World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

A Reply to Louis Proyect’s attack on the WSWS

உலக சோசலிச வலைத்தளம் மீதான லூயிஸ் ப்ரொயெக்ட் தாக்குதலுக்கு ஒரு பதிலுரை

By David North
8 June 2015

Back to screen version

அமெரிக்க அதிகாரிகள் ரஷ்யாவிற்கு எதிராக அணுஆயுத தாக்குதலைப் பரிசீலிக்கிறார்கள்" என்ற தலைப்பில் நைல்ஸ் வில்லியம்சால் எழுதப்பட்ட ஒரு WSWS கட்டுரைக்கு, “Unrepentant Marxist” (வளைந்து கொடுக்காத மார்க்சிஸ்ட்) வலைப்பதிவின் பதிப்பாளர் லூயிஸ் ப்ரொயெக்ட், வெள்ளியன்று, ஒரு அவமரியாதையான மற்றும் அருவருப்பூட்டும் வசைமொழிகளைப் பதிந்தார்.

நன்கறியப்பட்ட அசோசியேடெட் பிரஸ் எழுத்தாளர் ரோபர்ட் பேர்ன்ஸ் ஆல் சித்தரிக்கப்பட்ட, ஒபாமா நிர்வாகத்தின் அணுஆயுத கொள்கைகளை திரித்துக்காட்டும் வகையில் இருந்த ஒரு மேற்கோளை WSWS பயன்படுத்தியது என்று ப்ரொயெக்ட் வாதிடுகிறார்.

உலக சோசலிச வலைத் தளத்தால் மேற்கோளிடப்பட்ட அந்த அசோசியேடெட் பிரஸ் கட்டுரையில், மூலோபாய படைகள் மீதான பிரதிநிதிகள் சபையின் இராணுவ சேவை துணைக்குழுவின் முன்னால் கடந்த ஏப்ரல் 15 இல் துணை பாதுகாப்புத்துறை செயலர் ரோபர்ட் ஷேர் சாட்சிய உரை வழங்குகையில், “எதிர்ப்புபடை" (counterforce) நடவடிக்கைகளை நிலைநிறுத்துவது என்பது, "உண்மையில் ஏவுகணை ரஷ்யாவில் இருந்தாலும் கூட அதை தாக்கும் அளவிற்கு நம்மால் செல்ல முடியும்" என்பதை அர்த்தப்படுத்துகிறது என்று கூறியதை பேர்ன்ஸ் செய்தியில் வெளிப்படுத்தி இருந்தார்.

ஷேர் இன் அசாதாரணமான அச்சுறுத்தும் விதத்திலான கருத்தை WSWS மேற்கோளிட்டதற்கு எதிர்வினையாற்றி ப்ரொயெக்ட் எழுதுகிறார்: “உலக சோசலிச வலைத் தளத்தின் இந்த புதிய செய்தியைப் பார்க்கும் எந்தவொரு சாமானிய நபரும் பேண்டிலேயே சிறுநீர் கழித்துவிடுவார். அமெரிக்க அதிகாரிகள் ரஷ்யாவிற்கு எதிராக அணுஆயுத தாக்குதல்களைப் பரிசீலிக்கின்றனரா? முற்றிலும் அசிங்கம், இது தீவிரமான வியாபாரம்.”        

ப்ரொயெக்ட் தொடர்கிறார்: “உண்மை தான், WSWS.org ஐ உள்ளபடி அப்படியே  எடுத்துக் கொள்ளலாமா என்பது தான் பிரச்சினையே.”

பின்னர் ப்ரொயெக்ட், WSWS செய்தி தவறான தகவலின் அடிப்படையில் இருக்கிறது என்பதை வலியுறுத்த செல்கிறார். ஒபாமா நிர்வாகத்தைப் பாதுகாக்க தாவும் ப்ரொயெக்ட் ஆணவத்துடன், ஷேர் மீது சாட்டப்பட்ட அந்த கருத்து ஒருபோதும் கூறப்படவே இல்லை என்று வாதிடுகிறார். பேர்ன்ஸ் கட்டுரையில் காணப்பட்ட மேற்கோளை, “[ஷேர் இன்] சாட்சிய உரையில் காண முடியாது, அல்லது ஒரு கொலம்பியா பல்கலைக்கழக ஓய்வுபெற்ற பணியாளராக என்னால் தொடர்ந்து அணுக கூடிய, பத்திரிகை கட்டுரைகளது ஒரு அதிகாரபூர்வ தரவுகளஞ்சியமான நெக்சிஸிலும் (Nexis) அதைக் காண முடியாது… என்று ப்ரொயெக்ட் அறிவிக்கிறார்.

“வேறு வார்த்தைகளில் கூறுவதானால், காங்கிரஸ் ஆவணப்பதிவில் இல்லாத ஒன்றை ஷேர் கூறியதாக, பேர்ன்ஸ் ஒரு குற்றச்சாட்டை வைக்கிறார்.”

மிக கீழ்தரமான வார்த்தைப் பிரயோகத்துடன் ப்ரொயெக்ட் எழுதுகிறார்: “உலக சோசலிச வலைத் தளம் ஒரு டஜன் கணக்கானவர்களைப் பணியில் கொண்டிருக்கிறது அல்லது அவ்வாறானவர்களுக்கும் கேவலமான (fucking) பாரிய இயக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, ஆனால் உண்மையை அறிய விரும்புபவர்களுக்கு, இந்த விதத்திலான மிக மோசமான குப்பையைப் போன்ற தெளிவற்ற மற்றும் பயனற்ற எழுத்துக்களை வழங்குவதே அவர்களின் வேலையாக அவர்கள் காண்கிறார்கள்.”

உண்மையை அறிய விரும்புபவர் வேறு யாருமில்லை, அது ப்ரொயெக்ட் தான். ஆனால் அவர் வாய் முழுவதும் அசிங்கத்தை வைத்திருக்கிறார் என்பதைக் கூற வேண்டியதே இல்லை.

ரோபர்ட் ஷேர் அந்த தகவலை வெளியிட்டார் என்பதும் அதை அசோசியேடெட் பிரஸ் இதழாளர் எடுத்துக்காட்டினார் என்பதும் வெளிப்படையான உண்மையாகும். ஆனால் அந்த விமர்சனத்திற்குட்படும் வாசகம் (அதாவது, “உண்மையில் ஏவுகணை ரஷ்யாவில் இருந்தாலும் கூட அதை தாக்கும் அளவிற்கு நம்மால் செல்ல முடியும்" என்பது) விசாரணைக்கு முன்னதாக ஷேர் ஆல் தயாரிக்கப்பட்ட எழுத்துபூர்வ அறிக்கையில் காணப்படவில்லை. அவரது ஆரம்ப அறிக்கை, வழமையாக காங்கிரஸ் விசாரணைகளில் செய்யப்படுவதைப் போல, உண்மையில் ஷேர் ஆல் வாசிக்கப்படவில்லை. அது உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, ஆவணப்பதிவில் உள்ளடக்கப்பட்டது.

காங்கிரஸில் இடம்பெற்றிருப்பவர்கள் கோரும் கேள்விகளுக்கு, ஷேர் மற்றும் சம்பந்தப்பட்ட ஏனையவர்களும் பதிலளிக்கும் 50 நிமிட விசாரணை, துணைக்குழுவின் நிஜமான வேலையில் உள்ளடங்கி இருந்தது. அத்தகைய கேள்வி-பதில் பகுதியின் போது தான் ரஷ்யாவை நோக்கிய ஒபாமா நிர்வாகத்தின் அணுஆயுத கொள்கை சம்பந்தப்பட்ட கருத்து வழங்கப்பட்டது.  

அந்த விசாரணையின் முழு காணொளி பிரதிநிதிகள் சபையின் இராணுவ சேவை குழுவின் யூ டியூப் சேனலில் காணக் கிடைக்கிறது. சோம்பேறித்தனத்தினாலேயோ, நேர்மையின்மையாலேயோ, அல்லது —அனேகமாக— இரண்டின் கலவையாகவோ, ப்ரொயெக்ட் அந்த விசாரணையின் வீடியோ காணொளியை ஆராய விரும்பவில்லை போலும்.

துணைக்குழுவிற்கு முன் நின்றிருந்த போது, அலபாமா மொ புரூக்ஸ் இன் குடியரசு கட்சி பிரதிநிதி, ஷேர் இடம் பின்வருமாறு கேள்வியை எழுப்பினார் (இது காணொளியில் 16:58 நிமிடத்தில் வருகிறது): “இடைத்தூர அணுஆயுத படை உடன்படிக்கையை ரஷ்யா மீறியதற்காக அமெரிக்க என்ன நடவடிக்கை எடுத்து வருகிறது?” என்றார்.

“ரஷ்யர்களை திரும்ப இணக்கமாக வருவதற்கு உடன்பட செய்யும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டு" வருகிறது என்று குறிப்பிட்டு ஷேர் பதிலளித்தார். அவ்வாறு நடக்கவில்லை என்றால், அமெரிக்கா பரிசீலித்து வரும் மூன்று வகையான இராணுவ நடவடிக்கைகளை (இது காணொளியில் 17:50வது நிமிடத்தில் தொடங்குகிறது) மீளாய்வு செய்து அவர் தெரிவிக்கிறார்:

ஒன்று செயலூக்கத்துடனான பாதுகாப்பு, INF உடன்படிக்கையை மீறி ஏவுகணைகள் எட்டக்கூடிய இடங்களான ஐரோப்பாவில் உள்ள இடங்களைப் பாதுகாக்க நாம் என்ன செய்ய முடியும் என்பது. மற்றொன்று உண்மையில் ஏவுகணை ரஷ்யாவில் இருந்தாலும் கூட அதை [வார்த்தை அழிக்கப்பட்டது] அளவிற்கு நாம் எவ்வாறு செல்வது என்பதைக் குறித்து பார்ப்பது. அதற்கடுத்தது மூன்றாவதாக அந்த தகைமையை வெறுமனே தாக்குவது மட்டுமல்ல, மாறாக ரஷ்யாவிற்குள்ளே நாம் என்னென்னவற்றை ஆபத்திற்குட்படுத்தலாம் என்பதைக் குறித்து புரிந்துகொள்ள பார்ப்பது. நாம் எதை மிகவும் பயனுறுதியாக இருக்குமென நினைக்கிறோம் என்பதைக் கூர்மைப்படுத்தி, நாம் அத்தகைய சாத்தியக்கூறுகள் அனைத்தையும் இன்னமும் பார்த்து வருகிறோம்… [அழுத்தம் சேர்க்கப்பட்டது]  

என்ன காரணத்திற்காக ஆவணப்பதிவிலிருந்து ஒரேயொரு வார்த்தை வெட்டப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை. துல்லியமாக அந்த காணொளியின் 18:11 ஆவது நிமிடத்தில், அந்த பதிவில் ஒரு வித்தியாசமான இடைப்பட்ட தடை ஏற்படுகிறது. அதன் விளைவாக, அந்த வாக்கியத்திலிருந்து "தாக்குதல்" என்ற வார்த்தை இல்லாமல் போகிறது. அது திடீரென ஏற்பட்ட ஒரு தொழில்நுட்ப கோளாறா அல்லது விசாரணைக்குப் பிந்தைய எடிட்டிங் வேலையா என்பது நமக்கு தெரியாது. ஷேர் இன் அறிக்கை நீண்டதூர தாக்கங்களைக் கொண்டது என்பதால், இரண்டாவது சாத்தியக்கூறை நிராகரித்துவிட முடியாது.   

எந்தவொரு நிகழ்விலும், ப்ரொயெக்ட் எதை ஜோடிக்கப்பட்டதாக வாதிட்டாரோ அந்த (“தாக்குதல்” வார்த்தை தவிர்க்கப்பட்ட) வாக்கியத்தை, காணொளியில் கேட்க முடியும். அசோசியேடெட் பிரஸ் பத்திரிகையாளர் ரோபர்ட் பேர்ன்ஸ் துல்லியமாக ஷேர் இன் விமர்சனத்திற்குரிய அந்த வாக்கியத்தை அதன் முழுத்தன்மையோடு வெளியிட்டுள்ளார் என்பதில் அங்கே எந்த சந்தேகமும் கிடையாது.

இந்த பதிலுரை சார்ந்து ஒரு சில கூடுதல் புள்ளிகளும் கூறியாக வேண்டும். முதலாவதாக, ஷேர் இன் அறிக்கை, அந்த சாட்சிய உரையின் பெரும்பகுதி, பொதுவான வார்த்தைகளில் அளிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸில் இடம்பெற்றிருப்பவர்களும் சரி ஷேர் உம் சரி, வரவிருக்கின்ற காலத்தில் ஒரு மூடிய-கதவுகளுக்குப் பின்னால் ஓர் அமர்வை நடத்துவது குறித்தும், முற்றிலும் அமெரிக்க மக்களிடமிருந்து மறைக்கப்பட்டுள்ள, அந்த விவாத அரங்கில் —ரஷ்யாவின் பாகத்திலிருந்து INF விதிமீறல் குற்றச்சாட்டுகளுக்கு அமெரிக்காவின் விடையிறுப்பு உட்பட— விரிவான விபரங்கள் வழங்கப்படுமென்றும் மீண்டும் மீண்டும் குறிப்பிடுகின்றனர்.

இரண்டாவதாக, ஏவுகணைகளுக்கு எதிரான தாக்குதல்களைத் தொடுப்பது குறித்த கருத்துக்களோடு மட்டும் ஷேர் அச்சுறுத்தவில்லை, மாறாக ரஷ்யா முழுவதிலும் உள்ள ஏனைய இலக்குகளையும் குறித்து அச்சுறுத்துகிறார். “அந்த தகைமையை வெறுமனே தாக்குவது மட்டுமல்ல, மாறாக ரஷ்யாவிற்குள்ளே என்னென்ன பொருட்களை நாம் ஆபத்திற்குட்படுத்தலாம் என்பதைக் குறித்து புரிந்துகொள்ள பார்ப்பது...” என்பதை இராணுவம் புரிந்து கொள்ள வேண்டும் என்ற கருத்து இதைத் தான் அர்த்தப்படுத்துகிறது.

மூன்றாவதாக, ஒட்டுமொத்த கருத்துப்பரிவர்த்தனையும் அணுஆயுத கொள்கை மீதான மீளாய்வு குறித்த உள்ளடக்கத்தில் நடக்கிறது என்பதால், அதுபோன்றவொரு தாக்குதலை நடத்துகையில் அமெரிக்கா அணுஆயுதங்களைப் பிரயோகிப்பது குறித்து பரிசீலித்து வருகிறது என்பதையே தெளிவுபடுத்துகிறது. அவரது கட்டுரையில் பேர்ன்ஸ் குறிப்பிடுகையில் (இது WSWS ஆல் மேற்கோளிடப்பட்டது, ஆனால் ப்ரொயெக்ட் ஆல் குறிப்பிடப்படவில்லை), “அந்த சாத்தியக்கூறுகள், ரஷ்ய பிராந்தியத்தின் இராணுவ இலக்குகளை அழிப்பதற்கு அமெரிக்க அணுஆயுதங்களின் ஆற்றலை அதிகரிப்பது என்பது வெளிப்படையாக குறிப்பிடப்படவில்லை என்றாலும் உட்கிடைக்கையாக உள்ளே கொண்டிருக்குமளவிற்கு செல்கின்றன,” என்று குறிப்பிடுகிறார்.

இறுதியாக, பர்ன்ஸ் ஆய்வானது "முற்றிலும்" ஷேர் இன் "சாட்சிய உரையின் மீதே அடித்தளமிட்டுள்ளது" என்ற ப்ரொயெக்ட் இன் வாதம், மற்றொரு பொய்யாகும். உண்மையில் ஒபாமா நிர்வாகமும் இராணுவ திட்ட வகுப்பாளர்களும், முதலில்-தாக்கும் அணுஆயுத கொள்கை உட்பட அதன் இராணுவ ஆத்திரமூட்டல்களின் தீவிரப்பாட்டை நியாயப்படுத்த INF உடன்படிக்கை மீறல்கள் மீதான குற்றச்சாட்டுக்களைப் பயன்படுத்துவதற்கு கடந்த பல மாதங்களாக ஒரு மூலோபாயத்தின் மீது வேலை செய்து வந்துள்ளனர்.   

செனட் ஆயுத சேவை கமிட்டிக்கு முன்னால் பெப்ரவரியில் சாட்சியம் அளிக்கையில், பாதுகாப்பு செயலர் அஷ்டன் கார்டர், ஷேர் வர்ணித்த அதே வழியை ஒட்டி இந்த கொள்கையை வர்ணித்தார், அதுவும் பேர்ன்ஸ் குறிப்பிட்ட "எதிர்ப்புப்படை" (counterforce) என்ற மொழியைப் பயன்படுத்தி இருந்தார். INF விதிமீறல்களுக்கு விடையிறுக்கையில், கார்டர் தெரிவித்தார்:

பாதுகாப்புத்துறையிலிருந்து நாம் பார்க்க வேண்டிய பரந்த சாத்தியக்கூறுகளில், இடைத்தூரத்திற்கு தரையிலிருந்து ஏவப்பட்ட கப்பற்படையை தகர்க்கும் ஏவுகணைகளை எதிர்கொள்வதற்கான ஆக்கபூர்வமான பாதுகாப்புகளையும்; இடைத்தூரத்திற்கு தரையிலிருந்து ஏவப்பட்ட கப்பற்படையை தகர்க்கும் ஏவுகணை தாக்குதல்களைத் தடுக்கும் எதிர்தாக்குதல் தகைமைகளையும்; மற்றும் ஒன்றையொன்று சமப்படுத்துவதில் அமெரிக்கா அல்லது கூட்டு படைகளின் தாக்கும் தகைமைகளையும் விரிவாக்குவதும் உள்ளடங்கும்.

இந்த மிகத்தெளிவாக தயாரிக்கப்பட்ட மற்றும் கவனத்துடன் பரிசீலிக்கப்பட்ட அறிக்கையில், கார்டர் வெளிப்படையாக ரஷ்யாவில் கப்பற்படை ஏவுகணைகளுக்கு எதிராக “முன்கூட்டிய" தாக்குதல்களை குறித்து குறிப்பிடுகிறார் —அதாவது, அமெரிக்காவிற்கு எதிராக எந்தவொரு தாக்குதலும் தொடங்குவதற்கு முன்னதாக தாக்குவதைக் குறிப்பிடுகிறார். அனைத்திற்கும் மேலாக, அவர் நீண்டகாலமாக அணுஆயுத கொள்கையுடன் பிணைந்துள்ள மொழியைப் பிரயோகிக்கிறார். அமெரிக்க விஞ்ஞானிகளின் கூட்டமைப்பால் பிரசுரிக்கப்பட்ட ஒரு பகுப்பாய்வு விவரிக்கின்றவாறு, “எதிர்ப்புப்படை என்பது ஒரு மூலோபாயமாகும், அது எதிரிநாட்டு இராணுவ படைகளை ஆபத்தில் நிறுத்துவதன் மீது ஒருமுகப்படுகிறது. தாக்குதலை 'தடுக்க' அதை பயன்படுத்துவது என்பது மறைமுகமாக அது பயன்படுத்தப்படுவதற்கு முன்னரே GLCM ஆல் அழிப்பதற்கு அணுஆயுதமேந்தாத அல்லது அணுஆயுதமேந்திய படைகளைப் பிரயோகிப்பதற்கு திட்டங்களை வரைவதாகும்...”

ப்ரொயெக்ட் உலக சோசலிச வலைத் தளத்தை தாக்கியமை இது முதல்முறையல்ல. அவர் உலக சோசலிச வலைத் தளத்தின் கணிசமான வாசகர் வட்டத்தால் வெறியுற்றிருக்கிறார். இந்த சமீபத்திய வலைப்பதிவிலும் கூட, ப்ரொயெக்ட் எழுதுகிறார்: “எனக்கு அறிமுகமான சில தீவிர போக்குடையவர்களே கூட அதை அப்படியே பெறுமதியானவை என கொள்கின்றனர். ஒரு பேஸ்புக் நண்பரும் மார்க்ஸ்மெயில் இன் பதிவுசெய்த தொடர் வாசகரும், சமூகவியல் பேராசிரியருமான ஒருவர் அடிக்கடி அவர்களின் கட்டுரைகளை இணைத்துக் காட்டுகிறார். சில நாட்களுக்கு வீட்டு விருந்தாளியாக வந்திருந்த மற்றொரு பேராசிரியர் கூறுகையில், நியூ யோர்க் டைம்ஸை விட WSWS நம்பகமாக இருப்பதால் அவர் அதை அன்றாடம் வாசிக்க விரும்புவதாக என்னிடம் தெரிவித்தார். CUNY அமைப்பில் வேலை செய்கின்ற எனது மனைவியின் கூற்றுப்படி, அத்தளம் கல்லூரி மாணவர்கள் மத்தியிலும் பிரபலமாக இருக்கிறது, அவர்கள் அதை கட்டுரைகளில் மேற்கோளிட விரும்புகிறார்கள்.”

ஒபாமா நிர்வாகத்தின் பொறுப்பற்ற இராணுவவாதத்தைக் குறித்த WSWS இன் எழுத்துக்கள் கணிசமாக செவியுறப்படுவதை, மற்றும், அவ்விதத்தில் ஒபாமா நிர்வாகத்தின் ஏகாதிபத்திய நடவடிக்கைகளுக்கான ஒரு மூர்க்கமான பிரச்சாரகராக அவரது சொந்த நடவடிக்கைகளுக்கு அது குழிபறிப்பதால், ப்ரொயெக்ட் குறிப்பாக ரோபர்ட் ஷேர் இன் சாட்சிய உரை மீதான கட்டுரையால் ஆத்திரமுற்றிருக்கிறார் என்று அதை தொகுத்தளிக்க முடியும். அவர் ஈரானில் "பசுமை புரட்சி", லிபியாவில் நேட்டோ தலைமையிலான போர், சிரியாவில் சிஐஏ-தூண்டிவிட்ட உள்நாட்டு போர் மற்றும் உக்ரேனில் அமெரிக்க-ஆதரவிலான ஆட்சிக்கவிழ்ப்பு சதி ஆகியவற்றின் ஒரு தீவிர ஆதரவாளராவார். 

ப்ரொயெக்ட் வலைப் பதிவு —அல்லது அதை நாம் உளறல் என்று அழைக்கலாமா— எவ்வித நம்பகத்தன்மையும் இன்றி உள்ளது. அவரது நேர்மையின்மை, வெறுப்பு மனப்பான்மை, மற்றும் இழிவார்ந்த அநாகரீக பேச்சில் அவர், அரசியல்ரீதியில் நோய்பீடித்த அமெரிக்க போலி-இடது அரசியல் அடுக்கின் ஒரு சிறந்த உதாரணமாய் திகழ்கிறார்.

உலக சோசலிச வலைத் தளம் மீதான அவரது தாக்குதலானது, அரசியல், கோட்பாடுகள் மற்றும் மார்க்சிச இயக்க கலாச்சாரத்துடன் முற்றிலும் எந்த சம்பந்தமும் இல்லாத ஒரு வேலையாக உள்ளது. சரியாக பெயரிட வேண்டுமானால், அவரது வலைப் பதிவை, “வளைந்துகொடுக்காத பொய்யர்" என்று தான் அழைக்கப்பட வேண்டும்.