ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

French government, trade unions rework reactionary labor reform

பிரெஞ்சு அரசாங்கமும், தொழிற்சங்கங்களும் பிற்போக்குத்தனமான தொழிலாளர் சீர்திருத்தத்தில் மறுவேலை செய்கின்றன

By Anthony Torres
17 March 2016

தொழிலாளர் சட்ட சீர்திருத்தத்திற்கு இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களிடையே அதிகரித்து வரும் எதிர்ப்பை முகங்கொடுத்ததும், பிரதம மந்திரி மானுவெல் வால்ஸ் தொழிற்சங்கம் மற்றும் வணிக கூட்டமைப்புகளது ஒப்புதலை மற்றும் ஆதரவை வென்றெடுக்கும் நம்பிக்கையில், தொழிலாளர் நலத்துறை மந்திரி மரியம் எல் கொம்ரி (Myriam El Khomri) இன் சட்டத்தினது ஒரு மறுவரைவை அவற்றிடம் சமர்ப்பித்தார்.

வணிக மற்றும் தொழிற்சங்க குழுக்களுக்கு இடையே "சமூக பேச்சுவார்த்தைகளை" ஊக்குவிக்க விரும்புவதாக வால்ஸ் வலியுறுத்தினார். “தொழிலாளர்களது உரிமைகள் தொடர்பான தனிநபர் கணக்குகள், மற்றும் முக்கிய கொள்கைகள் மீதான பிரச்சினைகளில் நிறைய மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. அதில் பிரச்சினைகள் இருந்ததை நான் ஒப்புக் கொள்கிறேன்,” என்றார். “கடந்த சில நாட்களில் நாங்கள் செய்திருப்பதை முன்வைக்க, எங்களுக்கு சரியான நேரம், சரியான தருணம் கிடைக்காத நிலைமை இருந்தது. அதை விசாரிக்கவும் மற்றும் செவிமடுக்கவும் எங்களுக்குக் கூடுதலாக பதினைந்து நாட்கள் அவசியப்பட்டது,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

ஓர் ஒழுங்குபடுத்திய சட்டத்தை வால்ஸ் முன்வைப்பதானது, ஒட்டுமொத்தமாக அந்த பிற்போக்குத்தனமான சீர்திருத்தத்தை எதிர்த்த தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை அமைதிப்படுத்துவதற்கான ஓர் எரிச்சலூட்டும் தந்திரமாகும். வால்ஸ் ஆல் முன்வைக்கப்பட்ட மேலோட்டமான திருத்தங்கள், அந்த சட்டமசோதாவின் அடிப்படையில் எதையும் மாற்றவில்லை. தொழிலாளர் சட்டத்தை மீறும் தனிப்பட்ட நிறுவனங்களுடன் தொழிற்சங்கங்கள் அதன் மட்டத்தில் ஒப்பந்தங்களைப் பேரம்பேச அனுமதிக்கும் முக்கிய கூறுபாடு, பேச்சுவார்த்தைகளின் எந்தவொரு நிலையிலும் ஒருபோதும் கேள்விக்கு உட்படுத்தப்படவில்லை.

முறையற்ற பாரிய வேலைநீக்கங்களுக்கான அபராதங்கள், இதை முந்தைய சட்டமசோதா முறையற்ற வேலைநீக்கங்களின் செலவுகளை முன்கூட்டியே கணக்கிட்டு செய்ய நிறுவனங்களை அனுமதித்திருந்த நிலையில், இப்போது ஒரு ஏதேச்சதிகார அரசாங்க ஆணையால் அது முடிவு செய்யப்படுகிறது. அவை தொழிலாளர்களது சம்பளத்தைப் பொறுத்து, மூன்றில் இருந்து பதினைந்து மாத சம்பளமாக இருக்கும்.

பாரிய வேலைநீக்கங்களுக்குச் சௌகரியம் செய்து கொடுக்கும் புதிய தகுதி வகைகளை மாற்ற அரசாங்கம் மறுத்தது. ஒரு பன்னாட்டு பெருநிறுவனம் அதன் பிரெஞ்சு செயல்பாடுகளில் நஷ்டக்கணக்குக் காட்டுவதற்குக் கணக்குவழக்கு தந்திரங்களை பயன்படுத்தவில்லை என்பதை உறுதிப்படுத்துவதற்காக, அந்த பிரெஞ்சு பெருநிறுவனத்தின் முடிவுகளை கண்காணிக்க நீதிபதிகள் நியமிக்கப்படுவார்கள் என்பது மட்டுமே மாற்றப்பட்டுள்ளது. ஆனால் தொழிலாளர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள நீதிமன்றங்களை கருத்தில் எடுக்க முடியாது என்பதையே கசப்பான அனுபவங்கள் கற்றுக் கொடுத்துள்ளன. நீதிபதிகள் பல முறை பாரிய வேலைநீக்கங்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கி உள்ளனர் மற்றும், அவசரகால நெருக்கடி நிலைமையின் கீழ், தொழிலாளர்கள் அவர்களது வேலைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டங்களுக்கு எதிராக அவர்களுக்குச் சிறை தண்டனைகளையும் கூட வழங்கி உள்ளனர்.

இறுதியாக, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சியில் இளைஞர்களுக்கு உதவும் திட்டங்கள் இல்லாமல் இருப்பது மிகவும் எரிச்சலூட்டும் மூடுதிரை என்பதுடன் அந்த சீர்திருத்தத்திற்கு மாணவர் சங்க அதிகாரத்துவங்களின் ஆதரவைப் பெறுவதற்கான முயற்சியைப் பிரதிபலிக்கிறது. அவரது "சட்டமசோதா", மாணவர் பொது அமைப்புகளது கூட்டமைப்பான (FAGE) "இரண்டாவது மிகப்பெரிய மாணவர் அமைப்பால் வரவேற்கப்பட்டதாக" வால்ஸ் பெருமைப் பீற்றினார்.

பிரெஞ்சு ஜனநாயக தொழிலாளர் கூட்டமைப்பின் (CFDT) தேசிய செயலாளர் லோரன்ட் பேர்ஜியேர், மத்தினியோன் மாளிகையில் பிரதம மந்திரியைச் சந்தித்த பின்னர், அந்த பிற்போக்குத்தனமான சீர்திருத்தத்தை "இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களது முன்னேற்றத்திற்குச் சாத்தியமான வாகனம்" என்று பாராட்டினார்.

ஸ்ராலினிச கூட்டமைப்பான தொழிலாளர் பொது கூட்டமைப்பு (CGT) மற்றும் தொழிலாளர்கள் சக்தி (FO) தொழிற்சங்கங்கள், மற்றும் தேசிய பிரெஞ்சு மாணவர் சங்கம் (UNEF) ஆகியவை தொடர்ச்சியான போராட்டங்களுக்கு அழைப்புவிடுத்தன.

இந்த சீர்திருத்தத்தை எதிர்ப்பதாக வாதிடும் இந்த அதிகாரத்துவவாதிகள் பொய்களின் அடித்தளத்தில் நிற்கின்றனர். தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் நிலவும் கோபத்தை மற்றொரு மறுபேரம்பேசல் முன்னோக்கிற்குப் பின்னால் திருப்பி விடும் நோக்கில் மற்றும் சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்துடன் சேர்ந்து அந்த பிற்போக்குத்தனமான சட்டமசோதாவில் சிறிது திருத்தங்கள் செய்யும் நோக்கில், CGT மற்றும் UNEF இன் போராட்டங்களுக்கான அழைப்பானது அரசியல் தந்திரங்களாகும்.

ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட் 2012 இல் தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து, CGT உம், ஏனைய தொழிற்சங்க அதிகாரத்துவங்களும் மற்றும் புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சி போன்ற அவற்றின் அரசியல் கூட்டாளிகளும் சோசலிஸ்ட் கட்சியின் சிறந்த கூட்டாளிகள் என்பதை நிரூபித்துள்ளன. இவை, பிரான்சில் இரண்டாம் உலக போருக்குப் பின்னர் மிகவும் மதிப்பிழந்த அந்த அரசாங்கம் பாரிய வேலைநீக்கங்களை, செலவுக்குறைப்புத் திட்டங்கள், மற்றும் போர் நடவடிக்கைகளைச் செய்து வந்த போது, அக்கட்சிக்கு எதிரான தொழிலாள வர்க்க எதிர்ப்பைத் திணறடித்தன.

கடந்த நான்காண்டுகளில், தொழிற்சங்கங்களும் மற்றும் அவற்றின் கூட்டாளிகளும் கடந்த ஜனாதிபதி பதவி காலத்தில் செய்ததைப் போல, ஒரேயொரு மிகப் பெரிய தேசிய ஆர்ப்பாட்டத்திற்குக் கூட அழைப்புவிடுத்ததில்லை, ஏனென்றால் அவற்றால் தொழிலாளர்களது கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போகலாம் என்றும் மற்றும் தற்செயலாக அதுவொரு கட்டுப்பாடற்ற போராட்டத்தைத் தூண்டிவிட்டு விடக்கூடும் என்றும் அஞ்சின.

தொழிலாளர் சீர்திருத்தத்தின் மீது மறுவேலை செய்வதென ஹோலாண்ட் மற்றும் வால்ஸ் முடிவெடுத்தத்தற்கு அடித்தளத்தில் இருந்ததும் இதே பயம்தான். அவர்கள், தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் பின்தொடரும் பரந்த இயக்கத்தை, மதிப்பிழந்த தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளால் கட்டுப்படுத்த முடியாது என்று அஞ்சினர்.

லியோனில் மார்ச் 9 ஆர்ப்பாட்டத்தின் போது, மாணவர்கள் பல்வேறு உயர்நிலைப் பள்ளிகளில் மறியல் செய்தனர் மற்றும் அவசரகால நெருக்கடி நிலைமையின் கீழ் ஆர்ப்பாட்டங்களது பாதையை மறித்த பொலிஸூடன் மோதல்கள் வெடித்தன. பொலிஸ் ரப்பர் தோட்டாக்களால் சுட்டதில் மற்றும் ஒரு பொலிஸ்காரர் குறுந்தடியால் ஒரு போராட்டக்காரரின் மண்டையைப் பிளந்ததில் குறைந்தபட்சம் இரண்டு போராட்டக்காரர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தொழிற்சங்கங்கள் மற்றும் போலி-இடது அமைப்புகளிடமிருந்து தொழிலாள வர்க்கம் அரசியல் சுதந்திரத்தை ஸ்தாபிக்க வேண்டியதன் அவசியமும் மற்றும் தொழிலாள வர்க்கத்திற்கு ஓர் அரசியல் தலைமையைக் கட்டியமைக்க வேண்டியதன் அவசரமும் தான், இத்தகைய போராட்டங்களில் தொழிலாளர்களும் இளைஞர்களும் முகங்கொடுக்கும் மத்திய பிரச்சினையாகும்.

உலக சோசலிச வலைத் தளம், மார்ச் 9 ஆர்ப்பாட்டம் குறித்து விளங்கப்படுத்திய அதன் துண்டறிக்கையில் பின்வருமாறு விவரித்தது, “சோசலிஸ்ட் கட்சியின் பிற்போக்குத்தனமான நடவடிக்கைகளுக்கு உண்மையான எல்லா எதிர்ப்பும் வரவேற்கத்தக்கவையே. இருந்தாலும் ஒரு தேசிய கட்டமைப்பிற்குள் தன்னைத்தானே மட்டுப்படுத்திக் கொள்வது, El Khomri சட்டத்தில் திருத்தங்களைக் கோருவது அல்லது தொழிற்சங்கங்களைக் கொண்டு அச்சட்டத்தைத் திரும்பப் பெற செய்வதானது, இந்த இயக்கம் அதன் ஆரம்ப கட்டங்களில் இருந்தாலும் கூட, அதுவொரு பேராபத்தான பிழையாக இருக்கும். சிரியாவில் மற்றும் ஐரோப்பாவில் ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் நிரந்தர இராணுவ தீவிரமயப்படுத்தலின் அச்சுறுத்தலுடன் சேர்ந்து, அவசரகால நெருக்கடி நிலைமையின் இராணுவக் காலடியின் கீழ், இத்தகைய சட்டபூர்வ அதிகாரத்துவங்களுக்கும் மற்றும் சோசலிஸ்ட் கட்சிக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள், தொழிலாளர்கள் மீதான புதிய தாக்குதல்களை மட்டுமே உருவாக்கும். அனைத்திற்கும் மேலாக, பிரான்ஸ் மற்றும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களை அச்சுறுத்துகின்ற போர் மற்றும் சர்வாதிகார அச்சுறுத்தல்களுக்கு எதிராக அவை ஒன்றும் செய்யப் போவதில்லை.”

அந்த அறிக்கை தொடர்ந்து விவரித்தது, “El Khomri சட்டத்திற்கு எதிரான போராட்டம், நேட்டோ சக்திகளது போர் முனைவுக்கு எதிராக மற்றும் நவம்பர் 13 தாக்குதல்களுக்குப் பின்னர் உத்தரவிடப்பட்ட ஜனநாயக-விரோத அவசரகால நெருக்கடி நிலைக்கு எதிரான ஓர் அரசியல் போராட்டத்திற்குள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். இந்த போராட்டம் தொழிலாள வர்க்கத்தை அடிப்படையாக கொண்ட சோசலிசத்திற்காக இருக்க வேண்டும். பிரான்சின் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கான இயல்பான கூட்டாளிகள் ஐரோப்பாவிலும் மற்றும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்கள் ஆவர்.”

உலக சோசலிச வலைத் தள (WSWS) ஆவணங்களைப் பரப்புமாறும், அவற்றை நண்பர்களுடன் விவாதிக்குமாறும், மற்றும் தொழிலாள வர்க்கத்திற்கான ஓர் அரசியல் மாற்றீட்டைக் கட்டியெழுப்பும் போராட்டத்தைக் குறித்து விவாதிக்க உலக சோசலிச வலைத் தளத்தை தொடர்பு கொள்ளுமாறும், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அந்த அறிக்கை அழைப்புவிடுத்தது.