World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : பாகிஸ்தான்

Pakistani government moves to impeach President Musharraf

பாகிஸ்தான் அரசாங்கம் ஜனாதிபதி முஷாரப் மீது குற்றவிசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கிறது

By Vilani Peiris
14 August 2008

Back to screen version

நடந்து வரும் அரசியல் நெருக்கடிக்கு இடையில், இந்த வாரம் பாகிஸ்தானின் ஆளும் கூட்டணி, நாட்டின் முன்னாள் இராணுவ இரும்புமனிதரான ஜனாதிபதி பர்வீஜ் முஷாரப்பிற்கு எதிரான ஓர் உத்தியோகப்பூர்வ குற்றவிசாரணையைத் தொடங்கியது.

முஷாரப் அவரின் ஒன்பதாண்டு கால சர்வாதிகார ஆட்சி மற்றும் அமெரிக்காவின் போலித்தனமான "பயங்கரவாதத்திற்கெதிரான யுத்தத்திற்கு" ஆதரவு ஆகியவற்றிற்காக மக்களின் பரந்த அடுக்குகளால் தீவிரமாக வெறுக்கப்படுகிறார். இவர் 1999 இல் பிரதம மந்திரி நவாஜ் ஷெரீப்பை பதவியில் இருந்து அகற்றி ஆட்சியை கைப்பற்றினார். அவர் மீதான போலி வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டு, பின்னர் அவர் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். வாஷிங்டனிடமிருந்து வந்த ஆழ்ந்த அழுத்தத்தின் கீழ், ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை 2001 இல் நிறுத்திய முஷாரப், அந்த நாட்டில் அமெரிக்கா தலைமையிலான ஆக்கிரமிப்புக்கு ஆதரவளித்தார்.

ஜனாதிபதியாக அவருக்கு இரண்டாவது முறை வாய்ப்பளித்த ஒரு வெட்ககேடான தேர்தலைத் தொடர்ந்து, கடந்த நவம்பரில் கடுமையான அவசரகால ஆட்சியை அமுலாக்கிய முஷாரப், அவரின் நடவடிக்கைகள் அரசியலமைப்புக்கு புறம்பானது என்று அறிவிக்க இருப்பதாக அச்சுறுத்திய மூத்த நீதிபதிகளை பதவியில் இருந்து இறக்கினார். எவ்வாறிருப்பினும், எதிர்ப்புகளை ஒடுக்க தவறிய அவர், இறுதியில் பெப்ரவரியில் தேசிய தேர்தல்களை நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார் என்பதுடன் இதில் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் - குவைத் (PMLQ) கட்சி ஓர் அவமானகரமான தோல்வியை தழுவியது. ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் உட்பட பாகிஸ்தான் மக்கள் கட்சி (PPP) தலைமையிலான ஒரு கூட்டணி அதிகாரத்தை கைப்பற்றியது.

"ஜனநாயகத்திற்கான மாற்றத்தின்" அடுத்த கட்டமாக அந்த அரசாங்கம் முஷாரப்பின் குற்றவிசாரணையை முன்வைக்க விரும்புகிறது. எவ்வாறிருப்பினும், பலவீனமான ஆளும் கூட்டணிக்குள் இருக்கும் பிளவுகளை குறைக்கவும், அத்துடன் படுமோசமான வாழ்க்கை தரங்கள், பொருளாதார கொந்தளிப்பு மற்றும் ஆப்கானிஸ்தானிலுள்ள அமெரிக்காவின் ஆக்கிரமிப்புக்கு அரசாங்கத்தின் தொடரும் ஆதரவு ஆகியவற்றின் மீது வலுவாக வளர்ந்து வரும் அரசாங்க எதிர்ப்பு உணர்வுகளை குறைப்பதற்கு இந்த நடவடிக்கை ஒரு பலனற்ற முயற்சியாக உள்ளது.

ஆகஸ்ட் 7ம் தேதி, முஷாரப் மீதான திட்டமிட்ட குற்றவிசாரணை குறித்து ஒரு பத்திரிகையாளர் கூட்டத்தில் பேசிய பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவர் ஆசிப் அலி ஜர்தாரி, அது பாகிஸ்தானில் "ஜனநாயகத்திற்கான ஒரு நல்ல செய்தி" என்று குறிப்பிட்டார். நாட்டின் "ஆபத்தான பெருளாதார தேக்கத்திற்கும்" மற்றும் "கூட்டாட்சியை வலுவிழக்க செய்ததற்கும்" முஷாரப் ஆட்சியை அவர் குற்றஞ்சாட்டினார். ஆப்கானிஸ்தானிய எல்லையருகில் உள்ள பழங்குடி பகுதிகளின் பாரிய பிரிவுகள், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க எதிர்ப்பு போராட்டத்தில் நேரடியாக ஈடுபட்டுள்ள அல்லது அவற்றிற்கு ஆதரவளிக்கும் ஆயுதமேந்திய போராளிகளின் பிடிப்பில் உள்ளன.

ஜர்தாரியுடன் இணைந்த முறையில், பா.மு லீக் கட்சி தலைவர் ஷெரீப், "தளபதி முஷாரப்பிற்கு எதிராக கூட்டணி தலைமை ஒரு குற்றப்பத்திரிக்கை அளிக்கும்" என்று அறிவித்தார். முஷரப்பிற்கு எதிரான குற்றப்பத்திரிக்கையில், அரசியலமைப்பு மீறல், பொருளாதாரம் தவறாக நிர்வகிக்கப்பட்டது, ஊழல் மற்றும் கொலை குற்றங்கள் இதில் உள்ளடக்கப்படும் என்று அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. குற்றப்பத்திரிக்கை "மிக பெரிய தொகுப்பாக" இருக்கும் என்று கடந்த ஞாயிறன்று, தகவல்துறை மந்திரி ஷெரி ரஹ்மான் தெரிவித்தார்.

முஷாரப்பிற்கு எதிரான நடவடிக்கை, இரு முக்கிய கூட்டணி கட்சிகளுக்கிடையே ஏற்பட்ட உராய்வின் சில மாதங்களுக்கு பின்னர் வெளிப்பட்டுள்ளது. முஷாரப்பின் மீது குற்றவிசாரணை நடத்தவும், கூட்டணி அரசாங்கம் உருவாக்கப்பட்ட போது, முஷாரப்பால் நீக்கப்பட்ட நீதிபதிகளை மீண்டும் நியமிக்கவும் தொடக்கத்தில் PPP ஒப்பு கொண்டது. ஆனால் முஷாரப்புடன் ஒத்துழைக்க வேண்டும் என்ற வாஷிங்டனின் அழுத்தத்தின் கீழ், ஜர்தாரி இந்த உறுதிமொழிகளை கடைபிடிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மறைந்த PPP தலைவர் பெனாசீர் புட்டோவுடன் அமெரிக்கா ஏற்பாடு செய்திருந்த உடன்படிக்கையின் ஒரு பகுதியாக, ஜர்தாரி மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை முஷாரப் அகற்றியிருந்தார்.

மே மாதம், ஜர்தாரியின் பின்வாங்குவதற்கு எதிரான போராட்டத்தில், அமைச்சரவையில் இருந்த றிவிலி உறுப்பினர்களை ஷெரீப் அகற்றி கொண்டதுடன், கூட்டணியில் இருந்து தாம் விலகிவிட கூடும் என்ற குறிப்பையும் அளித்தார். அதிகாரத்தில் சர்வாதிகார முறைகளை பயன்படுத்த தயங்காத, ஷெரீப்பின் அரசியல் ஆலோசகரான முன்னாள் இராணுவ சர்வாதிகாரி ஜியா உல் ஹக் ஒரு ஜனநாயகவாதி அல்லர். ஜனாதிபதியுடன் மட்டுமல்லாமல் றிறிறி உடனும் வளர்ந்து வரும் அதிருப்தியை ஆதாயமாக்கி, முஷாரப்பின் குற்றவிசாரணைக்கும் மற்றும் நீதிபதிகளின் மறுநியமனத்திற்கும் அவர் அழுத்தம் அளித்துள்ளார்.

றிறிறி தலைமையிலான அரசாங்கம், ஏராளமான பிரச்சினைகளையும் மற்றும் முஷாரப்புடன் ஒத்து போகும் அதன் முயற்சிகள் கடுமையான எதிர்விளைவுகளை கட்டவிழ்த்து விடும் என்ற அச்சறுத்தலையும் எதிர்கொண்டுள்ளது. சர்வதேச குடியரசு பயிலகத்தால் (International Republican Institute) நடத்தப்பட்ட சமீபத்திய கருத்துக்கணிப்பு ஒன்றில், முன்னொருபோதுமில்லாத வகையில் வாக்களித்தவர்களில் 85 சதவீதத்தினர் முஷாரப் இராஜினாமா செய்யவேண்டும் என்று விரும்புவதாக கண்டறிந்துள்ளது. பெப்ரவரி தேர்தலில் பாரிய கட்சியாக உருவெடுத்துள்ள றிறிறி இக்கான ஆதரவும் குறைந்து வருகிறது.

குற்றவிசாரணையை தொடங்க திங்களன்று பாராளுமன்றம் கூடியது, இருந்தும் அதில் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாமல் உள்ளது. நாட்டின் நான்கு மாகாணங்களில், பஞ்சாப், வடமேற்கு எல்லைப்புற மாகாணம் மற்றும் சிந்து ஆகிய மூன்று மாகாணங்கள் முஷாரப் இராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி கட்டுப்பாடற்ற நடவடிக்கைகளுக்கு இந்த வாரம் வெற்றிகரமாக வாக்களித்தது. மற்றொரு மாகாணமான பலுசிஸ்தானும் விரைவில் இதே நிலையை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டு தேசிய மக்களவையிலுள்ள 442 உறுப்பினர்களில் அரசாங்கம் 350 வாக்குகள் கொண்டுள்ளது மற்றும் குற்றவிசாரணை நடவடிக்கைகளுக்கு செனட்டில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்படும்.

எவ்வாறிருப்பினும், உத்தியோகப்பூர்வ குற்றச்சாட்டுக்களை தாமதிப்பதன் மூலம், குற்றவிசாரணை இல்லாமலேயே முஷாரப் இராஜினாமா செய்யவதற்கான ஒரு சூத்திரத்தை அரசாங்கம் கண்டறிய முயற்சிப்பதாக தெரிகிறது. இராணுவம் மற்றும் அமெரிக்காவுடனான மோதலை தவிர்க்க அதுபோன்றதொரு தந்திரம் திட்டமிடப்படுகிறது. முன்னாள் பாகிஸ்தானிய தளபதி தலத் மசூட் மிஸீபீமீஜீமீஸீபீமீஸீt பத்திரிக்கையிடம் திங்களன்று கூறியதாவது: "அவருக்கு [முஷாரப்பிற்கு] பாதுகாப்பான வெளியேற்றம் அளிக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன... அவருக்கு பாதுகாப்பான வெளியேற்ற பாதை அளிக்கப்பட வேண்டும் என்று இராணுவமும், அமெரிக்காவும் கோருகின்றன என்று நான் நினைக்கிறேன். குற்றவிசாரணை என்பது பயங்கரவாதத்தின் மீதான யுத்தத்திலிருந்து கவனத்தை திசைதிருப்பலை அர்த்தப்படுத்தும்."

அமெரிக்காவின் அழுத்தத்தின் கீழ், பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் கூட்டாட்சி நிர்வாகத்திலுள்ள பழங்குடி பகுதியில் இருக்கும் இஸ்லாமிய போராளிகளின் மீது ஓர் இராணுவ ஒடுக்குமுறையை கையாள்வதில் தற்போது பாகிஸ்தான் இராணுவம் ஈடுபட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் ஊடுறுவும் கொரில்லாக்களை பாகிஸ்தானிய இராணுவம் தடுக்காவிட்டால், வாஷிங்டன் பாகிஸ்தான் பகுதிக்குள் ஒருதலைப்பட்ச நடவடிக்கையில் இறங்கும் என்று மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த கட்டத்தில், முஷாரப் தான் பதவியில் இருந்து இறங்குவதாக இல்லை என்று கூறியுள்ளார். அவர் ஆட்சியின் போது, ஜனநாயகமுறையற்ற அரசியலமைப்பின் கீழ், பாராளுமன்றத்தை கலைக்கும் அதிகாரத்தை அவர் கொண்டுள்ளார். எவ்வாறிருப்பினும், முக்கிய கூட்டினர் அவரை விட்டு விலகி கொண்டிருக்கையில், அவரின் நிலைமை தொடர்ந்து பதவியில் இருக்க கூடியதாய் இல்லை. திங்களன்று, பஞ்சாப் சட்டமன்றத்தில் றிவிலினி இன் 30 பாராளுமன்ற உறுப்பினர்கள் முஷாரப்பிற்கு எதிரான தீர்மானத்தில் வாக்களித்தனர். செவ்வாயன்று, PPP இலிருந்து பிரிந்து சென்ற குழுவின் தலைவரும், முஷாரப்பின் முன்னாள் நெருங்கிய கூட்டாளியுமான அஃப்தாப் ஷேர்பா ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணைக்கு ஆதரவளித்தார்.

அமெரிக்க அரசுத்துறை செய்திதொடர்பாளர் Gonzalo Gallegos, கடந்த வாரம் பின்வருமாறு அறிவித்தார்: "பாகிஸ்தானுக்குள் இருக்கும் உள்நாட்டு அரசியல் நிலைமைகள், பாகிஸ்தான் மக்களால் முடிவெடுக்க வேண்டிய ஒரு பிரச்சனையாகும் என்று நாங்கள் உறுதியாக கூறியிருக்கிறோம்". இருந்தாலும், அமெரிக்காவின் நெருக்கமான நண்பரை அகற்றுவது குறித்து வாஷிங்டனிலும் கவலைகள் உள்ளன. "முஷாரப் ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கு இடையிலான ஓர் அதிகாரப் போராட்டம், அணுவாயுத நாடான பாகிஸ்தானை நீண்ட கொந்தளிப்பில் தள்ளக்கூடும்; அதன் பலவீனமான உள்நாட்டு அரசாங்கம், கூட்டாட்சி நிர்வாகத்திலுள்ள பழங்குடி பகுதிகளில் பதுங்கியுள்ள போராளிகளுக்கு எதிராக முன்னேறுவதை தடுக்கும்; மேலும், பாகிஸ்தான் வழியாக ஆப்கானிஸ்தானுக்கான முக்கிய அமெரிக்க வினியோக பாதைகளையும் கூட அது பாதிக்கும்" என்று அமெரிக்கர்கள் அஞ்சுவதாக திங்களன்று The Dawn பத்திரிகை குறிப்பிட்டிருந்தது.

திரைக்கு பின்னால், அமெரிக்க அதிகாரிகள் பாகிஸ்தானின் உள்நாட்டு அரசியலில் நெருக்கமாக ஈடுபட்டுள்ளனர். திங்களன்று மாலையில், இஸ்லாமாபாத்தில் உள்ள அமெரிக்க தூதர் Ann W. Patterson, முஷாரப்பை சந்தித்தார். ஒரு சவூதி அரேபிய பிரதிநிதிகள் குழு பேச்சுவார்த்தைகளுக்காக இஸ்லாமாபாத்திற்கு வரும் போதில், முன்னாள் பிரிட்டிஷ் உயர் ஆணையாளரும், தற்போதைய இங்கிலாந்து வெளியுறவுத்துறை அலுவலகத்தின் உயரதிகாரியுமான மார்க் கிராண்ட், றிறிறி மற்றும் றிவிலிழி தலைவர்களை சந்தித்ததாக The Nation பத்திரிக்கை குறிப்பிட்டது. அரசியல் நெருக்கடியை குறைப்பதற்கான ஓர் உடன்படிக்கையின் பகுதியாக முஷாரப்பை இராஜினாமா செய்வதற்கு அவரை சம்மதிக்க செய்ய பிரிட்டிஷ் தூதர் விரும்புவதாக The Nation குறிப்பிட்டது.

பாகிஸ்தானிய பொருளாதாரம் அல்லோகல்லோலமாக உள்ளது மற்றும் சமூக அமைதியின்மையும் வளர்ந்து வருகிறது. நாட்டின் வர்த்தக பற்றாக்குறை ஜூன் வரையிலான ஆண்டில் 52.9 சதவிகிதமாக உயர்ந்து 16 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டவுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலத்தில் 11 பில்லியன் டாலராக இருந்தது. சர்வதேச எண்ணெய் விலைகள் உயர்வு இதற்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது. ஜூலை 25இல் முடிந்த வாரத்தில், ஆண்டு பணவீக்க விகிதம் ஒருபொழுதும் இல்லாத அளவில் 32.2 சதவிகிதமாக உயர்ந்தது. பாகிஸ்தானிய நாணய மதிப்பு ஓர் அமெரிக்க டாலருக்கு 72 ரூபாயாக வீழ்ச்சி அடைந்துள்ளது. ஏப்ரலில் இருந்து கராச்சி பங்குசந்தை அதன் மதிப்பில் 35 சதவிகிதம் சரிந்துள்ளதால், அது ஆத்திரம்கொண்ட தெரு போராட்டங்களை தூண்டி வருகிறது. பாகிஸ்தானின் மொத்த வெளிநாட்டு கடன் மற்றும் சுமைகள் 46 பில்லியன் டாலருக்கும் மேலாக உயர்ந்துள்ளன.

சாதாரண உழைக்கும் மக்களுக்கு, வாழ்க்கை மேலும் மேலும் கடினமாகி வருகிறது. எரிபொருள், போக்குவரத்து மற்றும் உணவு பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. மின்சாரவெட்டுகள் வாடிக்கையாகிவிட்டன. வேலையின்மை அதிகரித்து வருகிறது. முஷாரப் மீதான குற்றவிசாரணை தற்காலிகமாக ஒரு திசை திருப்பும் விடயமாக இருந்த போதினும், பாகிஸ்தான் மக்கள் கட்சியோ அல்லது பாகிஸ்தான் முஸ்லீம் லீக்கோ நாட்டின் கட்டுக்கடங்காத பொருளாதார மற்றும் சமூக பிரச்சனைகளுக்கு எந்த தீர்வும் கொண்டிருக்கவில்லை. அதே நேரத்தில், ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு மற்றும் கூட்டாட்சி நிர்வாகத்திலுள்ள பழங்குடி பகுதிகளில் பாகிஸ்தான் இராணுவத்தின் நடவடிக்கைகள் மீது அரசாங்கத்தின் ஆதரவிற்கு பரந்த எதிர்ப்புகளை அது எதிர்கொண்டு வருகிறது. இவை அனைத்தும் ஒரு புதிய அரசியல் வெடிப்பிற்கான தளத்தை தயார் செய்து வருகின்றன.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved