World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பிய ஒன்றியம்

UN world report documents widespread poverty, illiteracy and disease

ஐக்கிய நாடுகள் சபையின் உலக அறிக்கை: பரந்த அளவிலான வறுமை, எழுத்தறிவின்மை, நோய்கள் ஆகியவற்றை ஊர்ஜிதம் செய்கிறது

By Margaret Rees
7 July 2000

Back to screen version

ஐக்கிய நாடுகள் சபை அதனுடைய 2000ம் ஆண்டுக்கான மனித அபிவிருத்தி அறிக்கையை அண்மையில் வெளியிட்டுள்ளது. அதன் அறிமுக உரையில் "மனித உரிமையில் முன்னேற்றம் 20ம் நூற்றாண்டில் ஒரு குறிப்பிடத்தக்க வெற்றியாகும்" என குறிப்பிட்டு உலகின் கவனத்துக்குரிய பிரதான பிரச்சினைகள் தொடர்பாக சர்ச்சைக்குரிய ஆதாரங்களை மதிப்பீடு செய்வதுடன் அந்த அறிக்கை தொடர்கின்றது.

தனிநபர் வருமானத்தோடு மாத்திரம் வரையறுக்காமல், சாதாரண வாழ்க்கை நலம் எழுத்தறிவு போன்றவற்றின் புள்ளி விபரங்களுடன் அந்தந்த நாடுகளின் ஜனத்தொகை புள்ளிவிபரங்களோடு இந்த அறிக்கை ஒரு தசாப்தத்திற்கு முன்னர் உறுதி செய்யப்பட்டது. ஒவ்வொரு நாடுகளின் புள்ளிவிபரக் கண்ணோட்டத்துடன் வறுமை தொடர்பாக தகவல்களை வழங்கும் ஒவ்வொரு வருட அறிக்கையும் ஒரு புதிய தலைப்பில் ஆய்வுசெய்யப்பட்டிருந்தாலும் இந்த அறிக்கையில் முதலாளித்துவச் சந்தையின் நெருக்கடி எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் கேள்விக்குள்ளாக்கப்படவில்லை. இந்த வருடம் மனித உரிமைகள் தொடர்பாக மனித அபிவிருத்தியில் கவனம் செலுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் புத்தாயிரத்துக்கான விசேட மாநாட்டை செப்டம்பர் மாதத்தில் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. உலகின் பிரதான 500 கம்பனிகளில் மனித உரிமைகளையும் உழைப்பு தராதரத்தையும் பாதுகாக்குமாறு கோரி இந்த மாநாடு விண்ணப்பிக்கலாம் என இந்த அறிக்கை முன் மொழிகின்றது. மேற்குறிப்பிட்ட விடயங்களை பாதுகாக்குமாறு இந்த கம்பனிகளுக்கு வேண்டுகோள் விடுக்க வேண்டும் என முன் மொழிவதன் ஊடாக இந்த விடயங்கள் தொடர்பாக இந்த கம்பனிகளில் பாரிய பிரச்சினைகள் இருந்து கொண்டுள்ளன என்பதை இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. மேலும் சுயமான மனித அபிவிருத்தியும் அபிவிருத்தியடைந்த மனித உரிமையும் திறந்த சந்தைக் கொள்கையின் மூலம் சுய சம்ப்படுத்தப்பட்டது எப்படி? தொடக்கத்திலிருந்தே அதன் புள்ளிவிபரங்கள் மறைக்கப்பட்டுள்ளன.

50 கோடி மக்களுக்கு மேல் வாழும் 30 நாடுகளில் தனிநபர் வருமானம் இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் இருந்ததை விட குறைந்துள்ளது. ஆபிரிக்காவிலும் கிழக்கு ஐரோப்பாவிலும் 22 நாடுகளில் எச்.ஐ.வி. அல்லது எய்ட்ஸ் (HIV/AIDS) நோயாலும் பொருளாதார வீழ்ச்சியினாலும் யுத்தத்தினாலும் மனித அபிவிருத்தி 1990 களில் இருந்ததை விட பாரிய வீழ்ச்சி கண்டுள்ளது.

உப சஹாரான் ஆபிரிக்காவில் 1970 களில் உயிர் வாழ்க்கை காலம் குறிப்பிடத்தக்க அளவு அபிவிருத்தி அடைந்திருந்தது. ஆனால் தற்போது இது பாரிய அளவில் வீழ்ச்சி கண்டுள்ளது. பல ஆபிரிக்க நாடுகளில் வாழ்க்கை காலம் 10 வருடங்களுக்கு மேலாக கடந்த தசாப்தத்தில் வீழ்ச்சி கண்டுள்ளதோடு 1999ன் இறுதியில் சுமார் 34 மில்லியன் மக்களுக்கு எச்.ஐ.வி. தொற்றியுள்ளது. அதில் 23 மில்லியன் ஆபிரிக்காவிலாகும். 12 மில்லியன் ஆபிரிக்கர்கள் எயிட்ஸினால் இறந்துள்ளனர். 2010ல் ஆபிரிக்க கண்டத்தில் 40 மில்லியன் அகதிகள் இருப்பார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

உலகில் ஒவ்வொரு நிமிடமும் 11 பேருக்கு எச்.ஐ.வி. நோய் தொற்றுகிறது. 1999ல் தென் கிழக்காசியாவிலும் பசுபிக் பிராந்தியத்திலும் ஒரு மில்லியனுக்கு மேற்பட்டோர் புதிதாக இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். எல்லாவற்றிற்கும் மேலாக 5 மில்லியன் மக்கள் இராணுவத் தாக்குதலினால் கொல்லப்பட்டுள்ளனர் என கணக்கிடப்பட்டுள்ளது.

குழந்தைகளின் சுகாதாரமும் போஷாக்கும் தொடர்பான புள்ளிவிபரங்கள் குறிப்பாக அதிர்ச்சியளிப்பதாக உள்ளன. உப சஹாரா பிராந்தியத்தில் குழந்தைகளின் இறப்பு வீதம் 1000க்கு 106 ஆகும். வருடாந்தம் பிறக்கும் 130 மில்லியன் குழந்தைகளில் 30 மில்லியன் குழந்தைகள் குறை அபிவிருத்தியுடன் பிறக்கின்றன. அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் ஐந்து வயதிற்கு குறைந்த பிள்ளைகளில் மூன்றில் ஒரு பகுதியினர் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் பெரும் பகுதியினர் ஆபிரிக்காவிலும் தெற்காசியாவிலும் உள்ளனர்.

இந்த புள்ளிவிபரங்களுடன் கல்வி தொடர்பான புள்ளிவிபரங்களை ஒப்பிடுகையில், உலகில் 90 மில்லியன் குழந்தைகளுக்கு எந்தவிதமான கல்வியும் ஆரம்பக் கல்வியும் மறுக்கப்பட்டுள்ளது. 232 மில்லியன் குழந்தைகளுக்கு குறைந்த பட்சம் இரண்டாம் நிலைக் கல்வியைக்கூட பெறமுடியாத நிலை உள்ளது. கிழக்கு ஐரோப்பாவிலும் CIS (முன்னைய சோவியத் யூனியன் நாடுகளிலும்) பாடசாலைக் கல்வி 1989ல் இருந்ததை விட வீழ்ச்சி கண்டுள்ளது. எழுத்தறிவின்மை மீண்டும் தலைநீட்டியுள்ளது.

இந்தியாவில் ஆரம்ப கல்வி வழங்கப்பட்டாலும், 1996ம் ஆண்டு வட மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் 60 வீதமான பாடசாலைகள் ஒழுகும் கூரைகளைக் கொண்டுள்ளன. 89 வீதமான பாடசாலைகளில் மலசலகூட வசதி இல்லை 59 வீதமான பாடசாலைகளில் குடிநீர் இல்லை.

1991ல் இந்தியாவில் 7 வயதிற்கு கூடிய மக்களில் 52 சதவீதமானவர்களுக்கு எழுத்தறிவு இருந்தது. இதில் இந்திய பிராந்திய அரசுகளில் கிராமிய பெண்களில் 16 சதவீதமானவர்களுக்கு எழுத்தறிவு உள்ளதாகவும் அறிக்கை குறிப்பிடுகின்றது. ராஜஸ்தான் மாநிலத்தில் இது 4 சதவீதமாகும். உலக ரீதியாக 100 கோடிக்கு அதிகமானோர் எழுத்தறிவு இல்லாதவர்களாகும்.

கல்வியறிவுக் குறைபாட்டாலும் பரந்த எழுத்தறிவின்மையாலும் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் 250 மில்லியன் சிறுவர்கள் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இதில் 140 மில்லியன் சிறுவர்களும் 110 மில்லியன் சிறுமியர்களாகும். 18 வயதிற்கு குறைந்த 1.2 மில்லியன் பெண்களும் சிறுமியர்களும் வருடாந்தம் விபச்சாரத்தில் ஈடுபடத் தள்ளப்படுகின்றனர்.

சுகாதாரத்துக்கும் சேமநல நடவடிக்கைகளுக்கும் ஒதுக்கப்படும் அரச நிதி மிகவும் குறைந்த அளவில் உள்ளதை இந்த அறிக்கை ஏற்றுக்கொண்டுள்ளது. அண்மையில் வெளியிடப்பட்ட யுனிசெப் அறிக்கையின்படி (1995 புள்ளிவிபரங்கள்) அடிப்படை வசதிகளை மேற்கொள்வதற்கு அவசியமான அரச நிதியில் 80 பில்லியன் டொலர் பற்றாக்குறை நிலவுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அடிப்படை வசதிகளுக்கு 206-216 பில்லியன் டாலர்கள் வரையில் அவசியமாயினும் 136 பில்லியன் மாத்திரமே செலவுசெய்யப்படுகின்றது. நைஜீரியாவில் ஒரு நபருக்கான சுகாதார செலவு 5 டொலராகும். குறைந்தபட்ச செலவில் 42 சதவீதமாகும். எதியோப்பியாவில் 3 டொலராகும் குறைந்தபட்ச தொகையில் 25 சதவீதமாகும்.

புதிய மருந்து வகைகளுக்கான ஆராய்ச்சியையும் அபிவிருத்தியையும் செய்வதற்கு 150-200 பில்லியன் செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டிருந்த போதிலும் எந்தவொரு அபிவிருத்தியடைந்து வரும் நாடும் 400 மில்லியன் மருந்து விற்பனையில் இல்லாத நிலையிலேயே இந்த நிலையங்கள் இருக்கின்றன.

உலகில் மிக வறுமையான நாடான சியரா லியோனில் (Sierra Leone) 50 சதவீதமான மக்கள் 40 வயதுக்கு குறைவான காலமே உயிர் வாழ்கின்றனர். 66 சதவீதமானவர்களுக்கு சுத்தமான தண்ணீர் வசதி இல்லை. 64 சதவீதமானவர்களுக்கு சுகாதார சேவை இல்லை. 89 சதவீதமானவர்களுக்கு எந்தவிதமான அடிப்படைத் தேவைக்குமான வசதியும் இல்லை. 68 சதவீதமானோர் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்றார்கள். முதியோரின் எழுத்தறிவின்மை தொடர்பான புள்ளிவிபரங்கள் இல்லை.

உலகெங்கும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் ஒரு பில்லியனுக்கு மேலான மக்களுக்கு நல்ல குடிநீர் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு இல்லை. 2.4 பில்லியன் மக்களுக்கு சுகாதார வசதியில்லை. 790மில்லியனுக்கு அதிகமானோருக்கு போதிய போஷாக்கில்லை: 1.2 பில்லியன் மக்கள் வருமானம் குறைந்தவர்களாக கணக்கிடப்பட்டுள்ளது.

புள்ளிவிபரங்களும் வறுமை தொடர்பான தகவல்களும் மிகப் பயங்கரமாக உள்ளன. அறிக்கையை உற்றுநோக்குமிடத்து அதன் தாத்பரியம் புரிகின்றது. புள்ளி விபரங்களை அதன் கட்டுமானத்தினுள் வைத்து மீளாய்வு செய்யும்போது அதன் முழுத்தாக்கமும் பெரிதும் குழப்பமளிப்பதாக உள்ளது. அறிக்கையின் வரலாற்று எல்லை வரம்பினில் புள்ளிவிபரங்களுக்கும் சித்தாந்த கட்டுமானத்துக்கும் இடையே இணைப்புக்கள் இல்லாமை ஆழமாகியுள்ளது.

தன்னால் முடிந்த மட்டும் வர்க்க மோதுதல்களை குறிப்பிடுவதை தவிர்க்கும் பொருட்டு அது கடந்த சில நூற்றாண்டுகளாக இடம்பெற்ற போராட்டங்களின் தெளிவான ஒரு காலப்பட்டியலை வழங்குகின்றது. இந்தக் கட்டுமானத்தின்படி இருபதாம் நூற்றாண்டு மனித உரிமைகளும் ஜனநாயக வடிவிலான ஆட்சிகளதும் மாபெரும் வெற்றிகளின் அதிகரிப்பைக் கண்டு கொண்டுள்ளது. "20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உலக சனத் தொகையில் அற்பமான 10 சதவீதத்தினரே சுதந்திரமான நாடுகளில் வாழ்ந்தனர். அதனது இறுதியில் மிகப் பெரும்பான்மையினர் தமது சொந்த தெரிவுக்கு இணங்க சுதந்திரத்தில் வாழ்ந்தனர்." முதலாவது மாபெரும் சாதனை 1948ம் ஆண்டின் ஐ.நா. மனித உரிமைகள் பிரகடனத்தின் மூலம் வழங்கப் பட்டதாக கூறிக்கொள்ளப்படுகின்றது. இரண்டாவது பூகோளமயமாக்கத்தின் மூலம் கட்டவிழ்த்துவிடப்பட்டது. அந்த விதத்தில் "ஒரு பூகோளரீதியான இயக்கமானது உலகின் மாறுபட்ட கலாச்சாரங்களைக் கொண்ட உலகளாவிய மனித உரிமைகளை சுற்றிவளைத்துக்கொண்டுள்ளது."

இந்த ஐ.நா. அறிக்கையின் ஒருங்கிணைப்பாளரான கலாநிதி. றிச்சாட் ஜொலி கூறுவதாவது: "வரலாற்றில் முதல் தடவையாக உலகின் பெரும் பகுதி ஜனநாயக ஆட்சிமுறையின் கீழ் உயிர்வாழ்கின்றன. உலகளவிய ரீதியான சுதந்திர அலைவீச்சின் காரணமாக கடந்த 20 வருடங்களில் 100க்கும் மேலான பல கட்சி ஜனநாயகங்கள் ஸ்தாபிதம் செய்யப்பட்டுள்ளன. கொடுமையும் துப்பாக்கிக் குண்டுகளும் வாக்குப் பெட்டிகளுக்கு வழிவிட்டுக் கொடுத்துள்ளன."
உதாரணமாக 1990களில் 'ஜனநாயகம்' எனப்படுபவை "ஆபிரிக்கா பூராவும் பரந்துவிட்டன". எவ்வாறெனினும் இது ஆபிரிக்காவின் 'வறுமையின் வரிசை' யில் வாசிக்கப்படும் 24 வறிய நாடுகளின் பட்டியலை- நைஜீரியா, கொங்கோ, சம்பியா, கோட்டிபொய், செனிகல், தன்சானியா, பெனின், உகண்டா, எரித்திரியா, அங்கோலா, சம்பியா, கயனா மாலவி, ருவாண்டா, மாலி, மத்திய ஆபிரிக்க குடியரசு, சாட், மொஷாம்பிக், கயனா-பிஸ்ஸா, புருண்டி, எதியோப்பியா, புர்கினோ பாசோ, நைகர், சியராலியோன்- கணக்கிடுவதாய் இல்லை.


Copyright 1998-2000
World Socialist Web Site
All rights reserved