ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The end of the Sanders campaign: The political lessons

சாண்டர்ஸ் பிரச்சாரத்தின் முடிவு: அரசியல் படிப்பினைகள்

Tom Hall
28 July 2016

ஜனநாயகக் கட்சி தேசிய மாநாட்டில் ஹிலாரி கிளிண்டன் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அவர் வழங்கிய ஆதரவுடன் பேர்ணி சாண்டர்ஸ் இன் பிரச்சாரம் ஒரு அவமானகரமான முடிவுக்கு வந்துள்ளது. அவரது படுமோசமான அரசியல் பாத்திரத்தை அம்பலப்படுத்துவதற்கு பிலடெல்பியாவில் சாண்டர்ஸினது கடந்த வார அறிக்கைகள் மற்றும் நடவடிக்கைகளையும் விட வேறெதைச் சேர்க்க வேண்டும்?

திங்களன்று மாநாட்டு திடலுக்கு வெளியே ஒரு சம்பவத்தில் அவருக்கு எதிராக வெறுப்புடன் கூச்சலிட்ட அவரின் சொந்த பிரதிநிதிகளையே சாண்டர்ஸ் கண்டித்தார், “இதுதான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் நிஜமான உலகம்,” என்று கூறி, அவரின் ஏற்பிசைவை நியாயப்படுத்தினார். இதன் மூலமாக அவர், ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சிகளால் முன்னிறுத்தப்பட்ட இரண்டு வேட்பாளர்களான ஹிலாரி கிளிண்டன் மற்றும் டோனால்ட் ட்ரம்ப் க்கு வேறெந்த எதிர்ப்பும் இல்லாத ஒரு "நிஜமான உலகை" அர்த்தப்படுத்தினார். “கோடீஸ்வர வர்க்கத்திற்கு" எதிரான சாண்டர்ஸின் "அரசியல் புரட்சி", நடப்பில் இருப்பதையும், இருகட்சி அமைப்பு முறையையும் பாதுகாக்க திரும்பி உள்ளது.

அம்மாநாட்டின் பின் இரவில் அவர் வழங்கிய உரையில், வோல் ஸ்ட்ரீட் உடன் நெருக்கமாக தொடர்பு கொண்டிருப்பதற்காக அவர் யாரை விமர்சித்திருந்தாரோ அதே வேட்பாளரை உழைக்கும் மக்களின் ஒரு முற்போக்கான கூட்டாளி என்று சித்தரித்து, ஜனாதிபதி வேட்பாளருக்கான போட்டியில் அவரது முன்னாள் எதிர்ப்பாளருக்கு சாண்டர்ஸ் புகழாரங்களைக் குவித்தார். அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெருமளவிற்கு ஏழைகளிடம் இருந்து பணக்காரர்களுக்கு செல்வவளத்தை கைமாற்றுவதை மேற்பார்வை செய்துள்ள ஒபாமா நிர்வாகத்தையும் அவர் புகழ்ந்தார்.

வேட்பாளர் நியமன நடைமுறையின் போது செவ்வாயன்று இரவு, கிளிண்டனை வேட்பாளராக அறிவிப்பதற்கு ஆதரவாக பெயரிட்டு கேட்கும் வாக்கெடுப்பை தவிர்க்குமாறு கூறி பாராட்டுரைகளை வழங்க அவர் எழுந்து வந்தபோது, சாண்டர்ஸ் அவரின் அரசியல் வேஷத்தைக் கலைக்கத் தொடங்கினார்.

வெற்று கோஷங்கள் மற்றும் வஞ்சக வார்த்தைஜாலங்கள் தவிர சாண்டர்ஸ் இன் பிரச்சாரத்தில் வேறெதுவும் இல்லை. ஆனால் இந்த விளைவு முன்கணிக்க முடியாததோ அல்லது முன் கணிக்கப்படாததோ இல்லை. இது, கடந்த ஆண்டு அவர் பிரச்சாரத்தை அறிவித்த பின்னரில் இருந்து உலக சோசலிச வலைத் தளம் வழங்கிய பகுப்பாய்வுகளை முழுமையாக நிரூபணம் செய்கிறது. ஒரு சோசலிசவாதியாக பொய்யாக கூறிவரும் ஒரு முதலாளித்துவ அரசியல்வாதியான சாண்டர்ஸ், உறுதியான எதிர்ப்பை ஜனநாயகக் கட்சி மற்றும் அதன் போர் மற்றும் சமூக பிற்போக்குத்தன கொள்கைக்குப் பின்னால் அணிதிரட்ட முனைந்து வந்ததை நாம் ஆரம்பத்தில் இருந்தே எச்சரித்தோம்.

கடந்த ஆண்டில் உலக சோசலிச வலைத் தளம் எழுதிய மிக முக்கிய அறிக்கைகளில் ஒரு சிலவற்றை மட்டும் இங்கே மேற்கோளிடுகிறோம்:

சாண்டர்ஸ் பிரச்சாரத்தின் அரசியல் பாத்திரம் மற்றும் முக்கியத்துவம் குறித்த உலக சோசலிச வலைத் தளத்தின் விளக்கம் வர்க்க ஆய்வு மற்றும் வரலாற்று அனுபவத்தின் அடித்தளத்தில் இருந்தது. 2016 தேர்தல்களில் சாண்டர்ஸ் இன் நடவடிக்கைகள் முற்றிலுமாக அவரின் முந்தைய அரசியல் முன்வரலாற்றின் வரிசையில் இருந்தன. அவர் ஜனநாயகக் கட்சியினது பிரதான போக்கிலிருந்து சிறிதே வேறுபட்ட ஒரு முதலாளித்துவ-சார்பு வேலைத்திட்டத்திற்கு மூடிமறைப்பாக, அவரது நீண்டகால "சோசலிச" முத்திரையையும் பெயரளவிற்கான சுதந்திரத்தையும் பயன்படுத்தினார். 1960 களில் அவர் ஒரு தீவிர மாணவராக இருந்த நாட்களில் இருந்து 1980 களில் வெர்மாண்ட் பேர்லிங்டனின் வணிகங்களுக்கு-நேசமான நகர முதல்வராக (மேயர்) வந்து, ஜனநாயகக் கட்சியின் ஒரு நீண்டகால காங்கிரஸ் கூட்டாளியாக வளர்ந்தது வரையில் அவரின் பரிணாமம், அரசியல் ஸ்தாபகத்துடன் ஒருங்கிணைந்துள்ள நடுத்தர வர்க்க போராட்டக்காரர்களின் ஓர் ஒட்டுமொத்த சமூக அடுக்கின் பரந்த வலது நோக்கிய நகர்வுடன் பிணைந்துள்ளது.

19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வில்லியம் ஜென்னிங்ஸ் ப்ரேயன் இன் (William Jennings Bryan) "வெகுஜனவாத" பிரச்சாரத்தில் இருந்து, 1980 கள் மற்றும் 1990 களில் ஜெஸ்ஸி ஜாக்சன் (Jesse Jackson) மற்றும் டென்னிஸ் குசினிக் இன் (Dennis Kucinich) பிரச்சாரங்கள் வரையில் ஜனநாயகக் கட்சியினர் தங்களுக்தாங்களே அரசியல் நம்பகத்தன்மை வழங்கி கொள்ளவும் மற்றும் எதிர்ப்பைக் கட்டுப்படுத்தவும் "வெளியிலிருந்து" பிரச்சாரங்களை பயன்படுத்தி உள்ளனர். சாண்டர்ஸ் அவரே அவரின் பிரச்சாரத்தின் தொடக்கத்தில், ஜனநாயகக் கட்சி வேட்பாளராக இறுதியில் தேர்ந்தெடுக்கப்படுபவரை ஆதரிக்க சூளுரைத்திருந்தார் என்ற உண்மையைக் குறித்து ஒன்றும் கூறத்தேவையில்லை.

செயலூக்கத்துடன் அவருக்காக பிரச்சாரம் செய்ததன் மூலமாகவோ அல்லது அவரின் அரசியலுடன் ஐக்கியமாகி இருந்த அதேவேளையில் தந்திரோபாய அடித்தளத்தில் அவரை விமர்சித்ததன் மூலமாகவோ பிரமைகளை ஊக்குவிக்க முயன்ற போலி-இடது அரசியல் உதவியாளர்களது ஒட்டுமொத்த களமும் ஆரம்பத்தில் இருந்தே சாண்டர்ஸ் பிரச்சாரத்தை ஆதரித்திருந்தது. சாண்டர்ஸைப் போலவே, ஜனநாயகக் கட்சி மற்றும் தொழிற்சங்கங்களை சுற்றி செயல்பட்ட அந்த குழுக்களும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான இயக்கத்தின் எழுச்சியை எதிர்த்து, அவர்களது சகல முயற்சிகளையும் அதை தடுப்பதற்காக திருப்பி விட்டிருந்தன.

சோசலிஸ்ட் அல்டர்னேடிவ், சோலிடாரிட்டி (Solidarity), சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பு (International Socialist Organization), இளம் ஜனநாயக சோசலிசவாதிகள் (Young Democratic Socialists) மற்றும் பசுமை கட்சி போன்ற குழுக்கள் பிலடெல்பியாவில் ஜனநாயகக் கட்சி மாநாடு நடக்கும் அதே நேரத்தில் சோசலிச ஒருங்கிணைவு மாநாடு என்பதில் ஒன்று கூடுகின்றன. நேற்று அவர்கள் எழுதியதற்கு எந்த அரசியல் கணக்கும் வழங்காமல், அவர்கள் தொழிலாள வர்க்கத்திற்கு அடுத்த அரசியல் பொறியைக் கட்டமைக்க ஜில் ஸ்ரைய்ன் இன் பசுமை கட்சி பிரச்சாரத்திற்குள் நகர்ந்து வருகிறார்கள், இவர், தனக்கு கிடைத்த கிடைப்பதற்கரிய பசுமை கட்சி வேட்பாளர் பதவியை, ஒரு மாதத்திற்கு முன்னர் சாண்டர்ஸ் க்கு வழங்க முன்வந்திருந்தார்.

இந்த அனுபவத்திலிருந்து முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். சாண்டர்ஸ் பிரச்சாரத்திற்கான ஆதரவில் பிரதிபலிப்பைக் கண்ட ஆழ்ந்த சமூக பதட்டங்கள் மற்றும் கோபம் எதுவுமே இல்லாமல் போய்விடாது. நவம்பரில் யார் தேர்தல்களில் வெல்கிறார்கள் என்பது விடயமல்ல, வரவிருக்கும் காலகட்டம் வெடிப்பார்ந்த வர்க்க மோதல்களைக் கொண்டு வரும்.

வலதுசாரி ஆகட்டும் அல்லது பெயரளவிலான இடது ஆகட்டும் முதலாளித்துவ அரசியலின் சகல வடிவங்களில் இருந்தும் விட்டுகொடுப்பின்றி உடைத்துக் கொள்வது அவசியம் என்பதே மத்திய அரசியல் படிப்பினையாகும். சர்வதேசியவாதம், ஏகாதிபத்திய-எதிர்ப்பு மற்றும் சமூக சமத்துவக் கோட்பாடுகளின் அடிப்படையில் ஒரு உண்மையான சோசலிச இயக்கத்தைக் கட்டமைப்பதற்கு இதுவே சரியான நேரமாகும். தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனம் அதி முக்கிய  அத்தியாவசியமாகும்.

இந்த முன்னோக்கின் மீதுதான் சோசலிச சமத்துவக் கட்சியின் ஜெர்ரி வையிட் மற்றும் நைல்ஸ் நிமுத் இன் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரம் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சாரத்தை ஆதரிக்குமாறும், சோசலிச சமத்துவக் கட்சியில் இணைந்து உண்மையான சோசலிசத்திற்காக போராட தீர்மானிக்குமாறும் சாண்டர்ஸ் இன் காட்டிக்கொடுப்பால் ஆத்திரமடைந்துள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் அனைவரையும் நாம் வலியுறுத்துகிறோம்.