ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Trump names opponent of public schools to head Department of Education

ட்ரம்ப் அரசு பள்ளிகளின் எதிர்ப்பாளரை கல்வித்துறை தலைவராக நியமிக்கிறார்

By Eric London
26 November 2016

ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் டொனால்ட் ட்ரம்பின் பில்லியனர்கள், மத அடிப்படைவாதிகள் மற்றும் இராணுவவாதிகளது மந்திரிசபை அமெரிக்க வரலாறிலேயே மிகவும் வலது சாரியாக உருவாகி வருகிறது. அவர், கட்சிக்கு நிதிதிரட்டும் நீண்டகால குடியரசுக் கட்சி அங்கத்தவர் பெட்சி டிவொஸ் (Betsy DeVos) ஐ கல்வித்துறை செயலாளராக நிறுத்தியிருப்பதும் விதிவிலக்கானதல்ல.

அரசியல்ரீதியாகவும் மற்றும் தனிப்பட்டரீதியிலும், டிவொஸ், கொள்ளையடிக்கும் மற்றும் ஆதிக்க மனோபாவம் கொண்ட அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் ஆளுருவாக உள்ளார்.

பத்தாண்டுகளாக, டிவொஸ் குழந்தை தொழிலாளர்களை மீளமர்த்துவதற்கு அழைப்புவிடுக்கும் ஒரு அமைப்புக்கு தலைமை கொடுத்து வந்தார். 1995 இல் இருந்து 2005 வரையில், ஆக்டன் பயிலகத்தின் (Acton Institute) இயக்குனர்கள் குழுவின் இருந்த அந்த அம்மையார், 2000 இல் இருந்து அந்த அமைப்பிற்கு ஆதரவாக 1.28 மில்லியன் டாலர் நன்கொடை வழங்கியுள்ளார்.

ஆக்டன் பயிலகத்தின் நவம்பர் 3, 2016 வலைப் பதிவு ஒன்று “வேலை என்பது நமது குழந்தைகள் கையாளக்கூடிய ஒரு பரிசு" என்று தலைப்பிட்டிருந்தது. நிலக்கரி சுரங்கங்களின் தூசி படிந்த முகத்துடன் சிறுவர்களது 20 ஆம் நூற்றாண்டு புகைப்படங்களுக்கு திரும்புவது, "தங்களது பரிசுகளைப் பயன்படுத்தி தங்களின் சமூகத்திற்கு சேவையாற்றி, அதன் விளைவாக ஒரு தழைத்தோங்கும் தேசத்திற்கான அடித்தளத்தை அமைத்து, நிறுவனங்கள் மற்றும் நகரங்களைச் செயலூக்கத்துடன் கட்டமைப்பவர்களின் முகங்களைப் பிரதிபலிக்கிறது,” என்று அந்த வலைப் பதிவு வாதிடுகிறது.

ஒரு நிலக்கரி சுரங்க சிறுவராக இருப்பது "ஓர் அற்புதமான வாழ்க்கை" மற்றும் "குழந்தைகள் கட்டாயம் பள்ளிக்கூடம் செல்ல வேண்டுமென்பதை நீக்கி, வேலைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டால், Chick-Fil-A மற்றும் Walmart இல் வேலைகளை தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பு இருக்கும். மற்றும் அவை அருமையான வேலைகளாகவும் இருக்கும் ...” என்று குழந்தை-தொழிலாளர்களை ஆதரிக்கும் சமீபத்திய மற்றொரு கட்டுரையை அது மேற்கோளிடுகிறது.

டிவொஸ் தசாப்தங்களாகவே பொதுக்கல்வி முறையை நீக்கி, அதை அவரது பில்லியனிய தனியார் பள்ளிக்கூடங்களுக்கும் மற்றும் சார்ட்டர் பள்ளிக்கூடங்களை நடத்தும் இலாபமீட்டும் நண்பர்களுக்கும் பணம் பொழியும் பசுவாக மாற்றும் ஒரு சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளார். பொதுக் கல்வித்துறையில் இருந்து பில்லியன் கணக்கான டாலர்களை பெரும் செல்வந்தர்களின் பைகளுக்கு மாற்றுவதற்கு தரகு வேலை செய்பவர்ரகளது நிழலுலக குழுவின் ஒரு வலையமைப்பை அப்பெண்மணி நிறுவியுள்ளார்.

பொதுக் கல்வித்துறை பள்ளிக்கூடங்களை தனியார் பள்ளிக்கூடங்களைக் கொண்டும், மதவாத மற்றும் இலாபத்திற்கான பள்ளிக்கூடங்களைக் கொண்டும் பிரதியீடு செய்ய ஆலோசனை வழங்கும் பிரச்சாரத்தைப் பரப்பி வரும் ஒரு அமைப்பான கல்வி சுதந்திர நிதியம் (Education Freedom Fund) என்பதற்கு டிவொஸ் 1993 இல் தலைமையேற்றிருந்தார். “கல்வியை நாம் அணுகும் விதத்தில் இருந்து அடிப்படையிலேயே மாற்றுவதை நாங்கள் மிகவும் பலமாக ஆதரிக்கிறோம்,” என்று 2001 இல் ஒரு கிறிஸ்துவ வானொலிக்கு டிவொஸ் தெரிவித்தார்.

2003 இல் டிவொஸ் "எல்லா குழந்தைகளும் முக்கியமே" (All Children Matter) என்பதை நிறுவினார், அது அரசு பள்ளிகளை தனியார்மயப்படுத்துவதற்கு அரசியல்வாதிகளது ஆதரவை விலைக்கு வாங்குவதில் மில்லியன் கணக்கான டாலர்களை செலவிட்டுள்ளது. 2004 இல் டிவொஸ் "பள்ளிக்கூடங்களை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டணி" (Alliance for School Choice) என்பதை தொடங்க உதவினார், மற்றும் 2010 இல் அவர் "குழந்தைகளுக்கான அமெரிக்க கூட்டமைப்பு" (American Federation for Children) என்ற மற்றொரு தனியார்மயமாக்கும் குழுவை ஸ்தாபித்தார்.

ஆரம்ப மற்றும் உயர்நிலை கல்விச்சட்டம் 1965 இன் சரத்து 1 இல் இருந்து கிடைக்கும் பத்து பில்லியன் கணக்கான டாலர்கள் பிரத்யேகமாக வறிய பகுதிகளின் பள்ளிகூடங்களுக்கு செல்லும் நிலையில், அவற்றை இலாபத்திற்கான சார்ட்டர் பெருநிறுவனங்களுக்கு மிகப்பெரும் தொகையை வாரி வழங்கும் கூப்பன்களாக மாற்றுவதென்ற ட்ரம்ப் இன் பிரச்சாரத்துடன் டிவொஸ் இன் முன்வரலாறு சமாந்தரமாக உள்ளது.

டிவொஸ் இன் அரசியல் நிலைநோக்கு அப்பெண்மணிக்கு சார்பாக பேசும் பிரபுத்துவ அடுக்கின் சமூக-எதிர்ப்பு நலன்களைப் பிரதிபலிக்கிறது.

அப்பெண்மணியின் தந்தை பில்லியனிய தொழிலதிபர் எட்கார் பிரின்சின் சொத்துக்களுக்கு இவர் வாரிசாவார். அவரது சகோதரர் எரிக் பிரின்ஸ், 2007 இல் பாக்தாத்தின் நிசௌர் சதுக்கத்தில் 17 ஈராக்கிய மக்களைப் படுகொலை செய்த கூலிப்படை நிறுவனமான பிளாக்வாட்டார் USA இன் (அதற்குப் பின்னர் இதன் பெயர் அகாடமி என்று மாற்றப்பட்டது) ஸ்தாபகராவார். அவரது கணவர் ரிச்சார்ட் டிவொஸ், 2006 இல் மிச்சிகன் மேயருக்குப் போட்டியிட்டு தோல்வியடைந்த அந்த பிரச்சாரத்தில் பத்து மில்லியன் கணக்கான தனிப்பட்ட செல்வத்தைச் செலவழித்த ஆம்வே பெருநிறுவன செல்வங்களுக்கான பில்லியனிய வாரிசாவார்.

பெட்சி மற்றும் ரிச்சார்ட் டிவொஸ் இருவரது பெற்றோர்களுமே, ஒரே-பாலின திருமணம் மற்றும் கருக்கலைப்பு உரிமைகளை எதிர்க்க மிகப்பெருமளவிலான பணத்தை நன்கொடையாக வழங்கியுள்ள மதவாத வெறியர்களின் வகுப்பை சேர்ந்தவர்கள் ஆவர்.

கறுப்பு பணம்: தீவிர வலதின் எழுச்சிக்குப் பின்னால் மறைந்துள்ள பில்லியனர்களின் வரலாறு என்ற நூலில் அதன் ஆசிரியர் ஜேன் மேயர், டிவொஸ் குடும்பத்தின் பாத்திரத்தை பின்வருமாறு வர்ணிக்கிறார்: “Heritage அறிக்கட்டளை போன்ற சிந்தனைக் குழாம் என்பதிலிருந்து கல்லூரி வளாகங்களில் பழமைவாத பிரசுரங்களுக்கு நிதியுதவி வழங்கிய Intercollegiate ஆய்வுகளுக்கான பயிலகம் போன்றவற்றை கல்விசார் அமைப்புகளாக மாற்ற, 1970 இல் தொடங்கி அவர்கள் நடைமுறையளவில் New Right இன் ஒவ்வொரு கிளைகளது உள்கட்டமைப்பிற்காகவும் குறைந்தபட்சம் 200 மில்லியன் டாலரை செலவிட தொடங்கினர்.”

1997 இல் பெட்சி டிவொஸ் வாஷிங்டன் டிசி பிரசுரமான Roll Call என்பதில் ஒரு கட்டுரை எழுதினார், அது அரசில் மேலாளுமை செலுத்தும் செல்வந்தர்களது பிரபுத்துவ சலுகைகளை பாதுகாத்தது:

டிவொஸ் எழுதினார், “என்னுடைய குடும்பம் தேசிய குடியரசு கட்சிக்கு நன்கொடை வழங்கும் மிகப்பெரிய ஒரு நன்கொடையாளர் என்பதால், அரசியல் கட்சிகளுக்கான நன்கொடை குறித்து எனக்கு சிறிது தெரியும். எவ்வாறிருப்பினும் நாங்கள் செல்வாக்கை விலை கொடுத்து வாங்குகிறோம் என்று கூறும் கண்டனங்களை நிறுத்த நான் முடிவெடுத்துள்ளேன். இப்போது நான் அந்த விடயத்தை சர்வசாதாரணமான ஒப்புக் கொள்கிறேன். அவர்கள் கூறியது சரிதான். பதிலுக்கு நாங்களும் விடயங்களை எதிர்பார்க்கிறோம்,” என்றார்.

பில்லியன் கணக்கிலான டாலர் மதிப்பில் டிவொஸ்க்கு அமெரிக்கா எங்கிலும் அமைந்துள்ள பல மாளிகைகள் உள்ளன. அவர் மிச்சிகன் ஹாலாண்டின் மக்காடவா ஏரி மீது 22,000 சதுர அடி மாளிகையைச் சொந்தமாக வைத்திருக்கிறார், அதில் 13 அரங்கங்களும், 10 படுக்கையறைகளும், எட்டு பாத்திரம் கழுவும் அறைகளும், மற்றும் மூன்று வாகன நிறுத்தும் அறைகளும் உள்ளன.

மிச்சிகனின் மக்காடவா ஏரி மீது அமைந்துள்ள டிவொஸின் மாளிகை

மேற்கு மிச்சிகன் நகரங்களான கிராண்ட் ராப்பிட்ஸ் மற்றும் அடாவில் இன்னும் இரண்டு மாளிகைகளும் அவர் குடும்பத்திற்கு சொந்தமாக உள்ளன. டிவொஸ் 2011 இல் புளோரிடாவில் மேலும் இரண்டு மாளிகைகளை வாங்கினார், அங்கே அவர் அவரது 164 அடி வெஸ்ட்போர்ட் சிறு சொகுசு கப்பலை (Westport Yacht) வைத்துள்ளார். “ஓய்வின்றி இருக்கும் பெட்சியின்" சிறு சொகுசு கப்பல் "கற்கள் மற்றும் தோல்களால் ஆன அருமையான சிறிய பிரத்யேக ஓய்வறைகள், ஓய்வூ கொள்வதற்கான ஒரு பரந்த திறந்தவெளி அரங்கத்திற்கு வழிவிடும் ஒரு வரவேற்பறை, நீரோடை கொண்ட மது அருந்தும் அறை மற்றும் பொழுதுபோக்கிற்கான உரையாடல் பகுதிகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது,” என்று Vero Beach பத்திரிகையின் சமூக பக்க கட்டுரை ஒன்று குறிப்பிடுகிறது.

இவர் தான், அரசு பள்ளிக்கூடங்களில் சேரும் 70 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளது படிப்புகளை மேற்பார்வையிட பொறுப்பேற்றுள்ள துறையை நிர்வகிக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாக்குகளில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் ட்ரம்ப் ஐ தோற்கடித்துள்ளார் என்ற உண்மைக்கு இடையிலும், ஜனநாயகக் கட்சி ஸ்தாபகம் ஒப்பீட்டளவில் டெவொஸின் நியமனம் குறித்து வாய்மூடி உள்ளது. “ட்ரம்ப்பினது ஆரம்ப தேர்ந்தெடுப்புகள், ஒரேமாதிரியான வயதான, வெள்ளையினத்தவர்களது அணியிலிருந்து வந்தது என்ற விமர்சனங்களை" டெவொஸின் நியமனம் "மழுங்கடிக்கும்" என்று நியூ யோர்க் டைம்ஸ் எழுதியது. டைம்ஸ் கட்டுரையாளர் டேவிட் லியோன்ஹார்ட் வியாழனன்று எழுதுகையில், “கல்வித்துறை அரசியல் குறித்து இன்னமும் திறந்தமனதுடன் இருப்பவர்களைப் பொறுத்த வரையில், நான் சிறிய கருத்து வேறுபாடுகளை கொண்டிருந்தாலும், பொறுத்திருந்த பார்க்கும் பிரதிபலிப்பைக் கொண்டுள்ளேன்,” என்றார்.

டிவொஸ் குடும்பவங்களது எத்தனையோ பல மாளிகைகளில் ஒன்று

150 ஆண்டுகால பழமையான அரசு கல்வி முறையை கலைக்கும், கட்டாய கல்வி முறையை நீக்கும், பத்து மில்லியன் கணக்கான தொழிலாளர்களது குழந்தைகள் ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் அவர்களது பாட்டனார்கள் செய்ததைப் போல அவர்களது குழந்தைப்பருவத்தை உழைப்பில் செலவிட அவர்களை நிர்பந்திக்கும் ஒரு பில்லியனிய செல்வந்தருக்கு, ஜனநாயகக் கட்சியின் அரை-உத்தியோகபூர்வ பத்திரிகையின் விடையிறுப்பு இவ்வாறு இருக்கிறது.

பள்ளிக்கூடங்கள் மீது ட்ரம்ப் நிர்வாகம் பாரியளவில் தாக்குதலை தீவிரப்படுத்தும் என்றாலும், “பொதுக் கல்வி சீர்திருத்தம்" என்பது ஒபாமா நிர்வாகமே அரசு பள்ளிக்கூடங்களை கலைப்பதை மேற்பார்வை செய்து, இலாபத்திற்கான சார்ட்டர் பள்ளிகளை விரிவாக்கி, பத்தாயிரக் கணக்கான கல்வித்துறைசார் வேலைகளை நீக்கிய நிலையில், ஜனநாயகக் கட்சியின் ஒரு தனித்துவமாக உள்ளது என்ற உண்மையையே இது அடிக்கோடிடுகிறது.