World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஸ்பெயின்

Split in Spanish Socialist Party

ஸ்பானிய சோஷலிஸ்டுக் கட்சியில் பிளவு

By Vicky Short
29 July 2003

Back to screen version

இரண்டு ஸ்பானிஷ் சோசலிஸ்ட் கட்சி (PSOE) வேட்பாளர்கள், முக்கியமான வாக்கு அளிக்கும் அதிகாரம்பெறும் நிகழ்ச்சியில், கலந்துகொள்ளாமல் ஓடிவிட்டதற்குக் காரணமான சூழ்நிலை பற்றி, ஒரு குழு நியமிக்கப்பட்டு விசாரணை செய்ய, மாட்ரிட் தன்னாட்சி அரசாங்கம், மாட்ரிட் கம்யூனிட்டியின் பொதுச் சட்டமன்றம் பல வாரங்கள் நிலவிய குற்றச்சாட்டுக்கள், எதிர்க்குற்றச்சாட்டுகள், பூசல்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து, ஒப்புக்கொண்டுள்ளது; இந்த முக்கிய இரண்டு வாக்குகள் இல்லாததால் இக்கட்சி தலைமைப் பதவியைப் பெற இயலாமற்போயிற்று. அதையொட்டி இப்பொழுது ஆளும் கட்சியான மக்கள் கட்சி (PP) இடைக்காலத் தலைமைப் பொறுப்பை ஏற்றது.

எடுவர்டோ டமயோவும் (Eduardo Tamayo) மாரியா தெரேசா சேஸும் (விணீக்ஷீணணீ ஜிமீக்ஷீமீsணீ ஷிஊமீக்ஷ்) மே 25ம் தேதி மாட்ரிட் தன்னாட்சி அரசாங்கத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள்; தலைவரைத் தேர்ந்தெடுக்கும் ஜூன் 10ம் தேதிக் கூட்டத்திற்கு அவர்கள் வரவில்லை; தலைவர் தேர்தலோடு அவருடைய கட்சியும் பதவிக்கு வந்திருக்கும். வாக்கெடுக்கும் முக்கியமான நேரத்தில் இவர்கள் இருவரும் ஒர காரில் கூட்டிச்செல்லப்பட்டு இரண்டு வணிகர்களான பிரான்சிஸ்கோ வாஸ்க்விஸ்(Vazquez), பிரான்ஸிஸ்கோ ப்ரேவோ ஆகியோரால் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படுகின்ற விடுதி அறை ஒன்றில் சில நாட்கள் மறைந்திருந்தனர். இவர்கள் நிறுவனமான Euroholding நிலங்கள் விற்பனை, அவை பற்றிய ஊக வணிகம் நடத்துவதோடு, PP உடன் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கிறது. வாஸ்க்விஸ் உட்பட, யூரோஹோல்டிங்கின் பங்குதாரர்கள் பலர் PPயின் உறுப்பினர்களாவர். ஓடிப்போனவர்களின் இணக்கத்துடன் இந்த ஏமாற்றுத்திட்டத்தில் PP பங்கு கொண்டிருந்ததாக PSOE குற்றஞ்சாட்டியுள்ளது. அதற்குக் காரணம் ஸ்பெயின் நாட்டில் நிலங்கள் வளர்ச்சிப் பகுதியில் முக்கியமானதாக இருக்கும் மாட்ரிட்டைத் தன் பிடிகளுக்குள்ளேயே வைத்திருக்கவேண்டும் என்று PP விரும்பியதாகவும் PSOE குற்றஞ்சாட்டியுள்ளது.

இரண்டாவது வாக்கெடுப்பின்பொழுதும், சோசலிஸ்ட் வேட்பாளரான ராபேல் சிமன்கஸ், இரண்டு சோசலிஸ்ட் வேட்பாளர்கள் அவைக்கு வராததால், தோற்றுப்போனார். சட்டமன்றம் இப்பொழுது செயலற்று உள்ளது. வாக்களிக்க வராத இரு வேட்பாளர்களுடைய பதவியும் பறிக்கப்பட்டு வேறு இரண்டு சோசலிஸ்டுகள் வேட்பாளராக அமர்த்தப்படவேண்டும் என்று PSOE சட்டமன்றத்தில் கோரியுள்ளது. இந்த யோசனையைச் சிறிதும் ஏற்க விரும்பாத PP இரண்டாம் தேர்தலை எப்படியும் நடத்திவிட பெரும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது; அத்தகைய தேர்தலில் தான் வென்றுவிடக்கூடும் என்று அது நம்புகிறது. ஆகஸ்ட் 28க்குள் தாங்களாகவே பதிவுச் சான்றிதழ்களை வேட்பாளர்கள் இருவரும் திருப்பிக்கொடுக்காவிட்டால் - அவர்கள் திருப்பிக்கொடுப்பது பெரும்பாலும் நடக்கப்போவதில்லை - இடைக்கால ஜனாதிபதி Rulz Gallardon சட்டமன்றத்தைக் கலைத்துவிட்டு, 55 நாட்கள் கடந்தபின்னர் புதிய தேர்தல்களுக்கு உத்தரவு இடுவார்.

PSOEவில் நடந்துகொண்டிருக்கும் சிதைவுகளின் ஒரு வெளிப்பாடே இந்த இரு சோசலிஸ்ட் உறுப்பினர்களின் செயல் ஆகும்.

மாட்ரிட் சோஷலிஸ்ட் கூட்டமைப்பில் நான்கு பிரிவுகள் உள்ளன என்பதை எல்லோரும் அறிவர்: Renovadores, Renovadores De Base, Guerristas, மற்றும் Izquierda Socialista (புத்துணர்வூட்டுவோர், அடித்தளத்தில் இருந்து புத்துணர்வூட்டொவோர், Guerrists -Alfonso Guerra இனை ஆதரிப்போர், மற்றும் சோசலிச இடதுகள்). மாட்ரிட் சட்டமன்றத்திற்கான PSOE-ன் தலைவர் பதவிக்கான வேட்பாளர் ராபேல் சிமன்கஸ் ஒரு "குரிஸ்டா" ஆவார்; கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் உள்ள ஒரு குடை அமைப்பான Isquerda Unida (ஐக்கிய இடது)-ன் இசைவுடன் சட்டமன்றத்தை "அதி இடதுசாரி"த் தன்மைக்குத் தள்ள முற்படுகிறார் என்று ஓடுகாலிகள் இவர் மீது குற்றஞ்சாட்டியுள்ளனர்.

வெளியேற்றப்பட்ட ஓடுகாலி எடுவர்டோ டமயோ, ஜூலை 9ம் தேதி Neuvo Socialisamo (New Socialism - புதிய சோஷலிஸம்) என்ற கட்சியைத் துவக்கியுள்ளதாக அறிவித்தார். அவரும், அவரோடு சேர்ந்து கட்சியைவிட்டு ஓடிப்போன மற்றொருவரும் புதிய தேர்தலில் இந்த அமைப்பின் கீழ் போட்டியிடப்போவதாகக் கூறியுள்ளார்.

எவ்வாறு, எப்பொழுது, எங்கே மற்றும் எந்த அரசியல் திட்டத்தை முன்வைத்து இக்கட்சி அமைக்கப்பட்டது என்ற விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை; ஆனால் தன்னுடைய புதிய கட்சியின் தேர்வாளர் பட்டியலில்`` தொழில் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும்அங்கீகரிக்கப்பட்ட கெளரவம்`` கொண்ட 111 சார்பாளர்கள் உள்ளடங்கியிருப்பர் என்று டமயோ அறிவித்துள்ளார். மாட்ரிட் சட்டமன்றத்திலேயே 5 சோசலிஸ்ட் குழு உறுப்பினர்களுடைய ஆதரவையும் ஏற்கனவே பெற்றுவிட்டதாகவும் கூறியுள்ளார். புதிய கட்சி ``தன்னுடைய மற்றும் மற்றைய போராளிகளுடைய சேமிப்புத் தொகையைக்`` கொண்டு இயக்கப்படும் என்றும் சமூக ஜனநாயகத் தன்மையைக் கொண்டிருக்கும் என்றும் அவர் கூறினார். கட்சியிலிருந்து ஓடிவிட்ட இருவரும் PPயுடன் சேர்ந்து சில பிரச்சினைகளில் வாக்கு அளித்திருக்கின்றனர்.

PP தன்னுடைய பிரச்சினைகளையும் அனுபவித்துக்கொண்டிருக்கிறது. மாட்ரிட் ஊழலைப் பொறுத்தவரையில் "Madrid Excelente" - எனும் ஒரு அரசாங்கத் தன்னாட்சி நிறுவனத்தினுடைய பொது மேலாளரான Fernando Bastarreche- ஐ அதில் தொடர்பு கொண்டதற்காகக் கட்சியைவிட்டு வெளியேற்றியுள்ளது. ப்ரேவோ, வாஸ்க்விஸ் இரு தொழிலதிபர்களுடனான தனது உறவுபற்றி செய்தி ஊடகத்திற்கு அவர் பொய் கூறியது கண்டுபிடிக்கப்பட்டது தெரிந்தவுடன் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. வேறு சில வெளியேற்றங்களும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மாட்ரிட் சட்டமன்ற விவாதங்கள் சாராயக் கடைக்குள் நிகழும் சண்டை போலமைந்துள்ளன. ஏமாற்றத்துயரத்திலுள்ள PSOE வேட்பாளர் ரபேல் சிமன்கஸ் "எங்களை இந்த நிலைக்கு ஆளாக்கியது பற்றிய" சதித்திட்டத்தின் உண்மையை வெளிக்கொண்டுவர ஒரு குழுவின் விசாரணை தேவை என்று கோரி இருப்பதுடன், PP ஜனநாகய மரபை கீழறுக்கிறது, ஊக வணிகத்தைப் பெருக்கி, "நகர அமைப்புத் திட்ட மோசடிகளிலும்" ஈடுபடுகிறது என்ற உட்குறிப்பையும் தெரிவித்துள்ளார். PPயின் தற்காலிக தலைவரான எஸ்பெரன்ஸா அகுரே (Esperanza Aguirre),சிமன்கசை ``ஹிட்லருடைய பிரச்சார மந்திரி கோயெபெல்சின் சீடர் என வர்ணித்தார். இவர் அரசியலின் வரலாற்றிலேயே பெருங்கொடுமையான சொற்றொடரை ``ஆயிரம் முறை ஒரு பொய்யைக் கூறினால் அது கேள்விக்குட்படுத்த முடியாத உண்மையாகிவிடும்`` என்று கூறியவர். இவ்வம்மையார், சிமன்கஸ் நகர அமைப்புத் திட்டமிடும் குழு ஒன்றிடம் தேர்தல் பிரச்சார நேரத்தில் 50,000 வீடுகள் கட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

காங்கிரசிலும் PSOE தலைவர் Rodriguez Zapatero விற்கும் பிரதம மந்திரி ஜோஸ்மாரிய அஸ்நருக்கும் இடையேயும் இத்தகைய கடுமையான சொற்போர் விவாதத்தின்போது நடந்தது; நாடெங்கிலும் PSOEல் மாட்ரிடில் நிகழ்ந்தது போன்ற விளைவுகள் ஏற்பட்டுள்ளதாகப் பிரதம மந்திரி கூறினார். United Left உடைய ஒருங்கிணைப்பாளரும் பூசல்களில் பங்குபெற்றார். ``ஜனநாயகத்தின் மதிப்பைப் பெருமளவும் குறைப்பதாக`` Gaspar Llamazares, அஸ்நர் மீது குற்றஞ்சாட்டினார்; கடந்தகாலத்தில் PP அரசாங்கம் சமூக ஏற்றத்தாழ்வு, பிளவுகள், அரசியல் மோதல், ஜனநாயக மரபுக் குறைவு இவற்றையே கொண்டிருந்ததாகவும் கூறினார்.

பாசிசத்திலிருந்து முதலாளித்துவ ஜனநாயகமுறைக்கு மாறிய பின்னர் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒருமித்த கருத்துணர்வை அஸ்நர் அரசாங்கத்தின் செயற்பாடுகள் தாக்குகின்றன என்று அரசியல் மேல் தட்டினரில் பலரும் அச்சம் கொண்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். PP அரசாங்கம், ``இந்த மாறுதலின் பொழுது கட்டி அமைக்கப்பட்ட மிக நுண்மையான ஒருமித்த கருத்தை உடைப்பதில் எந்த வெட்க உணர்வையும் கொள்ளவில்லை`` என்று Llaamafares கூறினார்; உதாரணமாக அரசு அமைப்பு முறை, பயங்கரவாதத்திற்கெதிரான போராட்டம், அயலுறவுக்கொள்கை, "பன்முகத்தன்மையை" தழுவல், போன்றவற்றில் அடையப்பெற்றுள்ள ஒருமித்த உடன்பாட்டைப் பற்றியும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தோடு இணைந்தும், சில காலம் எதிர்த்தும் விளங்கும் சோஷலிஸ்டுக்கட்சி, கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஆதரவை அடுத்தும், தொழிற்சங்கங்களின் ஆதரவையடுத்தும், தொழிலாளர்கள் படகைப் பலமாகச் சாய்க்க முற்படக்கூடாது அல்லது ஜனநாயகத்திற்கே ஆபத்து என்று வற்புறுத்திக் கூறியுள்ளது.

மாட்ரிட் சட்டமன்றத்திலும், காங்கிரசிலும் இறுக்கமான மற்றும் மோதல்கள் நிறைந்த சூழ்நிலை ஜனநாயக நிறுவனங்கள், கட்சிகள், தனிநபர்கள் ஆகியோரின் அரசியல் அழுகிய நிலையை அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறது. அஸ்நர் அரசாங்கத்தின் வலதுசாரி வளைவரையும் (trajectory) PSOE-ன், உழைக்கும் மக்களின் நலன்களைப் பாதுகாப்பதில் எந்தவிதமான ஒரு தெளிவான மாற்றைக் கொடுக்கத் திராணி இன்மையும் விருப்பமின்மையும் ஸ்பெயின் நாட்டின் அரசியல் முறையையே தகர்க்கும் அளவிற்குக் கொண்டுவிட்டுள்ளது. உள்நாட்டுப் போரில் தீர்க்கப்படாத பிரச்சினைகளும், அதன் பின்விளைவுகளும், பிராங்கோவின் மரணத்திற்குப் பின் அமுக்கிவைக்கப்பட்டவை இப்பொழுது விவாதத்திற்குக் கொண்டு வரப்பட்டு, விடைகள் தேவை என்று வலியுறுத்தப்படுகின்றன.

ஜூலை 20 ஆசிரிய உரையில் El Pais ,``புதைகுழிக்குள்`` என்ற தலைப்பில் தன்னுடைய அச்சங்களை வெளியிட்டுள்ளது.

``பொதுத்தேர்தல்கள் முடிவடைந்த சில மாதங்களுக்குள்ளேயே ஸ்பெயினில் நிலவும் சூழ்நிலை ஆழ்ந்த கவலையைத்தான் கொடுத்துள்ளது. ஈராக்கியப் போரில் ஸ்பெயின் கலந்துகொண்டது - போர்ப் படையெடுப்பின்போது அரசியல், ராஜதந்திர முறையிலிருந்தது, இப்பொழுது ஆக்கிரமிப்புக் காலத்தில் வெளிப்படையான இராணுவமுறையிலுள்ளது - பூசல்கள், எதிர்ப்பு உணர்வுகள், மிகவும் முக்கியமாக ஜோஸ் மரியா அஸ்நரின் தனி விருப்பங்களுக்கு எதிர்ப்பு போன்ற எண்ணங்கள் வரை கொண்டுவிட்டுள்ளன. ஸ்பானிய அரசியல் வாழ்வில் கருத்துக்களைப் பற்றிய விவாதங்கள், மாற்றுச் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் இவற்றைப் பற்றிய விவாதங்கள் ஒருவகையில் முழுமையாகவே மறைந்து போய்விட்டன. அரசாங்கத் தலைமை எப்பொழுதுமே இந்த அளவுக்கு அதிக விரோத உணர்வையும் இகழ்ச்சியையும் எதிர்க்கட்சிக்குக் காட்டியிருந்தது இல்லை. - PSOE, PSC (கடலான் சோஷலிசக்கட்சி) ஆகியவற்றின் தன்னாட்சித் திட்ட முன்மொழிவுகள் பற்றி அஸ்நரும் அவருடைய அமைச்சர்கள் சிலரும் திரித்துக் கூறியதைப்போல, எதையும் செய்யலாம், எதிராளிகளின் சொற்களைத் திரித்தும் கூறலாம் என்ற அளவிற்குக் கொள்கையற்ற நிலை காணப்படுகிறது.``

மாட்ரிட் பூசலைப் பற்றிக் குறிப்பிடுகையில், அந்நாளேடு (PSOEவின் பொதுச்செயலாளரான) Zapatero, எது செய்யப்படவேண்டும் என அதை விரைவில் எளிதாகச் செய்யும் குணநலனைக் கொண்டிருக்காமல் இருபுறங்களும் நெருக்கடிகளைத் தீர்க்காமல் இருக்கும் வீண் அரசாங்கத்தின் பின்னால் உள்ளார், இது ஆள்பவர்களுக்கும் ஆளப்படுவோருக்கும் இடையே நம்பிக்கையின்மையை ஊட்டி வருகிறாது, என்று தெரிவிக்கிறது. தான் சட்டத்தைவிட உயர்ந்தவர், எந்தக் கட்டுப்பாட்டிற்கும் அப்பாற்பட்டவர் என்பது போல் அஸ்நர் நடந்துகொண்டுவருகிறார் என்றும் பாராளுமன்ற முறையை அசட்டை செய்கிறார் என்றும் நாளேடு குற்றஞ்சாட்டியுள்ளது. ஈராக்கியப் போரைப் பற்றிய பொய்கள் மற்றும் பாராளுமன்ற இசைவில்லாமலேயே படைகளை ஈராக்கிற்கு அனுப்பியது பற்றிய கேள்விகளுக்குப் பதில் அளிக்கவும் மறுத்து வருகிறார் என்றது.

மார்ச் 2004ல் வரவிருக்கும் பொதுத்தேர்தல்களில் அஸ்நர் ஒரு வேட்பாளராக இருக்கமாட்டார் என்பதும் உறுதியற்ற தன்மையில் மேலும் ஒரு அம்சத்தைச் சேர்த்துள்ளது. அவருக்குப் பிறகு ஆட்சிக்கு வருவதற்கு ஒருவரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை; 2005 வரை, தனது பதவிக்காலம் முடியும் வரை பொதுச்செயலாளராக தான் இருக்கப்போவதாகவும் அஸ்நர் கூறியுள்ளார்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved