ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

One year after Charlie Hebdo attack
Police gun down youth in poor Paris neighborhood

சார்லி ஹெப்டோ தாக்குதலுக்கு ஓராண்டுக்குப் பின்னர்

பாரிஸின் வறிய அண்டைபகுதியில் பொலிஸ் இளைஞரைச் சுட்டுத்தள்ளியது

By Stéphane Hugues
8 January 2016

சார்லி ஹெப்டோ பயங்கரவாத தாக்குதலின் முதல் ஆண்டுநிறைவான வியாழனன்று, பொலிஸ் வடக்கு பாரிஸின் ஒரு பொலிஸ் நிலையத்திற்கு வெளியே ஓர் இளைஞரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றது. அரசாங்க அதிகாரிகள் பலியானவரின் உள்நோக்கம் மற்றும் பொலிஸ் அவரை எவ்வாறு கொன்றது என்பதைக் குறித்து வேறுவேறு விபரங்களை வெளியிட்டனர், அதேவேளையில் நேரில் பார்த்தவர்களோ சுடப்பட்டதற்கான பொலிஸ் விபரங்களுடன் திட்டவட்டமாக முரண்பட்டிருந்தனர் மற்றும் பொலிஸ் எச்சரிக்காமல் ஒரு நிராயுதபாணியான மனிதனை சுட்டுக்கொன்றதாக தெரிவித்தனர்.

அந்த துப்பாக்கிச்சூடு பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் நடுப்பகலில் ஒரு வறிய மற்றும் பெரிதும் புலம்பெயர்ந்தோர் உள்ள அண்டைப்பகுதியான பாரிஸின் 18வது வட்டாரத்தின் “Goutte d’Or” இல் நடத்தப்பட்டிருந்தது.

பலியான அந்நபர் மொரோக்கோவின் காஸபிளோங்காவில் பிறந்த 20 வயதான சல்லாஹ் அலி ஆவார், ஆனால் இவர் பிரான்சில் வீடின்றி வாழ்ந்து வந்தார். அவர் 2013 இல் பொலிஸ் உடன் ஒருமுறை மோதலுக்கு வந்திருந்தார், அப்போது அவர் தெற்கு பிரான்சின் Var பிராந்தியத்தில் Sainte-Maxime நகரில் திருடியதற்காக கைது செய்யப்பட்டார். அவரிடம் எந்த அடையாள ஆவணங்களும் இல்லாததால், அச்சமயத்தில் எடுக்கப்பட்ட அவரது கைரேகைகளைக் கொண்டு அவரது அடையாளம் உறுதி செய்யப்பட்டது.

உள்துறை மந்திரி பேர்னார்ட் கஸ்னேவ் மற்றும் பாரிஸ் பொலிஸ் உயரதிகாரி அந்த கொலை நடந்து வெறும் அரை மணி நேரத்தில் அங்கே வந்தடைந்தனர், இது சோசலிஸ்ட் கட்சி (PS) அரசாங்க பிரதம மந்திரி மானுவெல் வால்ஸ் மற்றும் ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட் போன்ற உயர்மட்டங்கள் இதில் தலையிடுவதை தெளிவுபடுத்தியது.

அவர்கள் அருகிலிருந்த நிலத்தடி பாரிஸ் மெட்ரோ இரயில்சேவைகளை நிறுத்தியதுடன், பாரியளவில் பாதுகாப்புப்படைகளை நிலைநிறுத்தவும் உத்தரவிட்டனர், மேலும் ஒட்டுமொத்த Goutte d’Or அண்டைபகுதியையும் இழுத்துமூடினர். சோசலிஸ்ட் கட்சி இன் அவசரகால நெருக்கடிநிலையின் வரையறைகளின் கீழ் பாரிஸ் எங்கிலும் நிலைநிறுத்தப்பட்ட துப்பாக்கி ஏந்திய சிப்பாய்கள் எச்சரிக்கையுடன் நிறுத்தப்பட்டனர்.

அத்துப்பாக்கிச்சூடு நடந்த வெறும் 45 நிமிடங்களில், பிரெஞ்சு உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் பியர்-ஹென்றி பிறோன்டே, ஒரு கத்தி மற்றும் ஒரு வெடிபொருள் பட்டை அணிந்த அலி "அல்லாஹ் அக்பர்" (அரேபிய மொழியில் இறைவனே பெரியவன்) என்று கூச்சலிட்டதாகவும், அதேபோது கமிஷனர் அலுவலகத்தின் நுழைவாயிலில் ஒரு பொலிஸ் அதிகாரியைத் தாக்க முயன்றதாகவும் செய்தி அளிக்க BFMTV இல் தோன்றினார்.

மேலும் 25 நிமிடங்களுக்குப் பின்னர், இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் விபரங்கள் சிதையத் தொடங்கின. அவ்விடத்திற்கு வந்த ஒரு வெடிகுண்டு நிபுணர் குழு, அலி அணிந்திருந்த பெல்டை ஆராய்ந்து எந்த வெடிபொருட்களும் அதில் இல்லை என்று தெரிவித்தது. அங்கே கத்தி இருந்ததற்கான எந்த அடையாளமும் இல்லை, ஆனால் ஒரு பெரிய இறைச்சி வெட்டும் கத்தியின் கைப்பிடி அலியின் அருகில் கண்டறியப்பட்டது.

அந்த துப்பாக்கிச்சூட்டை நேரில் பார்த்தவர்கள், பிறோன்டே இன் விளக்கத்துடன் முரண்பட்டனர். BFMTV அவர்களை நேர்காணல் செய்து அறிக்கை வெளியிட்டது, “பொலிஸ் நிலையத்தின் முன் படுகொலை செய்யப்பட்டவர் … 'அல்லாஹ் அக்பர்' என்று கத்தவில்லை என்று BFMTV க்கு உறுதிப்படுத்தினர்., நேரில் பார்த்த பலரில் ஒருவர் கூட  அவர் அந்த வார்த்தைகளை ஒருபோதும் உச்சரிக்கவில்லை என்று தெரிவித்தனர். “அவர் வந்த போது, அவர் சாதாரணமாக தான் நடந்து கொண்டார்' என்று அவர்களில் ஒருவர் தெரிவித்தார்.

BFMTV தொடர்ந்து குறிப்பிட்டது, “அந்நபர் ஆயுதமேந்தி இருக்கவில்லையென நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர். படுகொலை செய்யப்பட்டவரை நேரில் பார்த்த ஒரு பெண்மணி, 'அவர் எந்த ஆயுதமும் ஏந்தியிருக்கவில்லை,' என்றார். பொலிஸ் அலுவலர்கள் அவரை 'திரும்பு, திரும்பு, திரும்பு' என்றதும் அவர் 'அவரது கைகளைத் தூக்கியவாறு திரும்பி நின்றார்,” என்றவர் தெரிவித்தார். ஆனால் அந்நபர் மீண்டும் பொலிஸ் அலுவலரை நோக்கி முன்னோக்கி நகர்ந்ததும், அவரை மூன்று முறை அவர்கள் சுட்டனர்.”

மாலை சுமார் 3 மணி வாக்கில், அரசு வழக்கறிஞர் அலுவலகம் அறிவிக்கையில், படுகொலை முயற்சி நபர் அரசின் பிரதிநிதிகளான பொலிஸ் அதிகாரிகளுடன் வம்புசண்டையிட்டதற்காக வழக்குப்பதிவு செய்வதாக அறிவித்தது.. பின்னர் 3:45 க்கு, அது "அரேபிய மொழியில் தெளிவாக கைகளால் எழுதப்பட்ட கோரிக்கையுடன் அதில் டயஷ் கொடியும் இருந்த ஒரு கடிதம் மற்றும் ஒரு சிறிய தொலைபேசி" ஆகியவற்றை அலியின் உடலில் கண்டறிந்ததாக அது அறிவித்தது..

வழக்கறிஞரது அலுவலகம் பின்னர் அதே வாதத்தைத் திரும்ப திரும்ப கூறியது, அதாவது அலி பொலிஸ் அதிகாரிகளை நோக்கி நகர்ந்த போது "அல்லாஹ் அக்பர்" என்று கத்தியதாக அது குறிப்பிட்டது. அந்த வழக்கு பின்னர் சிறப்பு பயங்கரவாத-எதிர்ப்பு வழக்கறிஞருக்கு மாற்றப்பட்டுள்ளது..

ஒரு எழுதுகோலைக் கொண்டு காகிதத்தில் ISIS கொடி ஏனோதானோ என்று வரையப்பட்டிருந்தமை பின்னர் உறுதிப்படுத்தப்பட்டது. கைகளால் எழுதப்பட்ட முறையீட்டை பொறுத்த வரையில், அது “சிரியாவின் பழிவாங்கும் நடவடிக்கைகளைக்" குறிப்பிட்டு, ISIS இன் தலைவராக தன்னைத்தானே பிரகடனப்படுத்திக் கொண்ட அபு பக்ர் அல்-பாஹ்தாதி உடன் கூட்டிணைப்புடன் இருக்கும் ஒரு சூளுரையாகும், என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அலியை ஒரு பயங்கரவாதியாக சித்தரிக்க உள்துறை அமைச்சகத்தின் முயற்சிகள் சிறிதும் கூட நம்பத்தகுந்தவையாக இல்லை. அலி ஒரு பயங்கரவாத தாக்குதலை நடத்த இருந்தார் என்ற சோசலிஸ்ட் கட்சியின் குற்றச்சாட்டுகளில் நம்பிக்கையில்லை என்பதை வலதுசாரி நாளிதழ் Le Figaro க்கு கருத்து தெரிவிக்கையில் ஒரு பொலிஸ்காரரே தெரிவித்தார். அவர் தெரிவித்தார், “குண்டுதுளைக்காத உள்கவசங்கள் அணிந்த ஆயுதமேந்திய பொலிஸ்காரர்களை நோக்கி, ஒரு போலி வெடிகுண்டு பெல்ட் அணிந்து ஓடிவந்தார் என்பது வினோதமாக இருக்கிறது. அதுவும் கூட தற்கொலைக்கு உரியதாக உள்ளது.”

வழக்கறிஞரது அலுவலகத்தின் விபரம் நீதித்துறை மந்திரி கிறிஸ்தியான் ரொபிரா இன் விபரங்களுக்கு முரண்பட்டு இருந்தது, அவர் தெரிவிக்கையில், “இந்நபரிடமிருந்து என்ன தெரிய வருகிறதோ அதிலிருந்து என்ன தெளிவாகிறது என்றால் [அவருக்கு] வன்முறையான தீவிரமயப்படலுடன் எந்த தொடர்பும் இல்லை, முற்றிலும் இல்லை,” என்றார்.

“ஒரு போலியான தற்கொலை பெல்ட், கூச்சலிட்டமை, அவரது சட்டை பையில் இருந்த விசுவாசத்திற்கான அறிக்கை, இவையெல்லாம் ஒரு [பயங்கரவாத] வலையமைப்பைச் சேர்ந்தவர் என்பதற்கான அறிகுறிகளாகும், ஆனால் அவை ஸ்திரமின்மையின் அறிகுறிகளாகவும் உள்ளன. அந்த புலனாய்வு, இது அனைத்தின் மீதும் வெளிச்சத்தைப் பாய்ச்சும்,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

சலாஹ் அலியை பொலிஸ் கொன்றமை, கேலிச்சித்திர வாரயிதழ் சார்லி ஹெப்டோவின் பதிப்பு அலுவலகத்தில் 12 பேர் கொல்லப்பட்ட ஒரு பயங்கரவாத தாக்குதலை குவாச்சி சகோதரர்கள் நடத்தியதற்கு பின்னரில் இருந்து இந்தாண்டு நடந்துள்ள பிரெஞ்சு அரசியல் ஸ்தாபகத்தின் வலது நோக்கிய பரந்த திருப்பத்தைக் குறிக்கிறது. சோசலிஸ்ட் கட்சி அத்தாக்குதலுக்குப் பின்னர் ஒரு பரந்த தேசிய ஊர்வலம் ஒன்றை ஒழுங்கமைத்து, கருத்துச் சுதந்திரம் மற்றும் பத்திரிகை சுதந்திரத்தை பாதுகாக்க என்பதாக, ஒரு பொலிஸ் கட்டமைப்பின் அடித்தளத்தில் தேசிய ஐக்கியத்தின் ஒரு காலகட்டத்தை பிரகடனப்படுத்தியது.

ஆனால் கடந்த ஆண்டின் போது என்ன கட்டவிழ்ந்தது என்றால், அது பிரான்சில் ஜனநாயக மலர்ச்சி அல்ல, மாறாக சோசலிஸ்ட் கட்சி தலைமையில் பொலிஸ்-அரசு ஆட்சியை நோக்கிய ஒரு தீவிரமயப்பட்ட இயக்கமாகும். சட்டம் ஒழுங்கு மற்றும் முஸ்லீம்-விரோத மனோபாவங்கள் அரசியல் ஸ்தாபகத்தில் அதன் இடத்தைப் பெற, நவ-பாசிசவாத தேசிய முன்னணிக்கு உதவியுள்ளது,. நவம்பர் 13 பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பின்னரில் இருந்து, சோசலிஸ்ட் கட்சி பிரான்ஸை ஒரு அவசரகால நெருக்கடிநிலையில் நிறுத்தி உள்ளது. இது சோசலிஸ்ட் கட்சிக்கு பத்திரிகை தணிக்கை உட்பட பரந்த பொலிஸ் அதிகாரங்களை வழங்குகிறது..

சோசலிஸ்ட் கட்சி, குடிமக்கள் பயங்கரவாதம் சார்ந்த குற்றங்கள் செய்தால் அவர்களது குடியுரிமையைப் பறிக்கும் ஒரு நடவடிக்கையை முன்மொழிந்து வருகிறது. இந்த நடவடிக்கை நீண்டகாலமாக தேசிய முன்னணி உடன் தொடர்புபட்டிருந்தது, அதற்கு முன்னர், இரண்டாம் உலகப் போரின் போது பாசிச ஐரோப்பாவில் இனப்படுகொலையின் போது யூதர்களது பிரெஞ்சு தேசிய குடியுரிமை பறிப்புடன் பிணைந்திருந்தது.

பொலிஸால் அலி கொல்லப்பட்டமை குறித்து சோசலிஸ்ட் கட்சிக்குள் நிலவும் பிளவு, தேசிய குடியுரிமை பறிப்பை அரசாங்கத்தின் பெரும்பகுதி ஆதரித்திருந்த நிலையில், அதற்காக ரொபிறா சோசலிஸ்ட் கட்சிக்கான ஆதரவை விமர்சித்ததும், அப்போதிருந்து அரசாங்கத்தை சினமூட்டி வந்த விவாதத்தைப் பிரதிபலிக்கிறது..

அலியின் படுகொலை நேரடியாக இந்த நச்சார்ந்த மற்றும் பிற்போக்குத்தனமான அரசியல் சூழலில் இருந்து எழுகிறது. சோசலிஸ்ட் கட்சி பிரெஞ்சு அரசியலமைப்பில் ஒரு நிரந்தர அவசரகால நெருக்கடிநிலையை பேண ஓர் அரசியலமைப்பு திருத்தத்தின் மூலமாக வேகப்படுத்த சட்ட ஒழுங்கு விஷமப் பிரச்சாரத்தை ஊக்குவித்து வருகையில், 100,000 சிப்பாய்கள் மற்றும் பொலிஸ் முழு எச்சரிக்கையுடன் வீதிகளில் ரோந்து வந்து கொண்டிருக்கின்றனர். நாடெங்கிலும் பதட்டமான மற்றும் கனரக ஆயுதமேந்தியவர்கள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், பிரான்சின் வீதிகளில் பாதுகாப்பு படைகளால் யாரேனும் சுட்டுக் கொல்லப்படுவதென்பது வெறும் கால நேரம் சார்ந்த ஒரு விடயம் மட்டுந்தான்.

கட்டுரையாளரது பரிந்துரை:

சார்லி ஹெப்டோ தாக்குதலுக்குப் பின்னர்பேச்சு சுதந்திரம்" எனும் பாசாங்குத்தனம்

[9 January 2015]