ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Kerry in Hiroshima

ஹிரோஷிமாவில் கெர்ரி

By Andre Damon
12 April 2016

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெர்ரி, போர்க்களத்தில் முதல் அணுகுண்டுவீச்சுக்கு இலக்கான ஜப்பானின் ஹிரோஷிமா நகருக்கு திங்களன்று விஜயம் செய்தார். ஆகஸ்ட் 6, 1945 இல், அமெரிக்கா அந்நகர் மீது அணுகுண்டு வீசியது, அதில் 70,000 இல் இருந்து 146,000 பேர் ஒரேயடியாக கொல்லப்பட்டார்கள். மூன்று நாட்கள் கழித்து, ஆகஸ்ட் 6 இல், நாகசாகி நகரின் மீது அமெரிக்கா இரண்டாவது அணுகுண்டை வீசியது, அதில் கூடுதலாக 39,000 இல் இருந்து 80,000 பேர் கொல்லப்பட்டார்கள்.

அந்நகருக்கு இதுவரையில் விஜயம் செய்த அதிகாரிகளிலேயே உயர்மட்ட அமெரிக்க அதிகாரியான, கெர்ரி, அக்குற்றங்களுக்கு மன்னிப்புக் கோருவதற்காக செல்லவில்லை என்பதை ஒபாமா நிர்வாகம் தெளிவுபடுத்தியது. “அமெரிக்கா மன்னிப்பு தெரிவிப்பதற்கோ … அல்லது அணுகுண்டு பிரயோகிப்பதில் இட்டுச் சென்ற தொடர்ச்சியான சம்பவங்களுக்காக குறைகூறும் பிரச்சினையை மீண்டும் தொடங்கி வைப்பதற்கோ முயற்சிக்கவில்லை,” என்று வெளியுறவுத்துறை திங்களன்று அறிவித்தது.

“இரண்டாம் உலக போருக்குப் பின்னர் தசாப்தங்களாக நாங்கள் ஏற்படுத்தியுள்ள சமாதானமான மற்றும் ஸ்திரமான சர்வதேச அமைப்புமுறை விட்டுக்கொடுக்கப்பட்டதல்ல,” என்று கூறிய கெர்ரி, ஹிரோஷிமா மீதான குண்டுவீச்சு "போரின் சிக்கலான அசாதாரண வாய்ப்புவளங்களையும் மற்றும் போரானது மக்களுக்கு, சமூகத்திற்கு, நாட்டிற்கு, உலகத்திற்கு என்ன வழங்குகிறது என்பதை நினைவூட்டுவதாகவும்" தெரிவித்தார். அவர் அக்குற்றத்திற்குப் பொறுப்பான ஓர் அரசின் பிரதிநிதி என்ற உண்மையுடன் இந்த பாசாங்குத்தனமான அறிக்கையை அவர் பொருத்திப் பார்க்க முயற்சிக்கவில்லை.

சீனாவிற்கு எதிரான வாஷிங்டனின் ஆக்ரோஷ நடவடிக்கைகள் பிரதானமாக தீவிரப்பட்டு வரும் பின்புலத்தில் கெர்ரி விஜயம் செய்திருந்தார். 1962 கியூபா ஏவுகணை நெருக்கடிக்குக்குப் பிந்தைய போர் அபாயத்தின் போதுதான் கடைசியாக அணுஆயுத பிரயோகம் மிகவும் கூர்மையாக இருந்தது.

கெர்ரி பயணத்தின் பிரதான நோக்கம், சீனாவை இராணுவரீதியில் சுற்றி வளைப்பதற்காக கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் அமெரிக்க கூட்டணியை பலப்படுத்துவதாகும். 1945 இல் குண்டுவீசப்பட்ட அந்த இடத்தில் சம்பிரதாய அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியை தொடர்ந்து ஹிரோஷிமாவில் ஜி7 வெளிநாட்டு மந்திரிமார்களின் ஒரு உச்சிமாநாடு நடந்தது.

அம்மாநாடு, "நடப்பிலுள்ள நடைமுறையை மாற்றி பதட்டங்களை அதிகரிக்கக்கூடிய வகையில் பீதியூட்டும், நிர்பந்திக்கும் அல்லது ஆத்திரமூட்டும் ஒருதலைபட்சமான நடவடிக்கைகளுக்கு" எதிராக சீனாவை (பெயரைக் குறிப்பிடவில்லை என்றாலும்) எச்சரிக்கும் ஒரு கூர்மையான அறிக்கையை வெளியிட்டது.

தென் சீனக் கடலில் அமெரிக்கா மூன்றாவது "கடல் போக்குவரத்து சுதந்திரத்திற்குத்" தயாரிப்பு செய்து வருவதாகவும், அதில் அமெரிக்கா ஒரு போர்க்கப்பலை சீனா உரிமைகோரும் 12 கடல் மைல் தூரத்திற்குள் அனுப்பும் என்றும் நியூ யோர்க் டைம்ஸ் கடந்த வாரம் அறிவித்தது. அமெரிக்க பசிபிக் கடற்படையின் தலைவர் அட்மிரல் ஹாரி ஹாரீஸ், திரைக்குப் பின்னால், சாத்தியமான ஆயுத தாக்குதல்கள் உள்ளிட்ட "இராணுவ" நடவடிக்கைகளை உள்ளடக்குவதற்காக அத்தகைய அடுத்தக்கட்ட நடவடிக்கைக்காக தூண்டிவிட்டு வருகிறார்.

கெர்ரி பேசிய அதேவேளையில், அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் அஷ்டன் கார்ட்டர் இந்தியாவிற்கான விஜயத்தில் இருந்தார், இந்நாட்டை அமெரிக்கா அதன் சீனா-விரோத கூட்டணிக்குள் கொண்டு வர முயன்று வருகிறது. அங்கிருந்து, கார்ட்டர் பிலிப்பைன்ஸிற்கு நகருவார், இந்நாடு அமெரிக்க போர் உந்துதலுக்கு அதன் கூட்டு ஒத்திழைப்புக்கு பிரதியீடாக நூறு மில்லியன் கணக்கான டாலர்களை பெற்றுள்ளது. சீனா உரிமைகோரும் சர்ச்சைக்குரிய ஸ்பார்ட்லி தீவுகளின் கடல்குன்றுகளில் இருந்து 100 க்கும் குறைவான மைல்களில் அமைந்திருக்கும் ஒரு இடத்திற்கு கார்ட்டர் விஜயம் செய்வார்.

ஆஸ்திரேலியாவுடன் சேர்ந்து ஜப்பானும் வாஷிங்டனின் சீன-விரோத கூட்டணியின் அச்சாணியை உருவாக்குகிறது. இதுவரையில் அமெரிக்கா ஜப்பானின் ஆக்ரோஷமான மீள்இராணுவமயமாக்கலை ஊக்குவித்துள்ளதுடன், 1930 களில் பசிபிக்கில் ஜப்பானின் சீனா மற்றும் ஏனைய நாடுகளது ஆக்கிரமிப்பின் போது மில்லியன் கணக்கான மக்கள் கொல்லப்படுவதற்கும் மற்றும் கொடூரமான போர் குற்றங்களுக்கும் இட்டுச் சென்றுள்ள அதே போக்குகளையும் அது ஊக்குவிக்கிறது.

2014 இல் ஒப்புக்கொள்ளப்பட்டதான, ஜப்பானின் அமைதிவாத அரசியலமைப்பின் ஒரு மறுபொருள்விளக்கம், இம்மாத ஆரம்பத்தில், நடைமுறைக்கு வந்தது. இது அமெரிக்கா உட்பட அதன் கூட்டாளிகளின் ஆதரவுடன் ஜப்பானிய இராணுவம் அன்னிய நாடுகள் மீது போர் நடத்துவதை அனுமதிக்கிறது. கடந்த வாரம் ஜப்பானின் பிரதம மந்திரி ஷின்ஜோ அபே கூறுகையில் அந்நாட்டின் அரசியலமைப்பு அணுஆயுதங்கள் வைத்திருப்பதிலிருந்து அதை தடுக்காது என்றார்.

ஆழமடைந்துவரும் சீன-விரோத அமெரிக்க-ஜப்பானிய கூட்டணியானது, ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் அதிகரித்த மீள்இராணுவமயமாக்கலின் இதயதானத்தில் உள்ளது.

அப்பிராந்தியத்தில் இராணுவ செலவினங்கள் கடந்த ஆண்டு ஆறு சதவீதம் உயர்ந்தது. சீனாவிற்கு எதிராக சேர்ந்துள்ள முக்கிய அமெரிக்க கூட்டாளிகளான பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேஷியா, முறையே 25 சதவீதம் மற்றும் 16.5 சதவீதம் அளவிற்கு இராணுவச் செலவினங்களை அதிகரித்தன.

அமெரிக்க இராணுவத்திற்குள் மற்றும் கொள்கை-தீர்மானிக்கும் வட்டாரங்களுக்குள் "இரண்டாவது பசிபிக் போர்" குறித்த பகிரங்கமான பேச்சுக்கள் உள்ளன, ஒரு வல்லுனர் குறிப்பிட்டதைப் போல, அந்த "நடவடிக்கை போக்கினூடாக—போர்க்கப்பல்கள் மற்றும் போர்விமானங்கள், மாலுமிகள் மற்றும் விமானிகளின்—துயரகரமான இழப்புகளை எதிர்பார்க்க வேண்டியிருக்கும், மேலும் அவை இரண்டு தரப்பிலும் அனேகமாக வேகமாக திரட்சி அடையக்கூடும்.”

கெர்ரி அவரது கருத்துக்களில், "அணுஆயுதங்கள் இல்லா ஓர் உலகை உருவாக்கி பேணுவதற்கான" ஜனாதிபதி பராக் ஒபாமாவின் முயற்சிகளை பாராட்டினார். யதார்த்தத்தில், ஒபாமா அவரது பதவிக்காலத்தின் ஆரம்பத்தில் அமெரிக்கா "புதிய அணுஆயுத தளவாடங்களையோ அல்லது புதிய இராணுவ நடவடிக்கைகளையோ அல்லது புதிய செயல்திறன்களையோ உருவாக்க முனையாது,” என்று சூளுரைத்திருந்தாலும், அமெரிக்க அரசாங்கமோ அதன் அணுஆயுதக் கிடங்குகளை மேம்படுத்தும் 1 ட்ரில்லியன் டாலர் திட்டத்திற்கிடையே உள்ளது.

கிடைக்கக்கூடிய சமீபத்திய 2011 புள்ளிவிபரங்களின்படி, அமெரிக்கா அதன் அணுஆயுத திட்டத்திற்காக 61.3 பில்லியன் டாலர் செலவிட்டது, இது ஏனைய எல்லா நாடுகளின் ஒட்டுமொத்த செலவை விட அதிகமாகும். இந்த தொகை சீனாவை விட அண்மித்து 10 மடங்கு அதிகம், வட கொரியாவை விட ஏறத்தாழ 100 மடங்கு அதிகம்.

2009 இல், “எங்களின் தேசிய பாதுகாப்பு மூலோபாயத்தில் அணுஆயுதங்கள் வகிக்கும் பாத்திரத்தைக் குறைப்போம்" என்று கூறிக் கொண்டே, வெள்ளை மாளிகை அதன் 2010 மூலோபாய ஆவணத்தில், தாக்கப்படாமல் இருப்பதற்காக அமெரிக்க இராணுவத்திற்கு அணுஆயுதங்களைப் பிரயோகிக்கும் உரிமை இருக்கிறது, அணுஆயுதங்கள் இல்லாத நாடுகளுக்கு எதிராகவும் இது உள்ளடங்கும் என்று வெளிப்படையாக அறிவித்தது.

திரைக்குப் பின்னால், அமெரிக்க இராணுவம், அரசியல்வாதிகள் மற்றும் சிந்தனை குழாம்கள் ஒரு முன்கூட்டிய அணுஆயுத தாக்குதலுக்கான திட்டங்களை வரைந்து வருகின்றனர். “ஆர்மெக்கெடோன் மீள்யோசனை" என்று தலைப்பிட்ட ஒரு முன்னணி கொள்கை ஆய்வு சிந்தனைக் குழாம் கடந்த மாதம் பிரசுரித்த அறிக்கை ஒன்று, வட கொரியா மற்றும் ரஷ்யாவிற்கு எதிராக அமெரிக்கா முதலில் அணுஆயுத தாக்குதல்கள் நடத்தும் சூழல்களை விவரிக்கிறது.

இந்த உள்ளடக்கத்தில், கெர்ரியினது விஜயம் ஆசியாவின் மற்றும் ஒட்டுமொத்த உலகின் தொழிலாள வர்க்கத்திற்கு ஓர் எச்சரிக்கையாகும்.

ஜப்பானிய அரசாங்கம் ஆக்கபூர்வமாக சரணடைவதற்கான நிபந்தனைகள் கோரிய நிலைமைகளின் கீழ்த்தான், ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அணுஆயுத குண்டுகள் பயன்படுத்தப்பட்டது. இது, உத்தியோகபூர்வ அமெரிக்க வனப்புரை கூறுவதைப் போல, போரை முடிவுக்குக் கொண்டு வருவதை விரைவுபடுத்தும் ஒரு நடவடிக்கை கிடையாது. மாறாக நூறாயிரக் கணக்கானவர்களை அணுஆயுதத்திற்குச் சாம்பலாக்கியமை, போருக்குப் பிந்தைய ஒழுங்கமைப்பில் அதன் மேலாதிக்கத்தைப் பாதுகாப்பதிலிருந்து அமெரிக்காவை எதுவும் நிறுத்தாது என்பதை, குறிப்பாக சோவியத் ஒன்றியத்திற்குத் தெரிவிப்பதை நோக்கமாக கொண்டிருந்தது.

ஐரோப்பா மற்றும் பசிபிக் கிட்டத்தட்ட முற்றிலுமாக அப்போரால் அழிக்கப்பட்டு அமெரிக்க தொழில்துறை உலகெங்கிலும் மேலாதிக்கம் கொண்டதுடன், அணுஆயுதத்தைப் பயன்படுத்தியமை ஒரு கணக்கிட்ட தந்திரோபாய முடிவாக இருந்தது. 1999 இல் அமெரிக்க வரலாற்றாளர் கப்ரியல் ஜாக்சன் குறிப்பிட்டதைப் போல, “ஆகஸ்ட் 1945 இன் குறிப்பிட்ட சூழ்நிலைகளில், நாஜி சர்வாதிகாரி அணுகுண்டைப் பிரயோகிக்கலாம் என்பதைப் போல, உளவியல் ரீதியாக நன்றாக இருக்கும் மற்றும் ஜனநாயகரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமை நிர்வாகியும் பயன்படுத்தக்கூடும் என்றளவிற்கு இருந்ததை எடுத்துக்காட்டியது.”

இன்றோ, உள்நாட்டு சிக்கல்களால் சிதைந்து, அதன் பொருளாதார பலத்தின் நீடித்த வீழ்ச்சியை முகங்கொடுத்துள்ள அமெரிக்கா, உலகளாவிய முதலாளித்துவ படிநிலை ஒழுங்குமுறையில் அதன் ஒப்புயர்வற்ற இடத்தைப் பாதுகாக்க, அதன் பிரமாண்டமான இராணுவ மற்றும் அணுஆயுதத் தளவாடங்களைப் பிரயோகிப்பதற்கான அச்சுறுத்தல் என்ற ஒரேயொரு துருப்புச்சீட்டையே கொண்டுள்ளது. இது அபாயத்தை இன்னும் அதிக கூர்மையாக்குகிறது.

மனிதயினத்தின் இருப்பையே அச்சுறுத்துகின்ற இத்தகைய அபிவிருத்திகளில் இருந்து, உலகெங்கிலுமான தொழிலாளர்களும் இளைஞர்களும் எச்சரிக்கை பெற வேண்டும். போருக்கு எதிரான போராட்டம் அதன் மூலாதாரமான முதலாளித்துவ அமைப்புமுறையை முடிவுக்குக் கொண்டு வருவதைச் சார்ந்துள்ளது.