World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா

US marines sent to Liberia

அமெரிக்காவின் கடற்படை லைபீரியாவிற்கு அனுப்பப்பட்டது.

By Chris Talbot
18 June 2003

Back to screen version

1500 கடற்படையினர் 1200 மாலுமிகள் மற்றும் தாக்குதல் நடாத்தும் ஹெலிகாப்டர்களைக் கொண்ட, ஈராக்கிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்த அமெரிக்கப்போர்க் கப்பல் ஒன்று மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியாவிற்கு திருப்பிவிடப்பட்டுள்ளது. அமெரிக்கத் தலையீட்டை அங்கு இது ஏற்படுத்தக்கூடுமோ என்பதை ஊகம் செய்யும் அளவிற்கு லைபீரியாவில் உள்நாட்டுப் போர் கூடுதலாக மூண்டுள்ள நிலையில், நாட்டின் பெரும் பகுதியைக் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ள எதிர்ப்பு படைகள் தலைநகர் மொன்ரோவியை சூழ்ந்து கொண்டுள்ளன.

Financial Times ல் வந்துள்ள செய்தியின்படி அமெரிக்கத் தலைமையில் 2000 நைஜீரியப் படைகள் அடங்கிய ஒரு பன்னாட்டு தலையீடு பற்றிய பேச்சு உலவுகிறது. 1993 ல் சோமாலியாத் தலையீட்டின்போது 18 அமெரிக்க இராணுவத்தினர்கள் கொல்லப்பட்ட அளவில், புஷ் நிர்வாகத்தில் ஆப்பிரிக்காவிற்கு படைகள் அனுப்புவதில் எதிர்ப்பு நிலவுகிறது.

இந்த மாறுதல் மொன்ரோவியா ரத்தக்களறியைச் சந்தித்து 1990 களில் இருந்தது போல் ''திவாலான நாடு'' என்று இழிந்துவிடுமோ என்ற கவலையையொட்டி ஏற்பட்டிருக்கலாம். பிரிட்டன் சியாரா லியோனை (Sierra leone) ஒரு ஐ.நா பெரும்படையின் உதவியோடு திறமையுடன் தன் காலனித்துவ நலன்களுக்கு உட்படுத்திவிட்டது. பிரான்ஸ் ஐவரி கோஸ்டில் 4000 துருப்புக்களை இறக்கியுள்ளது. லைபீரியப் போர் மேற்கு ஆப்பிரிக்கா முழுவதுமே உறுதியற்ற நிலைக்குத்தள்ளும் அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதோடு, அமெரிக்காவின் எண்ணெய்த் தேவைகளானது கடும் விளைவுகளை இங்கு ஏற்படுத்தக்கூடும்.

Liberians United for Reconciliation and Democracy (LURD), Morement for Democracy and Elections (MODEL) என்னும் எதிர்ப்புக் குழுக்களுக்கும் சார்லஸ் ரேலரின் லைபீரிய அரசாங்கத்திற்கும் இடையே ஓர் அமைதி உடன்பாடு கொண்டுவர மேற்கு ஆப்பிரிக்க நாடுகள் செய்துவரும் முயற்சிகள் தொடருகின்றன. இதில் போர்குற்றங்களுக்காகத் தன் மீது எந்த வழக்கும் தொடரப்படக்கூடாது என்பதே ரேலரின் முதல் நிபந்தனையான வலியுறுத்தலாகும்.

கடந்த வாரம் சியாரா லியோனிலுள்ள ஐ.நா சபையால் ஆதரிக்கப்படும் சிறப்பு நீதிமன்றம் ஒன்று போர்க் குற்றங்களை ரேலர் மீது சுமத்தி வழக்கை எடுத்துள்ளது. இவர் சியாரா லியோனின் உள்நாட்டுப்போரில் இழி பெயர் வாங்கியதுடன், மூர்க்கத்தனமாக எதிர்ப்புப் படைகளுக்கு ஆதரவளித்ததற்காக மேற்கு வல்லரசுகள் இவரை இலக்காக கொண்டுள்ளன. மேலும் இவர் ஆயுதங்கள் கொடுப்பதற்காக சியாரா லியோனின் வைரங்களை பேரம் பேசியிருந்தார். நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையானது இவரை ''ஆப்பிரிக்காவின் சுலோபோடன் மிலோசவிக்'' (Sloboda Milosevic) என்று குறிப்பிட்டு அவரைக் கைது செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது.

ஜூன் 17 ம் தேதி நியூயார்க் டைம்ஸ்சில் வெளிவந்த கட்டுரையொன்றில் அண்மை நாடான சியாரா லியோன் படைகள் இதற்காகப் பயன்படுத்தப்படலாம் என்றும், ஆயினும் புதிய படைபலமும் தேவை என்றும் ஆலோசனை தெரிவித்திருந்தது. அத்துடன் ''லைபீரியா விடுவிக்கப்பட்ட அமெரிக்க அடிமைகளால் தோற்றுவிக்கப்பட்ட நாடாக இருப்பதால் அமெரிக்கா இந்த உதவிக்கும் சிறப்புப் பொறுப்பு கொண்டுள்ளது'' என்று அது கூறியுள்ளது.

நீதிமன்றத் தீர்ப்பின் உடனடி முடிவு LURD மற்றும் MODEL இரண்டு அமைப்பையும் மொன்ரோலியா மீது இராணுவ அளவிலான அழுத்தத்தை அதிகரித்துவிடத் தூண்டியது ஆகும். சியாரா லியோன், லைபீரியா, கினியா மற்றும் ஐவரி கோஸ்ட் இவற்றிடையே நிலவும் பூசல்களுக்கு புதிய வல்லாட்சியாளரான ரேலர்தான் காரணம் என்று வலியுறுத்தும் அளவில் அமெரிக்காவும், பிரிட்டனும் அப்பகுதியின் ஸ்திரத்தன்மையை மேலும் இழக்கச் செய்துவிட்டது.

மே மாதம் ஐ.நா தீர்மானம் ஒன்று ஆயுதங்கள், வைரம், போக்குவரத்து பயணம் ஆகியவற்றை லைபீரியாவுடன் தடைசெய்த அளவில் சியாரா லியோனின் நீதிமன்ற முடிவும் வந்துள்ளது. Africa Confidential என்ற பத்திரிகையின்படி அமெரிக்காவும், பிரிட்டனும், பிரான்சைத் தங்கள் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தருவதற்காக ரேலருக்கு எதிராக ஐவரி கோஸ்டில் இதன் இராணுவத் தலையீட்டுக்கு ஐ.நா ஆதரவு வாங்கித்தரும் பேரமும் பேசியிருந்தன.

ரேலர் ஒரு கொடுமையான வல்லாட்சியாளர் என்பது உண்மையென்றாலும், LURD அமைப்பு ஒன்றும் ஜனநாயக நெறிகளை வளர்க்கும் அமைப்பு அல்ல என்பதை அமெரிக்க, பிரிட்டிஷ் முயற்சிகள் செளகரியமாக மறந்து விடுகின்றன. LURD அமைப்பின் தலைவர்களும் அண்டை நாடான கினியாவால் ஆதரிக்கப்பட்ட ரேலரைப் போலவே சந்தேகத்திற்குட்பட்ட குணங்களைக் கொண்டவர்களாக உள்ளனர். அமெரிக்க இராணுவக் குழு ஒன்று கினிய இராணுவத்திற்குப் பயிற்சி கொடுத்து வருகின்றது. ரேலருக்கு எதிராகத் தக்க பலம் கொடுக்கும் வகையில் கினியா LURD அமைப்பிற்கு ஆதரவு தருவதை அமெரிக்காவும் பிரிட்டனும் பெரிதும் உட்குறிப்பாக ஒப்புதல் தந்துள்ளன. அப்பகுதியைப் பற்றிய ஐ.நா பாதுகாப்புக்குழுவின் தனிக்கூடம் ஒன்றில் LURD அமைப்பிற்கு ஆதரவு தருவதற்கு 'சிறு அளவு எச்சரிக்கை' மட்டுமே கினியாவிற்கு அளிக்கப்பட்டது.

ஐவரி கோஸ்ட்டின் உள்நாட்டு யுத்தத்தில் ஜனாதிபதி லோரன் பாக்போ (Laurent gbagbo) தலைமையிலான அரசாங்கக் கட்சியானது, MODEL அமைப்பு LURD லிருந்து பிரிந்து வந்ததை ஆதரிக்க முற்பட்ட அளவில் பிரச்சனை மேலும் சிக்கலாயிற்று. லைபீரியா எதிர்ப்புக் குழுக்கள் ஐவரி கோஸ்டின் மேற்குப் பகுதியில் அரசாங்கத்தை எதிர்த்தபொழுது பாக்போ முதலில் கூறப்பட்டுள்ள குழுக்களுக்கு ரேலரைத்தாக்க ஊக்குவித்தார். Africa Confidential படி தென்கிழக்கில் MODEL அமைப்பு தொடுத்த போர் இரண்டு மாதத்தில் அதிகரித்து வடக்கிலிருந்து LURD அமைப்பு தொடுக்கும் தாக்குதலைவிட மொன்ரோவியாவிற்கு பெரிய கவலையைக் கொடுத்தது. MODEL அமைப்பு முக்கிய டிம்பர் (timber) விளையும் பகுதிகளைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதுடன் முக்கியமான greenville துறைமுகத்தையும் தன்வயப்படுத்திக் கொண்டுவிட்டது.

வேறுபட்ட குழுக்களான MODEL ம் LURD ம் 1990 களில் எதிர் அணியினராக இருந்து, இவற்றிடையே உள்நாட்டுப் போரில் ரேலரோடு சண்டைபோடுவதுடன், இவர்கள் ஒருவரோடு ஒருவர் நாட்டைக் கைப்பற்ற மோதுவார்கள் என்ற அளவில் மீண்டும் இனவழிக் கொடுமைகளின் அச்சுறுத்தல் தோன்ற வாய்ப்பு உள்ளது.

மொன்ரோவியா மனிதாபிமானப் பார்வையில் ஒரு பேரழிவான இடமாகப் போய்விட்டது. பெரும்பாலான உதவியளிக்கும் நிறுவனங்கள் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டன. சண்டையின் விளைவுகளைத் தவிர்க்க 1 மில்லியன் மக்கள் தலைநகரைவிட்டு வெளியேறிவிட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. Medecins sans Frontières ஆனது பெரும்பாலான வெளியேறியவர்கள் உணவின்றிக் குடிநீரின்றி வாடுவதாக அறிவித்துள்ளது. அதிகமான மக்களுக்கு போதிய நீரின்மை, சுகாதார வசதிக்குறைவு இவற்றால் கொலரா தொற்றுநோய் தோன்றக்கூடிய அபாயநிலையும் உள்ளது. போரினால் இறந்துபோன நூற்றுக்கணக்கானோரின் சடலங்கள் நகரத்திற்கு வெளியே அழுகிய நிலையில் உள்ளன. அமெரிக்காவிலிருந்தும் ஐரோப்பாவிலிருந்தும் 500 வெளிநாட்டினர் பிரெஞ்சு ஹெலிகாப்டர் மூலமாக ஐவரி கோஸ்டுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

லைபீரியா அமெரிக்க காலனியாக இருந்ததில்லை என்றாலும், 19 நூற்றாண்டிலிருந்து அமெரிக்க ஆதிபத்தியத்திற்கு அது உட்பட்டிருந்தது. 1920 களில் Firestone நிறுவனத்திற்கான பரந்த ரப்பர் தோட்டங்களில் வேலை செய்வதற்கு மலிவான தொழிலாளர்கள் இங்கு கிடைத்தனர். அதனுடைய பெரும் இரும்பு தாதுப்படிவங்கள் இரண்டாம் உலகப் போரின்போதும், அதைத் தொடர்ந்தும் பெருமளவில் எடுத்துப் பயன்படுத்தப்பட்டன. போருக்குப்பின் தொடர்ந்தும் பெரும்பாலான மக்கள் வறுமையில் உழன்றபோது அமெரிக்கா அதன் ஆட்சியிலிருந்த சிறுகுழுவிற்குப் பொருளாதார இராணுவ உதவிகளை அளித்து வந்தது. இறுதிக் கணக்கீட்டு முறையில் சகாராப்பகுதி (எதியோப்பியா, கொங்கோ, சூடானுக்குப் பிறகு) ஆப்பிரிக்காவில் நான்காவது அதிக அளவு உதவிபெறும் நாடாக விளங்கியது.

அத்துடன் பனிப்போரின் போது அதனுடைய முக்கியத்துவம் அதிகரித்ததுடன், அதனுடைய நிலப்பகுதி அமெரிக்கத் தொடர்பு முறைகளின் வசதியைக் கொண்டு ஆப்பிரிக்கா கண்டம் முழுவதையும் வேவு பார்க்க உதவியது. 1980 ல் வில்லியம் டால்பர்ட்டின் ஆட்சியை இராணுவத் தலைமையானது சதிப்புரட்சி மூலம் அகற்றி பதவியைக் கைப்பற்றிக் கொண்டது. Master Sergeant Samuel Due என்பவரின் தலைமையில், மக்கள் மத்தியில் வளர்ந்து வந்த ஏழ்மை நிலையைப் பயன்படுத்தி அவ்வாறு செய்ய முடிந்தது. இரும்பு தாதுப்பொருட்களுக்கும், ரப்பருக்கும் தேவை குறைந்ததால் வறுமையும் பெருகியது. புதிய உயர் சிறுகுழு அமெரிக்காவிற்குக் கூடுதலான பயன்பாடு உடையதாக விளங்கியது. உதவித் தொகையளவு 1970 களில் 20 மில்லியன் டொலர்களிலிருந்து 95 மில்லியனிற்கும் ஜனாதிபதி ரீகனின் கீழ் 1981 லிருந்து 1985 வரையிலான காலத்தில் 402 மில்லியன் டொலர்களாக இருந்தன.

அந்தக்கால கட்டத்தில் மிகப்பெரிய அளவு CIA யின் இரகசிய நடவடிக்கைகளின் மையமாக லைபீரியா விளங்கியது. குறிப்பாக கேனல் கடாபிக்கு எதிராக லிபியப்போரில் சமயத்தலைவர் Hissene Habne ஐ ஆதரித்த நடவடிக்கைகளில் டோவை (Due) அமெரிக்க சிறப்புப் பாதுகாப்பிற்குட்படுத்த முயற்சிகள் கொள்ளப்பட்டன. எவ்வாறு கொங்கோவில் மொபுட்டுவிற்கு அத்தகைய பாதுகாப்பு கொடுக்கப்பட்டதோ அதேபோல் அவர் தன்னுடைய அரசியல் விரோதிகளை நசுக்கிய முறைகளெல்லாம் அமெரிக்கரால் எதுவும் பொருட்படுத்தப்படவில்லை.

டோவின் ஆட்சிக்கு வழங்கப்பட்ட உதவி பனிப்போருக்குப்பின் குறைக்கப்பட்ட அளவில் லைபீரியப் பொருளாதாரம் சரிவதற்கு இடம் அளிக்கப்பட்டது. அதனால் அமெரிக்காவிற்கு மேலும் எந்தப் பயனும் கிடையாது என்பதால் 1990 களில் உள்நாட்டுப் போர்ச் சூழலுக்கு நாடு சரிந்துவிட்டது.

அப்பொழுது எதிர்ப்புப் பிரிவின் முக்கிய தலைவராக இருந்த சார்லஸ் ரேலர் 1990 ல் அமெரிக்கத் துணைத் செயலாளராக இருந்த கோகனுடைய கருத்தையொட்டி அமெரிக்கத் தலையீட்டில் விளைந்த அமைதி ஒப்பந்தத்திற்கு உடன்பட்டார். ஆனால் கோகன் கருத்து வாஷிங்டனில் எடுபடாமல் வாஷிங்டன் தலையீடு தவிர்க்கப்பட்டுவிட்டது. லிபியாவின் ஆதரவை ரேலர் பெற்றதால் இந்தப்போர் பல ஆண்டுகள் தொடர்ந்ததுடன் பல புதிய எதிர்ப்புப் பிரிவுகள் தோன்றின. ஊதியம் கிடைக்கப்படாத நைஜீரிய அமைதிப்படைகளும் எதிர்ப்புப்பிரிவு படைகளைப் போலவே மக்களை கொள்ளையடித்தல், அச்சுறுத்தல் போன்றவற்றில் ஈடுபட்டது. இறுதியில் அமெரிக்கா ஓர் அமைதிப் பேரத்திற்கு உடன்பட்டது. அதன் படி ரேலர் பெரும் ஆதிக்கத்தை கொண்ட பிரிவின் தலைவர் என்னும் முறையில் 1977 ல் தேர்தல் மூலம் அதிகாரத்தைக் கைப்பற்ற வழிவகை செய்யப்பட்டது.

1999 TM LURD அமைப்பு கினியாவிற்கு வெளியே தன்னுடைய நடவடிக்கைகளைத் தொடங்கியது முதல் மொத்தத்தில் 200,000 மக்கள் உள்நாட்டுப் போரில் இதுவரை மடிந்துள்ளனர்.

 


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved