ஐரோப்பாவும் அமெரிக்காவும்

ஐரோப்பாவும் அமெரிக்காவும் 
Europe and America

WSWS : Tamil : நூலகம்

Europe and America

ஐரோப்பாவும் அமெரிக்காவும்

பகுதி 1 / பகுதி - 2

Leon Trotsky
15 February, 1926

Use this version to print | Send feedback

ரஷ்ய மொழியில், கட்சி வரலாற்றுக் குழுவினால் 1926ம் ஆண்டு உத்தியோகபூர்வ ஆண்டுவிழா நூல் தொகுப்பில் முதலில் பதிப்பிக்கப்பட்டது.
 

ட்ரொட்ஸ்கியின் முன்னுரை

இத்துண்டுப் பிரசுரங்கள் இரண்டு ஆண்டுகள் தனித் தனியே ஆற்றிய உரைகளைக் கொண்டிருக்கின்றன. இந்த உரைகளை ஒன்றாக இணைப்பது பொருளுரையின் ஒற்றுமையாகும்: இரண்டுமே உலகப் பொருளாதார மற்றும் அரசியல் நிலைமையின் தன்மையை பற்றிக் கூறுபவை. அடிப்படைக் கருத்தின் ஒற்றுமையை ஒட்டி இரண்டு உரைகளும் ஒன்றாகக் இணைக்கப்பட்டிருக்கின்றன: இரண்டுமே உலக நிலைமை பற்றி மதிப்பிடுவதற்கு தளமாக ஐரோப்பாவுடன் அமெரிக்கா கொண்ட உறவு என்பதில் இருந்து விளக்குகின்றன.

உலக நிலைமையின் அடிப்படைத் தன்மை இந்த அறிக்கைகளினால் முழு விளக்கம் பெற்றுவிடவில்லை என்பதைக் கூறத் தேவையில்லை. காலனிகள் பற்றிய பிரச்சனை, கீழைத்தேச மக்களின் தேசிய-புரட்சிகரப் போராட்டங்கள் அவற்றில் தேவையான அளவிற்கு, அதாவது அடிப்படை கேள்விகளை தெளிவாக்குவதற்கு மட்டுமே. அதாவது முதலாளித்துவ உலகில் அமெரிக்காவின் மேலாதிக்கம் மற்றும் அதில் இருந்து ஏற்படும் விளைவுகளை தெரிவிப்பதற்கு மட்டுமே ஆராயப்பட்டுள்ளன; அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையே அடிப்படையில் மாறிவிட்ட இடைத் தொடர்புகளை ஒட்டி கீழை நாடுகளின் நிலைமை, முன்னோக்குகள் ஆகியவற்றின் பிரச்சினை ஒரு தனி, சுயாதீன பகுப்பாய்வைக் கோருபவை. ஆனால், அத்தகைய பகுப்பாய்வு இந்தத் துண்டுப்பிரசுரத்தில் உள்ள பிரச்சினையின் அடிப்படைத் தன்மையை மாற்றாது. கீழை நாடுகள் பிரச்சினையை ஒரு விரிவான பகுப்பாய்விற்கு உட்படுத்தாமல், வரலாற்றளவில் பாரிய தன்மையைக் கொண்டுள்ள இப்பிரச்சினை இந்த உரைகளில் கருத்தில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

அமெரிக்காவின் மிதமிஞ்சிய சடத்துவ மேம்பாடு இயல்பாகவே முதலாளித்துவ ஐரோப்பாவின் பொருளாதார ஏற்றம், புத்துயிர்ப்பு ஆகியவற்றை ஒதுக்கிவிடுகிறது. கடந்த காலத்தில் ஐரோப்பிய முதலாளித்துவம் உலகின் பின்தங்கிய பிரிவுகளில் பெரும் புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தியது. பின்னர் இன்று அமெரிக்க முதலாளித்துவம்தான் முதிர்ச்சியான ஐரோப்பாவின் புரட்சிகர மாற்றத்தை செய்கிறது. ஐரோப்பாவை பொறுத்தவரை அது சிக்கியுள்ள பொருளாதார முட்டுச் சந்தில் இருந்து மீள்வதற்கு ஒரு தொழிலாள வர்க்கப் புரட்சி, காப்புவரிகள், அரச தடைகள், ஐக்கிய ஐரோப்பிய சோவியத் அரசுகள் தோற்றுவிக்கப்படல் மற்றும் சோவியத் ஒன்றியத்துடனும் சுதந்திர ஆசிய நாடுகளுடன் கூட்டமைப்பு முறையில் ஒன்றுபடுதல் ஆகியவற்றைக் கையாண்டால் ஒழிய, தப்பிக்க வேறு வழியில்லை. இந்த பெரும் போராட்டத்தின் தவிர்க்க முடியாத வளர்ச்சி சிறிதும் தப்பிக்க முடியாமல் தற்போதைய முதலாளித்துவ மேலாதிக்க நாடான அமெரிக்காவிலும் ஒரு புரட்சிகர சகாப்தத்தை தொடக்கிவைக்கும்.”
 

தொழிலாளர் இயக்கத்தில் இரு எதிர்முனைகள் - சமரசவாத வழிவகையின் முழுமையான முறை
 

தோழர்களே: தற்கால உலகத் தொழிலாளர் இயக்கம் இரு துருவங்களாகியுள்ளது. முன்னோடியில்லாத தெளிவான வகையில் உலகத் தொழிலாள வர்க்கத்திற்குள் உள்ள இரு அடிப்படைப் போக்குகளை இந்த இரு துருவங்கள் நிர்ணயிக்கின்றன. அவற்றுள் ஒன்றான புரட்சிகர துருவம் நம் நாட்டில், சோவியத் ஒன்றியத்தில் உள்ளது; மற்றது, சமரச துருவம், அமெரிக்காவில் உள்ளது. இதற்கு முன் ஒருபொழுதும் இத்தகைய முழுமையான வழிவகைகள் மற்றும் சீர்திருத்த வழிவகைகள், இருந்ததில்லை. அதாவது முதலாளித்துவத்துடன் சமரச அரசியல் என்று கடந்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளாகத்தான் அமெரிக்க தொழிலாளர் இயக்கத்தில் இருக்கிறது.

வர்க்க சமரச அரசியல் கடந்த காலத்திலும் கடைப்பிடிக்கப்பட்டது; நாம் அதை வரலாற்றுப் பார்வையின் மூலமும் நேரடியாகவும் கண்டுள்ளோம். சந்தர்ப்பவாதம் அதன் முழுமையான வடிவமைப்பு இங்கிலாந்தினால் போருக்கு முந்தைய சகாப்தத்தில் முன்வைக்கப்பட்டது. அதில் முழுமையான பழைமைவாத வடிவத்திலான தொழிற்சங்கம் தோற்றுவிக்கப்பட்டது என்று நாம் மதிப்பிட்டோம் - இது கடந்த காலத்தைப் பொறுத்தவரையில் சரியே. ஆனால், இன்று இங்கிலாந்தின் தொல்சீர் சகாப்தத்தின் தொழிற்சங்கவாதம், அதாவது 19ம் நூற்றாண்டின் பிற்பகுதி, ஒரு அமெரிக்க தொழிற்சாலைக்கு கைவினைஞர் உற்பத்தி கொண்டிருந்த அதே உறவைத்தான் தற்போதுள்ள அமெரிக்க சந்தர்ப்பவாதத்துக்கு காட்டுகிறது.

அமெரிக்காவில் இப்பொழுது நிறுவனத் தொழிற்சங்கங்கள் என்று அழைக்கப்படும் பரந்த இயக்கம் உள்ளது; அதாவது தொழிற்சங்கங்களுக்கு முற்றிலும் மாறான வகையில் இவை தொழிலாளர்களை மட்டுமின்றி முதலாளிகளையும் அல்லது இருவரின் பிரதிநிதிகளையும் கொண்டுள்ளது. வேறுவிதமாகக் கூறினால், உற்பத்தியில் கூட்டுறவுசங்க ஒழுங்கமைப்பு (guild organization) இருந்தபோது ஏற்பட்ட நிகழ்வுகள், பின்னர் நிலப்பிரபுத்துவ முறை மறைந்தபோது தானும் மறைந்த நிலை இப்பொழுது முன்னோடியில்லாத வகையில், முற்றிலும் புதிய வடிவமைப்புக்களை மிகச் சக்திவாய்ந்த முதலாளித்துவ நாட்டில் ஏற்பட்டுள்ளது.

நான் தவறாகக் கருதவில்லை என்றால், யுத்தத்திற்கு முன்னர் இந்த இயக்கத்தின் ஆரம்பகர்த்தாவாக ராக்பெல்லர் இருந்தார். ஆனால் இந்த இயக்கம் வட அமெரிக்காவின் மிகச் சக்திவாய்ந்த நிறுவனங்களில் சமீபத்தில்தான், 1923 முதல் பரவியுள்ளது. தொழிலாளர் பிரபுத்துவத்தின் (The labor aristocracy) உத்தியோகபூர்வ தொழிற்சங்க அமைப்பான அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு (American Federation of Labour) சில தயக்கங்களுடன் இந்த இயக்கத்தை ஏற்றுள்ளது; உழைப்பிற்கும் மூலதனத்திற்குமிடையே உள்ள நலன்களின் அடயாளத்தை முற்றிலும், முழுமையாகவும் அங்கீகாரம் செய்வதை இது கருதுகிறது; இதையொட்டி உடனடி இலக்குகளுக்காக சுயாதீன தொழிலாள வர்க்க அமைப்புக்களுக்கான தேவை கூட நிராகரிக்கப்படுகிறது.

இதே நேரத்தில் அமெரிக்காவில் தொழிலாளர் சேமிப்பு வங்கிகள், காப்பீட்டுச் சங்கங்கள் ஆகியவற்றின் வளர்ச்சியையும் இத்துடன் காண்கிறோம்; அவற்றில் தொழிலாளர் மற்றும் முதலாளிகளின் பிரதிநிதிகள் அருகருகே அமர்கின்றனர். அமெரிக்க ஊதியத் தரங்கள் மிக உயர்ந்த வாழ்க்கைத் தரங்களுக்கு உத்தரவாதம் அளிக்கிறது என்று பரந்த அளவில் கருதப்படும் எண்ணம் பெரிதும் மிகைப்படுத்துப்பட்டுள்ளது என்பதை கூறத் தேவையில்லை; ஆயினும் கூட, இந்த ஊதியத்தரங்கள் தொழிலாளர்களின் உயர்தட்டிற்கு சிலசேமிப்புக்களைச்செய்வதற்கு அனுமதிக்கிறது. “அனைத்துச் சேமிப்புக்களையும் மூலதனம் நடுத்தர தொழிலாளர் வங்கிகள் மூலம் வடிகட்டி அவற்றை தொழிலாளர்கள் தங்கள் ஊதியங்களில் இருந்து சேமிக்க இயலும் தொழில்துறை நிறுவனங்களுக்கு அளிக்கிறது. இவ்விதத்தில் முதலாளிகள் தங்கள் சுற்றோட்ட மூலதனத்தை பெருக்குகின்றனர்; மேலும், எல்லாவற்றிற்கும் மேலாக, தொழில் வளர்ச்சியில் தொழிலாளர்களின் நலன்களையும் உறுதிப்படுத்துகின்றனர்.

தொழிலாளர்களின் நலன்கள் மற்றும் மூலதனத்தின் நலன்களுக்கும் இடையே முழு ஒற்றுமை என்ற அடிப்படையில் ஊதியங்களின் சரிவை அறிமுகப்படுத்த வேண்டிய தேவையை அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு (AFL) அங்கீகரித்திருந்தது: உழைப்பின் உற்பத்தித்திறன் மற்றும் இலாபங்களை ஒட்டி ஊதியங்கள் மாறுபட்டிருக்க வேண்டும். உழைப்பு மற்றும் மூலதனத்தின் நலன்களின் ஒற்றுமை என்னும் கோட்பாடு இவ்விதத்தில் நடைமுறையில் ஒற்றுமைப்படுத்தப்பட்டு, தேசிய வருமானத்தின் நலன்களில்சமத்துவம்இருப்பது போன்ற தோற்றத்தை பெறுகிறோம். இந்தப் புதிய இயக்கத்தின் முக்கிய பொருளாதார வடிவமைப்புக்களின் தன்மை இருக்கும் விதத்தை நன்கு கவனமாக முறையான விளக்கப்பாட்டுடன் ஆராயப்பட வேண்டும்.

அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு (AFL - இதன் தலைவர் Gompres) கடந்த சில ஆண்டுகளில் அதன் உறுப்பினர்களில் பெரும்பகுதியை இழந்துவிட்டது. இப்பொழுது 2,800,000 உறுப்பினர்களுக்கு மேல் இல்லை; இது தொழில்துறை, வணிகம் மற்றும் விவசாயம் ஆகிய துறைகளில் அமெரிக்காவில் குறைந்தபட்சம் 25,000,000 ஊதியம் ஈட்டுபவர்களைக் கொண்டுள்ளது என்பதை கருத்திற்கொள்ளும்போது அமெரிக்க தொழிலாள வர்க்கத்தில் குறைந்த பிரிவையே பிரதிபலிக்கிறது. இதன் சொந்த உத்தியோகபூர்வ கோட்பாட்டுப் பிரச்சினைகள் வெகுஜனப் போராட்டத்தின் மூலம் தீர்க்கப்படுவதில்லை, ஆனால் உழைப்பிற்கும் மூலதனத்திற்கும் இடையே சமரசத்தின் மூலம் தீர்க்கப்படுகிறது என்பதுதான். நிறுவனத் தொழிற்சங்கங்களில் அதன் உயர்ந்த வெளிப்பாட்டைக் கொண்டுள்ளது இக்கருத்து என்ற நிலையில், தொழிற்சங்கங்கள் தொழிலாள வர்க்கத்தின் பிரபுத்துவ உயர்குழுக்களை அமைப்பதுடன் தம்மை மட்டுப்படுத்திக் கொள்ள வேண்டியது கட்டாயமானதும் அவற்றினால் இயலுமானதுமாகும். இவை முழு வர்க்கத்தின் பெயரில் செயல்படுகின்றன.

ஒத்துழைப்பு என்பது தொழில்துறை மற்றும் நிதியத் துறைகளுடன் (வங்கிகள், காப்பீட்டுச் சங்கங்கள்) மட்டுப்படுத்தப்படவில்லை. இடம்பெயர்க்கப்பட்ட சேமிப்பு வைப்பு, பங்குகள் மற்றும் பீப்பாய்களாக இது உள்நாட்டு, உலக அரசியலிலுக்குள் இருக்கிறது. புதிய நிறுவனத் தொழிற்சங்கங்களுடன் AFL நெருக்கமாகப் பிணைந்து, அவற்றின் மீது நேரடியாகவோ, மறைமுகமாகவோ நம்பியிருக்கும் நிலையில்-சோசலிசத்திற்கு எதிரான ஆற்றல் மிகுந்த போராட்டத்தை நடத்த இயலும், பொதுவாக ஐரோப்பிய புரட்சிக் கோட்பாடுகளுக்கு எதிராக; இவற்றுள் இரண்டாம் அகிலம் மற்றும் ஆம்ஸ்டர்டாம் அகிலம் ஆகியவையும் அடங்கும் [1]

அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு (AFL) மன்ரோ கோட்பாடானஅமெரிக்கர்களுக்காக அமெரிக்கா என்பது ஒரு புதிய விதத்தில் ஏற்கின்ற வகையில் அதற்கு கீழக்கண்ட விளக்கத்தை கொடுக்கிறது: “ ஐரோப்பாவின் கலகக்கார்கள் எங்களால் பயிற்றுவிக்கப்பட வேண்டும் மற்றும் முடியும், ஆனால் அவர்கள் எங்கள் விவகாரங்களில் தலையிடுவதைத் தவிர்க்க வேண்டும்.” இதில் அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு (AFL) முதலாளித்துவத்தைத்தான் எதிரொலிக்கிறது. முன்பு முதலாளித்துவம் கூறியது: “அமெரிக்கா அமெரிக்கர்களுக்குத்தான், ஐரோப்பா ஐரோப்பியர்களுக்குத்தான்”; இப்பொழுது மன்ரோ கோட்பாடு ஒரு தடையை பிறருக்கு அடையாளம் காட்டுகிறது. அதாவது அமெரிக்க விவகாரங்களில் தலையிடாதீர் என்பதாகும்; ஆனால் அமெரிக்காவை உலகின் பிற விவகாரங்களில் தலையிடுவதை அது தடுக்கவில்லை. அமெரிக்கா அமெரிக்கர்களுக்குத்தான் மற்றும் ஐரோப்பாவும் கூட.

அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு (AFL) சமீபத்தில் ஒரு பரந்த அமெரிக்கர்களுக்கான கூட்டமைப்பை தோற்றுவித்தது; அதாவது இது, தென்னமெரிக்காவிற்கும் விரிவாக்கம் செய்யப்பட்ட அமைப்பாகவும், அதையொட்டி இலத்தீன் அமெரிக்காவில் அமெரிக்க ஏகாதிபத்தியம் பரவிச் செல்லும் தயாரிப்பாகவுமிருந்தது. வோல் ஸ்ட்ரீட் இதைவிடச் சிறந்த அரசியல் கருவியைக் கண்டுபிடித்திருக்க முடியாது. அதே நேரத்தில் இதன் பொருள் தென்னமெரிக்க மக்கள் அவர்களை நசுக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக நடத்தும் போராட்டம் என்பது அமெரிக்கவாதத்தினை சார்ந்த கூட்டமைப்பின் சீர்கெட்ட செல்வாக்கிற்கு எதிரான போராட்டமும் ஆகிறது என்பதுதான். Gomper ஏற்படுத்திய அமைப்பு. நீங்கள் அறிந்துள்ளதுபோல், ஆம்ஸ்டர்டாம் அகிலத்துக்கு வெளியே உள்ளது. அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பின் (AFL) பார்வையில் ஆம்ஸ்டர்டாம் அகிலமானது சீர்கெட்டுள்ள ஐரோப்பாவின் அமைப்பு ஆகும், அந்த அமைப்பு மிக அதிகம் புரட்சிகரக் கருத்துக்களால் நச்சுப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு (AFL) ஆம்ஸ்டர்டாமிற்கு வெளியே, தேசங்களின் கழகத்திற்கு (League of Nations) வெளியே அமெரிக்கா நிற்பது போல் நிற்கிறது. ஆனால் இது ஒன்றும் அமெரிக்க மூலதனத்தை தேசங்களின் கழகத்தை ஆட்டிப்படைக்க பயன்படுத்துவதை தடுத்துவிடவில்லை. இங்கும் அமெரிக்காவின் 30ஆவது ஜனாதிபதி கூலிட்ஜின் (Coolidge) செயல்களுக்கும் Gomper உடைய வாரிசுகளுக்கும் இடையே முழுமையான ஒற்றுமைத்தன்மையைக் காணலாம். அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு (AFL) அமெரிக்க மூலதனம் Dawes Plan ஐ நிறுவியபோது அதற்கு ஆதரவு கொடுத்தது. உலகின் அனைத்துப் பகுதிகளிலும் அது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உரிமைகள் மற்றும் போலித்தனங்களுக்காக போராடுகிறது; இதன் விளைவாக முதலிலும் முக்கியமானதுமாக சோவியத் குடியரசிற்கு எதிராக இருக்கிறது.

இப்புதிய சமரசவாதம் என்பது முன்பு காணப்பட்ட எதையும் விட மிக உயர்ந்த வடிவிலானதாகும்; இங்கு சமரசவாதம் என்பது அதன் இறுதித் தர்க்கபூர்வ முடிவிற்கு இழுத்துச் செல்லப்படுகிறது; இது இயல்பாகவர்க்கங்களுக்கு இடையேயான அமைப்புக்களான நிறுவனத் தொழிற்சங்கங்கள், கூட்டு வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் போன்றவற்றால் முழுமை பெறுகிறது; இந்த சமரசவாதம் அமெரிக்கர்களின் உயர்விகிதங்களை ஒரே கோட்டில் அடையச் செய்துள்ளது. மிகப் பெரிய மூலதனங்களை கொண்ட நிறுவனங்கள் தோற்றுவிக்கப்படுகின்றன; அவை முதலாளிகளுடன் சமமான நிலையில் ஆலைக் குழுக்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்கின்றன, அல்லது ஒரு சட்ட சபையின் கீழ்மன்றம், மேல்மன்றங்களுக்கிடையே உள்ள உறவைப் போல் நிர்ணயித்துக் கொள்கின்றன. பெரும் முதலாளித்துவ நிறுவனங்களால் சமரசவாதம் தரப்படுத்தப்பட்டும் நிபுணத்துவப்படுத்தப்பட்டும் உற்பத்தியும் செய்யப்படுகிறது. இது ஒரு முழு அமெரிக்க நிகழ்வு ஆகும். சமரசவாதத்தின் பாரிய உற்பத்திக்கான ஒரு வகை சமூக நகர்தள வரிசை உற்பத்தி முறையானது (Social conveyor line) தொழிலாள வர்க்கத்தை ஒடுக்குவதை இயல்பாகவே பலப்படுத்திவிடுவதை கோருகின்றது.

சமரசவாதத்திற்கு அடிப்படையாக அமெரிக்காவின் பொருளாதார வலிமை

மூலதனத்திற்கு இதன் தேவை ஏன் என்ற கேள்வி எழலாம். அமெரிக்க மூலதனத்தின் உண்மையான திறனையும் அதன் வருங்காலத் திட்டங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டால் விடை புலப்படும். அமெரிக்க மூலதனத்திற்கு அமெரிக்கா ஒரு மூடப்பட்டுள்ள செயல்பாடுகளைக் கொண்ட இடம் இல்லை, மாபெரும் அளவில் புதிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு ஒரு பயிற்சிக் களம் ஆகும். அமெரிக்க முதலாளித்துவம் இப்பயிற்சி களத்தில் தன் பாதுகாப்பை மிக முறையான வடிவில், சமரசவாதம் மூலம் உறுதிப்படுத்தபட வேண்டும்; அப்பொழுதுதான் அது இன்னும் பாதுகாப்பான முறையில் வெளிநாடுகளில் செயல்பட முடியும்.

மற்றொரு வினாவும் எழுகிறது: அதுவும் ஒரு ஏகாதிபத்திய படுகொலையில் அமெரிக்க பங்கு பெற்ற பின், அதையொட்டிய அனைத்து நாடுகளின் தொழிலாளர்களின் அனுபவங்களும் இருக்கும்போது  இருபதாம் நூற்றாண்டின் இரண்டாம் கால் பகுதியில் இந்த தரப்படுத்தப்பட்ட சமரசவாதம் நடைமுறையில் அடைவது எப்படிச் சாத்தியமாயிற்று,? இக்கேள்விக்கு விடை பழைய நிகழ்வுகள் ஏதும் இதனுடன் ஒப்பிடப்பட முடியாதவகையில் அமெரிக்க மூலதனத்தின் சக்தியில் தங்கியிருக்கிறது.

ஐரோப்பாவிலும் உலகின் பல்வேறுபகுதிகளிலும் முதலாளித்துவ அமைப்புமுறை சில சோதனைகளை மட்டும் செய்யவில்லை. தந்தை ஆதிக்க முறையிலிருந்து அடிமைத்தனத்திலிருந்து பண்ணை அடிமைமுறையிலிருந்து இறுதியாக முதலாளித்துவம் என்று மனிதகுலத்தின் வரலாறே தொழிலாளர் சமூக அமைப்பை தோற்றுவிக்க, புதிய விதத்தில் அமைக்க, முன்னேற்ற, உயர்த்த மேற்கோள்ளப்பட்ட சங்கிலித் தொடர் போன்ற பிணைந்த முயற்சிகள் என்றே  நோக்கப்படுகின்றது.

முதலாளித்துவத்துடன்தான் வரலாறு மிக அதிக அளவிலான பரிசோதனைகளை நடத்தியுள்ளது; முதலில் பல வகைப்பட்ட முறைகளில் இவை ஐரோப்பாவில் நிகழ்ந்துள்ளன. ஆனால் மிகப் பெரியதும்வெற்றிகரமானமுயற்சியும் வட அமெரிக்கக் கண்டத்தில் நடந்தது எனத் தோன்றுகிறது. இதைச் சற்றுச் சிந்தியுங்கள்: 15ம் நூற்றாண்டின் இறுதியில் அமெரிக்கா கண்டுபிடிக்கப்பட்டது; அதற்கு முன் ஐரோப்பா ஒரு வளம்நிறைந்த வரலாற்றைக் கடந்துள்ளது. 16, 17 மற்றும் 18ம் நூற்றாண்டுகளிலும், மற்றும் 19ம் நூற்றாண்டின் பெரும்பகுதியிலும் அமெரிக்கா என்பது தொலைவில் இருந்த ஒரு தன்னிறைவு பெற்ற உலகமாக, மகத்தான, கடவுளே கைவிட்ட காட்டுப்பகுதிகள் ஐரோப்பிய நாகரிகத்தின் மிச்சங்களைக் கொண்டு இருந்தது.

இதற்கிடையில், “எல்லையற்ற சாத்தியப்பாடுகள்உடைய நாடு ஒன்று உருவாகிக் கொண்டிருந்தது, இன்னும் வளர்ந்து கொண்டிருக்கிறது, ஏனெனில் இங்கு இயற்கை ஒரு மகத்தான பொருளாதார விரிவாக்கத்திற்கு தேவையான நிலைமைகள் அனைத்தையும் தோற்றுவித்துள்ளது. பெருங்கடல் வழியே தன் மக்களிடம் இருந்து பெரும் விழிப்புற்ற, பெரும் பக்குவம் அடைந்த கூறுபாடுகளை, உற்பத்திச் சக்திகளை வளர்ப்பதற்கு சிறந்த தகுதி பெற்றவர்களை அங்கு அனுப்பி வைத்தது. அனைத்து ஐரோப்பிய மதப்-புரட்சிகர மற்றும் அரசியல்-புரட்சிகரத் தன்மைகள்-இவை அனைத்தும் எதைக் குறிக்கின்றன? அவைகள் முதலில் குட்டி முதலாளித்துவ வர்க்கத்தினுடையதும் பின்னர் தொழிலாள வர்க்கத்தினுடையதுமான போராட்டங்கள் நிலபிரபுத்துவ முறை, மதகுருமார்களின் குப்பை கூளங்கள் என்று உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சிக்கு தடையாக இருந்தவற்றிற்கு எதிராக இருந்தன. இவைகள் மிக முன்னேற்றகரமான கூறுபாடுகளின் போராட்டங்களை குறிக்கின்றன.

 ஐரோப்பா அனைத்து வேடத்தை அகற்றிப் பெருங்கடலைக் கடந்து சென்றது. ஐரோப்பிய அரசுகளின் மலர்கள், அதன் மிகத் தீவிரக் கூறுபாடுகள், தங்கள் வாழ்வைத் தாங்களேதான் எப்படியும் அமைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்பியவர்கள் இந்த வரலாற்றுக் குப்பை இல்லாத ஒரு சூழ்நிலைக்கு, இயற்கையின் கன்னி இயல்பும் வற்றாத வளமும் நிறைந்த கண்டத்திற்குச் சென்றனர். அதுதான் அமெரிக்காவின் வளர்ச்சி, தொழில்நுட்பம் மற்றும் அமெரிக்காவின் செல்வத்திற்குத் அடிப்படையாக அமைந்தது.

ஆனால் வற்றாத இயற்கையிடம் இல்லாதிருந்தது மனிதனாகும். அமெரிக்காவில் மிகக் கடினமாகக் கிடைப்பது உழைப்புச் சக்தி என்றுதான் இருந்தது. நகர்தள வரிசை முறை (conveyor line) மூலம் உற்பத்தியை பெருக்குவது என்ற கோட்பாடு ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல. மனிதனுக்கு பதிலாக இயந்திரங்களை பயன்படுத்துவது, உழைப்புச் சக்தியை பெருக்குவது, பொருட்களை எடுத்து வருதல், எடுத்துச் செல்லுதல், மேலே கொண்டு செல்லுதல், கீழிறக்குதல் ஆகியவற்றை தானியங்கி இயந்திரத்தின் மூலம் செய்தல் என்பதன் வெளிப்பாடுதான் அது. இவை அனைத்தும் நகர்தள வரிசை முறை (conveyor line) வகையில் சாதிக்கப்பட்டனவே ஒழிய மனிதனின் முதுகுகள் மூலம் அல்ல. இதுதான் நகர்தள வரிசை முறை உற்பத்தி அமைப்பின் கோட்பாடாகும். மின்தூக்கி (lift or elevator) எங்கே கண்டுபிடிக்கப்பட்டது? மனிதன் ஒரு கோதுமைச் சாக்கை தன் முதுகில் சுமப்பதைத் தவிர்ப்பதற்காக அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. குழாய்கள் எங்கு கண்டுபிடிக்கப்பட்டது? திரவங்களை நகர்த்தி செல்வதற்காக 100,000 கிலோ மீட்டர் குழாய் வரிசையை அமெரிக்காவில் கண்டுபிடித்தார்கள். இறுதியாக நகர்தள வரிசை முறை தொழிற்சாலைக்குள் போக்குவரத்துக்கு பணிகளுக்கு அளிக்கப்பட்டது. அதன் மிக உயர்ந்த மாதிரியாக போர்ட் (Ford) நிறுவனத்தில் அமைப்புமுறை உலகம் முழுவதும் அறியப்பட்டதாக இருக்கிறது.

 அமெரிக்காவிற்கு பயிற்சித் தொழிலாளர் பற்றி குறைந்தளவே தெரிந்திருக்கிறது: அங்கு தொழிற்பயிற்சி கொடுப்பதற்கு நேரம் வீணடிக்கப்படுவது இல்லை; ஏனெனில் உழைப்புச் சக்திக்கு அதிக விலை கொடுக்க வேண்டும்; தொழிற்பயிற்சி முறைக்குப் பதிலாக தொழிலாளர் பகுப்பு முறை, தொழிலைப் பிரித்து மிக, மிகக் குறைந்த செயல்களின் தொகுப்பாகச் செய்வது என்பதற்கு அதிகப் பயிற்சி தேவையில்லை, அல்லது மிகக் குறைந்த பயிற்சி போதுமானது. இச்சிறுபாகங்கள் அனைத்தையும் தொழில் வழிவகையில் ஒன்றாகக் கொண்டுவருகிறது எது? படைப்பாற்றல் மிக்க முடிவில்லாத நாடாதான்; அதாவது நகர்தள வரிசை முறை நாடாதான் (conveyor line). அது கற்பிக்கும் பணியையும் கொண்டுள்ளது. மிகக் குறுகிய காலத்தில் ஒரு தெற்கு ஐரோப்பா அல்லது பால்கான் பகுதி அல்லது உக்ரைனில் இருந்து வந்துள்ள இளம் விவசாயி தொழில்துறைத் தொழிலாளராக மாற்றப்படுகிறார்.

வரிசையான உற்பத்தி மற்றும் தரம் பிரித்தல் என்பதும் அமெரிக்கத் தொழில்நுட்பத்துடன் இணைந்துள்ளது, அதாவது பெரும் அளவிலான உற்பத்தியுடன். உயர் தட்டுகளுக்கு தேவை எனக் கருதப்படும் பொருட்கள், பண்டங்கள் அனைத்தும் தனிநபர் விருப்பத்திற்கு ஏற்ப வித்தியாசமாக தயாரிக்கப்படுகின்றன; ஐரோப்பாவில் உள்ளதைவிட மிகச் சிறந்த முறையில் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கிலாந்தினால் நயமான துணிகள் தயாரிக்கப்படுகின்றன. நகைகள், கையுறைகள், வாசனைப்பொருட்கள் ஆகியவை பிரான்சில் இருந்து வருகின்றன. ஆனால் ஒரு பரந்த சந்தைக்கு தேவையான பெருமளவு உற்பத்தி என்றால் ஐரோப்பாவைவிட மிக உயர்ந்த நிலையில்தான் அமெரிக்கா உள்ளது. எனவேதான் ஐரோப்பிய சோசலிசம் அமெரிக்கப் பள்ளியில் தொழில்நுட்பங்களை கற்க நேரிட்டுள்ளது.

 பொருளாதாரத் துறையில் மிகத் தேர்ந்த வல்லுனரான ஹூவர், உற்பத்திப் பொருட்கள் தரம்பிரிக்கப்படுவதற்கான தீவிர பிரச்சாரத்தை மேற்கொள்கிறார். ஏற்கனவே அவர் தரம் பிரிக்கப்பட்ட பொருட்கள் உற்பத்திக்காக பெரும் அறக்கட்டளைகளுடன் ஏராளாமான ஒப்பந்தங்களை செய்துள்ளார். ஒரு அமெரிக்கர் தரம்பிரிக்கப்பட்டு பிறக்கிறார், தரம் பிரிக்கப்பட்ட முறையில் இறக்கிறார் என்றுகூடச் சொல்ல முடியும். இது எவ்வளவு வசதியானது என்பது பற்றி எனக்குத் தெரியவில்லை, ஆனால் 40 சதவீதம் விலை குறைவாக இருக்கிறது.

மக்கள் குடியேறுவதால் அமெரிக்க மக்கட்தொகையின் எண்ணிக்கையில் அதிக கூறுபாடுகள் (45%) ஐரோப்பிய மக்களைவிட பணிபுரிவதற்கு உகந்தவர்களாக உள்ளனர். முதலில் வயதுக்குழுக்களுக்கு இடையே உள்ள உறவுநிலை மாறுபட்டதாகும். இதையொட்டி நாடு முழுவதும் கூடுதல் உற்பத்தித் திறனைக் உருவாக்கியுள்ளது. இத்தகைய உற்பத்தியின் கூட்டுத் திறன், தலா தனித் தொழிலாளியின் கூடுதல் உற்பத்தியினால் அதிகம் பெருக்கம் அடைகிறது. இயந்திரமயமாக்கல் மற்றும் உழைப்பு வழிவகையை கூடுதல் அறிவார்ந்த முறையில் செயல்படுத்துவதால், அமெரிக்காவில் உள்ள ஒரு சுரங்கத் தொழிலாளி ஜேர்மனியில் உள்ளவரை விட இரண்டரை மடங்கு அதிகம் தாதுப்பொருட்களை எடுக்கிறார். ஓர் அமெரிக்க விவசாயி ஐரோப்பிய விவசாயியை விட இருமடங்கு உற்பத்தியைக் காட்டுகிறார். இவற்றின் விளைவுகள் என்ன என்பதைத்தான் நாம் காண்கிறோம்.

பண்டைய ஏதென்ஸ் மக்கள் சுதந்திர மனிதர்கள், ஏனெனில் ஒவ்வொரு ஏதென்ஸ் குடிமகனிடமும் நான்கு அடிமைகள் இருந்தனர் என்று கூறப்படுவது வழக்கம். அமெரிக்காவில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும் ஐம்பது அடிமைகள் உள்ளனர், ஆனால் இவை இயந்திரங்கள். இயந்திரச் சக்தியை [2] கணக்கீட்டு, அதை குதிரை வலுவாக (horse power) மாற்றினால், பால்குடிக்கும் குழந்தைகள் உட்பட ஒவ்வொரு அமெரிக்கரும் ஐம்பது இயந்திர அடிமைகளைக் கொண்டுள்ளனர் என்பதைப் பார்க்கிறோம். ஆனால் இதையொட்டி அமெரிக்கப் பொருளாதாரம் உண்மையான அடிமைகளைக் கொண்டுள்ளன, கூலி கொடுக்கப்படும் தொழிலாளர்களை பயன்படுத்துவதை இது தடுக்கவில்லை என்பது வெளிப்படை.

அமெரிக்காவின் தேசிய வருமானம் ஆண்டு ஒன்றிற்கு 60 பில்லியன் டாலர்கள் என உள்ளது. அனைத்துச் செலவினங்களும் கொடுக்கப்பட்ட பின் மிச்சமுள்ள பணமான ஆண்டுச் சேமிப்பு என்பது ஆறு அல்லது ஏழு பில்லியன் டாலர்களாக இருக்கிறது. நான் அமெரிக்காவை பற்றி மட்டுமே பேசுகிறேன்; அதாவது பழைய பாட நூல்களில் அந்த இடம் குறிக்கப்பட்டிருந்தது. உண்மையில் அமெரிக்கா உயர்வானதாகவும் வளமுள்ளதாகவும் இருக்கிறது. பிரிட்டிஷ் கிரீடத்திற்கு அவமதிப்பில்லாத வகையில் அமெரிக்காவின் ஒரு இணைந்த பகுதியாக கனடா இருக்கிறது. அமெரிக்க வணிகத்துறையின் ஆண்டு அறிக்கையைப் படித்தால், கனடாவுடனான வணிகம் உள்நாட்டு வணிகம் என்ற தலைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதை நீங்கள் காணலாம்; கனடா மரியாதையுடனும் சற்றே தவிர்க்கும் வகையிலும் அமெரிக்காவின் வடப்புற நீட்டிப்பு என்று குறிக்கப்படுகிறது, தேசங்களின் கழகத்தின் ஆசிகள் இன்றி மேலும் பிந்தையதிடம் ஆலோசனைகூடக் கேட்கப்படவில்லை, அதுவும் தக்க காரணத்திற்காக. இந்த Zags களின் தேவையும் இல்லை [சோவியத் அரசின் சிவில் செயற்பாடுகள் சட்டம், குறிப்பாகத் திருமணங்களைப் பற்றி]. ஈர்ப்பு மற்றும் ஒதுக்கும் பொருளாதார சக்திகள் ஏற்கனவே இயல்பாக நடந்து கொண்டிருக்கின்றன. ஆங்கில மூலதனம் கனடியத் தொழில்துறையில் 10 சதவிகிதம் கூட இல்லை. அமெரிக்க மூலதனம் மூன்றில் ஒரு பங்கிற்கும் மேலாகக் கொண்டுள்ளது; இந்த விகிதம் உறுதியாக வளர்ச்சி அடைந்து கொண்டுதான் வருகிறது. கனடாவில் இங்கிலாந்தில் இருந்து இறக்குமதிகள் 160 மில்லியன் என்று மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் அமெரிக்காவிடம் இருந்து 600 மில்லியன் டாலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்தில் இருந்து இறக்குமதிகள் அமெரிக்க இறக்குமதிகளைப் போல் 5 மடங்கு இருந்தன. பெரும்பாலான கனேடியர்கள் தங்களை அமெரிக்கர்கள் என்றுதான் கருதுகின்றனர்; விந்தையான முறையில் தன்னை ஆழ்ந்த முறையில் ஆங்கிலேய முறை எனக் கருதிக்கொள்ளும் பிரெஞ்சுப் பிரிவு இவ்வாறு நினைக்கிறது.

ஆஸ்திரேலியாவும் இதே கனேடிய வழிவகையைத்தான் கடந்து கொண்டிருக்கிறது என்றாலும் அது மெதுவான வேகத்தில்தான் நடைபெறுகிறது. ஆஸ்திரேலியா தன்னுடைய நிலைப்பாட்டை எந்த நாட்டின் கடற்படை ஜப்பானுக்கு எதிராகக் பாதுகாக்குமோ, அப்பணியைக் குறைந்த செலவில் செய்யுமோ, அத்துடன் இணைந்து நிற்கும். வரும் குறைந்த எதிர் காலத்தில் அமெரிக்காவிற்கு இந்தப் போட்டியில் வெற்றி உறுதியாகிறது. எல்லாச் சம்பவங்களாலும் அமெரிக்காவிற்கும், கிரேட் பிரிட்டனுக்கும் இடையே ஒரு போர் மூண்டால், “பிரிட்டிஷ் டொமினியனான கனடா அமெரிக்காவிற்கு ஆதரவாக இங்கிலாந்தை அது எதிர்த்து நிற்கையில் மனித சக்தி மற்றும் உணவுகளை வழங்கி பங்காற்றும் வகையில் பணிபுரியும்.

இவைகள் அமெரிக்காவின் பொருள்சார் சக்தியின் முக்கிய கூறுபாடுகளாகும். இச்சக்திதான் அமெரிக்க முதலாளித்துவத்தினரை பண்டைய பிரிட்டிஷ் பூர்ஷ்வாக்களின் பழைய நடைமுறையை பின்பற்ற அனுமதிக்கிறது. உயர்குடி தொழிலாளர் பிரபுத்துவத்தை கொழுக்கவைக்கிறது. இந்த வகையில் தொழிலாள வர்க்கத்தை விலங்கிட்டு வைத்திருக்கிறது. இந்த நடைமுறையில் அவர்கள் அடைந்துள்ள முழுமைத்தன்மை பிரிட்டிஷ் பூர்ஷ்வா ஒருபோதும் கற்பனைகூட செய்திருக்க முடியாத அளவிற்கு உள்ளது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் புதிய பாத்திரங்கள்

கடந்த சில ஆண்டுகளில் உலகத்தின் பொருளாதார அச்சு முற்றிலும் முன்னேற்றமான வகையில் மாற்றப்பட்டுள்ளது. அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையே உள்ள உறவு அடிப்படையில் மாற்றப்பட்டுள்ளது. இது போரின் விளைவினால் ஏற்பட்டதாகும். இந்த மாற்றம் நீண்ட காலமாகவே தயாரிப்பில் இருந்துள்ளது என்பது இயல்புதான்: இதைப்பற்றிய அடையாள அறிகுறிகள் இருந்தன, ஆனால் இது அண்மையில்தான் நிறைவேற்றப்பட்ட உண்மையாக மாறியிருக்கிறது. இப்பொழுது நாம் மனிதகுலத்தின் பொருளாதார வாழ்வு, அதையொட்டி மனிதக் கலாச்சாரத்தில் நிகழ்ந்துள்ள இந்த மகத்தான மாற்றத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ள முயல்வோம். இது தொடர்பாக ஒரு ஜேர்மனிய எழுத்தாளர் கோத்தேயின் சொற்களை கோப்பர்நீக்கஸின் கோட்பாடு சமகாலத்தியவர்களிடையே ஏற்படுத்திய அசாதாரண உணர்வைப் பற்றி எழுதிய சொற்களை நினைவு கூர்ந்துள்ளார்; அதில் சூரியன் ஒன்றும் பூமியைச் சுற்றிவரவில்லை, மாறாக ஒரு சாதாரண நடுத்தர அளவிலுள்ள கிரகம் சூரியனைச் சுற்றி வருகிறது என இருந்தது. பலர் இதை நம்ப மறுத்தனர். அவர்களுடைய பூமியைப் பற்றிய தேசபக்தி சீற்றத்தைத்தான் அளித்தது. இதேதான் இப்பொழுது அமெரிக்காவைப் பொறுத்தவரையிலும் உண்மையாகியுள்ளது. அதாவது அமெரிக்காதான் முதலாளித்துவ உலகை ஆள்கிறது என்பதால் ஐரோப்பிய முதலாளித்துவம் தான் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டது என்பதை நம்புவதற்கே விரும்பவில்லை.

இந்தப் பொருளாதார சக்திகளின் மகத்தான உலகத் தன்மை நிறைந்த மாற்றத்தைத் தயாரித்த இயற்கையான மற்றும் வரலாற்றுக் காரணங்களை நான் ஏற்கனவே சுட்டிக் காட்டியுள்ளேன். ஆனால் ஒரே அடியில் அமெரிக்காவை உயர்த்துவதற்கும், ஐரோப்பாவைத் தாழ்த்துவதற்கும், உலக அச்சில் திடீரென மாற்றத்தை எடுத்துக் காட்டுவதற்கு ஒரு போர் தேவைப்பட்டது. ஐரோப்பிய அழிவிற்கு ஒரு முயற்சி என்று இருந்த போர் அமெரிக்காவிற்கு கிட்டத்தட்ட 25 பில்லியன் டாலர்கள் செலவைக் கொடுத்தது; அமெரிக்க வங்கிகள் இப்பொழுது 60 பில்லியன் டாலர்களை இருப்பாகக் கொண்டுள்ளன என்பதை நாம் நினைவுகூர்ந்தால், 25 பில்லியன் என்பது ஒப்புமையில் குறைவுதான். மேலும் 10 பில்லியன் ஐரோப்பாவிற்கு கடனாகச் சென்றது. கொடுக்கப்படாத வட்டியைக் கருத்திற் கொண்டால் இந்த 10 பில்லியன்கள் இப்பொழுது 12 பில்லியன் என்று ஆகியுள்ளன, ஐரோப்பா தன் அழிவிற்காக அமெரிக்காவிற்கு செலுத்தத் தொடங்கியுள்ளது.

இத்தகைய வழிமுறைதான் அமெரிக்கா உலகம் முழுவதிலும் அதன் விதிகளின் எஜமானராக உயர்வதற்கு ஏற்பட்டது. 115 மில்லியன் [3]  மொத்த மக்கட் தொகையை கொண்ட இந்த நாடு, முற்றிலும் ஐரோப்பாவைத் தன் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்துள்ளது; ஆனால் ஒரே விதிவிலக்கு சோவியத் ஒன்றியம்தான். நம் முறை இன்னும் வரவில்லை, அது வராது என்பதையும் நாம் அறிவோம். ஆனால் நம் நாட்டை விட்டு நீக்கினால், இன்னும் 345 மில்லியன் ஐரோப்பியர்கள், அதாவது அமெரிக்காவைப் போல் மூன்று மடங்கு அதிகமாக மக்கள் அதில் உள்ளனர். நாடுகளுக்கு இடையேயான இந்தப் புதிய உறவுகளின் பங்கு அவற்றின் தனித்தனிச் செல்வங்களால் நிர்ணயிக்கப்படுகிறது. பல நாடுகள் தங்கள் தேசிய வருமானங்களைப்பற்றிக் குறித்துள்ள மதிப்பீடுகள் துல்லியமாக இல்லை; ஆனால் தோராயமாக இருக்கும் புள்ளிவிவரங்கள் போதுமானவை. ஐரோப்பாவும் மற்றும் அமெரிக்காவும் 50 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த நிலைமையைப் பற்றிப் பார்ப்போம். அப்பொழுது  பிரான்சிற்கும் ஜேர்மனிக்கும் இடையே போர் நடைபெற்று வந்தது. அமெரிக்காவில் செல்வம் அப்பொழுது 30 பில்லியன் டாலர்கள் என்று மதிப்பிடப்பட்டிருந்தது, இங்கிலாந்தின் செல்வம் 40 பில்லியன்கள் என்று இருந்தது, பிரான்சின் செல்வம் 33 பில்லியன்கள், ஜேர்மனியுடையது 38 பில்லியன்கள் என இருந்தன. இந்நாடுகளுக்கு இடையேயான செல்வத்தின் தரங்கள் மிக அதிகம் இல்லை என்பது தெளிவாகிறது. ஒவ்வொன்றும் 30 முதல் 40 பில்லியன்களைக் கொண்டிருந்தது. உலகின் இந்த நான்கு செல்வம் கொழித்த நாடுகளில் அமெரிக்காவின் செல்வம்தான் குறைவாக இருந்தது. இது 1872ம் ஆண்டு நிலைமை ஆகும். ஆனால் இப்பொழுது அரை நூற்றாண்டிற்குப் பின்னர் நிலைமை என்ன? ஜேர்மனி 1872ல் இருந்ததைவிட வறிய நிலையில் உள்ளது (36 பில்லியன்கள்); பிரான்ஸ் கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகச் செல்வத்தை (68 பில்லியன்களை) கொண்டுள்ளது; இதேபோல் இங்கிலாந்திடம் (89 பில்லியன்கள்) உள்ளது; ஆனால் அமெரிக்காவின் செல்வம் 320 பில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்விதத்தில் நான் மேற்கோளிட்டுள்ள ஐரோப்பிய நாடுகளில் ஒன்று அதன் பழைய நிலைமைக்குப் பின் வாங்கியுள்ளது, மற்ற இரண்டும் அவற்றின் செல்வத்தை இருமடங்காக ஆக்கியுள்ளன, அமெரிக்காவோ 11 மடங்கு அதிகமான செல்வக் கொழிப்பைக் கொண்டுள்ளது. எனவேதான் ஐரோப்பாவின் அழிவிற்கு 15 பில்லியன்களை செலவு செய்ததில் அமெரிக்கா அதன் நோக்கத்தை முற்றிலும் அடைந்துள்ளது.

போருக்கு முன்னால் அமெரிக்கா ஐரோப்பாவிடம் கடன் வாங்கிய நாடாக இருந்தது. உலகின் பொருட்களுக்கு ஐரோப்பாதான் முக்கிய ஆலை மற்றும் முக்கிய இருப்பாக இருந்தது. மேலும் ஐரோப்பா, அதுவும் எல்லாவற்றிற்கும் மேலாக இங்கிலாந்து, உலகின் மத்திய வங்கியாளராக இருந்தது. இந்த மூன்று முக்கிய பங்குகளும் இப்பொழுது அமெரிக்காவால் ஆட்கொள்ளப்பட்டுள்ளது. ஐரோப்பா பின்நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது. அமெரிக்காதான் முக்கிய ஆலை, முக்கிய இருப்பு மற்றும் உலகின் மத்திய வங்கி என்று எடுத்துக்கொண்டுள்ளது.

முதலாளித்துவ சமூகத்தில் தங்கம் ஒரு உறுதியான பங்கைக் கொண்டுள்ளது என்பதை நாம் அறிவோம். சோசலிச ஆட்சியில் தங்கம் சில பொது இடங்களை கட்டுவதற்கான தேவைப்பொருளாக பயன்படுத்தப்படும் என்று லெனின் எழுதினார். ஆனால் இது சோசலிசத்தின்கீழ்தான் நடக்கும். முதலாளித்துவத்தின் கீழ் வங்கியின் காப்புப் பெட்டகத்தில் தங்கம் இருப்பதைவிட வேறு எதுவும் முக்கியம் அல்ல. இந்தப்பிரிவில் அமெரிக்காவின் நிலை என்ன? போருக்கு முன்பு அமெரிக்காவின் தங்க இருப்பு, நான் தவறாகக் கணக்கிடவில்லை என்றால் 0.9 பில்லியன்கள் ஆகும். 1925 ஜனவரி முதல் தேதி அன்று இது நான்கரை பில்லியன்களாக உயர்ந்தது; இதுவே உலகின் மொத்த தங்க இருப்பில் பாதியைப் பிரதிபலிக்கிறது; இன்று இந்த விகிதம் 60 சதவிகிதத்திற்கும் குறைந்தது அல்ல.

இப்பொழுது அமெரிக்கா அதன் கரங்களில் உலகின் 60 சதவிகித தங்கத்தைக் குவித்து வைத்திருக்கும்போது, ஐரோப்பாவில் என்ன நடந்தது? ஐரோப்பா சரிவுற்று வந்தது. ஐரோப்பிய முதலாளித்துவம் குறுகிய தேசிய அரச வடிவமைப்பிற்குள் மூச்சுத் திணறிக்கொண்டு இருந்ததால் போரில் ஈடுபட நேர்ந்தது. முதலாளித்துவம் இந்த எல்லைகளை விரிவாக்க முயன்றுதனக்கென ஒரு பெரிய இடத்தைத் தோற்றுவிக்க முற்பட்டது. இதில் மிக அதிகமான அழுத்தம் மிகவும் வளர்ச்சியடைந்த ஜேர்மனிய முதலாளித்துவத்தால் செலுத்தப்பட்டது; அதுஐரோப்பாவை ஒழுங்கமைப்பதை”  தனது நோக்கமாக முன்வைத்துக் கொண்டது.

ஆனால் போரின் விளைவு என்ன? வெர்சாய் உடன்படிக்கை ஐரோப்பாவில் 17 கூடுதலான, சுதந்திரமான, புதிய அரசுகளையும் பகுதிகளையும் தோற்றுவித்தது. புதிய 7,000 கி.மீ. எல்லைகளையும், சுங்கவரித் தடைகளையும் ஐரோப்பா சேர்த்துக் கொண்டது; மேலும் இப்புதிய சுங்கத் தடைகளின் இருபுறத்திலும் ஏராளமான கோட்டைகளும் இராணுவங்களும் தோற்றுவிக்கப்பட்டன. இப்பொழுது ஐரோப்பாவில் போருக்கு முன்பு இருந்ததைவிட ஒரு மில்லியன் சிப்பாய்கள் அதிகமாக உள்ளனர். இத்தகைய சாதனைகளுக்காக ஐரோப்பா பெருமளவு பொருள்சார் மதிப்புக்களை அழித்து, தன்னையே பேரழிவிற்கு உட்படுத்திக் கொண்டு, வறிய நிலையிலும் தன்னை ஆழ்த்திக் கொண்டது.

ஆனால் இத்துடன் நின்றுவிடவில்லை. அதன் துரதிருஷ்டங்கள் அனைத்திற்கும், அதன் பொருளாதார அழிவிற்கு மற்றும் வணிகத்தை உருக்குலைத்த புதிய, பொருளற்ற சுங்கத் தடைகள், அதன் புதிய எல்லைகள், இராணுவங்களுக்காக தன்னையே சிதைத்து, அழித்துக் கொண்டு இழிசரிவிற்கு உட்படுத்திக் கொண்டதற்காகவும், போருக்காவும் வெர்சாய் ஒப்பந்தத்தையும் கொள்வதற்காகவும், ஐரோப்பா அமெரிக்காவிற்கு அதன் போர்க்கடன்களுக்காக வட்டியையும் அளிக்க வேண்டியதாயிற்று. ஐரோப்பா வறிய நிலையில் தள்ளப்பட்டுள்ளது. அதனால் சேர்க்கப்படக்கூடிய மூலப்பொருட்கள் போருக்கு முன்பு இருந்ததைவிட 10 சதவிகிதம் குறைவாகியது. ஐரோப்பா உலகப் பொருளாதாரத்தில் கொண்டுள்ள குறிப்பான கனம் என்பது பல மடங்கு குறைந்து விட்டது. தற்போதைய ஐரோப்பாவில் ஒரே உறுதியான தன்மையைக் கொண்டிருப்பது -வேலையின்மைதான். விந்தையான முறையில், தப்பிப்பதற்கு இடம் தேடும் முதலாளித்துவ பொருளாதார வல்லுனர்கள் ஆதிகால திரட்சி சகாப்தத்தில் இருந்து மிகப் பிற்போக்குத்தனக் கோட்பாடுகளை ஆவணத்தில் இருந்து தோண்டி எடுக்கின்றனர். மால்தூசியக் கோட்பாடு மற்றும் நாடு விட்டுக் குடியேறுதலில் வேலையின்மைக்கு அவர்கள் தீர்வு காண முற்பட்டுகின்றனர். விரிவாக்க காலத்தில் வெற்றிகரமான முதலாளித்துவம் இத்தகைய கோட்பாடுகளுக்கான தேவைகளை கொண்டிருக்கவில்லை. ஆனால் இப்பொழுது ஐரோப்பா வீழ்ச்சி அடைந்து, மூப்பின் இயலாமையும் முடக்கத் தன்மையும் கொண்டுள்ளதால், பழைய சூனிய வைத்தியரின் தீர்வுகளுக்கும் பழைய சிறுபிள்ளைத்தனமாக கருத்துக்களுக்கும் அது உறைவிடமாகியுள்ளது.

அமெரிக்காவின் ஏகாதிபத்திய விரிவாக்கம்

அமெரிக்காவின் சக்தி, ஐரோப்பாவின் வலிமை குன்றல் ஆகியவற்றில் இருந்து தவிர்க்க முடியாத வகையில் உலகச் சக்திகள் புதிய பிரிவினைக்கு, செல்வாக்கு மண்டலங்களுக்கு மற்றும் உலகச் சந்தைகளுக்கு என உட்படுகின்றன. அமெரிக்கா விரிவடைந்தே தீர வேண்டும், ஐரோப்பா சுருங்குமாறு கட்டாயப்படுத்தப்படுகிறது. இதில்தான் முதலாளித்துவ உலகில்  நடைபெற்று வரும் அடிப்படைப் பொருளாதார வழிவகைகளின் விளைவுகள் துல்லியமாக அடங்கியுள்ளன. அமெரிக்கா அனைத்து உலக வழிவகைகளையும் நாடி அடைய வேண்டும், எல்லா இடங்களிலும் தாக்குதலை மேற்கொள்ள வேண்டும். மிகவும் கடுமையானசமாதானவகையில்தான் அமெரிக்கா செயல்படுகிறது; அதாவது இதுகாறும் ஆயுத வலிமையைப் பயன்படுத்தாமல், மத எதிர்ப்பாளர்களை புனித விசாரணையினர்குருதி கொட்டாமல் உயிரோடு எரித்தது போன்ற முறையில். அமெரிக்காசமாதான வகையில்தான் விரிவாக்கம் அடைகிறது, ஏனெனில் அதன் எதிரிகள், தங்கள் பற்களைக் கடித்துக் கொண்டு ஒவ்வொரு அடியடியாக இப்புதிய சக்திக்கு முன் பின்வாங்குகின்றனர்; வெளிப்படையான மோதல் என்ற ஆபத்தைத் தவிர்க்க விரும்புகின்றனர். அதுதான் அமெரிக்காவின் அமைதிவாதகொள்கையின் அடித்தளம் ஆகும். அமெரிக்காவின் தற்போதைய போர் ஆயுதம் இதுதான்: பில்லியன் கணக்கான தங்க இருப்புக்களின் ஆதரவைப் பெற்றுள்ள நிதிய மூலதனம். இது ஒரு கொடூரமான, மாபெரும் சக்தி, உலகின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிடும்போது மற்றும் குறிப்பாக பேரழிவிற்குட்பட்ட, வறிய நிலையில் தள்ளப்பட்டுள்ள ஐரோப்பாவுடன் ஒப்பிடும்போது. எந்த ஐரோப்பிய நாட்டிற்கும் கடன்கள் கொடுப்பது அல்லது மறுப்பது, என்பது பல நேரமும் அதிகாரத்தில் இருக்கும் அரசியல் கட்சியின் விதியை மட்டும் இல்லாமல் பூர்ஷ்வா ஆட்சியின் விதியையே பொறுத்துத்தான் உள்ளது. இன்றைய காலம்வரை அமெரிக்கா மற்ற நாடுகளின் பொருளாதாரங்களில் 10 மில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளது.

இந்த பத்து பில்லியன்களில், இரண்டு ஐரோப்பாவிற்கு ஏற்கனவே அதன் பேரழிவிற்காக செலவழிக்கப்பட்ட 10 பில்லியன்களைவிட தனியானது ஆகும். நாம் அனைவரும் அறிந்துள்ளபடி இப்பொழுது கடன்கள் ஐரோப்பாவைமீட்பதற்கு வழங்கப்படுகின்றன. பேரழிவு, பின்னர் மீட்பு: இவை இரண்டும் ஒன்றையொன்று தழுவி நிற்கின்றன. அதே நேரத்தில் இரண்டிற்கும் ஒதுக்கப்பட்ட பணத்தின் மீதான வட்டி அதே இருப்புத் தொகுப்பில் தொடர்ந்து குவிகிறது. அமெரிக்கா ஒரு பொருளாதார நிலைப்பாட்டின் பார்வையில் அதிக மூலதனத்தை இலத்தீன் அமெரிக்காவிலும் செய்துள்ளது, இன்னும் கூடுதலான வகையில் வட அமெரிக்கா மீது ஆதிக்கம் செலுத்துகிறது. தென்னமெரிக்காவிற்குப்பின், கனடாதான் அதிக கடன்களைப் பெற்றுள்ள நாடு; அதன் பின் ஐரோப்பா வருகிறது. உலகின் மற்ற பகுதிகள் இதைவிடக் குறைவாகத்தான் பெற்றிருக்கும்.

10 பில்லியன் டாலர்கள் என்பது அமெரிக்கா போன்ற சக்தி வாய்ந்த நாட்டிற்கு ஒரு சிறிய தொகைதான்; ஆனால் இத்தொகை விரைவில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது; அந்த வழிவகையைப் புரிந்து கொள்ள, அதன் வேகத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்வது மிகவும் முக்கியமாகும். போரைத் தொடர்ந்து ஏழு ஆண்டுகளில் அமெரிக்கா வெளிநாடுகளில் கிட்டத்தட்ட 6 பில்லியன் டாலர்களை முதலீடு செய்தது. அதில் கிட்டத்தட்ட பாதித் தொகை கடந்த இரண்டு ஆண்டுகளில் வழங்கப்பட்டவை; 1925ல் முதலீடுகள் 1924ம் ஆண்டைவிட மிக அதிகமாக இருந்தன.

போருக்கு முன்பு அமெரிக்காவிற்கு வெளிநாட்டு முதலீடு தேவைப்பட்டிருந்தது இம் மூலதனத்தை ஐரோப்பாவில் இருந்து பெற்றுத் தன்னுடைய தொழில்துறையில் அவற்றை ஈடுபடுத்தியது.

அமெரிக்க தொழிற்துறை சக்தியின் வளர்ச்சி ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் நிதிய மூலதனம் விரைவாக அமைக்கப்படுவதற்கு வழிவகுத்தது. இது தொடங்கியவுடன் இந்த வழிவகை இன்னும் விரைவான வகையில் பெருகியது. ஊகம் என்ற நிலை மட்டுமே இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருந்த தன்மை இப்பொழுது நம் கண்கள் முன்னாலேயே நடைபெறுகிறது. ஆனால் இதுவும் ஒரு தொடக்கம்தான். அமெரிக்க நிதிய மூலதனம் உலகை வெற்றிகொள்ளுவதற்கான செயற்பாடுகள் இனித்தான் உண்மையில் தொடங்கும்.

ஒரு மிகத் தீவிர முக்கியத்துவம் வாய்ந்த  உண்மையாதெனில் அமெரிக்க மூலதனம் தொழிற்துறைக் கடன்களுக்கு சாதகமாக இருந்துகொண்டு அரசாங்க கடன்களை கைவிட்டிருந்தது. இது போதுமான தெளிவான பொருளைத் தருகிறது. “நாங்கள் ஜேர்மனியிலும் இங்கிலாந்திலும் மீண்டும் தேசிய நாணயத்தை உறுதிப்படுத்தும் வாய்ப்பைக் கொடுத்துள்ளோம்; பிரான்சிலும் இதேபோல் குறிப்பிட்ட நிபந்தனைகளை ஒட்டிக் கொடுக்கத் தயாராக உள்ளோம்; ஆனால் எங்களைப் பொறுத்தவரை ஒரு இலக்கிற்கு இது ஒரு வழிவகைதான். அத்துடன் எங்களுடைய இலக்கு உங்கள் பொருளாதாரத்தின் மீது ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதுதான்.”

சமீபத்தில் நான் ஜேர்மனிய உலோகத் தொழிற்துறையின் குரலான Der Tag ல் Dawes or Dillon  என்ற தலைப்பில் வெளிவந்த ஒரு கட்டுரையைப் படித்தேன். ஐரோப்பாவை வெற்றி கொள்வதற்காக அமெரிக்க நிதியம் அனுப்பி வைத்துள்ள condottieri (கடற்கொள்ளைக்காரர்கள் போன்ற நிறுவனம்) உடைய புதிய நிறுவனங்களில் ஒன்று டில்லன் ஆகும். இங்கிலாந்து Cecil Rhodes ஐ அதன் கடைசி காலனித்துவ தீரச் செயல்களுக்காக பெருமளவில் தோற்றுவித்தது; அவர் தென்னாபிரிக்காவில் ஒரு புதிய நாட்டை நிறுவினார். இத்தகைய நபர்கள் இப்பொழுது அமெரிக்காவில் பிறக்கின்றனர்; தென்னாபிரிக்காவை தோற்றுவிக்க அல்ல, மத்திய ஐரோப்பாவில் ஆதிக்கம் பெறுவதற்கு. டில்லனின் பணி ஜேர்மனிய உலோகத் தொழிலை மிகக் குறைந்த விலைக்கு வாங்குவதாகும். இந்த நோக்கத்திற்காக அவர் 50 மில்லியன் டாலர்களை மட்டுமே சேகரித்துள்ளார்; ஐரோப்பா இப்பொழுது தன்னை அதிக விலையில் விற்கவில்லை. இந்த 50 மில்லியன் டாலர்களை தன் பையில் கொண்டு அவர் ஜேர்மனி, பிரான்ஸ், லுக்சம்பேர்க் போன்ற எல்லைகளினால் ஏற்படும் ஐரோப்பிய தடைகளைப் பற்றி சிறிதும் கவலை கொள்ளவில்லை. அவர் நிலக்கரியையும், உலோகத்தையும் இணைக்க வேண்டும்; அவர் ஒரு மத்திய ஐரோப்பிய அறக்கட்டளையைத் (Trust) தோற்றுவிக்க விரும்புகிறார். அவர் ஒன்றும் அரசியல் புவியியல் பற்றி பொருட்படுத்துவதில்லை; அவர் அதுபற்றி அதிகம் தெரிந்திருக்கவில்லை என்றுகூட நான் நம்புகிறேன். அது என்ன செய்துவிடும்? தற்பொழுது ஐரோப்பாவில் 50 மில்லியன் டாலர்கள் என்பது எவ்வித புவியியலுக்கும் கொடுக்கலாம். நான் கூறியதுபோல், அவருடைய நோக்கம் ஒற்றை அறக்கட்டளையின்கீழ் மத்திய ஐரோப்பாவில் உள்ள உலோகத் துறையைக் கொண்டுவந்து, பின் அதே அமெரிக்க எஃகு அறக்கட்டளைக்கு எதிராக நிறுத்த வேண்டும்; பிந்தையதின் தலைவரோ காரி ஆவார். இதில் ஐரோப்பா அமெரிக்க எஃகு அறக்கட்டளைக்கு எதிராகத்தன்னைக் காத்துக் கொள்ளுவதுஎன்பது செயலுக்கு வரும்; அதாவது இரு அமெரிக்க நீராளிகள் (octopuses) ஒன்றோடு ஒன்று மோதி பின்னர் ஐரோப்பாவைத் திட்டமிட்டு சுரண்டுவதற்காக ஒன்றுபடும் என்பதைத்தான் குறிக்கும். எனவேதான் ஜேர்மனிய உலோகத்துறையின் செயற்கருவி  துல்லியமாக “Dawes or Dillon” மாற்றீடுகள் பற்றி கவனம் எடுத்துள்ளது. விருப்புரிமை குறைந்ததுதான், இங்கு மூன்றாவது விருப்புரிமைக்கு இடம் இல்லை. டாஸ் என்பவர் முழு வலிமையும் கொண்டுள்ள கடன் கொடுப்பவர். பணிந்து போவதைத்தவிர, வேறு எதையும் அவரிடம் செய்வதற்கு இல்லை. ஒரு சிறப்பு வகைதான் அவர் என்பது உண்மைதான், ஆனால் ஒருவேளை அவர் நம்மை மூச்சுத் திணறடிக்க வைக்கமாட்டார். இக்கட்டுரைடில்லனோ டாஸோ, (Dillon or Dawes)  1926ல் ஜேர்மனிக்கு இதுதான் மிக முக்கியமான பிரச்சினை.” என்ற வசனத்துடன் முடிவடைந்த்து

பங்குகளை வாங்குவதின் மூலமாக “D வங்கிகள்என்று அழைக்கப்படுவதின் மீதான கட்டுப்பாட்டை அமெரிக்கர்கள் ஏற்கனவே பெற்றுவிட்டனர்; இவை ஜேர்மனியில் நான்கு முக்கிய வங்கிகள் ஆகும். ஜேர்மனிய எண்ணெய் தொழிற்துறை அமெரிக்கன் ஸ்டாண்டர்ட் ஆயில் நிறுவனத்தில் வால்களைப் பிடித்துக் கொண்டு தொங்குகிறது என்பது வெளிப்படை. முன்பு ஜேர்மனிய நிறுவனத்திற்கு உரிமையாக இருந்த துத்தநாகச் சுரங்கங்கள் ஹாரிமனுடைய கரங்களுக்குச் சென்றுவிட்டன; உலகச் சந்தையில் நயமற்ற துத்தநாகம் இதையொட்டி ஏகபோக உரிமையாக ஹாரிமன் கைகளில் உள்ளது.

அமெரிக்க மூலதனம் சில்லறை மற்றும் மொத்த வணிகத்தைச் செய்கிறது. போலந்தில் அமெரிக்க-ஸ்வீடிஷ் இணைந்த அறக்கட்டளை அதன்  முதல் தயாரிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இத்தாலியில் அமெரிக்கர்கள் ஒரு படி மேலே சென்றுள்ளனர். அமெரிக்க நிறுவனங்கள் இத்தாலியில் கையெழுத்திடப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் மிகவும் படிப்பினை கொடுப்பவை. கிழக்கு நோக்கிய  சந்தையை நிர்வகிக்கும் பொறுப்பு இத்தாலிக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அமெரிக்கா பாதியளவு முடிந்த உற்பத்திப் பொருட்களை இத்தாலிக்கு கொடுத்து பிந்தையது கீழைத்தேச நுகர்வோருக்கு ஏற்றவாறு அவற்றை முழு உற்பத்திப் பொருட்களாக செய்து கொள்ள முடியும். முழு விவரங்களைப் பற்றியும் பொருட்படுத்துவதற்கு அமெரிக்காவிற்கு நேரம் இல்லை. தரம் பிரிக்கப்பட்ட பொருட்களை அது வழங்கும். அனைத்துச் சக்தியையும் கொண்டுள்ள அட்லான்டிக்கை கடந்து அப்பென்னிஸ்க்கு (Appenines) வந்த வணிகர் அங்குள்ள கைவினைஞரை அணுகிக் கூறுகிறார்: “உங்களுக்குத் தேவையானதை நான் கொடுக்கிறேன்; இதை முழுமைப்படுத்தி ஆசிய மக்களின் தேவைக்கேற்ப வழங்கவும்.”

இந்த விவகாரங்களில் இன்னும் பிரான்ஸ் ஈடுபடவில்லை. அது பிடிவாதமாக இருப்பதுடன் எதிர்க்கவும் செய்கிறது. ஆனால் அதுவும் வளைந்து கொடுத்தே ஆக வேண்டும். தன்னுடைய நாணயத்தை அது உறுதிப்படுத்த வேண்டும்-அதாவது அமெரிக்காவின் சுருக்குக் கயிற்றுக்குள் தன் தலையைக் கொடுத்தாக வேண்டும். ஒவ்வொரு நாடும்  சாம் மாமாவின் முன் தன் பங்கிற்காகக் காத்திருக்கின்றன.

இந்த நிலையை அடைந்து பாதுகாப்பதற்கு அமெரிக்கர்கள் எவ்வளவு செலவழித்துள்ளனர். ஒரு சிறிய தொகைதான். போர்க்கடன்களை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் வெளிநாடுகளில் முதலீடுகள் என்பது 10 பில்லியன்களுக்கு வருகிறது. மொத்தத்தில் இரண்டரை பில்லியன்களை ஐரோப்பா பெற்றுள்ளது; மேலும் அமெரிக்கா ஏற்கனவே அதை ஒரு வெற்றி பெற்ற நாட்டை நடத்துவது போல் நடத்திக் கொண்டிருக்கிறது. ஐரோப்பிய பொருளாதாரத்தில் அமெரிக்க முதலீடுகள் நூறில் ஒரு பங்கைத்தான் பிரதிபலிக்கின்றன, ஐரோப்பாவின் மொத்தச் செல்வத்தில் அதையும் விட குறைந்த பங்கைத்தான் கொண்டுள்ளன. ஆனால் நிலைமை ஊசலாடும்போது ஒரு புறத்திற்கு அதைத் தள்ளுவதற்கு ஒரு விரலசைப்பு போதுமானது. இந்தச் சுண்டு விரல் மூலம் அசைப்பை அமெரிக்கர்கள் செய்கின்றனர்; ஏற்கனவே அவர்கள் இதில் வல்லுனர்கள். ஏற்கனவே ஓரளவு மீட்கப்பட்டுவிட்ட சுற்றோட்ட மூலதனத்திற்குத் தேவையான முழு மீட்புப் பணிக்கு வேண்டிய போதுமான மூலதனத்தை ஐரோப்பா கொண்டிருக்கவில்லை. நூற்றுக்கணக்கான மில்லியன்கள் மதிப்புடைய கட்டிடங்கள் ஐரோப்பாவிடம் உள்ளன, ஆனால் கருவிகளைச் செயல்படுத்தத் தேவையான பத்து மில்லியன் ரொக்கம் இல்லை. அமெரிக்கர் வருகிறார், பத்து மில்லியன்களைக் கொடுக்கிறார், தன் நிபந்தனைகளை விதிக்கிறார். அவர்தான் எஜமானர், ஆணைகளைப் பிறப்பிக்கிறார்.

அமெரிக்கா இப்பொழுது தோற்றுவித்துள்ள புதிய சிசில் ரோட்ஸ்களில் ஒருவரைப் பற்றிய மிக நயமான கட்டுரை ஒன்றை நான் பெற்றுள்ளேன். இவர்களுடைய பெயர்களை நாம் கட்டாயமாகத் தெரிந்துகொள்ள வேண்டும். இது ஒன்றும் களிப்புத் தருவதில்லை, ஆனால் வேறு வழியில்லை, அறிந்து கொள்ளப்பட வேண்டும். டாஸ் (Dawes) பெயரை நாம் நன்கு அறிந்துள்ளோம். டாஸின் மதிப்பு ஒரு குண்டூசியின் தலைகூடக் கிடையாது; ஆனால் அவருக்கு எதிராக ஐரோப்பா எதையும் செய்துவிட முடியாது. நாளை நாம் டில்லன் அல்லது மாக்ஸ் விண்டலர், என்னும்நிதியப் பணிநிறுவனத்தின் துணைத்தலைவர் பற்றி அறிவோம். உலகின் எப்பகுதியில் இருப்பதையும் விழுங்கிக் கொள்ளுதல், அதுதான் நிதியப் பணி என்று அழைக்கப்படுவது. மாக்ஸ் விண்ட்லர் கவிதை மொழியில் நிதியப் பணி பற்றி பேசுகிறார், ஏன் விவிலிய கவிதைகள் பாணியில் கூட.

அவர் சொல்கிறார்நாம் அரசாங்கங்கள், உள்ளூர் மற்றும் நகராட்சி அதிகாரங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு நிதியளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். அமெரிக்கப் பணம் ஒரு நிலநடுக்கத்திற்குப் பின்னர் ஜப்பானின் மறுசீரமைப்பிற்கு பயன்படுத்தபட்டது; அமெரிக்க நிதியிருப்புக்கள் ஜேர்மனி மற்றும் ஆஸ்திரியா-ஹங்கேரியை தோற்கடிக்க அனுமதித்ததுடன், அந்நாடுகள் மீண்டும் எழுச்சி பெற ஒரு முக்கிய பங்கை ஆற்றியுள்ளன.

முதலில் நீங்கள் அழிப்பீர்கள், பின்னர் நீங்கள் மறுசீரமைப்பீர்கள். இரண்டு செயற்பாடுகளுக்கும் நேர்மையான கட்டணத்தையும் வசூலிப்பீர்கள், அமெரிக்க மூலதனத்தின் குறுக்கிடு இல்லாமல் ஜப்பானில் ஒரு நிலநடுக்கம்தான் ஏற்பட்டது என்பது வெளிப்படை. ஆனால் கீழே கூறப்பட்டுள்ளதைக் கவனியுங்கள்:

டச்சுக் குடியேற்றங்களுக்கும் ஆஸ்திரேலியாவிற்கும் நாங்கள் கடன்களை வழங்குகிறோம், ஆர்ஜென்டினாவில் அரசாங்கங்களுக்கும் நகரங்களுக்கும், தென்னாபிரிக்காவில் சுரங்கத் தொழில்துறைக்கு, சீலியின் நைட்ரேட் உற்பத்தி செய்பவர்களுக்கு, பிரேசிலில் கோப்பி தோட்ட உரிமையாளர்களுக்கு, கொலம்பியாவில் புகையிலை, பருத்தி உற்பத்தி செய்பவர்களுக்கும். சுகாதாரத் திட்டங்களை சாதிக்க பெருவிற்குப் பணம் கொடுக்கிறோம். டேனிஷ் வங்கிகளுக்குக் கொஞ்சம், ஸ்வீடனின் உற்பத்தியாளர்களுக்கும், நோர்வேயில் நீர்-மின்விசை நிலையங்களுக்கும், பின்னிஷ் வங்கிகளுக்கும், செக்கோஸ்லோவாக்கியாவில் ஆலைகளில் இயந்திரக் கட்டமைப்புக்களுக்காவும், யூகோஸ்லாவியாவில் இரும்புப்பாதைகளை கட்டவும், இத்தாலியில் பொதுநலப் பயன்பாடுகளுக்கும் ஸ்பெயினின் தொலைபேசி நிறுவனங்களுக்கும் கொடுக்கிறோம்.”

உங்களுக்கு பிடித்தாலும், பிடிக்கவில்லை என்றாலும், இதில் ஒரு உண்மையான கருத்து வட்டம் உண்டு. 60 பில்லியன் டாலர்கள் கொடுக்கும் ஒலி என்னும் அந்த வட்டம் இப்பொழுது அமெரிக்க வங்கிகளில் உள்ளது. இந்த ஓசையை நாம் மீண்டும் வரவிருக்கும் வரலாற்றுக் காலத்திலும் பழையபடி கேட்போம்.

போர் முடிந்து பின்னர் குறுகிய காலத்தில் தேசங்களின் கழகம் (League of Nations) தன்னை நிறுவிக்கொள்ளும் வழிவகையில் இருந்தபோது, அனைத்து ஐரோப்பிய நாடுகளில் இருந்த சமாதானவாதிகள் அவரவர் மொழியில் பொய்களைக் கூறிக் கொண்டிருந்தபோது, நல்ல நோக்கத்தை கொண்டவர்தான் என்று கருதப்பட்ட ஆங்கிலேய பொருளாதார வல்லுனர் ஜோர்ஜ் பைஷ், தேசங்களின் கழகத்திற்கு மனிதகுலம் முழுவதும் சமாதானமாக இருக்கவும், மீட்பு நடவடிக்கைகளுக்கும் கடன் கொடுக்கப்பட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார். இந்த சிறப்பான முயற்சிக்கு 35 பில்லியன் டாலர்கள் வேண்டும் என்று மதிப்பிட்ட அவர் அமெரிக்கா 15 பில்லியன்கள், இங்கிலாந்து 5 பில்லியன்கள் பிற நாடுகள் எஞ்சிய 15 பில்லியன்களை வழங்க வேண்டும் என்றும் கூறினார். இந்தச் சிறந்த திட்டத்தின்படி, பெரிய கடனில் அமெரிக்கா கிட்டத்தட்ட பாதி நிதியைக் கொடுக்க வேண்டும், மிச்ச பங்கு பல நாடுகளால் பகிர்ந்து கொள்ளப்படவேண்டும்; இதன்மூலம் அமெரிக்கா ஒரு கட்டுப்படுத்தும் பங்கைப் பெறும். இப்படி அனைத்தையும் காப்பாற்றும் கடன் திட்டத்தைக் கொண்டிருக்கவில்லை ஆனால் மொத்தத்தில் இப்பொழுது நடப்பது இன்னும் திறமையான வகையில் இதே திட்டம் நடப்பதற்கு சாதிக்கப்பட்டுள்ளதுதான். அமெரிக்கா படிப்படியாக மனித இனத்தின் மீது கட்டுப்பாட்டை பெறக்கூடிய வகையில் பங்குகளை பற்றி எடுத்துக் கொண்டு வருகிறது. உறுதியாக இது பெரிய முயற்சிதான். ஆனால் ஆபத்தானது. இதை நம்புவதில் அமெரிக்கர்கள் அதிக நாள் எடுத்துக்கொள்ள மாட்டார்கள்.

அமைதிவாதமும், குழப்பவாதிகளும்

இன்னும் தொடருமுன், ஒரு குழப்பத்தை நான் தீர்க்க வேண்டும். நாம் ஆராயும் உலக நிகழ்ச்சிப்போக்கள் வெகுவிரைவாக அபிவிருத்தியடைந்து வருவதுடன் எமது சிந்தனையால் மிகச்சிக்கலுடன் விளங்கிக் கொள்ளக்கூடியதாகவும் உள்வாங்கிக் கொள்ளக்கூடியதாகவும் மிகப்பெரிய அளவானதாகவும், பரந்ததாகவும் இருக்கின்றது. இது குறித்து சர்வதேச ஊடகம், பாட்டாளி வர்க்கம் மற்றும் முதலாளித்துவத்தின் ஊடகங்களிடையே அருமையான விவாதம் ஏற்கனவே தோன்றியுள்ளது என்பது வியப்பளிக்கவில்லை. அமெரிக்கா பால்க்கன் மயப்படுத்தப்பட்டுள்ள (Balkanised) ஐரோப்பாவுடன் கொண்டுள்ள பங்கு பற்றி ஜேர்மனியில் பல நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன . இப்பிரச்சினை குறித்து எழுந்துள்ள சர்வதேச சர்ச்சையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த அரங்கில் இருந்து என்னால் கொடுக்கப்பட்ட அறிக்கை ஒன்றைப் பற்றிய குறிப்பு வெளிப்பட்டது. அமெரிக்காவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையே உள்ள உறவுகளைப்பற்றி விவரிக்கும் அதே பக்கத்தைத் துல்லியமாக நான் சமீபத்தில் American labor review என்னும்  நூலினை பார்த்தேன்; என்னுடைய கண்களின் பார்வை தற்செயலாகபகிர்வுகள்பற்றிய ஒரு குறிப்பின்மீது விழுந்தன; தோழர்களே, எனக்குப் பெரும் வியப்பைத் தரும் விதத்தில் நான் அறிந்துகொண்டது இதுதான்:  “ஒரு சமாதானமான ஆங்கில-அமெரிக்க உறவுகளின் காலத்தில் நாம் நுழைந்துள்ளோம் என்ற கருத்தை ட்ரொட்ஸ்கி கொண்டுள்ளார்; ஆங்கில-அமெரிக்க உறவுகளின் செல்வாக்கு (ட்ரொட்ஸ்கியின் கருத்துப்படி) உலக முதலாளித்துவத்தின் சிதைவிற்குப் பதிலாக ஒருங்கிணைப்பிற்கு கூடுதல் பங்கைக் கொடுக்கும்.’’

இது ஒன்றும் மோசமில்லை, சரிதானே? மக்டோனால்ட் கூட இதைவிடச் சிறப்பாகக் கூறியிருக்க முடியாது. மேலும்:

ஐரோப்பா ஒரு பகிர்வில் வைக்கப்படுகிறது என்னும் ட்ரொட்ஸ்கியின் பழைய கோட்பாடு [ஏன் பழைய? இது இன்னும் இரண்டு ஆண்டுகள்கூட ஆகவில்லை-L.T.] அதையொட்டி ஒரு அமெரிக்காவின் டொமினியனாக ஆனது என்பது ஆங்கிலோ-அமெரிக்க உறவுகளைப் பாரட்டுவதுடன் பிணைந்துள்ளது.” இன்னும் இதே போன்ற கருத்துக்கள். (J.Lovestone [4] Workers’ Monthly, Novemebr 1925.)

இந்த வரிகளைப் படித்த போது, என்னுடைய வியப்பின் அளவு மிகப் பெரிதாக இருந்ததால், நான் மூன்று நிமிடங்களுக்கு என் கண்களைக் கசக்கிவிட்டுக் கொண்டேன். எங்கு, எப்பொழுது நான் இங்கிலாந்தும் அமெரிக்காவும் சமாதான உறவுகளைத் தக்க வைத்துக் கொண்டுள்ளன, அதையொட்டி அவை ஐரோப்பிய முதலாளித்துவத்தை மீட்கும், சிதையச் செய்யாது என்று கூறினேன்? பொதுவாக வெற்றிவாகை  காலத்திற்குப் பின்னர் ஒரு கம்யூனிஸ்ட் இதையோ அல்லது இதுபோன்றதையோ கூறியிருந்தால், அவர் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தே வெளியேற்றப்பட்டிருப்பார். ஆனால் இத்தகைய அபத்தங்கள் என்னிடம் இருந்து வந்தன என்பதை நான் படிக்கும்போது, அவற்றை மறுபடியும் படித்து இந்தப் பொருள் பற்றி இந்த அரங்கில் என்ன கூறினேன் என்பதை மீண்டும் படித்தேன். இரு ஆண்டுகளுக்கு முன்பு நான் கொடுத்த உரையை இப்பொழுது மீண்டும் குறிப்பிடுகிறேன் என்றால், அது லவ்ஸ்டான் மற்றும் அவரைப் போன்றோருக்கு, எந்தப் பொருளைப் பற்றியும் ஒருவர் எழுதுவதற்கு விரும்பினால்-ஆங்கிலத்திலோ, பிரெஞ்சு மொழியிலோ, ஐரோப்பாவிலோ, அமெரிக்காவிலோ-தான் என்ன எழுதுகிறோம் என்பதை ஒருவர் உணர்ந்து எழுத வேண்டும், வாசகரை எங்கு இட்டுச் செல்கிறோம் என்பதை அறிந்து எழுத வேண்டும். நான் இவ்வாறு கூறுவதற்குக் காரணம் அன்று நான் எழுப்பிய பிரச்சினை இன்றும்கூட பொருத்தமுடையதுதான் என்பதால். எனவேதான் என்னுடைய உரையில் இருந்து சில கருத்துக்களை நான் வாசித்துக் காட்ட வேண்டும்:

அமெரிக்க மூலதனம் எதை விரும்புகிறது? எதை நாட அது முற்படுகிறது? இவ்வினாக்களை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் கேட்டேன்; பின் விடையிறுத்தேன்:

அது உறுதியை நாட முற்படுகிறது என்று நம்மிடம் கூறப்படுகிறது. ஐரோப்பிய சந்தையை மீண்டும் நிறுவ அது விரும்புகிறது. ஐரோப்பாவை திவால்தன்மைக்கு ஆளாகாமல் செய்ய அது விரும்புகிறது. எந்த அளவிற்கு, எப்படி? தன்னுடைய மேலாதிக்கித்தின்கீழ். இதன் பொருள் என்ன? ஐரோப்பா மீண்டும் தலைதூக்க அனுமதிக்கப்படும், ஆனால் நன்கு வரையறுக்கப்பட்ட வரம்புகளுக்குள்தான்; உலகச் சந்தையின் தடைக்குட்டபட்ட சில பிரிவுகள் அதற்கு ஒதுக்கப்படும். அமெரிக்க மூலதனம் இப்பொழுது ஆதிக்கம் செலுத்துகிறது; அது தூதர்களுக்கு ஆணையிடுகிறது. அதேபோல் இது ஐரோப்பிய வங்கிகளுக்கும் அறக்கட்டளைகளுக்கும் ஆணைகளை கொடுக்கத் தயாரித்து வருகிறது; முழு ஐரோப்பிய முதலாளித்துவத்தினருக்கும்.”

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் கூறினேன்: “இது இராஜதந்திரிகளுக்கு (வெர்சாய், வாஷிங்டனில்) உத்தரவிடுகிறது, வங்கிகளுக்கும் அறக்கட்டளைகளுக்கும் உத்தரவு பிறப்பிக்கத் தயார் செய்கிறதுஎன. இன்று நான் கூறுகிறேன்: “ஏற்கனவே அது பல ஐரோப்பிய நாடுகளின் வங்கிகள் மற்றும் அறக்கட்டளைகளுக்கு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளதுடன், ஏனைய ஐரோப்பிய நாடுகளின் வங்கிகள் மற்றும் அறக்கட்டளைகள் ஆகியவற்றிற்கு உத்தரவுகளை பிறப்பிக்கத் தயாரிப்பு செய்கின்றது.” மேற்கோளை நான் தொடர்கிறேன்: “இது சந்தையை இரு பிரிவுகளாக்கும், இது ஐரோப்பிய நிதி முதலீட்டாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும். அமெரிக்க மூலதனம் என்ன விரும்புகிறது என்னும் வினாவிற்கு இன்னும் தெளிவான, துல்லியமான விடையிறுக்க, வேண்டுமென்றால் அது முதலாளித்துவ ஐரோப்பாவை பிரித்து வைத்திருக்க விரும்புகிறது.” ஐரோப்பாவை பிரித்து  வைத்திருக்கிறதோ என்றோ இனி பிரித்து வைக்கும் என்றோ நான் கூறவில்லை, அது அவ்வாறு செய்ய விரும்புகிறது. இதைத்தான் நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கூறினேன்.

இங்கிலாந்திற்கும் அமெரிக்காவிற்கும் இடையேயானசமாதான ஒத்துழைப்பு பற்றி நான் பேசியதாக லவ்ஸ்டோன் கூறுகிறார். இந்த உரை பதிவு செய்யப்பட்டுள்ள குறிப்புக்களை நாம் காண்போம்.

ஜேர்மனி, பிரான்ஸ் பற்றிய பிரச்சினை மட்டும் அல்ல; இது கிரேட் பிரிட்டன் பற்றிய பிரச்சினையும் ஆகும். அந்த நாடும் இதே விதிக்குத் தாழ்ந்து நிற்க தயாரிப்பை நடத்தத்தான் வேண்டும்…. அமெரிக்கா இப்பொழுது இங்கிலாந்துடன் இணைந்து நடக்கிறது, ஒரு ஆங்கிலோ-சாக்சன் முகாம் அமைக்கப்பட்டுள்ளது, ஆங்கிலோ-சாக்சன் (Anglo-Saxon) முதலாளித்துவம் மற்றும் ஆங்கிலோ-சாக்சன் அரசியல் பற்றியும் பேசப்படுகிறது என்பது உறுதியானதுதான்…. ஆனால் இவ்விதத்தில்  பேசுவது என்பது நிலைமைப் புரிந்துகொள்ளாததான தன்மையைத்தான் காட்டும். முக்கிய உலக விரோதப்போக்கு அமெரிக்க, கிரேட் பிரட்டனின் நலன்களைத் தொடர்ந்து ஏற்படுகிறது. அதைத்தான் வருங்காலம் இன்னும் தெளிவாகக் காட்டும். - ஏன்? ஏனெனில் இங்கிலாந்து இன்னும்கூட, அமெரிக்காவை அடுத்து செல்வம் கொழித்த, சக்திவாய்ந்த நாடாகயிருக்கிறது. அதுதான் முக்கிய போட்டி நாடாகவும் முக்கிய தடையாகவுமிருக்கிறது.

இதே கருத்தைத்தான் இன்னும் வலுவான முறையில் கம்யூனிச அகிலத்தின் ஐந்தாம் உலகக் காங்கிரசில் நான் மேம்படுத்திக் கூறினேன். ஆனால் அந்த உரைகளைக் கூறி உங்களைக் களைப்படையச் செய்ய மாட்டேன். அமெரிக்கா நிறுவியசமாதானஉறவுகளைப் பற்றி என்னுடைய உரையில் இருந்து மீண்டும் மேற்கோளிடுகிறேன்:

உலகம் முழுவதையும் தன்னுடைய கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவருதல் என்னும் இந்த அமெரிக்கசமாதானத்திட்டம் ஒரு சமாதானத் திட்டமே அல்ல. மாறாக இது போர்கள் மற்றும் மிகப் பெரிய புரட்சிகர எழுச்சிகளை தன்னகத்தை பொதித்து வைத்துள்ளது. மற்ற நாடுகளின் முதலாளித்துவம் பின்தங்கிய நிலைக்கு தள்ளப்படுவதற்கு உடன்படுவது அரிது; ஏனெனில் அமெரிக்காவுக்கு கப்பம் கட்டும் நாடுகளாக ஆவதற்கு சிறிதும் எதிர்ப்பின்றி உடன்படமாட்டா. இதில் உள்ள முரண்பாடுகள் மிகப்பெரியவை, இங்கிலாந்தில் உலக ஆதிக்கம் செலுத்துதல் என்னும் பழக்கம் மிகச் சக்தி வாய்ந்தது. இராணுவ மோதல்கள் தவிர்க்க முடியாதவை. “சமாதானஅமெரிக்க முறை சகாப்தம் என்பது இப்பொழுது ஒரு தயாரிப்பு நிலையில்தான் தொடங்கியுள்ளது; இது முன்னோப்போதும் இல்லாத அளவையும் கற்பனை செய்து பார்க்க முடியாத கொடூரத்தையும் கொண்டு வர உள்ள புதிய போர்களுக்கான தயாரிப்புகள்தான்.”

இதைத்தான் நான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்புசமாதானஉறவுகள் பற்றிக் குறிப்பிட்டேன்.

இறுதியாக இந்த அரங்கில் இருந்து அமெரிக்கச் செல்வாக்கையொட்டி ஐரோப்பிய முரண்பாடுகள் நின்றுவிடுவது பற்றி நான் கூறியது இதுதான்:

ஏகாதிபத்திய போருக்கு தயார் செய்து ஐரோப்பாவில் அதை பத்து ஆண்டுகளுக்கு முன் கட்டவிழ்த்துவிட்ட மற்றும் அப்போரினால் தீவிரமடைந்து மற்றும் இராஜதந்திர முறையில் வேர்சாய் உடன்படிக்கை மூலம் உறுதிப்படுத்தப்பட்ட முரண்பாடுகள் ஒரு வெளிக்காயமாக இன்னும் தொடர்ச்சியாக இருப்பதுடன் ஐரோப்பாவில் அபிவிருத்தியடைந்துவரும் வர்க்கப் போராட்டத்தினால் இவை தீவிரமடைந்துள்ளன என்பதை சிறிதும் மறுக்க முடியாதுள்ளது. அமெரிக்கா அதன் முழுத் திறைமையையும் வெளிப்படுத்தி இந்த முரண்பாடுகளுக்கு எதிராக நிற்கும்.”

இரு ஆண்டுகள் கடந்து விட்டன. தோழர் லவ்ஸ்டோன் ஒருவேளை சிறந்த விமர்சகராக இருக்கலாம்; ரஷ்ய பழமொழி கூறுவது போல் அவர்கள் எப்பொழுதும் ஒரு விரலை ஆகாயத்தை நோக்கிச் சுட்டிக்காட்டி, எப்பொழுதும் சரியாகக் குறிவைப்பவர்களைப் பற்றியதாக இருக்கலாம். ஆனால் காலம் என்பது இவரைவிடப் பெரிய விமர்சனத்தன்மை கொண்டது.

ஒரு அமெரிக்கரான Stibelling க்கு ஒரு முறை ஏங்கல்ஸ் கொடுத்த ஆலோசனையுடன் என்னுடைய உரையை முடிக்கிறேன்: “விஞ்ஞானரீதியான பிரச்சினைகளை ஆராய ஒருவர் விரும்பினால், முதலில் அதைப்பற்றி ஒரு ஆசிரியர் எழுதியுள்ளபடி வாசிப்பது முக்கியம். மற்றும் அதில் என்ன கூறப்படவில்லை என்பது பற்றி வாசிக்க முனையக்கூடாது.” முதிய ஏங்கெல்ஸின் இச்சொற்கள் மிகச் சிறந்தவை, அமெரிக்காவிற்கு மட்டுமின்றி, ஐந்து முழுக் கண்டங்களுக்கும் சிறந்தவைதான்.                                

ஆசிரியரின் அடிக்குறிப்புக்கள்

1.    சர்வதேச தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு

1926 புள்ளிவிவரங்களின்படி

3. இது 1925க்கான மதிப்பீடாக இருக்க வேண்டும். 1930ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி எண்ணிக்கை 122 மில்லியன் ஆகும்.

4. ரஷ்ய கட்சியின் வலது பிரிவான புக்காரினை பிற்பற்றும் லவ்ஸ்டோன் அப்பொழுது அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்தார். வேண்டுமென்றே ட்ரொட்ஸ்கியின் கருத்துக்களை தவறாக அவர் கூறிவந்தது, ட்ரொட்ஸ்கிக்கு எதிரான சர்வதேச ஸ்ராலின்-புகாரின் தகர்ப்பு வேலையின் ஒரு பகுதியாகும். லவ்ஸ்டோன் இப்பொழுது போர் ஆதரவு கொண்ட ஜனநாயக நடவடிக்கைக்கான கூட்டமைப்பை (Union for Democratic Action) பின்பற்றுகிறார்.

 பகுதி - 2

ட்ரொட்ஸ்கியின் ஐரோப்பாவும் அமெரிக்காவும்: ஜேர்மனியில் பதிப்பிக்கப்பட்ட அரிய கட்டுரைகளின் புதிய பதிப்பு