World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : அயர்லாந்து

The "Steak Knife" affair and Britain's dirty war in Northern Ireland

"இறைச்சிக் கத்தி" விவகாரமும் வடஅயர்லாந்தில் பிரித்தானியாவின் இழிவான யுத்தமும்

By Steve James
9 August 2003

Back to screen version

பல மாதங்களாக கூற்றுக்கள் எதிர்்கூற்றுக்கள் மறுப்புக்கள், புதிய குற்றச்சாட்டுக்களின் பின்னர், தற்போதைய ஐரிஷ் குடியரசு இராணுவத்தில் (Irish Republican Army -IRA) முன்னர் இரண்டாம் உயர் அதிகாரியாக இருந்தவர் பிரித்தானிய உளவுத்துறையின் ஒற்றராக இருந்திருக்கக்கூடும் என்பதற்கான சாத்தியம் அதிகம் என்பது இப்பொழுது தெரியவந்துள்ளது.

பெல்பாஸ்ட் Sunday People பத்திரிகை, ஜன் 23 2002 பதிப்பில் நிருபர் கிரெக் ஹார்க்கின் எழுதியுள்ள கட்டுரையொன்றில் "Stakeknife" அல்லது ''Steak Knife" என்ற இரகசிய அடையாளப் பெயரில் உயர்மட்ட பிரித்தானிய உளவாளி ஐரிஷ் குடியரசு இராணுவத்தில் இருந்திருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார். நபரின் பெயரைத் தெரிவிக்கவில்லையென்றாலும், ''Steak Knife" இன் இருப்பு, பிரித்தானிய இராணுவப் படை ஆய்வுப்பிரிவு ( Force Research Unit's-FRU), பிரித்தானிய சார்பான அல்ஸ்டர் பாதுகாப்பு சங்கத்தினைப்பற்றி (Ulster Defence Association -UDH) உளவுத்துறை அதிகாரியும் பிரித்தானிய ஒற்றருமான பிரைன் நெல்சன் நடத்திய விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது என்று ஹார்கின் கூறியிருந்தார்.

நெல்சன் தன்னுடைய பிரிட்டிஷ் இராணுவப் படை ஆய்வுப்பிரிவு மேலதிகாரிகளிடம் அல்ஸ்டர் பாதுகாப்பு சங்கத்தினுடைய கொலைப்படைப் பிரிவினால், ஐரிஷ் குடியரசு இராணுவத்தின் முக்கியத்துவம் வாய்ந்த நபராகக் கருதப்பட்ட Steak Knife கொல்லப்பட இருப்பதாகத் தெரிவித்ததாக, ஹார்கின் கூறியுள்ளார். இதையொட்டி, அதற்குப் பதிலாக பிரிட்டிஷ் இராணுவப் படை ஆய்வுப் பிரிவால் நெல்சன் வேறு ஒரு ஐரிஷ் குடியரசு இராணுவத்தின் துணையாளரைக் கொல்ல ஏற்பாடு செய்யுமாறு பணிக்கப்பட்டார். இறுதியில் இக்கொலைக்கு ஆளானவர் 1987, அக்டோபர் 9ல் சுட்டுகொல்லப்பட பிரான்ஸிஸ்கோ நோடரன்டோனியோ ஆவார்.

2003, மே 11ம் தேதி, மூன்று ஐரிஷ் செய்தித்தாள்கள் ஆத்திரமடைந்த முன்னாள் பிரித்தானிய ஒற்றர்களை ஆதாரமாக காட்டி, ஆல்பிரடோ ஸ்கப்பற்றிச்சி (Alfredo Scappaticci) "Steak Knife" என இறுதியாகத் தெரிவித்தன. பிரித்தானிய இராணுவப் படை ஆய்வுப்பிரிவின் உளவாளியாகத் தானே இருந்தபோதிலும், ஸ்கப்பற்றிச்சி ஐரிஷ் குடியரசு இராணுவத்தில் இருந்த பிரித்தானிய தகவலாளர்களை தேடிப்பிடித்து விசாரணை செய்து, பலமுறைச் சித்திரவதைக்கு உட்படுத்தி ஒதுக்குப்புறமாக இருந்த பண்ணை வீடுகளில் கொலை செய்ததாகவும் நாளேடுகள் கூறுகின்றன. ஒரு மூத்த ஐரிஷ் குடியரசு இராணுவத்தின் உறுப்பினரால் கொடூரமாகத் தாக்கப்பட்ட பின்னர், ஸ்கப்பற்றிச்சி 1978 இல் பிரித்தானிய பாதுகாப்புப் படைகளுக்கும் தனது சேவைகளை பலமுறை அளித்திருப்பதாக அறியப்படுகின்றது.

எவ்வாறிருந்தபோதிலும், அவருக்கெதிரான குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்ட பின்னர், ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் "தான் மேற்கு பெல்பாஸ்ட்டில் வசிக்கும் சாதாரண மனிதன், பொய்க் குற்றச்சாட்டுக்களை எதிர்க்கும் வசதிகள் அற்றவன்" என்றும், தான் பிரிட்டிஷ் உளவுத் துறைக்கு ஒருபொழுதும் சேவை செய்ததில்லை என ஸ்கப்பற்றிச்சி கூறியுள்ளார். ஒரு காலத்தில் குடியரசு இயக்கத்தில் இருந்ததாகவும், ஆனால் 13 ஆண்டுகள் அதோடு எந்தத் தொடர்பும் கொண்டிருக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். குற்றம் சாட்டும் செய்தியாளர்களைத் தான் சந்திக்க தயாராக இருப்பதாகவும் தான் நிரபராதி என்பதையும் தொடர்ந்து கூறிவந்தார். வட அயர்லாந்துக்குப் பொறுப்பான பிரித்தானிய அமைச்சர் ஜேன் கென்னடி மேல் தான் Steak Knife தானா அல்லது இல்லையா என்பதை உறுதிப்படுத்தவேண்டும் என்ற சட்ட நடவடிக்கையையும் ஆரம்பித்துள்ளார்.

அதேபோல் ஐரிஷ் குடியரசு இராணுவத்தின் அரசியல் பிரிவான சின்பின் (Sinn Finn) ஸ்கப்பற்றிச்சியின் மீதான குற்றச்சாட்டுக்கள், பிரிட்டிஷ் உளவுத்துறையால் குடியரசு இயக்கத்திற்கு எதிராக செய்யப்பட்ட கறுப்புப்பூசும் பிரச்சாரம் என்றே ஆரம்பத்தில் உறுதியாகக் கூறிவந்தது. வட அயர்லாந்தில், இங்கிலாந்தின் பாதுகாப்பிற்காக 30 ஆண்டுக்காலம் நடந்த 'கறை படிந்த போரில்' பிரித்தானியாவின் யூனியன்வாதிகளின் துணைப் போராளிகள் நடத்திய கணக்கிலடங்காக் (பிரிட்டிஷ் அரசாங்க (ஒத்துழைப்புடன்) கொலைகள் தொடர்பான பல உடன்பாடுகள் பாரியளவில் வெளிப்பட்டதைத் திசை திருப்ப Steak Knife விவகாரம் பயன்படுத்தப்பட்டதாக அது கூறியது. சில வாரங்களுக்கு முன் இலண்டன் பெருநகரப் போலீஸ் கமிஷனர் சேர் ஜோன் ஸ்ரீவன்ஸ் 14 ஆண்டு விசாரணையின் சுருக்கத்தில், பிரித்தானிய இராணுவப் படை ஆய்வுப் பிரிவிற்கும் முடியாட்சி கொலைகாரர்களுக்கும் தொடர்பு இருந்ததை ஒத்துக்கொண்டதை தொடர்ந்தே Steak Knife விவகாரம் வெளிவந்துள்ளது.

சின்பின்னுடைய செய்தித்தொடர்பாளர் ஜெரி கெல்லி, அவதூறுகள் எழுந்தவுடன் ஸ்கப்பற்றிச்சி சின்பின்னை ஆலோசனைக்கு அணுகியதாக கூறினார். சின்பின்னுடைய தலைவர் ஜெரி ஆடம்ஸ் ஸ்கப்பற்றிச்சி நிரபராதி என கூறியுள்ள அறிக்கையை "அதன் தன்மையில்" அப்படியே ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.

ஆனால் BBC யின் "Panorama" நிகழ்ச்சி 1993ல் பின்னர் ஸ்கப்பற்றிச்சி என தெரியவந்த ஒரு நபருக்கும் செய்தியாளருக்குமிடையே வேறு ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியான "Cook Report." ல் நடந்த பேட்டியிலிருந்து சில பகுதிகளை காட்டியது. இந்தப் பேட்டியில் ஸ்கப்பற்றிச்சி, சின்பின் தலைவர் மாட்டின் மக்கினை ஐரிஷ் குடியரசு இராணுவத்திலிருந்த பிரிட்டிஷ் உளவாளி கெவின் ஹெகர்ட்டியின் கொலைக்கு ஏற்பாடு செய்ததாகவும், ஹெகர்ட்டியுடைய தாயாரிடம் மகன் ஒற்றன் என்பதை தெரிவித்து அயர்லாந்துக்கு வந்துவிட்டதால் கொலை செய்யப்பட்டார் என்று கூறியதாகவும் தெரிவித்தார். மக்கின்னஸிடம் நம்பிக்கை வைத்து ஹெகர்ட்டி மீண்டும் அயர்லாந்திற்கு வந்த அளவில், அதன்படி கொலையுண்டார்.

ஐரிஷ் குடியரசு இராணுவத்தின்் கட்டுப்பாட்டு அமைப்பு, அதன் இராணுவக் குழுக்கள், குண்டுத்தாக்குதல்கள், ஆயுதக் கடத்தல், மூடிமறைப்பு மற்றும் பல தனிப்பட்ட நடவடிக்கைகள் பற்றி ஸ்கப்பற்றிச்சி செய்தியாளர்களுக்கு அப் பேட்டியில் கூறியிருந்தார்.

Sunday People பத்திரிகை, ஸ்கப்பற்றிச்சியின் குற்றச்சாட்டி விவரங்கள் அனைத்தையும் வெளியிட்டு இந்தப் பேட்டியே ஸ்கப்பற்றிச்சியின் பிரித்தானிய இராணுவப் படை ஆய்வுப் பிரிவு அதிகாரிகளால் தான் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது எனத் தெரிவித்துள்ளது. பிரித்தானிய அரசாங்கத்திற்கும் ஐரிஷ் குடியரசு இராணுவத்திற்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம், புதிய முறையில் அதிகாரப்பிரிவு உடன்பாடு நடந்து கொண்டிருந்த நேரத்தில் அதன் மதிப்பைக் குறைக்கும் வகையில் இந்த 1993ம் பேட்டி ஏற்பாடு செய்யப்பட்டது என்றும் பத்திரிக்கை குற்றஞ்சாட்டியுள்ளது.

ஜூலை 27ல் Observe பத்திரிகை, 40க்கும் மேற்பட்ட கொலைகள் நிகழ்ந்த சூழ்நிலை பற்றிய ஸ்டீவன்ஸ் விசாரணைக்காக போலீஸ் ஸ்கப்பற்றிச்சியை விசாரணைக்கு உட்படுத்தியுள்ளதாக உறுதி செய்தது. "ஒரு மூத்த பாதுகாப்பு ஆதாரத்தை"ச் சான்றாகக் கொண்டு, ஐரிஷ் குடியரசு இராணுவமும், முன்னாள் அரச சார்பான போலிஸ் படையான வட அயர்லாந்தின் போலிஸ் படைச்சிறப்புப் பகுதி (PSNI) ஸ்கப்பற்றிச்சி எதை வெளிப்படுத்திவிடுவாரோ என்ற பயத்தில் நடுங்கியதாகச் செய்திப் பத்திரிக்கை தெரிவித்துள்ளது. அதே ஆதாரம் சிறப்புப் பிரிவின் பல முன்னாள் உறுப்பினர்கள் விசாரணைகளில் இருந்து தப்பிக்க நாட்டைவிட்டு வெளியேறிவிட்டதாகவும் கூறியது.

அங்கத்தவர்களின் அழுத்தம் காரணமாக ஐரிஷ் குடியரசு இராணுவம் உள்ளே ஸ்கப்பற்றிச்சி தொடர்பான நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு வருவதாகவும், ஸ்கப்பற்றிச்சியின் துரோகம் பற்றிய அறிக்கைகள் உண்மைதான் என்று தலைமையிடம் ஒப்புக்கொண்டதாகவும் Observer கூறுகிறது. ஆண்டர்ஸ்டவுன் நியூஸ் (Anderstown News) என்ற ரிப்பப்ளிக் செய்தித்தாளில், சின்பின்னுடைய குழு உறுப்பினர்கள் மார்டின் ஓ முல்லியர் (Mairtin O'Muilleoir) " முழுக்கதையும் கொடுக்கப்பட்டுள்ள அளவில், பெரும்பாலான நம்முடைய வாசகர்கள் தாங்களே தங்கள் வருத்தமான முடிவை அடைய வந்துள்ளனர் என்பதை மறுக்க முடியாது" என்று எழுதியுள்ளார்.

இன்னும் பல விஷயங்கள் வெளிவரும். ஆனால் இதைவிட இழிவாக பிரித்தானிய ஆக்கிரமிப்புப் படைகள் வட அயர்லாந்தில் நடந்து கொண்டிருக்க முடியுமா என்ற வெளிப்படையான படிப்பினையை கற்பனை செய்வது கடினமாகும்.

வட அயர்லாந்தில் அது தொடர்ந்து ஆக்கிரமித்ததை எதிர்த்ததற்குப் பிரிட்டிஷ் கறைபடிந்த ஒரு முக்கிய பகுதியாகத்தான் ஐரிஷ் குடியரசு இராணுவத்தினுள் அதன் ஊடுருவல் அமைந்தது. 30 ஆண்டுகளுக்கும் மேலாக பிரித்தானிய இராணுவ உளவுத்துறையும் பிரித்தானியாவை சார்ந்த அல்ஸ்டர் ஒன்றிப்பு கட்டமைப்பும் (Ulster Unionist hierarchy), தெற்கிலும் ஐரிஷ் குடியரசிலும் ஐரிஷ் குடியரசு இராணுவத்தினுள் கணிசமான எண்ணிக்கையில் ஊடுருவல்காரர்களைக் கொண்டிருந்தன. அத்துடன் 25,000 வழமையான பிரித்தானிய படைகள், ஒரு துணை இராணுவ போலிஸ்அமைப்பு, பிரித்தானியர்களால் இயக்கப்பெற்ற முடியாட்சி ஆயுதக்கும்பல், வளைந்து கொடுக்கும் செய்தி ஊடகம், ஜூரர்கள் இல்லாத விசாரணை போன்றவையும் அங்கு இயங்கின.

1970களில் சாதாரண கைகலப்பு போன்ற ஆரம்பத்திலிருந்து அப்பொழுது பிரிட்டிஷ் உளவுத்துறை ஒரு போலி சலவை நிறுவனத்தையமைத்து தேசியப் பகுதிகளில் தடையற்றுச் செல்ல ஏற்பாடு செய்திருந்தது. பிரித்தானியர்களும் யூனியன்வாதிகளும் வட அயர்லாந்து முழுவதிலும் எல்லாப் பகுதிகளிலும் ஒட்டுக்கேட்டல், பிறரைப்பற்றி இரகசியமாகத் தெரிந்து கொள்ளுதல் ஆகியவற்றிற்காகத் தனி அமைப்பை ஏற்படுத்தியிருந்தன. கணக்கிலடங்கா அமைப்புக்கள் குடியரசு உறுப்பினர்கள், அவர்களுடைய ஆதரவாளர்கள், குடும்பங்கள், நண்பர்கள் தவிர தேசியப் பகுதி வாழ்ந்த சாதாரண மக்களையும் பொறியில் சிக்கவைத்தோ, அச்சுறுத்தியோ பிரித்தானிய ஆக்கிரமிப்புப் படைகளுக்கு உளவு பார்க்க ஏற்பாடுகளைச் செய்திருந்தன.

செய்தியாளர் எட் மோலோனியின் (Ed Moloney) சமீபத்திய நூல் ஐரிஷ் குடியரசு இராணுவத்தின் யின் இரகசிய வரலாறு (A Secret History of the IRA) இல், பிரித்தானிய அமைச்சர் குழு உறுப்பினர்கள் அனைவருமே கொலை செய்யப்பட்டிருக்கக்கூடிய, பழமைவாத கட்சி உறுப்பினர்கள் மாநாடு நடைபெற்று வந்த பிரிட்டினில் உள்ள கிராண்ட் ஹோட்டல் தாக்குதலுக்குப் பிறகு, குறிப்பாக 1980களின் பிற்பகுதியிலிருந்து ஐரிஷ் குடியரசு இராணுவத்தினுள் பிரித்தானிய தகவல் தெரிவிப்போர் பற்றிய நிரந்தர அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர் என எழுதியுள்ளார்.

சில தோல்வியுற்ற நடவடிக்கைகள் பற்றி முன்னெச்சரிக்கை எதிரிக்கு போயிருக்கும் என்ற சந்தேகம் கணக்கிலடங்காத தடவைகள் ஐரிஷ் குடியரசு இராணுவத்தின் உறுப்பினர்களுக்குத் தோன்றிய போதிலும் அவர்களால் அதை நிரூபிக்கமுடியவில்லை. 1987ல் லிபியாவிலிருந்து வந்த ஒரு கப்பல் நிறைய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. 1980ன் கடைசிப் பகுதிகளில் ஐரிஷ் குடியரசு இராணுவத்தின் பல தொடர்ச்சியான தாக்குதல்களில், பிரித்தானிய சிறப்பு ஆகாயப்படைப் பிரிவு ஐரிஷ் குடியரசு இராணுவத்தின் முக்கிய பணிப்பிரிவுகளைக் கொன்று குவித்தது. 1988ல் பெயர்பெற்ற ஜிப்ரால்டரில் (Gibraltar) மட்டுமல்லாமல், ஆர்மாவில் (Armagh), லோக்சே Lokshe இல் ஐரிஷ் குடியரசு இராணுவத்தின் கிழக்கு டைரோன் படைப்பிரிவும் (East Tyrone brigade) அழிக்கப்பட்டது. இந்த அளவு உயர்மட்ட இழப்புக்களைத் தவிர பல நடவடிக்கைகள் செய்ய முடியாமற் போயின. ஆயுதக்குவிப்புக்கள் கொள்ளை போதல், துப்பாக்கிகளில் போலித் தோட்டாக்கள் வைக்கப்படுதல் போன்றவை. மேலும் இயங்கிக்கொண்டிருந்த மற்றும் முன்னாள் ஐரிஷ் குடியரசு இராணுவத்தின் உறுப்பினர்களும் கணக்கிலடங்காமல் கொல்லப்பட்டனர்.

Steak Knife குற்றச்சாட்டுக்கள் பிரித்தானிய அரசாங்கமும் அதன் உளவுத்துறையும் எவ்வாறு சித்திரவதையிலும், நீதிக்குப் புறம்பான கொலைகளிலும் நேரடியாக ஈடுபட்டிருந்தன என்பதை உட்குறிப்பாகத் தெரிவிக்கின்றன. பிரித்தானிய, வட அயர்லாந்துச் செய்தி ஊடகம் ஆகியவை பிரித்தானிய ஒற்றர்கள் ஸ்கப்பற்றிச்சியின் கைகளால் கொலையுண்டதைச் சுட்டிக்காட்டியுள்ள போதிலும், பிரித்தானியர்களுக்கு வேவு பார்க்காத பல நிரபராதிகளும் கொல்லப்பட்டிருக்க கூடும். ஸ்கப்பற்றிச்சியைப் பற்றிய சந்தேகம் கொண்ட குடியரசுவாதிகளும், உளவுத்துறைக்குத் தொந்தரவு கொடுப்பவர்கள் என்று கருதப்பட்டவர்களும் கொலைசெய்யப்பட்டிருக்கலாம்.

ஐரிஷ் குடியரசு இராணுவத்திற்கும் சின்பின்னிற்கும் இது ஒரு பெரிய அழிவுகரமானதாகும். ஊடுருவலைத் தவிர்ப்பதற்காக ஆடம்ஸ் உருவாக்கிய பாதுகாப்புத்துறையைத்தான் ஸ்கப்பற்றிச்சியின் ஊடுருவல் மிகுந்து பாதுகாப்பு அற்றதாகச் செய்துவிட்டார்.

இந்தத் தோல்வி தற்செயலாக நடந்தது அல்ல. வட பகுதியில் உடன்பாடு காணவேண்டும் என்பதற்கு பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கத்தை கொண்ட இராணுவ பிரச்சாரத்தை செய்யும் ஒரு சிறு இரகசியக் குழுவினது அமைப்பின் முன்னோக்கில் இருந்தே நேரடியாகத் தோன்றியது. இது சின்பின்னை அரசாங்கத்தினுள் ஒன்றிணைத்து வட அயர்லாந்தை காவல்காக்கும் 1998இல் வெள்ளிக்கிழமை உடன்பாட்டினால் (Friday Agreement) ஓரளவு அடையப்பட்டது.

பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக எல்லைக்கு வடக்கேயும் தெற்கேயும் உள்ள தொழிலாள வர்க்கத்தை ஆயுதபாணியாக்குவற்கு எதிராக தமக்கிடையேயும், இங்கிலாந்து அரசாங்கம், அல்ஸ்டர் தேசியவாதிகள், உளவுத்துறை அமைப்புக்கள், ஐரிஷ், அமெரிக்க அரசாங்கங்கள் போன்றவற்றிற்கிடையே ஏதாவது கொடுக்கல் வாங்கல்களை செய்துகொள்ளலாம் என்பதே ஐரிஷ் குடியரசு இராணுவத்தினதும், சின்பின்னுடையதும் முன்னோக்கின் மத்திய புள்ளியாகும்.

Steak Knife விவகாரத்தில் தொடர்ந்து வரும் பல வெளிப்பாடுகள் அடிப்படை குடிமை உரிமைகள் பற்றிய சில கேள்விகளை எழுப்புகின்றன. குடியரசுவாத இயக்கத்தில் உளவுத்துறை ஊடுருவல் எந்த அளவு இருந்தது என்பதை முழுமையாக தொடர்ந்து ஆராயாமல், அனைத்துத் தனி நபர்களின் தொடர்பையும் விசாரணை செய்யாமல், சின்பின் விஷயத்தைக் குறைத்து மதிப்பிட விரும்புகிறது.

ஆகஸ்ட் 10ம் தேதி கூட்டிற்கு எதிரான ஆர்ப்பாட்டம் பெல்பாஸ்டில் நடைபெற்ற பொழுது மார்டின் மக்கின்னஸ், பிரித்தானியர்கள், முடியாட்சிவாத ஆயுதக் கும்பலை பயன்படுத்தியதை கடுமையாகத் தாக்கிப் பேசியதுடன், "இப்பொழுதும் கூட சிறப்புப்பிரிவு, பிரிட்டிஷ் உளவுத்துறை உறுப்பினர்கள் மீது இக்குற்றங்களுக்காக நடவடிக்கை எடுக்க முடியாது" என்றார். பிரித்தானிய இராணுவப் படை ஆய்வுப்பிரிவு, இணை சேவைக்குழு (Joint Servcies Group) என்ற புதுப் பெயருக்கு மாற்றப்பட்டுவிட்டதாகவும், அது தன்னுடைய பணிகளை MI5 போலவே தொடர்ந்து செய்கிறது என்றும் கூறினார். ஆனால் Steak Knife இனைப்பற்றி அவர் ஏதும் குறிப்பிடவில்லை.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved