World Socialist Web Site www.wsws.org


WSWS: செய்திகள் & ஆய்வுகள்: மத்திய கிழக்கு

Palestinians under military and economic siege

பாலஸ்தீனியர்கள் இராணுவ பொருளாதார முற்றுகையின் கீழ்

By Jean Shaoul
20 August 2001

Back to screen version

இக் கட்டுரையின் முதலாம் பகுதியை 27-08-2001 ல் காணலாம்

பாடசாலைகள் மீதான தாக்குதல்

பிராந்தியங்கள் மூடப்பட்டதும் வீதித்தடைகளும் கல்விச்சேவை மீது பாரிய தாக்கத்தை உருவாக்கியுள்ளது. பாலஸ்தீனமக்களில் அரைவாசிக்கு மேலானோர் 16 வயதுக்கு உட்பட்டவர்களாகும். ஆனால் நூற்றுக்கணக்கான பாடசாலைகளும், கல்வி நிலையங்களும் மூடப்பட்டுள்ளன, அல்லது தொடர்ச்சியாக இயங்குவதில்லை. ஆசிரியர்களும் மாணவர்களும் பாடசாலைக்கு செல்லமுடியாதுள்ளனர். இஸ்ரேலிய நிதிப்பற்றாக்குறையால் பாலஸ்தீன நிர்வாகம் சம்பளம் வழங்ப பணமில்லாதுள்ளது.

இஸ்ரேலின் முழுவதாகவோ அல்லது பகுதி கட்டுப்பாட்டினுள் உள்ள பாடசாலைகள் பாதுகாப்புப் படையினரின் இலக்குக்குள்ளாகியிருப்பதுடன், டசின் கணக்கான ஆசிரியர்களும், மாணவர்களும் கொல்லப்பட்டுள்ளனர் இல்லது காயமடைந்துள்ளனர். News from Within என்பதன் அறிக்கை ஒரு தொகை சம்பவங்களை குறிப்பிட்டுள்ளது. அதில் ''ஒரு பாடசாலை சுற்றிவளைக்கப்பட்டு 20 தடவைகளுக்கு மேலாக துப்பாக்கிக் குண்டுகளாலும், கண்ணீர்ப்புகைக்குண்டுகளாலும் தாக்கப்பட்டது. இஸ்ரேலிய இராணுவம் பல பாடசாலைகளை இராணுவ முகாமாக்கியுள்ளதுடன், அப்பாடசாலைகள் காலவரையற்று மூடப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் Tulkarm நகரில் உள்ள al-Sharageh பெண்கள் பாடசாலையை நோக்கி துப்பாக்கிப்பிரயோகம் செய்யப்பட்டதுடன், பல மாணவிகளை காயமடைந்தனர். Jenin நகருக்கு அண்மையிலுள்ள Sadeh al Hartheyeh பாடசாலையிலும் இதே இடம்பெற்றது. பாடசாலைகள் நடைபெற்றாலும் அவை அரை நேரத்திற்கே இயங்குவதால் இளைஞர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலைமை உடல் சுவாதீனமான பிள்ளைகளை கூடுதலாகப்பாதித்துள்ளது.

காது கேட்காத பிள்ளைகளுக்கான Atfaluna Society நிறுவனத்தின் தலைவியான Geraldine Shawa ''இவ்வியக்கத்தின் பாடசாலைகளுக்கு சமூகமளித்தவர்கள் கூடுதலாக பாதிக்கப்பட்டுள்ளது மட்டுமல்லாது ஆத்திரமுமடைந்துள்ளனர். இவ்வியக்கத்தின் ஏற்கனவே வீழ்ச்சியடையும் வருமானத்தினால் உணவு வழங்குவதும் பிரச்சனைக்குள்ளாகியுள்ளது. பணவசதிகள் நிறுத்தப்பட்ட குடும்பங்களில் இருந்து வரும் பாடசாலை பஸ்ஸிற்கான கட்டணத்தை கட்டமுடியாதுள்ளதுடன், தமது காதுகேட்கும் கருவிக்கான பற்றறிகளுக்கு மாதாந்தம்10-15$ செலவளிக்குமுடியாதுள்ளனர் ''என குறிப்பிட்டார்.

காதுகேட்காத பிள்ளைகள் மற்றைய பிள்ளைகளை விட கூடுதலான மனோவியல் தாக்கத்திற்கு உள்ளாகியிருக்கின்றனர். ஏனெனில் அவர்களுக்கு என்ன நடக்கின்றது என புரிவதில்லை. அவர்களால் அதிர்ச்சிகளையும் பதட்டத்தையும் உணர்ந்து கொள்ளக்கூடியதாகவுள்ளது. அவர்களுக்கு யாராவது எழுதிக்காட்ட வேண்டியுள்ளது இது அவர்களின் ஆசிரியர்களின் பொறுப்பாகவுள்ளது.

பல்கலைக் கழகங்கள் கூடுதலாக திறந்திருந்தாலும், அண்மையில் தங்கியிருக்காத மாணவர்களின் வரவு குறைவாக இருப்பதால் விரிவுரைகள் இரத்துச்செய்யப்படுகின்றன. இது மாணவர்களுக்கு பண, நேர விரயத்தை உருவாக்குகின்றது. கல்விகற்கும் காலம் நீடிக்க செய்யப்பட்டு அவர்களின் படிப்பு முடிப்பதற்கான உதவிசெய்யப்படுகின்றது.

ஆக்கிரமிப்புப்படையின் முக்கிய இலக்காக மாணவர்கள் உள்ளனர். அவர்கள் வீதிகளிலும், சோதனைச் சாவடிகளிலும் அடிக்கடி தாக்கப்படுவதுடன், கைதுக்கும் உள்ளாகின்றனர். பெத்தலேம் பல்கலைக் கழகத்திற்கு கிழக்கிலிருந்து மேற்கிற்கு வரும் மாணவர்கள் ஆயுதப்படையிரால் அடிக்கடி தொந்தரவுக்குள்ளாவதால், அவர்களால் தொடர்ச்சியாக வகுப்புகளுக்கு சமூகமளிக்கமுடிவதில்லை.

குடியேற்றவாசிகளின் வன்முறை

சர்வதே எதிர்ப்புக்கு மாறாக குடியேற்றங்களும், குடியேற்றவாசிகளினது எண்ணிக்கையும் அதிகரிக்கின்றது. Peace Now என்னும் அமைப்பின்படி ஒஸ்லோ உடன்படிக்கைக்கு பின்னர் குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை 53%ஆல்அதிகரித்துள்ளது.இது தற்போது 200,000 ஆகவுள்ளது. இது கிழக்கு ஜெருசலேமின் அண்மையிலுள்ள இதே அளவான குடியிருப்பாளர்களையும் உள்ளடக்குகின்றது. அவர்கள் ஜெருசலேம் நகரினுள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

1993 இற்கு பின்னர் 42 உத்தியோகபூர்வமற்று குடியிருப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 1998 Wye உடன்படிக்கையில் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு அமெரிக்க ஜனாதிபதியான கிளின்டனுக்கு வழங்கிய உறுதிமொழிக்குமாறாக 12 குடியேற்றங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. முன்னாள் பிரதமரான எகூட் பராக்கின் கீழ் மேற்கு கரையில் 22,419 பேர் குடியேறியுள்ளனர்.

1999 யூன் இற்கும் 2000 அக்டோபருக்கும் இடையில் 3499 வீடமைப்பிற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டன. அக்டோபர் 2000 இற்கும் தற்போதைய இன்டிபாடாவிற்கும் இடையில் குடியேற்றங்களில் 954 புதிய வீடுகளுக்காக பொதுப்பணத்தினால் உதவியளிக்கப்பட்டது. பெப்ரவரியில் ஆரியல் ஷரோன் பதவிக்குவந்த பின்னர் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்தில் 6000 வீடுகளுக்கு அனுமதிவழங்கப்பட்டதுடன், இவ்வருட மார்ச் மாதம் Har Homa இல் 2832 புதிய வீடுகளுக்கு அனுமதிவழங்கப்பட்டது .

ஆக்கிரமிப்புப் படைகளின் ஒன்னொரு கையாக இயங்கும் குடியிருப்பாளர்களின் விழிப்புக் குழுக்களின் நடவடிக்கைகளை இஸ்ரேல் வெளிப்படையாக அங்கீகரித்துள்ளது. இக்குழுக்கள் பாலஸ்தீனியர்கள் மீது கொலைகாரத்தனமான தாக்குதல்களை நடாத்துவதுடன், வீடுகளையும், பண்ணைகளையும், சொத்துக்களையும் அழிப்பதுடன், அவர்களின் பண்ணைகளில் விதைப்பதையும், அறுவடை செய்வதையும் தடுக்கின்றனர். அவர்களது குற்றச்செயல்கள் தொடர்பான அவர்கள் மிகவும் குறைவாகவே குற்றஞ்சாட்டப்படுவதுடன், அதிகாரிகளால் கண்டிக்கப்படாததுடன், அவர்களின் செயல் தொடர்பான வீடியோ சாட்சியங்கள் இருந்தபோதும் அவர்களது அழிப்புச்செயல் தொடர்கின்றது.

அவர்கள் இஸ்ரேல் இராணுவத்தினது மெளனமான ஆதரவைப் பெற்றுக் கொள்வதுடன், அதனை எதிர்க்கும் பாலஸ்தீனியர்களை ''ஒழுங்கை மீளமைப்பது'' என்பதன் கீழ் தண்டிக்கின்றனர். உதாரணமாக அழிக்கப்பட்ட வீடுகளை மூன்று மாதங்களுக்கு ''மூடிய இராணுவப்பிரதேசமாக'' இராணுவம் அறிவித்ததன் மூலம் அதிலிருந்து வெளியேறிய குடும்பத்தினர் வீடு திரும்புவதை தடுக்கின்றனர். இக்குடியேற்றவாசிகள் பாலஸ்தீனியர்களின் ஒடுக்குமுறையான, ஏமாற்றமிக்க, இழிவான நாளாந்த வாழ்க்கையை தீர்மானிக்கின்றனர். மிகவும் குற்றமிக்க செயல் என்னவெனில் பிரயாணம் செய்பவர் ஒரு பெண்ணாக இருந்தால் அன்றி, மேற்குகரையில் பாலஸ்தீனிய ஆண்கள் வாகனத்தை செலுத்துவதை தடைசெய்யுமாறு இராணுவ உயரதிகாரியான Shaul Mofaz இனை னம் உத்தரவை பிறப்பிக்கச் செய்துள்ளனர்.

சர்வதேச உதவி

இவ்வாறான சீரழிந்த பொருளாதார, சமூக நிலைமைகளின் கீழ் மிகக்குறைந்த உதவி வழங்குவதாக வாக்குறுதியளிக்கப்பட்டுள்ளதுடன், மிகக்குறைந்தளவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

உலகவங்கி 15 மில்லியன் டொலர் வழங்குவதாக உறுதிமொழி வழங்கியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் பாலஸ்தீன நிர்வாகம் வங்குரோத்தில் சென்றுவிடாது இருப்பதற்காகவும், பாலஸ்தீனிய உத்தியோகத்தர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காகவும் 50 மில்லியன் டொலரு வழங்குவதாக உறுதியளித்துள்ளது. ஆனால் இது கடுமையான வரவுசெலவுத்திட்டத்தை முன்வைப்பதை சர்வதேச நாணயம் நிதியத்தினது உறுதிப்படுத்துவதில் முற்றாக தங்கியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் நிதியமைச்சால் சம்பளங்கள் வழங்கப்படவேண்டும் எனவும், பாதுகாப்பு பிரிவின் உத்தியோகத்தர்களால் வழங்கப்படக்கூடாது எனவும் கோரியுள்ளது.

அமெரிக்கா ஒரு நீண்டகால உதவித்திட்டத்தின் அடித்தளத்தில் 75 மில்லியன் டொலர் வழங்குவதாக கூறியுள்ளது. இத்தொகையானது வாஷிங்கடனால் இஸ்ரேலிக்கு வருடாந்தம் வழங்கப்படும் 3பில்லியன் டொலருடன் ஒப்பிடுகையில் முக்கியமற்றாதாகின்றது. எவ்வாறிருந்தபோதும் இவ்வுதவியானது பலமாதங்களாக வழங்கப்படாதுள்ளது.

உலக உணவு திட்டமானது நவம்பர் மாதம் செல்வம்மிக்க கைத்தொழில் நாடுகளிடம் உணவுக்காக 3.9 மில்லியன் உதவு கோரியிருந்தது. ஆனால் சிறியளவே கிடைத்து. உணவு உதவிகள் கிடைத்தபோதும், அவை இஸ்ரேலிய அதிகாரிகளின் நீண்ட தடைகளுக்குள்ளாலேயே வந்தடைந்தன.

வளைகுடாவின் வர்த்தகத்திலிருந்து பாலஸ்தீனிய வேலையற்றோர் நிதிக்காக 20மில்லியன் விஷேட உதவி உருவாக்கப்பட்டது. மோதல்கள் ஆரம்பித்ததிலிருந்து அராபிய அரசாங்கங்கள் 693 மில்லியன் டொலர் உறுதியளித்திருந்தன, இவ்வருடம் மேலும் 240 மில்லியன் டொலர் அவசர உதவியாக ஒதுக்கியுள்ளன. ஆனால் இவை எதுவும் வழங்கப்படவில்லை.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved