ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

After brawl in town of Sisco, France launches campaign to ban burkini

சிஸ்கோ நகரில் நடந்த கைகலப்பிற்கு பின்னர், பிரான்ஸ் புர்க்கினியை தடைசெய்ய பிரச்சாரத்தை முன்னெடுக்கிறது

By Kumaran Ira
18 August 2016

பிரெஞ்சு மத்தியதரைக்கடல் தீவான கோர்சிக்கா கிராமத்தினருக்கும் வட ஆபிரிக்காவை மூலமாகக் கொண்ட மூன்று முஸ்லிம் குடும்பங்களுக்கும் இடையில் வெடித்த சண்டைக்குப் பின்னர், கோர்சிக்காவின் சிஸ்கோ நகர சோசலிஸ்ட் கட்சி (PS) நகரசபை தலைவர் முஸ்லிம் பெண்களுக்கான உடலை மூடும் நீச்சல் உடையான “புர்க்கினியை” தடை செய்துள்ளார்.

சனிக்கிழமை பிற்பகல் உள்ளூர் இளைஞர்கள் முஸ்லிம் குடும்பங்களுடன் கடற்கரையில் இருந்தனர். முஸ்லிம் ஆடவர், ஒரு சுற்றுலாப் பயணி தனது மனைவியை படம்பிடித்ததாகவும் மற்றும் விடுமுறையில் வந்திருந்தவர் மீது கற்களை வீசியதாகவும் குற்றம் சாட்டிய பொழுது சண்டை வெடித்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், நேரில் பார்த்த சாட்சிப்படி, “சிஸ்கோ நகரத்து இளம்பருவ இளைஞர் தந்தைக்கும் விடுமுறை கழிக்க வந்தவருக்கிமிடையிலான கைகலப்பை ஸ்மார்ட் போனில் பதிவு செய்திருக்கிறார். பின்னர் அவரும் கூட முகத்தில் குத்துவிடப்பட்டு தாக்கப்பட்டார். பின்னர் அவரும் அவரது நண்பர்களும் வயதான கிராமத்தினரை உதவிக்காக அழைத்துள்ளனர், டசின் கண்கானோர் வந்தனர், அங்கே அவமதிப்புக்கள் நிகழ்ந்தன, புட்டிகளும் கற்களும் வீசப்பட்டன.”

கைகலப்பில் வட ஆபிரிக்க மூலத்தைக் கொண்ட இருவர் மோசமாகக் காயமுற்றது உள்பட ஐவர் காயமடைந்தனர். நால்வர் மருத்துமனையில் சேர்க்கப்பட்டனர், வட ஆபிரிக்க குடும்பங்களுக்கு சொந்தமான மூன்று கார்கள் கொளுத்தப்பட்டன.

கைகலப்பின் சூழ்நிலைமைகள் பற்றி தெளிவுபடுத்தப்பட முன்னரே, பிரெஞ்சு ஆளும் வர்க்கம் முஸ்லிம் விரோத வெறித்தனத்தை  கிளறிவிட, ஆத்திரமூட்டும் மற்றும் பிற்போக்கு பிரச்சாரத்தை தொடங்க இந்த நிகழ்வை சாதகமாக பயன்படுத்திகொண்டது. திங்கள் அன்று, சிஸ்கோ நகரசபைத் தலைவர் Ange-Pierre Vivoni தனது நகரின் கடற்கரையில் புர்க்கினி உடை அணிவதை தடைசெய்யும் ஆணையை பிறப்பித்தார். இந்த ஆணையானது, இதேபோன்ற இரு தடைகளை, அதாவது பிரெஞ்சு ரிவேரா நகரங்களான கான் மற்றும் வில்னெவ்-லுபே இன் நிர்வாக நீதிமன்றத்தால் அண்மையில் அங்கீகரிக்கப்பட்ட தடைகளை அடிப்படையாக கொண்டிருந்தது.

இந்த தடையானது, தேசிய மட்டத்திலான அதிகாரிகள் மற்றும் கட்சிகளின் அசாதரணமான தலையீட்டின் மத்திய விடயமாகி இருக்கிறது. La Provence பத்திரிகையிடம் பிரதமர் மானுவல் வால்ஸ் (PS), தான் “புர்க்கினி மீதான மேயரின் தடையை “ஆதரிப்பதாக” கூறினார். மேலும் புர்க்கினி “பிரான்சின் மதிப்புக்களுடன் பொருந்தாது” என்று அவர் கூறினார். அதேவேளை குடும்ப நலம், குழந்தை மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் லோரன்ஸ் றோசின்னியோல் (PS) புர்க்கினியின் நோக்கம் “பெண்களை நன்கு கட்டுப்படுத்துவதற்காக பெண்களின் உடல்களை மறைப்பது” என்று கூறி தடைகளை நியாயப்படுத்தினார்.

நவபாசிச தேசிய முன்னணியின் (FN) துணைத்தலைவர் ஃபுளோரியான் பிலிப்போ, முஸ்லிம்கள் மீதான சோசலிஸ்ட் கட்சியின் தாக்குதல்களை எதிரொலித்தார். “கழிசடைகளின் செயல்களுக்கும் இஸ்லாமிய வன்முறைக்கும் அரசு பதிலளிக்காதபொழுது, அது வியப்புக்குரியதல்ல” என்று கூறிய அவர், “அனைத்து கடற்கரையிலும் புர்க்கினி மீதான ஒரு பொதுவான மற்றும் முழுமுழுதான தடைக்காக” அழைப்பு விடுத்தார்.

சனிக்கிழமை சம்பவம், பெண்கள் புர்க்கினி அணிந்திருந்ததால்தான் ஏற்பட்டது என்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டு விவோனி தனது தடையைத் திணித்தார். மக்களை பாதுகாக்க தடை அவசியானது என்று அவர் கூறிக் கொண்டார். உண்மையில், தடையின் குறிக்கோள் மக்களைப் பாதுகாப்பதும் அல்ல, பெண்களின் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கவும் அல்ல, மாறாக ஜனநாயக உரிமைகள் மீது தாக்குதல் தொடுக்க மற்றும் இனவெறியை ஊக்குவிக்க கோர்சிக்கன் தேசியவாத சக்திகள் மற்றும் தீவிர வலது நோக்கி தகவமைத்துக் கொள்வதாகும்.

சம்பவத்திற்கு பின்னர் ஞாயிறு நடந்த ஒரு வலதுசாரி எதிர்ப்பிலிருந்து வந்த வாதங்களை அடிப்படையாகக் கொண்டு விவோனி நடவடிக்கையை நியாயப்படுத்தினார். வட ஆபிரிக்க சமூகத்தினர் கூடுதலாக வசித்துவரும் பஸ்தியாவில் சுமார் 500 பேர்கள் கூடினார்கள், “நாங்கள் அங்கு போகிறோம், ஏனெனில் இதுதான் எங்களது இருப்பிடம்” என்று சத்தமிட்டார்கள். ஊர்வலத்தில் ஒரு பெண்ணிடம் இருந்து வந்த குற்றச்சாட்டுக்களை மேற்கோள் இட்டு, விவோனி AFP-யிடம் கூறினார்.: “பெண்கள் புர்க்கினிகளில் குளிக்கிறார்கள் என்பதை நான் உறுதிப்படுத்துகிறேன்… (அவை) அனைத்து கோர்சிக்கா கடற்கரைகளிலும் ஒரு நவநாகரிக அறிவிப்பாக காணலாம்.”

அதேபோல, கடந்த மாதம் கான் இன் வலதுசாரி மேயர் புர்க்கினியை பயங்கரவாத வன்முறைக்கு தூண்டல் மற்றும் பொது ஒழுங்கிற்கும் சுகாதாரத்திற்கும் அச்சுறுத்தல் என்று அறிவித்த ஆணை ஒன்றில் கையெழுத்திட்டார். பிரான்சும் அதன் மத நிறுவனங்களும் பயங்கரவாத தாக்குதல்களால் இலக்காக்கப்பட்ட நிலைமையின் கீழ், கடற்கரையில் அணியும் உடை, பகட்டாரவாரத்துடன் மத நம்பிக்கையை சுட்டிக்காட்டுவது, பொது ஒழுங்கிற்கு ஊறுவிளைக்கும் ஆபத்துநேர்வை (கூடல்கள், கலவரங்கள் முதலிய) உருவாக்கும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது, அது தடுக்கப்பட்டாக வேண்டும்.” அது புர்க்கினி அணிவதற்காக அபராதமாக 38 யூரோக்களை (42.90 அமெரிக்க டாலர்கள்) விதித்தது.

முஸ்லிம் பெண்கள் தாங்கள் விரும்பும் வண்ணம் உடை அணிவதற்குள்ள உரிமையை செயற்படுத்தல், பயங்கரவாத வன்முறையை தூண்டல் என்று குற்றம் சாட்டல், ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள இஸ்லாமிக் அரசு (ISIS) உடன் தொடர்புபடுத்தல், இவ்வாறு அது பிரான்சுக்கு குரோதம் என்பது ஆதாரமற்ற மற்றும் ஆபத்தான பொய்கள் ஆகும். சிஸ்கோ கைகலப்பு காட்டுகின்றவாறு, முஸ்லிம் எதிர்ப்பு உணர்வை விடாது தொடர்ந்து, தூண்டுதலானது, பிரான்சில் இனவாத மற்றும் குறுங்குழுவாத பதட்டங்களை கொதிக்கும் புள்ளிக்கு உயர்த்தியுள்ளது.

மத்திய கிழக்கிலும் ஆபிரிக்காவிலும் ஆட்சி மாற்றங்களுக்கான தங்களின் யுத்தங்களின் பகுதியாக இஸ்லாமிய பயங்கரவாத படைகளை தூண்டிவிட்டவை பிரான்சில் உள்ள ஆளும் தட்டுக்களும் பிற நேட்டோ அரசுகளும்தான். அவை இஸ்லாமியப் படைகளுக்கும் பயங்கரவாத குழுக்களுக்கும் நிதியும் ஆயுதங்களும் கொடுத்து பினாமி யுத்தங்களில் மோதவைத்து வருகின்றன. முதலில் 2011ல் லிபிய ஆட்சியைக் கவிழ்த்தன, பின்னர் சிரியாவில் குழுவாத உள்நாட்டு யுத்தத்தை தூண்டிவிட்டு வருகின்றன. அது 400,000 உயிர்களைப் பறித்துள்ளதுடன் 10 மில்லியன்களுக்கும் மேலானவர்களை தங்களின் வீடுவாசல்களை விட்டோடி வெளியேறச் செய்திருக்கின்றது.

புர்க்கினி உடை அணிவதற்கு எதிரான பாசாங்கு பிரச்சாரமானது தள்ளாட்டம் காணுகின்றது. சிரிய நகரமான அலெப்போ நகருக்கருகில் ரஷ்ய ஆதரவு சிரிய படைகளைத் தாக்குவதற்காக டாங்கி எதிர்ப்பு ஏவுணைகளையும் உயர் தொழில் நுட்பம் கொண்ட ஆயுதங்களையும் அல்கொய்தா தொடர்புள்ள எதிர்ப்பு-குடிப்படையை சிஐஏ ஆயுதபாணியாக்கி வருகின்றது என அமெரிக்க செய்தி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இங்கே அச்சுறுத்தல்கள் என கண்டனம் செய்யப்படுவது, ரஷ்யாவுடன் முற்றுமுழுதான யுத்தத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கும் மற்றும் பயங்கரவாத குழுக்களுக்கு ஆயுதம் வழங்கும் நேட்டோ ஏகாதிபத்திய அரசுகளின் மிருகத்தனமான நடவடிக்கைகள் அல்ல, மாறாக கடற்கரைக்கு போகும் முஸ்லிம்கள் தான் அச்சுறுத்தல் என கண்டனம் செய்யப்படுகின்றனர்.

புர்க்கினி மீதான தடைகள், அடிப்படையிலேயே மதசார்பற்ற கோட்பாடுகளை எதிர்க்கின்றன மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகளை மீறுகின்றன. மதசுதந்திரம் மீதான மனித உரிமைகள் பற்றிய ஐரோப்பிய உடன்படிக்கையின் ஷரத்து 9 விளக்குவதாவது: “ஒவ்வொருவருக்கும் சுதந்திரமாய் சிந்திக்க, மனசாட்சிக்கு மற்றும் மதத்திற்கான சுதந்திரத்திற்கு உரிமை உண்டு; இந்த உரிமை தனது மதத்தை அல்லது நம்பிக்கையை மாற்றுவதற்கான சுதந்திரத்தையும் உள்ளடக்கும் மற்றும் தனியாகவோ அல்லது மற்றவர்களுடன் சேர்ந்து சமுதாயமாகவோ பொது இடத்திலோ அல்லது தனிப்பட்டவகையிலோ, தனது மதத்தை அல்லது நம்பிக்கையை வழிபாட்டில், கற்பிப்பதில், நடைமுறையில் மற்றும் நடைமுறைப்படுத்தி வெளிப்படுத்துவதற்கு உள்ள சுதந்திரத்தையும் உள்ளடக்கும்.”

புர்க்கினி மீதான தடையானது பிரான்சில் முஸ்லிம்களின் ஜனநாயக உரிமைகள் மீதாக தசாப்தகால தாக்குதல்களின் விளைபொருளாகும். ஜனாதிபதி ஜாக் சிராக்கின் பழமைவாத அரசாங்கமானது 2004ல் பொதுப் பள்ளிக்கூடங்களில் தலையில் முக்காடு போடுவதைத் தடை செய்தது, அதைத் தொடர்ந்து நிக்கோலா சார்க்கோசியின் வலதுசாரி அரசாங்கத்தினால் முகத்திரை தடை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த தடைகள் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA) உள்பட்ட போலி இடது குழுக்களால் ஆதரிக்கப்பட்டன. அவை பின்னர் லிபியாவில், சிரியாவில் யுத்தங்களை ஆதரித்தன, அதேபோல முக்காடு மற்றும் முகத்திரை தடைகள் போன்ற முஸ்லிம் விரோத எதிர்ப்புக்களுக்கான வாழ்க்கை பாணியிலான நியாயப்படுத்தல்களை ஆதரித்தன.

ஐரோப்பாவில் உள்ள பெரிய உடை தயாரிப்பாளர்களால் சந்தைப்படுத்தப்படும் முஸ்லிம் நீச்சல் உடை பற்றிய தற்போதைய குற்றச்சாட்டுக்கள் ஜனநாயக உரிமைகள் மீதான இந்த தாக்குதலின் அபத்தத்தையும் மோசடித்தனத்தையும் கோடிட்டுக்காட்டுகின்றன. அவை பிரான்சில் பிற்போக்கு FN ஆதரவு உணர்வுகளை ஊக்குவிக்கின்றன.

“பெரும்பாலும் நீச்சலில் பயன்படுத்தப்படும் உடையைப்போன்று சற்று தொளதொளப்பான வகையிலான நைலான் ஆடையை போன்ற புர்க்கினி உடுத்தல், எப்போது முதற்கொண்டு பயங்கரவாத இயக்கங்களுடனான விசுவாசத்திற்குரிய செயலாக ஆனது?” என பிரிட்டிஷ் இண்டிப்பெண்டன்ட் இல் Huda Jawad பின்வருமாறு கேட்டார்: ”மார்க்& ஸ்பென்சர் அல்லது ஹவுஸ் ஆஃப் ஃபிரேசர் ஆகியோருக்கு மிதமிஞ்சிப்போயுள்ள துணிச்சந்தையில் கிடைத்த வாய்ப்பில் இலாபத்தை அடையவும், சுரண்டும் அவர்களது முயற்சிகள் ISIS க்கு விசுவாசமானதும் மற்றும் அதற்காக பிரச்சாரம் செய்வதும் என்பதை அறிவார்களா?”

அனைத்துக்கும் மேலாக புர்க்கினி எதிர்ப்பு வெறித்தனமானது, தொழிலாள வர்க்கத்திற்கும், யுத்தக் கொள்கைகளுக்கு எதிராக எழும் எதிர்ப்பிற்கும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தாலும் பிரான்சின் PS அரசாங்கத்தாலும் திணிக்கப்படும் சமூக சிக்கன பொருளாதாரக் கொள்கைகளுக்கும் எதிராக எழும் எதிர்ப்பை அடக்கும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கம் போலீஸ் அரசு நடவடிக்கைகளை மற்றும் எதேச்சாதிகார ஆட்சி வடிவங்களை திணிப்பதற்கு, ஐரோப்பிய உளவுத்துறைகளுக்கு தெரிந்த சக்திகளாலேயே மேற்கொள்ளப்பட்ட கடந்த ஆண்டின் சார்லி ஹெப்டோ மற்றும் பாரிசில் நடந்த நவம்பர் 13 தாக்குதல்கள் மற்றும் மார்ச் 22 பிரஸ்ஸெல்ஸ் தாக்குதல்கள் போன்ற, அண்மைய பயங்கரவாத கொடூரங்கள் அனைத்தையும் பற்றிக்கொள்கின்றது. பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹோலண்ட், அடிப்படை ஜனநாயக உரிமைகளை நீக்கும், அவசரகால நிலையை திணித்தது மற்றும் பயங்கரவாதத்துடன் தொடர்பு கொண்டிருப்பதாக கூறப்படுபவர்களிடம் இருந்து பிரெஞ்சு குடியுரிமையை பறித்தெடுப்பது போன்ற, நாஜி ஒத்துழைப்புவாத விச்சி ஆட்சியோடு தொடர்புடைய கொள்கைகளை முன்னிலைப்படுத்துகின்றார்.

PS அரசாங்கத்தின் பரந்த அளவிலான வெறுப்பிற்குள்ளான தொழிலாளர் சட்டத்தில் அடங்கியிருக்கும் சமூகநிலைமைகள் மீதான கடுமையான தாக்குதல்களுக்கு எதிரான இந்த வசந்தகால எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முறியடிப்பதை நியாயப்படுத்தவும், மற்றும் தடைசெய்யவும் பிரெஞ்சு அவசரகால சட்டம் முதன்மையாக பயன்படுத்தப்படுகிறது.

வர்க்க நனவுடைய தொழிலாளர்கள் முன்னே செல்வதற்கான ஒரே பாதை, புர்க்கினி தடை போன்ற பிற்போக்கு கொள்கைகளுடன் தொழிலாள வர்க்கத்தை மத, இன பிரிவுகளினூடாக பிளவுபடுத்த முயற்சிக்கும் முதலாளித்துவ வர்க்கத்தின் முயற்சிகளை எதிர்ப்பதாகும்.