ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Thanksgiving 2016 and the social crisis in America

2016 இன் நன்றிதெரிவிப்பு தினமும், அமெரிக்காவில் சமூக நெருக்கடியும்

Andre Damon
24 November 2016

அக்டோபர் 3, 1863 அன்று, உள்நாட்டு போருக்கு இடையே ஜனாதிபதி ஆப்ரகாம் லிங்கன், நவம்பர் மாத கடைசி வியாழக்கிழமையை "நன்றிதெரிவிப்பு தினமாக" (Thanksgiving day) அறிவித்து, வெளியுறவுத்துறை செயலர் வில்லியம் எச். சீவார்ட் எழுதிய ஒரு பிரகடனத்தில் கையெழுத்திட்டார்.

“நிகரற்ற முக்கியத்துவம் மற்றும் பாதிப்புகளின்" ஒரு உள்நாட்டு போருக்கு இடையே, அந்த பிரகடனம் அறிவித்ததாவது, இந்த மோதல் "ஏர்கலப்பை, நூல் நூற்கும் தறி அல்லது கப்பலை பாதிக்கவில்லை", அதேவேளையில் "சுரங்கங்கள், முக்கிய உலோகங்களான இரும்பு மற்றும் நிலக்கரி சுரங்கங்களை இதற்கு முன்பை விட இன்னும் அதிகளவில் ஏராளமாக நஷ்டப்படுத்தி உள்ளது,” என்று அறிவித்தது. அப்பிரகடனம் அறிவிக்கையில், “பெருகிய பலம் மற்றும் தீவிரத்தன்மையின் நனவினால் செழித்திருக்கும் இந்நாடு, தொடர்ந்து வரவிருக்கும் ஆண்டுகளில் இன்னும் பெரியளவில் சுதந்திரத்தை எதிர்நோக்க அனுமதிக்கப்படுகிறது,” என்று குறிப்பிட்டது.

உள்நாட்டு போரின் பாதிப்புகள் அதற்கடுத்தும் ஒன்றரை ஆண்டுகளுக்கு நீடிக்க இருந்தன. இருப்பினும், அச்சமூகம் உண்மையில் இரயில் பாதைகள், நிராவி படகுகள் மற்றும் தந்தி முறை ஆகியவற்றிலும், இரண்டாம் அமெரிக்க புரட்சியால் விரைவாக வளர்ந்த தொழில்துறைமயமாக்கத்துடன் தீவிரமடைய இருந்த உற்பத்தித்திறன் விரிவாக்கத்திலும் மாற்றமடைந்து வந்தது. அந்த உள்நாட்டு போரானது, அடிமைத்தனத்தை ஒழித்து முதலாளித்துவ வளர்ச்சிக்கும் —மற்றும் வர்க்கப் போராட்டத்தின் வெடிப்பார்ந்த வளர்ச்சிக்கும்— பாதை அமைக்க இருந்தது.

அமெரிக்கா எங்கிலுமான குடும்பங்கள் இந்த நன்றிதெரிவிப்பு தினத்தில் உணவு விருந்தை பகிர்ந்து கொள்ள ஒன்றுகூட இருக்கின்ற நிலையில், ஒப்பீட்டளவில் ஒரு சிலர்தான் அந்நாடு "வரவிருக்கும் ஆண்டுகளில் பெரியளவில் சுதந்திரத்தை" எதிர்பார்க்கலாம் என்ற சீவார்டின் மதிப்பீட்டுடன் உடன்படுவார்கள். அதற்கு மாறாக, பலரைப் பொறுத்த வரையில், நன்றிகூறும் தினம் என்பது அவர்கள் முகங்கொடுக்கும் பொருளாதாரக் கடுமை மற்றும் ஒடுக்குமுறையை எடுத்துக்காட்ட மட்டுமே பங்காற்றும்.

எட்டு குடும்பங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் இந்தாண்டு மேசையின் முன் உணவைக் கொண்டு வர சிரமப்படுவதாக இருக்கும், மேலும் மில்லியன் கணக்கானவர்கள், உணவுப்பொருட்களை இலவசமாக கொடுக்கும் இடங்களில் அல்லது சூப் அடுப்பறையின் (soup kitchen) வரிசைகளில் தான் நன்றிதெரிவிப்பு உணவை பெறக் கூடியவர்களாக இருப்பார்கள்.

சுமார் 300,000 குழந்தைகள் மற்றும் 450,000 ஊனமுற்றோர்கள் உட்பட ஒன்றரை மில்லியனுக்கும் அதிகமானவர்கள் கடந்த ஆண்டு வீடற்றவர்களாக இருந்தனர். மில்லியனுக்கும் அதிகமானவர்கள் தரங்குறைந்த வீடுகளில் வாழ்கின்றனர், மற்ற குடும்பங்களோடு சேர்ந்து இரண்டு மடங்கு உறுப்பினர்களுடனோ அல்லது விடுதிகளிலேயோ வாழ்கின்றனர். அதுபோன்ற நிலைமைகள் அமெரிக்க சிறுபான்மையினரது குடும்பங்களை மட்டும் நேரடியாக பாதிப்பதாக இருக்கலாம். ஆனால் மக்களில் பெரும் பெரும்பான்மையினர் பொருளாதாரரீதியில் பாதுகாப்பின்றி உள்ளனர்.

வயது வந்தவர்களில் 46 சதவீதத்தினர், “400 டாலர் செலவு பிடிக்கும் ஒரு அவசர செலவைக் கூட அவர்களால் கையாள முடியாதளவிற்கு, அல்லது ஏதோவொன்றை விற்றோ அல்லது கடன் வாங்கியோதான் அதை சமாளிக்க முடியும் என்றளவிற்கு" நிதியியல்ரீதியில் சிரமத்தில் இருப்பதாக இந்தாண்டு பெடரல் ரிசர்வ் வெளியிட்ட ஓர் ஆய்வறிக்கை தெரிவித்தது.

இத்தகைய சூழ்நிலைகளின் கீழ், குறைந்த வருவாய் மக்களுக்கு உத்தரவாதமளிப்பதற்காக என்று கூறி வடிவமைக்கப்பட்ட கட்டுபடியாகின்ற மருத்துவக் கவனிப்பு சட்டத்தின் (ஒபாமாகேர்) கீழ் சராசரி கட்டணத் தொகை அடுத்த ஆண்டு 25 சதவீதம் அதிகரிக்கப்பட உள்ளது, அதாவது இதன் அர்த்தம் மில்லியன் கணக்கானவர்கள் அவர்களது மருத்துவ கவனிப்பை இழப்பார்கள் அல்லது நூற்றுக் கணக்கான அல்லது ஆயிரக் கணக்கான டாலர்களை அவர்கள் கூடுதல் செலவுகளாக முகங்கொடுப்பார்கள்.

இளைஞர்கள் கடன்சுமையைச் சுமப்பதுடன் வாய்ப்புகள் சுருங்குவதையும் முகங்கொடுக்கின்ற நிலையில், நிதிச்சுமைக்கு அப்பாற்பட்டு குடும்பங்களில் ஒரு விபத்திலோ அல்லது நோயிலோ பாதிக்கப்பட்டவர் இருந்தால் அதனால் உண்டாகும் கடுமையான மனஅழுத்தம், அதிகரித்து வரும் மருத்துவ செலவுகள் மற்றும் ஓய்வூதிய சலுகைகளது வீழ்ச்சியை வயதானவர்கள் எதிர்கொள்கின்ற நிலையில், சமூக வறுமைக்கான பல அறிகுறிகளை உருவாக்குகின்றன.

இராணுவவாதம் மற்றும் பொலிஸ் வன்முறையால் சூழப்பட்ட இந்த சமூகத்தின் காட்டுமிராண்டித்தனம், இளைஞர்கள் மீதே கடுமையாக விழுகிறது. 2005 மற்றும் 2014 க்கு இடையே விடலைப்பருவத்தினர் இடையே தீவிர மனஅழுத்த பாதிப்பு 37 சதவீத அளவிற்கு அதிகரித்திருப்பதாக ஓர் ஆய்வு கண்டறிந்துள்ளது. 10 இல் இருந்து 14 வயதிற்குள்ளான குழந்தைகள் கார் விபத்தில் இறப்பதைக் காட்டிலும் தற்கொலையால் இறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக மற்றொரு ஆய்வு குறிப்பிட்டது.

அமெரிக்காவில் போதைக்கு அடிமையாதலே அனேகமாக சமூக சீரழிவின் மிக அழிவுகரமான வெளிப்பாடாக இருக்கக்கூடும். கார் விபத்துக்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை அளவிற்கு அதிர்ச்சியூட்டும் விதத்தில் இந்தாண்டு 28,000 பேர் ஓபியோய்ட் போதைப்பொருளை (opioid) அதிகம் எடுத்துக் கொண்டதால் இறந்திருப்பார்கள். பத்தாயிரக் கணக்கான குடும்பங்களைப் பொறுத்த வரையில், நன்றிதெரிவிப்பு என்பது ஹெராயின், பென்தனில் அல்லது மருந்துச்சீட்டின் வலிநிவாரணிகளால் உயிரிழந்தவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துவதற்கான நேரமாக இருக்கும்.

போதை பழக்கத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட பல மாநிலங்கள், வேலையின்மை மற்றும் தொழில்துறை அழிக்கப்பட்ட மாநிலங்களாக உள்ளன. மிச்சிகன், ஓகியோ மற்றும் பென்சில்வேனியாவிலும், 2008 மற்றும் 2012 இல் பராக் ஒபாமாவை ஆதரித்த ஆனால் 2016 தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் பின்னால் அலைபாய்ந்த "கிராமப்புறங்களைக் கொண்ட" மாநிலங்களிலும், இவை அனைத்திலும், 2013 மற்றும் 2014 க்கு இடையே ஓபியோய்ட் போதைப்பொருளை (opiate) அதிகம் எடுத்துக்கொண்ட விகிதங்களில் 10 சதவீதம் அதிகமான அதிகரிப்பைக் கண்டன.

தேர்தல்களில் வெறும் ஆரம்ப வெளிப்பாட்டை மட்டுமே கண்ட புத்துயிர் பெற்ற வர்க்க போராட்டம் மற்றும் அரசியல் தீவிரமயப்படலின் குறிப்பிடத்தக்க அறிகுறிகள் உட்பட, அமெரிக்காவினது சமூக நெருக்கடி ஓர் ஆழ்ந்த எதிர்ப்புணர்வு அதிகரிப்பதற்கு எரியூட்டி வருகிறது. இது முதலில், தன்னேத்தானே ஒரு சோசலிஸ்ட் என்று கூறிக்கொண்டு "பில்லியனிய வர்க்கத்தை" மற்றும் சமூக சமத்துவமின்மையை கண்டித்த வெர்மாண்ட் செனட்டர் பேர்ணி சாண்டர்ஸின் ஜனநாயகக் கட்சியினது ஜனாதிபதி வேட்பாளர் போட்டியின் போது அவருக்கான பரந்த ஆதரவில் வெளிப்பட்டது.

ஜனாதிபதி ஒபாமாவின் வார்த்தைகளில் கூறுவதானால் அமெரிக்கா "அற்புதமான விதத்தில் தலையாயதாக" உள்ளது என்ற வாதத்தைக் கொண்டு போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டனை சாண்டர்ஸ் ஆமோதித்ததோடு, சாண்டர்ஸின் "அரசியல் புரட்சி" அவமானகரமாக நிறைவடைந்தது. சமூக அதிருப்திக்கு, குடியரசுக் கட்சியின் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்பின் வீராவேச முறையீடுகளுடன் உடன்படாமல் இருந்தவர்கள் மற்றும் அதிலிருந்து விலகி இருந்தவர்கள், கறுப்பினத்தவர்களுக்கும் மற்றும் ஏனைய சிறுபான்மையினருக்கும் எதிராக, அவர்களது "தனிச்சிறப்பான" அந்தஸ்தை பாதுகாத்துக் கொள்வதற்காக "வெள்ளையின தொழிலாள வர்க்கத்தின்" பாகமாக ஆனார் என்பது தான் அந்த ஏமாற்றுத்தனமான சொல்லாடலின் விளைவாக இருந்தது. பல்வேறு வகையான அடையாள அரசியல் வடிவங்கள் மீது அவரது பிரச்சாரத்தை அமைத்திருந்த கிளிண்டன், செல்வசெழிப்பான மற்றும் சுயதிருப்தி கொண்டவர்களுக்கு முறையீடு செய்தார். இதன் விளைவு, தொழிலாள வர்க்கத்தின் சகல பிரிவுகளிடமிருந்தும் அந்த ஜனநாயகக் கட்சி வேட்பாளருக்கான வாக்குகள் கூர்மையாக வீழ்ச்சி அடைந்தன.

வெளியேறவிருக்கும் ஜனாதிபதி மற்றும் இருகட்சிகளது ஆசீர்வாதத்துடன் வெள்ளை மாளிகைக்கு வந்துள்ள ட்ரம்ப், “மீண்டும் அமெரிக்காவை தலையாயதாக" ஆக்கப் போவதில்லை. அவரிடமோ அல்லது ஆளும் வர்க்கத்தின் வேறெந்த பிரிவிடமோ அமெரிக்காவைப் பீடித்துள்ள சமூக நெருக்கடிக்கு ஒரு தீர்வும் கிடையாது. அவரது "முதலிடத்தில் அமெரிக்கா" பொருளாதார தேசியவாதம் உலகளாவிய முதலாளித்துவ நெருக்கடியைத் தீவிரப்படுத்தும் என்பதோடு, அமெரிக்காவிற்குள் தொழிலாளர்கள் மீது கூர்மையான தாக்குதல்கள் என்பதையே அது அர்த்தப்படுத்த உள்ளது. செல்வந்தர்களுக்கான வரிச் சலுகைகள், பெருநிறுவனங்கள் மீதான கட்டுப்பாடுகளை நீக்குதல், சமூக திட்டங்களில் வெட்டுக்கள் மற்றும் இராணுவ செலவினங்களை கூடுதலாக அதிகரித்தல் ஆகிய அவரது வேலைதிட்டம் சமூக அதிருப்தி மற்றும் கோபத்தை எரியூட்டும்.

அவர் யாரை அடையாளப்படுத்துகிறாரோ அந்த நிதியியல் ஒட்டுண்ணிகளுக்கும் மற்றும் பெருந்திரளான மக்களான தொழிலாள வர்க்கத்திற்கும் இடையே அதிகரித்து வரும் பலப்பரீட்சையின் ஒரு திருப்புமுனையையே ட்ரம்பின் தேர்வு குறித்து நிற்கிறது.