ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Fillon, Juppé win first round of French right’s presidential primary

ஜனாதிதிபதி பதவிக்கான பிரெஞ்சு வலதுகளின் ஆரம்பநிலை கட்சித்தேர்தலில் முதல் சுற்றில் ஃபிய்யோன், யூப்பே வெற்றி

By Alice Laurençon 
21 November 2016

நேற்று, குடியரசுக் கட்சியின் (Les Républicains - LR) ஆரம்பநிலை முதல் சுற்றுத் தேர்தலில் பிரான்சுவா ஃபிய்யோன் மற்றும் அலென் யூப்பே ஆகியோர் அதிக வாக்குகள் பெற்றனர். ஏப்ரல்-மே 2017 ஜனாதிபதித் தேர்தலில் LR இன் ஜனாதிபதி வேட்பாளராக ஆவதற்கு அடுத்த ஞாயிறன்று நடக்கவிருக்கும் இரண்டாம் சுற்று ஆரம்பநிலைத் தேர்தலில் ஒருவரையொருவர் எதிர்த்துப் போட்டியிடுவர்.

LR இன் ஆரம்பநிலைத் தேர்தல்களில் நீட்டகாலமாக மூன்றாம் நான்காம் நிலையில் இருந்து வந்த ஃபிய்யோன் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியை மூன்றாம் இடத்துக்கு தள்ளி எதிர்பாராத விதமாக எழுந்துவந்துள்ளார். சார்க்கோசி 20.6 சதவீத வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டார். ஃபிய்யோன் 44.2 சதவீதம் வாக்குகள் எடுத்து, 28.6 சதவீதம் வாக்குகள் எடுத்த அலென் யூப்பேயை தோற்கடித்தார்.

Nathalie Kosciusko-Morizet, Bruno Le Maire, Jean-Frédéric Poisson மற்றும் Jean-François Copé ஆகிய மற்ற வேட்பாளர்கள் அனைவரும் சேர்ந்து 8 சதவீதம் வாக்குகளே பெற்றனர்.

Le Maine செய்தது போலவே, சார்க்கோசியும் அவரது பிரச்சார தலைமையகத்திலிருந்து அவரது தோல்வியை உறுதி செய்தார். இருவரும் இரண்டாம் சுற்றில் ஃபிய்யோனை தேர்ந்தெடுக்குமாறு வாக்காளர்களை கேட்டுக்கொண்டனர்.

ஆரம்ப நிலைத் தேர்தலில் அதிக வாக்காளர் பங்கேற்றனர், சுமார் 4 மில்லியன் வாக்காளர்கள் வாக்களிக்களித்தார்கள். இந்த மட்டத்திலான பங்கேற்பு, சென்ற 2011ல் சோசலிஸ்ட் கட்சி (PS) அரசாங்கத்தையும், அதன் தற்போதைய ஜனாதிபதி பிரான்சுவா ஹோலண்டை சோசலிஸ்ட் கட்சி வேட்பாளராக தேர்ந்தெடுக்க 2.6 மில்லியன் வாக்காளர்கள் பங்கேற்றதையும் கடந்து விட்டது.

தற்போது PS ஆனது, ஹோலண்டின் சிக்கனப் பொருளாதாரக் கொள்கை மற்றும் போருக்கு ஆதரவின்மையாலும் ஆழமாய் கீழறுக்கப்பட்டுவிட்டது. ஊடகமானது LR ஆரம்பநிலைத் தேர்தலில் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளரை அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் இரண்டாம் சுற்றில் நவபாசிச தேசிய முன்னணியின் மரின் லூ பென்னுக்கு எதிராக பெரும்பாலும் நிற்கலாம் என முன்வைத்தன.

மேலும், LR இன் ஆரம்பநிலைத் தேர்தலானது, கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர்தான், டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக ஆச்சரியப்படத்தக்க வகையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிர்ச்சியின் கீழ் நடைபெற்றுள்ளது.

பிரச்சாரத்தில் பெரும்பான்மையான பொழுதெல்லாம் யூப்பேக்கும் சார்க்கோசிக்கும் பின்தங்கிய நிலையில் இருந்து வந்த ஃபிய்யோன் அக்டோபர் மாதம் மெதுவாக ஆதரவை வென்றார், 5 வாரங்களில், நவம்பரின் தொடக்கத்தில் 12 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாக, அவரது அங்கீகார வீதம் 10 புள்ளிகள் ஏறி தாண்டியது. பிரான்சில் LR இன் ஆரம்பநிலைத் தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்னர்தான் ஃபிய்யோன் 30 சதவீத வாக்குகள் பெறுவதில் யூப்பேயையும் சார்க்கோசியையும் முந்திக்கொண்டு, இஸ்போஸ் வாக்கெடுப்பின்படி, மற்ற இருவரது 29 சதவீதத்தையும் ஒப்பிடும்பொழுது அலையென எழும்பினார்.

வியாழன் அன்று, வலதுசாரி ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் பற்றிய தொலைக்காட்சி விவாதத்தின் பொழுது, இரு வாக்கெடுப்பிலும் ஃபிய்யோன் “மிகவும் திருப்தியளிக்கக்கூடியவராய்” தீர்ப்பளிக்கப்பட்டார்.

வாக்கெடுப்புக்களில், அக்டோபரில் தவிர்க்க முடியாத வெற்றியாளர் என படிமுறை ரீதியாக முன்வந்த, யூப்பே இன் இழப்பில் ஃபிய்யோன் உயர்ந்தார்.

யூப்பே மற்றும் சார்க்கோசி இரு வேட்பாளர்களுமே மதிப்பிழந்த அரசாங்கங்களை நடத்தியவர்கள். அப்போதைய ஜனாதிபதி ஜாக் சிராக்கின் கீழ் பிரதமராக இருந்த யூப்பே, தான் மேற்கொண்ட அதி–சுதந்திர சந்தை கொள்கையுடன் நெருக்கமாக தன்னை இணைத்துக் கொண்டார், “யூப்பே திட்டத்திற்கு” எதிராக ஓய்வூதியங்களை பாதுகாத்தல் மற்றும் சமூக பாதுகாப்பு என்ற அடிப்படையில் 1995ல் பரந்த அளவில் வேலைநிறுத்த அலைகளை தூண்டிவிட்டது.

ட்ரம்ப்பின் தேர்தலுக்குப் பின்னர், மக்கள் தொகைக்கும் ஆளும் தட்டுக்களுக்கும் இடையில் “சமூக முரண்பாடு” இருக்கிறது எனும் அனைத்துக் கூற்றுக்களையும் யூப்பே நிராகரித்தார், சார்க்கோசியும் அந்த வெளிப்பாட்டை பிரச்சாரம் முழுவதும் ஒரு அணிதிரட்டும் அழைப்பாக பயன்படுத்தினார்.

பொதுமக்களை பற்றிய அவரது எதேச்சாதிகார அவமதிப்பாய் கோடிட்டுக் காட்டும் அவரது குறிப்பில், யூப்பே தொழிலாள வர்க்கத்திற்கும் செல்வந்த தட்டிற்கும் இடையில் சமூக இடைவெளி இருக்கிறது என்ற கருத்தை “ஒரு முட்டாள் தனமான கூற்று” என்று கண்டனம் செய்தார். “நமக்கு செல்வந்த தட்டுக்கள் தேவை, எம்மை மேல்நோக்கி இழுப்பது அதுதான்” என்று மேலும் கூறினார்.

சார்க்கோசி அவரது பங்கிற்கு, ட்ரம்ப்பின் தேர்வை “அமைதியான பெரும்பான்மை” க்காக பேசுவதாகக் கூறிக்கொண்ட அவரது சொந்த கூற்றுக்களின் மதிப்பீடு என்றும், “மக்களுக்கு செவிமடுக்கும்” கோட்பாட்டிற்கும், ஜனநாயகத்திற்குமான வெற்றி என்றும் புகழ்ந்தார். ட்ரம்ப் பிரான்சில் செல்வாக்கற்றவர் மற்றும் ட்ரம்பிற்கான சார்க்கோசியின் வெளிப்படையான ஆதரவு ஐயத்திற்கிடமின்றி முதல் சுற்றில் அவரது வெளியேற்றத்தில் ஒரு பாத்திரம் ஆற்றியது.

சார்க்கோசி அவரது பிரச்சாரத்தை முஸ்லிம்களை அவமதிக்கும் விதத்தைச் சுற்றியும் அதேபோல எப்போதாவது ரஷ்யன் கொள்கைக்கு நெருங்குவது போலவும் வெளிப்படையாகவே மையப்படுத்திக் கொண்டார், மற்றும் அவரது பிரச்சாரம் FN க்கு நெருக்கமானதாக காணக்கூடியதாக இருந்தது.

FN இரண்டாவது சுற்றிற்கு முன்னேறுவது, உண்மையில் குறிப்பிடத்தக்கதாக உள்ள நிலையில், நேற்றைய ஆரம்பநிலைத் தேர்தலில் PS, LR இன் செல்வாக்கற்ற தன்மையையும் மதிப்பிழந்த தன்மையையும் கணக்கிலெடுத்துக் கொண்டால், மரின் லூ பென்னை தோற்கடிக்க எந்த வேட்பாளர் சிறந்த வாய்ப்புக்குரியவர் என்று வாக்காளர்கள் எண்ணிப் பார்ந்திருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. யூப்பேயை போன்று வெளிப்படையாக வாக்காளர்களால் அவமதிப்புக்காளாகாத மற்றும் அதிவலதுடனும் தேசியவாத சக்திகளுடனும் சார்க்கோசியைக் காட்டிலும் குறைந்த தீவிரத்துடன் தொடர்புடைய ஒரு வேட்பாளர் என்ற வகையில், ஃபிய்யோன் அவரது குறைந்த ஊடகத் தோற்றத்திலிருந்தும் அவரது போட்டியாளரை எதிர்கொள்ளும் கஷ்டங்களிலிருந்தும் ஆதாயம் எடுத்துக்கொள்ளக் கூடியவராக மேலோட்டமாக இருந்தார்.

ஆயினும், ஃபிய்யோனின் அரசியல் வேலைத்திட்டம் மற்றும் LR வேட்பாளர்களின் வேலைத்திட்டங்கள் ஆகியன ஆளும் வர்க்கமானது தொழிலாள வர்க்கத்தின் மீது ஆழ்ந்த தாக்குதல்களை தொடுப்பதற்கு தயார் செய்து வருவதைக் காட்டுகின்றன.

ஃபிய்யோனின் வேலைத்திட்டம், சார்க்கோசியின் வேலைத் திட்டத்திலிருந்து அடிப்படையில் குறிப்பிடத்தகுந்த வேறுபாடுகள் எதனையும் கொண்டிருக்கவில்லை. அவர் பொதுத்துறை வேலைகளைக் குறைத்தல், பெருநிறுவனங்களுக்கும் உயர்-செல்வந்தர்களுக்கும் பெரும் வரிச்சலுகை அளித்தல், மற்றும் பொலீஸ் ஒடுக்குமுறை அதிகாரங்களை மீளக் கொண்டுவரல் உட்பட தொழிலாளர்களின் சமூக உரிமைகளுக்கு எதிராக பெருந்தாக்குதல்களை கட்டவிழ்த்துவிட விரும்புகிறார்.

ஃபிய்யோனாலும் யூப்பேயாலும் முன்வைக்கப்படும் கொள்கைகளின் பண்பானது, தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு எச்சரிக்கை ஆகும். ஹோலண்டின் கீழ், போர்கள், சிக்கன பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் போலீஸ்-அரசு கொள்கைகளுக்கு பின்னர், ஆளும் வர்க்கமானது, தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக ஒரு தொகுதியான ஆழ்ந்த தாக்குதல்களை தொடுப்பதற்கு தயார் செய்து வருகிறது.

ஃபிய்யோன் மற்றும் யூப்பே இருவருமே தொழிலாளர்களின் சமூக உரிமைகள் மற்றும் PS ஆல் அமல்படுத்தப்படும் தற்போதைய அவசகால நிலையைப் போன்ற பொலீஸ் - அரசு நடவடிக்கைகளை ஆதரிக்கின்றனர்.

பிரெஞ்சு மக்கள் மத்தியில் சிக்கன பொருளாதாரக் கொள்கைகளுக்கு உள்ள கடும் எதிர்ப்பை முகங்கொடுக்கும் நிலையிலும், LR வேட்பாளர்கள் இந்த அளவு வெளிப்படையாகவே தொழிலாள வர்க்க விரோத திட்டங்களை முன்வைப்பதானது ஐயத்திற்கிடமின்றி FN மற்றும் லூ பென் ஐ வலுவுடையதாக்கும்.

பிற்போக்கு கொள்கைகளை முன்னிலைப்படுத்தும் பாரம்பரிய அரசியல்வாதிகள் மற்றும் ஆளும் செல்வந்த தட்டுக்களை எதிர்க்கும் ஒரே பிரச்சாரம் தனதென்று வாய்ச்சவடால்களை முன்வைத்து, இவ்வனைத்து கட்சிகளில் இருந்தும் உயர்ந்தபட்ச அரசியல் ஆதாயத்தை FN ஆனது கறந்தெடுக்க முயற்சிக்கும்.