்கில் உள்ள நீக்ரோ இயக்கங்களின் உள்ளோ, வடக்கின் சேரிகளின் நீக்ரோக்கள் மற்றும் சிறுபான்மை மக்களிடையேயோ, யுத்தப் பிரச்சனையைச் சூழவோ ஆரம்பிக்க முடியும். அத்தகைய சகல விடயங்களிலும் நாம் இந்த இயக்கங்களினுள் வர்க்கத்தின் பரந்த தட்டினரையும்- குறிப்பாக தொழிற்சங்க இயக்கம் நோக்கியும் திரும்பப் போராட வேண்டும். தொழிற்கட்சியை நோக்கிய இயக்கம், தொழிற்சங்க இயக்கத்திற்கு வெளியே அதன் ஆரம்பத்தைத் தொடங்கினாலும், அது ஒரு தீர்க்கமான சக்தியினுள் அபிவிருத்திக்கான முன்னர் அணிதிரண்ட தொழிலாளர் இயக்கத்தினுள் ஒரு தளத்தினை அபிவிருத்தி செய்தாக வேண்டும்.

மேலும் அத்தகைய இயக்கங்கள் ஒரு வர்க்கத்திற்கான முழுமையான இயக்கமாவதற்கு போராடுவதற்குப் பதிலாக, வெற்றி கொண்ட வர்க்க வேலைத்திட்டங்களின் மத்தியிலும் அவை இன்றுள்ள முதலாளித்துவக் கட்சிகளிடையே அவற்றை தூக்கிவீசுவதற்கு பதிலாக அவற்றிடையே சூழ்ச்சி செய்யும் ஒன்றாக மாறும்''.

இந்தப் பந்திகள் தெளிவாகச் சுட்டிக்காட்டுவதுபோல், தொழிற் கட்சிக்கான போராட்டம், தொழிற்சங்கங்களினுள் அதன் செல்வாக்கை நிலைநாட்டும் வேர்க்கஸ் லீக்கின் போராட்டத்துடன் இணைந்துள்ளது. 1966ல் தொழிற்சங்கங்களுக்கும், தொழிலாள வர்க்கத்திற்கும் இடையே இருந்துவந்த உறவுகளுக்கும், இன்றுள்ள உறவுகளுக்கும் இடையேயான பாரிய வேறுபாட்டை சுட்டிக்காட்டுவது அவசியமல்ல. பின்வருவதை மனதில் கொள்ளவும்;- வேர்க்கஸ் லீக்கின் ஆரம்பத்திற்கும், பிளின்ட் (Flint) உள்ளமர்வுப் போராட்டத்திற்கும் அதேபோல் இன்றைய அங்கத்தவர் கூட்டத்திற்கும் இடையில் இருந்த பலவருடங்கள் வித்தியாசம் இருப்பதை நினைவிற்கொள்ளவேண்டும். எமக்கு வியட்நாமில் அமெரிக்காவின் நேரடி இராணுவத் தலையீட்டின் முடிவினைக்காட்டிலும், அன்று இரண்டாம் உலகயுத்தத்தின் முடிவு எமக்கு மிகவும் சமீபகாலச் சம்பவமாகும். இரண்டாம் உலகயுத்தத்தின் படையாட்களாக இருந்தவர்களும் 1945-46ன் மாபெரும் தொழிற்துறை வேலைநிறுத்தங்களில் கலந்துகொண்டவர்களுமான தொழிற்துறை தொழிலாளர்களில் பலர் அன்று இந்த அறையில் உள்ளவர்களில் கணிசமானவர்களைக் காட்டிலும் வயதானவர்கள் அல்லர். அவர்கள் 40களின் நடுப்பகுதியில் இருந்தனர். உண்மையில் அன்று CIO கிளை அமைப்புக்கு இட்டுச் சென்ற போராட்டங்களில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை இன்னும் தொழிற்சாலைகளில் காணக்கூடியதாக இருந்தது. அன்றைய காலகட்டத்தில் தொழிற்சங்கங்களின் தலைவர்களில் பலர், முன்னைய போராட்டங்களுடனான தனியார் இனங்காணல் அவர்களின் சந்தர்ப்பவாதத்திற்கு ஒருவிதமான மூடுதிரையை வழங்கியது. அவர்களில் சிலரின் பெயரைக் குறிப்பிடின் UAW வின் ரொயிட்டர், மசே ரீம்ஸ்ராரின் ஜிம்மி ஹொப்பா (இவர் அணிதிரட்டும் உபாய அறிவினை பரோல் டொப்சிடம் இருந்து பெற்றதாக குறிப்பிட்டிருந்தார். அத்தோடு தொழிற்சங்கத்தில் தமது நெருங்கிய சகாவாக இவர் பெயர் குறிப்பிட்ட ஹரோல்ட் ஹிப்சன் SWP யுடன் தொடர்பு கொண்டிருந்தவர். ILWU வின் ஹரி பிரிட்ஜஸ், NMU வின் ஜேலர்ட், லோக்கல் 1199 ன் லியோன் டேவிஸ் இளம் தலைமுறையினரில் இருந்து வலதுசாரி ஷட்மன் வாதியான அல்பேர்ட் ஷங்கேர் மிகவும் முக்கிய புள்ளியாக விளங்கினார். இவரின் தேசிய செல்வாக்கு நியூயோர்க் ஆசிரியர் சம்மேளனத்தின் ஆளுமையை ஸ்தாபிதம் செய்த வேலைநிறுத்தங்களுக்கு தலைமை தாங்கியதை அடிப்படையாகக் கொண்டிருந்தது. இவர்கள் அனைவரும் படுமோசமான போக்கிரிகளாக விளங்கினர் ஆனால் இவர்கள் தொழிலாளர் வர்க்கத்தினுள் ஒரு வகையிலான நன்மதிப்பைக் கொண்டிருந்தனர். இவர்களின் நல்ல காலத்திற்கு இவர்கள் தொழிற்சங்கத்திற்கு தலைமை தாங்கினர். அமெரிக்க முதலாளித்துவத்தின் மேலாதிக்கம் கொண்ட உலக அந்தஸ்து, ஒரு வர்க்க சமரசக் கொள்கையை போஷித்து வளர்த்த ஒரு நிலைமையின் கீழேயாகும்.

அன்றைய சமயத்தில் தொழிற்சங்கங்களிலிருந்து விலகி சுயாதீனமான ஒரு தொழிற்கட்சியை அபிவிருத்தி செய்வது என்ற கேள்வி இருந்திருக்க முடியாது. 28 ஆண்டுகளுக்கு முன்னதாக 1938ல் ட்ரொட்ஸ்கி விளக்கிய மூலோபாய நிலைப்பாடு, அதன் செல்லுபடியாகும் தன்மையைக் கொண்டிருந்தது. யுத்தத்தின் குறுக்கீட்டினாலும், பின்னர் கம்யூனிச எதிர்ப்பு பிற்போக்கின் ஆரம்பத்தினாலும் நாசமாக்கப்பட்ட CIO வின் அரசியல் அபிவிருத்தி புதுப்பிக்கப்பட வேண்டியதாயிற்று. தொழிற் கட்சிக்கான கோரிக்கை, தொழிற்சங்க அதிகாரத்துவங்கள், ஜனநாயகக் கட்சியுடன் கொண்டிருந்த அரசியல் கூட்டின் கொள்கையின் மிகவும் ஆபத்தானதும், காயப்படுத்தக்கூடியதுமான புள்ளியில் தாக்கும் கருவியாக விளங்கியது.

தொழிற் கட்சிக்கான பிரச்சாரம் (1972- 1978)

Labor Party Campaigns (1972- 1978)

இதைத் தொடர்ந்து வந்த காலப்பகுதியில், வேர்க்கஸ் லீக் தொழிற்சங்கங்கங்களின் உள்ளேயான அதன் வேலைகளை, தொழிற் கட்சிக்கான பிரச்சாரம், கிளர்ச்சி என்ற அடிப்படையில் அபிவிருத்தி செய்தது. 1968- 75 இடைப்பட்ட வருடங்கள் தொழிற்துறை போர்க்குணத்தில் ஒரு மாபெரும் எழுச்சியைக் கண்டது. மின்சார தொழிற்துறை, மோட்டார் தொழிற்துறை, மேற்குக்கரைத் துறைமுகங்கள், 1970ல் தபால் தொழிலாளர்களின் வெளிநடப்பு, 1971ல் ஒரு வேலைநிறுத்தம் இல்லாமல் உருக்குத் தொழிலாளர்கள் வெற்றிகண்ட சம்பளத் தீர்வு 1971 ஆகஸ்டில் 15ல் சம்பளம், விலைகள் மீது 90 நாட்கள் சம்பள உறைவு கொள்கையை திணிக்கும் நிக்சனின் தீர்மானத்திற்கும் முத்தரப்பு- அரசாங்கம்- நிர்வாகம்- தொழிலாளர்- சம்பள சபையை நிர்மாணிக்கவும் தூண்டியது. சம்பள உறைவுக்காலம் முடிவடைந்ததும் வருடாந்த சம்பள அதிகரிப்பை 5.5 வீதத்திற்கு கட்டுப்படுத்துவது அதன் நோக்கமாக இருந்தது. இன்று அந்த அளவிலான வருடாந்த சம்பள அதிகரிப்பை வழங்குவது கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட தாராண்மையாகக் கணிக்கப்படும். AFL அமைப்பின் பிற்போக்கு மரபுகளதும், அரசியலதும் அவதாரமான ஜோர்ஜ் மீனி இதனை அமெரிக்கத் தொழிலாளர் மீதான ஒரு யுத்தப் பிரகடனமாகவும் அமெரிக்காவில் பாசிசத்தினை நோக்கிய முதலாவது அடியாகவும் கண்டித்தார். இருப்பினும் அவர் சம்பள சபையில் கடமையாற்ற இணங்கினார். மீனியும் அவரின் AFL-CIO சகாக்களும் சம்பள கட்டுப்பாட்டுச் சபையில் இருந்து வெளியேறி, 5.5 வீத வரையறையை உடைத்து எறியவேண்டுமென்ற கோரிக்கையை மையமாகக்கொண்ட ஒரு சக்திவாய்ந்த அரசியல் பிரச்சாரத்தினை தொழிற்சங்கங்களுள் வேர்க்கஸ் லீக் அபிவிருத்தி செய்தது.

அந்த பிரச்சார இயக்கம் 1972 கோடைகாலத்தின் ஆரம்பத்தில் ஏன் ஒரு தொழிற் கட்சி அவசியம் என்ற பிரசுரத்தின் மூலம் பரந்த பிரிவினருக்கு விளங்கப்படுத்தியது. அப்பிரசுரத்தின் சுமார் 75,000 பிரதிகளை நாம் விற்பனை செய்தோம். இன்னொரு பிரசுரம் தொழிற்துறை தொழிலாளர்களிடையே வோலசின் (wallace) செல்வாக்கின் பெருக்கத்தை தடைசெய்வதற்கான ஒரே சக்திவாய்ந்த சாதனம், தொழிற் கட்சியே என்பதை முன்னெடுக்க வோலஸ் உண்மையில் எங்கு நின்று கொண்டிருக்கின்றார், என்ற பிரசுரம் எழுதப்பட்டது.

இந்தப்பிரசுரங்கள் 1972 அக்டோபரில் சிக்காக்கோ நகர சம்மேளனத்தை அணிதிரட்ட வழிவகுத்ததோடு வேர்க்கஸ் லீக் அங்கு ''தொழிற்சங்கத்திற்கான தொழிற்சங்கக் கூட்டினை'' (TUALP) நிறுவியது. இம்மாநாட்டுக்கு தொழிற்துறையின் சகல முக்கிய துறைகளையும் சேர்ந்த தொழிலாளர்கள் வருகை தந்தனர். அதன் இரண்டாவது மாநாடு 1973 பெப்ரவரியில் சென்ட் லூசியில் நடைபெற்றது. 1975 மார்ச்சில் டெற்ரோயிட்டில் தொழிற்சங்கத்திற்கான தொழிற்சங்கக் கூட்டின் ஒரு வெற்றிகரமான மாநாட்டை கூட்டியபோது, அதில் 300 மேற்பட்ட பேராளர்கள் கலந்துகொண்டனர்.

இந்த வேலையின் அபிவிருத்தி ரிம் வொல்போர்த்தின் (Tim Wohlforth) பெரிதும் உறுதியற்ற நடைமுறைகளால் உருவாக்கப்பட்ட அரசியல் நெருக்கடியாலும் அவரின் வெளியேற்றத்தாலும் பாதிக்கப்பட்டது. அந்த நெருக்கடியைச் சூழவுள்ள சம்பவங்களை ஆய்வு செய்வதற்கான இடம் இதுவல்ல. எனினும் 1973- 74 காலப்பகுதியில் வொல்போர்த்தினால் அபிவிருத்தி செய்யப்பட்ட வெறிபிடித்த இளைஞர் நடவடிக்கைகள், தொழிற் கட்சிக்கான போராட்டத்தின் அடிப்படையில் தொழிற்சங்கத் துறையினுள் கட்சி இலக்காகக் கொண்டிருந்த நம்பிக்கையூட்டும் அரசியல் நடவடிக்கைகளின் பொறுமையுடன் கூடிய அபிவிருத்தியின் செலவிலாகும் என்பதை நினைவில் கொண்டாக வேண்டும். ஆனால் இந்தவேலை வொல்போர்த்தின் இராஜினாமாவின் பின்னர் ஆரம்பமாகியது. குறிப்பாக 1974 தேசிய வேலைநிறுத்தத்தில் சுரங்கத் தொழிலாளர்களிடையேயான கட்சியின் தலையீட்டுடன் ஆரம்பமாகியது.

ஒருவர் அக்காலப்பகுதிக்கான பத்திரங்களை ஆய்வு செய்யின், அவர் தொழிற் கட்சிக்கான போராட்டத்திற்கும் ஒரு புரட்சிக் கட்சி என்ற முறையில் வேர்க்கஸ் லீக்கின் அபிவிருத்திக்கும் இடையேயான உறவினை மிகவும் திட்டவட்டமாக தெளிவுபடுத்திக்காட்ட முயன்றுகொண்டதை கண்டுகொள்ளமுடியும். ஒரு புரட்சிக் கட்சியை ஸ்தாபிதம் செய்வதற்கான போராட்டம் அரசியல் ரீதியில் தெளிவற்ற பண்பினைக் கொண்ட ஒரு தொழிற் கட்சிக்கான கோரிக்கையினால் மங்கலாக்கப்படும் ஆபத்து இருந்துகொண்டுள்ளதை நாம் இனங்கண்டோம்.

எனவே நாம் 1975 நவம்பர் முன்னோக்கு பிரேரணையில் எழுதியதாவது: ''வேர்க்கஸ் லீக் ஆட்சிக்கான போராட்டத்தினதும், ஒரு பரந்த புரட்சிக் கட்சியை நிர்மாணிப்பதனதும் நிலைப்பாட்டில் இருந்து தொழிற் கட்சிக்காக போராடுகிறது. தொழிற்கட்சி, ஆட்சிக்கான போராட்டத்துக்கான தயாரிப்பில் தொழிலாள வர்க்கம் எடுக்கவேண்டிய அவசியமான முதல் நடவடிக்கையாகும். ஆனால் ஒருபோதும் ஏதோ ஒரு வகையான சர்வரோக நிவாரணியாகவும் ஒரு புரட்சிக் கட்சிக்கான பதிலீடாகவும் நோக்கப்படக்கூடாது''

1977 முன்னோக்குப் பிரேரணையில் மீண்டும், ''ஒரு தொழிற் கட்சிக்கான பிரச்சாரத்தினை அதிகரிப்பதன் அவசியத்தினை வலியுறுத்துகையில் தீர்க்கமான விவகாரம் வேர்க்கஸ் லீக்கினை கட்டி எழுப்புவதும், அதனை ஒரு பரந்த புரட்சிக் கட்சியாக பரிணாமம் செய்வதும் என்பதை தோழர்கள் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. நாம் இந்த நிலைப்பாட்டில் இருந்து மட்டுமே தொழிற் கட்சிக்காகப் போராடுகின்றோம்'' எனக் குறிப்பிட்டது.

1978 ன் முன்னோக்கு பிரேரணை

Perspectives Resolution of 1978

எவ்வாறிருப்பினும் இந்த எச்சரிக்கைகளுக்கு இடையேயும், தொழிற் கட்சிக்கான போராட்டத்தில் அரசியல் நிட்சயமற்ற தன்மை பற்றிய ஒரு அபிவிருத்தி தொடர்ந்து இருந்து வந்தது. மற்றொரு தொழிலாள வர்க்க கட்சியின் நிர்மாணத்துக்கான பொதுக் கோரிக்கையில் புரட்சிகர இயக்கத்தின் சுயாதீனப் பணி இழக்கப்பட்டுப்போகும் ஆபத்தினை நாம் இனங்கண்டோம். மேலும் தொழிற் கட்சிக்கான அழைப்பு, முறைப்படுத்தப்பட்ட விதம் தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு விடுக்கப்பட்ட ஒரு ''கோரிக்கையாக'' விளங்கியது. இது அதிகாரத்துவத்தின் சூழ்ச்சிகளுக்கு வேர்க்கஸ் லீக்கினை கீழ்ப்படியச் செய்யும் ஆபத்தினைக் கொண்டிருந்தது. UMw தலைமைக்கு எதிரான அங்கத்தவர்களின் ஒரு கிளர்ச்சியாகவும் சமஷ்டி அரசாங்கத்துடனான ஒரு மோதலாகவும் வடிவமெடுத்த 1977-78 சுரங்கத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தில் எமது தலையீட்டின் பின்னர், நாம் தொழிற் கட்சி பிரச்சனையை ஒரு மீளாய்வுக்கு உள்ளாக்கினோம். அந்த ஆய்வின் மத்தியில் 1954ல் கனன் அபிவிருத்தி செய்த நிலைப்பாட்டின் ஒரு விமர்சன மதிப்பீடு விளங்கியது. அது தொழிற் கட்சியை ஸ்தாபிதம் செய்வதற்கான உத்வேகம் தொழிற்சங்க அதிகாரத்துவத்தில் இருந்து வருமென வாதிட்டது.

ஆனால் வேர்க்கஸ் லீக் பின்வருமாறு வாதிட்டது.

''இது நடைமுறையில் தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு அடிபணிந்துபோவதை கருதுகிறது. AFL-CIO வின் முழு அனுபவமும் அது இரண்டு முதலாளித்துவக் கட்சிகளுக்கும் எதிரான தொழிலாள வர்க்கத்தின் நிஜமான சுயாதீனமான அரசியல் இயக்கத்தினை நாசமாக்க எதனையும் செய்யத் தயங்காது என்பதனைக் காட்டியுள்ளது. தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் எந்த ஒரு பிரிவினராலும் தலைமை தாங்கப்படும் எந்த ஒரு வகையறாவைச் சேர்ந்த அரசியல் இயக்கமும், மூன்றாவது கட்சியை அல்லது ''தொழிற்கட்சி'' என அழைத்துக் கொள்கின்ற ஏதோ ஒன்றோ முதலாளித்துவத்தின் சேலைத் தலைப்பில் இருந்து விடுபட்ட ஒரு நிஜமான அரசியல் உடைவாக எந்தவிதத்திலும் கருதாது.''

இப்பத்திரம் இன்னொரு விதத்தில் தீர்க்கமான முன்னேற்றத்தைக் குறித்து நின்றது. ஒரு தொழிற் கட்சிக்கான இயக்கம், தொழிலாள வர்க்கத்தின் ஒரு பரந்த சமூக இயக்கத்தினை எந்த அளவுக்கு பிரதிநிதித்துவம் செய்கின்றதோ அந்த அளவுக்கு மட்டுமே ஒரு புரட்சிகர பரிணாமத்தினை எடுக்கமுடியும் என்ற உண்மைக்கு அவதானத்தை திரும்பும்படி கோரியது. நாம் மேலும் கூறியதாவது;-

''தொழிற் கட்சி, தொழிற்சங்கவாதிகளின் அணியில் இடம்பெறும் ஒரு தீவிரவாத கிளர்ச்சியின் ஒரு வெறும் விளைவாக இருக்கமுடியாது. தொழிற்சங்கங்களின் உள்ளேயான தன்னியல்பான எழுச்சிகள் தொழிற்கட்சியின் தோற்றத்தில் ஒரு தீர்க்கமான பாத்திரத்தினை வகிக்கும் என்பதில் எதுவித பிரச்சனையும் கிடையாது. எனினும் இது தொழிற் கட்சிக்கான போராட்டம், அரசியல் அதிகார வரம்பினுள் தொழிற்சங்க வாதத்தினை நேரடியாக விஸ்தரிப்பதற்கு அப்பாற்பட்டது அல்ல என எண்ணுவது குறுகிய நோக்கிலான அடிப்படைத் தவறாகும். இது ஒரு சீர்திருத்தவாத கருத்துப்பாடாகும். முதலாளி வர்க்கத்துடனான அரசியலில் இருந்து துண்டித்துக்கொள்ள ஏற்படும் பரந்த இயக்கம் ஒடுக்கப்படும் மக்களின் சகல தரப்பினரதும் கொதிப்பினால் பொறிபறந்த ஒரு தன்னியல்பான வெடிப்பில் இருந்து தோன்றும்.''

றேகனின் காலப்பகுதி

The Reagan Years

நாம் ஏற்கனவே குறிப்பிட்டது போல றொனால்ட் றேகன் தெரிவுசெய்யப்பட்டமை முதலாளி வர்க்கத்தின் வர்க்க மூலோபாயத்தில் ஒரு பெரும் மாற்றத்தினை பிரதிநிதித்துவம் செய்ததோடு வர்க்க உறவுகளிலும் ஒரு ஆழமான மாற்றத்திற்கு இட்டுச் சென்றது. வேர்க்கஸ் லீக் இந்த மாற்றங்களுக்குத் துரிதமாக பதிலளித்ததுடன், றேகன் நிர்வாகம் தொழிலாள வர்க்கத்தின் மீதும் அதன் தொழிற்சங்கத்தின் மீதும் ஒரு பெரும் தாக்குதலை ஆரம்பிக்கும் எனவும் எச்சரிக்கை செய்தது. AFL-CIO தொழிற் சங்கங்களுள் இலட்சோபலட்சம் தொழிலாளர்களை உள்ளடக்கிக் கொண்டிருக்கும்போது, இப்போராட்ட சமயத்தில் தொழிற்சங்கங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு தொழிற்கட்சியை அமைக்கும் அதன் பிரச்சார இயக்கத்தினை கட்சி விஸ்தரித்தது.

அதைத் தொடர்ந்து வந்த வருடங்களில் வேர்க்கஸ் லீக் எதிர்பார்த்தது போல தொழிற்சங்கங்கள் யுத்தத்தின் பின்னான காலப்பகுதியின் மிகவும் கசப்பான வர்க்கப் போராட்டங்களின் மையமாக விளங்கின. இந்த ஒவ்வொரு போராட்டமும் AFL-CIO ன் கொள்கையின் பெறுபேறாகத் தோற்கடிக்கப்பட்டன. றேகன் தெரிவுசெய்யப்படுவதற்கு முன்னரே கிறைஸ்லர் (Chrysler-Automobile) இனை பாதுகாக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டதன் மூலம் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரத்தினை குறைக்கும் மற்றும் தொழில் அதிபர்களினதும் அரசினதும் முயற்சியோடு ஒத்துழைக்கும் தனது தயார்நிலையை காட்டிக்கொண்டது. றேகன் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் பற்கோவில் (PATCO) ஆரம்பித்து AFL-CIO தொழிற்சங்கமானது தொழிற்சங்மயப்படுத்தப்பட்ட தொழிலாளர்களை ஒன்றன்பின் ஒன்றாக வேண்டுமென்று தனிமைப்படுத்தி அதன் தோல்வியை ஊர்ஜிதம் செய்தது.

தொழிலாள வர்க்கத்தின் இக் காட்டிக்கொடுப்புக்களின் சட அடிப்படையை (material basis) ஆய்வு செய்த 1985ன் முன்னோக்குப் பிரேரணையின் அந்த பிரிவுகளை சுலோட்டர் மிகவும் வன்மையாக எதிர்த்தார். நாம் எழுதியதாவது, ''தொழிற்சங்க அதிகாரத்துவம் வெறுமனே ஊழல் நிறைந்த தனிநபர்களின் கூட்டு அல்ல. ஒரு திட்டவட்டமான சமூகத் தட்டினைக் கொண்டுள்ளது. இது தொழிற்சங்க இயக்கத்துடன் ஒரு ஒட்டுண்ணித்தனமான உறவைக்கொண்டிருப்பதுடன், இது முதலாளி வர்க்கத்துக்கு ஆற்றும் சேவைகளின் அடிப்படையில், தான் பிரதிநிதித்துவம் செய்துகொண்டுள்ளதாகக் கூறிக்கொள்ளுபவரின் வாழ்க்கைத் தரத்தினைக் காட்டிலும் பெரிதும் அதிகமாக அனுபவிக்கின்றது.

''AFL- CIO வின் அதிகாரசபை அதன் நிறைவேற்றுசபை 35 அங்கத்தவர்களை தொழிற்சங்கங்களின் முன்னணி அதிகாரிகளும் அத்தோடு AFL- CIO தேசிய தலைமையகத்தின் இரண்டு உயர் அதிகாரிகளும் கொண்டுள்ள அமெரிக்க தொழிற்திணைக்களத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அதிகாரபூர்வமான அறிக்கையின்படி 1983- 84ல் இவர்கள் கூட்டு வருமானமாக 3.913.089 டொலர்களைப் பகிர்ந்துகொண்டனர். AFL-CIO நிறைவேற்றுசபையில் பிரதிநிதித்துவம் செய்துகொண்டுள்ள தொழிலாளர் அமைப்புக்களின் சகல அதிகாரிகள் உட்பட 1983- 84ல் சம்பளமாகவும், செலவுகளாகவும் இவர்களின் கூட்டு வருமானம் 44.987.846 டொலர்களாகும். எமது கணிப்பில் நாம் இந்த 31 தொழிற்சங்கங்களதும் AFL-CIO வினதும் முழு அதிகாரிகளையும் சேர்ப்பின் வருடாந்த சம்பள பட்டியல் விபரம் பின்வருமாறு சம்பளம் 321.677.435 டொலர். இந்த ஆகாயத்தை எட்டும் புள்ளிவிபரங்களுடன் இன்னுமோர் 71.532.780 டொலர்கள் மேலதிக செலவுகளாக ஹோட்டல்கள், வியாபார மதியபோசனங்கள், இரவுப்போசனங்கள் என்பவற்றுக்கு சேர்க்கப்படவேண்டும். இந்தவிதத்தில் 35 அங்கத்தவர்களைக் கொண்ட AFL-CIO இன் நிறைவேற்றுக்குழு ஆண்டொன்றுக்கு 400 மில்லியன் டொலர்களுக்கு சற்று குறைவாக உறிஞ்சிக்கொள்ளும் ஒரு பாரிய அதிகாரத்துவத்தின் சார்பில் பேசுகின்றது.

"உற்பத்தித்திறன் கொண்ட எதுவிதமான உழைப்பையும் வழங்காத குட்டிமுதலாளித்துவ அதிகாரத்துவ கும்பல்கள் தம்மால் பாதுகாக்கப்படாமல் கைவிடப்பட்டுள்ள தொழிலாளர்களின் அங்கத்துவப் பணத்தை தின்று தொண்டைக்குழி வரைக்கும் வயிற்றை நிரப்புகின்றார்கள். ஐக்கிய உருக்கு தொழிலாளர் சங்கத்திற்கு 45 மில்லியன் டொலர்களுக்கும் அதிகமான தொகை சம்பளமாகவும், செலவாகவும் தேவையாகவுள்ளது. இது 1984ல் அங்கத்தவர்களால் செலுத்தப்பட்ட மொத்த அங்கத்துவப் பணத்தின் 41 வீதத்துக்கு அதிகமானது. ஐக்கிய உருக்கு தொழிலாளர் சங்கத்தின் அதிகாரிகள் 1984ல் 61 மில்லியன் டொலர்களுக்கும் கூடியதை ஒழித்துக்கட்டினர். இது அங்கத்துவப் பணமாக தொழிற்சங்கங்களுக்கு கிடைத்த வருமானத்தில் கிட்டத்தட்ட 30 வீதத்துக்குச் சமமானது. தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் மொத்தத்தில் ஆண்டொன்றுக்கு பில்லியன் கணக்கான டொலர்களை தின்று ஏப்பம் விடுவதை தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் சிறிய ஆனால் பிரதிநிதித்துவம் செய்யப்படும் பகுதியினரின் முழு வருமானத்தினதும் அடிப்படையில் மதிப்பீடு செய்வது நியாயமற்ற ஒன்றல்ல. இங்கு அதிகாரத்துவம் ஏகாதிபத்தியத்தினை அடிமைத்தனமாக பேணுவதனதும் இவர்களின் கம்யூனிச எதிர்ப்பு வெறியினதும், தொழிலாள வர்க்கத்தின் பேரிலான கெடிக்கலக்கத்தினதும், தொழிலாளர் இயக்கத்தின் உள்ளே முதலாளித்துவத்திற்கு எதிராக வர்க்கப் போராட்டத்தின் அடிப்படையில் நின்றுகொண்டுள்ளவர்களின் பேரிலான சகலர் மீதான அதன் வெறுப்பினதும் நிஜ அடிப்படையைக் கண்டுகொள்ள முடியும்." இந்த ஆய்வுகளிலிருந்து நாம் இம்முடிவுக்கு வருகின்றோம். ''அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் அணிதிரள்வானது ஆளும் வர்க்கத்தின் பெரும் ஊதியம் பெறும் ஏஜண்டுகளுக்கு எதிராக அங்கத்தவர்களை அணிதிரட்டும்- தொழிற்சங்கங்களின் உள்ளேயான ஒரு உள்நாட்டு யுத்த வடிவத்தினை நிச்சயம் எடுக்க வேண்டும். இந்தப் போராட்டத்தின் அரசியல் சாராம்சம், தொழிற்சங்கங்களுள் மார்க்சிசத்துக்கான போராட்டத்தினையும் AFL-CIO அதிகாரத்துவத்திற்கு பதிலீடாக ஒரு புரட்சிக் கட்சியை அமைப்பதையும் குறிக்கின்றது. வேர்க்கஸ் லீக்கின் பணி இதுவேயாகும்.

ஒரு முழுமையாக நோக்குமிடத்து 1980கள் AFL- CIO விற்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் இடையிலான உறவின் ஒரு திட்டவட்டமான மாற்றத்தினை குறித்தது. இது நேரடிப்பொறுப்பான அரைவாசி தோல்விகளின் பட்டியல்கள் அதன் தோல்விகளின் வரலாற்று பண்பினை காட்டுகின்றது. 1981 பற்கோ (PATCO) 1983- 84ல் கொண்டினென்டல் எயர்லைன்ஸ், பெல்ப்ஸ் டொட்ஜ் கிறேகொன்ட், 1985-86 ல் யூனைட்டட் எயர்லைன்ஸ், பன்- அமெரிக்கன் எயர்லைன்ஸ், சிக்காக்கோ ரிபியூன், ஹோர்மல், விலில்- பிற்ஸ்பேர்க், 1986-87 ல் TWA, USX ஸ்ரீஸ், IBP பற்றிக் குடாஹி, 1987- 88ல் டோன் மெரல், இன்ரநாஷனல் பேப்பர் 1989ல் பிட்ஸ்டன், ஈஸ்ரேன் போன்றவையே இத்தோல்விகளாகும்.

WRP  உடனான பிளவின் பின்னர் வேர்க்கஸ் லீக் முன்னோக்கு தொடர்பான வேலையில் AFL- CIO உடைய காட்டிக்கொடுப்புகளின் வேலைத்திட்ட தாக்கம் தொடர்பாக போராடியது. 1988 யூலை பிரேரணை தொழிற்சங்கங்களின் அடிப்படையிலான தொழிற் கட்சி என்ற சூத்திரத்தினை தொடர்ந்து பயன்படுத்திய வேளையிலும், இது தொழிற் கட்சிகளுக்கான போராட்டத்திற்கும், புரட்சிகர இயக்கத்தின் அபிவிருத்திக்கும் இடையேயான உறவின் ஸ்தூலமான அர்த்தத்தில் நாம் புரிந்துகொள்வதில் பாரிய முன்னேற்றம் கண்டுள்ளமையை குறிப்பிட்டு காட்டியது. எந்தவிதமான சீர்திருத்தவாத தொழிற் கட்சியையும் நாம் நிராகரித்ததை இது தீர்க்கமான முறையில் ஊர்ஜிதம் செய்தது. தொழிற்சங்கங்களால் நிறுவப்பட்ட ஒரு அரசியல் கட்சிக்கு எந்த ஒரு நிலைமையிலும் எந்தவிதமான ஆதரவும்- விமர்சன ரீதியிலோ அல்லது வேறுவிதத்திலோ வழங்க வேர்க்கஸ் லீக் கடமைப்பட்டு இருக்கவில்லை என தெளிவாகக் குறிப்பிட்டோம். புரட்சிகர சோசலிசப் போக்கிலான ஒரு அபிவிருத்திக்கான நிஜ சாத்தியத்தினை ஒரு தொழிற் கட்சியின் ஸ்தாபிதம் உள்ளடக்கிக் கொண்டுள்ளதாக அது கருதுமிடத்து மட்டுமே வேர்க்கஸ் லீக்கின் ஆதரவும், தீவிரமான ஊக்குவிப்பும் அதற்கு கிடைக்கும் எனவும் குறிப்பட்டது.

ஆனால் அப்போதும் கூட தொழிற்சங்கங்களின் அடிப்படையிலான தொழிற் கட்சி என்ற பதம்- அது முழுப்பத்திரத்திலும் ஒரேயொரு பந்தியில் மட்டுமே காணப்பட்டது. இது நிகழ்வுகளால் காலாவதியாகிப்போயிருந்தது. உண்மையில் வேர்க்கஸ் லீக்கின் பத்திரங்களிலும், அறிக்கைகளிலும் அந்தப்பதம் இன்னும் காணப்படுவது எமது இயக்கத்தின் கடந்தகால பரிணாம அபிவிருத்தியின் ஏதோ ஒரு மிச்சசொச்சத்தை ஒத்திருந்தது.

1990 பெப்ரவரியில் நாம் குறிப்பிட்டதுபோல்;-

காட்டிக்கொடுப்புகளதும், தோல்விகளதும் அளவுரீதியான அதிகரிப்பும், அதிகாரத்துவத்திற்கும் முகாமைத்துவத்திற்கும் இடையிலான உடனுழைப்பு பின்னலின் அதிகரிப்பும் ஒருபுறத்தில் அதிகாரத்துவத்திற்கும் ஆளும் வர்க்கத்திற்கும் இடையிலும் மறுபுறத்தில் அதிகாரத்துவத்திற்கும், தொழிலாள வர்க்கத்திற்கும் இடையேயும் உறவுகளில் பண்புரீதியான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. AFL-CIO இன் உயர்மட்டம் தொடக்கம் பிராந்திய தொழிற்சங்க அதிகாரிகள் வரை கீழேயும், தொழிற்சங்க தலைமை நிறுவனங்களின் முகாமைத்துவத்தின் அமைப்புடன் முழுமனே இணைந்துகொண்டுள்ளது-

ஈஸ்ரேன் வேலைநிறுத்தத்திலும், யூனைட்டட் எயர்லைன்ஸ் தொழிலாளர்களை வாங்குவது (Buy-out)) எனப்படுவதை திணிக்க விமான ஓட்டிகள் தலைமை செய்யும் முயற்சியிலும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் பரிணாமம் கண்ட பாத்திரம் மிகவும் தெளிவாக வெளிப்பட்டது. ஈஸ்ரேன் கம்பனியில் தொழிலாளர்களின் தொழில், சம்பளம், நிவாரணங்களைக் காக்க சங்கத்தலைமை எதுவித பேச்சுவார்த்தையையும் நடத்தவில்லை. ஆரம்பத்தில் இருந்து இது தனது சார்பில் சலுகைகளைக் காக்கவும், நிறுவனங்களின் நிர்வாகத்தில் பதவிகளைப் பெறவும் பேரம்பேசி வந்தது.

இறுதியாக 1992ல் சோவியத் அரசு அதிகாரத்துவத்தினால் கலைக்கப்பட்ட உலக வரலாற்று அமைவினுள் தொழிலாளர் அதிகாரத்துவங்கள் அனைத்துலக ரீதியிலும் ஐக்கிய அமெரிக்காவிலும் இழைத்த காட்டிக்கொடுப்புக்களின் அடிப்படையில் நாம் அவசியமான படிப்பினைகளைப் பெற்றோம்.

"சோவியத் யூனியன் சட்டரீதியான முறையில் கலைக்கப்பட்டதில் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டிய படிப்பினைகள் என்ன? எல்லாவற்றிற்கும் மேலாக சோவியத் அரசும் அதன் பொருளாதார அத்திவாரமும் அடியிலிருந்து தூக்கி வீசப்படவில்லை. அவை மேலிருந்து இல்லாதொழிக்கப்பட்டன. இந்த மாற்றம் பரந்த மக்களின் தலைக்கு மேலாக சிறிய அதிகாரத்துவ கும்பல் தமது பதவி அந்தஸ்துக்களை பாவித்து தொழிலாள வர்க்கத்தினை ஸ்தம்பிக்கச் செய்து, அதன் கடந்தகால வெற்றிகளை தொலைத்துக்கட்டி செய்யப்பட்டது. முன்னாள் சோவியத் யூனியனுள் இடம்பெற்றிருப்பது அனைத்துலகத் தோற்றப்பாட்டின் ஒரு வெளிப்பாடாகும். உலகம் பூராவும் தொழிலாள வர்க்கம் கடந்தகாலப் பகுதியில் அவர்கள் நிர்மாணித்த தொழிற்சங்கம், கட்சி மட்டுமன்றி அரசும் கூட ஏகாதிபத்தியத்தின் நேரடி ஆயுதமாக மாற்றப்பட்டுள்ளது என்ற உண்மை எதிர்கொண்டுள்ளார்கள்.

தொழிலாளர் அதிகாரத்துவங்கள் வர்க்கப் போராட்டத்தினை சமாதானப்படுத்தி வர்க்கங்களுக்கு இடையே ஒரு தாங்கி (BUFFER) போன்ற பாத்திரத்தினை வகித்துவந்த காலம் முடிந்துவிட்டது. அதிகாரத்துவம் பொதுவில் தொழிலாள வர்க்கத்தின் வரலாற்று நலன்களை காட்டிக்கொடுத்தாலும் அவர்கள் இன்னமும் ஒரு வரையறுக்கப்பட்ட விதத்தில் அதன் அன்றாட தேவைகளுக்கு உதவி வந்தனர். அந்த அளவுக்கு தொழிலாள வர்க்க அமைப்புக்களின் தலைவர்களாக தாம் இருந்துகொண்டுள்ளதை நியாயப்படுத்தினர். அந்தக் காலப்பகுதி கடந்து சென்றுவிட்டது. இன்றைய காலப்பகுதியில் அதிகாரத்துவம் அத்தகைய எந்தவொரு சுயாதீனமான பாத்திரத்தினையும் ஆற்றமுடியாது.

இது சோவியத் யூனியனில் உள்ள அதிகாரத்துவத்தை பொறுத்தமட்டில் மட்டுமன்றி, அமெரிக்க தொழிற்சங்கங்களின் அதிகாரத்துவங்களை பொறுத்தமட்டிலும் உண்மையாகும். எமது கடந்த மாநாட்டில் நாம் இன்றைய தொழிற்சங்க தலைவர்களை தொழிலாள வர்க்கத்தின் நலன்களை மிகவும் வரையறுக்கப்பட்டதும், திரிபுசெய்யப்பட்டதுமான விதத்தில் தன்னும் பிரதிநிதித்துவம் செய்கின்ற சக்திகளாக வரைவிலக்கணம் செய்யமுடியாது என வலியுறுத்தினோம். AFL-CIO தலைவர்களை ''தொழிற்சங்கத் தலைவர்களாக'' வரைவிலக்கணம் செய்வது அல்லது அதேவிடயத்தில் கிதிலி- சிமிளி ஒரு தொழிலாள வர்க்க அமைப்பாக வரைவிலக்கணம் செய்வதானது தொழிலாள வர்க்கத்தினை அவர்கள் முகங்கொடுக்கும் யதார்த்தத்தில் இருந்து இருட்டடிப்புச் செய்வதாகும். 


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved