World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : தென் அமெரிக்கா

The theory of "self-organization"

Interview with Luis Zamora of Argentina's Autonomy and Freedom movement

"சுய - ஒழுங்கமைத்தல்" தத்துவம்

ஆர்ஜென்டினாவின் தன்னாட்சி மற்றும் சுதந்திர இயக்கத்தின் -
லூயி ஜமோராவுடன் ஒரு பேட்டி

By David Walsh
2 June 2003

Back to screen version

லூயி ஜமோரா, தன்னாட்சியும் சுதந்திர இயக்கமும் என்ற (Autonomia y Libertad) அமைப்பின் தலைவராக ஆர்ஜென்டினாவில் முக்கிய அரசியல் புள்ளியாக உள்ளார். தேசியப் பாராளுமன்றத்தில் ஓர் உறுப்பினராக உள்ள இவர் சமீபத்தில் நடந்த தேர்தலில் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகக் களத்தில் இறங்கலாமா என நினைத்தவர் -ஒரு கட்டத்தில் முன்னணி வேட்பாளராகவே இருந்தார்- பின்னர் "அதிகாரத்தை எடுப்பது" தன்னுடைய "சோசலிச-விடுதலை" அமைப்பின் நோக்கம் அல்ல என்ற சிந்தனையில் அந்த எண்ணத்தைக் கடந்த இலையுதிர் காலத்தில் கைவிட்டார்.

பின்னால் ஏப்ரல் 27 நடந்த தேர்தலின் முதல் சுற்றுப்படி, பழைய ஜனாதிபதியும் பெரோனிஸ்டுமான கார்லோஸ் மெனெம் (Carlos Menem) (1989-99 வரை பதவியிலிருந்தவர்) வாக்கு எண்ணிக்கையில் 24 சதவிகதத்துடன் முன்னணியிலும், நெஸ்டர் கிர்ச்நெர் (Néstor Kirchner), மற்றொரு பெரோனியர், அவருக்கு அடுத்து 22 சதவிகிதத்திலும், வலதுசாரி ரிகார்டோ லோபஸ் மர்பி (ஸிவீநீணீக்ஷீபீஷீ லிரஜீமீக்ஷ் விuக்ஷீஜீலீஹ்) 16 சதவிகிதத்தோடும், இடது மையவாதி எலிசா கார்ரியோ (ணிறீவீsணீ சிணீக்ஷீக்ஷீவீர), ARI (Alternatives for a Republic of Equals) சார்ந்தவர், மூன்றாவது பெரோனிஸ்டு வேட்பாளர் அடால்போ ரோட்ரிக்ஸ் சா (கிபீஷீறீயீஷீ ஸிஷீபீக்ஷீணரீuமீக்ஷ் ஷிணீஊ Saa) இருவரும் 14 சதவிகித வாக்குகளோடும் களத்தில் இருந்தனர். ஐக்கிய இடது (கம்யூனிஸ்ட் உட்பட, இடதுசாரி கட்சிகளின் கூட்டணி) தேசிய வாக்குகளில் 1.75 சதவீதமும், ப்யூனோஸ் ஏர்ஸில் 8 சதவிகிதமும் பெற்றது. சோசலிஸ்ட் கட்சி 1.13 சதவீதமும் வாய்ச்சொல் டிராட்ஸ்கிச பார்டிடோ ஒப்ரீரோ (Partido Obrero (உழைப்பாளர் கட்சி) 0.76 சதவிகிதமும் பெற்றன.

மே 18 இறுதி வாக்கெடுப்பிற்கு 4 நாட்கள் முன்பு, மெனெம் பந்தயத்திலிருந்து விலகிக்கொண்டு, இரண்டாம் வாக்கெடுப்பிற்கு அவசியமில்லாமல், சாந்தாக்ருஸ் தெற்கு மாநில ஆளுனர் கிர்ச்னெருக்கு ஜனாதிபதியாகும் உரிமையைக் கொடுத்தார். தன்னுடைய நிரந்தர விரோதியான தற்பொழுதைய ஜனாதிபதியும் கிர்ச்னரினரின் ஆழ்ந்த அனுதாபியுமான, எடுவர்டோ டுகால்டே (Eduardo Duhalde) நியாயமான வாக்கெடுப்பை நடத்தமாட்டார் என்று மெனெம் அறிவித்துள்ளார். ``திருவாளர். கிர்ச்னெருக்குக் கூறுவேன், அவர் அவருடைய 22 சதவிகிதத்தை வைத்துக் கொள்ள முடியும், நான் மக்களை வைத்திருக்கிறேன்`` என்று உணர்ச்சி ததும்பக் கூறினார். உண்மையில் மிகவும் வெறுக்கப்பட்ட மனிதராகத் திகழ்ந்த மெனெம் தேர்தலில் இருந்து நகர்ந்துவிட்ட காரணம், ஒவ்வொரு கருத்துக் கணிப்பின்படியும், அவருடைய வாழ்க்கையிலேயே மோசமான தேர்தல் இழப்பைச் சந்தித்திருக்கக்கூடும், 70-30 என்ற அளவில் - மக்கள் அந்த அளவுதான் ஆதரவு கொடுத்திருப்பர். இதன் விளைவாக, பொருளாதார நெருக்கடியால் அழிவுக்குள்ளான நாட்டில், மிக வினோத மற்றும் உறுதியற்ற சூழ்நிலையில், 22 சதவிகிதமே மக்கள் வாக்கைப் பெற்று கிர்ச்னர் ஜனாதிபதியாகப் பொறுப்பு ஏற்கிறார்.

தேர்தலுக்கு முந்தைய ஆண்டில், ஆர்ஜென்டினாவின் இடதுசாரிக் கட்சிகள் அதிகாரத்தைக் கொள்வதற்காகப் பல மோசடி கூட்டணி முயற்சிகளில் எண்ணிக்கைக்காக ஈடுபட்டனர். ஜமோரா ARIயின் கரியோ, CTA யூனியன் தலைவர் விக்டர்டி ஜென்னரோ (Confederation of Argentine Workers) ஆகியோருடன் பல அரங்குகளில் பங்குகொண்டார், "அவர்களையெல்லாம் விரட்டுங்கள்" என்ற கோஷத்துடன், இதுதான் 2001ல் அரசாங்க எதிர்ப்புக் கிளர்ச்சிகளுக்கு மக்களிடையே பிரசித்திபெற்ற சுலோகமாக இருந்தது. முடிவில் கரியோ ஒரு வேட்பாளரானார், ஜமோரா ஒரு வேட்பாளர் ஆகவில்லை.

ஜமோராவின் அதிக விளம்பரம் பெற்ற புகழுக்குக் காரணம் ஆர்ஜென்டினாவின் பாராளுமன்ற உறுப்பினர்களுள் அவர் ஒருவர்தான் டிசம்பர் 2001 கிளர்ச்சிகளின்போது காறி உமிழப்படுதலோ, தாக்கப்படுதலோ இல்லாமல் சென்றுவர முடிந்தது. பழைய `ட்ரொட்ஸ்கிசவாதி` என்ற புகழின் அடிப்படையிலும், பெரோனிய, மற்ற முதலாளித்துவக் கட்சிகளை எதிர்ப்பவர் என்ற முறையிலும் இன்றளவும் கணிசமான ஆதரவை மக்களிடையே கொண்டுள்ளார்.

ஆயினும், அவருடைய செல்வாக்கு ஆராயப்பட வேண்டியது. ஜமோரா (Movimiento al Socialismoவிஷீஸ்மீனீமீஸீt ஜிஷீஷ்ணீக்ஷீபீ ஷிஷீநீவீணீறீவீsனீ) MASன் பழைய தலைவராவார். இந்த அமைப்பு நாகுவெல் மொரேனோவால் (Nahuel Moreno) (1924-1987) ட்ரொட்ஸ்கிசத்தைக் கடைப்பிடிப்பதாக நிறுவப்பட்டு, தான் இறக்கும் வரையில் அவரால் வழிநடத்தப்பட்டது. மொரேனோ தன்னுடைய தேசிய சந்தர்ப்பவாதத்தால் இகழ்வுற்றவர்; குறிப்பாக பெரோனிசத்தின் பல கருத்துக்களை சற்று மாற்றி தம் கட்சிக்கொள்கைகளைச் செய்தவர். "புரட்சிகர தொழிலாளரின் பெரோனியம்" என்ற பெயரில் இவருடைய அமைப்பு பெயர் பெற்றிருந்தது. ஒரு சமயம், 1960ன் ஆரம்பத்தில் பழைய சர்வாதிகாரி ஜெனரல் ஜிவான்பெரான், கியூபா ஜனாதிபதி பிடெல் காஸ்ட்ரோ ஆகியோரின் நிழற்படங்களை அதன் பத்திரிக்கையின் முகப்பில் கொண்டிருந்தது.

1982ல் தோற்றுவிக்கப்பட்ட MAS, உலகில் "மிக அதிகமான உறுப்பினர்களை உடைய ட்ரொட்ஸ்கிசக் கட்சி" என கூறிக்கொண்டிருந்தது, 1980களின் பிந்தைய ஆண்டுகளில் சிதறிப்போய் தற்போதைய MST, (Movimiento Socialista de los Trabajadoresஷிஷீநீவீணீறீவீst கீஷீக்ஷீளீமீக்ஷீs விஷீஸ்மீனீமீஸீt), றிஜிஷி (Partido de Trabajadores por el Socialismoகீஷீக்ஷீளீமீக்ஷீs றிணீக்ஷீtஹ் யீஷீக்ஷீ ஷிஷீநீவீணீறீவீsனீ) எஞ்சிய MAS ஆகியவை உட்பட, பல துண்டுகளாக ஆயிற்று.

1980ன் கடைசி ஆண்டுகளில் பிரிட்டிஷ் தொழிலாளர் புரட்சிக் கட்சி, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவிடமிருந்து 1986ம் ஆண்டு பிரிந்து, மொரேனோ குழுவுடன் ஓர் இணைந்த அமைப்பை உருவாக்க முற்பட்டது. முடிவில் இந்தக் கொள்கையற்ற முயற்சி ஒன்றுக்கும் உதவாமல் போயிற்று, கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஆட்சிகள் கவிழ்ந்ததையடுத்தும் சோவியத் யூனியனின் முடிவை அடுத்தும் தொழிற்கட்சி, ஸ்ராலினிச அதிகாரத்துவங்கள் இவற்றின்பாலான இக்கட்சிகளின் நோக்குநிலை, உருப்படாதது என நிரூபித்ததும் பகுதி அளவில் காரணமாகும். MAS பிரிந்து மட்டுமே சென்ற அளவில், கிளிப் சுலோட்டர் தலைமையிலான தொழிலாளர் புரட்சிக் கட்சி தொடர்ந்து தன்னையே கலைத்துக்கொண்டுவிட்டது.

மத்திய ப்யூனோஸ் ஏர்ஸில் பாராளுமன்றக் கட்டடத்திற்கு எதிரில் உள்ள தெருவில் அவருடைய அலுவலகத்தில், ஜனாதிபதித் தேர்தலுக்கு முதல் சுற்றுவாக்குக்கு முன்னர் நாம் லூயி ஜமோராவைச் சந்தித்துப் பேசினோம். 1948ல் பிறந்த ஜமோரா ஒரு முன்னாள் வழக்கறிஞர்; அவரை வெளிப்படையான, உண்மை நிறைந்த மனிதராகக் காண்கிறோம். ஆனால் அரசியல் நிகழ்ச்சிகள் பற்றிய ஆழ்ந்த விளக்கத்தையும் அவருடைய பரிணாம வளர்ச்சியைப் பற்றியும் அவரிடமிருந்து கேட்டறிதல் மிகக் கடினமாக இருந்தது. கடந்த சில ஆண்டுகளில் ஆர்ஜென்டினா கடும் அதிர்ச்சிகளைச் சந்தித்துள்ளது; ஜமோராவின் அரசியல் தொடுவரை கொடுபாதையின் வழி எதிர்பாராத மாற்றங்களைக் கண்டுள்ளது. இவற்றைப் பற்றிய அவருடைய கருத்துக்கள் சுருக்கமாகவும் பெயரளவிற்கும் மட்டுமே இருந்தது. ஆனால் தான் ஒரு காலத்தில் பின்பற்றிய மார்க்சிச கருத்துருக்களை கைவிட்டதைப் பற்றிப் பேசும்பொழுது அவர் மிகுந்த ஆர்வம் கொண்டார்.

ஜனாதிபதித் தேர்தலைப் பற்றி அவருடைய கருத்தை முதலில் கேட்டோம். அவர் (ஜமோரா): "முதலில், நான் அவற்றை மோசடித் தேர்தல்கள் என்று கூறுவேன்; ஏனெனில் அவை ஜனாதிபதிப் பதவிக்காக மட்டும் நடத்தப்படுபவை; அவை நிறுவன அமைப்பு முறையில் வரக்கூடிய மாறுதல்களைத் தவிர்ப்பதற்காக நடத்தப்படுபவை. ஆனால் அது குறைந்த முக்கியத்துவம் உடையதே ஆகும். தேர்தல் முறை எதை உண்மையில் வெளிப்படுத்துகிறது என்றால், பொதுமக்களுக்கும் அரசியல் தலைமைக்கும் இடையேயுள்ள இடைவெளியை அது புலப்படுத்துகிறது. அது ஒரு மிகப்பெரிய இடைவெளி; ஆனால் இன்னமும் முழுமை அடையவில்லை. அதனால்தான் மக்கள் இன்னமும் வாக்களிப்பதற்கு திட்டமிட்டு வருகிறார்கள் எனக் குறிப்பிட்டார்.

இந்த `மோசடித்தன்மை` யினால்தான் நீங்கள் வேட்பாளராகக் குறுக்கிட விரும்பாத முடிவை எடுத்துள்ளீர்களா?

ஆம், அது எங்கள் இயக்கத்தின் முடிவு. நாங்கள் ஒரு வேட்பாளரை நியமிக்க விரும்பவில்லை, ஆனால் எப்படியும் தேர்தலை நிராகரிக்க வேண்டும் என பிரச்சாரம் செய்வதற்காக நிகழ்ச்சிப்போக்கில் பங்குகொண்டோம். அதாவது, மக்கள் தமது உணர்வுகளை, "அவர்களையெல்லாம் விரட்டுங்கள்" "இவர்கள் அனைவரும் ஒரே கருத்துக்காரர்கள்தாம்" என்பதற்கு வாக்கு அளித்து வெளிப்படுத்த முன்மொழிந்தோம்.

அவருடைய கட்சித் திட்டத்தைப் பற்றியும் எவ்வாறு நெருக்கடியிலிருந்து மீள அது முயலும் என்றும் கேட்டதற்கு, ஜமோரா தன்னுடைய அமைப்பின் நோக்கத்தை விளக்கினார்: "சுய-அமைப்பு (மக்களுடையவை) ஏற்படுத்தும் நிகழ்ச்சிப்போக்குகளுக்கு கருத்துக்கள் வழங்குவதன் மூலம்" - எனினும் இந்தத் திட்டத்தை அவர் முழுவதுமாக விவரிக்கவில்லை. அவர் மேலும்: "எங்களிடையே உள்ள எண்ணம் என்னவென்றால், முதலாளித்துவ முறையின் காட்டுமிராண்டித்தனத்தைச் சந்திக்கவேண்டுமென்றால், எங்களுடைய அமெரிக்கருக்கு மற்றும் அனைத்து நிதி நிறுவனங்களிடமும் அடிபணிந்து நிற்கும் உறவு மாறவேண்டுமென்றால், இந்தப் போராட்டத்தை மக்கள்தாம் தங்கள் கைகளில் இந்த போராட்டத்தைத்தாமே எடுத்துக்கொண்டு நிறைவேற்ற முடியும், அர்ஜென்டினாவிலும் மற்றும் உலகம் முழுவதிலும்" என கூறினார்.

இதை ஒருவரும் மறுப்பதற்கில்லை என்றாலும், ஜமோரா விளக்குகையில் அவருடைய அமைப்பு மக்களிடத்தில் குறிப்பிட்ட கொள்கைகளையோ, திட்டத்தையோ வைத்து அவர்கள் அதை நம்பும் முயற்சியில் தன் பணியைச் செய்யாது என்றார். "நாம் இலத்தீன் அமெரிக்க ஒற்றுமை, அல்லது பூகோளமயமாதலுக்கு எதிரான இயக்கம் ஒன்றுபடவேண்டும் என்று எப்படிக் கூறினாலும், அது நிச்சயமாக மக்களை நம்பித்தான் இருக்கும். பிரச்சினைகளுக்கு முடிவுகாண மாற்றங்களை முன்னின்று செயல்படுத்தக்கூடிய ஒரு கட்சியமைப்பு தேவை" என்ற எங்களுடைய பழைய கருத்துக்களுக்கான எதிர்ப்பில்: அதையொட்டிய அடிப்படையில் நாங்கள் நகருகிறோம் என்றார்.

இது வெளிப்படையான வேறு ஒரு கேள்வியைத் தூண்டியது: "தலைமை மற்றும் முன்னணிப்படை தொடர்பான சோசலிச இயக்கத்தின் வரலாற்றைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?"

எல்லாவற்றிற்கும் மேலாக, நிலவும் முழு உணர்விற்கெதிராக சோசலிஸ்டுகள் போராடுவது என்பது அனுமதிக்கப்பட முடியாதது "சுய ஒழுங்கமைத்தல்" என்பது மக்கள் பணியைச் செய்யப் போதுமானது என்று ஜமோரா முடித்தார். அவர் விளக்கினார், ``150 ஆண்டு சோசலிச இயக்கத்தின் படிப்பினைகளுள் ஒன்று, எப்போதும், ஏதேனும் ஒரு விதத்தில், அரசு அதிகாரத்தைக் கைப்பற்றி, சோசலிசத்தை மேலிருந்து கீழாகக் கட்டுவதில் மக்கள் முயற்சித்து இருக்கின்றனர், முதலாளித்தவத்திற்கு ஒரு மாற்றீடு பற்றி சிந்திக்கும் வேறு வழி இல்லாதபடியால், அதனை கீழிருந்து மேல் நோக்கி கட்டுவதுதான் சவால் என்று நான் நம்புகிறேன்.``

சோசலிச தொழிலாளர் இயக்கம் சோசலிசம் "மேலிருந்து கீழ்மட்டத்திற்குக்" கட்டப்படவேண்டும் என்று ஒருபோதும் கருத்துக் கொண்டதில்லை. ஜமோராவின் மனதில் சோசலிசத்திற்கு மாற்றாகப் பல்வேறு பதிலீடுகள் இருந்தால், எவற்றோடு அவர் தொடர்பு கொண்டோ அல்லது நெருங்கியோ இருந்தாரோ, ஆர்ஜென்டினாவின் மொரேனோய்ட் இச போக்கு, ஸ்ராலினிசம், காஸ்ட்ரோயிசம் போன்றவை, பின் அவருடைய இப்படிப்பட்ட விளக்கத் தன்மை சரியானதே. ஆனால் அவை துல்லியமாக, உண்மையான சோசலிச இயக்கத்திற்கு குட்டி முதலாளித்துவ பதிலீடுகளாக இருந்திருக்கின்றன, தொழிலாள வர்க்கத்தை தம் சொந்த குறுகிய நலன்களுக்கு கீழ்ப்படுத்திக்கொள்ளும் அவர்களின் தேவை காரணமாக அவை உள்ளார்ந்த ரீதியில் ஜனநாயகமற்ற மற்றும் படிமுறை ரீதியானதாக இருக்கின்றன.

இந்தக் குறிப்பைத் தெளிவாக்குவதற்காக நேரடியாகக் கேட்போம்: "தன்னியல்பாக வெளிப்படும் (நிலவும்) நனவு சமூகப் புரட்சியை அமைக்கப் போதுமானதா?"

ஜமோரா பதிலில்: "நாம் ஓர் அரசியல் நிறுவனத்தை உருவாக்குகிறோம். இது ஒரு கண்டறியும் பாதை. சபாடிஸ்டாக்கள் கூறுவது போல "கேள்வி கேட்டுத்தான் முன்னேற முடியும்". நமக்கு விடைகள் தெரியவில்லை; ஆனாலும் கூட்டாக முடிவு வெளிப்பட்டுவிடும் என்று பந்தயம் கட்டக்கூடத் தயார். மக்கள் தாம் அமைப்பின் வடிவத்தை வழங்கியாக வேண்டும், ஆசிரியர் அல்ல. நாம் என்ன செய்கிறோம் என்றால் இந்த இயக்கங்களுக்கு ஓர் உந்துதல் கொடுக்கிறோம், அதைப் பாதுகாக்கிறோம்; உதாரணமாக ஆர்ஜென்டினாவில் உள்ள மன்ற முறை (neighbourhood committee). ஓர் அரசியல் இயக்கத்தை வளர்ப்பது ஒரு மேலதிக நடவடிக்கைதான். அடிப்படைச் செயல், "சுய ஒழுங்கமைத்தல்" நிகழ்ச்சிப்போக்கை வளர்ப்பதுதான்" எனக் கூறினார்.

பின் எதற்கு, ஒரு கட்சி நமக்குத் தேவைப்படுகிறது? என நாங்கள் கேட்டோம். அதற்கு விளக்கம் அளிக்கையில் அவருடைய அமைப்பு உண்மையில் ஒரு கட்சியே அல்ல என்று கூறினார். "நாங்கள் எங்கள் அமைப்பை ஓர் இயக்கம் என்றுதான் கூறுகிறோமே அன்றி கட்சி என்றல்ல. ஐந்து அடிப்படைக் கருத்துக்கள் எங்களை ஒன்று சேர்த்துள்ளன: முதலாளித்துவ எதிர்ப்பு, ஏகாதிபத்திய எதிர்ப்பு, சர்வதேசியம், சுயநிர்ணயம், படர்ந்து வளரும் நிலை (horizontalism). எங்களைப் பொறுத்தவரை இந்தக் கொள்கைகள் ஓர் அரசியல் இயக்கம் இருப்பதற்குப் போதுமானவை - அந்த இயக்கம் மக்களுக்கு அமைப்பு வழிவகைகளில் பங்களிப்புத் தரும். அதே நேரத்தில் எங்களுக்குத் தடையின்றித் திறந்த மனப்பான்மையைக் கொடுக்கும்; அனுபவத்திலிருந்தும் புதிய உண்மைகளிலிருந்தும் படிப்பினைகளைப் பெறவும் இது எங்களை அனுமதிக்கும், இந்த மன்ற அமைப்பு செய்ய இயலும், அது தோன்றக்கூடும் என்று கூட நாங்கள் நினைத்ததில்லை. எங்கள் இயக்கம் எப்பொழுதும் பங்களிப்பு செய்யும் மற்றும் பெறும்."

ஜமோரா, தன் இயக்கத்தில் ஹாம்லெட் கேட்டது போன்ற விவாதம் இப்பொழுது நடந்துகொண்டிருப்பதாகக் கூறினார்: "நாம் இயக்கமாகச் செயல்படுவதா, இயக்கத்தைக் கலைத்துவிடுவதா என்று. வழிவகை சிக்கல் வாய்ந்தது என்பதை நாங்கள் அறிவோம், ஏனென்றால் அரசியல் இயக்கக் கட்டுமானத்தை எந்த உறுதியான அடிப்படையில் நியாயப்படுத்துவது என்பது பற்றி எங்களுக்கு நிச்சயமில்லை, அதே நேரத்தில் நாங்கள் அனுபவங்களை [recoger] மக்கள் வாழும் முறையிலிருந்து திரட்ட விழைகின்றோம்."

மார்க்சிஸ்டுகள், தொழிலாள வர்க்கத்தில் தலையீடு செய்ய வேண்டிய தேவையை உணர்ந்தனர், ஏனெனில் சோசலிச நனவு தானாகவே அன்றாடப் பொருளாதார வாழ்விலிருந்து தோன்றுவதில்லை என்ற ஆரம்பக் கருத்தை சுட்டிக் காட்டினோம். இந்தக் கண்ணோட்டத்துடன் அவர் உடன்பாடில்லாமல் உள்ளாரா?

``இது லெனினிலிருந்து வந்த கருத்து`` என்று ஜமோரா பதிலளித்தார்: ``அவர்தான் வெளியிலிருந்து நனவு வரவேண்டும் என்றார், ஏனெனில் அது தானே வெளிப்படுவதில்லை என்பதால். எனக்கு அக்கருத்தின் தன்மையைப் பற்றி சில ஐயப்பாடுகள் உண்டு. உணர்வு வெளியிலிருந்துதான் வர முடியும் என்பதை நான் எண்ணுவது கடினம். அது ஓர் எண்ணமாக இரு சம தகுதியுடையோரிடையே கருத்துப் பறிமாற்றமாகவும் இருக்கக்கூடும் என்றே நான் நினைக்கிறேன்.``

இந்தக் கோட்பாடு லெனினால் தொடக்கப்படவில்லை; ஆனால் ஜேர்மன் - ஆஸ்திரிய சமூக ஜனநாயகத்தால் தொடக்கப்பட்டது. என்ன செய்ய வேண்டும்? (1902) என்ற நூலில் லெனின் 1901ம் ஆண்டு ஆஸ்திரிய சமூக ஜனநாயக கட்சியின் திட்டத்திலிருந்து கீழேவரும் பகுதியைக் குறிப்பிடுகிறார்: "தத்துவம் என்கிற வகையில் சோசலிசம் பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டம் போலவே தற்காலப் பொருளாதார உறவுமுறைகளில் வேர் கொண்டிருப்பதும், அந்த வர்க்கப் போராட்டத்தைப் போலவே அதுவும் முதலாளித்துவம் படைத்த வறுமையையும் மக்களின் துன்பதுயரங்களையும் எதிர்க்கும் போராட்டத்திலிருந்து வெளித்தோன்றுகிறதும் உண்மைதான். ஆனால், சோசலிசமும் வர்க்கப் போராட்டமும் அக்கம் பக்கமாக உதிக்கின்றன, ஒன்றிலிருந்து மற்றொன்று உதிக்கவில்லை; ஒவ்வொன்றும் வெவ்வேறு நிலைமைகளின்கீழ் உதிக்கிறது. நவீன சோசலிஸ்ட் உணர்வு, ஆழ்ந்த விஞ்ஞான அறிவின் அடிப்படையிலே மட்டுமே உதிக்க முடியும். உண்மையாகச் சொன்னால், நவீனகாலத் தொழில்நுட்பவியல் போலவே (எடுத்துக்காட்டாகச் சொல்கிறோம்) தற்காலப் பொருளாதார விஞ்ஞானமும் சோசலிஸ்ட் உற்பத்திக்கு நிபந்தனையாகும். எவ்வளவு விருப்பம் இருந்த போதிலும் சரி, தொழிலாள வர்க்கத்தால் இவற்றில் எதையும் படைக்க முடியாது. இரண்டும் தற்காலச் சமுதாய நிகழ்வுப் போக்கிலிருந்து உதிக்கின்றன."

மக்களின் "சுய ஒழுங்கமைத்தல்" தொடர்பான ஜமோராவின் பல குறிப்புக்கள் மையப் பிரச்சினையைத் தவிர்க்கின்றன: எந்த அரசியல் அல்லது வேலைத்திட்ட அடிப்படையில் சுய ஒழுங்கமைத்தல்? டிசம்பர் 2001 கிளர்ச்சி எழுச்சிகள் ஆர்ஜென்டினாவின் தொழிலாளர்கள் சுய ஒழுங்கமைப்புத் திறமைக்குப் பல எடுத்துக்காட்டுக்களைக் கொடுத்துள்ளது: பொது வேலை நிறுத்தம், சாலை மறியல், குதங்களையுடைத்தல் ஆர்ப்பாட்டங்கள், வங்கிகள் மீதான தாக்குதல்கள் என்று. ஆனால் இப்பெரிய எதிர்ப்பு இயக்கத்திலிருந்து என்ன தோன்றியது? முற்றிலும் அமெரிக்கா மற்றும் சர்வதேச நாணய நிதியத்திற்கு அடிபணிந்திருக்கும் வேறொரு பிற்போக்கு அரசாங்கம், நாட்டை அழிவுக்குக் கொண்டு சென்றமை, அரசியல் மேல்தட்டு மாற்றி அமைக்கப்பட்ட நிலை, வெறுப்பிற்கு ஆளான மெனெம் (Menem) பழையபடி தோன்றல் ஆகியவையாகும்.

ஆர்ஜென்டினிய தொழிலாள வர்க்கம், மிகுந்த அளவு இழப்புக்களையும் கடுமையான அரசியல் அனுபவங்களையும் பெற்றபோதிலும் ஒரு பெரிய மக்கள் இயக்கமாகத் தங்களை மாற்றிக்கொள்ள முடியவில்லை. ஏன் அவ்வாறு முடியவில்லை? ஏனெனில் அப்படிப்பட்ட இயக்கம், அன்றாடம், தொழிற்சங்கங்கள் உள்பட தேசிய அரசியல் குழுக்கள் மற்றும் அதன் நிறுவனங்களால் உருவாக்கப்பட்டு வலுப்படுத்தப்பட்ட பொய்யான் கருத்துருக்கள் மற்றும் பிரமைகள் அனைத்திற்கும் எதிராக விஞ்ஞான சோசலிச சர்வதேசியத்திற்கான ஒரு போராட்டத்திலிருந்து மட்டுமே தோன்ற முடியும்.

இந்தக் கருத்தை லெனின் ஒரு நூற்ாண்டுக்கு முன் விளக்கினார்: "தன்னியல்பு பற்றி நிறையப் பேசப்படுகிறது. ஆனால் பாட்டாளி வர்க்க இயக்கத்தின் தன்னியல்பான வளர்ச்சி அதை முதலாளித்துவச் சித்தாந்தத்துக்குக் கீழ்ப்படுத்துவதில் கொண்டுபோய் விடுகிறது,... தன்னியல்பான பாட்டாளி வர்க்க இயக்கம் என்பது தொழிற்சங்கவாதமே,... தொழிற்சங்க வாதத்துக்குப் பொருள் சித்தாந்தத் துறையில் தொழிலாளிகளை முதலாளி வர்க்கத்துக்கு அடிமைப்படுத்துவதே. எனவே நமது பணி, சமூக-ஜனநாயகவாதிகளின் பணி, தன்னியல்பை எதிர்த்து போராடுவதேயாகும், முதலாளி வர்க்கத்தின் அரவணைப்பின் கீழ்ச் செல்லும் இந்தத் தன்னியல்பான, தொழிற்சங்கவாத முயற்சியிலிருந்து பாட்டாளிவர்க்க இயக்கத்தைத் திசைமாற்றி, புரட்சிகரமான சமூக-ஜனநாயகவாதத்தின் அரவணைப்பின் கீழ் கொண்டுவருவதேயாகும்".

இந்த முன்மொழிவை, -எப்படிப் பழைய, "தன்னெழுச்சி" முயற்சிகள் தோல்வி அடைந்தன என்பதை விளக்காமல் ஜமோரா தள்ளிவிடுகிறார்.

ஆர்ஜெண்டினிய இடதுசாரி நிலைமையைப் பற்றி, ஜமோரா அதேபோன்ற முறையில்தான் கூறினார்: "இடதுசாரி தீவிரம் அளவுக்கு அதிகமான தீவிரத்தையும் பிடிவாத நிலையில் இருப்பதையும், அனுபவத்திலிருந்தோ சொந்தத் திறனாய்விலிருந்தோ எதையும் கற்கவேண்டும் என்ற எண்ணம் இல்லாமலிருப்பதையும் நான் பார்க்கிறேன். மரபில் வருபவற்றையே இடதுசாரிகள் அளவுக்கு அதிகமாய் திரும்பத்திரும்ப பேசிக்கொண்டு இருக்கின்றனர், இது எதைக் குறிக்கிறது என்றால் (உலகத்தின்) மக்களை வழிநடத்தவும் அதிகாரத்தைக் கையில் எடுக்கவும் ஒரு கட்சி அமைக்கப்பட்டாக வேண்டும்."

உலக மக்கள் எவ்வாறு அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் அச்சுறுத்தலை எதிர்கொள்வர் என்று நாம் எழுப்பிய வினாவிற்கும் அதேபோன்ற விடைதான் கிடைத்தது. ``சுய ஒழுங்கமைத்தலினால்தான்" ஏற்கனவே மக்கள் பேரணிகள் மற்றும் போராட்டங்களுடன் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து நிற்கின்றனர். ஆனால் இப்பொழுதைய கேள்வி எவ்வாறு வெற்றிகொள்வது என்பது ஆகும். ஒரே வழி, விரிவடைந்து கொண்டிருக்கும் ஒரு அமைப்பின் ஆதரவாளராக இருப்பதன் மூலம் சுய ஒழுங்கமைத்துக்கொள்வதாகும்.``

ட்ரொட்ஸ்கி மற்றும் ட்ரொட்ஸ்கிசத்தின் இன்றைய முக்கியத்துவம் பற்றி -அதேபோன்ற கருத்துக்கள்தான் இருக்கின்றன. மேலும் மேலும் ஜமோரா எங்களுக்குக் கூறினார்: ``எப்பொழுதும் நான் ட்ரொட்ஸ்கி மீது கொண்டிருந்த மதிப்பைத்தான் இப்பொழுதும் கொண்டிருக்கிறேன்.. வேறுபாடு என்னவென்றால், சில நிலைப்பாடுகளை - அடிப்படையில், ஒரு கட்சியைக் கட்டும் கருத்துரு மற்றும் அதிகாரத்தைக் கையில் எடுப்பதற்கான பாதை இவற்றை வேறு திறனாய்வுக் கோணங்களிலிருந்து மறு பரிசீலனை செய்கிறேன். ட்ரொட்ஸ்கியும், குறிப்பாக லெனினும் இன்று தங்கள் நிலையைப் பற்றி என்ன நினைத்துப்பார்த்திருப்பர் என்பது கவனத்திற்கு உரியது. முதலாளித்துவத்தைத் தோற்கடிக்கவேண்டும் என்று நினைத்த புரட்சியாளர்கள் அவர்கள்; தங்களை இறுக்கமான விதிகளுடன் கட்டிப்போட்டுக் கொள்ளாமல், அதை அடைய பலவித வழிவகைகளுக்கும் வெளிப்படையாக இருந்தார்கள்."

MASஐ அவர் எப்படி மதிப்பீடு செய்தார்? அவர் அனுபவத்தைப் பற்றி குறைவாகவே பேசுவதற்கிருந்தார், அது முக்கிய படிப்பினைகளை, ஆர்ஜெண்டினிய தொழிலாள வர்க்கத்திற்கு மட்டும் அல்ல, அனைவருக்கும் கொண்டிருந்தது.

"MAS அனுபவங்களிலிருந்து,`` ஜமோரா தொடர்கிறார், ``பல விஷயங்களை அதிக பெருமையுடன் ஏற்கிறேன்; நான் மீள ஆய்வு செய்யும் வேறு விஷயங்களும் இருக்கின்றன. அந்த அனுபவங்களினூடாக நான் சென்றிருக்கவில்லையானால், புதிய வழிவகைகளைப் பற்றிச் சிந்திக்கும் போக்கு என்னிடத்தில் தோன்றியிருக்காது. அடிப்படையில் இரண்டு அம்சங்களை முன்னால் கூறியபடி அடைந்தேன்: மையப்படுத்தப்பட்ட கட்சி என்ற கருத்துரு, அது எனது கருத்துப்படி தவறான வழி, மற்றும் தலைவர் ஆவது: அதாவது ஆசிரியர்போல் நிலைமையை அமைத்துக்கொள்ளுதல். அனைத்துக் கேள்விகளுக்கும் அனைத்து பதில்களும் அளிக்கப்படும் என்று ஒருவர் எண்ணிக் கொண்டால், அரசியல் கட்சி ஒரு சில ஆயிரம் உறுப்பினர்களைக் கொண்டிருந்தாலும் சமயப் பிரிவு போல் ஆகிவிடும்.``

ஏன் அக்கட்சி உடைந்தது? பெரோனிசத்துடன் சேர்த்து ஸ்ராலினிசம், கம்யூனிஸ்ட் கட்சிகளின் பால் MAS தன்னை நோக்குநிலைப்படுத்தி இருந்ததும், ஸ்ராலினிசம், கம்யூனிஸ்ட் கட்சிகளின் பொறிவானது கட்சியில் மிகப்பெரிய அழிவுத் தாக்கத்தை ஏற்படுத்தியது என்று இங்கு ஜமோரா நேர்மையுடன் ஒப்புக்கொண்டார்.

``அது ஒரு தலைப்பு, தொடர்ந்து விவாதத்தை உருவாக்கிக்கொண்டிருக்கிறது, ஆனால் என்னுடைய கருத்தில், எது உண்மையாகவே தாக்கி அடித்தது என்றால் 1989ன் பேர்லின் மதில் தகர்ப்புதான், அது உலகத்தின் இடதுசாரிகளையே அதிர வைத்தது. கடுமையான வளைந்து கொடுக்காத தன்மையுடைய கட்சிகள் விவாதங்களை அனுமதிக்கும் அளவு வளைந்துகொடுப்பதில்லை, ஏனெனில் அவற்றின் உண்மை உறுதித்தன்மை கடுமையாக உள்ள அளவிற்கு ஓர் அடி பெருத்ததாக வாங்கும் நொடியிலேயே பிளந்துபோய் உடைந்துவிடுகின்றன. அவை முதலாளித்துவ யதார்த்தத்தின் தொடர்ந்த அடிகளைத் தாங்கி நிற்கமுடியாது. எங்களுடையதைப் பொறுத்தவரை, உலகில் என்ன நடக்கிறது என்பதை அல்லது என்ன எமக்குத் தேவை என்பதை உள்மயப்படுத்த அல்லது விவாதிக்க முடியாதிருந்தோம். நாங்கள் மையப்படுத்தப்பட்ட அமைப்பாய் இருந்ததால் மற்றும் அத்தகைய கடுமையான கோட்பாடுகளைக் கடைப்பிடித்ததால், தலைமை உண்மையைச் சந்திக்கவும் முடியாமல், விடையிறுக்கவும் இயலாமல் இருந்தது."

இறுதியாக ஒரு கருத்து: ``நாங்கள் 1953ல் ஸ்தாபிக்கப்பட்ட, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஒரு பகுதியாக இருக்கின்றோம், மற்றும் தொழிலாளர் புரட்சிக் கட்சி [WRP] அதன் ஒரு பகுதியாக பிரிட்டனில் இருந்தது. 1980களின் பின்பகுதியில், MASம் பழைய WRPயின் ஒரு பகுதியும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டன. அந்நேரத்தில் இவர்கள் எங்களிடமிருந்து முறித்துக் கொண்டு விட்டனர். என்ன நிகழ்ந்தது என்பதை நாங்கள் அறிய முயற்சித்துக் கொண்டிருக்கிறோம்.``

ஒருமுறை தானறியாமலேயே ஜமோரா WRP தலைமையின் சந்தர்ப்பவாதத்தை கோடிட்டுக் காட்டிவிட்டார்: ``இங்கு கணிசமான செல்வாக்குடன் ட்ரொட்ஸ்கிச கட்சியை அமைக்க சாத்தியக்கூறுகள் இருந்தன என்று எண்ணி ஆர்ஜெண்டினாவில் தங்குவதற்காக பிரிட்டிஷ் குழு வந்திருந்தது. MAS உடைந்து சிதறியபொழுது, WRP உடனான ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டு அதன் உறுப்பினர்கள் தங்கள் நாட்டிற்குத் திரும்பிவிட்டனர். உடைவின் பொழுது MASன் தவைர்களுள் ஒருவராக அப்பொழுது நான் இருந்தேன், ஆனால் வேறு ஒரு பிரிவுக்குப் போய்விட்டபடியால் பிரிட்டிஷ் குழுவுடனான அனைத்துத் தொடர்புகளையும் இழந்தேன். தன்னை MST என்று அழைத்துக்கொள்ளும் குழுவில் சேர்ந்தேன், இப்பொழுது இது ஐக்கிய இடதில் உள்ளது.``

அரசியல் அமைப்பு உறுப்பினர் ஒருவர் ஜமோராவைப் பார்ப்பதற்கு காத்திருந்தார், நாங்கள் விடைபெற்றுக் கொண்டோம்.

 


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved