முன்னோக்கு

இனப்படுகொலை எதிர்ப்பு வன்முறையற்ற போராட்டங்களுக்கு எதிரான பொலிஸ் ஒடுக்குமுறையை பைடென் ஆதரிக்கிறார்

மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்.

வியாழனன்று, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடென் காஸாவில் அமெரிக்க-இஸ்ரேலிய இனப்படுகொலைக்கு எதிரான போராட்டங்களை நாடெங்கிலும் பொலிஸ் படைகள் வன்முறையாக ஒடுக்குவதை ஆதரித்து வெள்ளைமாளிகை ஓவல் அலுவலகத்தில் இருந்து ஓர் உரையை வழங்கினார். “ஒழுங்கு மேலோங்க வேண்டும்” என்று பைடென் கூறினார்.

அதிபர் பைடன் “ஒழுங்கு மேலோங்க வேண்டும்” என்று உறுதியளிக்கிறார்.

ஒரு உதாரணத்தையும் மேற்கோள் காட்டாமல், பைடென் நாடு முழுவதும் மில்லியன் கணக்கான மக்களின் அமைதியான பாரிய எதிர்ப்பு போராட்டங்களை, வன்முறை மற்றும் யூத எதிர்ப்பு என்று வலியுறுத்தினார்.

சொத்துக்களை அழிப்பது அமைதியான போராட்டம் அல்ல. காழ்ப்புணர்ச்சி, அத்துமீறல், ஜன்னல்களை உடைத்தல், வளாகங்களை மூடுதல், வகுப்புகள் மற்றும் பட்டமளிப்புகளை ரத்து செய்தல் ஆகியவை சட்டத்திற்கு எதிரானவை. இது எதுவுமே அமைதியான போராட்டம் அல்ல, மக்களை அச்சுறுத்துவது, மக்களை மிரட்டுவது. மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்துவது அமைதியான போராட்டம் அல்ல. இது சட்டத்திற்கு எதிரானது.

உண்மையில், போராட்டக்காரர்களுக்கு எதிராக வன்முறை திருப்பி விடப்பட்டுள்ளது.

கலிபோர்னியா மாநில துருப்புக்கள் உட்பட ஜனநாயகக் கட்சி கவர்னர் கவின் நியூசோம் அனுப்பிய ஒரு பாரிய பொலிஸ் படை லொஸ் ஏஞ்சல்ஸ்சில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக (UCLA) வளாகத்தில் இறங்கி அங்கு முகாமிட்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களைக் கைது செய்த அல்லது கலைத்த சில மணிநேரங்களுக்குப் பிறகு பைடென் உரையாற்றினார். செவ்வாய் இரவு, சியோனிச குண்டர்கள் குழு ஒன்று, பொல்லுகளுடனும், பட்டாசுகளுடனும் பெரும்பாலான போராட்ட எதிர்ப்பாளர்கள் உறங்கிக் கொண்டிருந்தபோது அவர்களது முகாமைத் தாக்கினர். அதே சமயம் அங்கு நின்ற பொலிசார் சியோனிச குண்டர்களுக்கு கட்டுப்பாடற்ற சுதந்திரத்தை கொடுத்தனர்

நியூயோர்க் நகர போலீசார் இதேபோன்ற தாக்குதல்களை நடத்தி, கொலம்பியா பல்கலைக்கழகம் மற்றும் நியூயோர்க் சிட்டி கல்லூரியில் கிட்டத்தட்ட 300 மாணவர்களையும் ஆதரவாளர்களையும் கைது செய்தனர். டார்ட்மவுத், விஸ்கான்சின் பல்கலைக்கழகம், ஓரிகானில் உள்ள போர்ட்லாந்து மாநில பல்கலைக்கழகம் மற்றும் பிற கல்லூரிகளிலும் பாரிய கைதுகள் நடந்தன.

“வகுப்புகள் மற்றும் பட்டமளிப்புகளை இரத்து செய்வது” குறித்த பைடனின் குறிப்பு, குறிப்பாக செழுமையானது. ஏனென்றால், எதிர்ப்பு போராட்டங்களை அடக்கி முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியின் பாகமாக நிர்வாகிகள்தான் வகுப்புகள் மற்றும் பட்டமளிப்புகளை இரத்து செய்துள்ளனர்.

இந்த போலிஸ் ஒடுக்குமுறை அமெரிக்க யூதர்களை “பாதுகாப்பாக” உணர வைக்கும் நோக்கம் கொண்டது என்று கூறுகின்ற அதேவேளையில், இது பசுமைக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜில் ஸ்டெயின் உட்பட நூற்றுக்கணக்கான யூத மக்களை கைது செய்வதற்கு இட்டுச் சென்றுள்ளது.

ஜனநாயக உரிமைகள் மீதான இந்த தாக்குதல் பைடென் நிர்வாகம், ஜனநாயகக் கட்சி மேயர்கள் மற்றும் குடியரசுக் கட்சி ஆளுநர்களுக்கு இடையிலான இருகட்சி கூட்டணி மூலம் நடத்தப்படுகிறது.

போராட்ட எதிர்ப்பாளர்கள் மீதான தாக்குதல் இராணுவச் சட்டத்திற்கான ஒரு ஒத்திகை ஆகும். பாசிஸ்ட்டுக்களால் நிரம்பியுள்ள பொலிஸ் படைகள், தங்கள் ஆயுதங்களை சோதித்துப் பார்ப்பதற்கான ஒரு வாய்ப்பாக இதைப் பார்க்கின்றன.

மேலோட்டமாகப் பார்த்தால், பைடெனின் உரை வெறுமனே அபத்தமான பொய்களின் தொகுப்பாகத் தோன்றினாலும், அது அடிப்படையில் ஒரு சர்வாதிகார அரசியல் பார்வையை அறிவுறுத்துகிறது, இதில் எந்தவொரு எதிர்ப்பையும் “வன்முறை” என்று அறிவிக்கவும் மற்றும் அதை மிருகத்தனமாக ஒடுக்கவும் அரசாங்கத்திற்கு அதிகாரம் உள்ளது.

“கருத்து வேறுபாடு ஒருபோதும் ஒழுங்கீனத்திற்கு வழிவகுக்கக்கூடாது, அல்லது மற்றவர்களின் உரிமைகளை மறுக்கக்கூடாது, இதனால் மாணவர்கள் செமஸ்டர் மற்றும் அவர்களின் கல்லூரி கல்வியை முடிக்க முடியும்” என்று பைடென் கூறினார்.

“மாணவர்கள் செமஸ்டர் மற்றும் அவர்களின் கல்லூரிக் கல்வியை முடிக்க, கருத்து வேறுபாடுகள் ஒருபோதும் மற்றவர்களின் உரிமைகளை சீர்குலைக்கவோ அல்லது மறுக்கவோ வழிவகுக்கக்கூடாது” என்று பைடன் கூறினார்.

“பொது ஒழுங்கு” மற்றும் “பொருளாதார ஸ்திரத்தன்மை” ஆகியவற்றைப் பாதுகாப்பது என்ற சாக்குப்போக்கின் கீழ் போராட்டங்களைத் தடை செய்வது நவீன வரலாறு முழுவதும் சர்வாதிகார ஆட்சிகளின் தனிச்சிறப்பாகும். இதனால்தான் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கு “இடையூறுகளை” அனுமதிப்பது அவசியம் என்று சர்வதேச மனித உரிமைகள் சட்டம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இந்த எதிர்ப்பு போராட்டங்கள், “யூத எதிர்ப்பு” என்று பைடெனின் கூற்று, இஸ்ரேல் மீதான விமர்சனம் மற்றும் சியோனிசத்தின் வலதுசாரி அரசியல் சித்தாந்தத்திற்கு எதிரான எதிர்ப்பையும், யூத மக்களுக்கு எதிரான விரோதப் போக்கையும் சமன்படுத்தும் பிற்போக்குத்தனமான பொய்யை அடிப்படையாகக் கொண்டது. இந்த நிலைமைகளின் கீழ், சியோனிச ஆட்சியானது பாலஸ்தீனியப் பிரச்சனைக்கான இறுதித் தீர்வை பாரிய படுகொலைகள் மற்றும் பாரிய வெளியேற்றங்களுடன் “இறுதித் தீர்வை” நோக்கி அழுத்தமளிக்கின்ற நிலையில், இஸ்ரேலியக் கொள்கைகளுக்கும் நாஜிக் கொள்கைகளுக்கும் இடையே உள்ள ஒற்றுமை அக்டோபர் 7-ல் இருந்து இன்னும் கொடூரமாக மாறியுள்ளது,

அமைதியான போராட்டங்களை “வன்முறையானவை” என்று அவதூறு செய்வதன் மூலம், பைடென் வன்முறையின் உண்மையான குற்றவாளிகளைப் பாதுகாக்க முனைகிறார்: இரத்தத்தில் நனைந்த நெதன்யாகு ஆட்சி குறைந்தபட்சம் 40,000 பாலஸ்தீனியர்களைக் கொன்றது.

கல்லூரி வளாகங்களில் வன்முறைக்கு “இடமில்லை” என்று பைடென் அறிவிக்கின்ற அதேவேளையில், அவரது நிர்வாகம் காஸாவில் உள்ள ஒவ்வொரு பல்கலைக்கழகத்தையும் அழிக்கவும், இலக்கு வைக்கப்பட்ட படுகொலைகளில் கொல்லப்பட்ட இலக்கிய பேராசிரியர் ரெஃபாத் அல்-அரீர் (Refaat Alareer) போன்ற நூற்றுக்கணக்கான பாலஸ்தீனிய கல்வியாளர்களைக் கொல்லவும் இஸ்ரேலுக்கு உதவியுள்ளது.

Loading Tweet ...
Tweet not loading? See it directly on Twitter

X/Twitter இல் வெளியிட்ட ஒரு அறிக்கையில், சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோசப் கிஷோர் பின்வருமாறு எழுதினார்:

அமைதியின் தீர்க்கதரிசியான புனித பைடென், “வன்முறை நிகழும்போது அது சட்டத்திற்கு எதிரானது” என்று இன்று காலை அறிவித்தார்.

வன்முறை முற்றிலுமாக பொலிஸ் மற்றும் வளாக போராட்டங்களை ஒடுக்கும் வலதுசாரி குண்டர்கள் பக்கம் உள்ளது என்ற உண்மையைத் தவிர, அவரது பொருத்தமற்ற 3 நிமிட ஆவேசம் 34,000 க்கும் அதிகமானவர்களைக் கொன்ற ஒரு இனப்படுகொலையை பிரம்மாண்டமான அளவில் வன்முறையைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது.

இதுதான் ஏகாதிபத்தியத்தின் பாசாங்குத்தனம்.

ஆனால் பைடென் தனது அறிக்கைகளின் முடிவில் கூறிய கருத்துக்கள் தான் எல்லாவற்றையும்விட அதிகமாக சொல்லக்கூடியவை.

“இந்த பிராந்தியம் தொடர்பான கொள்கைகளில் ஏதேனும் ஒன்றை மறுபரிசீலனை செய்ய, இந்த போராட்டங்கள் உங்களை கட்டாயப்படுத்தியுள்ளதா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு ஜோ பைடன், “இல்லை” என்று அப்பட்டமாக பதிலளித்தார்.

இதனை வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மக்களில் பெரும்பான்மையினரின் உணர்வு என்னவாக இருந்தாலும், பைடென் நிர்வாகத்தின் இனப்படுகொலைக் கொள்கைகள் தொடரும் என்பதாகும்.

உண்மையில், இந்த போலீஸ் நடவடிக்கையே ரஃபா மீதான உடனடி தாக்குதலுக்கான தயாரிப்பு ஆகும். இத்தாக்குதல் முந்தைய அனைத்து குற்றங்களையும் மறைத்துவிடும்.

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் போன்ற இராஜதந்திர மோசடிக்காரர்களால் அவ்வப்போது “இகழ்ச்சி-வெறுப்பு-கண்டனம்” இருந்தபோதிலும், பைடென் நிர்வாகம் காஸாவில் இஸ்ரேலிய இனப்படுகொலையை தழுவியுள்ளது. ஏனென்றால், அது உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிராக, மத்திய கிழக்கில் ஈரானுக்கு எதிராக, மற்றும் ஆசிய-பசிபிக்கில் சீனாவுக்கு எதிராக உலகளாவிய போர் வேலைத்திட்டத்தில் இறங்கியுள்ளது. காஸா படுகொலை மீதான பரவலான மக்கள் சீற்றத்தில், அது தொழிலாள வர்க்கத்தில் ஒரு வெகுஜன போர் எதிர்ப்பு இயக்கத்தின் கருவைக் காண்கிறது.

பாலஸ்தீனிய மக்களுக்கு ஆதரவளிப்பதற்கும் இஸ்ரேலிய இனப்படுகொலைக்கு எதிரான எதிர்ப்புக்கும் எதிராக வலதுசாரி, ஜனநாயக விரோத வெறித்தனத்தின் முன்னணி வரிசையில் பைடென் தன்னை நிறுத்திக் கொள்கிறார். அவர் டொனால்ட் டிரம்பை விட வித்தியாசமான வார்த்தைஜாலங்களை பயன்படுத்துகிறார். அவர் கொலம்பிய பல்கலைக்கழக போலீஸ் ஒடுக்குமுறையை “ஒரு அழகான விஷயம்” என்று விவரித்தார். ஆனால், நிகழ்வுகளின் தர்க்கம் சந்தேகத்திற்கிடமின்றி உள்ளது. அமெரிக்க ஆளும் உயரடுக்கு அதன் உலகப் போர் மற்றும் எதிர்ப்புரட்சி கொள்கையை சர்வதேச மட்டத்தில் திணிக்க ஒரு உள்நாட்டுப் போரை நடத்த வேண்டும்.

ஏகாதிபத்தியத்தின் வேலைத்திட்டமானது, தொழிலாள வர்க்கத்தை பிளவுபடுத்தவும், நோக்குநிலையை பிறழச் செய்யவும், யூத எதிர்ப்புவாதம் உட்பட அனைத்து வகையான மதவெறியையும் தூண்டிவிடுவதை அடிப்படையாகக் கொண்டுள்ளது. மாறாக, போர் மற்றும் இனப்படுகொலைக்கு எதிரான போராட்டத்திற்கு சர்வதேச தொழிலாள வர்க்கம் ஒரு பொதுவான போராட்டத்தில் ஐக்கியப்படுவது அவசியமாகும்.

இந்த புரட்சிகர ஐக்கியத்துக்காகப் போராடுவதே நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் உலக சோசலிச வலைத் தளமும் இன்று நடத்தவுள்ள மே தின பேரணியின் மைய உந்துதலாகும். சோசலிசத்திற்கான உலகளாவிய போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தக்கூடிய ஒரு அரசியல் வேலைத்திட்டத்தை எதிர்நோக்கும் அனைத்து மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் உழைக்கும் மக்களை இந்த பேரணியில் கலந்து கொள்ளுமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம்.

Loading