ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

French police attack demonstrations against regressive labor law

பிற்போக்கு தொழிலாளர் சட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் பிரெஞ்சு பொலீஸ் தாக்குதல்

By Alex Lantier
13 May 2016

தேசிய சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு எதுவுமின்றி எல் கொம்ரி தொழிலாளர் சட்டத்தை திணிப்பதற்கு சோசலிஸ்ட கட்சி (PS) யால் எடுக்கப்பட்ட முடிவுக்கு எதிராக பிரான்ஸ் முழுவதும் பத்தாயிரக் கணக்கான மக்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு இன்றி சட்டத்தை திணிப்பதற்கு ஷரத்து 49-3 ஐ பயன்படுத்துவதற்கான இழிவுகரமான மற்றும் ஆத்திரமூட்டும் முடிவு எதிர்ப்பாளர்களின் சினத்தை தூண்டிவிட்டது.

நாடு முழுவதும் பல நகரங்களில் எதிர்ப்பாளர்களுக்கு வன்முறைத்தாக்குதல்கள் மூலம் போலீஸ் பதில் கொடுத்திருக்கிறது.

Toulouse மற்றும் Nantes இல் பல்லாயிரக்கணக்கானவர்களும், அத்துடன் Lyon மற்றும் Caen இல் நூற்றுக்கணக்கானோரும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். செய்தி அறிவிப்புகளின் படி, Le Havre ஆர்ப்பாட்டக்காரர்கள் PS தலைமையகத்தை சூறையாடினர். Toulouse இல் ஒன்பது பேர், Lyon இல் எட்டுபேர், Nantes இல் ஐந்துபேர் மற்றும் Bordeaux இல் மூன்றுபேர் உள்பட பல கைதுகள் இடம்பெற்றன.

பல நகர்களில் ஸ்ராலினிச பொது சம்மேளனம் (CGT) உள்பட தொழிற்சங்கங்க உறுப்பினர்களுக்கும் இளைஞர்களுக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றன. எதிர்ப்புகளுக்கு முன்னரே எதிர்ப்புக்களைக் கட்டுப்படுத்தவும் மோதல்களை தடுக்கவும் தாங்கள் பொலீசுடன் வேலை செய்யப்போவதாய் தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியிருந்தன.

பல்லாயிரக் கணக்கான ஆர்ப்பாட்டத்தினர் அணிவகுத்த Marseille இன் Castellane எனும் இடத்தில் வன்முறை மோதல்கள் இடம்பெற்றன.

பாரிஸில், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலீசாருக்கும் இடையில் வன்முறை மோதல்கள் இருந்தன. கண்ணாடி போத்தல்களை பிடித்துக்கொண்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வெடித்த போலீசுக்கும் இடையிலான ஆரம்ப மோதலுக்கு பின்னர், ஆர்ப்பாட்டமானது Invalides என்னும் இடத்தை நோக்கி நகர்ந்தது; எதிர்ப்பாளர்கள் வீதியில் பொலீசுக்கும் Invalides ஐ காத்துநிற்கும் ஆயுதம்தரித்த படைவீர்ர்களுக்கும் இடையில் தாங்கள் மாட்டிக்கொண்டதைக் கண்டனர்.

பொலீசாருக்கும் சிறிய எண்ணிக்கையிலான அடையாளம் தெரியாத கலவரக்காரர்களுக்கும் இடையிலான மோதலுக்குப் பின்னர், பொலீசானது பல கண்ணீர்ப்புகைக் குண்டுகளை சுட்டு, கூட்டத்தைத் தாக்கியது. குறைந்தபட்சம் இரண்டு ஆர்ப்பாட்டக்கார்கள் தலையில் காயம் அடைந்தனர் மற்றும் நான்குபேர் கைதுசெய்யப்பட்டனர்.

உலக சோசலிச வலைத் தள செய்தியாளர்கள் Invalides-இல் சில ஆர்ப்பாட்டக்காரர்களை நேர்காணல் செய்தனர். எமிலியன் எனும் ஒரு மாணவர், பொலீசுடன் மோதலில் ஈடுபட்ட கலவரக்காரர்கள் நிகழ்ச்சி தொடங்குகையில் காணப்படவில்லை, ஆனால் அவர்கள் ஆர்ப்பாட்டத்தின்பொழுது அமைதியாய் ஆர்ப்பாட்டம் செய்த அராஜகவாதிகளின் ஒரு குழுவின் மத்தியில் நழுவி மறைந்துவிட்டனர் என்று வலியுறுத்தல் செய்தார்.

சட்டத்தை திணிப்பதற்கு ஷரத்து 49-3 ஐ பயன்படுத்த வேண்டுதல் விடுக்கும் ஹோலண்டின் முடிவை அவர் கண்டனம் செய்தார். “அது தன்முனைப்புவாத செயல்; அரசியல் மற்றும் கருத்தியல் ரீதியிலான திராணியற்ற தன்மைக்கு ஒரு சான்று. அரசாங்கத்திற்கு சட்டபூர்வதன்மை இல்லை மற்றும் அது அனைத்து தொழிலாளர்களையும் தாக்கும் மற்றும் இளைஞர்களை நிலைகுலைவிக்கும் சட்டங்களை நிறைவேற்ற கொடூரமான சக்தியை சார்ந்து இருக்கிறது.” PS இன் பங்கு “முதலாளித்துவ அமைப்பை பாதுகாப்பதற்கு” என அவர் பார்த்தார்.

ஆர்ப்பாட்டங்களில் தலையிட்டு, ஆத்திரமூட்டல்களை தொடுப்பதற்கு பொலீசுடன் நெருக்கமாக ஒத்துழைப்பதுபோல் காணப்படும் கலவரக்காரர்கள் பற்றிய தனது சந்நேகம் பற்றி எமிலியன் மீண்டும் வலியுறுத்தினார். “குறிப்பிட்ட இடங்களில், ஊர்வலத்தின் அங்கமாய் இருந்தவர்களை நான் பெரும்பாலும் பார்த்தேன், அங்கொன்றும் இங்கொன்றுமாக அல்ல. பாதுகாப்புப்படைகள் நசுக்குவதற்கு தயாரித்துவிட்ட பின்னர், அது வன்முறைக் குழுக்கள் மீதாக அல்லாமல் முழு ஊர்வலத்தின் மீதும் இருந்தது.”

உசோவத Didier இடமும் பேசியது, அவர் சுற்றுச்சூழல்வாதிகளான பசுமைக் கட்சியில் நம்பிக்கை இழந்துவிட்டதாக கூறினார் மற்றும் எல் கொம்ரி சட்டத்தின் நீண்டகால அரசியல் விளைவுகளை எண்ணி அஞ்சினார். “மாபெரும் தந்திரோபாயவாதி” யாக இருப்பதாக கூறி Didier ஹோலண்டின் நடிப்புக்களை கேலிசெய்தார். “வலது திரும்ப வரும்..... அவர்கள் (PS அமைச்சர்கள்) சில மாதங்களில் அடித்துச்செல்லப்படுவார்கள், அது இந்த சட்டம் ‘இடது’ இடமிருந்து வழங்கப்படுவதை விடவும் மிக துன்பகரமானதாக இருக்கும். இடது இனிமேல் எதையும் அர்த்தப்படுத்தாது, நாம் புரட்சிக்கு முந்தைய காலகட்டத்தில் இருக்கிறோம்.”

பிரெஞ்சு புரட்சியின் பொழுதான பயங்கரத்தை நினைவூட்டி, அவர் மேலும் கூறினார், “மக்களின் உரிமைகளை சட்டம் மதிக்காத பொழுது எழுச்சிகொள்வதற்கான உரிமையை 1793 அரசியற்சட்டம் அங்கீகரிக்கிறது….. சட்டம் அநீதியான பொழுது, நாம் அதனை மதிக்கப்போவதில்லை.”