ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The Istanbul airport bombing: Blowback from the war in Syria

இஸ்தான்புல் விமான நிலைய குண்டு வெடிப்பு: சிரிய யுத்தத்திலிருந்து வரும் பதிலடி

Bill Van Auken
1 July 2016

ஜூன் 28 வியாழன் அன்று இஸ்தான்புல்லின் அட்டாடுர்க் சர்வதேச விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில், கடுமையாக காயமடைந்த மூன்று வயது பாலஸ்தீனப் பாலகனின் இறப்போடு இறந்தோர் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்தது. தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுள் அந்தக் குழந்தையின் தாயாரும் ஒருவர், அது இதர 239 பேரையும் அது காயம் அடையச்செய்தது.

உலகின் சுறுசுப்பான விமான நிலையங்களுள் ஒன்றில், மூன்று தற்கொலைத் தாக்குதல்கள் நடைபெற்றது மீதான உலக ரீதியான திகில், துருக்கி மக்கள் மத்தியில் வளர்ந்து வரும் கோபத்துடன் கலந்து கொண்டது, மக்கள் பயங்கரவாத தாக்குதலின் மேலாட்டமான காரணகர்த்தாகவாக திகழும், சிரியா ஈராக் இஸ்லாமிய அரசு (ஐஎஸ்ஐஎஸ்) மீது மட்டுமல்லாமல், இந்தக் குழுவின் முதன்மை அரவணைப்பாளரும் வசதிசெய்து கொடுப்பவருமான ஜனாதிபதி Recep Tayyip Erdoğan. உடைய அரசாங்கத்தின் மீதும் குற்றம் சாட்டுகின்றனர்.

தி நியூயோர்க் டைம்ஸ் வியாழன் அன்று “ஐஎஸ்ஐஎஸ்க்கான கட்டற்ற நடமாட்டத்திற்கு முடிவு கட்டி, துருக்கி அதன் சீற்றத்திலுருந்து கற்கும்’ என தலைப்பிடப்பட்டு கட்டுரை வெளியிடப்பட்டது, அதுவே துருக்கி அரசாங்கத்தால் ஆற்றப்படும் பங்கை அது ஒத்துக்கொள்வதில் பளிச்சென்று அப்பட்டமாய் காட்டியது.

“சிரிய யுத்தத்தின் குழப்பத்தின் ஊடாக தோன்றிய இஸ்லாமிய அரசின் தொடக்கம் முதல், -அந்த குழுவின் வரலாறு சிக்கலாக இருந்தாலும்- துருக்கி ஒரு முக்கிய பாத்திரத்தை ஆற்றியது, துருக்கி இஸ்லாமிய அரசுக்கான பின்புலத்தளமாய், இடமாறும் தளமாகவும் விற்பனை அங்காடியாகவும் சேவை செய்தது,…… துருக்கியுடனான இந்தக் குழுவின் தேனிலவு, சிரியாவின் பாஷார் அல்-அசாத் அரசாங்கத்துடன் சண்டையிடும் குழுக்களுக்கு நாட்டின் உதவியுடன் தொடங்கியது, அடிக்கடி மேற்கத்திய புலனாய்வு முகாமைகளின் ஆசீர்வாதத்தோடு நிகழ்ந்தது…. ஏனெனில் இக்குழுக்களின் வெளிநாட்டு போராளிகள் இஸ்தான்புல்லின் அட்டாடுர்க் விமான நிலையம் வழியாக கடந்து செல்கிறார்கள், இந்த இடமே ஐஎஸ்ஐஎஸ் உடன் சேருதற்கு விருப்பம் கொள்வதுடன் இணைப் பொருளுடையதாக ஆகிவிட்டது.”

கட்டுரை உறுதிப்படுத்தும் இந்த வெளிநாட்டுப் போராளி என்றழைக்கப்படுபவர்கள், அதேபோல துருக்கி வழியாக திரும்பி ஐரோப்பாவுக்குள் திரும்புதல் என, துருக்கியிலும் சிரியாவிலும் சுதந்திரமாக நடமாடுகிறார்கள், அங்கு பயங்கரவாத கொடுமைகளுக்கு இவர்கள் பொறுப்பாளிகளாக ஆகியுள்ளனர்.

வேறுவார்த்தைகளில் கூறுவதானால், வாஷிங்டனின் நேட்டோ கூட்டாளியும் முக்கிய பிராந்திய பங்காளரும் இந்த பயங்கரவாத அமைப்பு தாக்குப் பிடித்து நிற்பதற்கு முதன்மை பொறுப்புடையதாக இருக்கின்றது, அது மத்திய கிழக்கில் அமெரிக்காவின் புதுப்பிக்கப்பட்ட தாக்குதலுக்கு தோற்றமளிக்கும் இலக்காக இருக்கிறது.

“மேற்கத்திய உளவு முகமைகளின் ஆசீர் வாதம்” என்ற குறிப்புடன் டைம்ஸ், சிரியாவில் அசாத்தை அகற்றி மேலும் வளைந்து கொடுக்கும் மேலைநாட்டின் பொம்மையை ஆட்சியில் அமர்த்தும் - ஆட்சி மாற்ற குறி இலக்கை மேலும் பகிர்ந்து கொள்ளும் வகையில் நூற்றுக்கணக்கான ஆயுத தளவாடங்களை மற்றும் வெளிநாட்டு போராளிகள் இரண்டையும் இரத்த வெள்ளத்திற்கு வழிப்படுத்துவதில் எர்கோடன் அரசாங்கத்துடன் அமெரிக்க மத்திய உளவு நிறுவனம் நேரடியாக ஒத்துழைத்தது என்ற யதார்த்தத்தை சிக்கலுடன் மறைமுகமாக குறிப்பிட்டது.

அமெரிக்க உளவு முகமைகளால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளின் பிரதான பயனாளர்கள் ஐஎஸ்ஐஎஸ் மற்றும் அல்கொய்தாவின் சிரிய இணைவான, அல்நுஸ்ரா முன்னணி ஆகும். இதில் பிரதான பாதிப்பாளர்கள், ஈராக் மற்றும் சிரியாவில் நூறாயிரக் கணக்கில் கொல்லப்பட்டவர்களும், மில்லியன் கணக்கானோர் அகதிகளாக மாறியும், பாரிஸிலிருந்து பிரஸ்ஸெல்ஸ்வரை இப்பொழுது இஸ்தான்புல் வரையிலான பயங்கரவாத தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களும் மோசமான வகையில் காயமடைந்தவர்களும் ஆவர்.

சிரியா மற்றும் ஈராக் இரண்டிலும் ஐஎஸ்ஐஎஸ்-ன் முன்னேற்றத்தை தடுப்பதற்கான முயற்சியில், குர்திஷ் பிரிவினைவாத படைகளை நிழல் துருப்புக்களாக பயன்படுத்தும் வாஷிங்டனின் முயற்சி மீதாக அமெரிக்கா மற்றும் துருக்கிக்கு இடையில் முறுகல் ஏற்பட்டு வருகிறது, துருக்கியானது அதன் சொந்த துருக்கி சிறுபான்மையினருக்கு எதிராக உள்நாட்டு யுத்தத்தை நடத்தி வருகிறது மற்றும் அதன் எல்லையில் குர்து பகுதிகள் உருவாக்கம் பற்றி அச்சம் கொண்டு வருகிறது. சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் நிலைகள் மீது மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல்களை தொடுக்கும் அதேவேளை, துருக்கியானது ஈராக்கிலும் சிரியாவிலும் குர்துகளின் நிலைகளுக்கு எதிராக அதன் அபரிமிதமான சுடுதிறனைத் திருப்பி வருகிறது.

டைம்ஸ் கட்டுரை அட்டாடுர்க் விமான நிலையத்தில் நடந்த தாக்குதல் சிரியாவில் அதன் சொந்த படைகளின் மீதான மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதலுக்கும் அதேபோல முந்தைய பயங்கரவாத தாக்குதல்களில் தொடர்புடையதாக கருதப்படும் அதன் உறுப்பினர்களின் வழக்கு விசாரணையின் விதி தொடர்பானதற்கும் பதில் கொடுப்பதாக இருக்கலாம் என்று கருத்துரைக்கிறது.

ஆயினும், துருக்கிக்குள் ஒப்பீட்டளவில் பாதிப்பிலிருந்து விலக்குடன் இன்னும் செயல்படும் இயக்கத்தின் அளவானது, குண்டு வெடிப்புக்குப் பின்னரான உடனடி நடவடிக்கையில், துருக்கியின் பாதுகாப்பு படைகள் இஸ்தான்புல்லில் 16 தனித்தனி முகவரிகளில் அதேபோல ஏஜியன் கடற்கரையோர நகரமான இஜ்மீரில் வரிசையாய் திடீர் சோதனைகளை நடத்தியபொழுது தெளிவானது. ஐஎஸ்ஐஎஸ்- செயல்பாட்டாளர்களின் மறைவிடங்கள் துருக்கிய அரசுக்கு ஒன்றும் இரகசியமானதல்ல.

ஆயினும், தாக்குதலை மேற்கொண்டவர்கள் பற்றி எழுந்து வரும் விவரங்கள், இன்னொரு குறிக்கோளின் சாத்தியத்தையும் சுட்டிக்காட்டுகிறது. மூன்று தற்கொலை குண்டு வெடிப்பாளர்கள் ரஷ்ய குடியரசான டகிஸ்தான் மற்றும் முன்னாள் சோவியத் குடியரசுகளான உஸ்பெக்கிஸ்தான் மற்றும் கிரிகிஸ்தான் ஆகியவற்றிலிருந்து வந்திருக்கின்றனர் என்று துருக்கிய அதிகாரிகளால் இப்பொழுது கூறப்படுகிறது.

தாக்குதல் நடத்தியவர், செச்சென் போரில் இராணுவத்தில் நீண்டகாலம் பணியாற்றிய இஸ்லாமியர் அகமது சத்தாயேய், ஆஸ்திரியாவில் அடைக்கலம் கொடுக்கப்பட்டு, ஜோர்ஜியாவில் அகதியாக இடம் கிடைக்கப்பெற்றவர், அங்கு அமெரிக்க ஆதரவு பெற்ற அரசாங்கத்தின் பாதுகாப்பு படையில் உறவை ஏற்படுத்திக் கொண்டவர். என்று அது மேலும் குறிப்பிட்டது. ஜோர்ஜியாவின் பாங்கிசி ஜோர்ஜ் பிராந்தியத்தில் இருந்து ரஷ்ய-எதிர்ப்பு செச்சென் போராளிகளை ஆள் எடுத்து பயிற்றுவதில் செயலூக்கத்துடன் செயலாற்றி இருந்திருக்கிறர் பின்னர் அவர்களை சிரியாவில் சண்டையிட அனுப்பியுள்ளார் என்று அறிவிக்கப்படுகிறது.

அதே பிராந்தியத்திலிருந்து வரும் கொடிய ரஷ்ய-எதிர்ப்பு போராளிகள் சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் அணிகள் மற்றும் தலைமைப் பொறுப்பு இரண்டிலும் அதிக அளவில் முதன்மைப் பாத்திரம் வகிக்கின்றனர். முன்னாள் ஜோர்ஜிய படையின் சார்ஜெண்டாக இருந்தவரான தர்கான் பத்திராஷ்விலி (Tarkhan Batirashvili) அமெரிக்க சிறப்புப் படை பயிற்றுநர்களின் ஒரு “நட்சத்திர மாணவர்” என்று விவரிக்கப்படுபவர், ரஷ்யாவிற்கெதிரான 2008ம் ஆண்டு யுத்தத்தில் போரிட்டவர், பின்னர் ஐஎஸ்ஐஎஸ்-ன் உயர் கொமாண்டராக ஆனார்.

இஸ்தான்புல் குண்டு வெடிப்பை திட்டமிட்ட மற்றும் நடத்திய பின்புலத்தை எடுத்துக் கொண்டால், கடந்த நவம்பரில் சிரிய துருக்கி எல்லையில் துருக்கி ஆதரவு பெற்ற மற்றும் அல்கொய்தா தொடர்புள்ள படைகள் மீதாக ரஷ்ய சுக்கோய் ரக ஜெட் 24 ரக விமானம் குண்டுகளைப் பொழிந்த போது அதை சுட்டு வீழ்த்தியதற்காக ஒரு மன்னிப்பை எர்டோகன் அரசாங்கம் கேட்டுக்கொண்டதை அடுத்து இந்த தாக்குதல் நிறைவேற்றப்பட்டது என்பது வெறுமனே நிகழ் பொருத்தம் என அரிதாகத்தான் எடுத்துக்கொள்ள முடியும். இச்சம்பவமானது, சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான யுத்தத்தின், ஒரு அணு ஆயுத யுத்தம் வெடிப்பதற்கான வாய்ப்பைக் கொண்ட, நேட்டோ ரஷ்யாவுக்கு இடையிலான ஒரு ஆயுத மோதலாக திரும்புகின்றதன் பேயுருவை எழுப்பி உள்ளது.

மன்னிப்புக் கோரியதானது, துருக்கியின் சுற்றுலா, விவசாயம், கட்டுமானம் மற்றும் வர்த்தக துறைகளைப் பாதிக்கும் பொருளாதாரத் தடைகளை அகற்றுவதை நோக்கம் கொண்ட ரஷ்யாவுடனான சாந்தப்படுத்தும் அங்காராவின் முயற்சியாக இருக்கிறது.

சிரியாவில் சண்டையிடும் ரஷ்ய-எதிர்ப்பு படையினர், உக்ரேனில் அமெரிக்க-ஆதரவு ஆட்சிக்கு ஆதரவாக களம் இறக்கப்பட்டதைப் போல, மாஸ்கோவுக்கு எதிரான திருப்பம் முந்தைய புரிதல்கள் மற்றும் அர்ப்பணிப்புக்களின் காட்டிக்கொடுப்பாகவும், தங்களது முன்னாள் பரப்பாளர்களை வன்மையாய் தண்டிக்கும் பதிலாகவும் எடுத்துக் கொள்ளப்படலாம். இது அல்கொய்தாவின் பரிணாம வளர்ச்சியில் பார்க்கப்படும் பிரபல பாணியாக இருக்கிறது, அது சிஐஏ ஆல் ஊட்டி வளர்க்கப்பட்டது, சோவியத் துருப்புக்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து விலகியதும் கைவிடப்பட்டுவிட்டது. இறுதிவிளைவு செப்டம்பர் 11, 2001ல் 3000 அமெரிக்கர்களின் மரணங்களாக இருந்தது.

அமெரிக்க ஏகாதிபத்தியமானது சிரியவில் பல தலைகளைக் கொண்ட பிரான்கென்ஸ்டைன் பூத உருவை உருவாக்கி இருக்கிறது. ரஷ்யாவிலிருந்தும் முன்னள் சோவியத் குடியரசுகளிலிருந்தும் வந்து சண்டையிடுபவர்கள், தோராயமாக 10,000 பேர் இருப்பர், பல்லாயிரம் உய்குர் இனக்குழு இஸ்லாமிய போராளிகள் சீனாவின் க்சியாங் பிராந்தியத்திலிருந்து துருக்கி வழியாக கொண்டு வரப்பட்டுள்ளனர். அவர்களின் இருப்பானது, வடமேற்கு இதிப் மாகாணத்தில் அல்கொய்தாவின் சிரிய கிளையான அல் நுஸ்ராவால் ஏற்படுத்தப்பட்ட முன்னேற்றத்திற்கு நற்பலனைக் கொடுத்தது.

ஆட்சி மாற்றத்திற்கான மேற்கத்திய ஆதரவு யுத்தத்தில் வெடி மருந்தாகப் பயன்படுத்துவதற்கு மட்டுமல்லாமல், ரஷ்யா மற்றும் சீனா இரண்டிற்கும் எதிரான இன்னும் ஆபத்தான மற்றும் உலக பேரழிவிற்கு வாய்ப்பு வழங்கும் யுத்தங்களுக்கான தயாரிப்பில் இரத்தம் சிந்தவிருக்கும் மோதலாகவும் இருக்கும்.

இஸ்தான்புல் விமான நிலையத்தில் நடந்த படுகொலையானது, கடந்த நவம்பரின் பாரிஸ் தாக்குதலைப் போல மற்றும் மார்ச்சில் பிரஸ்ஸெல்ஸில் குண்டு வெடிப்புக்கள் போல இந்த ஏகாதிபத்திய சதிவேலைகளால் இக்கோள் முழுவதிலும் உள்ள உழைக்கும் மக்களுக்கு முன்வைக்கப்பட்டுள்ள ஒரு எச்சரிக்கையாக சேவை செய்கிறது.