World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The London Olympics and the social crisis

லண்டன் ஒலிம்பிக் விளையாட்டும் சமூக நெருக்கடியும்

Chris Marsden
4 August 2012

Back to screen version

உலகின் மிகச் சிறந்த ஆண், பெண் விளையாட்டு வீரர்களை ஒலிம்பிக்ஸ் விளையாட்டுக்கள் ஒருங்கிணைத்து வருகின்றன. பல நிகழ்ச்சிகளையும் கண்டுகளிப்பவர்கள் போட்டியாளர்களின் அபாரமான விளையாட்டுத் திறனையும் உடலியல்ரீதியான ஆற்றலையும் கண்டு வியக்காமல் இருக்க முடியாது. மனித ஆற்றலுக்கு அப்பால் உள்ளதுபோல் தோன்றும் அவர்களுடைய சாதனைகளின் குணாம்சம் மனிதகுலத்தின் மகத்தான திறமைகளின் யதார்த்தத்தின் முரண்பட்டதன்மைக்கு ஒரு நிரூபணம் ஆகும்.

ஆனால் முக்கிய விளையாட்டு நிகழ்ச்சிகள் உலகின் முக்கிய நிகழ்வுகளைவிட வேறெதையும்விட தவிர்க்க முடியாமல் பரந்த பொருளாதார, சமூக மற்றும் அரசியல் காரணிகளால் பாதிக்கப்படுகின்றன. ஒலிம்பிக்ஸில் ஒரு பொற்காலம்என இருந்ததே இல்லை. இந்தக் கட்டத்தில் ஒலிம்பிக்ஸின் உயர் சிந்தனைகள், சீரிய உணர்வு காட்டிக் கொடுக்கப்படுகின்றன என்று வெற்றுத்தனமாகக் கூறப்படும் புகார்களை நியாயப்படுத்தப்பட முடியாது.

இந்த விளையாட்டுக்களை Pierre de Coubertin பிரபு புதுப்பித்து ஒரு நூறாண்டுகளுக்கு மேல் ஆகிறது. இந்த ஒழுங்கமைக்கப்பட்ட விளையாட்டுக்கள் தனிநபரின் அறநெறி, சமூக வலிமைக்குமூல ஆதாரமாக இருக்கும் என்பதை அடித்தளமாக கொண்டிருந்தது மட்டும் இல்லாமல், உடற்பயிற்சிக் கல்வி [பிரெஞ்சு] மக்களை போரிட்டுப் போர்களை வெல்வதற்கும் நன்கு தயாரிக்கும் என்று நம்பினார்.

அப்பொழுது முதல் விளையாட்டுக்கள் தேசியவாதம், தேசிய விரோதங்கள் என்னும் முப்பட்டைக் கண்ணாடி மூலம்தான் பிரதிபலிப்பாகின்றன. மிகவும் பிரபல்யமானபடி 1936ம் ஆண்டு ஒலிம்பிக்ஸை ஆரிய ஆற்றலுக்கு நிரூபணம் என்று ஹிட்லர் பயன்படுத்தித் தோல்வி அடைந்ததில் இருந்து. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தயை காலத்தின் பெரும்பகுதியில், விளையாட்டுக்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் சோவியத் ஒன்றியத்திற்கும் இடையே 1980 மற்றும் 1984ம் ஆண்டுகளில் பதிலுக்குப்பதில் புறக்கணிப்பு என்பது உட்பட பனிப்போரின் அரங்கமாக ஒரு மறைமுகப் போராக நடைபெற்றன.

வரலாற்றின் இந்தப் பின்னணியில் பார்த்தாலும்கூட, கடந்த 25 ஆண்டுகள் இன்னும் தீயவகையில் தேசியவாதம், வணிகத்தன்மை என்று தொடர்ச்சியான ஒலிம்பிக்குகளில் நிலவிய தன்மையினால் தான் அதிகம் உணரப்படுகிறது.

தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்கள் தனிப்பட்ட, கூட்டுத் தியாகங்கள், உழைப்புக்கள், சாதனைகள் ஆகியவற்றின் அடையாளங்களாக இருக்க வேண்டியவை, நீண்டகாலமாக மொத்தமாக தேசிய மேன்மையின் அடையாளமாக உருவகப்படுத்தப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. இந்தச் சிதைவு விளையாட்டில் பெருநிறுவனங்கள் இழிந்த முறையில் பெரும் பணத்தை உட்செலுத்துவதின் மூலம் வலுப்பெற்றுள்ளன. 1996 அட்லான்டா, 2000 சிட்னி ஒலிம்பிக் விளையாட்டுக்கள் வணிகத்தின் ஆதிக்கத்திற்கு உட்பட்டதின் தனி அடையாளங்கள் ஆயின. விளையாட்டுக்கள் நடத்தும் செலவுகள், அனுமதிக் கட்டணத்தில் உயர்வு என்பவற்றையும் கொண்டுவந்து விட்டன.

லண்டன் 2012ல் தற்கால முதலாளித்துவத்தின் சமூக, அரசியல், கலாச்சார தேக்கத்தின் தீய பாதிப்பு விளையாட்டுக்கள் மீது அதன் மிகத்தெளிவான வெளிப்பாட்டைத்தான் கண்டுள்ளது. மகத்தன சாதனைகளுக்கு இடையே, நாம் பலபத்து விளையாட்டு வீரர்களுக்கும் மேலாக சட்டவிரோத போதை மருந்துப் பயன்பாட்டினால் தகுதி இழந்த நிலையைக் கண்டுள்ளோம். மற்றும் இருவர், கிரேக்கத்தின் Pareskevi Paphristou, ஸ்விட்சர்லாந்தில் Michen Morganella  இருவரும் சமூக இணைய தளங்களில் இனவெறித் தகவல்களை வெளியிட்டதற்காக வெளியே அனுப்பப்பட்டுவிட்டனர்.

போட்டியில் வேண்டுமென்றே தோற்பது என்ற ஊழலையும் இந்த விளையாட்டுக்கள் கண்ணுற்றன. இதில் சீனாவில் இருந்து வந்த மகளிர் இரட்டையர் பூப்பந்தாட்ட குழுவும் அடங்கும். அது அடுத்தச் சுற்றில் தனக்குச் சாதகமான குழுக்களைச் சந்திக்கலாம் என்ற அடிப்படையில் தங்கள் இறுதிக் குழு விளையாட்டுக்களில் வேண்டுமென்றே மதிப்பு எண்களை இழந்தது.

பார்வையாளர்கள் இருக்கையில் வரிசையாக காலி இடங்கள் காணப்படுவதும் வாடிக்கையாகிவிட்டது. குறைந்தப்பட்சம் 275,000 கட்டணச் சீட்டுக்கள் விற்பனையாகவில்லை. அதில் 200,000 இருக்கைகள் கால்பந்து விளையாட்டுக்களுக்கு உரித்தானவை. இதற்குக் காரணம் தொழிலாள வர்க்கத்தினர் வாங்கமுடியாத அளவிற்கு கட்டணங்கள் உயர்த்தப்பட்டு, பெருநிறுவன வெற்றுக் கும்பலுக்கு அவை தாரை வார்க்கப்பட்டன. இதில் ஆரம்பவிழாவிற்கு 2012 பவுண்டுகள், 655 பவுண்டுகள், 1,500 மதிப்புச் சீட்டுக்கள் இறுதி நிகழ்வுக்கு விற்பனையானதும் அடங்கும். இதையும் விட முக்கியத்துவம் குறைந்த நிகழ்வுகள் சாதாரண சீட்டுக்களுக்கு கேலிக்கூத்தான பெரும் கட்டணத்தை வசூலிக்கின்றன. கடற்கரை கரப்பந்தாட்ட போட்டிக்கு 65 பவுண்டுகள், மகளிர் வில்வித்தைக்கு 75 பவுண்டுகள், ஆடவர் பளுத்தூக்கும் நிகழ்வுகளுக்கு 125 பவுண்டுகள் என்று விற்கப்பட்டது.

வணிகத்துறை ஆதரவுநிதிவழங்குனர்கள் அதிக ஆதாயங்களை எதிர்பார்த்து 1.4 பில்லியன் பவுண்டுகளைச் செலவழித்துள்ளனர். இது குழுக்கள், தனி வீரர்களுக்கு விளையாட்டுக்கருவி நிறுவனங்கள், ஊக்கப்பானங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் போன்றவை கொடுத்துள்ள ஆதரவு தொகையைத் தவிர ஏற்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்களுக்கு நிதிஆதரவாளர்களாக இருத்தல் என்பதுதான் ஊக்கமருந்துகள் என்னும் இழிந்த செயலுக்கு முக்கிய காரணம் ஆகும்.

இதைத்தவிர ஒலிம்பிக் அடையாள முத்திரை விளம்பரங்களுக்கு மொத்தமாகப் பயன்படுத்தும் நிலையும் உள்ளது. தேசியவாத நாட்டுக் கொடிகள் மற்றும் ஒலிம்பிக் தொடர்பான துண்டுதுணிகள் மிகவும் அபத்தனமானவை ஆகும்.

லண்டன் 2012 ஒலிம்பிக்ஸின் மிக உளைச்சல் கொடுக்கும், ஆனால் முக்கியமான கூறுபாடு பிரித்தானியாவின் ஆயுதப் படைகள் விவரிக்கும் எஃகு வளையத்தின் கீழ்அது நடத்தப்படுவது என்பதாகும். Red Arrows, Union, Olympic கொடிகளுடன் ஆயுதப்படைகளின் உறுப்பினர்கள் ஆரம்பநிகழ்வில் சுற்றி வருதல் என்பது, அசாதாரணமான முறையில் இந்த விளையாட்டுக்கள் இராணுவமயப்படுத்தப்பட்டு உள்ளதைத்தான் காட்டுகிறது.

1 பில்லியன் பவுண்டிற்கும் மேலாகச் செலவு செய்து, 17,000 இராணுவத்துருப்பினர் உட்பட 49,000 சீருடை அணிந்த படையினரை இந்த விளையாட்டிற்காக திரட்டப்பட்டிருப்பது 1956 சூயஸ் கால்வாய் நெருக்கடிக்குப் பின் மிக அதிக அளவிலானதாகும். இதைத்தவிர HMS Ocean  என்னும் விமானத்தளம் கொண்ட கப்பல், போர் விமானங்கள், தாக்கும் ஹெலிகாப்டர்கள், தரையில் இருந்து வானுக்கு இயக்கப்படும் ஏவுகணைகள் ஆகியவையும் நிறுத்தப்பட்டிருந்தன. சற்றும் இதற்குச் சளைக்காத நிலையில், அமெரிக்கா CIA, FBI  இன்னும் பிற பிரிவுகளில் இருந்து தன் விளையாட்டு வீரர்களுக்கு பாதுகாப்புக் கொடுக்கவும், சுங்கச் சோதனைச் சாவடிகள், விமான நிலையங்கள் ஆகியவற்றைக் காப்பதற்கும் ஆட்களை அனுப்பியதோடு, அமெரிக்கத் தூதரகத்தில் ஓர் அச்சுறுத்தல் குறித்த ஒருங்கிணைப்பு மையத்தையும் நிறுவியது.

இது ஒன்றும் சிலவேளை பயங்கரவாதத் தாக்குதல் ஏற்படுமோ என்பதை முகங்கொடுக்கும் நிகழ்வு என விளக்க முடியாது. லண்டன் ஓர் ஆக்கிரமிப்பிற்கு உட்பட்ட நகரம் போல் காணப்படுகிறது. உலகத்திலுள்ள உயரடுக்கினர் அனைவரும் லண்டனில் விருந்துகளுக்கும் வணிக ஒப்பந்தங்கள் செய்வதற்கும் வந்தனர். நகரம் கிட்டத்தட்ட அவர்களின் தற்காலிக சொந்த இடம் போல் தாரை வார்க்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டுச் செலவுகளுக்கு தங்கள் வாழ்வு இடர்பாடுகள், வறுமை, வேலையின்மை என்று இருந்தாலும் பணம் கொடுக்கும் லண்டன் நகரவாசிகளை, இஸ்லாமியவாதிகளைவிட இந்த தன்னலக்குழு ஓர் அச்சுறுத்தலாக கருதுகிறது.

அரசாங்கமும் அதன் படைகளும் சமூகத்தின் கீழ்மட்டத்தில் இருப்பவர்கள் நிகழ்ச்சிகளில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட வேண்டும் என்று உறுதியாக இருந்தன. தலைநகரின் நிதிய, வணிக மையம் என்னும் புகழிற்கு இழுக்குத் தரும் வகையில் எந்த மிக முக்கிய பிரமுகருக்கும் அவமானம் தரும் வகையில் எதிர்ப்போ அரசியல் எதிர்ப்போ கூடாது என்பதிலும் உறுதியாக இருந்தன.

ஒரு முந்தைய முன்னோக்குக் கட்டுரையில் உலக சோசலிச வலைத் தளம் ஏற்கனவே ஒலிம்பிக் உணர்வு என்பது மனிதகுலத்தின் நல்லிணக்கமான வளர்ச்சிப் பணிக்கு விளையாட்டை இருத்துகிறது, இதையொட்டி மனித கௌரவம் காப்பாற்றப்பட்டு, சமாதானமாக சமூகம் வளர்க்கப்பட வேண்டும், மற்றும் சமூகப் பொறுப்பு, உலகளாவிய அடிப்படை அறநெறிக் கோட்பாடுகள் வளர்க்கப்பட வேண்டும் என்பதுதான் என்ற உத்தியோகபூர்வமான கருத்து பற்றி கவனத்தை ஈர்த்திருந்தது.

அத்தகைய நெறியை எந்த விளையாட்டு நிகழ்வும் பூர்த்தி செய்ய இயலாது, ஆனால் இன்று முன் எப்பொழுதையும் காட்டிலும், விளையாட்டு என்பது மனிதகுலத்தின் வளர்ச்சிக்கு என்று இல்லாமல், மனித குலமும் அதன் சமூக அமைப்பின் வளர்ச்சியும்தான் விளையாட்டைக் காப்பாற்ற முடியும் என்றாகிவிட்டது.

விளையாட்டுக்கள் அனைவருக்கும் உரியவை, அனைவராலும் களிக்கப்பட வேண்டும். ஆனால் பல மற்ற பொருட்களைப் போலவே, இதுவும் ஆளும் உயரடுக்கினால் பற்றி எடுத்துக் கொள்ளப்பட்டு, கட்டுப்படுத்தப்படுகிறது. பணம் கொடுக்க இயலாதவர்களுக்கு மறுக்கப்படுகிறது. இத்தகைய வழிவகையில் இது சிதைவுற்று, இழிந்த நிலைக்குத் தள்ளப்படுகிறது.

மனிதகுலத்தின் ஒவ்வொரு முயற்சிகளும், விளையாட்டு மட்டும் இன்றி, கலைத்துறை, அறிவியல், அறிவுசார்ந்த பிரிவுகள் அனைத்துமே இலாபமுறையின் நெரிக்கும் தடைகளால் அச்சுறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன; இக்கூறுபாடு இலாமுறைக்கு எதிரிடையாகவும் விளங்குகிறது. இயல்பாக கௌரவமானதும், வாழ்க்கையை உயர்வான தரத்துடன் தொடரும் செயற்பாடு இப்பொழுது பெருநிறுவனங்கள், பெரும் செல்வந்தர்கள் தங்கள் வங்கி இருப்புக்களை அதிகரித்து, தேசியவாதத்தை முன்னெடுக்கும் ஒரு கருவியாக செயல்படுத்தப்படுகிறது.