காட்டிக்கொடுக்கப்பட்ட புரட்சி

                                                                                                                                     

WSWS : Tamil : நூலகம்
காட்டிக்கொடுக்கப்பட்ட புரட்சி
 
முன்னுரை
லியோன் ட்ரொட்ஸ்கி

 
முன்னுரை 
டேவித் நோர்த்
 
அத்தியாயம் 1
 

அத்தியாயம் 2


அத்தியாயம் 3

An Introduction to Tamil  language  publication of Revolution Betrayed.

காட்டிக் கொடுக்கப்பட்ட புரட்சி தமிழ் மொழி வெளியீட்டுக்கான அறிமுகம்

சர்வதேச தொழிலாளர் தினத்தை ஒட்டி மே 1, 2011 அன்று உலக சோசலிச வலைத் தளத்தின் தமிழ் பக்கம், லியோன் ட்ரொட்ஸ்கியின் செவ்வியல் படைப்புகளை முதன் முதலாய் தமிழ் மொழியில் கொண்டுவரும் வெளியீட்டின் பாகமாக ட்ரொட்ஸ்கியின் மிகவும் உயர்ந்த படைப்பான காட்டிக் கொடுக்கப்பட்ட புரட்சி என்ற நூலின் தமிழ் மொழிபெயர்ப்பை தொடராக வெளியிட ஆரம்பிக்கிறது.

சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு ஒருங்கிணைந்த பாகமாக உலகெங்கும் பரவியிருக்கும் தமிழ் தொழிலாளர்கள், இளைஞர்கள் தவிர்க்கவியலாத வகையில் முழுமையாகப் பங்கேற்கவிருக்கும் அபிவிருத்தியுறும் போராட்டங்களுக்கு இது ஒரு பங்களிப்பாக இருக்கும்.

இந்த நூல் நிரந்தரப் புரட்சி தத்துவத்தினை சிறப்பாக பாதுகாப்பதுடன் ஸ்ராலினின் தனியொரு நாட்டில் சோசலிசம் என்னும் தேசியவாத தத்துவத்தினை தகர்த்தெறியும் குற்றச்சாட்டாகவும் அமைவதுடன், ட்ரொட்ஸ்கி மற்றும் அவரை பின்பற்றியவர்களுக்கு எதிரான பொய்மைப்படுத்தல்கள் மற்றும் அவதூறுகளை உடைத்தெறிகின்றது. 1936ம் ஆண்டில் மாஸ்கோ விசாரணைகளின் ஆரம்ப தினத்தன்று இது வெளியிடப்பட்டது.

ஸ்ராலினும் அவர் பிரதிநிதித்துவப்படுத்திய அதிகாரத்துவ தட்டும் சோவியத் அதிகாரத்தை தட்டிப் பறிக்க முடிந்ததென்றால் அது சோவியத் ஒன்றியம் தனிமைப்பட்டதும் புரட்சி தொழிற்துறைமயப்பட்ட ஐரோப்பாவிற்குள் பரவுவதில் தோற்றதுமே அதன் காரணங்களாகும். தனது மார்க்சிச விரோதக் கொள்கைகளை திணிப்பதற்கும் ஏகாதிபத்தியத்திற்கேற்ப தனது தகவமைவுகளை அனுமதிப்பதற்கும் வசதியாக ஸ்ராலின் மார்க்சிச காரியாளர்களையும், அக்டோபர் புரட்சிக்கு தலைமைதாங்கிய மற்றும் கம்யூனிச அகிலத்தைக் கட்டியெழுப்பிய ஆயிரக்கணக்கான போல்ஷிவிக்குகளையும் படுகொலை செய்தார், இறுதியாக ட்ரொட்ஸ்கியை 1940ல் படுகொலை செய்தார்.

சோவியத் ஒன்றியம் எதிர்நோக்கியிருந்த பின்வரும் மாற்றீடுகளை இந்நூல் தெளிவுபடுத்திக் காட்டியுள்ளது. சோவியத் தொழிலாள வர்க்கம், உலகத் தொழிலாளர்களின் புரட்சிகர இயக்கத்தின் ஒரு பாகமாக, ஒட்டுண்ணித்தனமான அதிகாரத்துவத்தை ஒரு அரசியல் புரட்சி மூலம் தூக்கியெறியும். இல்லாவிடின் அதிகாரத்துவம் சோசலிச சொத்துடமை உறவுகளை தலைகீழாக மாற்றி அது 1990ல் சோவியத் ஒன்றியத்தின் உடைவின்போது செய்ததுபோல் முதலாளித்துவத்தை மறுஸ்தாபகம் செய்யும்.

இந்த நேரத்தில் காட்டிக் கொடுக்கப்பட்ட புரட்சி வெளியாவது குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். துனிசியா மற்றும் எகிப்தின் ஏகாதிபத்திய கைப்பாவை சர்வாதிகாரிகளை தூக்கியெறிந்த பரந்த மக்களின் புரட்சிகர இயக்கங்களுக்கு பொறி பற்ற வைத்த முகமது பௌ அசிசி தன்னை எரித்துக் கொண்ட சம்பவம் நடந்து மூன்றே மாதங்களுக்குப் பின்னர் இந்நூல் தமிழ் மொழியில் வெளிவருகிறது. இந்த இயக்கங்கள் அரபுலகில் மட்டுமல்ல ஆசியாவிலும் மற்றும் முக்கிய தொழிற்துறைமயப்பட்ட நாடுகளிலும் உள்ள பரந்துபட்ட மக்களுக்கு உத்வேகம் அளித்திருக்கின்றன.

எல்லா இடங்களிலுமே சிக்கன நடவடிக்கை மற்றும் இராணுவவாதத்திற்கான பதிலிறுப்பாக ஏகாதிபத்தியத்துடன் கூட்டு வைத்திருக்கும் தேசிய முதலாளித்துவ வர்க்கங்களுடன் தொழிலாளர்கள் மோதலுக்குள் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கின்றனர். துனிசிய மற்றும் எகிப்திய புரட்சிகளின் நிரந்தரத் தன்மையை அபிவிருத்தி செய்வதற்கு, மேற்கத்திய ஏகாதிபத்தியத்தின் முழு ஆதரவுடன் செயல்படும் ஆட்சிகள் மற்றும் அகற்றப்பட்ட சர்வாதிகாரிகளின் இராணுவங்களிடம் இருந்து ஜனநாயக சலுகைகளுக்கான வாக்குறுதிகளை பெற்று அவற்றை நிறுத்துவதற்கு வேலை செய்கின்ற சமூக ஜனநாயக, ஸ்ராலினிச, மாவோயிச, இஸ்லாமியவாதக் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்ளுடன் ஒரு முழுமையான முறிவை மேற்கொள்வது தொழிலாள வர்க்கத்திற்கு அவசியமானதாகும். நிரந்தரப் புரட்சி தத்துவத்தால் ஆயுதபாணியாக்கப்பட்ட ஒரு கட்சியால் மட்டுமே தொழிலாளர்கள் அதிகாரத்தை கைப்பற்றுவதை நோக்கிய போராட்டத்தை முன்னெடுக்க முடியும். அத்தொழிலாளர்கள், முதலாளித்துவ அரசினை இல்லாதொழிக்கவும் மற்றும் நிராயுதபாணியாக்கவும் வேண்டும் என்பதோடு பிராந்தியத்தின் மற்றும் சர்வதேசரீதியான தொழிலாள வர்க்கத்துடன் கூட்டு அமைத்து ஒரு சோசலிச முன்னோக்குடனான தங்களது சொந்த அரசாங்கத்தை உருவாக்க வேண்டும். இந்த வழியில் மட்டுமே அவர்கள் புரட்சியை முன்னெடுத்துச் செல்லவும் ஏகாதிபத்திய ஆதரவுடனான எதிர்ப்புரட்சியை தடுக்கவும் முடியும்.

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவைக் கொள்ளையிடுவதில் ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான உலகளாவிய போட்டி லிபியாவில் நவ காலனித்துவ இராணுவத் தலையீடு தொடர்ந்துகொண்டிருப்பதோடு பெங்காசியில் மாற்று தேசிய முதலாளித்துவ சக்திகளை ஆதரித்துக் கொண்டிருக்கிறது, அந்நாட்டின் இயற்கை வளங்களை கொள்ளையடிக்க இது மேம்பட்ட வகையில் வழிசெய்யும் என அவர்கள் நம்புகின்றனர். ஏகாதிபத்தியங்களுக்கு ஏற்கனவே ஈராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் ஐவரி கோஸ்டில் அவர்கள் செய்து கொண்டிருப்பதைப் போல, லிபியாவின் எல்லை நாடுகளாக இருக்கும் துனிசியா மற்றும் எகிப்தில் புரட்சிக்கு எதிராகத் தலையீடு செய்வதற்கும் அவர்களுக்கு வழிவகை செய்யத்தக்க இந்தத் தலையீட்டை ஸ்ராலினிஸ்டுகளும் அவர்களைச் சுற்றிச் சுழல்வோரும் போலியான மனிதாபிமானத்தை காரணமாய் காட்டிப் பாதுகாக்கின்றனர். 

ஸ்ராலின் மற்றும் மேற்கத்திய ஏகாதிபத்தியத்திற்கு இடையில் ஏற்பட்ட போருக்குப் பிந்தைய உடன்பாடு சமூக ஜனநாயக மற்றும் ஸ்ராலினிசக் கட்சிகளுக்கும் தேசிய முதலாளித்துவங்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பை அடித்தளமாய் கொண்டு ஏற்பட்ட போருக்குப் பிந்தைய எழுச்சிக்கு மேடை அமைத்து தந்தது. இது தேசிய சீர்திருத்தவாதத்திற்கு தற்காலிமாக சிறிது இடத்தை அனுமதித்தது. இந்த காலகட்டம் ஏற்கனவே 1980களில் உடையும் தறுவாயில் இருந்ததுடன், செப்டம்பர் 15, 2008ன் லெஹ்மேன் பிரதர்ஸ் பொறிவு மற்றும் முதலாளித்துவ அமைப்புமுறையின் தோல்வி ஆகியவற்றால் அதற்கான மரண அடியும் வழங்கப்பட்டது. இது சீர்திருத்தவாத, தேசியவாத ஸ்ராலினிச, மாவோயிசக் கட்சிகளையும் மற்றும் அவற்றைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த குட்டிமுதலாளித்துவ கட்சிகளான பிரான்சின் NPA மற்றும் ஆசியா முழுவதிலும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே மிகுந்த குழப்பத்தை விதைத்திருந்த இலங்கையின் NSSP ஆகியவற்றையும் மொத்தமாய் மதிப்பிழக்கச் செய்து விட்டது. ஆளும் வர்க்கம் மற்றும் ஏகாதிபத்தியத்தின் வெவ்வேறு பிரிவுகளிடம் இருந்து ஆதரவை கோருகின்ற மக்கள் விடுதலை முன்னணி, தமிழீழ  விடுதலைப்  புலிகள் போன்ற கட்சிகளின் தேசியவாத மற்றும் இனவாத முன்னோக்குகளையும் கூட இவை ஆதரித்திருக்கின்றன.

இவை அனைத்தும் ட்ரொட்ஸ்கியின் மரபியம் குறித்து பொய்யுரைத்தன, காரணம், அவரது பாட்டாளி வர்க்க சர்வதேசிய முன்னோக்குகளும் அனைத்து முதலாளித்துவ ஏஜன்டுகளிடம் இருந்தும் தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமடைய செய்வதற்கான நான்காம் அகிலத்தின் போராட்டமுமாகும். அப்போராட்டத்தையே நிரந்தரப் புரட்சித் தத்துவம் வடிவப்படுத்துகிறது. இந்த நூலையும் நாங்கள் வெளியிடும் மற்ற ஆவணங்களையும் படிப்பதற்கும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினைக் கட்டுவதில் பங்குபெறவும் உலகம் முழுவதும் உள்ள எமது வாசகர்களுக்கு நாங்கள் அழைப்புவிடுகின்றோம்.