World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பிய ஒன்றியம்

European powers discuss possible bankruptcy of Greece

ஐரோப்பிய சக்திகள் கிரேக்கம்  திவாலாகும் சாத்தியக்கூறு பற்றி விவாதிக்கின்றன

By Christoph Dreier 
24 September 2011

Back to screen version

சர்வதேச நாணய நிதியம் (IMF), ஐரோப்பிய மத்திய வங்கி (ECB)  மற்றும் ஐரோப்பிய  ஆணைக்குழு (EC) என்னும்முக்கூட்டின்புதிய சுற்று சமூகநலச் செலவுக் குறைப்புக்களை சுமத்துவது என்னும் ஆணைகளுக்கு கிரேக்க அரசாங்கம் அடிபணிந்து நின்றதைத் தொடர்ந்து, இந்த சிக்கன நடவடிக்கைகளோ அல்லது சமீபத்தியமீட்புப் பொதியின்ஒரு தவணையோ நாட்டை இறுகப் பிடித்துக் கொண்டிருக்கும் நெருக்கடியைத் தீர்க்க முடியாது என்று தெளிவாயிற்று. மாறாக மந்தநிலை மோசமாகிக் கொண்டிருப்பதுடன் முக்கிய ஐரோப்பிய சக்திகள் இப்பொழுது கிரேக்கம் திவாலாகிவிடும் வாய்ப்பைப் பற்றி உரக்கச் சிந்திக்கின்றன.

ஐரோப்பிய மத்திய வங்கியின் முக்கிய உறுப்பினர் ஒருவர் கிரேக்கம் முறையாகத் திவால் அடைவது சாத்தியமே என்று கூறினார். “இது நடக்கக்கூடியவற்றுள் ஒன்றாகும்டச் மத்திய வங்கித் தலைவர் கிளாஸ் க்நோட் Het Financieek Dagblad என்னும் செய்தித்தாளுக்குக் கொடுத்த பேட்டி ஒன்றில் கூறினார்: “ஆனால் ஏதென்ஸில் இருந்து வரும் செய்தி ஊக்கம் அளிப்பதாக இல்லை.” க்நோட் மேலும் கூறினார்: “இதைத்தவிர்க்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன; ஆனால் சில மாதங்களுக்கு முன் கொண்டிருந்த என் நினைப்பிற்கு மாறாக இப்பொழுது திவாலை ஒதுக்கிவிட முடியாது என்றுதான் நான் கருதுகிறேன்.”

கடன்தரம் நிர்ணயிக்கும் நிறுவனமான மூடீஸும் எட்டு கிரேக்க வங்கிகளின் கடன்தரத் தன்மையை 2 புள்ளிகளை குறைக்கும் வகையில் இவ்வாறே பிரதிபலித்துள்ளது. கிரேக்கத்தின் நிதி மந்திரி எவாஞ்சலோஸ் வெனிஜிலோஸ் நிதிய அதிகாரிகள் 100,000 யூரோக்களுக்கும் அதிகமான சர்வதேச பணமாற்றத்தை பரிசீலிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். வங்கிகள் தவிர்க்க முடியாமல் திவாலாகிப் போவது மிகப் பெரிய அளவில் பணம் வெளியே செல்வதற்கு வழிவகுக்கும் என்று அரசாங்கம் அச்சம் அடைந்துள்ளது. இது வங்கிகளை மூடிஸ் குறைத்து மதிப்புக் கொடுத்திருப்பதற்கு ஏற்பத்தான் உள்ளது; வங்கிகளின் சரியும் சேமிப்புக்களை சுட்டிக்காட்டி அது குறைப்பை நியாயப்படுத்தியது.

Ta Nea, Ethnos என்னும் செய்தித்தாள் தகவல்படி, வெனிஜிலோஸ் பாராளுமன்ற பிரதிநிதிகளிடம் கிரேக்கம் முறையாகத் திவால் அடையும் நிலை உள்ளது என்பதைத் தான் ஒதுக்கிவிடமுடியாது என்று கூறினார். இதை சராசரி 50 சதவிகித முடிக்குறைப்புடன் அவர் ஒப்பிட்டார். இதன் பொருள் கடன் கொடுத்தவர்கள் தங்கள் உரிமைகளில் பாதியை இழக்க வேண்டும் என்பது ஆகும். கிரேக்க அரசாங்கப் பத்திரங்கள் ஏற்கனவே அவற்றின் பெயரளவு மதிப்பில் பாதிக்கும் குறைவாக விற்பனையாகின்றன. இன்னும் உதவிப் பொதிகள் வரவில்லை என்றால், நாடு ஒழுங்கற்ற முறையில் திவாலாகிவிடக்கூடும் என்றார் வெனிஜீலோஸ். ஒரு முக்கிய அரசாங்க மந்திரி திவால் பற்றிய வாய்ப்பை பேசியிருப்பது இதுவே முதல் தடவை ஆகும்.

முன்னாள் சர்வதேச நாணய நிதிய தலைமைப் பொருளாதார வல்லுனர் கென்னெத் ரோகோப்வியத்தகு அளவில் கடன்கள் திருப்பிக் கொடுக்கப்பட மாட்டாதுஎன்ற நிலை வந்துவிட்டது என்றார். “கடன் கொடுத்தவர்கள் பெயரளவுக் கடனில் ஒவ்வொரு யூரோவிற்கும் 30 முதல் 40 சென்டுகள்தான் பெறமுடியும், ஒருவேளை இன்னும் குறைவாகக் கூட இருக்கலாம். இது தவிர்க்கமுடியாதது.” என்று அவர் Frankfurter Allgemeine Zeitung பத்திரிகையிடம்  கூறினார்.

சந்தைகள் தளர்ச்சியுடன் இந்த கிரேக்க நாட்டு திவால் பெருகியுள்ள நிலையை எதிர்கொண்டன. Dax 5,000 புள்ளிகளைவிடக் குறைந்தது; பின்னர் இழப்பு 3 சதவிகிதத்தில் உறுதிப்பட்டது. Eurostoxx 1.9 சதவிகிதம் குறைந்து 1,960 புள்ளிகளில் இருந்தது.

கிரேக்கத் திவால் தன்மை பற்றிய விவாதத்திற்குப் பல காரணங்கள் உள்ளன. முதலில் அரசாங்கக் குறைப்புக்களோ ஐரோப்பிய பிணை எடுப்புக்களோ கிரேக்கப் பொருளாதாரத்தை உறுதிப்படுத்த இயலாது. இரு நடவடிக்கைகளும் நேரடியாக வங்கிகளுக்கு நிதி அளிப்பதைத்தான் முக்கிய நோக்கமாகக் கொண்டவை ஆகும்.

பொருளாதாரத்தை மீட்பதற்குப் பதிலாக கிரேக்க சமூக ஜனநாயக அரசாங்கம் ஆரம்பத்தில் எடுத்த சிக்கன நடவடிக்கைகள் அதை கிட்டத்தட்ட ஒரு தேக்கநிலைக்கு கொண்டுவந்துவிட்டன. பொதுத்துறை ஊழியர்களின் ஊதியங்களைக் கிட்டத்தட்ட 30% குறைத்தபின்னர், குறைந்தபட்ச ஊதியத்தை 600 யூரோக்கள் என்று குறைத்தபின்னர், வெப்பமேற்றும் எண்ணெய், மின்விசை ஆகியவற்றின் விலையை 50ல் இருந்து 100 சதம் வரை உயர்த்திய பின், கிரேக்கம் பொருளாதார உற்பத்தியில் 5.5% சரிவைக் கண்டது.

இந்த மந்த நிலை மற்றும் அதைத்தொடர்ந்த வரிமூலமான வருவாய்களின் சரிவும், அரசாங்கப் பத்திரங்களுக்கு உயர்ந்துவிட்ட வட்டி விகிதங்களும், சமீபத்திய பிணைஎடுப்புக்கள் இருந்தபோதிலும்கூட, கிரேக்கக் கடன் ஊதிக்கொண்டிருக்கிறது, அரசாங்கம் கடன்வாங்கியவர்களை திருப்தி செய்ய முடியாது என்ற பொருளைத் தந்துவிட்டது. மீண்டும் கிரேக்க தொழிலாளர்கள் விலை கொடுக்குமாறு கோரப்படுகிறார்கள்; அரசாங்கம் மற்றும் ஒரு 30,000க்கும் அதிகமான வேலைகளை நீக்க எண்ணுகிறது, எஞ்சியுள்ள ஊழியர்களின் ஊதியங்களையும் குறைக்க விரும்புகிறது.

சர்வதேச நாணய நிதியம், ஐரோப்பிய மத்திய வங்கி, ஐரோப்பிய  ஆணைக்குழு ஆகியவை கிரேக்கத்தின் முதல் மீட்புப் பொதியான 8 பில்லியன் யூரோக்களின் கடைசித் தவணை கொடுக்கப்படுவதற்கு நிபந்தனையாக இந்த வெட்டுக்களை நாடின. ஆனால் இப்பொதியில் இருந்து நலன்களைப் பெறுவோர் கிரேக்கத் தொழிலாளர்கள் அல்ல; பல மாதங்களாக தங்கள் ஊதியத்தை அவர்கள் பெறவில்லை. மாறாக தாங்கள் கொடுத்த கடன்களை இழந்துவிடுவோம் என அச்சப்படும் வங்கிகள்தான் நலன் பெறுகின்றன. பிணையெடுப்பு என்பது அவர்கள் தங்கள் மோசமான கிரேக்க அரசாங்கப் பத்திரங்களுக்குப் பதிலாகப் புதிய ஐரோப்பிய ஒன்றிய ரொக்கத்தைப் பெறலாம் என்ற பொருளைத் தருகிறது. தகவல்களின்படி, உதவிநிதியில் 97% கடன்களைத் திருப்பிக் கொடுக்கவும் ஐரோப்பிய நிதிய நன்களுக்கு வட்டி விகிதங்களைக் கொடுப்பதற்கும்தான் பயன்படுத்தப்படுகின்றது. இதற்கு மாறாக வெட்டுக்கள் கிரேக்கத்தை இன்னும் மந்த நிலையில்தான் தள்ளும். இதனால்  நெருக்கடியை அதிகரிக்கும்.

திவால்தன்மை பெருகியுள்ளதற்கு மற்றொரு காரணம் திவால்தன்மை என்பது ஒரு உண்மை, இரண்டாம் உதவிப்பொதி என்று ஜூலை 21 அன்று ஐரோப்பிய ஒன்றிய அரசாங்கங்கள் ஒப்புக் கொண்ட ஒரு நாட்டினால் கூட ஒப்புதல் அளிக்கப்படவில்லை. இது பெருகிய முறையில் ஜேர்மனிய உயரடுக்கின் எதிர்ப்பிற்கு உட்பட்டுள்ளது. வெனிஜீலோஸ் குறிப்பிடும் ஒழுங்கற்ற திவால் என்பது இப்பொது தேசியப் பாராளுமன்றங்களால் இசைவு கொடுக்கப்படாமல் இறுதியில் தோல்வி அடைவதைத்தான்.

ஜேர்மனியில் பிரச்சினை செப்டம்பர் 29ம் திகதி பாராளுமன்றத்தில் முடிவெடுக்கப்படும்; ஆனால் மேர்க்கெல் அரசாங்கம் போதுமான நேரடிப் பெரும்பான்மையைப் பெறுமா என்பது சந்தேகத்திற்கு உரியதுதான். சமீபத்திய வாரங்களில் அரசாங்க அதிகாரிகள் கிரேக்கத்திற்கு இன்னும் உதவி என்பது குறித்து அவநம்பிக்கையைத்தான் தெரிவித்துள்ளனர். செப்டம்பர் நடுவே, தாராளவாத ஜனநாயக கட்சியின் –FDP தலைவரும் ஜேர்மனியின் பொருளாதார மந்திரியுமான பிலிப் ரோஸ்லர் ஏற்கனவே தான் கிரேக்கம் முறையக திவால் அடைவது ஒன்றுதான் விரும்பத்தக்க வருப்பத்தேர்வு எனக் கருதுவதாகக் கூறினார். பொருளாதார மந்திரி என்னும் முறையில் அதற்குபொருத்தமான அமைப்புமுறையை தான் தயாரித்துவருவதாகவும் கூறினார். கிறிஸ்துவ சமூக ஒன்றியத்தின் தலைவர் ஹோஸ்ட் சீகோவர் ஒரு படி மேலே சென்று கிரேக்கம் யூரோப்பகுதியில் இருந்து விலக்கப்பட வேண்டும் என்று கோரினார்.

நிதி மந்திரி வொல்ப்காங் ஷௌய்பிள (CDU கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம்) ஏற்கனவே அவருடைய அமைச்சரகம் யூரோ நெருக்கடி பற்றி பல விருப்பத் தேர்வுகளைப் பரிசீலித்துள்ளதாகவும், அதில் B திட்டத்தின்படி கிரேக்கம் திவால் ஆவது இறுதியில் என்பதும் உள்ளது, ஜேர்மனிய வங்கிகள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளவற்றை எப்படி மீட்பது என்பது குறித்து உள்ளது என்று கூறியுள்ளார்.

வியாழன் அன்று வெளியிட்ட அறிக்கையில் தொல்துறையில் முன்னேறியுள்ள நாடுகளின் G20 உச்சிமாநாடு உலகெங்கிலும் உள்ள பீதியடைந்துள்ள பங்குச் சந்தைகளைச் சமாதானப்படுத்தும் வகையில் நாட்டுத் திவால் என்னும் ஆபத்திற்கு எதிராக வங்கிகளுக்குப் பிணை எடுப்பு பற்றிய தன் உறுதிமொழியை அளித்தது. அதில், “வங்கி முறை மற்றும் நிதியச் சந்தைகளின் உறுதிப்பாட்டைக் காப்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் எடுப்போம் என உறுதியளிக்கிறோம்என்று கூறப்பட்டுள்ளது.

கிரேக்கத் திவால் என்பது முதலீட்டாளர்களின் முதலீடுகள் இழப்பு என்ற பொருளை மட்டும் தராது; இது மற்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அனைத்தின்மீதும் பாரிய அழுத்தங்களைக் கொடுக்கும். அவற்றின் பத்திரங்கள் மீதான வட்டிவிகிதங்கள் பெரிதும் உயரும். இன்னும் கூடுதலான அரசாங்கத் திவால்கள் ஏற்படும். குறைந்தபட்சம், இது இந்நாடுகள் யூரோப்பகுதியில் இருக்க முடியுமா என்ற வினாவையும் எழுப்பிவிடும்.

வங்கி முறையின் உறுதிப்பாடுஎன்பது பில்லியன் கணக்கில் நிதிய நிறுவனங்களுக்குக் கொடுப்பதின்மூலம்தான் அடையப்பட முடியும். இது ஒவ்வொரு ஐரோப்பிய நாட்டிலும் ஏதென்ஸில் நடைபெறுவது போன்ற சமூகத் தாக்குதல்களைத்தான் தோற்றுவிக்கும். கிரேக்கத்திலேயே திவால் என்பது பெரும் தீமைகளை அளிக்கும் விளைவுகளைக் கொடுக்கும். எல்லா பொதுப்பணி ஒப்பந்தங்கள், சமூநலப் பணிகள் ஆகியவை ஒரே கணத்தில் செயலற்றுப் போய்விடும். ஊதியங்கள், ஓய்வூதியங்கள் அல்லது வேலையின்மை நலன்கள் ஆகியவற்றைப் பெறத் தகுதி உடையவர்களாக இருக்கும் பலரும் முற்றிலும் புதுப்பட்டியலிடப்பட்டு திவால் விதிகளின் கீழ் கொண்டுவரப்படுவர்.

திவால் முறையாக இருந்தாலும் ஒழுங்கற்றதாக நடைபெற்றாலும் சரி, அனைத்துச் சமூக வெற்றிகள் மற்றும் வேலைகள் ஆகியவை பெரும் இடருக்கு உட்பட்டுவிடும். ஏற்கனவே அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள சிக்கன நடவடிக்கைகள் ஒரு சமூகப் பேரழிவிற்கு வழிவகுத்துவிட்டன. கடைசிச் சில மாதங்களில் கிரேக்கத்தின் அனைத்து வணிக முயற்சிகளில் மூன்றில் ஒரு பகுதி மூடப்படும் கட்டாயத்திற்கு உட்பட்டன. மற்றொரு மூன்றில் ஒரு பகுதி தொழிலாளர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாத நிலையில் உள்ளது. அரசாங்கத் தொழிலாளர்களும், பகுதி அரசாங்க நிறுவங்களில் உள்ளவர்கள் பல நேரமும் தங்கள் ஊதியங்களுக்குப் பல மாதம் காத்திருக்க நேரிடுகிறது. உதாரணமாக Acropolis தொழிலாளர்கள் கடந்த 22 மாத காலமாக ஊதியங்களைப் பெறவில்லை.

ஏற்கனவே பள்ளிகளில் புத்தகங்கள் இல்லை. ஏனெனில் புத்தக வெளியீட்டாளர்கள் அரசாங்கத்தின் கடன்நிலைமையை ஒட்டி அவற்றைக் கொடுக்க மறுக்கின்றனர். பல்கலைக்கழக முறை கிட்டத்தட்ட சரிந்துவிட்டது. வேலையில்லாத இளைஞர்களின் விகிதம் கிட்டத்தட்ட 30% ஐ எட்டியுள்ள நிலையில், இது இளம் கிரேக்கர்கள் பெருமளவு நாட்டைவிட்டு நீங்குவதற்கு வழிசெய்கிறது.

கிரேக்கப் பொருளாதாரத்தின் திவால் என்பது இப்பொழுது முக்கிய ஐரோப்பிய அதிகாரிகளால் தீவிரமாகப் பரிசீலிக்கப்படுகிறது. அத்தகைய திவால் என்பதில், பில்லியன் கணக்கான நிதி சிக்கலுக்குள்ளான வங்கிகளுக்குக் கொடுக்கப்படும், ஐரோப்பிய நாடுகள் அனைத்திற்கும் வெட்டுக்கள் ஏற்படும், கிரேக்கத்தில் அப்பட்டமான வறியநிலை ஏற்படும், மற்றும் தேசிய அழுத்தங்கள் பெருகிவிடும்.

இத்தகைய திட்டம் ஜனநாயக முறையுடன் இயைந்து இராது. கிரேக்கத் திவாலின் அரசியல் தாக்கங்கள் பற்றியும் அதிகம் கூறப்படுகின்றன.

கிரேக்கம் கடன் திருப்பிக் கொடுக்கத் தவறினால் வரும் பல விளைவுகள் பற்றிய சுருக்கத்தில் BBC இரு மாற்றீடுகளைத் தெரிவிக்கிறது. முதலாவதின்படி கிரேக்கம் யூரோவில் இருக்கும், ஆனால் கீழ்க்கண்ட விளைவு ஏற்படும்: “அரசியல் கொந்தளிப்புகிரேக்கப் பொருளாதாரம் முழுச் சரிவை எதிர்கொள்ளும், வங்கிகள் மூடப்படும், அரசாங்கம் அடிப்படைப் பொதுப் பணிகளுக்குக்கூட பணம் கொடுக்க முடியாது. இது பாரிய சமூக அமைதியின்மையை ஏற்படுத்தும், அரசாங்கத்தின் சரிவையும் ஏற்படுத்தும். கிரேக்கம் ஏற்கனவே கலகங்கள் மற்றும் அரசாங்க அலுவலகங்கள் கைப்பற்றப்படுவதை  பார்த்துள்ளது. CIA ஒரு இராணுவச்சதி  நேரிடலாம் என்றுகூட எச்சரித்துள்ளது.”

இரண்டாம் மாற்றீடு BBC அறிக்கையின் முன்வைக்கப்பட்டது, கிரேக்கம் யூரோவை விட்டு இறுதியில் வெளியேறுவது பற்றியாகும். அதன் விளைவு: உலக நிதியக் கரைப்பு.

இந்த வாரத் தொடக்கத்தில் வணிக ஏடு Forbes கிரேக்கம் கடன் செலுத்தமுடியாத  நிலைக்குப் பின், உள்நாட்டுப் போர் ஏற்படுமா?” என்ற தலைப்பில் அதன் கட்டுரையை வெளியிட்டது. அக்கட்டுரை அதன் வாசகர்களுக்கு எச்சரிக்கை கொடுக்கிறது. “வங்கியாளர்களைத் தொடர்ந்து அரசியல்வாதிகள் மக்கள்கூட்டத்தின் சீற்றத்தை எதிர்கொள்ளும் நேரம் வந்துவிடும். திருடர்கள், திருடர்கள்!” என்ற சீற்றமடைந்துள்ள கலகக்காரர்களின் குரல் கொடுக்க விரும்புவர், போரிட ஆர்வம் கொள்ளுவர். பாராளுமன்றத்தின் பின் கதவுகளுக்குப் பின் நழுவிவிடுவது அடுத்த முறை அவ்வளவு எளிதாக இருக்காது. கூட்டத்தின்மீது சுட்டால், ஆயுதமேந்திய எழுச்சியை விரைவில் கொண்டுவந்துவிடும்.

கூட்டம் இரத்த ருசியைக் கண்டுவிட்டால் மற்றும் தியாகிகளுக்கு பழிதீர்க்கப்பட வேண்டும் என்ற உணர்வு பெற்றால், அடுத்த இலக்கு குறைந்தபட்சம் உரிய காலத்தில் தப்பி ஓடும் புத்திசாலித்தனம் அற்றவர்களான செல்வந்தர்களாகத்தான்”  இருக்கும்….”