ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

India’s Modi makes surprise visit to Pakistan

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் திடீர் பாகிஸ்தான் விஜயம்

By Sampath Perera
29 December 2015

டிசம்பர் 25ம் தேதியன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது பாகிஸ்தானிய சமதரப்பான நவாஸ் ஷெரீபை சந்திக்க லாகூருக்கு வெளிப்படையான முன்னேற்பாடற்ற திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டார். தசாப்தத்திற்கு பின்பு ஒரு இந்திய பிரதமரின் முதல் பாகிஸ்தான் பயணமாக அது இருந்தது.

இப்பயணம் குறித்த தகவல் இந்திய பிரதமரின் பிரயாணத் திட்டத்தில் இல்லாத காரணத்தினால் மட்டும் பார்வையாளர்களுக்கு வியப்பு ஏற்படுத்தவில்லை, அவர் டிசம்பர் 23 மற்றும் 24ம் தேதிகளை மாஸ்கோவில் செலவழித்ததுடன், இந்திய கட்டுமானத்தில் அமைக்கப்பட்ட ஆப்கான் பாராளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவிற்கு உதவும் பொருட்டு தொடர்ந்து காபூலுக்கு பயணம் மேற்கொண்டதும்தான் வியப்பூட்டியது.

இந்திய கோரிக்கையின்படி "பயங்கரவாதத்திற்கான ஆதரவு" ஐ பாகிஸ்தான் கைவிடும் வரை இஸ்லாமபாத் உடனான அனைத்து உயர்மட்ட ராஜதந்திர ஈடுபாடுகளை தவிர்த்தல் என்ற மிகவும் ஆத்திரமூட்டும் கொள்கையிலிருந்து மோடி மற்றும் இந்துமத மேலாதிக்கவாத பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க) அரசாங்கம் கடந்த சில வாரங்களாகத் தான் பின்வாங்கியுள்ளது.

தசாப்தத்திற்கும் மேற்ப்பட்ட காலத்தில், 2015ம் ஆண்டில்தான் தெற்கு ஆசியப் பகுதியில் இரண்டு அணு ஆயுத நாடுகளுக்கிடையில் மிக மோசமான எல்லைப்புற மோதல்கள் காணப்பட்டன. மேலும் பெரிதாக பதட்டங்களை தூண்டிவிடக்கூடியவாறாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் அரசியல் மற்றும் இராணுவத் தலைவர்களால் இரத்தத்தை உறையவைக்கும் போர் அச்சுறுத்தல்கள் வெளியிடப்பட்டது.

மோடியின் பாகிஸ்தானிய பயணத்தை ஒரு இராஜதந்திர சதியாக இந்தியாவின் பெருநிறுவன செய்தி ஊடகங்கள் வேகமாக பாராட்டின.

உண்மையில், ஒரு நடைமுறைக்கேற்ற சூழ்ச்சியாக இது இருந்தது, வாஷிங்டனை சமாதானப்படுத்துவது மற்றும் உள்நாட்டில் அதிகளவு நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ள மோடி அரசாங்கத்துக்கு ஊக்கம் வழங்குவதையும் நோக்கமாக கொண்டது.

மோடியின் தலைமையில் இந்தியா அமெரிக்காவிற்கு மேலும் சாய்ந்து கொடுத்ததுடன் வாஷிங்டனின் "ஆசியாவில் முன்னிலை" என்ற சீன எதிர்ப்பிற்கு இன்னும் நெருக்கமாக ஒத்துழைப்பதாகவும் மாறியது. அதே சமயத்தில் மோடி பிராந்திய மேலாதிக்கத்திற்கான இந்தியாவின் கோரிக்கையினை உறுதிப்படுத்த முற்பட்டார், மேலும் இது பாகிஸ்தான் உடனான ஒரு மோதலுக்கான கொள்கையையும் அவசியப்படுத்தியது.

ஒபாமா நிர்வாகம் ஆயுதத் தளவாடங்களை இந்தியாவிற்கு வாரி வழங்குவதுடன், "கிழக்கே பார்" என்ற அதன் பொருளாதார மற்றும் இராணுவ-மூலோபாய கொள்கையை நடைமுறைப்படுத்துவதிலும் உதவிபுரியும் இச்சமயத்தில், கடந்த சில மாதங்களைப் பொறுத்தவரையில் தாலிபான் மற்றும் ஆப்கான் அரசாங்கத்திற்கிடையே சமாதானப் பேச்சுவார்த்தைகள் நிகழ்த்த பாகிஸ்தானை உதவி தரகராக பெறவிருந்த அதன் திட்டத்திற்கு வளர்ந்து வரும் இந்திய போர்வெறியானது தடைகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன என்று அதிகமாக கவலை கொண்டுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தைகள் அடுத்தமாத ஆரம்பத்திலேயே தொடங்க இருப்பதாக கருதப்படுகிறது.

பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தைகளை இந்தியா புறக்கணிப்பது பற்றி வாஷிங்டன் வெளிப்படையாக விமர்சிக்கவில்லை, எனினும் அமெரிக்க அரசு துணை செயலர் ஆண்டனி பிளின்கன் கடந்த இலையுதிர்காலத்தின் போது இந்தியா பாகிஸ்தானிடையே போர் வெடிப்பதற்கான சாத்தியங்கள் இருப்பது பற்றி அதிகளவில் கவலை தரும் கருத்துக்கள் பலவற்றை வெளியிட்டார்.

இம்மாத ஆரம்பத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு பிளின்கன் அளித்த பேட்டியில், இந்தியாவில் ஒரு பயங்கரவாத தாக்குதல் வரக்கூடும் அதன் விளைவாக பாகிஸ்தானுடன் "பெரிய அளவிலான போர் தூண்டுதல்" நிகழும் எனவும், "வேண்டுமென்ற மோதலைவிட எதிர்பாராதவிதமான மோதலின் விளைவு தான் மோசமானதாக இருக்கும், எங்கேனும் திடீரென சம்பவிக்கும் தூண்டுதல்களின் விளைவு கட்டுக்கடங்காமலிருக்கும்" எனவும் தெரிவித்திருந்தார்.

புது தில்லி மற்றும் இஸ்லாமாபாத்திற்கு இடையிலான இராஜதந்திர உறவுகளை புதுப்பிக்க அமெரிக்க தூதரக அதிகாரி பகிரங்கமாகவே வலியுறுத்த முனைந்தார். போர் அபாயம் குறித்து, "இது ஏன் அவ்வளவு முக்கியமானது என்பதற்கான காரணங்களில் ஒன்று, எங்களது மதிப்பீட்டின்படி, பதட்டங்களை குறைக்கவும், மிகுந்த ஒத்துழைப்புடனான உறவினை முடிவாக கண்டறியவும் இந்தியாவும் பாகிஸ்தானும் கருத்துப்பரிமாற்றங்களுக்கான வழிகளை கண்டுபிடிக்கவேண்டும்" என அவர் தெரிவித்தார்.

இந்திய பாகிஸ்தான் உறவுகளுக்கு இடையேயான ஸ்திரமற்ற நிலைமைக்கான முக்கிய காரணிகளில் ஒன்று சீனாவிற்கு எதிரான அதன் இராணுவ மூலோபாய முன் தாக்குதல்களில் அமெரிக்கா இந்தியாவை ஒருங்கிணைக்க உந்துவது என்பதை குறிப்பிட பிளின்கன் நிச்சயமாக தவிர்த்துவிட்டார். நவீன ஆயுத அமைப்பு முறைகளை கூட்டாக வளர்த்தல் மற்றும் தயாரித்தல் மற்றும் ஒரு பொதுத்துறை சார்ந்த அணுசக்தி ஒப்பந்தம், அது வெளிநாட்டு அணுசக்தி எரிபொருள் மற்றும் தொழில்நுட்ப வசதியை இந்தியா பெறுவதற்கு வாய்ப்பளிப்பதுடன் ஆயுத வளர்ச்சி குறித்த அதன் உள்நாட்டு அணுசக்தித் திட்டத்திற்கு முக்கியத்துவம் அளிப்பது போன்றவற்றிற்கான வாய்ப்புக்களையும் இது உள்ளடக்கியது.

மோதல்களிலிருந்து வெளிப்படையான சமரசத்திற்கு வழிவகுக்கும் விதமாக பாகிஸ்தானுடனான புது தில்லியின் உறவுகளில் திடீர் திருப்பம் நிகழ்ந்ததற்கு பின்னால் தெளிவாக வாஷிங்டனின் தூண்டுதல் இருக்கும் அதேசமயத்தில், நவம்பர் 30ம் தேதி பாரிஸ் காலநிலை மாற்ற மாநாட்டின் போது மோடி மற்றும் ஷெரீப் இடையே தனியாக நிகழ்ந்த 167 விநாடிகளுக்கான சந்திப்பில் இவை அனைத்தையும் திரும்பி பார்க்கலாம் என உத்தியோகபூர்வ செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

இது டிசம்பர் 6ம் தேதி தாய்லாந்திலுள்ள பாங்காக்கில் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் டோவல் மற்றும் அவரது பாகிஸ்தானிய சமதரப்பினரான நசீர் கான் ஜஞ்சுவா இருவரிடையேயான கூட்டத்திற்கு வழிவகுத்தது என்று கூறப்படுகிறது, இது நடந்த பின்னர்தான் பகிரங்கமாக வெளிப்பட்டது.

தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின் கூட்டத்தின் வெற்றிகரமான முடிவானது, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜை இஸ்லாமாபாத்திற்கு அனுப்பி டிசம்பர் 8ம் தேதியன்று "ஆசிய-இஸ்தான்புல் நிகழ்வுப்போக்கின் மையம்" என்ற பலதரப்பு கூட்டத்தின் சமீபத்திய அமர்வில் கலந்துகொள்ளசெய்ய வழிவகை செய்தது.

அமெரிக்கா இந்த இரகசிய கூட்டத்தில் அதிகாரபூர்வமாக பங்கேற்கவில்லை என்ற போதிலும், ஆப்கானிஸ்தான் மற்றும் அதன் அண்டை, மிக அண்டை நாடுகளான ரஷ்யா, சீனா, ஈரான், இந்தியா மற்றும் பல வளைகுடா நாடுகளிலிருந்து தூதரக அதிகாரிகளை வரவழைத்து ஒருங்கிணைத்து ஆப்கான் போர் குறித்து ஒரு "அரசியல் தீர்வு" காண்பதில் முன்னேறுவதற்கு அவசியமான கூட்டமாக அதனை பார்ப்பதாக அமெரிக்கா தெளிவுபடுத்தியது.

இஸ்லாமாபாத்தில் இருந்தபோது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் பாகிஸ்தான் பிரதமர் ஷெரீபை சந்தித்தார், அதைஅடுத்து இருவரும் அப்போது சர்ச்சைக்குரிய காஷ்மீர் பிராந்திய பிரச்சினை உள்ளிட்ட பல தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் விதமாக இந்தியா பாகிஸ்தானிடையே "விரிவான இருதரப்பு பேச்சுவார்த்தை" ஐ ஆரம்பிப்பது பற்றி அறிவிப்புகளை வெளியிட்டனர்.

உண்மையில், 2003ம் ஆண்டில் தொடங்கப்பட்ட "விரிவான அமைதிப் பேச்சுவார்த்தை" என்பதற்கான புதிய பெயர்தான் "இருதரப்பு பேச்சுவார்த்தை", இது டிசம்பர் 2008ல் மும்பை பயங்கரவாத தாக்குதல் ஏற்பட்ட சமயத்தில் இந்தியா அதனை இடைநிறுத்தம் செய்ததில் இருந்து எடுபடக்கூடியதாக நின்று போனது.

கிறிஸ்துமஸ் தினத்தன்று ஷெரீபை சந்தித்தபோது, பாகிஸ்தான் உடனான இந்தியாவின் உறவுகளை சீர்படுத்தும் வகையில் மோடி தனது சொந்த தனிப்பட்ட விருப்பத்தை பதிவு செய்தார், மேலும் வாஷிங்டனின் பாராட்டுதல்களை பெற்றது, அது அவரது முதல் கால் பதித்த பயணம் தொடர்பாக ஆர்வம் குன்றி இருந்தது என்பதில் சந்தேகமில்லை.

அது மோடி மற்றும் இந்திய வணிக பெரும் பிரதிநிதிகளையும் மாஸ்கோவிற்குச் செல்ல வைத்தது. அங்கிருந்தபோது, மோடி இந்தோ-ரஷியன் மூலோபாய கூட்டின் முக்கியத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்தினார், மேலும் பல முக்கியத்துவம் வாய்ந்த ஆயுத பேரங்களில் கையெழுத்திட்டார்.

மோடி அவரது 19 மாத ஆட்சி காலத்தில் இந்தியாவின் மிகுந்த வளர்ச்சிவீதத்தை தக்கவைக்கத் தவறியது மற்றும் வெகுஜன எதிர்ப்பின் மத்தியில் முதலீட்டாளர் சார்பு தொழிலாளர் மற்றும், நில உடமை சீர்திருத்தங்களை முன்னெடுத்து செல்வதில் காணப்படும் அதன் தயக்கம் போன்றவை குறித்த பெரும் வணிகங்களின் விமர்சனங்கள் பெருகி வரும் நிலையில் அவர் தன்னை உறுதியான பொறுப்பாளாராகவும் அதேநேரத்தில் வியத்தகு நடவடிக்கைகள் மேற்கொள்ள தகுதிவாய்ந்தவர் என்பதையும் கூட நிரூபிக்க அவரது லாகூர் திடீர் பயணம் அனுமதித்தது.

டைம்ஸ் ஆப் இந்தியா, ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஆகிய பெருநிறுவன குரல்களில் பிரதிபலிப்பது போன்று, பாகிஸ்தான் உடனான அனைத்து ஈடுபாடுகளுக்கும் எதிரான அவரது கடுமையான நிலைப்பாடு குறித்து மறுபரீசிலனை செய்ய வணிக உயர்மட்ட பிரிவுகள் மோடியை துரிதப்படுத்தின, இது எந்தவொரு கனிசமான இலாபத்தையும் அளிக்கவில்லை, அரசின் பொருளாதாரச் "சீர்திருத்தம்" என்ற பொருட்குறிப்பிலிருந்தும் கவனத்தை திசை திருப்பியும் விட்டுவிட்டது போன்ற விவாதங்களும் எழுந்தன.

புத்தாண்டு தொடக்கத்தில் இந்திய பாகிஸ்தானிய வெளியுறவு செயலாளர்களின் சந்திப்பிற்கான பணிகள் நடந்து வருவதாக தோன்றும் அதேவேளை மோடியின் பயணம் ஊடகங்களின் விசிறியடிப்புகளை தவிர வேறு எதையும் சாதித்ததாக தெரியவில்லை. உயர்மட்ட வெளியுறவு மற்றும் இராணுவ பாதுகாப்பு அதிகாரிகள் கொண்ட பரிவாரங்களுடன் இந்திய பிரதமர் லாகூரை சென்றடைந்தார், ஆனால் அவர்களது பாகிஸ்தானிய சமதரப்பினர் அங்கு பேச்சுவார்த்தைக்கு தயாராக இல்லை. இதுவொரு திட்டமிட்ட நிராகரிப்பாகவும் தெரியவில்லை, ஆனால் அவரது பயண முன்னேற்பாடுகளில் இருந்த குறைபாட்டின் விளைவாக கூட இருக்கலாம்.

எனினும், முன்பு இந்தியா உடனான பதட்டங்களைக் குறைக்க ஷெரீப் எடுத்த முயற்சிகளை கவிழ்க்க பாகிஸ்தான் இராணுவம் வேலை செய்தது. வாஷிங்டனின் மறைமுக ஆதரவுடன், பாகிஸ்தான் இராணுவ உயர்மட்டம் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக சிவில் அரசாங்கத்திடமிருந்து நாட்டின் வெளியுறவு மற்றும் தேசிய பாதுகாப்புக் கொள்கைகள் மீதான கட்டுப்பாட்டை மீண்டும் கைப்பற்றியுள்ளது.

இதற்கிடையில், மோடி தன்னை ஒரு வலுவான இந்துவாக காட்டிக்கொள்வதன் மூலமகவும் பாகிஸ்தானை அதற்குரிய இடத்தில் வைக்கப்போவதாகவும் சூளுரைத்து தனது அரசியல் வாழ்க்கையை நடத்தினார்.

பிற்போக்கு இந்திய-பாகிஸ்தான் புவிசார்-அரசியல் சார்ந்த மோதல்கள் வேரூன்றியிருப்பது, தெற்கு ஆசியாவில் ஏகாதிபத்திய எதிர்ப்பு புரட்சியினை காலனித்துவ முதலாளித்துவம் ஒடுக்கியதிலும் 1947ல் பிரிட்டிஷ் இந்தியாவை, இந்துமத ஆதிக்க இந்தியா மற்றும் இஸ்லாமிய பாகிஸ்தான் என்று அவற்றுக்கிடையில் வகுப்புவாத பிரிவினையை உருவாக்கியதில் தான்.

இந்த மோதல், போட்டி முதலாளித்துவங்களின் முறைப்படியான சித்தாந்தங்களின் மையமாக மாறியது, அது கடந்த ஒரு தசாப்தத்திற்கும் மேலாக யுரேசியா மீதான தனது ஆதிக்கத்தை நிலைப்படுத்தும் மற்றும் விரிவுபடுத்தும் விதமாக வாஷிங்டன் எடுக்கும் முயற்சிகளுடன் அதிகளவில் சிக்குண்டுள்ளது.