ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Shock in Europe over Trump’s election victory

ட்ரம்ப் தேர்தல் வெற்றி மீது ஐரோப்பாவில் அதிர்ச்சி

By Peter Schwarz
10 November 2016

அடுத்த அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு ஐரோப்பிய ஆளும் தட்டுக்கள் அதிர்ச்சியுடனும் பீதியுடனும் பதிலிறுத்துள்ளனர். அத்தகைய முடிவை எந்த அரசாங்கமும் செய்தித்தாளும் அரிதாகத்தான் எதிர்பார்த்தன. இப்பொழுது அவர்கள் ட்ரம்ப் ஜனாதிபதி பதவி அமெரிக்காவை மட்டுமல்ல உலகின் ஏனைய பகுதியையும் சீர்குலைக்கும் என அஞ்சுகின்றனர்.

நிதிச்சந்தைகள் குழப்பத்தில் உள்ளன, அரசியல் உலகம் அதன் மூச்சைப் பிடித்துக்கொண்டுள்ளது,” என்று ஜேர்மன் நிதியநாளிதழ் Handelsblatt குறிப்பிட்டது. “ட்ரம்ப் அவரது அறிவித்தல்களில் சிலவற்றை மட்டும் அமல்படுத்தினாலும் கூட, இந்தக் கோளமானது முன்பிருந்த நிலையில் இருக்காது – புவிசார் ரீதியில், பொருளாதார ரீதியில் மற்றும் கலாச்சார ரீதியிலும் இராது.”

பிரிட்டனின் ஃபைனான்சியல் டைம்ஸ், ட்ரம்ப் வெற்றியில் “பெரும் சீரழிவின் ஒரு கணத்தைப்“ பார்க்கிறது. பிரிட்டனில் பிரெக்ஸிட் பொது வாக்கெடுப்பிற்குப் பின்னர், அது “மிதவாத உலக ஒழுங்கிற்கு இன்னொரு துன்பகரமான தாக்குதல் போன்று” உள்ளது என அச்செய்தித்தாள் எழுதியது ”திரு ட்ரம்ப் அவரது செயல்களாலும் வார்த்தைகளாலும், கணக்கிட முடியாத அளவு மேற்கிற்கு இழப்பில் மாபெரும்  சிக்கல் அகற்றுதலுக்கு பங்களிக்க விரும்புகிறாரா என்பதைக் கட்டாயம் முடிவு செய்வார்” என எழுதுகிறது.

கார்டியன்  பத்தி எழுத்தாளர் Richard Wolffe ட்ரம்ப் வெற்றியை, “ஒரு புரட்சிக்குக் குறைவாய் இல்லாதது…..” என அழைத்தார். “அமெரிக்காவும் உலகுடனான அதன் உறவும் அடிப்படையிலேயே ஒரேநாளிரவில் மாறிவிட்டன… எல்லாவற்றையும் சேர்த்துக் கணக்கிலெடுத்தால், ட்ரம்ப்பின் வெற்றியானது மாபெரும் உலகப் பொருளாதார மந்தத்திற்கும் இரண்டாம் உலக யுத்தம் தொடங்கியதற்கும் பின்னரான, அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் கொந்தளிப்பான காலகட்டத்தின் முன்னறிவித்தலாகும். அது நாம் தலைமுறைகளாக தெரிந்துவைத்திருந்த அமெரிக்க அடையாளம் மற்றும் உலகப் பாதுகாப்பு பற்றிய அடிப்படைக் கருத்துருக்களை சவால் செய்கிறது” என்றார்.

ஜேர்மன் வெளிவிவகார அமைச்சர் பிராங் வால்ட்டர் ஸ்ரைன்மையர், தனது அறிக்கையில் தேர்தல் முடிவு பற்றி எச்சரிக்கையுடன் பேசவும் ராஜிய நெறிமுறைகளை மதிக்கும் வண்ணமும் கடும் முரண்பாடுகள் பற்றி எச்சரித்தார். “நான் நினைக்கிறேன், நமக்காக அதை எதிர்ப்பார்த்திருக்க வேண்டும், அமெரிக்க வெளியுறவுக் கொள்கை குறைந்த அளவே முன்கணிக்கப்படக் கூடியதென்று, மற்றும் அமெரிக்கா அதன் சொந்தமுடிவுகளை எடுப்பதற்கு அதிகிரித்த அளவு முன்னுரிமை கொடுக்கும் என்று நாம் கட்டாயம் எதிர்பார்த்தாக வேண்டும்” என  ஸ்ரைன்மையர் கூறினார். “வேறுவகையில் சொன்னால்: அதன்மீது துணிவைக்காட்ட நான் விரும்பவில்லை. எதுவும் எளிதானதல்ல, பல விடயங்கள் மிகக் கடினமானவை” என்றார்.

ஐரோப்பிய பத்திரிகை துறையில் உள்ள பல விமர்சகர்கள் தேர்தல் முடிவானது ட்ரம்ப் மீது கொண்ட நம்பிக்கை வாக்கு அல்ல, மாறாக அரசியல் ஸ்தாபகத்திற்கு எதிரான வாக்கு மற்றும் அது  ஐரோப்பாவிற்கு சமாந்திர தன்மைகளை காட்டுகிறது என்று குறிப்பிட்டனர்.

“பிரிட்டனில் பிரெக்ஸிட் வாக்கிற்குப்பின், மக்களில் புறக்கணிக்கப்பட்ட மற்றும் கிட்டத்தட்ட மறக்கப்பட்டுவிட்ட பகுதி தன்கருத்தை கூறுவதற்கான வாய்ப்பையும் அதிகாரத்தையும் வென்றிருக்கிறது” என்று Süddeutsche Zeitung  பத்திரிகையில் உள்ள Stefan Kornelius கருத்துரைத்தார். “டொனார்ட் ட்ரம்பால் கூட கட்டுப்படுத்த முடியாத சக்திகள் அங்கு வேலை செய்கின்றன. அவர் வெறுமனே அவர்களைப் பயன்படுத்திக் கொண்டார். கிளர்ச்சிகர மனோபாவம் ட்ரம்ப்பை தாண்டியும் செல்லும். அமெரிக்காவில் உள்ள பெரும்பான்மையர் “ஒரு புரட்சியை விரும்பினர். அவர்கள் இப்போது ஒன்றை பெற்ற்றுள்ளனர்.”

Handelsblatt கூட அமெரிக்காவில் உள்ள சமூக வேறுபாடுகள்தான் ட்ரம்ப் வெற்றிக்கான காரணம் என அடையாளப்படுத்தியுள்ளது. மேற்பரப்புக்கு கீழே நீண்டகாலம் குமுறிக் கொண்டிருந்த சக்திகளை அணிதிரட்டி நிர்வகிப்பதை” ட்ரம்ப் செய்திருந்தார். அவரது வரவு “அமெரிக்க சமுதாயம் ஒட்டுமொத்தத்திலும் உள்ள ஆழ்ந்த பிரச்சினைகளின் ஒரு அறிகுறி ஆகும்.”

Handelsblatt இன்படி, இருகட்சிகளுமே இதற்குப் பொறுப்பேற்க வேண்டும். குடியரசுக் கட்சியினர் வரிக்கொள்கையால் நாட்டை ஆழமாகப் பிளவுபடுத்தி விட்டனர்” மற்றும் அமெரிக்காவின் நம்பகத்தன்மையையும் கருத்தியல் மற்றும் நவ ஏகாதிபத்திய வெளிவிவகாரக் கொள்கை (உடன்) அதன் அனைத்து மதிப்புக்களையும்” அழித்துவிட்டனர். ஜனநாயகக் கட்சியினர் நிதிய சந்தைகளை ஒழுங்ககற்றிட வைத்துவிட்டமை; வங்கிகள் “சூதாடத்துவங்கி விட்டமை” “உலக நிதியநெருக்கடியை” தூண்டிவிட்டன. மற்றும் அவை மீட்கப்பட்டன, அதற்கு ”பேரளவிலான அரசின் உதவிக்கு நன்றி சொல்ல வேண்டும்.”

பிரெஞ்சு நாளிதழ் Le Monde  உம் அதே கண்ணோட்டத்தை எடுத்தது. “இந்த வாக்கில் இழந்தவர், ஜனநாயகக் கட்சியாளரான ஹிலாரி கிளிண்டன் மட்டுமல்ல. எதிர்ப்பின் அலை அட்லாண்டிக்கின் இருபுறமும் உள்ள பாரம்பரிய செல்வந்தத்தட்டுகளை உலுக்கிவிட்டது. டொனால்ட் ட்ரம்ப் தேர்தெடுக்கப்பட்டமை, ஒரு அடிப்படை மாற்றமாகும், மேற்கத்திய ஜனநாயகங்களுக்கான ஒரு வரலாற்றுத் தேதி ஆகும். பேர்லின் சுவர் வீழ்ச்சி போல, செப்டம்பர் 11, 2001 போல, இது அதன் குறிப்புக்கள் புரிந்துகொள்வதற்கு கடினமான, ஆனால் அதிலிருந்து ஒரு சிறப்பியல்பு ஏற்கனவே  தெளிவாகத்தெரியக்கூடிய: அதாவது இந்த உலகில் முன்னர் முடியாததென அல்லது யதார்த்தமற்றது என பார்க்கப்பட்ட ஒவ்வொன்றும் கருதத்தக்கதாக ஆகியுள்ள, ஒரு புதிய ஒழுங்கின் ஆரம்பத்தைக் குறிக்கிறது.” Le Monde  இன் படி “வாஷிங்டனை அசைத்த பூகம்பத்திலிருந்து ஐரோப்பா பாதுகாக்கப்பட முடியாது.”

பாரம்பரிய செல்வந்த தட்டுக்களை கலங்கவைத்த இந்த “எதிர்ப்பு அலை”, ட்ரம்ப்பின் தேர்தல் வெற்றியில் அதி பிற்போக்கானதாகவும் திரிக்கப்பட்ட வெளிப்பாடாகவும் கண்ட, பரந்து பட்ட சமூக எதிர்ப்பானது, புதிய ஜனாதிபதியை விடவும் ஐரோப்பிய செல்வந்தத்தட்டுக்களால் அதிக அச்சமாகப் பார்க்கப்படுகிறது. அவர் கட்டவிழ்த்துவிட்ட பூதங்களின் மீதான கட்டுப்பாட்டை அவரே இழப்பார் என்று அவர்கள் கவலைப்படுகின்றனர்.

அதேவேளை, ட்ரம்ப் போன்ற ஒரு அரைப்பாசிச பில்லியனர் ஏன் பரந்து பரவிய சமூகக் கோபத்தை ஒரு வலதுசாரித் திசைவழியில் ஆற்றுப்படுத்தக் கூடிய திறம் உடையவராய் இருந்தார் என்று அவர்கள் ஒரு வார்த்தை கூட உச்சரிக்காதிருந்தனர். உச்சபட்சமாக, “வெள்ளை” அமெரிக்க தொழிலாளர்களின் பின்தங்கியநிலை என்று கூறப்படுவதைக் குற்றம் சாட்டினர்.

ஆனால் உண்மையான காரணம் வால் ஸ்ட்ரீட் நலன்கள் மற்றும் சலுகைமிக்க நடுத்தர வர்க்கப் பகுதியின் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்யும், ஜனநாயகக் கட்சி மற்றும் ஜனாதிபதி ஒபாமாவின் வலதுசாரிக் கொள்கைகளாகும், அதேபோல பேர்னி சான்ட்ரஸ் மற்றும் அவரது போலி இடது ஆதரவாளர்களின் பங்கும் ஆகும். ஜனநாயகக் கட்சியின் துவக்கநிலைத் தேர்தல்களில் வெர்மோண்டிலிருந்து வந்த செனட்டர் சான்ட்ரஸ் 13 மில்லியன் வாக்குளை வென்றார் ஏனெனில் அவர் தன்னை ஒரு சோசலிஸ்ட் மற்றும் “பில்லியனர் வர்க்கத்திற்கு” எதிராக கிளர்ச்சி செய்பவராகக் காட்டிக் கொண்டார் – பின் தொடர்ந்து ஹிலாரி கிளிண்டனுக்கு மட்டும் அவரது ஆதரவைத் தருவதற்கு காட்டிக் கொண்டார். அவர் இவ்வாறு ட்ரம்ப் “ஸ்தாபகத்திற்கு எதிரான” ஒரே வேட்பாளர் என்று தன்னைக் காட்டிக் கொள்வதற்கு ஏதுவாக வழியைத் தெளிவாக்கினார்.

ஐரோப்பாவில், ஆளும் தட்டுக்கள் எதிர்ப்பினை நசுக்குவதற்கு போலி இடதுகள் மேல் தங்கியுள்ளனர். முதலாளித்துவத்திற்கு எதிரானவர்கள் என்று தங்களைக் காட்டிக் கொண்டு, முதலாளித்துவத்திற்கு எதிரான எந்தவொரு போராட்டத்தையும் நிர்மூலம் செய்யும், மற்றும் இவர்கள் ஆட்சிக்கு வந்தாலும் – தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக இன்னும் கொடூரமான நடவடிக்கைகளை அமல்படுத்தக் கூடியவர்களாக, கிரீஸில் சிரிசா, ஜேர்மனியில் இடது கட்சி மற்றும் வேறு பல அமைப்புக்களும் உள்ளன.

இந்த வகைக் கொள்கையின் ஒரு தினுசான பிரதிநிதி பிரிட்டிஷ் தொழிற் கட்சியின் தலைவர், ஜெர்ரெமி போர்பின் ஆவார். அவர் (சரியாக) எழுதுகிறார், “ட்ரம்ப் தேர்வானது பெரும்பான்மை மக்களுக்கு சதாரணமாகவே வேலை செய்யாத அரசியல் ஸ்தாபனம் மற்றும் பொருளாதார அமைப்பை தவறற்ற முறையில் நிராகரித்தலாகும். அமெரிக்கா மற்றும் பிரிட்டன் இரண்டிலும் பெரும்பான்மையினருக்கு பெருகிவரும் சமத்துவமின்மை மற்றும் தேக்கமடைந்த அல்லது வீழ்ச்சியுறும் வாழ்க்கைத் தரங்களை வழங்குவது அதுதான். இது தோல்வியடைந்த பொருளாதார நனவின் ஒரு நிராகரிப்பு, மற்றும் ஆளும் தட்டு பார்த்திருக்கின்ற ஆனால் கவனியாதிருக்கும் ஒன்றாகும். மற்றும் டொனால்ட் ட்ரம்ப்பை அலுவலகத்துக்கு உந்தித்தள்ளிய பொதுஜனங்களின் கோபமானது உலகம் முழுவதும் அரசியல் எழுச்சிகளில் எதிரொலித்து வருகின்றது.

இதைக் கூறிக் கொண்டு, அவர் கற்பனை மிக்க மிகவும் மெத்தனமான பதில் தருவதற்காக அழைப்புவிடுத்தார்.

அமெரிக்கா எதிர்கொண்டு வரும் பெரும் கேள்விகளுக்கு ட்ரம்ப்பின் பதில்கள் சிலவற்றைப் பற்றி அவர் பேசுகிறார், “குற்றம் சாட்டும் முன், “தெளிவாகவே தவறாக” இருக்கும் அவற்றை சுற்றி வாயரற்றல் செய்கிறார், “ஆயினும், எனக்கு சந்தேகமில்லை, அமெரிக்க மக்களின் நேர்மையும் பொதுஉணர்வும் நடப்பில் இருக்கும், மற்றும் நாம் நமது ஐக்கியத்தை புலம்பெயர்ந்தோர், புதியன கண்டறிவோர் மற்றும் ஜனநாயகக் கட்சியினரின் தேசத்திற்கு அனுப்புவோம்…. அமெரிக்கர்கள் தங்களின் தேர்வைச் செய்துள்ளனர். எம்மைப் பொறுத்தவரை அவசரத்தேவை என்னவெனில், நமது பொது உலக சவால்களை: அமைதியை உத்தரவாதப்படுத்தல், புவிவெப்பநிலை மாற்றம் மீது நடவடிக்கை எடுத்தல் மற்றும் பொருளாதார முன்னேற்றத்தையும் நீதியையும் வழங்குதல் ஆகியவற்றுக்காக கண்டங்கள் கடந்து நாம் அனைவரும் வேலைசெய்ய வேண்டும்.”

மொத்தத்தில், ஐரோப்பாவின் ஆளும் தட்டுக்கள் மேலும் வலதுபுறம் நகர்வதன் மூலம் ட்ரம்ப்பின் தேர்தல் வெற்றிக்கு பதிலிறுத்து வருகின்றனர். உள்நாட்டு விவகாரங்களில், ஐரோப்பாவில் அதி வலது கட்சிகளின் உதயத்தை தடுத்துநிறுத்தல் சாத்தியம் என அரசியல் பிரதிநிதிகள் வாதிடுகின்றனர் -குறிப்பாக, அகதிகள் விடயத்தில்  அச்சுறுத்தி செய்யவிடாது செய்தல் மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பு என்று வரும்பொழுது அவர்களின் கொள்கைகளை அனுசரிப்பதன் மூலம்– அனைவரும் ட்ரம்பின் வெற்றியை புகழ்ந்தேற்றுகிறார்கள்.

வெளிவிவகாரக் கொள்கை மீதாக, அமெரிக்காவுடன் எதிர்பார்க்கும் பதட்டங்களை இராணுவ மீளாயுதப்படுத்தல் மூலம் அவரகள் பதிலிறுக்கிறார்கள். ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சர் ஊர்சுலா வொன் டெர் லையன் தேர்தல் வெளிப்பாடு பற்றி குறிப்பிடுகையில், “ஐரோப்பா தன்னை சிறப்பாக கவனித்துக்கொள்வதற்கு கட்டாயம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார். இது அதிகரித்த பாதுகாப்பு வரவு-செலவுத் திட்டத்தை உள்ளடக்கும். Der Spiegel  இல் இடம்பெற்ற ஒரு கட்டுரை இந்த வாரம் ஜேர்மனி தனது சொந்த அணு ஆயுதங்களை அபிவிருத்தி செய்ய அழைப்பு விடுக்கும் அளவுக்கு சென்றது.