World Socialist Web Site www.wsws.org


WSWS: செய்திகள் & ஆய்வுகள்: ஐரோப்பா : பிரான்ஸ்

An interview with Lutte Ouvrière leader Arlette Laguiller, and comment by Peter Schwarz

Lutte Ouvrière தலைவர் ஆர்லட் லாகியேயுடன் ஒரு நேர்காணலும் பீட்டர் சுவார்ட்ஸால் வழங்கப்பட்ட குறிப்பும்

By Peter Schwarz
10 May 2002

Back to screen version

மே 5 மாலை அன்று, உலக சோசலிச வலைத் தளமானது Lutte Ouvrière ன் ஜனாதிபதி வேட்பாளர் ஆர்லட் லாகியே உடன் உரையாடியது. இந் நேர்காணலானது பாரிசின் புறநகர்ப்பகுதியில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. Lutte Ouvrière, நடந்து முடிந்த தேர்தல் பற்றியும் அதில் வலதுசாரி கோலிசக் கட்சியின், தற்போது பதவியில் உள்ள ஜாக் சிராக் நவ-பாசிச தேசிய முன்னணி வேட்பாளர் ஜோன்-மரி லு பென்னைத் தோற்கடித்தது பற்றியும் அதனது மதிப்பீட்டை வழங்குவதற்காக செய்தியாளர் மாநாட்டைக் கூட்டி இருந்தது.

ஏப்பிரல் 29 அன்று உலக சோசலிச வலைதளத்தின் ஆசிரியர் குழு Lutte Ouvrière (LO), Ligue Communiste Révolutionnaire (LCR) மற்றும் Parti des Travailleurs (PT) ஆகியோருக்கு ஒரு பகிரங்கக் கடிதத்தை விடுத்திருந்தது. ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்றில் மூன்றும் சேர்ந்து மொத்தமாக முப்பது இலட்சம் வாக்குளைப் பெற்றிருந்த இந்த அமைப்புக்களை, இரண்டாவது சுற்றுத் தேர்தலை தொழிலாள வர்க்கம் செயலூக்கத்துடன் புறக்கணிக்கப்பதற்கான பிரச்சாரத்தை முன்னெடுப்பதற்கு தலைமை ஏற்கும்படி உ.சோ.வ.த அழைத்தது. [பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தலை தொழிலாள வர்க்கம் புறக்கணிப்பதற்காக சிராக்கையும் லு பென்னையும் நிராகரி:Lutte Ouvrière, Ligue Communiste Révolutionnaire, and Parti des Travailleurs ஆகியோருக்கு ஒரு பகிரங்கக் கடிதம்]

இந்தக் கட்சிகளில் ஒன்று கூட பகிரங்கக் கடிதத்திற்கு உத்தியோகரீதியாகப் பதில் அளிக்கவில்லை. இருப்பினும் உ.சோ.வ.தளத்தின் ஆதரவாளரும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் இந்தப் பகிரங்கக் கடிதத்தின் படி(நகல்) ஒன்றை Lutte Ouvrière-க்கு அனுப்பின. அதனிடமிருந்து பெறப்பட்ட சிறிய பதிலானது உ.சோ.வ.தளம் Lutte Ouvrière நிலைப்பாட்டை தவறாகப் பிரதிநிதித்துவப்படுத்தியதாகக் குற்றம் சாட்டியது, ஆனால் தேர்தல் புறக்கணிப்பிற்கான முன்மொழிவின் பலாபலன்கள் பற்றியோ அல்லது உ.சோ.வ.தளத்தால் விளக்கப்பட்ட பிரான்சின் நெருக்கடி பற்றிய அரசியல் ஆய்வு பற்றியோ எதுவும் குறிப்பிடவில்லை.

ஞாயிற்றுக் கிழமை செய்தியாளர் மாநாட்டினை அடுத்து, இந்த செய்தியாளர் லாகியேயை பிரெஞ்சுத் தேர்தல் பற்றிய அவரது கட்சியின் மதிப்பீட்டைப் பற்றியும் உ.சோ.வ. தளத்தாலும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவாலும் இரண்டாவது சுற்றுத் தேர்தலைப் புறக்கணிக்கும்படி விடுக்கப்பட்ட அழைப்பைப் பற்றிய அதன் மனப்பாங்கைப் பற்றியும் நேர்காணல் செய்தார்.

அந் நேர்காணலையும் அதனைத் தொடர்ந்த குறிப்பையும் நாம் கீழே வெளியிட்டிருக்கிறோம்.

உ.சோ.வ.த: நாம் பகிரங்கக் கடிதத்தை எழுதினோம்...

லாகியே: ஆம், இப்பொழுது ஏதோ நினைவிருக்கிறது.

உ.சோ.வ.த: உங்களது அமைப்பையும் அதேபோல எல்.சி.ஆர் மற்றும் பி.டி. ஆகியவற்றையும் இரண்டாவது சுற்றுத் தேர்தலைப் புறக்கணிப்பதற்காக நாம் அழைப்பு விடுத்தோம். வாக்காளர்களை வெற்று வாக்குச்சீட்டைப் போடுவதற்கு அழைப்பதை விடவும் புறக்கணிப்பானது வேறுபட்ட பண்பைக் கொண்டிருப்பதாக நாம் விவாதித்தோம். புறக்கணிப்பானது லு பென் மற்றும் சிராக்கை நிராகரிப்பதை மட்டும் குறிக்காமல், பெரு முதலாளிகளின் பிரதிநிதிக்கும் பாசிஸ்டுக்கும் இடையிலான இந்த ஏமாற்று மற்றும் ஜனநாயகமற்ற தேர்வையும் புறக்கணிப்பதைக் குறிக்கிறது. புறக்கணிப்பானது, அதன் இடதுசாரி மற்றும் வலதுசாரி, அதேபோல பாசிச பிரதிபலிப்பிற்கும் எதிராக தொழிலாள வர்க்கத்தை இந்த அரசியல் கட்டமைப்பிற்கு ஒட்டு மொத்தமாக எதிர்ப்பில் முன்னணியில் வைக்க, தொழிலாள வர்க்கத்தை செயலூக்கமான அரசியல் சக்தியாக அணிதிரட்டுவதை இலக்காகக் கொள்ளும்.

லாகியே: முதலாவதாக, புறக்கணிப்பு என்று எதனை அர்த்தப்படுத்துகிறீர்கள்? உங்கள் கண்ணோட்டத்தில் புறக்கணிப்பு என்பது என்ன? வாக்களிப்பதிலிருந்து விலகி இருத்தலா? வாக்குப் பெட்டிகளை எரிப்பதா?

உ.சோ.வ.த: இல்லை, புறக்கணிப்பு என்பதன் அர்த்தம் நீங்கள் தொழிலாள வர்க்கத்திற்கும் தொழிலாள வர்க்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எல்லா அமைப்புக்களையும் புறக்கணிப்பை ஒழுங்கமைக்க வேண்டுகோள்விடுப்பதாகும்...

லாகியே: எப்படி? வாக்குச்சாவடிகளின் முன் நிற்பதற்கு மக்களை நாம் வாக்குப் பெட்டிகளை எரிப்பதற்கு அழைப்பதா?

உ.சோ.வ.த: இல்லை. அது ஒரு தந்திரோபாயம் அது தொழிலாள வர்க்கத்திற்கு மட்டும் தனிச்சிறப்பானதல்ல. அண்மையில் பாக்கிஸ்தானின் சர்வாதிகாரி, முஷாரப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட பொது மக்கள் கருத்து வாக்கெடுப்பு, முதலாளித்துவ எதிர்ப்பால் மிக சக்திமிக்க வகையில் புறக்கணிக்கப்பட்டது.

லாகியே: உண்மையாக, போராட்டங்களைப் பொறுத்தவரையில் எடுத்துக் கொண்டால், இந்தக் கணத்தில் இந்த நாட்டில் தொழிலாள வர்க்கம் முற்றிலுமாக இல்லை, தொழிலாள வர்க்கம் இல்லாமல், புறக்கணிப்பிற்கும் வாக்களிப்பிலிருந்து விலகி இருப்பதற்கும் இடையில் நீங்கள் செய்யும் வேறுபாட்டை நான் பார்க்கவில்லை. வெற்று வாக்குச்சீட்டாக அல்லது பாழ்படுத்தப்பட்ட வாக்குச் சீட்டாக இருப்பதைக் காட்டிலும், வாக்களிப்பதிலிருந்து விலகி இருப்பதற்கு நாங்கள் ஆதரவளிக்க வேண்டும் என்கின்றது உங்களது அணுகுமுறை, அல்லது இன்னும் சொல்லப்போனால் அணுகுமுறையைவிட அறிவுரை. ஆனால் புறக்கணிப்பு என்பது வாக்களிப்பிலிருந்து விலகி இருத்தலாகும். அது ஒரேவிதமானதுதான். பின்னர் அது அர்த்தப்படுத்துவது என்னெவெனில், நடந்துகொண்டிருப்பதில் சம்பந்தப்படாதே என்பதுதான்.

நல்லது, நாம் முதலாவது சுற்றில் நின்றோம். நாம் இந்த தேர்தல்களைப் புறக்கணிக்கவில்லை. முதலாவது சுற்றில் லாகைலராகிய என்னை நாம் வேட்பாளராக நிறுத்தி இருந்த பிறகு, நாம் இந்தத் தேர்தல்களில் வாக்களிப்பதிலிருந்து விலகி இருக்கவில்லை. அவ்வாறு நாம் செய்திருந்ததால், இரண்டாவது சுற்றில் நமது வாக்காளர்களுக்கு சிலவற்றைக் கூறுவதற்கு நமக்குப் பொறுப்பு இருக்கிறது என்று நாம் கூற முடியும். மற்றும் சொல்லப்போனால் பிரான்சில், அந்த நாளில் வார இறுதியில் ஓய்வு எடுக்க மற்றும் மீன்பிடிக்க என்று விடுமுறையில் போக முடிவு செய்தோரை ஒன்றாகப் போட்டுக் கலப்பதை விட, வெற்று வாக்குச் சீட்டாகவோ அல்லது பாழ்படுத்தப்பட்ட வாக்குச்சீட்டாகவோ வழங்க செயல்படுமாறு அவர்களைக் கேட்பது சாதகமான ஒன்றாக இருந்தது என்று நாம் எண்ணினோம்.

நீங்கள் செயலூக்கமான புறக்கணிப்பு பற்றிப் பேசுகிறீர்கள். இன்னும் துல்லியமாகச் சொன்னால், நாங்கள் அந்தச் சூழ்நிலையில் இல்லை, செயலூக்கமான புறக்கணிப்பை அனுமதிக்கும் சக்திகளுடன் எமக்கு ஒரு உறவுகளும் இல்லை. எம்முடன் உறவுள்ள சக்திகளுடன் பொருந்துகின்றதாகவும் மற்றும் இந்த நாட்டை எடுத்துக் கொண்டால் தொழிலாள வர்க்கம் என்ன செய்யத் தயார்ப்படுத்தப்பட்டிருக்கிறது என்று நாம் கருதும் முன்மொழிவுகளை எப்போதும் நாம் முன்வைக்கிறோம்.

ஒருவேளை பாக்கிஸ்தானிய புரட்சியாளர்கள் அந்த வகையான சாதகமான சக்திகளின் உறவைக் கொண்டிருக்கலாம்....

உ.சோ.வ.த: அவர்கள் புரட்சியாளர்கள் அல்லர், அவர்கள் முதலாளித்துவக் கட்சிகள்....

லாகியே: நான் சொல்ல வருவதன் அர்த்தம், அவர்கள் ஒருவேளை புறக்கணிப்பு செய்வதற்கான பலம்படைத்த நிலையைக் கொண்டிருந்ததன் காரணமாக இருக்கலாம். ஆனால் அது வாக்களிப்பதிலிருந்து விலகி இருத்தலை இணைக்கின்றது, தேர்தலில் பங்கு கொள்வதில் அல்ல. எம்மைப் பொறுத்தவரை, நாம் அறிவோம், எமது வாக்காளர்கள் மத்தியில் சிலர் வெற்று வாக்குச்சீட்டை அளித்திருப்பர், அல்லது "இல்லை, இல்லை" என வாக்குச் சீட்டில் எழுதி இருக்கலாம், அல்லது அந்த உறையில் ஒன்றையும் வைக்காது விட்டிருக்கலாம், அல்லது சிராக் வாக்குச் சீட்டைக் கிழித்து இருக்கலாம், அல்லது, எனக்குத் தெரியாது. ஒருவருக்கு உடன்பாடின்மையைக் காட்டுவதற்கான பல வழிகள் அங்கு இருக்கின்றன.

எப்படியோ, இருவாரங்களுக்கான எமது பிரதான பிரச்சாரத்தைக் கூறுவதென்றால்: "லு பென்னுக்கு ஒரு வாக்குக் கூட கிடையாது மற்றும் சிராக்கிற்கு நெருக்கடியானகாலத்துக்குரிய வாக்கும் அல்ல". அதன் அர்த்தம், உண்மை விஷயம் என்னவெனில், இரண்டு பேருக்கிடையில் தேர்ந்தெடுப்பதற்கு நாம் மறுக்கிறோம், முடிவில், மூலதனத்தின், பெரு முதலாளிகளின் பிரதிநிதிகளான இவர்களில், சிராக்- லு பென் போல சரியாக அதே கருத்தியலைக் கொண்டிருக்கவில்லை. இருப்பினும், இருவருமே பெருமுதலாளிகளின் பிரதிநிதிகள், மற்றும் இவர்களுள் எவர் தேர்ந்து எடுக்கப்பட்டாலும், அவர் பெரு முதலாளிகளின் இலாபங்களை உத்தரவாதம் செய்ய தொழிலாள வர்க்கத்தை விலை செலுத்த வைப்பர்.

இதுதான் நாம் மேற்கொண்ட பிரச்சாரம். நாங்கள் வாக்குச் சீட்டில் தேர்தல் நாள் நிலைப்பாட்டை மட்டும் வழங்கவில்லை, அங்கு கருத்தியல் ரீதியான வேறுபாடுகள் இருப்பினும், இருவரும் எப்படி முதலாளிகளின் பிரதிநிதிகள் என்பதை விளக்குவதற்கு அதே சமமானவகையில் பிரச்சாரம் செய்துள்ளோம். மற்றும் சிறப்பாக லு பென் வெல்லமுடியாது என்பதை நன்கு அறிந்திருந்த இடதுசாரிகளைக் கண்டனம் செய்வதற்கு -நாம் உண்மையில் 1932/33ல் ஜேர்மனியில் இருந்த நிலைமை போன்ற நிலையில் நாம் இல்லை- மற்றும் ஐந்தாண்டுகாலமாக தொழிலாளர்களுக்கு எதிரான அவர்களின் கொள்கைகளைக் கணக்கில் எடுப்பதைத் தவிர்ப்பதற்கு, சிராக்கின் பின்னே அணிதிரண்ட இடதுசாரிகளின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்த பிரச்சாரம் செய்தோம். அவர்கள் இப்பொழுது, இன்று, இதனை இன்னொரு சூழ்நிலையில் இருப்பதுபோல் அவ்வாறு செய்தனர், அதனை ஒரு முறை கூறாமல், தொழிலாள வர்க்கத்தின் பகுதியாக இருந்து, அவர்கள் மேற்கொண்ட கொள்கைகள் சோசலிஸ்ட் கட்சி அல்லது கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாக்களிப்பதிலிருந்து எப்படி தொழிலாளர்களைத் திரும்பவைத்துள்ளது, என்பதை சொல்லவேண்டி இருந்தது.

பிரச்சாரம் அப்படித்தான் இருந்தது. ஆகையால் நீங்கள் வேறுவிதமாக செயல்பட்டிருக்கலாம். ஆனால் நாங்கள், இருக்கின்ற சக்திகளின் உறவுகள் எப்படி இருக்கின்றன, நாம் கொண்டிருக்கும் பொறுப்பு, முதல் சுற்றிலிருந்து நாம் நின்றது மற்றும் நாம் 1,600,000 வாக்குகளுக்கும் மேலாகப் பெற்றிருப்பது, அந்த அனைத்தையும் போலவே, அது வெற்று வாக்குச்சீட்டு அல்லது பாழானவாக்குச் சீட்டுக்காகக் கூட, வாக்களிக்கும் பரிந்துரையை வழங்க வேண்டி இருந்தது.

உ.சோ.வ.த: எல்.சி.ஆர் மற்றும் பி.டி ஆகியவற்றை அதே செயலைச் செய்ய நீங்கள் ஏன் முன்மொழியவில்லை.

லாகியே: எல்.சி.ஆர்- ஆனது இறுதியில் சிராக்கிற்கு வாக்களிக்க அணிதிரண்டது மூலம் எம்மை ஏமாற்றம் அடையச் செய்தது. எல்.சி.ஆர் வேட்பாளர் ஒலிவியே பெசன்ஸநோ, சிராக்கிற்கு வாக்களிப்பதற்கான அவரது விருப்பத்தை அறிவித்தார். அது வெற்று வாக்குச்சீட்டு அல்லது பாழான வாக்குச்சீட்டுக்கான பொது அழைப்பிற்கான எந்த சாத்தியத்தையும் மூடிவிட்டது, அதனுடன் அவர்களுக்கு உடன்பாடு இல்லாததன் காரணமாகவும் அவர்கள்தாமே இடதுகளின் மயக்க இசைப் பாட்டில் கவரப்பட்டனர், அவர்களின் பங்குக்கு, சிராக்கிற்கான வாக்கிற்கு அழைப்பு விடுத்தனர். இறுதியில் இந்த நாட்டில் பல இடதுகள் செய்கிற அதே செயலைச் செய்தனர்.

Parti des Travailleurs கட்சியைப் பொறுத்தவரை, அவர்களது நிலைப்பாடு எமக்கு கொஞ்சம் நெருக்கமாக இருப்பதாகக் காணப்பட்டது, ஆனால் அது நாங்கள் முப்பது வருட காலமாக அமைப்பு ரீதியான தொடர்பு எதுவும் வைத்திராத இயக்கமாகும். Ligue Communiste Révolutionnaire - உடன் முழுக் காலகட்டமும் இருந்துவருவதைப் போல, கலந்துரையாடல் எதுவும் இல்லை.

உ.சோ.வ.த: ஒலிவியே பெசன்ஸநோக்கு (எல்.சி.ஆர்) 12 இலட்சம் வாக்காளர்களும் டானியல் குளுக்ஸ்டைய்ன் (பி.டி) 130,000 வாக்காளர்களும் கூட இருந்தனர். ஏன் நீங்கள் அவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கவில்லை? சிராக்கிற்கு வாக்களிக்க மிக அன்பான நிலைப்பாட்டை எடுத்தார்கள் என நான் நினைக்கவில்லை. புரட்சிகர இயக்கங்கள் என அழைத்துக்கொள்ளும் மற்றைய இயக்கங்கள் மீது கோரிக்கைகளை வைக்கும் தந்திரம் ட்ரொட்ஸ்கிச இயக்கம் நன்கு அறிந்ததாகும்.

லாகியே: ஆம், ஆனால் அவர்கள் தொடர்பான எமது நிலைப்பாடு அவர்களுக்கு போதுமான அளவு தெரியும், அவர்கள் விரும்பி இருந்தால், எமது நிலைப்பாட்டிற்கு அணிதிரள விரும்பி இருந்தால், அவர்கள் அவ்வாறு செய்திருக்க முடியும். சில நாட்களாக அவர்கள் வேலியின் ஓரம் அமர்ந்தனர், ஆனால் இறுதியில் எமது நிலைப்பாட்டிற்கு வருவதைக் காட்டிலும் பல இடதுகளின் பக்கம் சென்றனர், மற்றும் இறுதியில் எமது நிலைப்பாட்டைப் பேணும் ஒருவராக நாம் மட்டுமே இருந்தோம். அவ்வளவுதான்.


லாகியே உடனான நேர்காணலுக்கு இருந்த நேரம் -பத்து நிமிடங்களுக்கு சற்று அதிகமே- அது மட்டுப்படுத்தப்பட்டதாக இருந்தது, மற்றும் பகிரங்கக் கடிதத்தில் எழுப்பப்பட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்பாக இன்னும் ஆழமான விவரங்களுக்கு போவது சாத்தியம் இல்லாததாக இருந்தது. இருப்பினும், இந்நேர்காணலானது உலக சோசலிச வலைதளத்திற்கும் Lutte Ouvrière க்கும் இடையிலான வேறுபாடுகள் தவறான புரிந்துணர்வுகளையோ அல்லது தவறான விளக்கங்களையோ அடிப்படையாகக் கொண்டிருக்கவில்லை என்பதைத் தெளிவுபடுத்தியது.

Lutte Ouvrière-ன் முதல் சுற்று வாக்களிப்பு முடிவுகள் தொடர்பான எதிர்நடவடிக்கைகள் முற்றிலும் செயலூக்கமற்றது, சிராக்கிற்காக வாக்களிக்க அழைப்பு விடுத்தவர்களுக்கு எதிராக அக்கறை கொண்ட எதிர்த்தாக்குதலோ அல்லது சுயாதீனமான முன்முயற்சியோ இல்லாமை ஆகும்- பதிலானது கடந்த இருவாரங்களாக உ.சோ.வ. தளத்தால் விளக்கப்பட்டிருந்திருக்கிறது மற்றும் குறிப்புரைக்கப்பட்டிருந்தது -அது அவரது கட்சியால் வழங்கப்பட்ட எந்த உத்தியோக ரீதியிலான அறிக்கையைக் காட்டிலும் லாகியே இன் குறிப்புக்களில் இன்னும் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டது.

"இந்தக் கணம் இந்த நாட்டில் முற்றிலும் இல்லாத" "போராட்டங்களின் அர்த்தத்தில்" தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவது என்ற அவரது அறிக்கையை ஒருவர் பிரான்சில் கடந்த இருவாரகாலமாக நடக்கும் சம்பவங்களைக் கருத்தில் கொண்டு பார்க்கையில், கிட்டத்தட்ட முட்டாள் தனமானதாகத் தோன்றுகிறது. ட்ரொட்ஸ்கிஸ்டுகள் என்று தம்மை அழைத்துக் கொள்ளும் கட்சிகளுக்கு முப்பது இலட்சம் வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். அவற்றுள் ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்றில் ஏப்பிரல் 21 அன்று ஆர்லட் லாகியே க்கு வழங்கப்பட்ட 16 இலட்சம் வாக்குகளும் உள்ளடங்கும். அதன் பின்னர், பத்துலட்சக் கணக்கானவர்கள் லு பென்னுக்கு எதிராக வீதிகளில் ஆர்ப்பாட்டம் செய்தனர். இருந்தும் லாகியேயால் தொழிலாள வர்க்கத்தின் நகர்வினைக் கண்டு பிடிக்க முடியவில்லை.

இந்த நிலைப்பாடு ஏப்பிரல் 21 தேர்தல் முடிவுகளை மற்றும் பரந்த ஆர்ப்பாட்டங்களை பின்நிகழ்வாக வழிவகுத்த சமூகப் பதட்டங்களின் வெடிப்பினைக் கடுமையாகக் குறைத்து மதிப்பிடுவதை வெளிப்படுத்துகிறது. லாகியேயின் வார்த்தைகள் போதும் என்ற மனப்பான்மையை தனியாகப் பிரித்துக் காட்டுகிறது மற்றும் அவரது சொந்த அரசியல் பொறுப்பை நிராகரிப்பதையும் சுட்டிக் காட்டுகிறது.

"சக்திகளின் உறவு" என்பதை குறிப்பதன் மூலம் அவர் புறக்ணிப்பு பிரச்சாரத்தை நிராகரிக்கும் தனது போக்கை நியாயப்படுத்துகின்றார். தசாப்தகாலங்களாக இந்த வாதமானது தொழிலாள வர்க்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக்கொண்ட அரசியல் இயக்கங்கள் தலைமை கொடுக்கத் தவறியதற்காக தொழிலாள வர்க்கத்தை குறை கூறுவதற்கு பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றன. புறக்கணிப்பு பிரச்சாரத்தின் குறிக்கோள் திட்டவட்டமாக புதிய அரசியல் சூழல்களை உருவாக்கிக் கொடுக்கும் மற்றும் "சக்திகளின் உறவில்" மாற்றத்தைச் செய்வதற்குத் தேவையான விளக்கத்தைத் தொழிலாளர்களுக்கும் இளைஞர்களுக்கும் ஆரம்பித்து வைக்கும் என்பது லாகியே இடத்தில் நிகழவில்லை.

அத்தகைய பிரச்சாரம் இரண்டாவது சுற்று வாக்குப்பதிவை அரிதாகத்தான் தடுக்கும் (எந்த நிகழ்ச்சியிலும், அது அதன் விருப்பம் அல்ல), ஆனால் அது வரவிருக்கும் வர்க்கப் போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தைப் பலமான நிலையில் வைக்கும். உண்மையான தேர்வு இல்லை மற்றும் ஊழல் மிக்க மற்றும் பெரு முதலாளிகளின் செல்வாக்கிழந்த பிரதிநிதியான ஜாக் சிராக்கை, ஜனநாயகத்தின் பாதுகாவலனாக தொழிலாளர்கள் முன்னே நிறுத்தும் தேர்தல் கேலிக்கூத்துக்கு மாற்றாக அங்கு ஒரு மாற்று இருந்தது என்பதை அது தெளிவாக்கும்.

"சக்திகளின் உறவுகளுடன் பொருந்துகின்றதாக மற்றும் இந்த நாட்டை எடுத்துக் கொண்டால் தொழிலாள வர்க்கம் என்ன செய்யத் தயார்ப்படுத்தப்பட்டிருக்கிறது என்று நாம் கருதும் முன்மொழிவுகளை எப்போதும் (நாம்) முன்வைக்கிறோம்" என்று லாகியே கூறும்பொழுது, அவர் அவரை அறியாமலே மார்க்சிசத்திற்கு எதிராக அரசியல் சந்தர்ப்பவாதத்தின் சிறந்த நிலைப்பாட்டை தொகுத்துக் கூறுகிறார். சந்தர்ப்பவாதிகள் தொழிலாள வர்க்கத்தினது நனவின் அகநிலை மட்டத்திலிருந்து ஆரம்பிக்கின்றனர், அவர்கள் அதனை மதிப்பிட்டு, அதற்கேற்றவாறு தங்களின் வேலைத்திட்டங்களை தமதாக்கிக் கொள்கின்றனர். மற்றொரு புறத்தில் மார்க்சிஸ்டுகள், புறநிலைமைகளில் இருந்தும் தொழிலாள வர்க்கத்தின் மீது இந்த நிலைமைகளால் திணிக்கப்பட்ட பணிகளில் இருந்தும் முன் செல்கின்றனர் மற்றும் தொழிலாளர்களின் நனவை உயர்த்துவதற்குப் போராடி அது இப்பணிகளுடன் பொருந்துமாறு கொண்டு வருகின்றனர்.

Lutte Ouvrière தம்மை ட்ரொட்ஸ்கிஸ்ட்டுகள் என கூறிக் கொள்கிறது, ஆனால் உண்மையில் ட்ரொட்ஸ்கி அவரது கடைசி வாழ்க்கையின் பெரும்பாலான பகுதியில் லாகியேயால் இன்று எழுப்பப்படும் வாதங்களை எதிர்க்கச் செலவிட்டார். 1940ல் ஸ்பானியப் புரட்சியின் படிப்பினைகள் பற்றிய கட்டுரையில், புரட்சியின் தோல்வியை, கட்சிகள், அவர்களின் தலைமைகள் மற்றும் அவர்களின் காரியாளர்களின் பாத்திரத்தினை ஆய்வு செய்தலில் காட்டிலும் "சக்திகளின் உறவு" பற்றிய குறிப்புக்களால் விளக்கப்பட முடியும் என்ற நிலைப்பாட்டுக்கு எதிராக ட்ரொட்ஸ்கி ஆவேசத்துடன் வாதிக்கிறார்."

"ஒரு கணிப்பிடலில் இருந்து இந்த மூலக் கூறுகளை அகற்றி விடுவது உயிருள்ள புரட்சியை சாதாரணமாய் அலட்சியம் செய்வதாகும், அருவமான, 'சக்திகளின் உறவு' என்பதை அதற்குப் பதிலீடாக்குகின்றனர்; ஏனென்றால் புரட்சியின் அபிவிருத்தியானது துல்லியமாக பாட்டாளி வர்க்கத்தின் நனவில் ஏற்படும் மாற்றங்கள், பின்தங்கிய தட்டினர் முன்னேறிய பகுதிக்கு ஈர்க்கப்படல், அதன் சொந்த பலத்தில் வர்க்கத்தின் வளர்ந்து வரும் உறுதிப்பாடு ஆகிய பாதிப்பின் கீழ் சக்திகளின் உறவில் ஏற்படும் இடைவிடாத மற்றும் விரைந்த மாற்றத்தில் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சிப் போக்கில் சக்திமிக்க பிரதான உந்துசக்தி கட்சி ஆகும், இயங்கு முறையில் முக்கிய சுருள்வில் போல கட்சிக்கு அதன் தலைமை ஆகும். புரட்சிகர சகாப்தத்தில் தலைமையின் பொறுப்பும் பாத்திரமும் பிரமாண்டமானது." ("வர்க்கம், கட்சி மற்றும் தலைமை", ஸ்பானியப் புரட்சியில் (1931-39) வெளியிடப்பட்டது, லியோன் ட்ரொட்ஸ்கி, பாத்பைண்டர்ஸ் அச்சகம்.)

நேர்காணலின் இரண்டாவது பகுதியில் லாகியே Lutte Ouvrière ஆனது உண்மையில் சிராக் மீண்டும் தேர்வு செய்வதற்கான பிரச்சாரத்தைத் தடுத்தது என்று விளக்குவதற்கு முயல்கிறார். ஆனால் அவரது வார்த்தைகள் இந்த எதிர்ப்பானது எவ்வளவு மட்டுப்படுத்தப்பட்டதாக இருந்தது என்று சர்வசாதாரணமாகத் தெளிவாக்குகிறது. கூட்டான, செயலூக்கமான பிரச்சாரத்திற்கு -புறக்கணிப்புக்கு- பதிலாக Lutte Ouvrière செயலூக்கமற்ற, தனிநபர் எதிர்ப்புக்களை -வெற்று வாக்குச்சீட்டை சமர்ப்பித்தலை- முன்மொழிந்தது.

அவ்வாறு செய்வதன் மூலம் Lutte Ouvrière அதன் ஆதரவாளர்களை தேர்தல் ஏமாற்றில் பங்கேற்கும்படி வலியுறுத்தியது. ஏன்? தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனமான நிலைப்பாட்டிலிருந்து, வாக்களிப்பதிலிருந்து விலகி இருத்தலுக்கும் வெற்று வாக்குச்சீட்டைப் போடுவதற்கும் இடையில் வேறுபாடு இல்லை. இரண்டுமே தனிநபர் எதிர்ப்பின் வடிவங்கள் ஆகும்.

ஆயினும், முதலாளித்துவப் பாராளுமன்ற வாதத்தின் நிலைப்பாட்டிலிருந்து பார்த்தால், அங்கு வேறுபாடு இருக்கிறது. வாக்களிக்க ஒன்றுமில்லை என்று அவரே ஒத்துக்கொண்ட போதிலும், அவரது ஆதரவாளர்களை அனைத்து விலைகொடுத்தும் வாக்களிக்கச் செல்ல லாகியே வற்புறுத்துதல் -பிரெஞ்சு ஐந்தாவது குடியரசு நிறுவனங்களுக்கான மரியாதையைக் குறிப்பதாக மட்டுமே கருதப்பட முடியும், துல்லியமாக அந்த முதலாளித்துவ நிறுவனங்கள் தொழிலாள வர்க்கத்திற்கு எந்தவிதமான உண்மையான தேர்வையும் ஏமாற்றியது மற்றும் சிராக்கிற்கு அவரது ஜனாதிபதி பதவியைத் தொடர்வதை உறுதிப்படுத்தியது.

முதலாளித்துவ தேர்தல்களில் எந்த விதமான பங்கேற்பையும் கொள்கை அளவில் நிராகரிக்கின்ற விஷயம் இங்கு இல்லை. உ.சோ.வ.த முந்தைய அறிக்கையில் விளக்கியவாறு[The left and the French presidential election: An exchange of letters on the politics of Lutte Ouvrière]: "தேர்தல் புறக்கணிப்பிற்கான எமது அழைப்பு சோசலிஸ்டுகள் பொதுவிலும் மற்றும் எல்லா விஷயங்களிலும் முதலாளித்துவ தேர்தல்களில் பங்கேற்கக் கட்டாயம் மறுக்க வேண்டும் என்ற நம்பிக்கையை அடிப்படையாகக் கொள்ளவில்லை. அது விளைவற்ற மற்றும் பிற்போக்குத்தனமான வாக்களிப்பில் விலகும் வாதமாகும், அது தொழிலாளர்களை எமது அக்கறை இன்மை பற்றி மட்டுமே நம்பவைக்கும். தொழிலாள வர்க்கத்திற்கு ஆளும் வர்க்கத்தைத் தூக்கி வீசுவதற்குப் போதுமான பலம் இல்லாதவரை, அதன் போராட்டத்தை நடத்துவதற்கு நிலவும் அரசியல் வடிவங்களைப் பயன்படுத்திக் கொள்வதைத்தவிர அதற்கு மாற்று இல்லை.

"இருப்பினும், நாங்கள் சாதாரணமான எந்த தேர்தலுடனும் அணுகவில்லை, மாறாக பிரெஞ்சு முதலாளித்துவத்தின் முதன்மையான பிரதிநிதிக்கும் பாசிச வாய்சவடால்காரருக்கும் இடையில் மே5 அன்று நடைபெற இருக்கும் தேர்தலை அணுகுகிறோம். அந்த ஸ்தூலமான நிலைமைகளில், தொழிலாள வர்க்கத்தின் பணியானது புறக்கணிப்பு மூலம், மிகப் பகிரங்க மற்றும் எடுத்துக்காட்டுப் பாணியில் அந்தத் தேர்வை மறுதலிக்க வேண்டும். இந்த அரசியல் ஏமாற்றுக்கு, அல்லது அதிலிருந்து எழும் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எந்த விதமான அங்கீகாரத்தையோ அல்லது சட்டபூர்வமான தன்மையையோ கொடுப்பதற்கு தொழிலாளர்கள் மறுக்க வேண்டும்."

எல்.சி.ஆர் மற்றும் பி.டி க்கு ஆதரவளித்த வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுப்பதிலிருந்து ஏன் அவர் விலகி இருந்தார் என்ற கடைசி கேள்விக்கு லாகியேயின் விடையானது, எல்.ஓ.வின் போதும் என்ற மனப்பான்மை மற்றும் செயலூக்கமற்ற தன்மையைப் பண்பிட்டுக் காட்டுகிறது. ஒருவர் லாகியேயின் நிலைப்பாட்டை ஒரு சூத்திரத்துடன் சேர்த்துக் கொள்ள முடியும்: நாம் அனைவரும் ஒரே கருத்தைக் கொண்டிருக்கிறோம் -நாம் ஒருவர் கால்விரல்களை மற்றவர் மிதிக்கக் கூடாது. பெசன்ஸநோ சிராக்கிற்காக முடிவு செய்தபொழுது, விஷயத்தின் முடிவாக அது இருந்தது. அவரது வாக்காளர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் வேண்டுகோள் விடுக்க முயற்சி எடுக்கப்படவில்லை. ஒருவர் முடியை ஒருவர் இழுக்க வேண்டாம் என பேசப்படாத உடன்பாடு அங்கு இருக்கிறது. அங்கு, கொள்கைகள், நோக்கங்கள் மற்றும் வழிமுறைகள் மீதான உயிருள்ள போராட்டத்தின் மூலம், தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதற்கு மற்றும் சரியான அரசியல் நோக்குநிலையை அவர்களுக்கு வழங்குவதற்கு, கருத்தார்ந்த அக்கறை கொண்ட போராட்டம் இல்லை.

ட்ரொட்ஸ்கி இந்த வகைப்பட்ட அரசியலையே மத்தியவாதம் என பண்பிட்டார்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved