ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Trump transition team discussing registry of Muslims

ட்ரம்ப்பின் இடைமருவுக் குழு, முஸ்லிம்களை பதிவு செய்தல் பற்றி விவாதிக்கின்றது

By our reporter 
19 November 2016

தொலைக்காட்சியில் தோன்றிய ட்ரம்ப் இன் பிரச்சார செயற்பாட்டாளர், அமெரிக்காவிற்கு வருகைதரும் முஸ்லிம் பார்வையாளர்களை பதிவு செய்தல், இரண்டாம் உலக யுத்தத்தின்பொழுது ஜப்பானிய- அமெரிக்கர்கள் பாரியளவில் கைதுசெய்யப்பட்ட நிலையில் உருவாக்கப்பட்ட “முன்னுதாரணத்தின்” கீழ் நியாயப்படுத்தப்படக்கூடும் என்றார். ட்ரம்ப் இன் இடைமருவுக் குழுவின் ஒரு தலைவர் அத்தகைய ஒரு பதிவுக்கான சம்பிரதாய முன்மொழிவு விவாதத்தில் இருக்கிறது என்று வெளிப்படுத்தினார்.

புலம்பெயர்ந்தோர் தொடர்பாக வேலைசெய்யும் இடைமருவு அணி குழுவின் இணைத் தலைவர், கான்சாஸ் அரசு செயலர் Kris Kobach, ஆலோசனைக் குழுவானது புலம்பெயர்ந்தோர் மற்றும் முஸ்லிம் பெரும்பான்மையாக உள்ள நாடுகளில் இருந்து வரும் விருந்தினர்களின் ஒரு தேசிய பதிவுக்கான ஒரு சம்பிரதாய முன்மொழிவுடன் ட்ரம்ப்பிடம் வைக்க எண்ணியிருந்தது என்று கூறினார். Kobach, புஷ் நிர்வாகத்தின் நீதித் துறையில் ஒரு அலுவலராக இருந்தபொழுது 9/11 தாக்குதல்களுக்கு பின்னர் இதேமாதிரியான ஒரு திட்டத்தை வடிவமைத்திருந்தார்.

தேசிய பாதுகாப்பு நுழைவு-வெளியேறல் பதிவு முறை (NSEERS), “உயர் ஆபத்துள்ள” நாடுகள் பலவற்றை வரையறுத்ததுடன், இந்த நாடுகளில் இருந்து வரும் விருந்தினர்கள் தொடர்ச்சியான அடிப்படையில் கைரேகை எடுக்கப்படவும், விசாரிக்கப்படவும், சில விடயங்களில் பொறுப்பாளர்களுக்கு அறிவிக்கப்படவும் முடியும். இந்த திட்டம் 94,000 பேர்களை அவ்வாறு உட்படுத்தியபோதும், தனியொரு பயங்கரவாதிகூட இனங்காணப்படாமல் 2011ம் ஆண்டில் இடை நிறுத்தப்பட்டது.

ட்ரம்ப் ஆதரவு அரசியல் நடவடிக்கைக் குழுவின் சார்பில் பேசவல்ல பேச்சாளர் புதன்கிழமை ஃபாக்ஸ் நியூஸிடம், வரவிருக்கும் ட்ரம்ப் நிர்வாகம் ஜப்பானியர் தடுப்புக்காவல் திட்டத்தை ஒரு முன்னோடியாக பயன்படுத்தக்கூடும், ஏனெனில் அது அமெரிக்க உச்சநீதிமன்றத்தால் அதன் அவப்பெயர் பெற்ற கோர்மாற்சு முடிவால் (Korematsu decision) உறுதிசெய்யப்பட்டிருந்ததுடன், அது ஒருபோதும் தடுக்கப்படவில்லை என்று கூறிய பின்னர், முஸ்லிம்களை பதிவுசெய்யும் திட்டம் பரந்த அளவு கவனத்தை ஈர்த்ததாக வந்தது.

ஃபாக்ஸ் நியூஸ் நடத்துனர் Megyn Kelly இடம் வழங்கிய நேர்காணலில், முன்னாளைய கடற்படை SEAL மற்றும் மாபெரும் அமெரிக்கா PAC க்கான பேச்சாளர் கார்ல் கிக்பி, அமெரிக்காவிற்கு வருகைதரும் அனைத்து முஸ்லிம் பார்வையாளர்களையும் பதிவு செய்வதற்கான திட்டமானது, சட்டபூர்வமானதும், “அரசியலமைப்பு ரீதியான மாதிரியை கொண்டிருக்கிறது” என்றும் கூறினார்.

சிறிதுகாலத்திற்கு முன்னர் நாம் ஈரானுடன் அப்படிச் செய்தோம். அதனையே நாம் இரண்டாம் உலக யுத்தத்தின் பொழுது ஜப்பானியருடன் செய்தோம்” என்றார் அவர்.

கெல்லி அம்முன்மொழிவால் அதிர்ச்சியுற்றதாக காணப்பட்டதோடு, அவர் பின்வருமாறு குறிப்பிட்டார், “கூறுங்கள், தடுப்புமுகாம்கள் காலத்திற்கு நாம் திரும்பிப்போகவேண்டும் என்று நீங்கள் சொல்லவில்லை என நான் நம்புகிறேன்” என்றார்.

கிக்பி தொடர்ந்தார், “நான் முற்றுமாக இதனை முன்மொழியவில்லை. மாறாக அதற்கான முன்னோடி அங்கு இருக்கின்றதென்றுதான் கூறுகிறேன்.” மேலும் அவர், சில முஸ்லிம் விருந்தினர்கள் “தீங்கு செய்கின்றனர், ஆகையால் என்ன நடக்கின்றது என்று நாம் கண்டுகொள்ளும்வரை, நாம் அதன் மீது கவனத்தை வைத்திருக்க விரும்புகிறோம்” என்றார்.

மேலும் கேள்விகளுக்கு பதிலளிக்கையில், கிக்பி, “விருந்தினர்கள் அமெரிக்க அரசியற் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படவில்லை, ஆகையால் அவர்கள்  அமெரிக்க குடிமக்களை பொறுத்தவரை அரசியற்சட்டத்திற்கு விரோதமானதாகவும் ஜனநாயகமற்றதாகவும் இருக்கும் முறைகளின் கீழ் கவனிப்பிற்கு உள்ளாக்கப்படலாம் ” என்றார்.