ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

German media steps up anti-Russian agitation

ஜேர்மன் ஊடகங்கள் ரஷ்ய-விரோத ஆத்திரமூட்டலை அதிகரிக்கின்றன

By Ulrich Rippert
17 August 2016

செவ்வாயன்று நடைமுறையளவில் ஒவ்வொரு முன்னணி ஜேர்மன் பத்திரிகையும் சிரியா மற்றும் உக்ரேனிய மோதல்களை தூண்டிவிடுவதற்காக ரஷ்ய அரசாங்கத்தை குற்றஞ்சாட்டி அதன் மீதான கண்டனங்களைப் பிரசுரித்தன.

அதற்கு ஒரு நாள் முன்னதாக சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் அரசாங்கம் (கிறிஸ்துவ ஜனநாயக யூனியன், CDU) குறிப்பாக கடுமையான வார்த்தைகளில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினை விமர்சித்தது. மேர்க்கெல் இன் பத்திரிகை தொடர்பு செயலாளர் ஸ்ரெபன் சைய்பேர்ட் அறிவிக்கையில், சிரிய நகரமான அலெப்போவில் மனிதாபிமான பேரழிவுகளுக்கு ரஷ்ய மற்றும் சிரிய அரசாங்கங்களே பொறுப்பாகும் என்றார். உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ உதவிகளுக்கான ஒரு வினியோக பாதையை அமைப்பதற்கும் மற்றும் அன்றாடம் மூன்று மணி நேர போர்நிறுத்தத்தை உத்தரவாதப்படுத்துவதற்குமான ரஷ்யாவின் முன்வரல், சைய்பேர்ட் இன் வார்த்தைகளில், “நல்லெண்ணம் கிடையாது, மாறாக எரிச்சலூட்டுவதாக" இருந்தது.

“சிரியா போர் குறித்து ஜேர்மன் அரசாங்கம் இந்தளவிற்கு கூர்மையாக ரஷ்யாவை அரிதாகவே விமர்சித்துள்ளது,” என்று Süddeutsche Zeitung அதன் முதன்மை கட்டுரையில் கருத்துரைத்தது. அப்பத்திரிகை ஜேர்மன் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை ஆதரிக்கிறது.

அதே பத்திரிகையின் கருத்துரை பக்கத்தில், Stefan Kornelius குறிப்பிடுகையில், “உலகம் அலெப்போவில் மனிதயினத்திற்கு எதிரான குற்றங்களைக் காணும் அதில் ரஷ்யா பலமாக சம்பந்தப்பட்டுள்ளது. மாஸ்கோவ் ஓர் இராணுவ மோதலை எரியூட்டி வருகிறது, இது இரண்டாம் உலக போர் இடிபாடுகளில் கொல்லப்பட்டவர்களை நினைவுபடுத்துகிறது.” பேர்லினின் "எச்சரிக்கை வார்த்தைகள்" வரவேற்கத்தக்கவை, ஆனால் போர்வெறி கொண்டவர்களை அவர்களது உணர்வுநிலைக்குக் கொண்டு வர, ஒருபோதும்" வார்த்தைகள் "மட்டும் போதாது," என்று அறிவித்தார்.

Frankfurter Allgemeine Zeitung இல் பேர்தோல்ட் கோஹ்லர் அதேமாதிரியான வாதங்களை முன்வைத்தார். சம்பவங்களின் போக்கை போரின் தரப்பில் தூண்டிவிடுவதற்கு கிரெம்ளின் அமெரிக்காவின் நிதானத்தைப் பயன்படுத்தி வருகிறது. அலெப்போவில் மனிதாபிமான பேரழிவு ரஷ்ய அரசாங்கத்திற்கு ஒரு வாய்ப்பாக கிடைத்துள்ளது. “மாஸ்கோவின் எரிச்சலூட்டல்" சிரியாவில் மட்டும் எடுத்துக்காட்டப்படவில்லை. “உக்ரேன் மோதலிலும் கிரெம்ளினின் அறிவிப்புகளானது பொய்கள், ஏளனங்கள் மற்றும் அவமதிப்புகளில் ஊறி உள்ளன,” என்றார்.

“கூட்டு-ஒத்துழைப்பு அதற்கு சாதகமாக இருக்கும், முரண்பாடாக இருக்காது" என்பதை கிரெம்ளினுக்கு ஜேர்மன் வெளியுறவு கொள்கை எடுத்துக்காட்ட வேண்டும் என்று FAZ இன் இணை ஆசிரியர் எழுதினார். பின்னர் ஜேர்மன் வெளியுறவு மந்திரி பிராங்க்-வால்டர் ஸ்ரைன்மையர் இன் போலியான விமர்சனம் வந்தது: “எவ்வாறிருப்பினும் மேற்கின் சில குரல்கள், ஜேர்மன் குரல்களுமே கூட, மாஸ்கோவை எதிர்தரப்பில் இருக்க அனுமதிக்கலாம் என்று இருந்தன, இருக்கின்றன.” இவை அனைத்திற்கும் பின்னால் ஒளிந்திருக்கும் "யதார்த்த மறுப்பும் மற்றும் நல்லெண்ண சிந்தனையும்" “மாஸ்கோவிய எரிச்சலூட்டலை" ஊக்குவிக்க மட்டுமே செய்கிறது என்று கோஹ்லர் அறிவித்தார்.

திங்களன்று ஸ்ரைன்மையர் ரஷ்ய யூரல் பகுதியின் Yekaterinburg நகருக்கான அவரது பயணத்தை, ரஷ்யா மற்றும் உக்ரேனுக்கு இடையிலான சமீபத்திய தீவிரப்பாடு மற்றும் அலெப்போ போர் ஆகியவற்றைக் குறித்து அவரின் ரஷ்ய சமபலமான செர்ஜி லாவ்ரோவ் உடன் விவாதிக்க பயன்படுத்தினார்.

விவாதத்திற்குப் பின்னர், “தொடர் குண்டுமழை" நிறுத்தப்பட வேண்டும் என்றார். “அது தொடரக் கூடாது, தொடர விடக்கூடாது.” ஒரு நீடித்த போர்நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்ததில் அவர் ஏமாற்றம் அடைந்திருப்பதாக, ஆனால் விவாதங்களை விரைவிலேயே மீண்டும் தொடங்க விரும்புவதாக தெரிவித்தார்.

ஸ்ரைன்மையர் ரஷ்யாவை நேட்டோ சுற்றிவளைப்பதற்கு உதவிய அதேவேளையில், பேச்சுவார்த்தைகளை ரஷ்யா மீது அரசியல் அழுத்தத்தைப் பிரயோகிப்பதற்கு பயன்படுத்துவதற்காக கிரெம்ளின் உடன் பேச்சுவார்த்தைகளைத் திறந்து வைக்க முயல்கிறார். அதனால் தான் அவர் நிதானமான இராஜாங்க நடவடிக்கைகளை எடுத்துக்காட்டுகையில் நேட்டோவின் ஆக்ரோஷமான கொள்கைகளை மறைக்கிறார்.

இது, ஜேர்மன் வெளியுறவு கொள்கையின் பாகத்தில் இன்னும் அதிக ஆக்ரோஷத்தன்மையைக் கோரும் சில ஊடக போர்வெறியாளர்களை உறுத்துகிறது. Tagesthemen செய்தி நிகழ்ச்சியின் நெறியாளர் தோமஸ் ரோத் இந்த மனோபாவத்தின் உதாரணத்திற்குரிய ஒரு பிரதிநிதியாக இருக்கிறார், இவரின் ஒருதலைபட்சமான, ரஷ்ய விரோத செய்திகள் ஏனைய ஊடக நிறுவனங்களையே ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுகிறது.

திங்களன்று மாலை ரோத் வெளியுறவு மந்திரிகளின் Yekaterinburg கூட்டத்தில் அவர் அறிக்கையை முன்வைக்கையில், “இயல்பாகவே சுடுவதைக் காட்டிலும் பேசுவது சிறந்தது,” என்ற வார்த்தைகளைப் பிரயோகித்தார். ஆனால் பங்குபற்றி இருக்கும் அனைவரும் அதை விரும்ப வேண்டும் என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார். “லெனினின் போல்ஷ்விக்குகள் ஜூலை 1918 இல் ஜாரின் குடும்பத்தைச் சுட்டுக் கொன்றதைப் போல,” ரஷ்யர்கள் பேசுவதைக் காட்டிலும் ஏற்கனவே Yekaterinburg இல் சுடுவதைத் தேர்ந்தெடுத்துள்ளனர் என்று ரோத் தொடர்ந்து குறிப்பிட்டார்.

உக்ரேனிய நிலைமை மீதான Golineh Atai இன் முற்றிலும் ஒருதலைபட்சமான அறிக்கை ரோத் இன் அறிக்கையைப் பின்தொடர்ந்து வந்தது. ரஷ்ய கட்டுப்பாட்டிலான கிரிமியாவிற்கு எதிராக ஒரு பயங்கரவாத ஆத்திரமூட்டலை கியேவ் அரசாங்கம் நடத்தியதென்ற ரஷ்ய குற்றச்சாட்டுக்களை மறுப்பதற்கு அந்த செய்தியாளர் "கிரிமிய டடார் நடவடிக்கையாளர்" Ilmi Umerov ஐ நேரில் பார்த்த பிரதான நபராக எல்லா ஜனங்களுக்கும் மேற்கோளிட்டார். வசந்த காலத்தில் தற்காலிகமாக ரஷ்ய உளவு சேவையால் கைது செய்யப்பட்டிருந்த Umerov, ரஷ்ய அரசாங்கத்தின் எதிர்ப்பாளராக ஒப்புக் கொண்டவராவார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், Golineh Atai உக்ரேன் மற்றும் மைதான் பதவிக்கவிழ்ப்பு சதி குறித்து முற்றிலும் ஒருதலைபட்சமாகவும், எதிர்ப்புகளில் தெளிவாக கண்கூடாகவே அதிதீவிர வலது சாரி மற்றும் பாசிச கும்பங்கள் பங்குபற்றி இருந்த போதினும் அவற்றை ஒரு ஜனநாயக இயக்க சம்பவங்களாக காட்டியும் அறிக்கைகளை வழங்கினார். Tagesthemen இன் செய்திகளை ஒளிபரப்பும் சேவையான ARD இன் நிகழ்ச்சி ஆலோசனை குழுவே அதை விமர்சிக்கும் அளவிற்கு அது ஒருதலைபட்சமாக இருந்தது.

ரஷ்யாவிற்கு எதிரான ஊடக ஆத்திரமூட்டல் கடந்த வாரத்தில் தெளிவாக அதிகரித்துள்ளது. வியாழனன்று Spiegel Online அறிவித்தது: “நமது காலத்தில் தீர்க்கமான மோதலாக உள்ள சிரியா போருக்கு நாங்கள் இன்றைய நாளை அர்பணிக்கிறோம்,” என்றது. அலெப்போவின் இடிபாடுகளும் சடலங்களும் "உலகுக்கே அவமதிப்பாகும்,” என்று அவர்கள் எழுதினார்கள். அங்கிருக்கும் மக்கள் ஒரு நிராதரவான நிலைமையில் இருக்கிறார்கள், “சிரிய-ரஷ்ய குண்டுகள் மருத்துவமனைகளைத் தாக்குகின்றன, நூறு ஆயிரக் கணக்கான அப்பாவி மக்கள் அச்சுறுத்தலில் உள்ளனர்.”

“அலெப்போவின் மருத்துவர்கள் ஒபாமாவிடம் உதவி கேட்கிறார்கள்,” “சிவப்பு கோடுகள், தவறவிட்ட வாய்ப்புகள், இழந்த இடங்கள்,” “அலெப்போவில் புதிய நச்சுவாயு தாக்குதல்களைக் குறித்து மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்,” இன்னும் இதுபோல பல டஜன் கணக்கான பிரச்சார கட்டுரைகள் பின்தொடர்ந்தன. “ஒபாமாவை அடுத்து வருபவர் சிரியாவில் இன்னும் தீர்க்கமாக தலையீடு செய்வார்கள்" என்ற தலைப்பின் கீழ் Spiegel Online முன்னாள் அமெரிக்க பாதுகாப்புத்துறையின் உத்தியோகப்பூர்வமற்ற பணியாளர் அந்தோணி கோர்டெஸ்மன் உடனான ஒரு பேட்டியை பிரசுரித்தது. ஜேர்மனி "தீவிரமான, பொதுவான பொறுப்புறுதிக்கு" தயாராக இருக்கிறதா என்பதை அது "உடனடியாகவோ அல்லது தாமதமாகவோ" முடிவெடுத்தாக வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

அதே நாளில் Die Welt "இறுதியில் மேற்கு புட்டினை தடுத்து நிறுத்த வேண்டும்" என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டிருந்தது. ஒரு வாரத்திற்கு முன்னதாக Die Welt, “ஸ்ரீபெரெனிகாவை (Srebrenica) விட அலெப்போ மிகவும் மோசமாக உள்ளது,” என்று எழுதியிருந்தது. 1995 இன் கோடையில் ஆயிரக் கணக்கான போஸ்னியர்கள் கொல்லப்பட்ட ஸ்ரீபெரெனிகா படுகொலை, யூகோஸ்லேவியாவிற்கு எதிரான நேட்டோ போரை நியாயப்படுத்துவதில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்தது.

“மாஸ்கோவ்-டமாஸ்கஸ்-தெஹ்ரான் இன் போர் குற்றவாளிகளது அச்சு" என்று தலைப்பிட்ட ஒரு கட்டுரையை "சர்ச்சைக்குரிய இதழான" European அதன் ஆகஸ்ட் பதிப்பில் பிரசுரித்தது. ரஷ்யா, சிரியா மற்றும் ஈரான் "விளைவுகளைப் பொருட்படுத்தாமல் இனப்படுகொலை போரை" நடத்தி வருகின்றன மற்றும் "மேற்கத்திய உலகம்" தன்னைத்தானே “காட்டுமிராண்டித்தனத்திற்கு உடந்தையாக" ஆக்கிக் கொண்டுள்ளது.

ரஷ்யாவிற்கு எதிரான போர் நாட்டத்துடன் ஊடகங்கள் உலகின் இரண்டு மிகப்பெரிய அணுஆயுத சக்திகளுக்கு இடையே ஆயுதமேந்திய மோதல் அச்சுறுத்தலை அதிகரித்து வருகின்றன, இத்தகையவொரு மோதல் ஐரோப்பாவில் மில்லியன் கணக்கானவர்களின் உயிரைப் பறிக்கும், ஒருவேளை மனிதயின நாகரீகத்தையே முடிவுக்குக் கொண்டு வரலாம். வேகமாக தீவிரமடைந்து வரும் சர்வதேச முதலாளித்துவ நெருக்கடிக்கு இந்த முட்டாள்தனம் தான் அவர்களது விடையிறுப்பாக இருக்கிறது.

1930 களில் அப்போது ஜேர்மன் ஆளும் வர்க்கம் எந்தவித சமூக மற்றும் அரசியல் எதிர்ப்பை நசுக்கவும் ஐரோப்பா மற்றும் சோவியத் ஒன்றியத்தை வன்முறையாக அடிபணிய செய்ய தயாரிப்பு செய்வதற்கும் அடால்ஃப் ஹிட்லரை ஜேர்மனியின் சான்சிலராக நியமித்ததைப் போலவே, ஜேர்மனியின் ஆளும் வர்க்கம் மீண்டுமொரு முறை இராணுவவாதத்தில் ஈடுபட்டு வருவதுடன், எந்தவித எதிர்ப்பையும் அச்சுறுத்துவதற்கும் மூலப்பொருட்கள் மற்றும் சந்தைகளைத் தேடுவதில் பங்கெடுப்பதற்கும் அரசு எந்திரத்தைக் கட்டமைத்தும் வெளிநாட்டவர் விரோத மனோபாவத்தை ஊக்குவித்தும் வருகிறது.

ரஷ்யா மற்றும் சீனாவைத் திட்டமிட்டு சுற்றி வளைத்து வருகின்றதும், உலகளாவிய மேலாதிக்கவாதியாக அதன் இடத்தை பாதுகாப்பதற்கு மத்தியக் கிழக்கின் பெரும்பாலான பாகங்களை அழித்துள்ளதுமான அமெரிக்காவின் பாதையை அவர்கள் பின்தொடர்கிறார்கள்.

ரஷ்யா "வலிந்து சண்டையில் இறங்கும் ஒரு விரிவாக்கவாத சக்தி" (FAZ) என்ற வாதம், உண்மைகளின் ஒரு விசித்திரமான திரித்தல் ஆகும். 25 ஆண்டுகளுக்கு முன்னர் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்கு பின்னர், நேட்டோ முன்பினும் அதிகமாக ரஷ்யாவின் எல்லைகளுக்கு அருகில் முன்னேறி உள்ளது. முன்னாள் பால்டிக் சோவியத் குடியரசுகளுடன் சேர்ந்து ஒரு சமயத்தில் சோவியத் ஒன்றியத்துடன் இணைந்திருந்த ஏறத்தாழ எல்லா கிழக்கு ஐரோப்பிய நாடுகளும், மேற்கு இராணுவ கூட்டணியின் உறுப்பினர்களாக ஆகியுள்ளன.

உக்ரேன் நெருக்கடி மேற்கத்திய சக்திகளால் வேண்டுமென்றே தூண்டிவிடப்பட்டது. 2014 ஆரம்பத்தில் வாஷிங்டனும் பேர்லினும் பாசிசவாத சக்திகளுடன் நெருக்கமாக கூடி இயங்கி ரஷ்ய-ஆதரவிலான ஜனாதிபதி விக்டொர் யானுகோவிச்சுக்கு எதிரான ஒரு சதியை ஒழுங்கமைத்து, மேற்கு-சார்பிலான செல்வந்தர் பெட்ரோ பொறோஷென்கோ ஐ கொண்டு அவரை பிரதியீடு செய்தன. அப்போதிருந்து அந்நாடு முன்பினும் ஆழமாக உள்நாட்டு போர் மற்றும் ஊழலில் மூழ்கியதுடன், மக்களின் நிலைமை கடுமையாக மோசமடைந்துள்ளது.

அதேபோல சிரியா போரானது மக்களுக்கு அதேமாதிரியான பேரழிவுகரமான விளைவுகளுடன் ஆட்சி மாற்றத்திற்கான வாஷிங்டன் முயற்சிகளது விளைபொருளாகும். அல் கொய்தா மற்றும் ஏனைய இஸ்லாமிய குழுக்களுடன் தொடர்புபட்ட போராளிகள் குழுக்களை உள்ளடக்கிய பெரிதும் கிளர்ச்சியாளர்கள் என்றழைக்கப்படுபவர்களுக்கு சிஐஏ, சவூதி அரேபியா, கட்டார் மற்றும் துருக்கி ஆகியவை ஆயுதங்களும் நிதியுதவிகளும் வழங்கி உள்ளன. அத்தகைய படுகொலை படைகள் பலவீனமடைந்திருப்பதால் ரஷ்யாவின் தலையீட்டால்தான் பெரிதும் அந்நாடு நாசமாக்கப்பட்டு விட்டதாக இப்போது ஜேர்மன் ஊடகங்கள் குறைகூறுகின்றன.

இந்த ஏகாதிபத்திய ஆக்ரோஷத்தன்மைக்கு புட்டின் ஆட்சியிடம் எந்த முற்போக்கான பதிலும் கிடையாது. அது சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்கு பின்னர் அரசு சொத்துக்களில் இருந்து தங்களைத்தாங்களே செழிப்பாக்கிக் கொண்ட குற்றகரமான செல்வந்த தட்டுக்கள் மீது அது தன்னைத்தானே நிலைநிறுத்தி உள்ளது. அவர்களால் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு முறையிட முடியாது, எந்த விலை கொடுத்தாவது மேற்கின் வரையறைகளுக்குள் வருவதற்கான முயற்சிகளுக்கும் மற்றும் இராணுவரீதியில் பழிவாங்கும் அச்சுறுத்தலுக்கும் இடையே அவர்கள் ஊசலாடிக் கொண்டிருக்கவும் முடியாது. இது நிலைமையை இன்னும் அபாயகரமாக மற்றும் வெடிபார்ந்ததாக ஆக்குகிறது.