World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு : துருக்கி

In wake of US reprimand
Threat of military coup grows in Turkey

அமெரிக்காவின் கடிந்துரையைப் பின் தொடர்ந்து

துருக்கியில் இராணுவம் ஆட்சியைக் கவிழ்க்கும் அச்சுறுத்தல் வளர்கிறது

By Justus Leicht
2 June 2003

Back to screen version

அமெரிக்க பாதுகாப்புத்துறைத் துணைச்செயலாளர் போல் வொல்போவிட்ஸ், துருக்கிய இராணுவமானது, ஈராக்கியப் போர் தொடர்பானதில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ரத்துச்செய்து நிராகரிகத் தவறியது என்று கூறிய சிலவாரங்கள் கழித்து, அங்காராவில் இராணுவம் ஆட்சியைக் கவிழ்த்துவிடுமோ என்ற கவலைகள் வளர்ந்து வருகின்றன.

மே மாதத்தின் நடுவில், துருக்கியச் செய்திப் பத்திரிகைகள் பிரிட்டனின் சிந்தனைக் குழாத்தினால், மூலோபாய ஆய்வுகளுக்கான சர்வதேச நிறுவனத்தினால் (International Institute for Strategic Studies) செய்யப்பட்ட ஆய்வு பற்றி அறிக்கைகளை வெளியிட்டன. அவை நீதி மற்றும் வளர்ச்சிக் கட்சியின் (Justice and Development Party) (AKP) அரசாங்கத்தின் தலைமையமைச்சர் Recep Tayip Erdogan இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் ஆதரவுள்ள நடவடிக்கைகளை மேற்கொண்டால் இராணுவம் அவருடைய ஆட்சியைக் கவிழ்த்துவிடும் எனக் கூறின. அரசாங்கத்தைப் பற்றிய அதிருப்தி மனநிலை இராணுவ அதிகாரிகளிடையே அதிகமாக இருக்கின்றது எனவும், பொதுவாக அந்நாட்டு மரபின்படி அவர்கள்தாம் தங்களைச் சமயசார்பற்ற சமுதாயத்தின் பாதுகாவலராகக் கருதிக்கொள்கின்றனர் என்றும் செய்திப் பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.

சில நாட்கள் கழித்து, எர்டோகனுக்கு, தேசியப் பதுகாப்புக் குழுவின் சக்திவாய்ந்த உறுப்பினரான, ஜெனரல் டன்ஸிர் கிளின்.சி ( General Tuncer Kilin,c) அனுப்பிய இரகசியக் கடிதத்தை வெளியிட்டது. அது இராணுவம் சமயசார்பற்ற தன்மையைவிடக் கூடுதலாக அதிக அளவு ஜனநாயகம் வந்துவிடுமோ என்ற சிந்தனையால் ஊக்குவிக்கப்படுவதைத் தெளிவாக்கியது. தன்னுடைய கடிதத்தில், ஜெனரல், அவப் பெயர் பெற்ற, பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் விதி 8 -ல் எந்த மாற்றமும் ஏற்படுத்த முற்பட்டால் தான் அதை எதிர்ப்பதாகக் கூறியுள்ளார். அது "மனச்சாட்சியின் குற்றங்கள்" எனும் கடுமையான தண்டனையை வழங்குகிறது. அயல்நாட்டினரைப் பார்வையாளர்களாகத் தேர்தலின்பொழுது அனுமதிப்பதற்கும், மேலும் குர்துகளுக்காக எந்தத் தனியார் தொலைக்காட்சிக்கும் உரிமம் அளிப்பதற்கும் மற்றும் பத்திரிக்கைகளை (RTUK) மேற்பார்வையிடும் அங்கத்தின் கூட்டங்களுக்கு ஒரு பிரதிநிதி அனுப்புதலை அனுமதிக்கும் தற்பொழுதைய சட்டத்தில் எந்த மாறுதல் செய்வதற்கும் கூட அவர் எச்சரிக்கையை விடுத்தார். தளபதியின் கருத்துக்களை பொதுமக்கள் அறியச் செய்வதற்காக அரசாங்கமே இந்தக் கடிதத்தை பத்திரிகைகளுக்கு கசியவிட்டதாக சில தகவல்கள் கூறுகின்றன.

இராணுவத்தின் எதிர் நடவடிக்கை உடனடியாக வந்தது. தரைப்படைகளின் தலைமை தளபதி Hilmi Özkök பிரதமரை நேரடியாகச் சந்தித்து கலவர சட்டத்தை வாசித்துக் காண்பித்தார். எர்டோகன் இந்தப் பூசலைக் குறைத்துக்காட்ட நினைத்தார். அரசாங்கமும் இராணுவமும் இணைந்து "முழு இணக்கத்துடன்" பணிபுரிந்து வருவதாக அவர் குறிப்பிட்டார்; வேறு எந்தவிதமான கருத்தும் பத்திரிகைகளின் ஊடகத்தின் தீய எண்ணங்கொண்ட கண்டுபிடிப்பு என்றும் ``நாட்டின் அழகிய வளர்ச்சிகளைப்`` பற்றிப் பொறாமையுடன் அப்படிப்பட்ட கருத்து இருக்கக்கூடும் என்றும் கூறினார். இராணுவம் தான் கொடுத்த பேச்சுக்களின் குறிப்பைப் பற்றி எந்தக் குறையும் கூறாது என்ற நினைப்பில் எர்டோகன் சற்று சங்கடத்துடனேயே, தலைமைத் தளபதி, "உரிய நேரத்தில் தேவையான அறிக்கையை" அளிப்பார் என்றும் அறிவித்தார்.

உண்மையில், ஒரே வாரத்திற்குள், ஜெனரல் ஓஸ்கோக், இராணுவத் தலைமையகத்தில் பொறுக்கி எடுக்கப்பட்ட பத்திரிகையாளர்களைக் கொண்ட ஒரு செய்தியாளர் மாநாட்டைக் கூட்டினார், இடதுசாரி, இஸ்லாமிய இதழ்களின் பிரதிநிதிகள் தவிர்க்கப்பட்டுவிட்டனர். இந்தப் பத்திரிகையாளர் தேர்வும், பின்னர் வெளிவந்த அறிக்கைகளும், வண்ணனைகளும், பெரும்பாலான மேலைநாட்டு ஊடகங்களால் எடுத்துக்கொள்ளப்பட்டன.

Milliyet என்ற நாளேட்டின் மே 28 வெளியீட்டில் Fikret Bila வர்ணித்தார்: ``நம்முடைய அயல்நாட்டுக் கொள்கையில் TSK (Turkish Armed Forces) -துருக்கி நாட்டு இராணுவத்தின்- உதவி இல்லாமல் நாம் வெற்றிபெற முடியாது என்பதைச் சமீபத்தில் கண்டோம். இதே பிரச்சனையைப் பழையபடி சந்திக்காமல் இருக்க, துருக்கி தன்னுடைய உள்நாட்டுப் பூசல்களால் அதன் இராணுவத்தையோ பொருளாதாரத்தையோ தியாகம் செய்துவிடக்கூடாது. இதற்கு எதிராகப் பாதுகாத்தல் பெரும்பாலும் எமது அரசியல் தலைமையின் கடமை ஆகும்.``

இந்த மறைமுகமான கருத்து துருக்கியப் பாராளுமன்றம், அமெரிக்கா தன்னுடைய படைகளைத் துருக்கிய மண்ணில் இறக்கி ஈராக்கின் மீது படையெடுப்பிற்குத் தயார் செய்யும் அமெரிக்கக் கோரிக்கையை நிராகரித்தது பற்றிக் குறிப்பிடுகிறது. இந்த வாக்களிப்புத்தான், ஒரு சிதைந்த முறையில் பெரும்பாலான துருக்கிய மக்கள் ஈராக் போரை ஏற்க மறுத்ததை வெளிப்படுத்தியது; இந்த வாக்களிப்புத்தான், வொல்போவிட்ஸின் துருக்கிய இராணுவத்தைப் பற்றி குறைகூற ஊக்கமளித்தது. பென்டகனின் இரண்டாம் அந்தஸ்தில் இருக்கும் நபர் துருக்கியத் தளபதிகளைப் பற்றிக் கூறியதாவது: ``ஏதோ காரணத்தினால், அவர்களிடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட சக்திவாய்ந்த தலைமைப் பங்கை இந்தப் பிரச்சனையில் அவர்கள் வெளிப்படுத்தவில்லை.``

இந்தச் செய்தியில் புதைந்து கிடைக்கும் உண்மையை உணர்ந்துகொண்டால், மற்றைய தளபதிகளின் கருத்துக்களையும் அமெரிக்காவின் கருத்தையும், பிலா எதிரொலிக்கிறார் என்பது தெரியவரும்: அடுத்த படையெடுப்பிற்கு வாஷிங்டன் முடிவு எடுத்தால் - அது ஈராக் மீதோ, சிரியா மீதோ - அது கூலிப்படையான துருக்கிய இராணுவத்தின் ஆதரவை நம்பலாம், நாட்டு மக்களின் ஜனநாயக உணர்வு பற்றிய அக்கறைகளோ, துருக்கிய மக்களின் எதிர்ப்பு காட்டப்பட்டாலோ, அதைப் பொருட்படுத்தவேண்டிய தேவையில்லை.

பெரும்பாலான துருக்கிய, பன்னாட்டுச் செய்தி ஊடகங்கள் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிவிடுமோ என்ற அச்சத்தைக் குறைத்து எழுதவே முயன்றுள்ளன. வாஷிங்டன் போஸ்ட், ஓஸ்காக், எந்த மாதிரியான இராணுவ ஆட்சி பயமும் தேவையில்லை என்று குறிப்பாகத் தெரிவித்ததையும், ``இராணுவத்திற்கும் அரசாங்கத்திற்கும் கருத்து வேறுபாடுகள் உரிய அரசியலமைப்புத் துருக்கிய நிறுவன வழிமுறைகள் மூலம் தீர்க்கப்படும் என்றும்`` செய்தி ஊடகத்திற்குத் தெரிவித்துள்ளதைக் கூறுகிறது. தளபதி தன்னுடைய கவலையை, AKP ஆதரவாளர்களை பல முக்கியமான அரசாங்கப் பணிகளில் அமர்த்தியுள்ளதைப் பற்றி - துருக்கியில் மட்டுமின்றி உலகத்தில் எங்கும் இது நடைமுறையே - தெரிவித்துள்ளார் என்று எழுதியுள்ளது.

ஓஸ்காக், சற்று கூடுதலாகவே சென்றுள்ளார் என்றுதான் கூறவேண்டும். சீர்திருத்தம் பற்றிய அழைப்பு உள்ளபோதிலும், இராணுவம் தன்னுடைய பங்கை விட்டுக்கொடுத்துவிட அதற்கு விருப்பமில்லை என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராவதற்கு, துருக்கிய அரசியலில் இராணுவம் தன் செல்வாக்கை, -குறிப்பாக தேசியப் பாதுகாப்புக் குழுவில் அதனுடைய பங்கை, குறைத்துக்கொள்ள வேண்டுமென்று ஐரோப்பிய ஒன்றியம் கேட்டுக்கொண்டுள்ளது. அரசாங்கத்துடனான அதிருப்தி இளம் அதிகாரிகளுக்கு மட்டும் இல்லையென்றும் அனைத்து அதிகாரிகளுமே இந்த விஷயத்தில் சற்று "உணர்வுபூர்வமாக" உள்ளனர் என்பதையும் கூட ஒஸ்காக் வலியுறுத்தினார்.

கார்டியன் பத்திரிக்கையில் வந்துள்ள ஓர் அறிக்கையின்படி, நெக்மெட்டின் எர்பகன் (Necmettin Erbakan) தலைமையிலான இஸ்லாமிய நல கட்சி அரசாங்கத்திற்கு (RP) ஏற்பட்ட முடிவையும் ஒஸ்காக் நினைவுகூர்ந்தார். 1997ல் இந்த அரசாங்கம், இராணுவத்தால் எந்த விதமான இரத்தம் சிந்துதலுமின்றி, கவிழ்க்கப்பட்டது -அது 40 ஆண்டுகளில் நான்காவது முறையாக அப்படிப்பட்ட ஆட்சிக் கவிழ்ப்பு ஆகும்- லிபியாவுடனும், ஈரானுடனும் அவ்வரசாங்கம் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டதற்குப் பிறகு நடந்ததாகும். எர்பகன் அதன் பின்னர் சிறைத் தண்டனை பெற்றதோடு அரசியல் வாழ்வில் ஈடுபடத் தடையையும் பெற்றார். அவருடைய கட்சி சட்ட விரோதமானதென அறிவிக்கப்பட்டது. எர்டோகன் உட்பட, AKP யின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர், பழைய RP யின் உறுப்பினராக இருந்தவர்களாவர்.

ஓஸ்காக் கருத்தின்படி, இராணுவ ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கை அந்த சூழ்நிலையில் ``காரண-காரியத் தொடர்பினால்`` ஏற்பட்டதாகும். அவர் மேலும் கூறினார்: ``காரணம் ஏற்பட்டுவிட்ட பின்னர், அங்கு காரியமும் ஏற்பட்டுவிடும்.`` இந்தக் கருத்து, இப்பொழுதுள்ள அரசாங்கத்தில் தலையிட்டு நாட்டின் அரசியலை மாற்றுவதற்கு துருக்கிய இராணுவம் முன்வரும் என்று அர்த்தப்படுத்துகிறதா எனக் கேட்கப்பட்ட பொழுது, அவர் கூடுதலாக ஏதும் விளக்க மறுத்துவிட்டார்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved