ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Threat of US-Russia clash grows after Washington cuts off Syria talks

சிரிய பேச்சுவார்த்தைகளை வாஷிங்டன் நிறுத்திய பின்னர் அமெரிக்க-ரஷ்ய மோதல் அபாயம் அதிகரிக்கிறது

By Bill Van Auken
5 October 2016

சிரியாவில் ஒரு சமாதான உடன்பாடு மற்றும் அரசியல் தீர்வை அடைவதற்கான முயற்சிகளில், ஒபாமா நிர்வாகம் மாஸ்கோ உடனான இருதரப்பு பேச்சுவார்த்தைகளை முறித்துக் கொண்டதை அடுத்து, போரால் சீரழிக்கப்பட்ட அந்நாட்டில் அமெரிக்க இராணுவ தலையீட்டை தீவிரப்படுத்துவது குறித்து பரிசீலிக்க இன்று ஒரு கூட்டத்தை அது கூட்டியிருப்பதாக செய்திகள் அறிவிக்கின்றன.

அரசு மற்றும் பாதுகாப்புதுறை செயலர்கள், முப்படைகளின் தலைமை தளபதி மற்றும் சிஐஏ இயக்குனர், அத்துடன் வெள்ளை மாளிகையின் உயர்மட்ட அதிகாரிகள் கலந்து கொள்ளவிருக்கின்ற, அந்த முக்கியஸ்தர்கள் குழு (Principals Committee) எனப்படுவது, உலகின் இரண்டு மிகப் பெரிய அணுஆயுத சக்திகளான அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான பதட்டங்கள் அதிகரித்தளவில் அபாயகரமாக தீவிரமடைந்து வருவதற்கு இடையே ஒன்று கூடுகிறது.

கப்பற்படை ஏவுகணைகளை பிரயோகித்து சிரிய விமானப்படை ஓடுதளங்கள் மீது குண்டுவீசுவது மற்றும் கூட்டணி போர்விமானங்கள் மற்றும் கப்பல்களில் இருந்து ஏனைய தொலைதூர ஆயுதங்களை ஏவுவது, அத்துடன் ஏனைய ஆக்ரோஷமான இராணுவ நடவடிக்கைகளை" உள்ளடக்கிய இரகசிய முன்மொழிவுகளை அக்கூட்டம் பரிசீலிக்குமென செவ்வாயன்று வாஷிங்டன் போஸ்ட் குறிப்பிட்டது.

பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவரை மேற்கோளிட்டு போஸ்ட் அறிவிக்கையில், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவையின் அங்கீகாரம் இல்லாமல் மற்றொரு நாட்டுக்கு எதிராக இதுபோன்ற இராணுவ தாக்குதல்களை நேரடியாக நடத்துவது குறித்த வெள்ளை மாளிகையினது கவலைகளை சாந்தப்படுத்துவதற்காக, அத்தாக்குதல்களை "மறைமுகமாகவும், பொதுவான ஒப்புதல் இன்றியும்" நடத்த பரிந்துரைக்கப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டது.

போஸ்ட் மேற்கோளிட்ட அதிகாரியின் கருத்துப்படி, சிஐஏ மற்றும் முப்படைகளின் தலைமை தளபதி இருவரும் ஏற்கனவே "அத்தகைய 'சமபலமற்ற' விருப்பத்தெரிவுகளுக்கு ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.” “அலெப்போ வீழ்ச்சி அடைவது, சிரியாவில் அமெரிக்காவினது பயங்கரவாத எதிர்ப்பு நோக்கங்களை பலவீனப்படுத்தும்" என்பதால் பெண்டகனும் சிஐஏ உம் அத்தகையதொரு இராணுவ விருப்பத்தெரிவை ஆதரிப்பதாக மற்றொரு பெயர் வெளியிட விரும்பாத ஒரு மூத்த நிர்வாக அதிகாரி போஸ்ட் க்கு தெரிவித்தார்.

மத்திய கிழக்கில் மற்றொரு நேரடியான அமெரிக்க இராணுவ தலையீட்டை தொடங்குவதற்கு நிச்சயமாக இதுவொரு சாக்குபோக்கான பிரச்சாரமாகும். அமெரிக்க இராணுவம் மற்றும் உளவுத்துறை எந்திரம் உண்மையில் எதற்கு அஞ்சுகின்றது என்றால், கிழக்கு அலெப்போவை பறிகொடுப்பதென்பது, மேற்கு சிரியாவின் பெரும் மக்கள்தொகை நிரம்பிய மையங்கள் மீது பலமான பிடியை வைத்திருக்க, சிஐஏ ஆல் மற்றும் துருக்கி, சவூதி அரேபியா மற்றும் கட்டார் போன்ற அமெரிக்காவினது பிராந்திய கூட்டாளிகளால் ஆயுதமேந்த செய்யப்பட்டு, நிதியுதவி வழங்கப்பட்டு மற்றும் நேரடியாக கூலிக்கு நியமிக்கப்பட்டுள்ள, ரஷ்ய-ஆதரவிலான சிரிய அரசை தாக்கும் "கிளர்ச்சியாளர்கள்" என்றழைக்கப்படுபவர்களை நிர்மூலமாக்கிவிடும் என்பதற்காக ஆகும். இது வாஷிங்டனால் முடுக்கிவிடப்பட்ட ஆட்சி மாற்றத்திற்கான ஐந்தாண்டு கால போரை படுதோல்விக்குத் திருப்பிவிடும்.

இது "அமெரிக்காவின் பயங்கரவாத-எதிர்ப்பு நோக்கங்களை பலவீனப்படுத்தும்" என்ற வாதம், அமெரிக்காவினது பயங்கரவாதத்திற்கு எதிரான போரின் மோசடியை மட்டுமே எடுத்துக்காட்டுகிறது. அலெப்போவின் உள்ளே பிரதானமாக சண்டையிடும் சக்திகள், அல் கொய்தாவுடன் நீண்டகாலமாக உள்ள சிரியாவிற்கான அதன் துணை அமைப்பும் மற்றும் அதனுடன் இணைந்த இஸ்லாமிய துணைக்குழுக்களாலும் உருவாக்கப்பட்டுள்ளது.

இராணுவ நடவடிக்கைக்கான முன்மொழிவை ஜனாதிபதி பராக் ஒபாமா நிராகரிக்கக்கூடும் என்று போஸ்ட் கட்டுரை குறிப்பிடுகின்ற போதிலும், சிஐஏ மற்றும் இராணுவ கட்டளையகத்தின் ஒருங்கிணைந்த அழுத்தம் ஒரு கொள்கை மாற்றத்திற்கு நிர்பந்திக்கலாம். அனேகமாக ஒபாமாவின் பங்குபற்றல் உள்ளடங்கலாக, அடுத்த வாரயிறுதியில் நடக்குமென எதிர்பார்க்கப்படுகின்ற தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் ஒரு முழுமையான கூட்டத்தில் ஒரு முடிவெடுக்கப்படலாம்.

அதே நேரத்தில், ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் செவ்வாயன்று அறிவிக்கையில், அது சிரியாவின் டார்டுஸ் துறைமுக நகரில் உள்ள ரஷ்ய கடற்படை தளத்தைப் பாதுகாக்க நிலத்திலிருந்து விண்ணில் தாக்கும் அதிநவீன S-300 ரக ஏவுகணைவீசிகளை நிலைநிறுத்தி, சிரியாவிற்குள் ரஷ்ய வான்வழி பாதுகாப்பு அமைப்பைப் பலப்படுத்தி வருவதாக அறிவித்தது. இஸ்லாமிய "கிளர்ச்சியாளர்களிடம்" விமானப்படை இல்லை என்பதால், ரஷ்ய மற்றும் சிரிய அரசு நிலைகள் மீதான எந்தவொரு அமெரிக்க இராணுவ தாக்குதல்களிலிருந்தும் பாதுகாத்துக்கொள்வதே அதுபோன்ற ஆயுத அமைப்புகளது (weapons systems) நோக்கமாகும்.

சிரிய போர்நிறுத்த பேச்சுவார்த்தைகளின் முறிவும் மற்றும் இரண்டு தரப்பில் இருந்தும் அச்சுறுத்தும் வகையிலான இராணுவ தீவிரமயப்படுத்தல்களும் வெறுமனே தனிப்பட்டரீதியில் அந்த சமாதான உடன்பாட்டு மீறல்களின் விளைவு மட்டுமல்ல. அமெரிக்க ஆதரவிலான போராளிகள் குழுக்கள் நூற்றுக் கணக்கான தாக்குதல்களை நடத்தி வருவதுடன் சேர்ந்து, அமெரிக்க தரப்பிலிருந்தான தாக்குதல் இன்னும் மோசமாக இருந்தன. அமெரிக்க தரப்பில் டெர் எஸ்-ஜொர் அருகில் ஒரு சிரியாவின் அரசு புறச்சாவடி மீது நடத்தப்பட்ட செப்டம்பர் 17 அமெரிக்க குண்டுவீச்சு இன்னும் அதிக தீர்மானகரமாக இருந்தது, அதில் அண்மித்து 200 துருப்புகள் கொல்லப்பட்டு, காயமடைந்தனர். அந்த விமானத் தாக்குதல் தற்செயலாக நடந்ததாக பெண்டகன் வாதிட்டாலும், அது உள்நோக்கத்துடன் நடத்தப்பட்டதாக சிரியா குற்றஞ்சாட்டியது. கூட்டாக இலக்கில் வைத்தல் மற்றும் உளவுத்தகவல்களை பகிர்ந்து கொள்வதற்கான ரஷ்யாவுடனான உடன்பாட்டை நடைமுறைப்படுத்துவதை தடுத்து (இது அமெரிக்க இராணுவ கட்டளையகத்தால் பகிரங்கமாக எதிர்க்கப்பட்டது என்ற நிலையில்), போர்நிறுத்த உடன்பாட்டை உடைக்க சேவையாற்றியது.

சிரியாவில் ஒருபுறம் அமெரிக்க ஏகாதிபத்தியமும் மறுபுறம் விளாடிமீர் புட்டினின் ரஷ்ய அரசாங்கமும் பின்தொடரும் நேர் எதிரெதிரான நோக்கங்கள் தான் அப்போர்நிறுத்தம் மீதான மோதல்களுக்கு அடித்தளத்தில் இருந்தன. சிரியாவில் வாஷிங்டன் தலையீடு செய்வது பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கோ அல்லது மனித உரிமைகளை பாதுகாப்பதற்கோ கிடையாது, மாறாக மத்திய கிழக்கிலும் மற்றும் அதன் பரந்த எரிசக்தி ஆதாரவளங்கள் மீதும் சவாலுக்கிடமற்ற அமெரிக்க மேலாதிக்கத்தை வலியுறுத்தவும், ரஷ்யா மற்றும் சீனா இரண்டும் அவற்றை அணுகாமல் செய்வதற்குமான அதன் நீண்டகால உந்துதலைத் தீவிரப்படுத்துவற்கும் ஆகும். அங்கே ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வர அவசியப்படும் வரையில், மற்றும் தற்போதைய ஜனாதிபதி பஷர் அல் அசாத்தின் கீழ் அல்லது அவருக்கடுத்து ரஷ்ய நலன்களுக்கு இணக்கமாக இருக்கும் ஒருவருடன் சேர்ந்து ரஷ்யாவினால் அந்த அரசு பலப்படுத்தப்படுவதை தடுக்க அவசியப்படும் வரையில், வாஷிங்டன் நீண்ட காலத்திற்கு அங்கே இரத்த ஆறை ஓடச்செய்ய தயாராக உள்ளது.

புட்டின் அரசாங்கம் அதன் பங்கிற்கு, ரஷ்யாவை இராணுவரீதியில் சுற்றி வளைக்கும் அமெரிக்க உந்துதலுக்கு எதிரான ஒரு பரந்த போராட்டத்தின் பாகமாக சிரியாவைக் காண்கிறது. சிரியாவில் ஒரு வெற்றிகரமான அமெரிக்க ஆட்சி மாற்ற நடவடிக்கையானது, ரஷ்யாவின் காகசஸ் பிராந்தியத்தில் இருந்து அணிதிரட்டப்பட்ட சிஐஏ நிதியுதவி பெறும் இஸ்லாமிய போராளிகளை கட்டவிழ்த்து விடுவது உட்பட ரஷ்யாவில் நேரடியான தலையீட்டை நோக்கி முன்னேறுவதற்கான ஒரு படியாக இருக்குமென அது அஞ்சுகிறது. ரஷ்ய கூட்டாட்சியை நிலைகுலைய செய்ய மற்றும் இறுதியில் துண்டாடுவதற்கான ஒரு நடவடிக்கையில், மேற்கத்திய பினாமிகளாக சேவையாற்றும் சிரிய போர்க்களத்தில் பயிற்றுவிக்கப்பட்ட அதுபோன்ற பிரிவினைவாத சக்திகளை ரஷ்யாவிற்கு திருப்பி அனுப்புவதற்கு டமாஸ்கஸில் ஏற்படும் அமெரிக்க ஆதரவிலான வாடிக்கையாளர் ஆட்சி உதவக்கூடும் என்று அது அஞ்சுகிறது.

மாஸ்கோ இன் தலையீட்டில் ஒரு சுயபாதுகாப்பு அம்சம் இருந்தாலும், பகுப்பாய்வின் இறுதியில், அது ரஷ்யாவின் அல்லது சிரியாவின் பெருந்திரளான மக்களது நலன்களை பாதுகாப்பதற்கு சேவைசெய்யவில்லை, மாறாக ஒரு கால் நூற்றாண்டுக்கு முன்னர் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் சோவியத் ஒன்றிய கலைப்பு மற்றும் முதலாளித்துவ மீட்சியை பின்தொடர்ந்து நடந்த குற்றகரமான நடவடிக்கைகளில் இருந்து அதன் செல்வவளம் மற்றும் அதிகாரத்தைக் கைப்பற்றிய ஆளும் செல்வந்த தட்டுக்களின் நலன்களைப் பாதுகாப்பதை நோக்கமாக கொண்டது. அலெப்போ மீதான இரத்தக்களரியான முற்றுகை உட்பட, சிரியாவில் பயன்படுத்தப்பட்டு வருகின்ற அணுகுமுறைகள் அவர்களது வர்க்க நலன்களை பிரதிபலிக்கின்றன.

அதே நேரத்தில் அலெப்போ மீதான ரஷ்ய-சிரிய குண்டுவீச்சில், அப்பாவி மக்கள் கொல்லப்படுவது குறித்து அமெரிக்க அரசாங்கத்தின் பாகத்தில் இருந்து வரும் கண்டனங்கள் முற்றிலும் பாசாங்குத்தனமானதாகும். மத்திய கிழக்கில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்களை விலையாக கொடுத்து மற்றும் ஒட்டுமொத்த சமூகங்களையும் நாசமாக்கி 15 ஆண்டுகளாக ஆக்ரோஷமான போர் நடத்தியதற்கு பின்னரும், மற்றவர்களுக்கு "போர் குற்றங்கள்" பற்றி அறிவுரைகூறுவதற்கு வாஷிங்டனுக்கு எவ்வித உரிமையும் இல்லை.

அனைத்திற்கும் மேலாக, அலெப்போ மீதான இப்போதைய முற்றுகை போல அதேயளவிற்கு இரத்தக்களரியான மற்றும் தண்டிக்கும் விதமான நடவடிக்கைகளை அமெரிக்க இராணுவமே தயாரிப்பு செய்து வருவதற்கான போதிய அறிகுறிகளும் உள்ளன. இஸ்லாமிய அரசின் (ISIS என்றும் அறியப்படும்) கட்டுப்பாட்டில் உள்ள வடக்கு ஈராக்கிய நகரமான மொசூல் க்கு எதிராக, சாத்தியமான அளவில் அடுத்த மாதமே எதிர்பார்க்கப்படும், அமெரிக்க ஆதரவிலான ஈராக்கிய தாக்குதலில் ஏறத்தாழ அதிகபட்சமாக ஒரு மில்லியன் பேர் அவர்களின் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று ஐ.நா. அதிகாரிகள் மதிப்பிடுகிறார்கள்.

அப்பிராந்தியத்தில் வாஷிங்டனின் நேட்டோ கூட்டாளியான துருக்கி, வரவிருக்கும் மொசூல் தாக்குதல் குறித்து பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளது. துருக்கிய பிரதம மந்திரி பினாலி யெல்ட்ரிம் அமெரிக்க திட்டங்களை "அபாயகரமானதாக" வர்ணித்ததோடு, தொடர்ந்து கூறுகையில், “மொசூல் நடவடிக்கைக்கான எங்கள் பங்காளியின் திட்டங்கள் வெளிப்படையாக இல்லை,” என்றார். அந்நகரைக் கைப்பற்ற ஷியா மற்றும் குர்திஷ் போராளிகள் குழுக்களைப் பயன்படுத்துவது "அப்பிராந்தியத்தில் ஒரு புதிய நெருப்பை மூட்டுவதற்கு இட்டுச் செல்லும்" என்று யெல்ட்ரிம் எச்சரித்தார்.

வடக்கு சிரியாவில் உள்ள சிரிய குர்திஷ் பிரிவினைவாத போராளிகள் குழுக்களை, அவற்றின் பிரதான பினாமிப் படைகளாக அமெரிக்கா பயன்படுத்துவது தொடர்பாக அங்காரா மற்றும் வாஷிங்டனுக்கு இடையே விரிசல்கள் அதிகரித்துள்ளன. குர்திஷ் படைகளை புறமுதுகிட்டு ஓடச் செய்ய மற்றும் துருக்கிய எல்லையில் அவர்கள் ஒரு தன்னாட்சி பிராந்தியத்தை ஏற்படுத்துவதில் இருந்து அவர்களைத் தடுக்க துருக்கி தீர்மானகரமாக உள்ளது.

அமெரிக்க ஆதரவிலான குர்திஷ் படைகளை பின்னோக்கி துரத்துவதற்கும் மற்றும் சிரியாவின் வடக்கில் எல்-பாப் நகரைச் சுற்றி 5,000 சதுர கிலோமீட்டர் "பாதுகாப்பு மண்டலம்" அமைப்பதற்காக, ஆகஸ்ட் மாத இறுதியில் தொடங்கி சிரியாவிற்குள் துருப்புகளை அனுப்பிய துருக்கியின் யூப்ரரேடஸ் முற்றுகை நடவடிக்கை (Operation Euphrates Shield) தொடருமென பிரதம மந்திரி யெல்ட்ரிம் சூளுரைத்தார்.

மற்றொரு துருக்கிய அதிகாரியும், பாதுகாப்பு அமைச்சர் ஃப்க்ரி இஸ்க் உம், தனித்தனியாக, புதனன்று கருத்துரைக்கையில் சிரியாவில் ஒரு பெரிய அமெரிக்க-ரஷ்ய மோதல் சம்பவத்தில், “துருக்கி எப்போதும் அதன் சொந்த நலன்களைப் பாதுகாக்கும்,” என்றனர்.

ரஷ்ய ஜனாதிபதி புட்டின், அவரது துருக்கிய சமதரப்பான ரெசெப் தயிப் எர்டோகனை அக்டோபர் 10 அன்று துருக்கியில் சந்திக்க உள்ளார். நவம்பர் 2015 இல் துருக்கிய-சிரிய எல்லையில் ஒரு ரஷ்ய விமானம் துருக்கிய போர்விமானத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டதற்குப் பிந்தைய முதல் விஜயமாக அது இருக்கும்.

வாஷிங்டன் உடனான துருக்கியின் பதட்டங்களும் மற்றும் சிரியாவில் அதன் சொந்த பிராந்திய அபிலாஷைகளும், புவிசார் அரசியல் பதட்டங்களை அதிகரிக்கவே மட்டுமே செய்யும். அது ஆட்சி மாற்றத்திற்கான சிரிய போரை ஒரு புதிய உலக போராக கூட திருப்பிவிடக்கூடும்.