ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

War tensions between India and Pakistan intensify

இந்தியா பாகிஸ்தான் இடையே தீவிரமடையும் போர் அழுத்தங்கள்

By Wasantha Rupasinghe and Keith Jones 
1 December 2016

2001-2002ல் ஒரு 10 மாத காலம் பாகிஸ்தான் கிழக்கு எல்லையில் இந்தியா கிட்டதட்ட ஒரு மில்லியன் துருப்புக்களை நிலைநிறுத்தியதன் பின்னர் தெற்கு ஆசிய போட்டி அணுஆயுத பலங்களை கொண்ட இந்த நாடுகள் முழு அளவிலான போருக்கு நெருக்கமானதாக இருக்கும் நிலைமையில் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகள் மிகவும் கடுமையடைந்து வருகின்றது.

2001-2002 போர் நெருக்கடிக்கு பிந்தைய காலத்தில், இந்திய மற்றும் பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீர் பகுதிகள் இடையிலான எல்லை கட்டுப்பாட்டு கோடு (LoC) ஊடாக மேற்கொள்ளப்பட்டிருந்த போர் நிறுத்த உடன்பாடு மிகவும் வெளிப்படையாக தகர்ந்து விட்டது. நடைமுறையில் கடந்த இரண்டு மாதங்களில் ஒவ்வொரு நாளும், எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதி முழுமையாக இந்திய, பாகிஸ்தானிய துருப்புக்கள் தீவிர பீரங்கி மற்றும் துப்பாக்கி சூடு தாக்குதல்களை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். மேலும், போர் விருப்பத்தை தொடர்ந்து மறுத்துவரும் போதிலும், இரு நாடுகளின் இராணுவ மற்றும் அரசாங்க அதிகாரிகள் வாடிக்கையாக இரத்தத்தை உறையவைக்கும் அச்சுறுத்தல்களையே உருவாக்குகின்றனர்.

கடந்த வாரத்திலிருந்து வெறும் ஒரு போர் உந்துதல்மிக்க பரிமாற்றத்தை குறிப்பிடலாம்: நவம்பர் 25ல், பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் பாராளுமன்றத்தில், பாகிஸ்தான் இராணுவம் "இந்தியா கொல்லும் ஒவ்வொரு பாகிஸ்தானிய இராணுவத்தினருக்கு ஈடாக மூன்று இந்திய இராணுவத்தினரை கொல்லும்," கூடுதலாக "பாகிஸ்தானுக்கு எதிராக போருக்கு சென்றால், இந்தியா கடும் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்..." என்றும் தெரிவித்தார். அடுத்தநாளே ஆசிப் இன் இந்திய சமதரப்பான மனோகர் பாரிக்கர், கோவாவில் நடைபெற்ற ஒரு பேரணியில், "நாங்கள் ஒரு எந்த போருக்கான குடைச்சலை கொண்டிருக்கவில்லை, ஆனால் யாராவது தீய கண் கொண்டு நாட்டை நோக்கினால், அவரது கண்களை நாங்கள் தோண்டி வெளியே எடுத்து அவரது கையிலேயே திரும்ப கொடுத்துவிடுவோம். நாங்கள் அந்தளவு மிகுந்த வல்லமையை கொண்டிருக்கிறோம்" என்று தெரிவித்தார்.

புது தில்லி, இஸ்லாமாபாத்தை அதன் விருப்பத்திற்கு வளைந்துகொடுக்க கட்டாயப்படுத்தும் அளவுக்கு இராணுவ பலத்தையும், துணிச்சலையும் கொண்டிருக்கிறது, என திரும்ப திரும்ப கூறிய பாரிக்கார் இந்தியா அதன் மூலோபாய ஆற்றலை அதிகரிக்கவும், எதிரிகளை அச்சமூட்டவும், தனது "முதல் தாக்குதல் இல்லை" என்ற அணுஆயுத உறுதிமொழியை கைவிட சமீபத்தில் அழைப்பு விட்டார்.

செவ்வாய்கிழமை, இந்திய எதிர்ப்பு இஸ்லாமிய காஷ்மீர் பிரிவினைவாதிகள், ஒரு இந்திய இராணுவ நிலையை தாக்கிய பின்னர் இன்னும் கூடுதலாக அழுத்தங்கள் அதிகரித்தன. இதில் இரண்டு அதிகாரிகள் உட்பட ஏழு இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். ஒரு கால் நூற்றாண்டு கால பாகிஸ்தானின் ஆதரவுபெற்ற கிளர்ச்சி நிகழ்வதும் மற்றும் இந்தியாவின் ஒரே முஸ்லீம் பெரும்பான்மை மாகாணமுமான ஜம்மு காஷ்மீரின், குளிர்கால தலைநகரம் ஜம்முவுக்கு அருகில் இந்த நக்ரோடா இராணுவ நிலை உள்ளது.

ஹிந்து செய்தியின்படி, ஊரி இந்திய இராணுவத் தளம் மீது நடத்தப்பட்ட கிளர்ச்சியாளர்களின் முந்தைய தாக்குதலுக்கு விடையிறுப்பாக நடாத்தியதாக கூறும், செப்டம்பர் இறுதியில் இந்திய சிறப்பு படையினர் பாகிஸ்தான் உள்ளே நடத்திமுடித்த "நுட்பமான தாக்குதலுக்கு" பின்னர், செவ்வாய்கிழமை காஷ்மீரில் பாகிஸ்தானின் எல்லைதாண்டிய துப்பாக்கி சூடு தாக்குதலினாலோ அல்லது கிளர்ச்சியாளர்களை எதிர்கொள்ள நேரிட்டதிலோ கொல்லப்பட்ட இந்திய பாதுகாப்பு படையினர் இறப்பு எண்ணிக்கை 27 ஆக உயர்ந்தது.

எல்லை தாண்டிய துப்பாக்கி சூடு தாக்குதல்களில், இதேபோன்ற எண்ணிக்கையிலான பாகிஸ்தானிய துருப்புக்கள் மற்றும் பிளவுற்ற காஷ்மீர் பகுதிகளின் இருபுறங்களிலும் குறைந்தபட்சம் 40 அப்பாவி பொதுமக்களும் கொல்லப்பட்டு இருப்பார்கள் என்று இந்தியா கூறுகிறது.

செவ்வாய்கிழமை தாக்குதல் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளதாகவே ஆதாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன என்று பெயர் குறிப்பிடாத இந்திய இராணுவ வட்டாரங்கள் செய்தி ஊடகத்தில் தெரிவித்துள்ளனர். ஆனால் இதுவரையில், இந்திய இந்துமத மேலாதிக்கவாத பாரதீய ஜனதா கட்சி (BJP) அரசாங்கம் நக்ரோடா தாக்குதலுக்கு இஸ்லாமாபாத் தான் பொறுப்பு என்று குற்றஞ்சாட்டவில்லை. இது செப்டம்பர் 18 ஊரி சம்பவத்தின் மீதான எதிர்வினை போன்று அல்லாமல் முற்றிலும் நேர்மாறாக இருந்தது.

இருப்பினும், இவை அனைத்தும் விரைவில் மாறிவிடும்.

பாகிஸ்தானுடனான தற்போதைய மோதல்களிலிருந்து ஒரு காட்டிக்கொள்ளக்கூடிய அனுகூலத்தை பாதுகாப்பதில், பிரதம மந்திரி நரேந்திர மோடியும், அவரது பிஜேபி அரசாங்கமும் மூலோபாய ரீதியிலும், அரசியல் ரீதியிலும் பெருமளவு முதலீடு செய்துள்ளனர்.

முந்தைய அரசாங்கங்கள் பாகிஸ்தான் குறித்து தொடர்ந்து பெருமையுடன் பின்பற்றிவந்தது போன்று, "மூலோபாய கட்டுப்பாடு" கொள்கையின் கட்டுக்களிலிருந்து இந்தியாவை விடுவிக்க வேண்டும் என்ற பிஜேபி இன் படுதம்பட்டமான கூற்றுக்களை பெரும் வணிக நிறுவனங்கள் தீவிரமாக பெரிதும் பாராட்டியுள்ளது.

மேலும், இந்தியாவின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்திரபிரதேசத்தில் வரவிருக்கும் தேர்தல்களில், ஓர் மிக முக்கிய விடயமாக பாகிஸ்தானுக்கு எதிரான தனது ஆக்கிரமிப்பு நிலைபாட்டை காட்ட உத்தேசித்து இருப்பதாக அறிக்கை விடுப்பதன் மூலம், தனது பலவீனமான, அதிலும் துரோகியாகவும் உள்ள எதிரி நாடான பாகிஸ்தானை ஏளனம் செய்யும் விதமாக அதன் உடனான போர் நெருக்கடியை பிஜேபி சிறிதும் வெட்கமின்றி சுரண்டிக்கொண்டுள்ளது.

உலக பொருளாதார நெருக்கடியினால் பீதியடைந்துள்ள இந்திய முதலாளித்துவ வர்க்கம், முதலீட்டாளர் சார்புடைய சமூக பொருளாதார "சீர்திருத்தத்தினை" முடுக்கிவிடவும், உலக அரங்கில் அதன் வல்லரசாகும் குறிக்கோளை அதி தீவிரமாகத் தொடரவுமே, மோடியையும், அவரது பிஜேபி இனையும் இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர் அதிகாரத்திற்கு கொண்டுவந்தது.

இதே போக்கின்படி, சீனாவிற்கு எதிரான வாஷிங்டனின் இராணுவ மூலோபாய தாக்குதலில், இந்தியாவை ஒரு உண்மையான "முன்னணி அரசாக" மோடி மாற்றிவிட்டார், இந்தியா மீது மூலோபாய உதவிகளுக்காக அமெரிக்கா மட்டுமீறி செலவழித்துவருவது என்பது கூட, அதற்கு பதிலீடாக பாகிஸ்தான் உடனான "எழுதப்படாத விதிகளை" இந்தியா மாற்றிக்கொள்ள வழிவகுப்பது மற்றும் தெற்கு ஆசிய பிராந்திய மேலாதிக்கமாக அதனை இருத்திக்கொள்வது என்ற கணக்கிட்டீல்தான் என்பதாகும்.

ஆகஸ்டில், பாகிஸ்தான் "பயங்கரவாதத்திற்கு ஆதரவான நாடு" என்று முத்திரைகுத்தபடுவதற்கு ஒரு இராஜதந்திர பிரச்சாரத்தை புது தில்லி பெருமளவில் மேற்கொள்ளும் என அறிவித்தது. மேலும்  பாகிஸ்தானை சிதைத்துவிடுவதற்கு ஏற்றவாறு பலூசிஸ்தான் தேசியவாத பிரிவினைவாத கிளர்ச்சிகளுக்கு இந்தியாவின் ஆதரவினை சமிக்ஞை செய்தது போன்ற வகையில் மோடி பாகிஸ்தானுக்கு எதிராக புதிய கடும்போக்கிலான மூலோபாயம் ஒன்றை வெளியிட்டார்.

பின்னர் செப்டம்பர் இறுதியில், இந்தியாவின் நீண்டகால கொள்கையான பாகிஸ்தான் உள்ளேயான அதன் இராணுவ நடவடிக்கைகள் வெளிப்படையானதாக இருக்காது என்பதை பிஜேபி அரசாங்கம் கைவிட்டது. இந்த கொள்கை வகுக்கப்பட்டிருந்ததன் நோக்கம், தாக்குதல்கள் மற்றும் பதிலடி தாக்குதல்கள் என்ற விதத்திலான ஒரு செயலாக்க எரியூட்டுதலுக்கு இட்டுச் சென்று அதுவே விரைவில் ஒரு ஒட்டுமொத்த போராக தீவிரமடையலாம் என்ற அச்சத்தினால் ஆகும்.

தொடர்ந்த இரண்டு மாதங்களில், இந்திய பாகிஸ்தான் உறவுகளுக்கு இடையில் "எல்லை தாண்டிய பயங்கரவாதம்" ஒரு முக்கிய பிரச்சனையாக உள்ளது என்பதை ஒப்புக்கொண்டால் மட்டும், மற்றும் பாகிஸ்தானிய பிராந்தியத்தில் இருந்து எந்தவொரு விநியோக உதவியையும் பெறுகின்ற காஷ்மீர் கிளர்ச்சிகாரர்களை இஸ்லாமாபாத் தடுக்கவும் முற்பட்டால் தான், அதனுடனான வழக்கமான உயர் மட்ட தொடர்புகளை மீண்டும் தொடர இயலும் என்று புது தில்லி வலியுறுத்தி வந்துள்ளது.

இந்த கடுமையான நிலைப்பாட்டை தொடர்வதற்காக, வாஷிங்டன் ஒப்புதலுடன் செப்டம்பர் 28-29ல் பாகிஸ்தான் உள்ளே இந்தியாவின் சட்டவிரோதமான மற்றும் பெரும் ஆத்திரமூட்டும் தாக்குதலை செயல்படுத்தி மோடி மற்றும் அவரது பிஜேபியும் ஏற்றம் கண்டனர். ஒபாமா நிர்வாகம் எச்சரிக்கையுடன் செயல்பட அறிவுறுத்தும்போதும், வாஷிங்டனின் "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பு" என்ற சீன எதிர்ப்பு கொள்கையில் இந்தியாவின் ஒருங்கிணைப்புக்கு கைமாறு என்ன என்பது பற்றி இருக்கும் குழப்பங்களை அது அங்கீகரிப்பதை புது தில்லிக்கு காட்டுவதற்கு ஆர்வமாக உள்ளது, மேலும் இதே பாங்குடன் பாகிஸ்தானை கையாள்வதில் இந்தியாவிற்கு மிகுந்த விதிவிலக்குகளை விட்டுக்கொடுக்கவும் வாஷிங்கடன் தயாராக உள்ளது.

அமெரிக்க ஜனாதிபதியாக தேர்வாகியுள்ள டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க நட்பு நாடு போன்று பாகிஸ்தான் நடந்துகொள்ளாதது குறித்து அதனை இந்தியா தாக்குகின்ற நிலையிலே, வாஷிங்டனின் மிகுந்த மதிப்புமிக்க மூலோபாய பங்காளிகளுள் ஒன்றாக அதனை வர்ணித்து மீண்டும் மீண்டும் பாராட்டினார். ட்ரம்ப் பொறுப்பேற்றுவிட்டால் இஸ்லாமாபாத் மீதான உந்துதலை பெருக்கும் வாய்ப்பினை இன்னும் பெறலாம் என்ற ஆவலுடன் இந்தியா உள்ளது.

இதற்கிடையில், பாகிஸ்தான் அதன் மூலோபாய தனிமைப்படல் மூலம் ஆட்டம் கண்டுள்ளது. ஊரி தாக்குதலுக்கு பின்னர், கடந்த மாதம் பாகிஸ்தானில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்கு ஆசிய கூட்டமைப்பின் (SAARC) கூட்ட புறக்கணிப்புக்கு இந்த பிராந்தியத்தின் பெரும்பான்மையான மற்ற நாடுகளை இந்தியாவினால் திரட்ட முடிந்தது. இந்தியாவின் சட்டவிரோத "நுட்பமான தாக்குதல்" மீதான சர்வதேச கண்டனத்திற்கு இஸ்லாமாபாத் விடுத்த அழைப்புக்கு விடையிறுப்பாக அது ஒரு இடி போன்ற அமைதியையே சந்தித்தது.

போர் நெருக்கடியை குறைக்கும் ஒரு முயற்சியில், டிசம்பர் 3-4ல் நடைபெறும் ஆப்கானிஸ்தான் மீதான "ஆசியாவின் மையம்" (Heart of Asia - HoA) மாநாட்டில், பிரதம மந்திரி நவாஸ் ஷெரீப் இன் உயர்மட்ட வெளியுறவு கொள்கை ஆலோசகர், சர்தாஜ் அஜீஸ் பங்கேற்க உள்ளார் என்றும், மாநாட்டின் ஒருபுறமாக இந்திய அதிகாரிகளுடன் "விரிவான மற்றும் நிபந்தனையற்ற பேச்சுவார்த்தைக்கும்" அவர் தயாராக இருப்பார் என்றும் இஸ்லாமாபாத் அறிவித்தது.

இருப்பினும், பாகிஸ்தானிலிருந்து வெறும் 20 கிலோ மீட்டர் (12.5 miles) தொலைவில் இருக்கும் அமிர்தசரஸ் HoA கூட்டத்தில் அஜீஸ் இன் பங்கேற்புக்கு இந்தியா எந்தவொரு உற்சாகமும் காட்டவில்லை, இஸ்லாமாபாத் மட்டும் தனியாக பேச்சுவார்த்தைக்கு விருப்பம் தெரிவித்தது. பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தானின் விருப்பம் என்பது "எல்லை பகுதி ஊடாக தொடரும் பயங்கரவாத தாக்குதல் பின்னணியில் இது அர்த்தமற்றதே" என்று பெயர் குறிப்பிடப்படாத இந்திய அதிகாரிகள் தெரிவித்ததாக நேற்று Times of India குறிப்பிட்டது.

நீடித்த வன்முறை நிறைந்த எல்லைதாண்டிய பிரச்சனை, மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் பாரிக்கர் இந்தியாவை அதன் "முதல் தாக்குதல் இல்லை" என்ற அணுஆயுத உறுதிமொழியினை கைவிட தூண்டியது உட்பட மோடி அரசாங்கத்தின் போருக்கு அச்சுறுத்தும் வாயடிப்புக்கள் ஆகியவை இருப்பினும், பெருநிறுவன செய்தி ஊடகத்தின் சில பிரிவுகளுக்கு இதற்கு ஒரு இடைவேளை கொடுத்துள்ளன.

நவம்பர் 24ல், சென்னையை தளமாக கொண்ட ஹிந்து நாளிதழ், "போர் நிறுத்த உடன்பாட்டை திரும்பபெறுதல்" என்ற ஒரு ஆசிரிய தலையங்க தலைப்பில், "பதிலடி வட்ட சுழற்சியானது கட்டுப்பாட்டை இழந்துவிடும் அபாயம் உள்ளது குறித்து... இந்தியா பாகிஸ்தான் இரு நாடுகளுமே எச்சரிக்கையாக இருக்கவேண்டும்" மேலும் "சாகசவாதத்திற்கு எதிராகவும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்" என்று பிரசுரித்தது. பாகிஸ்தான் உடனான பேச்சுவார்த்தைக்கு மீண்டும் முன்வந்து உடனடி நடவடிக்கைகள் எடுக்க புது தில்லியை இது அழைப்பு விடுக்க முயன்றது. "இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ள பிராந்திய அந்தஸ்து மற்றும் பிரதம மந்திரி நரேந்திர மோடியின் அரசியல் அதிகாரம் மீதான சவாலுக்கு உட்படாத பிடிப்பு," என்ற வகையில் "தசாப்த காலமாக சிறந்த செயல்பாட்டிலுள்ள போர் நிறுத்த உடன்பாட்டை திரும்பப்பெறும் நடவடிக்கைகளை முன்னெடுப்பது என்பது அவரது கடமையாகும்" என்று ஹிந்து அறிவித்தது.

நவம்பர் 25, The Economic Times இன், "எவரும் விரும்பாத போரினுள் விழ வேண்டாம்" என்ற ஒரு ஆசிரிய தலையங்க தலைப்பு செய்தி, "மட்டுப்படுத்தப்பட்ட மோதல்" இன் "உயர் ஆபத்து மூலோபாயம்" என்ற வாய்ப்பை எழுப்பியது, அரசியல் ஆதாயத்திற்காக "குறுகிய தேசிய இனவெறி உற்சாகத்தை" கிளறிவிடுவது "தெற்கு ஆசியாவில் இரண்டு அணுஆயுத ஆதிக்க நாடுகள்" இடையிலான போரில் முடிவதே ஆகும்." என வெளிப்படையாக தெரிவித்துள்ளது.

"இன்னும்," Economic Times, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரண்டினதும் அரசியல் தலைமை விரும்பும் யோசனை நிலையில் இருந்து நோக்கினால் "அணுஆயுதங்களை பயன்படுத்தலாம் என்று அதற்கு பொருள் அல்ல என்றால் ஒரு சம்பவம் அபத்தமானது என நீண்டகாலத்திற்கு புறக்கணிக்க இயலாது. உயிரிழப்பு மற்றும் செலவீடு இரண்டிலும் ஒரு போர் மிகுந்த இழப்புகளையே ஏற்படுத்தும்." எனத் தொடர்ந்தது.

இந்தியாவின் பெரும்பகுதியால் போர் உந்துதல்மிக்க மனநிலை கிளறிவிடப்படுவதில் வித்தியாசம் இருக்கும்போது, இரண்டு தலையங்கங்கள், தற்போது தெற்கு ஆசியாவில் எந்த அளவிற்கு போர் மேகங்கள் சூழ்ந்திருக்கின்றன என்பது குறித்து பெரிதும் குறைத்து மதிப்பிட்டது. இந்திய பாகிஸ்தான் நெருக்கடி உடன் ஒரே நேரத்தில் நடக்கும் நிகழ்வாக, இந்திய சீன அழுத்தங்களிலும் ஒரு பெரிய விரிவாக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்திய இராணுவ தளங்களிலும், துறைமுகங்களிலும் அமெரிக்க போர் விமானங்கள் மற்றும் போர் கப்பல்களின் வழக்கமான பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கும் ஒப்பந்தத்திற்கு ஆகஸ்ட் இறுதியில் புது தில்லி இசைவு அளிப்பதை எடுத்து காட்டியது போன்ற வாஷிங்டன் உடனான இந்தியாவின் மூலோபாய மறுசீரமைப்பின் அளவு குறித்து சீனா தடுமாற்றம் அடைந்துவிட்டது. தற்போதைய நெருக்கடியிலும் சீனா அதன் நீண்டகால கூட்டணியுடன் நின்றுகொண்டிருப்பது, மேலும், பெருகிவரும் இந்திய அமெரிக்க கூட்டணிக்கு விடையிறுப்பாக பாகிஸ்தானுடன் அதன் பங்காண்மையை வலுப்படுத்தியுள்ள அதே நேரத்தில், இஸ்லாமாபாத் உடன் நிதானத்தை பின்பற்ற வலியுறுத்தும்போது, பெய்ஜிங் மீது இந்தியா ஆத்திரம் அடைந்துள்ளது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் சீனாவிற்கும் இடையே பெருகிவரும் மோதல்களுடன், எளிதில் கையாள முடியாத இந்தியா பாகிஸ்தான் மோதலும் தற்போது பின்னிப் பிணைந்துள்ளமையானது, இந்தியா பாகிஸ்தான் இடையிலான ஒரு போரில் உலக வல்லரசுகளையும் விரைவில் ஈடுபடுத்தும் சாத்தியப்பாட்டினையும் அதற்கு இன்னும் புதிய பாரிய வெடிப்புத் தன்மையையும் கூட்டுவதையே இந்த நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.